-
ஏப்ரல் மாதம் வெளியான நடிகர் திலகத்தின் திரைப்படங்கள்
1, Pachai Vilakku பச்சை விளக்கு 03.04.1964
2. Kavari Maan கவரி மான் 06.04.1979
3. School Master (G) (H) ஸ்கூல் மாஸ்டர் (மலையாளம்) 03.04.1964
4. Illara Jyothi இல்லற ஜோதி 09.04.1954
5. Grahapravesam கிரகப் பிரவேசம் 10.04.1976
6. Padaiyappa படையப்பா 10.04.1999
7. Harischandira ஹரிச்சந்திரா 11.04.1968
8. Viyetnaam Veedu வியட்நாம் வீடு 11.04.1970
9. Avandaan Manidhan அவன் தான் மனிதன் 11.04.1975
10. Viduthalai விடுதலை 11.04.1986
11. Vanagaamudi வணங்காமுடி 12.04.1957
12. Naan Vanangum Deivam நான் வணங்கும் தெய்வம் 12.04.1963
13. Galaatta Kalyaanam கலாட்டா கல்யைணம் 12.04.1968
14. Vaani Raani வாணி ராணி 12.04.1974
15. Natchatthiram (G) நட்சத்திரம் 12.04.1980
16. Imaigal இமைகள் 12.04.1983
17. Andha Naal அந்த நாள் 13.04.1954
18. Kalyaanam Panniyum Brahmachari கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 13.04.1954
19. Deivapiravi தெய்வப் பிறவி 13.04.1960
20. Needhiyin Nizhal நீதியின் நிழல் 13.04.1985
21. Ulagam Pala Vidam உலகம் பல விதம் 14.04.1955
22. Sampoorna Raamayanam சம்பூர்ண ராமாயணம் 14.04.1958
23. Thaayaippola Pillai Noolaippola Selai (G) தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை 14.04.1959
24. Padithaal Mattum Podhuma படித்தால் மட்டும் போதுமா 14.04.1962
25. Paesum Deivam பேசும் தெய்வம் 14.04.1967
26. Praaptham பிராப்தம் 14.04.1971
27. Sumathi En Sundari சுமதி என் சுந்தரி 14.04.1971
28. Sangili சங்கிலி 14.04.1982
29. Vaazhkkai வாழ்க்கை 14.04.1984
30. Veerapandiyan வீர பாண்டியன் 14.04.1987
31. Pasumpon பசும்பொன் 14.04.1995
32. Punar Janmam புனர் ஜென்மம் 21.04.1961
33. Santhi சாந்தி 22.04.1965
34. Amara Kaaviyam அமர காவியம் 24.04.1981
35. Dharmaraaja தர்மராஜா 26.04.1980
-
ஏப்ரல் 3 .. இந்நாளில் நடிகர் திலகத்தின் இரு படங்கள் வெளியாகியுள்ளன. இரண்டுமே ஒரே நாளில் வெளியாகி 54 ஆண்டுகளை நிறைவு செய்கின்றன.
வேல் பிக்சர்ஸ் பச்சை விளக்கு மற்றும் பத்மினி பிக்சர்ஸ் ஸ்கூல் மாஸ்டர் மலையாளம்.
ஸ்கூல் மாஸ்டர் மலையாளப் படத்தில் தலைவர் சிறப்புத் தோற்றம்.
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...0c&oe=5B2BED87
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...0d&oe=5B7475E5
-
-
-
-
-
Bala Krish Nan
6/4/2018. வெள்ளி முதல் சென்னை ராஜ் A/C (சைதாபேட்டை) தினசரி 4 காட்சிகள் ராஜபார்ட் ரங்கதுரை.
நாகர்கோவில் தங்கம் தியேட்டர் A/C. தினசரி 4 காட்சிகள் கட்டபொம்மன்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...0c&oe=5B618EF7
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...56&oe=5B6B8B30
-
-
-
உங்களில் ஒருவன்
உங்களுக்குத் தெரியுமா?
ஒரு மாபெரும் வெற்றி பெற்றத் திரைப்படம், ஒரு அரங்கில், ஓரிரு வருடங்கள் ஓடுவது சாதாரணம். ஆனால், ஒரு நாயகனின் அடுத்தடுத்த 5 திரைப்படங்கள் தொடர்ச்சியாக ஒரே அரங்கில் ஒன்றேகால் வருடங்களாக தொடர்ந்து திரையிடப்பட்டது அதிசயம் தானே!
இதோ உங்களுடைய பார்வைக்கு ஒரு வரலாற்றுப் பதிவு.
1970 அக்டோபர் 29 முதல் 14:01:1972 வரை 444 நாட்கள் தொடர்ச்சியாக நடிகர்திலத்தின் 5 திரைப்படங்கள் மதுரை ஸ்ரீதேவி அரங்கில் திரையிடப்பட்டு, அதில் 3 படங்கள் 100 நாட்கள...ைக் கடந்து மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் விந்தையை அறிவீர்களா?
அந்தப் பட்டியல்...
29:10:1970 முதல் 05:02:1971 வரை 100 நாட்களாக ... எங்கிருந்தோ வந்தாள்
06:02:1971 முதல் 25:03:1971 வரை 48 நாட்களுக்கு... தங்கைக்காக
26:03:1971 முதல் 02:07:1971 வரை 100 நாட்களுக்கு....குலமா குணமா...
03:07:1971 முதல் 17:10:1971 வரை 107 நாட்களுக்கு சவாலே சமாளி
18:10:1971 முதல் 14:01:1972 வரை 89 நாட்களுக்கு பாபு.
மொத்தம் 444 நாட்கள்.
அத்தனையும் வசூல் சாதனை புரிந்த வெற்றிப் படங்கள்.
ஹும். அதெல்லாம் ஒரு காலம்.
இது தெரியாம பல அரை வேக்காடுங்க யார்யாரையோ சாதனை... சாதனைனு புலம்பிகிட்டு திரியுதங்க....
courtesy unkalil oruvan old is gold f book
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...3c&oe=5B2EEFD2
-
உங்களில் ஒருவன்
நடிகர் திலகம் பற்றி சில அபூர்வ தகவல்கள் (இணையத்திலிருந்து தொகுத்தவை)
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் திரைப் பிரவேசம், 1952ஆம் ஆண்டில் "பராசக்தி' மூலமாகத்தான் என்பதில், ஒரு சிறு திருத்தம் மேற்கொள்ளலாம். ஹெச்.எம்.ரெட்டி என்பவர் தயாரித்து - இயக்கிய "நிரபராதி' என்ற படத்தில், நாயகனாக நடித்த முக்காமலா கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு, நமது நடிகர் திலகம் பின்னணிக் குரல் கொடுத்ததன் மூலமாக, "பராசக்தி'க்கு முன்பே 1951 ஆம் ஆண்டிலேயே திரையுலகப் பிரவேசம் செய்துவிட்டார். ("நிரபராதி' தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட படம்.)
