http://i63.tinypic.com/2yypkxw.jpg
http://i63.tinypic.com/2uooumq.jpg
Printable View
TIMES OF INDIA, PALAKKAAD-26/2/19
http://i66.tinypic.com/8w0hev.jpg
MALAYALA DAILY -27/2/19
http://i63.tinypic.com/1z2pxqb.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். குடும்பத்தினர் பூர்விகமாக வாழ்ந்த இல்லம்
முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி மூலம் புனரமைப்பு .
இல்லத்தின் நுழைவு வாயில் .
http://i63.tinypic.com/a5khy.jpg
http://i66.tinypic.com/2j3pbb7.jpg
சத்யா விலாசம் என்கிற பெயரில் அமைந்த இல்லத்தின் வாயிலில் இடதுபுறம்
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை மற்றும் கல்வெட்டு , வலதுபுறம்
சிங்கத்தின் சிலை அமைக்கப்பட்டுள்ளது .
http://i64.tinypic.com/2qx5hfc.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யபாமா அம்மையார்
http://i63.tinypic.com/2lmxy8l.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருடன் அண்ணன் திரு.சக்கரபாணி
http://i68.tinypic.com/21e69vo.jpg
இல்லத்தில் இடதுபுற அறையில் வைக்கப்பட்டுள்ள புகைப்படம்
http://i66.tinypic.com/2u7t7bs.jpg
இல்லத்தில் வலது புற அறையில் வைக்கப்பட்டுள்ள புகைப்படம்
http://i66.tinypic.com/2ez786d.jpg
இல்லத்தில் நடு அறையில் ,நுழைவு வாயிலுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள
வெண்கல சிலை
http://i67.tinypic.com/10rtizn.jpg
இல்லத்தின் வலதுபுறம் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் தாய், தந்தையரின் சிலைகள் .
http://i68.tinypic.com/2qxyni8.jpg
அங்கன்வாடி மையத்தில் உள்ள புகைப்படம்
http://i66.tinypic.com/29ddavo.jpg
http://i64.tinypic.com/bh0gn8.jpg
மேடையில் வைக்கப்பட்ட பேனரின் தோற்றம்
பத்திரிகை ஆசிரியர் திரு;துரை கருணா அனைவரையும் வரவேற்றபோது
http://i63.tinypic.com/2qk0ya1.jpg
முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார் திரு.சைதை துரைசாமி
http://i65.tinypic.com/33lhxyq.jpg
மேடைக்கு அருகில் அமர்ந்திருந்த முக்கிய பிரமுகர்கள் கூட்டம் .
http://i63.tinypic.com/mb38m1.jpg
இனிய காலை வணக்கம்.
அமரர் எம்ஜிஆரைப் பற்றி அவரது ரசிகர்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி பல விஷயங்கள் தெரிந்திருந்த போதிலும் கூட, அவரது அரசியல் பிரவேஷம் எப்போது? சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தவர் எப்படி திடீரென ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உடனடியாக தமிழக முதல்வராகவும் ஆனார்? என்று தடாலடியாக யாராவது கேள்வி கேட்டால், திமுக எம் எல் ஏக்களை சொத்துக் கணக்கு காட்டச் சொல்லி பொதுமேடையில் விமர்சித்ததாலும், கட்சியின் செலவுக் கணக்கைக் கேட்டதாலும் தான் அவர் திமுகவிலிருந்து கருணாநிதியால் வெளியேற்றப்பட்டார் என்றும் அந்த உத்வேகத்தில் அவரது ரசிகர்கள் காட்டிய ஏகோபித்த அன்பிலும், வரவேற்பிலும் முகிழ்த்தது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எனும் கட்சி என்றும் பொத்தாம் பொதுவாக யார் வேண்டுமானாலும் பதில் சொல்லி விடுவார்கள்.
