Originally Posted by
kaliaperumal vinayagam
இதோ என் பதில் என்பது போல சரியான பதில் சொன்னீர்கள் திரு. வினோத் சார். எங்கவீட்டுப்பிள்ளை வசூல் சாதனையை திருவிளையாடல் படம் மிஞ்சியது என்பது வடிகட்டிய பொய். புதுச்சேரியிலும் இதே நிலைதான். ஆதாரம் இல்லாத எதையாவது எழுதி மக்கள் திலகம் திரியில் பதிவு செய்து புரட்சித்தலைவரின் சாதனையை மறைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக திரு. ரவிகிரண் எழுதுவதும், பின்பு எதிர்ப்பு தோன்றினால் பின் வாங்குவதும் வாடிக்கையாகி விட்டது. பெருந்தன்மை மிக்க மக்கள் திலகத்தின் ரசிகர்கள் இது போன்ற வீண் வேலை பார்ப்பதில்லை. இவர் என் இப்படி இருக்கிறார் என்பது அனைவருக்கும் (நடிகர் திலகத்தின் ரசிகர்கள் உட்பட) புதிராக இருக்கிறது. என்றைக்கும் வசூல் சக்ரவர்த்தி எங்கவீட்டுப்பிள்ளைதான்
என்பது ஊரறிந்த உண்மை. இதில் ஏன் இவர் தேவையில்லாத விவாதத்தை வைக்கிறார் என்றுதான் தெரியவில்லை. திரு. ரவிகிரண் அவர்களுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தாகிவிட்டது. சார். தாங்கள் இது போன்ற கூற்றை வைக்கும்போது ஆதாரத்துடன் பதிவிடுங்கள். please.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.