கே.வி.மகாதேவனின் உதவியாளர் டி.கே.புகழேந்தி தனித்து இசையமைத்த (4 படங்களில்) ஒரு படம், "குருதட்சணை' என்ற சிவாஜி கணேசன் நடித்த படமாகும்.
சிவாஜி கணேசனுக்கு இயக்கவும் தெரியும். அவர் ஒரு திரைப்படத்தை இயற்றி இருக்கிறார். அவர் முழுப் படத்தையும் இயக்கவில்லை என்றாலும், ஒரு படத்தை இயக்கியுள்ளார் என்று வைத்துக் கொள்ளலாம். "ரத்தபாசம்' என்ற படத்தை இயக்கிய கே.விஜயன் பாதி படத்திற்கு மேல் இயக்க முடியாததால், மீதிப் படத்தை சிவாஜியே இயக்கினார். படத்தின் எழுத்துப் பகுதியில் (டைட்டில்) இயக்கம் என்ற பெயர் வர வேண்டிய இடத்தில் எவரது பெயரும் திரையில் வராமல், சிவாஜி கணேசனின் குளோசப் போட்டோக்கள் மட்டுமே திரையில் காண்பிக்கப்படும்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த "இரு துருவம்' என்ற படத்தின் கதையை எழுதியவர் இந்தி நடிகர் திலிப்குமார். இது "கங்கா ஜமுனா' என்கிற இந்திப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த "சரித்திர நாயகன்' என்ற படத்தின் கதையை, தெலுங்கு நடிகர் என்.டி.ராமாராவ் எழுதியுள்ளார். தெலுங்குப் படத்தில் என்.டி.ஆர்.தான் கதாநாயகன். அதன் தழுவலாக எடுக்கப்பட்ட படம் "சரித்திர நாயகன்'.
சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ், டி.எம்.சௌந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் ஆகியோர் நடிகர் திலகத்திற்காக ஒரு படத்தில் யாராவது ஒருவர் மட்டும் பின்னணி பாடியிருப்பார்கள். ஆனால், "வணங்காமுடி' என்ற படத்தில் மட்டும் சிவாஜிக்கு சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, டி.எம்.சௌந்தரராஜன் ஆகிய மூன்று பேரும் வெவ்வேறு பாடல்களுக்குப் பின்னணி பாடியிருப்பார்கள்.
அதேபோல, "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி'என்ற படத்தில் மட்டும் சிவாஜிக்கு ஜே.பி.சந்திரபாபு, ஏ.எம்.ராஜா, வி.என்.சுந்தரம் ஆகிய மூன்று பேர் பின்னணி பாடியிருப்பார்கள்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக, வி.என்.சுந்தரம் இரண்டு பாடல்களை பின்னணி பாடியுள்ளார். "வீரபாண்டிய கட்டபொம்மன்' என்ற படத்தில் வெற்றி வடிவேலனே என்ற பாடலையும், "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' என்ற படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக எஸ்.சி.கிருஷ்ணன், "ராஜா ராணி' என்ற படத்தில் (கண்ணற்ற தகப்பனுக்கு) பூனை கண்ணை மூடினால் என்ற ஒரே ஒரு பாடலை மட்டுமே பின்னணி பாடியுள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக அஜித்சிங் என்பவர், "தவப்புதல்வன்' என்ற படத்தில் லவ் ஈஸ் ஃபைன் டார்லிங் என்ற ஒரே ஒரு ஆங்கிலப் பாடலை பின்னணி பாடியுள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக, இசையமைப்பாளர் கண்டசாலா, "கள்வனின் காதலி' என்ற படத்தில் வெய்யிற்கேற்ற நிழலுண்டு என்ற பாடலையும், உல்லாசம் போகும் எல்லோரும் ஓர்நாள் சொல்லாமல் போவார் அல்லாவிடம் என்ற பாடலை தெனாலிராமன் படத்திலும் பாடியிருந்தார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக தெலுங்கு பின்னணிப் பாடகர் எம்.சத்தியம் என்பவர், "மங்கையர் திலகம்' என்ற படத்தில் "நீ வரவில்லை எனில் ஆதரவேது' என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் பின்னணி பாடியுள்ளார்.
நடிகர் திலகம் நடித்த படங்களில், பாரதியார் பாடல்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒரே படம், "கப்பலோட்டிய தமிழன்.'
பூஜ்ஜியம் என்ற சொல் இடம்பெற்ற ஒரே பாடல், (நடிகர் திலகம் நடித்த "வளர்பிறை' படத்தில் வரும்) "பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை" என்ற பாடலாகும்.
பன்னிரண்டு தமிழ் மாதங்களின் பெயர்களும் இடம்பெற்ற இரு திரைப் பாடல்களில் ஒன்று, நடிகர் திலகம் நடித்த "ராஜராஜ சோழன்' படத்தில் இடம்பெற்ற, "மாதென்னைப் படைத்தான்' என்ற பாடலாகும்.
சிவாஜி நடித்த படங்களில் பாடல்கள் இருந்தும், சிவாஜி பாடாமல் இருக்கும் படங்கள் "மோட்டர் சுந்தரம் பிள்ளை', "தில்லானா மோகனாம்பாள்' ஆகிய படங்களாகும்.
பாடல்களே இல்லாத முதல் தமிழ்த் திரைப்படம் நடிகர் திலகம் நடித்த 'அந்தநாள்' படமாகும்.
இலங்கை நடிகை மாலினி பொன்சேகா நடித்த ஒரே தமிழ்ப் படம், நடிகர் திலகம் நடித்த "பைலட் பிரேம்நாத்' என்பதாகும்.
அதே போல இலங்கை நடிகை கீதா மோகனப் புன்னகை படத்தில் மட்டும் நடிகர் திலகத்தின் ஒரு ஜோடியாக நடித்திருக்கிறார். இதே படத்தில் நடிகர் திலகத்தை விரும்புபவராக நடிகை அனுராதா நடித்திருந்தார்.
எம்.ஜி.ஆர். நடித்த தேவர் பிலிம்ஸ் படங்களை மட்டுமே இயக்கிய இயக்குநர் எம்.ஏ.திருமுகம், நடிகர் திலகம் நடித்த "தர்ம ராஜா' என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கியுள்ளார். இப்படத்தில் அனிதாபென் என்ற ஜப்பான் நாட்டு நடிகை நடிகர் திலகத்தின் இணையாக சில காட்சிகளில் வருவார்.
மனோரமா, நடிகர் திலகத்தின் ஜோடியாக நடித்த ஒரே படம், "ஞானப் பறவை' மட்டுமே.
நடிகர் ரவிச்சந்திரன் மோட்டார் சுந்தரம் பிள்ளை, கவரிமான் படங்களில் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முதல் அகன்ற திரைப் (சினிமா ஸ்கோப்) படம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'ராஜராஜ சோழன்' திரைப் படமாகும். ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் ஜி.உமாபதி தயாரித்த படம் இது.
தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் முழு நீள ஈஸ்ட்மென் வண்ணப் படம், நடிகர் திலகம் நடித்த "வீரபாண்டிய கட்டபொம்மன்' (1956) படமாகும். (1952 இல் திரையிடப்பட்ட "ஆன்' (கௌரவம்) என்ற படம், முழு நீள டெக்னிக் வண்ணப் படம் என்றாலும், அது இந்தியிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் (டப்பிங்) செய்யப் பட்ட படமாகும்.
பராசக்தி' படத்தை இயக்கிய கிருஷ்ணன் பஞ்சு முதல், பூப்பறிக்க வருகிறோம் படத்தை இயக்கிய ஏ.வெங்கடேஷ் வரை, சுமார் 100 இயக்குநர்களின் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்துள்ளார்.
படத் தயாரிப்பைப் பொறுத்த வரையில் நடிகர் திலகத்தை வைத்து அதிக (17 படங்கள்) படங்களை தயாரித்தவர் நடிகர் கே.பாலாஜி மட்டுமே.
பண்டரிபாய் முதல் சுமார் 55 கதாநாயகிகள் சிவாஜியுடன் இணைந்து நடித்துள்ளார்கள். இவர்களில் கே.ஆர்.விஜயா 40 படங்களிலும், பத்மினி 38 படங்களிலும் இணைந்து நடித்துள்ளார்கள்.
ஜெயலலிதாவின் தாயார் சந்தியா அவர்கள், "பலே பாண்டியா' படத்தில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், "சாந்தி' படத்தில் தாயாகவும் நடித்துள்ளார்.
ஜெயலலிதா, "மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் நடிகர் திலகத்துக்கு மகளாகவும், பல படங்களில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், "பாட்டும் பரதமும்' படத்தில் நடிகர் திலகத்துக்கு தாயாகவும் நடித்துள்ளார்.
நடிகை லட்சுமியின் தாயார் குமாரி ருக்மணி, "கப்பலோட்டிய தமிழன்' படத்தில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், "ரோஜாவின் ராஜா' படத்தில் தாயாகவும், "விளையாட்டுப் பிள்ளை' படத்தில் மாமியாராகவும் நடித்துள்ளார்.
நடிகை லட்சுமி, எதிரொலி, தங்கைக்காக, அருணோதயம் ஆகிய படங்களில் நடிகர் திலகத்துக்கு தங்கையாகவும், ராஜராஜ சோழன் படத்தில் மகளாகவும், உனக்காக நான், தியாகம், நெஞ்சங்கள், ராஜரிஷி, ஆனந்தக் கண்ணீர், குடும்பம் ஒரு கோவில் ஆகிய படங்களில் ஜோடியாகவும் நடித்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி, நடிகர் திலகத்தின் மகளாக பைலட் பிரேம்நாத், கவரிமான் படத்திலும், ஜோடியாக விஸ்வரூபம், சந்திப்பு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை சுமித்ரா, அண்ணன் ஒரு கோயில் படத்தில் நடிகர் திலகத்துக்கு தங்கையாகவும், வீர பாண்டியன் படத்தில் ஜோடியாகவும் நடித்துள்ளார்.
விஜயகுமாரி, பார் மகளே பார் படத்தில் நடிகர் திலகத்துக்கு மகளாகவும், குங்குமம், ராஜராஜ சோழன் ஆகிய படங்களில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், பச்சை விளக்கு படத்தில் நடிகர் திலகத்துக்கு தங்கையாகவும், அன்பைத் தேடி, சித்ரா பௌர்ணமி படத்தில் நடிகர் திலகத்துக்கு சகோதரியாகவும் நடித்துள்ளார்.
தம்மை விட வயதில் மூத்தவரான பி.பானுமதியுடன் சில படங்களில் சிவாஜி இணைந்து நடித்துள்ளார்.
குங்குமம், லாரி டிரைவர் ராஜாக்கண்ணு ஆகிய இரு படங்களில் சிவாஜி பெண் வேடங்களில் நடித்துள்ளார்.
பாபு, சம்பூர்ண ராமாயணம், லட்சுமி கல்யாணம், காவல் தெய்வம், படிக்காத பண்ணையார், மூன்று தெய்வங்கள் இன்னும் சில படங்களில் சிவாஜி நடித்த பாத்திரங்களுக்கு, கதாநாயகிகள் கிடையாது.
மராட்டிய மாமன்னர் வீர சிவாஜியாக நடிகர் திலகம் முழுப் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் "ராமன் எத்தனை ராமனடி' படத்தில் ஒரு காட்சியில் மட்டும் சிவாஜியாக சிவாஜி நடித்திருக்கிறார். பக்த துக்காராம் படத்தில் வீர சிவாஜியாக அமர்க்களமாக நடித்திருப்பார் நடிகர் திலகம்.
தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக 80 அடி உயர விளம்பர பலகை (கட் அவுட்) வைக்கப்பட்டது, சிவாஜி நடித்த வணங்காமுடி (1957) படத்திற்கே.
திரையுலக இளவரசன்' நடிக்கும் என்ற விளம்பரத்துடன், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த திரும்பிப் பார் (1953) என்ற படத்திற்குதான், தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக பட முன்னோட்டம் (டிரெய்லர்) காட்டப்பட்டது.
இலங்கை வானொலியில் நல்ல தமிழ் கேட்போம் என்ற தலைப்பில், வாரத்தில் ஒரு நாள் 30 நிமிடங்களுக்கு புகழ் பெற்ற திரைப்படங்களின் கதை -வசனங்களை ஒலி பரப்புவார்கள். அந்த நிகழ்ச்சியில் சக்தி கிருஷ்ணசாமி, ஏ.பி.நாகராஜன், மு.கருணாநிதி, இளங்கோவன், தஞ்சை ராமையாதாஸ், எஸ்.டி.சுந்தரம் போன்ற சிறந்த படைப்பாளிகளின் திரைக்கதை வசனங்கள் ஒலிபரப்பப் படும். சிவாஜி நடித்த திருவிளையாடலில் தருமியும் சிவனும் பேசும் வசனம், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையிடம் கட்டபொம்மன் பேசும் வசனம், பராசக்தியில் நீதிமன்றக் காட்சி, ராஜா ராணியில் உள்ள சாக்ரடீஸ், சேரன் செங்குட்டுவன் நாடகங்கள் ஆகிய வசனங்களே அதிக தடவை ஒலிபரப்பப்பட்டுள்ளன.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...16&oe=5B27C0A8
courtesy unkalil oruvan old is gold f book
-
-
-
-
-
முன்னர் பார்க்கக்கிடைக்காதவர்களுக்காக .....
( செந்தில்வேல் அவர்களின் முகநூலில் இருந்து)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...1d&oe=5B67007C
-
-
-
-
-
-
-
-
-
-
-
vaannila vijayakumar
உங்களுக்குத் தெரியுமா?
வைர நெஞ்சம் படத்திற்கு முதலில் வைத்தப் பெயர் ஹீரோ - 72 என்பது எல்லோர்க்கும் தெரியும்.