ஆனால் எம் ஜி ஆரின் அரசியல் வரலாறு அத்தனை எளிதாகச் சொல்லி முடித்து விடக்கூடியது அல்லவே! அவர் 1952 முதலே தம்மை மிகுந்த அரசியல் ஈடுபாடு கொண்டவராகவே காட்டிக் கொண்டிருந்துள்ளார். 1952 ல் பேரறிஞர் அண்ணாவின் தலைமையால் ஈர்க்கப்பட்டு திமுக வில் சேர்ந்த எம்ஜிஆர், தனது அரசியல் பிரவேசத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாபெரும் மக்கள் ஈர்ப்பு சக்தியாக விளங்கினார் என்பது யாருக்கும் சொல்லித் தெரியவேண்டிய விஷயமில்லை. அது ஊரறிந்த உண்மை! முதலில் கட்சியின் அடிப்படை உறுப்பினரகச் சேர்ந்து பிறகு தனது திரைப்படங்களில் வசனங்கள் மற்றும் பாடல்கள் வாயிலாக கட்சியின் பிரச்சார பீரங்கியாகி அப்படியே கட்சிப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று, அதைத் தொடர்ந்து சில வருடங்களில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகி, சிறுசேமிப்புத் தலைவராகி, திமுகவின் பொருளாளராகி அடேயப்பா... எம் ஜி ஆர், தனிக்கட்சி தொடங்குமுன்னர் திமுகவில் ஆற்றிய பணிகள் தான் எத்தனை, எத்தனை?! அதை வரிசைக் கிரமமாக தெரிந்து கொள்ளுங்கள்.
அது மட்டுமல்ல; திமுகவில் இயங்கிய போதும் சரி, திமுகவிலிருந்து விலக்கப்பட்டு தனிக்கட்சி தொடங்கி அரசியல் செய்தபோதும் சரி எம்ஜிஆர் என்ற ஆளுமை தேர்தல் களத்தில் தன்னை எதிர்த்து நின்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத்தான் இருந்திருக்கிறார். அதை அவர் போட்டியிட்டு ஜெயித்த தொகுதிகளின் பட்டியலைச் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். சரி இனி எம்ஜிஆரின் அரசியல் வரலாற்றைச் சுருக்கமாகவும், விளக்கமாகவும் ஆண்டு வரிசைப்படி தெரிந்து கொள்ளுங்கள்.
1952 - தி.மு.க. வில் சேர்ந்தார்.
1957 - முதல் முறையாக தி.மு.க.வை ஆதரித்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்தார். 15 இடங்களில் தி.மு.க. வென்றது.
1958 - சென்னை வருவதாக இருந்த நேருவுக்கு கறுப்புக் கொடி காட்ட தி.மு.க. முனைந்த போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 6 நாட்கள் சாதாரண வகுப்பில் இருந்தனர் அவர்கள். பிரமுகர்களுக்கான வசதி, சலுகைகளை எம்.ஜி.ஆர். மறந்துவிட்டார். இந்த உண்மையை எம்.ஜி.ஆர். ஒரு போதும் வெளிப்படுத்திக்கொண்டது இல்லை.
1962 - இரண்டாம் முறையாக தி.மு.க.வை ஆதரித்து எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்தார். 52 இடங்களில் தி.மு.க. வென்றது.
1962 - சட்டமன்ற மேலவை உறுப்பினராக (M.L..C.) ஆனார்.
1964 - இந்த ஆண்டில் தி.மு.க.வில் கருணாநிதி ஏற்படுத்திய சர்ச்சைகள் காரணமாக ராஜினாமா செய்தார்."காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி" என்று எம்.ஜி.ஆர். சொன்னதால் ஏற்பட்ட சர்ச்சை அது.
1965-இந்தி எதிர்ப்பு மொழிப் பிரச்சனை போராட்டத்தில் கலந்து கொண்டார்.
1967 - தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறுசேமிப்பு துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
1971 - மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலையில் திராவிட முன்னேற்ற கழக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1972 - திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.
1972 - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஓர் அரசியல் கட்சியை ஏற்படுத்தினார்.
