-
"கணவன்". 1968 ஆக 15 ம் தேதி வெளியான கருப்பு வெள்ளை படம்.
கணவனுக்கு கதை எம்ஜிஆர் என்றவுடன் ரசிகர்களின் ஆர்வம் அதிகமாகி மதுரை தங்கத்தில் இரண்டு தலைவர் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி உயிரை இழந்த சோகம் முதல் நாளன்று அரங்கேறியது. அதன்பிறகு கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை உதவியுடன் காட்சிகள்
நடந்தேறியது.
எல்லா ஊர்களிலும் முதல் நான்கு நாட்கள் கட்டுக்கடங்காத கூட்டம். ஆக 15ல் வந்த கணவன் அடுத்து செப் 20 ல் வெளியான தலைவரின் 100 வது படம் பெரும் வரவேற்பை பெற்றதால் அதன்பிறகு கூட்டம் ஒரளவு குறைந்து விட்டது. அதையும் தாண்டி சென்னை மதுரை போன்ற ஊர்களில் தீபாவளி வரை ஓடியது.
அக் 21 ல் தீபாவளி அன்று வெளிவந்த தேவர் பிலிம்ஸின் "காதல் வாகனம்" படத்திற்கு பல ஊர்களில் 6 காட்சிகள் நடைபெற்றது. அனைத்து காட்சிகளும் ரசிகர்களின் பேராதரவோடு அரங்கம் நிறைந்து காணப்பட்டது. 1968 ம் ஆண்டு வெளியான அனைத்து படங்களுமே வெற்றி அடைந்ததால் மிகவும் எதிர்பார்த்த "காதல் வாகனம்" அதுவும். தலைவர் கையில் சவுக்கையை வைத்திருந்ததால் ஒரு சில ரசிகர்களுக்கு எங்க வீட்டு பிள்ளை ஞாபகம் வந்து விட்டது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்யாமல் போனதால் ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த "ஒளிவிளக்கு" மீண்டும் பிரகாசமாக எரிய தொடங்கி வெற்றியின் எல்லைக்கோட்டை விரைவாக தாண்டியது.
"கணவன்" அதிகபட்சமாக 67 நாட்கள் வரை சென்னை மற்றும் மதுரை போன்ற a சென்ட்டரில் ஓடினாலும், 50 நாட்களை தாண்டி நெல்லை உட்பட பல ஊர்களில் ஓடியது. தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்த படம். தூத்துக்குடியில் கணவன் 37 நாட்கள் வரை ஓடி வெற்றி பெற்றது. C. சென்ட்டரில் கணவன் ஒரு மாபெரும் வெற்றியை பதிவு செய்தது..........
-
எம்ஜிஆர் அடிப்படையில் ஏழைகளான தனது ரசிகர்கள் கஷ்டப்படக் கூடாது என்று நினைப்பார்.
உலகம் சுற்றும் வாலிபன் படப் பாடல்களை எம் எஸ் விஸ்வநாதன் ஒரு விலை உயர்ந்த நவீன ஒலிக் கருவியில் போட்டுக் காட்டியபோது, எம் ஜி ஆர் அதை கிராமபோனில் போட்டுக் காட்டச் சொன்னார் .
காரணம் கேட்டபோது என் ரசிகன் இதை இப்படித்தானே கேட்பான் . அதான் நானும் அவனுக்குரிய வசதியில் இருந்தே கேட்கிறேன் ‘ என்று பதில் சொன்னார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ‘ரிக்*ஷாக்காரன்’ திரைப்படம் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு பல விதங்களில் ஸ்பெஷலானது. ஆர்.எம். வீரப்பன் தனது சத்யா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து எடுத்த ஐந்தாவது படம் இது. சிறப்பான கதையம்சமும், இனிமையான பாடல்களும், எம்.ஜி.ஆர் அவர்களின் ஸ்டைலான நடிப்பும், ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து.
1971 ஆம் ஆண்டில் வெளியான படங்களிலேயே ‘ரிக்*ஷாக்காரன்’ திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இந்த படத்தில் மூலம் தான் மஞ்சுளா கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அசோகன், மேஜர் சுந்தரராஜன், மனோகர், தேங்காய் சீனிவாசன், சோ, பத்மினி என்று படத்தில் நட்சத்திர பட்டாளம் இருப்பது மட்டுமல்ல, அவர்களது கதாப்பத்திரங்களும் சிறப்பாக அமைந்து நவரசங்களை வெளிப்படுத்தின.
இந்த படத்தில் நடித்ததற்காக 1971 ஆம் ஆண்டின் இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான மத்திய அரசின் பாரத் விருது எம்.ஜி.ஆருக்கு கிடைத்ததோடு, பாரத் விருது பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற புகழையும் அவருக்கு பெற்று தந்தது..........
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில்*சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*06/08/20 அன்று அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
முன்னாள் சென்னை பெருநகர மேயர் திரு.சைதை துரைசாமி அவர்கள் அன்றாடம் சகாப்தம் நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய பல அரிய தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் .அவருடைய ஆதரவாளர்களுக்கு எல்லாம் இந்த செய்திகள் கொண்டு போய் சேர்ப்பதற்காக 10,000 சி.டி.க்கள் தேவை என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் .அவரால் என்னென்ன தகவல்கள் திரட்டி தரமுடியுமோ அவற்றை பல்வேறு அலுவல்களுக்கு* இடையே நமக்கு தெரிவித்துக் கொண்டிருக்கிறார் .இப்படியான நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது .தேனீ பிரேமலதா, மும்பை புலவர் ராமச்சந்திரன், சென்னை திரு.சைதை துரைசாமி போன்றவர்கள் ஒரு முன்மாதிரியானவர்கள் . எம்.ஜி.ஆர். என்கிற ஒரு மாபெரும் தலைவரால் ஈர்க்கப்பட்ட கோடிக்கணக்கான பக்தர்களின்* முன்மாதிரிகள்*
திருச்சியில் இருந்து திரு.மஜீத் எனும் பக்தர் ,இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஒளிபரப்புங்கள். நாங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழ்ந்து வருகிறோம் என்று கடிதம் எழுதியுள்ளார் .இந்த காலத்தில் குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள், வாட்ஸ் அப் செய்திகள், இ மெயில் என்று பல வசதிகள் உருவான* காலத்திலும் எம்.ஜி.ஆரின் பக்தர் ஒருவர் மிகவும் சிரத்தை எடுத்து கடிதம்* வாங்கி தன கைப்பட எழுதி அதை தபாலில் அனுப்பும் அளவிற்கு செயல்படுகிறார் என்றால் எம்.ஜி.ஆரின் சிறப்புக்கும், புகழுக்கும், பெருமைக்கும்* காரணமாய் திகழுகிறார்கள் என்பதுடன்* இதுபோன்ற பக்தர்கள் இந்த காலத்திலும் இருந்து கொண்டிருப்பது எம்.ஜி.ஆர். அவர்கள் செய்த பாக்கியம்தான் என்று சொன்னால் மிகையாகாது .மும்பை தாராவி பகுதியில் இருந்து திரு.புலவர் ராமச்சந்திரன் , அவர் மகன் பானு முருகேசன், மகள் அன்னபாக்கியம் ஆகியோர் அடிக்கடி தொலைபேசியில் அழைத்து ஊக்கப்படுத்தியும், உற்சாகம் அளித்தும் வருகிறார்கள் .