அந்தப் படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்தபோது வைத்தப் பெயர் என்ன தெரியுமா?
HERO - 76....
காரணம் வழக்கம் போலத்தான்.
1975 ன் இறுதியில் ' பெத்த மனிஷி ' என்ற பெயரில் வெளியான ஞானஒளியும், 1976 ன் துவக்ககத்தில் ' பங்காரு பதக்கம் ' என்ற பெயரில் வெளியான தங்கப்பதக்கமும் சூப்பர் டூப்பர் ஹிட்.
அதனைத் தொடர்ந்து வெளியான வைர நெஞ்சத்திற்கு இந்தப் பெயரைச் சூட்டி விட்டனர். அது மட்டுமன்றி 1976 ல் மட்டும் 6 படங்களும், 1977 ஆம் ஆண்டில் 10 படங்களும் டப் செய்யப்பட்டு தெலுங்கில் வெளியாகின.
1954 முதல் 1988 வரை நடிகர்திலகம் நாயகனாக கோலேச்சிய காலத்தில், தமிழைப் போலவே தெலுங்கிலும் ஆண்டுதோறும் மொழிமாற்ற்ம் செய்யப்பட்டு அய்யனின் படங்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன.
தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்ட அய்யனின் முதல் படம் அன்பு. அது 1954 ல்
' அபெக்ஷா ' என்ற பெயரில் வெளியானது.
அமரர் திரு பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் கணக்குப்படி நடிகர்திலகம் நடித்து தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்ட 25 வது படம் 1962 ல் வெளியான ' பவித்ர பிரேமா ' (பார்த்தால் பசி தீரும்)
50 வது படம் 1970 ல் வெளியான ' சிங்கப்பூர் அன்த்தகுமு' ( அஞ்சல் பெட்டி 520)
75 வது படம் 1977 ல் வெளியிடப்பட்ட
' பிரஜல கோசம் ' ( அவனொரு சரித்திரம் )
100 வது படம் 1993 ல் வெளியான ' சத்ரிய புத்ருடு ' (தேவர் மகன்)
கடைசியாக வெளியான படம் 1998 ல் வெளியான ' நரசிம்ஹா ' ( படையப்பா)
சிவந்தமண், தங்கப்பதக்கம், புதிய பறவை, தெய்வ மகன், சம்பூர்ண ராமாயணம், சரஸ்வதி சபதம், முதல் மரியாதை, படையப்பா போன்ற படங்கள் நூறு நாட்களைக் கடந்து ஓடிய மாபெரும் வெற்றிப் படங்களாகும்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...a0&oe=5B31BAC1
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...fb&oe=5B608192
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...5b&oe=5B304B38
-
-
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...d6&oe=5B6831A6
Raghavan Nemili Vijayaraghavachari
உண்மையான வசூல் சக்ரவர்த்தி அன்றும் , இன்றும் என்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தான். அன்றைய கால கட்டத்தில் அவர் திரைப்படங்களில் நடித்த போது, ஒரே நாளில...் இரண்டு படங்கள் திரையிடப்பட்டது மொத்தம் 12 படங்கள் - ஆறு முறை. அவற்றில் இரண்டு தடவை திரையிடப்பட்ட இரண்டு படங்களும் 100 நாள்களைக் கடந்து பெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. அவை ஊட்டி வரை உறவு , இரு மலர்கள் மற்றும் சொர்கம், எங்கிருந்தோ வந்தாள். மீதமுள்ள படங்களில் ஒரு படம் 100 நாள்களும், மற்றொரு படம் 50 நாள்கள் முதல் 75 நாள்கள் வரை ஓடிய வெற்றிப் படங்கள்.
ஒரு சமயம் சென்னை சித்ரா, சாந்தி, வெலிங்டன், பாரகன், கெயிட்டி, மிட்லண்ட் திரை அரங்குகளில் நடிகர்திலகத்தின் புதிய படங்களெ வெளியிடப்பட்டு, அவர் படங்களை மட்டுமே சென்னையின் மையப் பகுதியான மௌண்ட் சாலையில் பார்க்கும் படி இருந்தன. இவ்வாறு பல திரை அரங்குகளில் அவருடைய படங்களே ஓடிக் கொண்டிருந்தாலும் அத்தனை படங்களும் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருந்தன.
நடிகர் திலகம் நடித்த ஞான ஒளி படம் திரையிடப்பட்ட போது, சென்னையில் பல திரை அரங்குகளில் அவர் ஏற்கனவே நடித்து வெளியாகி , வெற்றிக் கொடி ஈட்டிய படங்கள் , மறு வெளியீடாக திரையிடப்பட்டு , பொது மக்களால் ஆர்வத்துடன் பார்க்கக் கூடிய படங்களாக அமைந்தன.
அவ்வளவு படங்கள் ஒரே நேரத்தில் சென்னையில் ஓடிக் கொண்டிருந்த போதும், புதுப் படமாக வெளியான ஞான ஓளி திரைப்படம் ப்ரம்மாண்ட வசூலை வாரிக் குவித்தது.
ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஆறு படங்கள் முதல் பத்து படங்களுக்கும் மேல் வெளியிட்டு, தன்னுடைய படங்களை, சிவாஜி ரசிகர்களால் மட்டுமின்றி , நல்ல நடிப்பை ரசிக்கும் பொது மக்களாலும் விரும்பிப் பார்க்க வைத்தவர் இவர் மட்டுமே,
மற்றொரு நடிகர் அவர் ஒரு படம் வெளியிட்டால், அந்தப் படம் திரையிடப்பட்டு, அவை ஓடி முடியும் நிலையிலேயே மற்றொரு படத்தை வெளியிடுவார். தன்னுடைய ஒரு படம் திரையிடப்படும் போது, சிறிது காலத்திற்குள்ளேயே , அவரின் அடுத்த படம் வெளியிடப்பட்டால், முன்னர் வெளியான படம் வசூலில் குறைந்து விடும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு படத்திற்கும் நீண்ட இடைவெளி கொடுப்பார். ஆனால் நடிகர் திலகம் அவ்வாறெல்லாம் நினைக்க மாட்டார், நடிப்பிலும் , கதை அம்சத்திலும் சிறந்த படங்களை வெளியிடுவதால் அவை மக்களால் ஈர்க்கப்பட்டு , பெரும் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுவார்.
இன்றும் கூட அவருடைய சில படங்கள் மறு வெளியீட்டில் வசூலை வாரிக் குவிப்பதுடன் 100 நாள்களை கடந்தும் ஓடிக் கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகளின் ஆதரவே இல்லாமல் , பொது மக்கள், மற்றும் சிவாஜி ரசிகர்களின் ஆதரவினால் அவை மீண்டும் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. ஆக அன்றும் , இன்றும் என்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களே வசூல் சக்ரவர்த்தி.