1974 - புதுவையில் அனைத்திந்திய அ.தி.மு.கழகம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1977 - புதுவையில் இரண்டாவது முறையாகவும், தமிழகத்தில் முதல் முறையாகவும் அ.இ.அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1980 - அ.இ.அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. (பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் காரணமாக)
1980 - தமிழகத்தில் நடந்த மறு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது.
1981 - மதுரையில் 5ம் உலகத் தமிழ் மாநாடு இந்திய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் சிறப்புடன் நடத்தினார்.
1982 - மாநிலத்திற்கு அரிசி தேவைக்கு உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
1984 - அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சி அமைத்தது.
1987 - இலங்கைத் தமிழர்கள் அமைதி காக்க இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி - இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஏற்பட பாடுபட்டார்.
எம்ஜிஆர் போட்டியிட்ட இடங்கள் பெற்ற வாக்குகள்
எம்.ஜி.ஆர். பரங்கிமலை -54106. காங்கிரஸ் -26,432
எம்.ஜி.ஆர். பரங்கிமலை -65405 காங்கிரஸ் -40777
எம்.ஜி.ஆர். அருப்புக்கோட்டை -43065 தி.மு.க. -5415
எம்.ஜி.ஆர். மதுரை மேற்கு -57019 தி.மு.க. -35959
எம்.ஜி.ஆர். ஆண்டிப்பட்டி -60510 தி.மு.க. -28016......... Thanks wa.,...
*எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த சமயம்.*
1978-ம் ஆண்டு இறுதியில் ஒருநாள். முதல்வரை சந்தித்து மனுக்கள் அளிக்க எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டில் மக்கள் குழுமியிருக்கின்றனர்.
அவர்களிடையே ஒரு பெண்மணி தயங்கித் தயங்கி நிற்கிறார். எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண்மணியிடம் விசாரிக்கின்றனர். தனது கணவர் பற்றிய விவரங்களைச் சொல்லி தானும் தனது குடும்பமும் படும் கஷ்டங்களை கூறி முதல்வரை சந்தித்தால் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறார் அந்தப் பெண்மணி.
வீட்டில் இருந்து வெளியே வந்து மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு கோட்டைக்கு காரில் ஏறிப் புறப்பட தயாரான எம்.ஜி.ஆரிடம் அந்த பெண்மணி பற்றிய விஷயம் தெரிவிக்கப்பட்டது. காரில் இருந்து இறங்கி பெண்மணி நின்றிருந்த இடத்துக்கே சென்று வணக்கம் தெரிவித்து வரவேற்று முதலில் அவரது கணவரின் நலன் பற்றி விசாரிக்கிறார். அவரை சாப்பிடச் சொல்லிவிட்டு, பின்னர், அவரது குடும்ப நிலைமை அறிந்து கொண்ட பின், தனது டிரைவரை அழைத்து அந்த பெண்மணியை வேறு காரில் அவரது வீட்டில் கொண்டு விட்டு வருமாறு கூறுகிறார். கவலை தீரும் என்ற நம்பிக்கையில் அந்தப் பெண்ணும் நிம்மதியாக எம்.ஜி.ஆரின் காரில் சென்றார்.
அந்தப் பெண்மணி... பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்த தியாகி கக்கனின் மனைவிதான். மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர் தியாகி கக்கன். சுதந்திரப் போராட்ட வீரரான அவர் 10 ஆண்டுகள் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியவர்.
அமைச்சர் பதவிக் காலத்துக்குப் பின் மக்களோடு மக்களாக பஸ்ஸில் சென்றவர் என்பதிலிருந்தே பொதுவாழ்வில் அவர் எவ்வளவு புடம் போட்ட தங்கமாக வாழ்ந்திருக் கிறார் என்பது விளங்கும்.
வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த கக்கனுக்கு வாடகைப் பணம் 170 ரூபாயை கூட கொடுக்க முடியாத துரதிர்ஷ்டவசமான நிலைமை.