தேனியில் இருந்து திருமதி பிரேமலதா என்பவர் தொடர்பு கொண்டு , சகாப்தம் நிகழ்ச்சியில் தொடரின் எண்ணிக்கையை 90,91 என்று* சொல்லிக்கொண்டே*போகிறீர்கள்* எங்கே அவருடைய வயதைமட்டும்* குறிப்பிட்டு பேசுவீர்களோ*என்று பயமாக இருக்கிறது . தயவு செய்து அப்படி பேசிவிடாதீர்கள் நான் வாழும் காலம் வரை* என்று கூறி அழுதார் . அவர் திரைப்படங்களில், தொலைக்காட்சிகளில் பார்த்துள்ளாரே தவிர, நேரில் பார்த்ததே இல்லையாம் .ஆனாலும் கூட , நீங்கள் சொல்லுகிற தகவல்கள் ,அளிக்கின்ற செய்திகளை பார்த்தால் இப்படி ஒரு நல்ல மனிதர்* ஏன் இவ்வளவு சீக்கிரம் மறைந்தார் என்று நினைக்கும் போது, மிகவும் வருத்தமாகவும், வேதனையாகவும் இருக்கிறது .நாங்கள் குடும்பத்துடன் தொடர்ந்து பார்த்து வருகிறோம் .அவரை பொறுத்தவரை*மறைவு, இறுதி என்பது இல்லை .அதை மட்டும் குறிப்பிட்டு சொல்லிவிடாதீர்கள் என்று வேண்டி கேட்டுக்கொண்டார் .நிச்சயமாக சொல்கிறேன் . திருமதி பிரேமலதா அவர்களே, உங்களை போன்ற ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான ஏன் கோடிக்கணக்கான உள்ளங்களில் இன்றும் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் .அவர் மனிதகுலம் மறையும்வரை அவர் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார் .அவருக்கு மறைவு,இறுதி என்பதேயில்லை. அப்படிப்பட்ட அரிய வகையான ஒரு மாமனிதர்* எம்.ஜி.ஆர்.*
நீங்கள் எங்கு படித்தீர்கள் என்றால் நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று என்பார்*என்ன படித்தீர்கள் என்றால் சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா என்பார்*கடவுள் பற்றி உங்கள் அபிப்பிராயம் கேட்டால்* கடவுள் இருக்கின்றார் ,அதுஉன் கண்ணுக்கு தெரிகிறன்றதா* என்பார் ஏழைகளின் சிரிப்பில் கடவுள் இருக்கின்றார் என்றும் பேசியிருக்கிறார் . கடவுள் ஏன் கல்லானான் .மனம் கல்லாய் போன மனிதர்களாலே என்றும் திரைப்படங்களில் பாடியிருக்கிறார் .
தியாகம் என்பதற்கு ஒரே ஒரு உதாரணமாக தாயை தான் குறிப்பிட முடியும் என்று கூறுகிறார் .பெற்றெடுத்த தன குழந்தைக்கு முன்னால் தன பெயரை இனிஷியலாக போடுவதற்கு தன்* கணவனுக்கு விட்டு கொடுக்கும் அவள் உண்மையில் ஒரு தியாகிதான் என்று இதயவீணை படத்தில் ஒரு காட்சியில் விளக்கி இருப்பார் .காந்தீய கொள்கைகளை கூடுமான அளவில் அதிக திரைப்படங்களில் போதித்து உள்ளார் .மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையை அவர் கடைபிடித்தார் என்பதை அவரது பல்வேறு படங்களில், ,காட்சிகளில், வசனங்களில், பாடல்களில் நாம் கண்டறியலாம் .நான் ஏன் சண்டை போட வேண்டும், எதற்காக போர் பயிற்சிகளை கற்றுக்கொள்ள வேண்டும் ,எதிரிகள் என்றால் யார் ,கடமை என்றால் என்ன என்று பல கேள்விகளுக்கு விடை அளித்திருப்பார் அடிமைப்பெண் படத்தில் .இப்படி ஒரு அகிம்சாவாதியாக நிஜ வாழ்க்கையிலும், திரை உலகிலும், அரசியல் உலகிலும் வாழ்ந்து காட்டிய ஒரு மகான், மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். அவர்கள் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .
நிகழ்ச்சியில் ஒலித்த*பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.சிரிக்கிறாள் இன்று சிரிக்கிறாள் - நல்லவன் வாழ்வான்*
2.அன்பு மலர்களே, நம்பியிருங்களேன் நாளை நமதே*- நாளை நமதே*
3.நீங்க நல்லா*இருக்கோணும்*நாடு முன்னேற - இதயக்கனி*
4.ஹலோ, ஹலோ*சுகமா*- தர்மம் தலைகாக்கும்*
5.அச்சம் என்பது*மடமையடா*- மன்னாதி மன்னன்*
6.ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - நல்லவன் வாழ்வான்*
7.காஷ்மீர்*பியுட்டிபுல் - இதய வீணை*
8.நாடு அதை நாடு* - நாடோடி*
9.பல்லாண்டு வாழ்க படத்தில் எம்.ஜி.ஆர்.*
10.தாய் மேல் ஆணை - நான் ஆணையிட்டால்*
11.எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா உரையாடல் - அடிமைப்பெண்*
12.நாளை உலகை* ஆள வேண்டும் - உழைக்கும் கரங்கள்*
13.முதல்வர் எம்.ஜி.ஆர். புகைப்படங்கள்*
-
மேடையில் நன்கொடை தருவதை தவிர்த்த #எம்ஜிஆர். !
ஒருமுறை ஒடிசா மாநிலத்தில்
(அப்போது ஒரிசா) பெரும் வெள்ளம் ஏற் பட்டது. ஏராளமானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடு, வாசல்களை இழந்து தவித்தனர். சென்னையில் தங்கியிருந்து மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த ஒடிசா மாணவர்கள், தங்கள் மாநிலத்துக்கு நிவாரண நிதி திரட்டித் தர விரும்பினர்.
அதற்காக, நடிகை
வைஜெயந்திமாலாவும், நடிகர் கிஷோர் குமாரும் நடித்து அப்போது வட மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த ‘நியூ டெல்லி’ என்ற இந்திப் படத்தை சென்னை அசோக் திரையரங்கில் (இந்த திரை யரங்குதான் பின்னர் சிவசக்தி என்று பெயர் மாற்றப்பட்டது) காலைக்
காட்சியாக திரையிட முடிவு செய்தனர். அது 1956-ம் ஆண்டு. அப்போதே திமுகவில் எம்.ஜி.ஆர். முக்கிய பிரமுகராகவும், திரை உலகில் முதல் நிலையிலும் இருந்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்க வேண்டுமென்றும் அவர் வந்தால் வசூல் அதிகமாக கிடைக்கும் என்றும் ஒடிசா மாணவர்கள் கருதினர். திரையிடப்படுவதோ இந்திப் படம். திமுகவோ இந்தி திணிப்புக்கு எதிரான இயக்கம். இதனால், எம்.ஜி.ஆரை அழைத்தால் அவர் நிகழ்ச்சிக்கு
வருவாரா என்று மாணவர்களுக்கு சந்தேகம். இருந்தாலும் கேட்டுப் பார்க்கலாம் என்று எம்.ஜி.ஆரை தொடர்புகொண்டு தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர்.
ஒருவர் துன்பப்படுகிறார் என்றால், அவர்கள் தன்னை எதிரியாக நினைப்பவர்களாக இருந்தாலும் உதவி செய்பவர் எம்.ஜி.ஆர்.! நிகழ்ச்சிக்கு வர சம்மதித்தார். ஒடிசாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அந்த சமயத்தில் திடீரென ஒரு சிக்கல் முளைத்தது.
வட மாநிலங்களில் ஓடிக்கொண்டிருந்த ‘நியூ டெல்லி’ திரைப்படம் சென்னை யிலும் வெளியானது. படத்தில் ஒரு காட்சியில் தமிழர் ஒருவரின் தலையில் செருப்பை வைத்து கதாநாயகன் கிஷோர் குமார் ஆடிப்பாடி வருவார். அருகே கதாநாயகி
வைஜெயந்திமாலாவும் இருப்பார். இந்தக் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியது.
‘‘ஒரு தமிழ் நடிகை கதாநாயகியாக நடித்துள்ள படத்தில் தமிழர்களை இழிவு படுத்துவது போன்ற காட்சி எப்படி இடம் பெற்றது? இது தமிழர்களை அவமதிக்கும் செயல். இந்தப் படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்கலாமா?’’ என்று கண்டனக் குரல்கள் கிளம்பின. ‘நியூ டெல்லி’ படத்தை திரையிட ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுக்கு பயத்தோடு கவலையும் சேர்ந்துகொண்டது. விழாவுக்கு எம்.ஜி.ஆர். வருவாரா? என்று கவலைப்பட்டனர்.
படத்துக்கு எழுந்த எதிர்ப்பு எம்.ஜி.ஆரின் கவனத்துக்கு சென்றது. அவருக்கும் தர்மசங்கடம்.
‘‘தமிழர்களை இழிவு செய்யும் காட்சியைக் கொண்ட
படத்துக்கு நான் எப்படி தலைமை வகித்து வசூலுக்கு உதவ முடியும்? இதுபோன்ற காட்சி படத்தில் உள்ளது என்று என்னிடம் முன்பே ஏன் தெரிவிக்கவில்லை?’’ என்று விழா
ஏற்பாட்டாளர்களிடம் கடிந்துகொண்டார். தாங்கள் அந்தப் படத்தை பார்க்கவில்லை என்றும் தெரிந்திருந்தால் இதுபோன்று நடந்திருக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சிறிது நேரம் நிதானமாக யோசித்த எம்.ஜி.ஆர்., ‘‘நிகழ்ச்சிக்கு வருகிறேன். ஆனால், எனது எதிர்ப்பைத்
தெரிவிப்பேன்’’ என்று உறுதியாகக் கூறிவிட்டார். இதற்கிடையே, எம்.ஜி.ஆரை விமர்சிப்பவர்கள் ஒருபக்கம், ‘‘தமிழர்களை இழிவு படுத்தும் படம் திரையிடும் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். எப்படி கலந்து
கொள்ளலாம்?’’ என்று கேள்வி எழுப்பினர்.
இந்த அமர்க்களங்களுக்கிடையே, குறிப்பிட்ட நாளில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். சென்றார்.
திரையரங்கம் இருந்த பகுதியில் நுழையவே முடியாதபடி மக்கள் வெள்ளம். மாணவர்கள் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே வசூல் கிடைத்தது. படம் திரையிடப்பட்டு இடைவேளையின்போது, எம்.ஜி.ஆர். பேச அழைக்கப்பட்டார்.