திரைப்படங்களில் அற்புதமாக நடிக்கும் அவர் நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாதவராக இருந்ததினால் , அரசியலில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இதைப் பற்றி ஒரு செய்தி.
சிவாஜி கணேசன் கட்சி ஆரம்பித்து தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் பொழுது, தன் உற்ற நண்பராகப் பழகிய எம்ஜிஆரின் மனைவி ஜானகிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென்ற காரணத்தினால் , அவருடன் கூட்டணி வைத்து, அவரே கூட தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. தேர்தலுக்கு முன்பு கருணாநிதி, சிவாஜியை தன்னுடன் கூட்டணி வைத்துக் கொள்ள அழைத்து, அவருக்கு சுமார் 25 தொகுதிகள் ஒதுக்குவதாக வாக்களித்தார். ஆனால் அதனை அவர் ஒத்துக் கொள்ளவில்லை. அந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்பொழுது அவர் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அந்த 25 தொகுதிகளிலும் வென்று, அரசியலில் பெரும் வெற்றி பெற்றிருப்பார். ஆனால் நண்பனை பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் ஜானகி அம்மையாருடன் கூட்டணி வைத்ததால் அரசியலில் தோற்றார்.
ஒரு முறை இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் தயாரித்த படத்திற்கு " ஹீரோ 72 " என்று பெயர் வைத்து, அதனை விளம்பரப்படுத்தும் போது, " வசூல் சக்ரவர்த்தி " நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடிக்கும் படம் என்று குறிப்பிட்டிருந்தார்.
-
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...d6&oe=5B72401F
Antony Vincent
பாகப்பிரிவினை படம் வந்த போது தெலுங்கு நடிகரோ அல்லது கன்னடநடிகரோ சரியாக தெரியவில்லை அவர் விமானத்தில் வந்து இந்த படத்தை ஒரு தயாரிப்பாளர் எடுக்க உள்ளார். இந்த படத்தில் நான் நடிக்க உள்ளேன்.நான் தாங்கள் நடித்த இந்த படத்தை முழுவதுமாக பார்த்தேன்.என்னால் ஒரு விசயம் மட்டும் புரிந்து கொள்ள முடியவில்லை.
இடது கையை நீங்கள் எப்படி ஒரே இடத்தில் வைத்து கொள்ள முடிந்தது.எல்லா சீன்களிலும் நான் கவனித்தேன் ஒரே இடத்தில் தான் இருந்தது.எப்படி என்று திலகத்திடம் ஆச்சரியத்துடன் கேட்டாராம்.இதற்காகவா நீ விமானத்தில் இவ்வளவு செலவு செய்து வந்தாய்.ஒரு போன் செய்து கேட்டு இருந்தாலே நான் சொல்லியிருப்பேனே என்று செல்லமாக கோவப்பட்டு
அது ஒரு பெரிய விஷயம் அல்ல
கழுத்துக்கு கீழ் ஒரு சாண் அளந்து அந்த இடத்தில் கையை வைத்து கொள்ள வேண்டும். நீ எத்தனை முறை படம் பார்த்தாலும் குற்றமே கண்டுபிடிக்க முடியாது என்று சிரித்துக்கொண்டே சொன்னாராம்.
-
-
-
-
-
-
-
raja lakshmi
ஆனந்த விகடன் இதழில் பல்வேறு கால கட்டங்களில் வந்த நடிகர் திலகம் பற்றிய சில சுவையான தகவல்கள்
“சாதாரணமாக யாருடனாவது பேச ஆரம்பிக்கும்போது, முதலில் அவர்கள் குடும்பத்தைப் பற்றி அக்கறையாக விசாரிப்பார் சிவாஜி.
மற்றவர்களின் ‘மேனரிஸ’ங்களை உன்னிப்பாகக் கவனித்து வைத்துக்கொள்வார். ஒருவர் சிகரெட் பிடித்தால் கூட எப்படிப் பிடிக்கிறார் என்று பார்த்துக் கொள்வார். ஒரு முறை எந்தெந்தக் குணாதிசயங்கள் உள்ளவர்கள் எப்படி சிகரெட் பிடிப்பார்கள் என்று சுமார் 15 வகையாக சிகரெட் பிடித்துக் காட்டினார்!
ஷூட்டிங்கில் தன் பாகம் எடுத்து முடிக்கும்வரையில் செட்டை விட்டு வெளியே ஒரு அடிகூடப் போகமாட்டார்.
“சிவாஜி சார்! நீங்கள் மற்ற நடிகர்களோடு நடித்தால் ஷாட்டில் அவர்களை ஏன் ‘ஓவர் ஷேடோ’ செய்கிறீர்கள்? அவர்கள் அத்தனைக் கஷ்டப்பட்டு நடித்த பிறகு உங்கள் செய்கையால் அது ஒன்றுமில்லாமல் போய் விடுகிறதே!” என்று ஒரு முறை அவரிடம் துடுக்காகக் கேட்டுவிட்டேன்.
சிவாஜி என்னை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தார். “யூ ஆர் கரெக்ட்! ஆனால், அதென்னவோப்பா…காமிரா முன்னால் நிற்பதை நான் ஒரு பாக்ஸிங் ரிங்கில் நிற்பது போலவே கருதுகிறேன். என்னோடு யார் நின்றாலும் அவர்களை நான் ‘வின்’ பண்ணத்தான் முயலுவேன். எனக்கு அது ஒரு ‘சாலஞ்ச்’ மாதிரி” என்றார்.
இது போன்ற தர்மசங்கடக் கேள்விகளை இவரிடம் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம். இவருக்குக் கோபமே வராது.
செட்டில் இவரைச் சந்திக்கச் சென்றால், உடனே கூப்பிட்டு விறுவிறு என்று விஷயத்தைப் பேசிப் பத்திரிகையாளர்களை அனுப்பி விடுவார். பத்திரிகை அவசரம் தெரிந்தவர்!”
– நிருபர் பாலா (16.11.80)
“இனி நடிகர்களைப் பாராட்டி ஏதாவது பட்டம் கொடுக்க வேண்டுமானால் ‘வி.சி.கணேசன்’ என்ற பட்டத்தைக் கொடுங்கள். அதுதான் மிக உயர்ந்தது!”
– சத்யராஜ் (12.10.86)
“‘நான் நடித்துக் கொண்டே சாக வேண்டும்’ என்று அண்ணன் ஏதோ ஒரு பத்திரிகையில் பேட்டி அளித்ததைப் படித்தேன். இதைப் பார்த்துவிட்டு எல்லாருமே ‘நான் நடித்துக்கொண்டே சாக வேண்டும்’ என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அண்ணன் மட்டும் தான் அப்படிச் சொல்லலாம். அவருக்குத்தான் அந்தத் தகுதி உண்டு. மத்தவங்க நடிக்கறதைப் பார்த்துட்டுத்தான் ஆயிரக்கணக்கான பேர் தினம் தியேட்டர்ல சாவறானே, போதாதா?”