பல மாதங்களாக வாடகை பாக்கி இருந்ததால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர் அதிகாரிகள். இருந்தாலும் தன் கஷ்டம் தன்னோடே இருக்கட்டும் என்று காலம் கடத்தி வந்தார் கக்கன். ஒருநாள் வீட்டுக்கு சீல் வைப்பதற்காக அதிகாரிகள் வந்துவிட்டார்கள். ‘‘வாடகையை கட்டுங்கள் இல்லை, வீட்டிலிருந்து வெளியேறுங்கள்” என்று கூறுகின்றனர். அவர்களிடம் ஒரு நாள் அவகாசம் கேட்கிறார் கக்கனின் மனைவி.
கிடைத்த ஒருநாள் அவகாசத்தில் தங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நம்பிய கக்கனின் மனைவிதான் ஆரம்பத்தில் உள்ளபடி, ராமாவரம் தோட்டத்துக்கு சென்று முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தங்கள் நிலைமையை விளக்கிவிட்டு நம்பிக்கையுடன் சென்ற அந்தப் பெண்மணி.
அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. யாருமே கஷ்டப்படுவதை பொறுத்துக் கொள்ளாதவரான எம்.ஜி.ஆர்., நாட்டுக்கு தொண்டாற்றிய தியாகி கக்கனின் குடும்பம் சிரமப்படுவதை பொறுத்துக் கொள்வாரா? வீட்டு வசதி வாரியத் துக்கு கட்ட வேண்டிய வாடகை பாக்கி மொத்தத்தையும் எம்.ஜி.ஆர். அன்றே கட்டிவிட்டார்.
இங்கே, ஒன்றை கவனிக்க வேண்டும். முதல்வர் எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால் வாடகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்து உத்தரவிடச் செய்திருக்க முடியும். ஆனால், தனது சொந்தப் பணத்தில் இருந்து வீட்டு வாடகையை கட்டியிருக்கிறார் என்றால் அதுதான் தியாகத்துக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த மரியாதை.
தான் மட்டும் மரியாதை காட்டினால் போதாது, அரசு சார்பிலும் கக்கனின் தியாகத்துக்கு மரி யாதை செய்யப்பட வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர். மறுநாளே உத்தரவு போட்டார்.
‘‘முன்னாள் அமைச்சரும் சுதந்திரப் போராட்ட வீரருமான தியாகி கக்கனின் மகத்தான தேச சேவையை கருத்தில் கொண்டு அவர் வாழ்நாள் முழுவதும் வசிக்க இலவசமாக வீட்டு வசதி செய்யப்படும். அவரது குடும்பத்துக்கு மாதம் 500 ரூபாய் அரசு உதவித் தொகை வழங்கப்படும்’’ என்பதுதான் எம்.ஜி.ஆர். போட்ட உத்தரவு.
அதோடு நில்லாமல் அந்த உத்தரவுக்கான அரசாணை சான்றிதழையும் வெள்ளிப் பேழையில் வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 1979-ம் ஆண்டு நடந்த திருவள்ளுவர் தின விழாவில் கக்கனிடம் முதல்வர் எம்.ஜி.ஆர். வழங்கினார்.
எம்.ஜி.ஆர். ஒருமுறை மதுரை சென்றார். உடல் நலம் சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது கட்சிக்காரர் ஒருவரை பார்ப்பதற்காக அங்கு செல்கிறார். கட்சிக்காரரைப் பார்த்துவிட்டு புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது, உடல் நலம் பாதிக்கப்பட்டு தியாகி கக்கனும் இங்கே சிகிச்சை பெற்றுவருகிறார் என்று அவருடன் இருந்தவர்கள் தெரிவித்தனர். உடனே, எம்.ஜி.ஆரின் முகம் மாறியது. ‘‘இதை ஏன் முதலிலேயே தெரிவிக்கவில்லை?’' என்று கேட்டு, கக்கன் எந்த வார்டில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று அறிந்து அவரை காணச் சென்றார்.
அங்கு சாதாரண அறையில் சிகிச்சை பெற்று வந்த கக்கனைக் கண்டதும் எம்.ஜி.ஆருக்கு கண்கள் கலங்கின. மருத்துவமனையில் தனக்கு தெரிவிக்காமல் சேர்ந்தது பற்றி கக்கனிடம் அன்புடன் தனது கவலையை வெளிப்படுத்தியதோடு, மருத்துவர்களை அழைத்து கக்கனுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.
