-
https://s29.postimg.org/4zhhkjaif/a2yt04.jpg
மக்கள் திலகம் பிறந்த நாளன்று
M G R பொது நலச்சங்கத்தின் சார்பாக திருச்சி SRIRANGAM கோவிலில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்வில் நானும் எனது மகன்கள் இருவரும் கலந்து கொண்டோம்.
புகைப்படத்தில் எனது மகன் பிரசாந்த் சரவணன், மதுரை சரவணன் - எனது மகன் ராகுல் - பேராசிரியர் செல்வகுமார்
இடம் - கோயில் உணவுக்கூடம்.
-
கடந்த 22.1.017 அன்று சேலம் மாநகரில்
மக்கள் திலகம் பக்தர்களால்
மக்கள் திலகம் நூற்றாண்டு விழா மிகச்சிறப்பாக
கொண்டாடப்பட்டது.
அவ்விழாவில் எனது குடும்பத்தாருடன் கலந்து கொண்டேன்.
அன்னதான நிகழ்வில் வந்திருந்த அனைவருக்கும் சுவையான
உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர்கள்
திரு கவிஞர் முத்துலிங்கம்
திரு பிரதீப் பாலூ
திரு ராஜு, ஆசிரியர், உரிமைக்குரல்
-
http://tamil.filmibeat.com/news/if-m...al-044374.html
எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் போராட்டத்துக்கு நேரில் வந்திருப்பார்! - கமல் பேட்டி
Posted by: Shankar
Published: Tuesday, January 24, 2017, 12:57 [IST]
சென்னை: எம்ஜிஆர் இருந்திருந்தால் இந்த மாதிரி வன்முறை நடந்திருக்காது. போராட்டக்காரர்களிடம் அவர் நேரில் பேசி முடித்து வைத்திருப்பார் என்றார் நடிகர் கமல் ஹாஸன். சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் நேற்று காலை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். அப்போது காவல் துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மெரினாவிலிருந்து வெளியேற மாணவர்களும் பொதுமக்களும் மறுத்தார்கள்.
அதன் பிறகு போராட்டக் களத்திலும், பிற இடங்களிலும் போலீசார் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை வரலாறு காணாதது. அமைதியின் தலைநகரான சென்னை, யுத்தபூமி மாதிரி காட்சி அளித்தது. நேற்று முதல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து ட்வீட் செய்த கமல், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சென்னையில் நிகழ்ந்த வன்முறை அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. தமிழர்களின் கலாசாரம் மீதான ஊடுருவலைத் தடுக்கவேண்டும்.
எம்.ஜி.ஆர். இப்போது நம்மிடம் இருந்திருந்தால் போராட்டக் களத்துக்கு வந்திருப்பார். போராட்டக் களத்தில் உள்ளே நுழைவதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும் பின்வாங்கியிருக்க மாட்டார். அவர்கள் எதிரே அமர்ந்து உண்ணா நோன்பு மேற்கொண்டிருப்பார். அறவழியில் முடித்து வைத்திருப்பார்.
எங்களுடைய தமிழ்க் கலாசாரத்தில் சட்டம் ஊடுருவியுள்ளது. ஜல்லிக்கட்டுவிவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது. இளைஞர்களின் போராட்டத்தின் மீது கட்சி சாயம் பூசப்படுவதை ஏற்கமுடியாது. போராட்டத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். உண்மையை யாராலும் மறைக்கமுடியாது. அதிருப்தியின் அடையாளம்தான் போராட்டம்," என்றார்.
-
தொலைக்காட்சிகளில் இன்று ( 25/01/2017) ஒளிபரப்பாகிய திரைப்படங்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
http://i66.tinypic.com/10i8ly0.jpg
ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி -- தாழம்பூ
-
மெகா டிவி - பிற்பகல் 3 மணி - தேர்த்திருவிழா .
http://i65.tinypic.com/24n37nn.jpg
-
நாளை (26/01/2017) முதல் குடியரசு தினத்தை முன்னிட்டு , மதுரை மீனாட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நம் நாடு " திரைப்படம் தினசரி 4 காட்சிகளில் வெளியாகிறது .
http://i68.tinypic.com/2u431ty.jpg
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு. எஸ்.குமார்.
-
சென்னையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தொடர்கிறது .வரும் வெள்ளி முதல் (27/01/2017) மீண்டும் 3 திரைப்படங்கள் வெள்ளித்திரைக்கு வருகிறது
அகஸ்தியாவில் -காவல்காரன் -தினசரி 2 காட்சிகள்.
மகாலட்சுமியில் -குடியிருந்த கோயில் - தினசரி 2காட்சிகள்
கிருஷ்ணவேணியில் - டிஜிட்டல் ரிக்ஷாக்காரன் - தினசரி 3 காட்சிகள்
தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன் .
-
-
-