– நாகேஷ் (12.10.86)
“‘தேவர்மகன்’ ஷூட்டிங்… அப்ப நான் சினிமாவுக்கு வந்த புதுசுங்கறதால, சூப்பரா நடிக்க ணுங்கற நினைப்புல ஓவர் ஆக்ஷன் பண்ணிடுவேன். அந்தப் படத்தில், கமல்ஹாசனோட அப்பா சிவாஜி சார் இறந்து போகிற ஸீன்! சிவாஜி இறந்து கிடப்பார். பக்கத்தில் குழந்தைகள்… கால்மாட்டில் நானும் சங்கிலி முருகனும். கமல் சார் கொஞ்சம் தூரத்திலிருந்து ஓடி வருவார். எல்லோரும் சேர்ந்து அழணும். கமல் சார் என்னிடம், ‘தத்ரூபமா அழணும்பா’ என்றிருந்தார். ‘ஷாட் ரெடி!’ என்று குரல் கேட்டதுமே… ‘ஐயோ! எங்களை விட்டுப் போயிட்டீங்களேய்யா… ஐயா!’ என்று எட்டுப்பட்டிக்கும் கேட்கிற மாதிரி குய்யோ முறையோ என ஓலமிட்டு அழ ஆரம்பித்தேன். பத்து செகண்ட்கூட ஆகியிருக்காது. ‘கட், கட்’ என்றபடி பிணம் எழுந்துவிட்டது. சிவாஜி சார் தான்! என்னைப் பார்த்து, ‘இங்க வாடா’ என்றார் முறைத்தபடி. நான் பயந்துகொண்டே நெருங்கினேன். ‘நீ ஒருத்தன் அழுதா போதுமா… மத்தவன் யாரும் அழ வேண்டாமா? என் மகனா வர்ற கதாநாயகனே மெதுவா அழறான். நீ ஏண்டா இந்தக் கத்துக் கத்தற? நீ கத்தற கத்தில் உன் உசுரும் போயிடப்போகுது! துண்டை வாயில் வெச்சுக்கிட்டு கமுக்காம விசும்பி அழு, போதும். ஓவர் ஆக்ஷன் பண்ணா உதைபடுவே படுவா!’ என்றார். சிவாஜி சாரைக் கோபப்பட வைத்த எனது அந்த ஓவர் ஆக்ஷனை நினைத்தால், இப்போதும் சிரிப்பு வரும் எனக்கு!”
– வடிவேலு (9.3.97)
“மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்று கேட்டால், பாட்டுக்கு மெட்டு என்பது தான் சிறந்தது. அந்தக் காலத்தில் கண்ணதாசனும் மெல்லிசை மன்னரும் அப்படித்தான் செய் தார்கள். ‘புதிய பறவை’யில் ஒரு புதுமை. படத்தில் வரும் ஒரு சோகப் பாட்டுக்கு சிச்சுவேஷ னைச் சொல்லிவிட்டுப் போய்விட் டார் டைரக்டர். கண்ணதாசனால் எவ்வளவோ முயன்றும் பாடல் எழுத முடியவில்லை. ‘நீங்கள் முதலில் மெட்டமையுங்கள். அதற்குப் பாட்டெழுதுகிறேன்’ என்று எம்.எஸ்.வி-யைக் கேட் டார். அவராலும் மெட்டமைக்க முடியவில்லை. இறுதியில் நடிகர் திலகத்தை அழைத்து, ‘இந்த சிச்சு வேஷனுக்கு ஒரு பாடல் வந்தால், நீங்கள் எப்படி நடிப்பீர்கள்?’ என்று கேட்க, அவர் பாடல் வரிகளே இல்லாமல் அற்புதமாக நடித்துக் காட்டினார். அதைப் பார்த்துத்தான் கண்ணதாசன் பாட்டெழுதினார். அந்தப் பாடல் தான் ‘எங்கே நிம்மதி’!”.
– கவிஞர் வைரமுத்து (4.2.90)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...01&oe=5B649CBA
-
jahir hussain
எந்தவொறு படத்திலும் நம்மவர் நடிப்புக்குத் தோல்வியே கிடையாது. இயக்குநர்களும் படத்தயாரிப்பாளர்களும் எதிர்பார்ப்பதைவிட கூடுதலாகவே அவருடைய திறமை வெளிப்படும்.
அண்ணன் என்றால் ‘பாசமலர்’ .... அப்பா என்றால் ‘தெய்வமகன்’... மகன் என்றாலும் ‘தெய்வமகன்கள்தான்... கணவன் என்றால் ‘வியட்நாம் வீடு’ காதலன் என்றால் ‘வசந்தமாளிகை’... இப்படி எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அவருடைய நடிப்பாற்றல் தனித்துவத்துடன் வெளிப்படும். டாக்டர் என்றால் ‘பாலும் பழமும்‘ படம் நினைவுக்கு வரும். வக்கீல் என்றால் ‘கௌரவம்’ படத்தைத் தாண்டி இன்னொன்று நினைவுக்கு வராது. காவல்துறை உயரதிகாரி என்றால் ‘தங்கப்பதக்கம்’ படத்தை மிஞ்ச இன்னொன்று கிடையாது. லாரி டிரைவராக இருந்தாலும் நீதிபதியாக இருந்தாலும் நடிகர் திலகத்தைக் கடந்து இன்னொரு நடிகரை சட்டென யோசிக்க முடியாது. சிக்கல் சண்முகசுந்தரம் என்ற நாதசுரக் கலைஞராக ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வாழ்ந்திருப்பார் ஏழையின் துன்பமா, பணக்காரனின் ஆடம்பரமா எல்லாவற்றையும் தன் படங்களில் அச்சு அசலாகப் பிரதிபலித்தவர் அவர்தான்.
இவையெல்லாவற்றையும்விட பாமர மக்களின் ஊடகமான சினிமா மூலமாக வரலாற்று நாயகர்களையும் புராண மாந்தர்களையும் நினைவுபடுத்தி நெஞ்சில் நிறைந்தவர் சிவாஜியே. வீரபாண்டியகட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, மகாகவி பாரதியார், ராஜராஜசோழன், சேரன் செங்குட்டுவன், பகத்சிங், திருப்பூர் குமரன், சாக்ரடீஸ், கர்ணன், பரமசிவன், காத்தவராயன், அப்பர், சுந்தரர், ஹரிச்சந்திரன் என அவர் பல பாத்திரங்களில் நடித்துள்ளார். திருமால் எடுத்ததாகச் சொல்லப்படும் அவதாரங்களைவிட, திரையில் சிவாஜி பூசிய அரிதாரங்களும் அது மக்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கங்களும் தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கின்றன. பெரும்பாலான இயக்குநர்களுக்கு சிவாஜி ஒரு "வரப்பிரசாதமாக" இருந்தார். தங்கள் கலைப்படைப்பை மெருகேற்ற சிவாஜியைத் தவிர இன்னொரு கலைஞனை அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாதபடி அவருடைய நடிப்பு இருந்தது. தன்னைவிட மூத்த நடிகர்களான எம்.ஆர்.ராதா, நாகையா, பாலையா ஆகியோருடனும் அவருடைய நடிப்பு போட்டிபோடும். தனக்குப் பின் திரைக்கு வந்தவர்களான முத்துராமன், மேஜர் சுந்தர்ரராஜன், பாலாஜி ஆகியோருக்கும் அவரது நடிப்பு, பாடம் சொல்லிக் கொடுக்கும். தான் அறிமுகமான காலத்தில் அறிமுகமான ஜெமினி, எஸ்.எஸ்.ஆர், வி.கே. ராமசாமி ஆகியோர்களுக்கும் நட்பார்ந்த நடிகராக திகழ்ந்தார்...