கக்கனின் மறைவுக்குப் பிறகும் அவரது குடும் பத்தினருக்கு இலவச வீடு, அரசு உதவித் தொகை, வைத்திய வசதிகள் கிடைக்கும்படி செய்தார்.
தியாகி கக்கனுக்கு செய்த உதவிக்காக முதல்வர் எம்.ஜி.ஆரை கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லா தரப்பினரும் பாராட்டினர். .
கவியரசு கண்ணதாசன் தெரிவித்த பாராட்டு சற்று வித்தியாசமானது, உண்மையும் கூட. அவர் சொன்னார்... ‘‘கக்கனைப் போன்ற உண்மை யான தியாகிகளுக்கு உதவி செய்யும் எம்.ஜி.ஆரை எந்தக் கட்சிக்காரனும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.’’
*என்றும் அன்புடன்
KV........ Thanks fb.,
MGR வாழ்க
இந்த இடம் பாங்காக்கில் உள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு படப்பிடிப்பு குழுவினர் சென்றபோது எடுத்தபடம்
MGR ஹாங்காங் சென்றபோது
விமான நிலையத்திற்கு MGR யை வரவேற்க வந்த தமிழர்களில்
அதிகம்பேர் முஸ்லிம் ரசிகர்கள்
MGR ன் நண்பர் ரஹ்மான், விஸ்வநாதன் ஐயர் ஆகியோர்
படப்பிடிப்பு முடியும்வரை கூடவே இருந்தனர்.
MGR அவர்கள் ஜப்பான் விமான நிலையத்திற்கு வந்தபோது
ஏர்பிரான்ஸ் விமான கம்பேனியின் அதிகாரிகள் MGR ஐ படமெடுத்தனர்.
பாங்க் ஆப் இந்தியா அதிகாரி
சந்தானம் மனைவி நிர்மலா ஆகியோர் வரவேற்றனர்
அவரின் இரண்டு பெண்குழந்தைகள்
ஜப்பானிய பெண்களும் MGR அவர்களுக்கு மாலை அனிவித்தனர்
MGR ஜப்பானில் இருக்கும் வரை
MGR க்கு காரோட்டியவர் சீட்டோ
படப்பிடிப்பு முடிந்து ஜப்பானை விட்டு MGR புறப்படும் போது
விமான நிலையத்தில் நினைவு பரிசும் பணமும் டிரைவர் சீட்டோவிற்கு கொடுத்த போது
MGR ரை கட்டிப்பிடித்துக் கொண்டு
சத்தம் போட்டு அழுதுவிட்டார்
சீட்டோ அவர்கள். முகநூலில் பிரபாகரன் மாணிக்கம்...... Thanks wa.,
கட்சியை உருவாக்கப் பாடுபட்ட
மாண்புமிகு.பாரத்ரத்னா.டாக்டர்.
புரட்சித் தலைவர்.எம்.ஜி.ஆர்..பெயரைச்
சொல்லி ஏதாவது ஒரு அணி உண்டா ?
அவரது பெயரைச் சொல்லி புகழாரங்கள்
தேர்தல் நேரங்களில் தவிர... அனுதினமும் சட்டசபையில்
உண்டா...? தலைவரின் சாதனைகளின் நினைவோட்டம் உண்டா..?
அவரின் படங்கள் போஸ்டரில் மத்தியில்
பெரிய அளவில் உண்டா ? தலைவரின் கொள்கைகளில் முக்கியமாக.. ஏழை எளியவர்களின் தேவைகளைப் சந்திக்க இறங்கி வேலை செய்ய வேண்டும்...
ஏழை மாணவ .. மாணவிகளுக்கு
சலுகைகள் வழங்க வேண்டும்..
விவசாயம் தழைக்க நேரில் சென்று
பேசி..சீர்படுத்த வேண்டும்..