‘‘திரைப்படம் என்பது சக்தி வாய்ந்தது. பார்ப்பவர்கள் மனதில் ஆழமாகப் பதியக்கூடியது. மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமே தவிர, வெறுப்பையும் வேற்றுமையையும் ஏற்படுத்தக் கூடாது. இந்தப் படத்தில் ஒரு தமிழரின் தலையில் செருப்பு வைக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அந்தக் காட்சியைப் பார்த்து நான் மிகவும்
வேதனைப்பட்டேன். என்னைப் போலவே தமிழ் மக்களும் வேதனை அடைந்துள்ளனர். நாட்டின் எந்த பகுதி மக்களின் உணர்வுகளையும் பாதிக்கும் காட்சிகள் படத்தில் இடம் பெறச்
செய்யக்கூடாது.’’ என்று தனது எதிர்ப்பை எம்.ஜி.ஆர். தெரிவித்தார்.
அதே நேரம், மாணவர்களின் நாட்டுப் பற்றையும் நல்ல நோக்கத்தையும் பாராட்டுவதாகவும், அதற்காகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் கூறினார். அவரது பேச்சை ஆமோதித்து கூட்டத் தினர் பலத்த கரகோஷம் செய்தனர்.
நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறும்போது, ‘‘நாளை என்னை வந்து சந்தியுங்கள்’’ என்று நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் கூறிவிட்டு எம்.ஜி.ஆர். புறப்பட்டார். மறுநாள் அவரது வீட்டுக்குச் சென்று மாணவர்கள் சந்தித்தனர். அவர்களை வரவேற்று உபசரித்தார் எம்.ஜி.ஆர்.!
‘‘உங்கள் நோக்கம் உயர்வானது. ஆனால், நீங்கள் திரையிட தேர்ந்தெடுத்த படம் பற்றி என்னால் அப்படி சொல்ல முடியாது. உங்களின் நற்பணிக்கு எனது சிறிய காணிக்கை’’ என்று கூறி, மாணவர்களிடம் ஒரு பெரும் தொகையை நன்கொடையாக அளித்தார்.
இதை எதிர்பார்க்காத மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தன்னை வந்து சந்திக்குமாறு எம்.ஜி.ஆர். கூறியது இதற்குத்தான் என்பதையும் புரிந்து கொண்டனர். ‘இந்த நன்கொடையை நேற்று மேடையிலேயே கொடுத்திருக்கலாமே?’ என்று மாணவர்களுக்கு சந்தேகம். அதற்கு விடையளிப்பதுபோல எம்.ஜி.ஆர். சொன்னார்…‘‘நேற்று நான் நன்கொடை கொடுத்திருந்தால் அதற்குத் தான் முக்கியத்துவம் கிடைத்திருக்கும். என் எதிர்ப்பின் வலிமை குறைந்து போயிருக்கும்’’ என்றார்.
ஒடிசா வெள்ள நிவாரணத்துக்கு எம்.ஜி.ஆரின் உதவி வெளியே தெரிய வில்லை. ஆனாலும், விளம்பரத்தை விரும்பாத அவரது உதவும் உள்ளம் ஒடிசா மாணவர்களுக்குத் தெரிந்தது!
சிறுகுறிப்பு:
‘நவரத்தினம்’ படத்தில், ‘லடுக்கே ஸே மிலீ லடுக்கி’ என்ற இந்திப் பாடல் இடம் பெற்றது. இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆருடன் நடிகை ஜரீனா வஹாப் நடித்திருந்தார். தமிழ் படம் ஒன்றில் முழுமையாக இந்திப் பாடல் இடம் பெற்றது அப்போது புதுமை! (இந்த பாடலை எழுதியவர் இந்திப்படவுலகில்
பிரபலமாக இருக்கும் இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷியின் தந்தை
சந்தோஷி)
(திருத்தப்பட்டது)
வி.டி.எஸ். ராஜ்வேலு, பெரியகுளம்.
இந்த விபரங்களெல்லாம் 'பொம்மை' சாரதி எழுதிய புத்தகத்திலிருந்து, இது
போன்ற முக்கிய விசயங்களை பத்து
ஆண்டுகளுக்கு முன் '#இதயக்கனி'
இதழில் சிறு தொடராக எழுதியவர்
திண்டுக்கல் திரு டி.எம்.அர்ஜுனன்.
சாரதியின் பெயருடனேயே அந்த தொடர் இடம்பெற்றது.
-
மலேசியாவில் மெர்டேக்காவை முன்னிட்டு*பி.ஜெ.ஸ்டேட் திரையரங்கில்*
இன்றிரவு 8.30 மணிக்கு*ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியீடு*
------------------------------------------------------------------------------------------------------------------
பி.ஜி.ஸ்டேட் திரையரங்கில் இன்று ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஒளியேறும் .* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா , நாகேழ் ,நம்பியார் நடித்த இத்திரைப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது .
இத்திரைப்படத்தைக் காண தாமரை குழும தலைவர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம் , நிர்வாக இயக்குனர் டத்தோ ரெனா ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு வருகை புரிவர் .மேலும் மலேசிய எம்.ஜி.ஆர்.* சுரேஷ், விஜய்சேகரும் வருகை புரிவர் .மெர்டேக்காவை முன்னிட்டு* ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் திரையிடப்படுவதாக லோட்டஸ் பைவ் ஸ்டார்* கருணாமூர்த்தி தெரிவித்தார் .
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின்*ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் இன்று வெளியீடு*
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சி தலைவி ஜெயலலிதா*நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைபடம் லோட்டஸ் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது . பெட்டாலிங் ஜெயா ஸ்டேட் திரையரங்கில் இத்திரைப்படம் இரவு 8 மணிக்கு திரையிடப்படுகிறது*
இதில் மலேசிய எம்.ஜி.ஆர்களான விஜய் சேகர் , டாக்டர் எம்.ஜி.ஆர். சுரேஷ்,ராம் மற்றும் பல உள்நாட்டு கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் .*
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், டத்தோ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் இத்திரைப்படம் திரையிடப்படுகிறது .அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற ரசிகர்களும்* கலந்து கொள்ளுமாறு லோட்டஸ் பைவ் ஸ்டார் நிர்வாகம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது .
-
என்ன பெயர் வைப்பது
அந்தப் பல்கலைக் கழகத்துக்கு..?
ரொம்பவே யோசித்தார் எம்.ஜி.ஆர்.
அது 1984.
கொடைக்கானலில் பெண்களுக்கான ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க , அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். முடிவு செய்த ஆண்டு .
எத்தனையோ பெயர்களை யோசித்துப் பார்த்தார் எம்.ஜி.ஆர்.
.
தமிழ் பெண் புலவர்களின் பெயர்கள்..?
ஔவையார் பெயர் வைக்கலாமே என சிலர் சொல்ல ..
சுதந்திரத்திற்காக போராடிய தில்லையாடி வள்ளியம்மை பெயரை வேறு சிலர் சொல்ல...
இன்னும் சிலர் எம்.ஜி.ஆரின் அன்னை சத்யா அம்மையார் பெயரையே வைத்து விடலாம் என்றார்கள்.
எல்லாவற்றையும் மறுத்த எம்.ஜி.ஆர். தீவிர யோசனைக்குப் பின் தெரிவு செய்த பெயர் –
அன்னை தெரசா !
ஆம்... அப்படித்தான் உருவானது அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்.
Mother Teresa Women's University !
விழா மேடையில் இந்தப் பெயரை எம்.ஜி.ஆர். அறிவித்ததும் பலத்த கை தட்டல்கள்..!
அருகில் இருந்த அன்னை தெரசா நெகிழ்ந்து போனார்.
பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பரூக் அப்துல்லா எழுந்து வந்து எம்.ஜி.ஆரை இறுகத் தழுவிக் கொண்டாராம்.
இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். ,
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின் பெயரை பல்கலைக் கழகத்திற்கு சூட்ட ,
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை அன்போடு தழுவி நிற்க ...
# அப்படி ஒரு காலத்தில் வாழ்ந்த நாம் ...
இன்று ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு நிற்கிறோம்.
.
# இந்த வேளையில் எம்.ஜி.ஆர்.ஒரு மேடையில் பேசியது நினைவுக்கு வருகிறது :
“நான் கைலி கட்டாத முஸ்லிம்,
சிலுவை அணியாத கிறிஸ்துவன்,
திருநீறு அணியாத இந்து...”
.
# எனக்கு ஒரு சந்தேகம்..?
எந்தப் பல்கலைக்கழகம் சொல்லிக் கொடுத்தது
எம்.ஜி.ஆருக்கு இந்தப் பாடத்தை...?.........
-
ஒரு சில சிவாஜி ரசிகர்கள் முகநூலில் சிவாஜி படங்களின் வெற்றியை பற்றி தாறுமாறாக பதிவிடுகிறார்கள் சம்பந்தபட்ட தயாரிப்பாளர்கள் உயிரோடு இல்லாத காரணத்தை
பயன்படுத்தி. உதாரணமாக 'நவராத்திரி' "முரடன் முத்து "படகோட்டி மூன்று படத்தின் வெற்றியை பற்றி. அவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
"நவராத்திரி" அப்படி ஒரு வெற்றிப் படமாகயிருந்தால் பாவம் A P நாகராஜன் இப்படி கடனாளி ஆகியிருக்க மாட்டார். கூட வெளிவந்த "முரடன் முத்து" தயாரிப்பாளர் பந்துலுக்கு சிவாஜியுடன் அதுதான் கடைசிபடம்.
இன்னும் ஒரு படம் சிவாஜியை வைத்து எடுத்திருந்தால் இன்னும் 10 வருடங்கள் வாழ்நாளை அவர் இழந்திருக்கக் கூடும். ஏனென்றால் கடன்பட்டார் நெஞ்சம் கலங்கினால்
உயிரையே பலி வாங்கி விடும்.
எம்ஜிஆருக்கு ஏன் 8 மடங்கு சிவாஜியை விட சம்பளம் அதிகம் கொடுக்கிறார்கள் என்பதை யோசிக்க வேண்டாமா?
எந்த சூழ்நிலையிலும் உயிருக்கும் மானத்துக்கும் பங்கம் வராமல் இருக்க வேண்டும், என்பதற்காகத்தான் எம்ஜிஆரை
நம்பி வருகிறார்கள். A சென்ட்டரை
தவிர B & C யில் எம்ஜிஆர் படத்தின் முதல் வார வசூலை சிவாஜியின் படங்கள் மொத்த வசூலாக கூட
பெறமுடியாமல் போவதை பல இடங்களில் பார்க்கலாம்.
நீங்கள் A சென்ட்டரில் அதாவது மதுரையில் மிகப் பெரிய அரங்கமான தங்கத்தில் வெளியான எதிரொலி மொத்தம் 4 வாரம் கூட ஓட முடியாமல் 19 நாளிலே பகல்காட்சியை நிறுத்தி விட்டு தினசரி 2 காட்சிகள் போட்டு 28
நாட்கள் ஓட்டியும் தங்கத்தில் வெளியான எம்ஜிஆர் படத்தின் முதல் வார வசூலை மொத்த வசூலாக பெறமுடியாமல் போன கதை சிவாஜி ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும்.
சிவாஜி படங்களை பெரும்பாலும் தீபாவளி பொங்கல் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் பார்த்துதான் திரையிடுவார்கள். பண்டிகை காலத்தில் மக்கள் சினிமா பார்ப்பதற்காக வருவார்கள், எம்ஜிஆர் படம் பார்க்க முடியாமல் போனவர்களை ஏமாற்றி அதை வைத்து 4 நாட்களாவது கல்லா கட்டலாம் என்று பண்டிகை நாள் பார்த்து ரிலீஸ் பண்ணுவார்கள்.