சிவாஜிக்கு ஜோடியாக நடித்த சௌகார் ஜானகி, பத்மினி, பானுமதி, சரோஜாதேவி, சாவித்திரி, ஜெயலலிதா, லட்சுமி, கே.ஆர்.விஜயா, சுஜாதா என எல்லோருமே மற்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதைக் காட்டிலும் சிவாஜியுடன் நடிக்கும்போது கூடுதல் நடிப்பாற்றலை வெளிப்படுத்துவார்கள். முகம் பார்க்கும் கண்ணாடியில் தனது பிம்பத்தைப் பார்த்து ஒப்பனையை சரிசெய்துகொள்வதுபோல, சிவாஜி எனும் நடிப்பிற்கான கண்ணாடி முன் நிற்கும்போது சக நடிகர்-நடிகைகள் தங்கள் நடிப்பை சரி செய்துகொண்டு அதிக திறமையை வெளிப்படுத்துவது வழக்கமாக இருந்தது. சிவாஜியின் சாயல் இல்லாமல் எந்த நடிகராலும் நடிக்க முடியாது என்கிற அளவிற்கு திரையுலகில் அவருடைய நடிப்பாற்றல் ஆதிக்கம் செலுத்தியது.
நாடகமேடையில் இருந்து வந்தவர் என்பதாலும், அன்றைய திரைப்படங்களில் அமைந்த கதையம்சங்களாலும் அவை எடுக்கப்பட்ட விதத்தாலும் சிவாஜியவர்கள் தன் நடிப்பில் அந்தந்த காலகட்டத்தை பிரதிபலித்தார்... ஆனாலும், அவருடைய வசனஉச்சரிப்பும், அதற்கேற்ற உடல்மொழியும் வேறு எவராலும் நெருங்க முடியாதது. கண்களால் நடிப்பார். புருவங்களால் நடிப்பார். கன்னங்களை மட்டுமே நடிக்க வைப்பார். அவரது உதடுகள் நடிக்கும். உள்ளத்தின் வார்த்தைகளை மௌனத்தால் மிகக் கச்சிதமாக வெளிப்படுத்துவார். அவரது உடையும் அதற்கேற்ற நடையும், அசத்தலான பார்வையும், அலட்சியமான பாணியும் திரையரங்கத்திற்கு வரும் ரசிகர்களுக்கு அள்ளி அள்ளி பரிமாறப்பட்ட அறுசுவை விருந்தாக அமைந்தன. நடுத்தரக் குடும்பங்களின் ரேஷன் கார்டில் இடம்பெறாத குடும்ப உறுப்பினர் எனச் சொல்லும் அளவிற்கு சிவாஜி, ஒவ்வொரு இல்லத்திலும் கொண்டாடப்பட்டார்... காதல், நகைச்சுவை, கோபம், சோகம், விரக்தி, அழுகை உள்ளிட்ட நவரசங்களையும் வெளிப்படுத்தும் அவரது முகபாவத்தை எத்தனை நெருக்கமான குளோசப்பிலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் படம் பிடிக்கலாம். அப்படியொரு திறமையும் முகவெட்டும் சிவாஜிக்கே வாய்த்திருந்தது. பின்னணி பாடியவர்களைக் காட்டிலும் அதிக ஈடுபாட்டுடன் பாடல் காட்சிகளில் நடிப்பது சிவாஜியின் வழக்கம்.
படத்தைப் பார்க்கும்போது சிவாஜியே பாடுவது போன்ற தோற்றம் கிடைக்கும். இத்தகைய பேராற்றல் வாய்ந்த ஒரு நடிகர் சிவாஜிக்கு முன்பும் கிடையாது. பின்பும் கிடையாது. அவருடைய சமகாலத்தில் இந்தியாவில் வேறெந்த மொழியிலும் சிவாஜியைப்போன்ற அற்புத நடிகரைக் காண முடியவில்லை. எத்தனை யுகங்கள் கடந்தாலும் நடிப்பின் இலக்கணமாக ரசிகர்களின் நெஞ்சில் உயர்ந்து நிற்பார் நடிகர் திலகம்... (நன்றி கோவி.லெனின் அவர்களுக்கு..)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...7f&oe=5B5FF76D
-
நடிகர் திலகத்துடன் தங்கள் அனுபவம் குறித்து பல்வேறு பிரபலங்கள் ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த பேட்டி தேதி வாரியாக ,
சிவாஜி THE BOSS (விகடன் பொக்கிஷம்)
==========================================
“சிவாஜி ‘பராசக்தி’யில் நடித்துக்கொண்டிருந்த போதே ‘மனோகரா’ படத் தயாரிப்பு
... வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதற்கு நான் திரைக்கதை வசனம் எழுதிக்கொண்டிருந்தேன்.
அந்தச் சமயத்தில், ‘மனோகரா’வில் கே.ஆர்.ராமசாமியை மனோகரனாக நடிக்க வைப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அவரால் அந்தப் படத்தில் நடிக்க இயலவில்லை. ‘பராசக்தி’யில் சிவாஜியின் நடிப்பும், வசன உச்சரிப்புகளும் சிறப்பாக இருந்ததைக் கண்கூடாகக் கண்டதனால், சிவாஜியையே மனோகரனாக நடிக்க வைக்கலாம் என்று தயாரிப்பாளரான ஜூபிடர் சோமுவிடம் சொன்னேன். அதற்கான ஒப்பந்தம் ஒன்றும் போடப்பட்டது. அதற்கிடையே, சிலர் ஜூபிடர் சோமுவிடம் சென்று அவரது மனத்தைக் குழப்பினார்கள். அந்தச் சமயம், ‘பராசக்தி’ 1952 தீபா வளியன்று வெளிவந்தது. சென்னை அசோக் தியேட்டரில் ‘பராசக்தி’ வெளியான அன்றே – முதல் நாள் – அதுவும் மாட்னி காட்சிக்கு நானும் ஜூபிடர் சோமுவும் கிருஷ்ணன் பஞ்சுவுமாகப் போய்ப் பார்த்தோம்.
படம் முடிந்தது. சிவாஜியின் உணர்ச்சிமிக்க நடிப்பைப் பார்த்துவிட்டு, ‘யார் என்ன சொன்னாலும் சிவாஜி கணேசன் தான் மனோகரனாக நடிக்கிறார்’ என்று மெய்சிலிர்க்கச் சொன்னார் ஜூபிடர் சோமு.”