புரட்சித் தலைவரின் மாண்புகளை அடிக்கடி மேடையில் தொடர்ந்து
முழங்க வேண்டும்... புரட்சித் தலைவரின்
சாதனைத் திட்டங்களை... மறுபடியும்
கைக்கொண்டு செயல் படுத்த வேண்டும்.
தான தர்மங்கள் நிலைக்க வேண்டும்...
ஊழல் என்பது அழிய வேண்டும்..
இவை நடக்குமா ?
மிகவும் வேதனை..
அனைத்து புரட்சித் தலைவரின் உண்மை
தொண்டர்கள்.. பக்தர்கள்
அனைவருக்கும் இருந்துகொண்டு இருக்கும் வேதனை இது...
புரட்சித் தலைவர்.எம்.ஜி.ஆர்
என்கிற மூன்றெழுத்து மந்திரத்தின்
மகிமையை அறிந்த தலைவரின் மாண்புகளை.. எம்ஜிஆர் என்கிற மூன்றெழுத்து மந்திரத்தை... தேர்தல் நேரத்தில் மட்டுமன்றி... எப்போதும் மேடையில்,.. சட்ட சபையில் கூறிக் கொண்டு இருந்தால்..... வெற்றி நிச்சயம்...
இதை உணர்ந்து செயல்பட்டால்...
புரட்சித் தலைவரின் தொண்டர்கள்..
பக்தர்கள்..மனம் நிம்மதியாக செயல்படும்... ஓட்டுக்கள் குவியும்..
அந்த கட்சியை யாராலும் அசைக்க முடியாது
என்பது நிதர்சனமான உண்மை.
மாண்புமிகு.டாக்டர்.புரட்சித் தலைவர்.
எம்.ஜி.ஆர் புகழ்
என்றும் வாழ்க.. இனிய அதிகாலை வணக்கம் அன்புள்ளங்களே.... Thanks wa.,
*அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்...!*
*அப்பழுக்கற்ற அதிசய மனிதர் சைதை துரைசாமி.. ஐயா அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்....
பாலம் இதழ் வெளியிட்ட கலாம் சிறப்பிதழில் பிரபல சமூக சேவகர் பாலம் கல்யாண சுந்தரம் சைதை துரைசாமியை பற்றி எழுதியுள்ள சிறப்பு கட்டுரை–
“மடி நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்”–
இந்த வகை மனிதர்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்., யாருக்காக கொடுத்தான்? ஒருவருக்கா கொடுத்தான்? இல்லை ஊருக்காக கொடுத்தான்’ என்ற பொது உடைமை உணர்வோடு ஏழை எளியவர்களுக்கு உதவி வருகிறார் சைதை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சைதை சா.துரைசாமி.
கருவிலே திருவானவர் என்று சிலரை சொல்வார்கள், அதே போல் பிறருக்கு உதவும் மனிதநேயம் இயல்பிலேயே கொண்டு விட்டவர் துரைசாமி. அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது தொகுதி மக்கள் அனைவருக்கும் இலவசமாக டைப் செய்து கொடுப்பது இலவசமாக ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளும் வசதி ஆகியவற்றை செய்து கொடுத்தவர். பொது வாழ்க்கை பொறுப்போடு தனிப்பட்ட முறையிலும் தேவைப்படுவோருக்கு தேவை அறிந்து எப்போதும் உதவிய படியே இருப்பவர்.
அடுப்பில் உலையை வைத்துவிட்டு அரிசிக்கு பணம் வாங்கி விடலாம் என்று நம்பிக்கையோடு ஒருவரிடம் செல்லலாம் என்றால் அவர் எம்.ஜி.ஆர்., ஒருவர்தான் என்று ஒரு முறை பத்திரிகையாளர் சோ சொன்னார். அப்படி இன்றைக்கு ஒருவரை சொல்ல வேண்டுமானால் அது சைதை துரைசாமியாகத்தான் இருக்க முடியும் என்று துணிந்து சொல்லலாம்.