அதனால்தான் பல சிவாஜி படங்கள் பொங்கலுக்கும் தீபாவளிக்கும் இரண்டிரண்டு படங்களாக திரைக்கு வருவதை பார்த்திருக்கிறோம். எ.வ.,சொர்க்கம், Dr.சிவா,வைரநெஞ்சம், இருமலர்கள் ஊ.வ.உறவு, ப்ராப்தம்,சு.எ.சுந்தரி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் எம்ஜிஆர் படங்கள் எந்த நாளில் ரிலீஸானாலும் அன்றுதான் ரசிகர்களுக்கு பண்டிகை நாள். அன்றிலிருந்து தினமும் தீபாவளிதான். படகோட்டி முதல் வெளியீட்டில் 32 திரையரங்குகளில் 50 நாட்களும் 10 திரையரங்குகளில் 10 வாரங்களும். (அதுவும் பொங்கல் குறுக்கீட்டால் எ.வீ.பிள்ளையின் வருகையால்) ஓடி வெற்றியை பதிவு செய்தது. ஆனால் நவராத்திரி மொத்தமே 11 தியேட்டரில் 50 நாட்களை ஓட்டி 4 தியேட்டரில் 100 நாட்கள் ஓட்டியது ஊரறியும்.
வரலாறு தெரியாத ஒரு சிவாஜி ரசிகர் கனடா நாட்டிலிருந்து கரடி விடுகிறார். அதை கேட்டு இங்குள்ள குள்ள நரிகள் ஊளையிடுகின்றன. "நவராத்திரி" 6 தியேட்டரில் 100 நாட்கள் ஓடியதாம்.
"படகோட்டி" ஒரே தியேட்டரில் தான் ஓடியதாம். அதையும் RMV ஓட்டச்சொல்லி ஓட்டினார்களாம். அப்படியானால் எம்ஜிஆரின் 100 வது படமான "ஒளிவிளக்கை" 92 நாட்கள் ஓடியதை 100 நாட்கள் ஓட்டியிருக்கலாமே. "உழைக்கும் கரங்கள்" சேலத்தில் 96 நாட்கள் ஓடியதை 100 நாட்கள் ஓட்டியிருக்கலாமே? அது மட்டுமா?
R M V யின் சொந்த படம் "கண்ணன் என் காதலனை"சிந்தாமணியில் 93 நாட்கள் ஓடியதை 100 நாட்கள் ஓட்டியிருக்கலாமே? கரடி விடுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? அதை தான் சென்ற பதிவில் குறிப்பிட்டேன். "சொர்க்கத்தை" நெல்லை பாப்புலரில் 100 நாட்கள் ஓட்டி ரு85000 வசூலாக காண்பித்து என்ன பயன்?
தயாரிப்பாளர் தலையில் துண்டுதான். ஒரு வார தியேட்டர்
வாடகை ரு4000 என்று எடுத்துக் கொண்டாலும் 15 வாரத்துக்கு தியேட்டர் வாடகையே ரூ 60000 ஐ
தாண்டி விடும். மீதமுள்ள ரூ25000 ல்
வரி, தியேட்டர்காரர் பங்கு, இதெல்லாம் போக விநியோகஸ்தர்கள் கையில் என்ன கிடைக்கும். மீண்டும் திரும்பி பார்ப்பானா சிவாஜி நடித்த படத்தை.
இப்படித்தானே, சிவாஜி மார்க்கெட் இழந்ததோடு கூட நடித்தவர்களின் மார்க்கெட்டையும் காலி பண்ணியதால் சிவாஜியை துணை நடிகராக்கினார்கள். அதையும் தாங்க முடியாமல் சினிமாவை விட்டே ஓரங்கட்டிய கதை ஊரறிந்த கதை. அதை போல் ஒவ்வொரு ஊரிலும் 1 லட்சத்திக்கும் 1.25 லட்சத்துக்கும் 100 நாட்கள் ஓட்டி அவர்கள் அடைந்த நஷ்டத்துக்கு அளவேது.
இன்று 70 வயதில் ரஜினி
கமல் எல்லாம் பல கோடி சம்பளம் பெறும்போது சிவாஜி அந்த வயதில் Y G யோடு மல்லாந்து படுத்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
"நவராத்திரி" சென்னை நகர வசூலை வெளியிடுங்கள்,பார்த்து விடுவோம்.
4 திரையரங்குகளிலும் சேர்த்து 6 லட்சத்தை கூட பெறமுடியாமல் விநியோகஸ்தர்கள் கதறிய கதை தெரியாமல் உளறுகிறார்கள். இன்றும் "படகோட்டி" உரிமை கோடியை தாண்டி விலை பேசியும் தேவி பிலிம்ஸ் அதிபர் தர மறுக்கிறார். இதோ படகோட்டி பலமுறை சென்னையில் வெளியாகியும் 4 தியேட்டர்களில் திரையிட்டு அதற்கு ரிசர்வேசன் நடந்து ஓடியது. நவராத்திரியை சும்மா கொடுத்தாலும் எவனும் வாங்க மாட்டான். வாங்கி திரையிட்டால் கரண்ட் பில் கட்டக்கூட
படம் ஓடாது என்பதை நன்கு அறிவார்கள்.
ஆனால் 100 நாட்களில் "எங்க வீட்டு பிள்ளை" "காவல்காரன்" பெற்றால்தான் பிள்ளையா போன்ற படங்கள் 9 லட்சத்தையும் தாண்டி வசூல் செய்தது தெரியுமா? சிவாஜி ரசிகர்களுக்கு.
RV உதயகுமார்,அமீர்,பழ.கருப்பையா
மயில்சாமி போன்றோருக்கு இன்னும் தெளிவாக தெரியும். ஏனென்றால் இவர்கள் திரைத்துறையை சார்ந்தவர்கள் அல்லவா?
அவர்கள் மட்டுமல்ல
சினிமா தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் தியேட்டர் ஓனர்கள் அத்தனை பேரும் அறிவார்கள். "கண்ணன் என் காதலன்" ரிலீஸுக்காக "கலாட்டா கல்யாணத்தை" 13 நாட்களில் தூக்கி எறிந்தனர் திருநெல்வேலி ரத்னா தியேட்டர்காரர்கள். எம்ஜிஆர் பட வெளியீட்டுக்காகத்தான் அத்தனை சிவாஜி படங்களையும் மற்ற படங்களையும் கேப்பில் போடுவார்கள் என்பதை தியேட்டர் காரர்களும் விநியோகஸ்தர்களும் நன்கு அறிவார்கள்.