– கலைஞர் மு.கருணாநிதி (21.8.88)
“சிவாஜிகணேசன் ஒரு ‘தெய்வ மலர்’. திரு ‘கல்கி’ அவர்கள் ‘சிவகாமியின் சபத’த்தில் சிவகாமி பற்றி கூறும்போது, ‘அவளும், அவளுடைய கலையும் தெய்வத்திற்கே அர்ப்பணமானவை. மனி தர்களால் தொடமுடியாது’ என்கிறார். நானும் அதையே சொல்கி றேன். திரு. கணேசன் அவர்களின் கலை, தெய்வத்திற்கு அர்ப்பண மானது! நாம் தூரத்தே நின்று ரசிக்கலாம்; ஆனால் அது நமக்கும் அப்பாற்பட்டது. திருஞான சம்பந்தருக்கு பாலூட்டிய தாய், இந்த நடிப்புக் கடலுக்கும் ஒரு துளி ஊட்டியிருப்பாளோ? அதனால்தான் இவர் பேசும்போது தமிழ் அவ்வளவு இனிக்கிறதோ! நான் இவரது நடிப்புத் திறனைக் கண்டு வியக்காத நாளே இல்லை. கோலார் பொன் சுரங்கம் வற்றி விட்டது என்று சொல்கிறார்களே, கிம்பர்லி வைரச் சுரங்கங்கள் வெறுமையாகிவிட்டன என்று சொல்கிறார்களே… இந்த நடிப்புச் சுரங்கம் மட்டும் வற்றுவதில்லையே!
இந்த உயர்ந்த நடிகரின் வெற்றி இவரது உழைப்பில்தான் இருக்கிறது. ‘தெய்வ மகன்’ படத்தில் மூன்று சிவாஜிகளும் தோன்றும் ஒரு காட்சியை நான் முதன்முறையாகப் பார்த்தபோது, எனக்கே மூன்று தனிப்பட்டவர்கள் நடிப்பதாக ஒரு பிரமை ஏற்பட்டது! அன்று அவர் நடிப்பின் பூரணத் துவத்தைக் கண்டேன். ஆனால் அந்த உயர்ந்தவரிடம்தான் எத்தனைப் பணிவு, எத்தனைப் பண்பு!”
– டைரக்டர் ஏ.சி.திருலோக்சந்தர் (21.9.69)
“சிவாஜி கணேசனை நான் மிகவும் மதித்து, போற்றிப் பாதுகாக்கும் காரணம், அவரை எதற்கும் எப்பொழுதும் அணுகி, எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அவருக்கு அவ்வளவு விஷயங்கள் தெரியும்! எனக்கு எந்தச் சந்தேகம் வந்தாலும் நான் அவரிடம் சென்றுதான் நிவர்த்தி செய்து கொள்வேன். தீர ஆலோசித்து, பொறுமையாக விஷயத்தை விளக்குவதில் அவருக்கு ஈடு அவரேதான்.
படப்பிடிப்பு என்று வந்து விட்டால், சிவாஜி காரியத்தில் மிகவும் கண்ணாக இருப்பார். தம்மால் மற்றவர்களுக்கு ஒரு சிறு துன்பம் வருவதையும் சகியார். என் வாழ்வில் இவர் என்றுமே மறக்க முடியாதவர்; மறக்கவும் இயலாதவர்.”
– நடிகை உஷாநந்தினி (22.7.73)
[நாளை தொடரும்]
(courtesy raja lakshmi f book)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...3f&oe=5B5EA488
-
சிவாஜி கணேசன் ஐயா மறைவிற்கு 22.7.2001 அன்று பிரபல நாளிதழ்கள் வெளியிட்ட தலைப்பு செய்திகள் (Headlines)
1.தினத்தந்தி - நடிப்பு உலக "இமயம்" மறைந்து.
2.தினமலர் - சரிந்தது தமிழ்த் திரையுலகதூண்!
... 3.தினமணி - நடிப்புச் சுடர் அணைந்தது!
4.தினகரன் - சினிமா உலகில் இமாலய சாதனை படைத்த நடிகர் திலகம் சிவாஜி காலமானார்.
5.கதிரவன் - இமயமாக திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி திடீர் மரணம்.
6.மாலை முரசு - தமிழகமே சோகத்தில் மூழ்கியது. லட்சக் கணக்கானோர் திரண்டு சிவாஜிக்கு கண்ணீர் அஞ்சலி.
7.மாலை மலர் - நடிப்புலக சக்கரவர்த்தி மறைந்தார்.
8.மக்கள் குரல் - சிவாஜி மறைவினால் தமிழகம் கண்ணீர்.
9.மாலைச்சடர் - தலைவர்கள், கலைஞர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி.
9.News Today - All roads in chennai lead to Sivaji Ganesan salai TN weeps as he lies in state.
10.The Hindu - Sivaji Ganesan is dead.
11.The New Indian Expess - Nadigar Thilakam is dead.
பத்திரிகைகள் வெளியிட்ட முன் அட்டைத் தலைப்புகள்
1.ஜுனியர் விகடன் - 29.7.2001 - மன்னவன் சென்றானடி!
2.தமிழன் எக்ஸ்பிரஸ் - 1-7 ஆகஸ்ட் 2001- ராஜபார்ட் சிவாஜி துரை.
3.குங்குமம்- 3.8.2001- சிவாஜி ஒரு சகாப்தம்!
4.பாக்யா - 3-9 ஆகஸ்ட் 2001 - விதயாய் இறங்கிய விருட்சம்!
5.அஞ்சா நெஞ்சன் - 1-15 ஆகஸ்ட் 2001 - சரிந்தது சரித்திரம்!
6.நந்தன்- 1-15 ஆகஸ்ட் 2001 - மூன்றாம் தமிழ் மகுடம் இழந்தது!
7.சிகப்பு நாடா- 1-15 ஆகஸ்ட் 2001 - பெருமாள் முதலியார் கண்டெடுத்த நல்முத்து மறைந்து.
8.உண்மை - 16 -31 ஆகஸ்ட் 2001 - சிவாஜி - ஒரு தமிழ் பெருமகன்!
குறிப்பு:
1. ஆண்கள் படத்தையே அட்டையில் இடம் பெற வைக்காத " லேடீஸ் ஸ்பெஷல் ", "சிநேகிதி" போன்ற பத்திரிகைகளும் சிவாஜி படத்தை அட்டையில் வெளியிட்டு அஞ்சலி செலுத்தின.
2.ஆனந்த விகடன் உள்ளிட்ட பிரபல பத்திரிகைகள் அனைத்தும் முன் அட்டையில் சிவாஜி படத்தை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியது.
நன்றி: வசந்த மாளிகை ஜுலை 2004 சிறப்பு மலர்.
Courtesy thanka thaamarai f book