தனக்காக மட்டும் சம்பாதிப்பவர்களுக்கு மத்தியில் தானம் செய்வதற்காக சம்பாதித்துக்கொண்டிருப்பவர் சைதை துரைசாமி. தனிப்பட்ட முறையில் பலருக்கும் உதவி செய்து வந்த இவர் 2005ம் ஆண்டு மனித நேய அரக்கட்டளை என்ற பெயரில் ஒரு டிரஸ்ட்டை உருவாக்கி தனது மனித நேய எல்லையை விரிவு படுத்திக்கொண்டுள்ளார்.
கடந்த முறை சென்னை மாநகரம் பெரும் வெள்ளத்தால் தத்தளித்த போது 1 லட்சத்து 8 ஆயிரத்து 424 குடும்பங்களுக்கு சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிசி, அத்தியாவசிய பொருட்கள், மற்றும் உதவித்தொகை என இவரின் மனிதநேய அறக்கட்ளை செய்துள்ளது.
சென்னை வேளச்சேரி பகுதியில் திருமண மண்டபம் ஒன்றை நிறுவி ஏழை எளியோர் இங்கு இலவசமாக திருமணம் நடத்திக்கொள்வதற்காக ஏற்பாடு செய்துள்ளார். இங்கு திருமணம் செய்பவர்களிடம் எந்த விதத்திலும் ஒரு பைசா கூட கட்டணம் வசூலிப்பதில்லை. தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளில் அதிக அளவு தேர்வு பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இலவச பயிற்சி அளிக்கும் திட்டத்தை இவரின் மனித நேய அறக்கட்டளை செய்து வருகிறது. இங்கு பயிற்சி பறும் கிராம பகுதி மாணவ, மாணவிகளுக்கு இலவச தங்குமிடம், சாப்பாடு, புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் மனித நேய அரக்கட்டளையே ஏற்றுக்கொள்கிறது. தனிநபர் ஒருவர் இவ்வளவு பெரிய காரியத்தை செய்வது சைதை துரைசாமி ஒருவராகத்தான் இருக்கும்.
இது தவிர தமிழகம் முழுவதும் மருத்துவம், பொறியியல், மற்றும் பட்டப்படிப்பு படிக்கும் ஏழை மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஆண்டுதோறும் இவரது மனிதநேய அறக்கட்டளை கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. மேலும், ஏழை எளிய மக்கள் இவரை அணுகினால் கல்வி உதவித்தொகை, பள்ளி கட்டணத்தொகை மற்றும் பாடப்புத்தகங்கள் நோட்டுகள் வாங்குவதற்கும் உதவி செய்து வருகிறார்.
நீங்கள் ஏன் கல்வி நிறுவனம் நடத்தக்கூடாது? என்று கேட்டால் கல்வியை காசாக்குவது தவறு என்று நினைப்பவன் நான். கல்வி தானமாக வழங்கப்பட வேண்டும். இன்றைய சூழலில் சொந்தமாக கல்வி நிறுவனம் நடத்தினால், அது என் கொள்கைக்கு மாறாக நடக்கும் படி ஆகிவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே நான் அந்த காரியத்தில் ஈடுபடவில்லை என்கிறார் இந்த மக்கள் தொண்டர்.
உயிரோடு இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, இறந்தவர்களுக்கும் உதவ வேண்டும் என்பதற்காக அமரர் ஊர்தியும், இறந்தவர் உடலை பாதுகாக்கும் 10 ப்ரீசர் பெட்டிகளும், வாங்கி இலவசமாக அனுப்பி வைக்கிறார்.
பொதுத்தொண்டு செய்வதில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் உயர்ந்த மனிதர். தவறான பழக்க வழக்கம் இல்லாதவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை உணவை மட்டுமே உண்டு வருபவர். ஆரோக்யத்திற்காக யார் எந்த முயற்சி எடுத்தாலும் அதற்கு தோள் கொடுத்து உதவும் பண்பாளர். குடிப்பழக்கம் உள்ளவர்கள் அதிலிருந்து மீண்டு வந்து ஓராண்டு மதுவை தொடாமலே இருந்தால் அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்து பாராட்டுவார். எழுத்தாளர் வ,ரா வை பாராட்டி எழுதிய அண்ணா அவரை அஹ்ரகாரத்து ‘அதிசய மனிதர்’ என்றார். இன்றைய அரசியலில் அப்பழுக்கற்ற அதிசய மனிதர் என்று சைதை துரைசாமியை சொல்லலாம்.
*வாழ்க வளமுடன் நல்லது நினைப்போம் நல்லது நடக்கும்*
***********..... Thanks wa.,
மகான் எம்.ஜி.ஆர் அவர்களுடன் நடித்த
"சீதாலட்சுமி " தனது 87 வது வயதில் இன்று காலமானார்!
எங்க வீட்டுப் பிள்ளை
ஒளி விளக்கு!
உரிமைக்குரல்! அடிமைப்பெண், ......
Mgr வாழ்க
இந்த காட்சி
லில்லி மலருக்கு கொண்டாட்டம்
என்ற பாடல் என்று உங்களுக்கு
தெரியும்.
இந்தபாடல்காட்சி முதல் அடி காஷ்மீரில் ஆரம்பிக்கும் பிறகு
ஒவ்வொரு வரிக்கும் ஒரு புதுஇடத்தில் mgr இந்த பாடல்காட்சியை எடுத்து இருப்பார்
மொத்தம் 27 வெவ்வேறு இடங்களில் இந்த பாடல்காட்சியை எடுத்து அன்று தமிழ் திரைபட உலகை ஆச்சரியப்பட வைத்தார்... கலையுலக சக்கரவர்த்தி... சினிமாவின் அத்தனை நுணுக்கங்களையும் அனுபவத்தால் அறிந்த மஹா மேதை...
' தோல்வியை எதிரிக்கு பரிசளித்தே பழகியவன் நான் "
" அண்ணா கண்ட உதயசூரியன் என்ன செய்யும் தெரியுமா "
"கலைஞர்"
" நான் கண்ட இரட்டை இலையிடம் தோற்று ஓடும் "
"ஆண்டவன் எம்ஜிஆர்"....... whatsapp sharing...
கேரள மாநிலத்தில் உள்ள புரட்சி தலைவர் புகழ் சிறந்து விளங்க அருமை அண்ணன் s துரைசாமி அவர்கள் முயற்சி செய்து
தலைவர் சீரமைக்கப்டுதலைவரின்அன்பைபெற்ற மேதகு கவர்னர் சதாசிவம் அவர்கள் இல்லத்தை திறந்து வைத்து உரையாற்றினார் விழா சிறப்பாக அமைய வேண்டும் என்று கடைகோடிபக்த்தர்கள்அனைவரையுஅன்புடன்நடத்தினர் அன்பு அண்ணன் அவர் களை வனஙகு கிறேன்...திருச்சி மாவட்டம் சிந்தாமணி க கிருஷ்ணன்... Thanks wa....
பெற்றால் தான் பிள்ளையா
என்ற படத்திற்கு பின்பு எம்ஜிஆர் அவர்கள் கழுத்தில் குண்டு அடி பட்ட பின் குரல் மாறிய நிலையில்
TMS அவரை வைத்து பிண்ணனிக் குரல் கொடுக்கலாம் என்றவுடன் தலைவர் எனது குரல் எப்படி இருந்தாலும் என் சொந்த குரலில் தான் நடிப்பேன் என்ற தைரியமும் வேறு எந்த கதாநாயகியும் நடிக்க முன் வராத நிலையில் ஜெயலலிதா அவர்கள் MGR உடன் ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்ட தைரியமும்
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
என்ற பாடலுடன் தொடங்கிய. காவல்காரன் படத்தை அடுத்து வந்த கணவன் கன்னித்தாய் புதியபூமி எங்கள் தங்கம் தனிப்பிறவி என்று பல வெற்றிப் படங்களை தந்து சென்றனர்..... Thanks wa.,
நவ் இந்தியர் டைம்ஸ் -26/02/19
http://i66.tinypic.com/2lj7420.jpg