இதை நன்றாக தெரிந்து கொண்ட ஒருவன் கனடாவில் இருந்து கதையடித்தால் நம்புவதற்கு
இங்குள்ளவர்கள் என்ன இளிச்சவாயர்களா?. சிவாஜிக்கு அப்படி ஒரு வசூல் பண்ணும் திறமையிருந்தால் பாவம் எம்ஜிஆர் 10 லட்சம் வாங்கும் போது 1லட்சத்திற்கே உயிரைக் கொடுத்து கத்தி கதறி அதை நடிப்பென்று நம்ப வைக்க அடிப்பொடிகளை ஏவி விட்டு கூவி கூவி வியாபாரம் பார்த்தாலும் எத்தனை படங்கள் போணி ஆகாமல் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டு அந்த படத்தயாரிப்பாளர்கள் பஸ் ஸ்டாண்டிலும், கோயில்களிலும் பிச்சை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட கதை(புனர் ஜென்மம்) தெரிந்திருந்தும் வாய் கூசாமல் பொய் பேசும் சிவாஜி ரசிகர்களே ஐயோ! பாவம், நீங்களும் உங்க ஐயனும்.
அது மட்டுமா? நடிப்பு போட்டிக்கு எம்ஜிஆரை அழைத்தாராம். ஏற்கனவே நடிப்பு போட்டியில் சிவாஜியை வென்று 'பாரத்' விருதை வாங்கியதோடு நடிப்பில் சிவாஜியை
குப்புற தள்ளி நட்சத்திரத்தை எண்ண வைத்த கதை மறந்து விட்டதா? இந்தியாவிலேயே தலை சிறந்த நடுவர்களால் சிறந்த நடிகர் என்று தேர்ந்தேடுக்கப்பட்ட எம்ஜிஆர் எங்கே? நீங்க எங்கே? இன்னொரு போட்டி எதற்கு? நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்றால் நடுவர்களாக சின்ன அண்ணாமலை, சித்ரா லட்சுமணன், Y G மகேந்திரன் போன்ற அரைவேக்காடுகள் நடுவராக இருந்தால்தான் முடியும்.
இறுதியில் எம்ஜிஆர் பாணியில் "புதியவானம்" படத்தில் கையை எம்ஜிஆர் போல் தூக்கி புரட்சி தலைவா என்று பாடவைத்தோமே?
இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் காசுக்காக எதையும் செய்யக்கூடியவர் கணேசன் என்று. சரி, சினிமாவில் எம்ஜிஆரிடம் தோற்று புறமுதுகு காட்டியவர் அரசியலிலாவது வென்றாரா? வயது குறைந்த ஒரு பெண்ணிடம் தோற்று
புறமுதுகு காட்டிய கதை சிவாஜி ரசிகர்களின் கண்ணீரால் எழுதப்பட வேண்டியது. அவரிடம் அரசியலில் மட்டும் தோற்கவில்லை, நடிப்பிலும் தோற்றதை அன்றைய பத்திரிகைகள் சுட்டிக்காட்ட தவறவில்லை(எ.வந்தாள்,ப.பட்டணமா,சவாலே சமாளி).
இப்படி சாதனை எதுவும் செய்ய முடியாத சிவாஜி ரஜினி, கமல் படங்களின் வெற்றியில் குளிர்காய ஆரம்பித்து உள்ளது கேவலமாக உள்ளது. அதுவும் பாரதிராஜாவும் கமல்ஹாசனும் தங்கள் படத்தில். சிவாஜியை நடிக்க வைப்பதற்கு அவர்கள் பட்ட பாட்டை T V பேட்டியில் கூறியிருப்பதை கவனிக்கவும். கொஞ்சம் விட்டிருந்தால் படத்தையே கெடுத்து குட்டி சுவராக்கி இருப்பாராம் நம்ம சிவாஜி. அவருடைய கத்தலையும் கதறலையும் 10 மடங்குக்கு மேல் குறைத்து படமெடுக்க வேண்டியதாயிற்று என்று சொல்லியிருப்பதை பார்த்தால் பரிதாபமாக இருந்தது. ஒரு கத்தி குத்துக்கு படப்பிடிப்பு தளத்தையே உலுக்கியவராயிற்றே நம்ம ஆளு.
இப்படி திரையிலும் அரசியலிலும் தோற்று புறமுதுகு காட்டி ஓடியவரை பச்சைத்தமிழன் என்று எப்படி ஏற்பது? தோல்வியை பரிசாக பெறுபவன் தமிழனா? தோல்வியை எதிரிக்கு பரிசளிப்பவன் தமிழனா?
இவரை தோற்க வைத்து விட்டு இப்போது கொடி பிடிக்க துவங்கியிருக்கும் சிவாஜி ரசிகர்களை என்னவென்று அழைப்பது என்றே தெரியவில்லை..........
-
இதயக்கனி!!
---------------------
எம்.ஜி.ஆர் சினிமாவை அலசி ரொம்ப நாளாச்சு!!
இதயக்கனி!
குண்டு துளைக்க முடியாத இதயத்தில்-
வண்டு துளைக்குமா??
எப்படியோ,,
கருணாவுக்கு அன்று இருந்த வெறியில்,,அவரது-
கரு நாவுக்குள் வந்த வார்த்தையினால் நமக்கு-
எம்.ஜி.ஆர் ஆட்சி கிடைத்தது?
அது சத்தியா மூவீஸ் இதயக்கனி படம்!
இந்தப் படத்தைப் பற்றிய மூன்று விஷயங்களே இன்றையக் கரு!!
அந்த நடிகை தான் அந்தப் படத்துக்கு ஹீரோயினாக தேர்ந்தெடுக்கப்பது?
மேக்கப் டெஸ்ட் முடிந்து,,படப்பிடிப்பும் ஆரம்பமாகிவிட்ட நிலையில்,,
திருமணம் நிச்சயமாகிவிடவே,,,,அவரது கணவரின் தந்தை,,எம்.ஜி.ஆரிடம் நிலைமையை விளக்க,,
அந்த நடிகை பெற்றுக் கொண்ட முன் பணத்தை,,அவரது திருமணப் பரிசாக வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு--
தோரஹா படப் புகழ்,,நாயகி,,ராதாசலூஜாவைக் கதா நாயகி ஆக்கினார் எம்.ஜி.ஆர்!
முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட அந்த நடிகை??
நீத்துசிங்!
ரிஷி கபூரின் மனைவி!
ரிஷிகபூரின் தந்தை ராஜ்கபூர் தான் எம்.ஜி.ஆரிடம் பேசியது!!
சாதாரணமாக எல்லாத் திரைப்படங்களிலும் தொழில் நுட்ப விஷயங்களில் எம்.ஜி.ஆரின் கை வண்ணமும் கலந்திருக்கும்!
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ பாடலுக்குப் பொருத்தப் பட்டிருந்த கேமரா ஆங்கிள்,,எம்.ஜி.ஆருக்கு திருப்தியைத் தரவில்லை?
டைரக்டர் ஜெகன்னாதனுக்கோ எம்.ஜி.ஆரை வைத்து முதன் முதலில் இயக்குவதால்,,மனிதருக்கு ஏக டென்ஷன்?
எம்.ஜி.ஆர் ஒரு யோசனையைக் கூற-
யூனிட் முழுதும் உற்சாகத்தில்??
ஆம்! அந்தப் பாடல் காட்சி முழுவதற்கும் எம்.ஜி.ஆர் தான் முழு ஒளிப்பதிவாளர்??
படத்தைப் பார்த்தால்--
இயற்கை சூழலோடு பனிப் பொழிவை வெகு தத்ரூபமாகக் காட்டியிருப்பார் எம்.ஜி.ஆர்!!
இன்பமே பாடலின் படப்பிடிப்பு!--இயக்குனரோ-
டென்ஷனில் படபடப்பு??
காரணம்??
காட்சிப்படி கதா நாயகி ஓடி வர வேண்டும்!
ஓடி வரும் ஹீரோயின்,,,,ஓடி வரும் ஹீரோவுடன் முட்டிக் கொண்டு நிற்க வேண்டும்!
பின்னணி இசையுடன் பாடல் ஆரம்பமாகும்!
எம்.ஜி.ஆர் ஓடி வந்தவர்,,அப்படியே ரா.சலூஜாவைத் தூக்கிவிட்டார்??
எல்லோரும் பிரமிப்புடன் பார்க்க--
கடைசி வினாடிக் காட்சி மாற்றத்துக்கு எம்.ஜி.ஆர் விளக்கம் சொன்னாராம் இப்படி--
ஒரு மாதக் காத்திருப்புக்குப் பின் இருவரும் ஓடி வந்து நிற்பதை விட,,இப்படிச் செய்வது காட்சியின் துள்ளல் ஓட்டத்துக்குத் துணை சேர்க்கும்!!
தூக்கியதோடு ஒரு சின்ன ஜெர்க் அசைவு காட்டுவார் எம்.ஜி.ஆர்!
இப்போதும் இந்தப் பாடல் காட்சியில் ஆரவாரம் அள்ளும்!
ஹீரோயின் ராதாசலூஜா இக்காட்சியில் போதை தரும்
ஹெராயின்??
எம்.ஜி.ஆர் படத்தின் ஹைலைட்டு சமாச்சாரங்கள்-
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல???!!!.........
-
பழைய நினைவுகள்...
அந்நாட்களில் வீரப்பாவின் சிரிப்பை வைத்து குழந்தைகளை அச்சுறுத்துவார்களாம். அந்த அளவிற்கு வீரப்பா திரையில் சிரித்தால், அரங்கிலுள்ள குழந்தைகள் அலறி அழுதுவிடுமாம்.
சக்கரவர்த்தி திருமகனில் தொடங்கிய அந்த வெற்றிச் சிரிப்பு அதன்பிறகு அவரது தனித்த பாணியாகி விட்டது. ஒவ்வொரு படத்தில் கதையின் சூழலுக்கு ஏற்றபடி தனது அக்மார்க் சிரிப்பை பயன்படுத்த தவறவில்லை வீரப்பா. முருகன் என்ற படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்தார் வீரப்பா. அந்தப் படத்திலிருந்து இருவருக்கும் ஏற்பட்ட நட்பு இறுதிவரை தொடர்ந்தது. பொன்மனச் செம்மல் எனப் போற்றப்பட்ட எம்.ஜி.ஆர், தான் நடிக்கும் படங்களில் தனக்கு எதிர்நாயகனாக வீரப்பாவையே போடும்படி கேட்டுக் கொள்வாராம். கே.பி.சுந்தராம்பாள் அறிமுகப்படுத்த, எம்.ஜி.ராமச்சந்திரன் வழிநடத்த, பி.எஸ்.வீரப்பாவின் திரைவாழ்க்கை தலைநிமிர்ந்து பயணித்தது.
மக்களிடையே இந்தக் கூட்டணி அமோக வரவேற்பையும் பெற்றது. எம்.ஜி. ஆருக்கு சரி சமமான வில்லன் நடிகர் வீரப்பாதான் என்று எழுதினர் அன்றைய திரை விமரிசகர்கள். காரணம் ஒரு நாயகனுக்கு தக்கபடியாக, அவனை எதிர்கொண்டு அவனுடன் சமர் செய்ய அதே அளவு சக்திவாய்ந்த வில்லன் இருந்தால்தான் நாயகனின் சாகஸங்கள் எடுபடும். வீரப்பாவின் உடற்கட்டும் முகவெட்டும், வில்லனாக நடிக்கும்போது அவர் அப்பாத்திரமாகவே மாறிவிடும் மாயமும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன. ஒவ்வொரு படத்திலும் பிரத்யேகமாக ஒரு பாணியை முயற்சி செய்து அவரது ரசிகர்களை திருப்திபடுத்தும் வழக்கமும் வீரப்பாவிடம் இருந்துவந்தது. அதனால் தன்னிடம் வந்த எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தார் வீரப்பா. காலப்போக்கில் தனக்கென தனி பாணியையும் உருவாக்கிக் கொண்டார்.
வீரப்பாவும் எம்.ஜி.ஆரும் படப்பிடிப்பில் இருக்கும் சமயத்தில் அந்த இடம் மிகவும் கலகலப்பாக இருக்கும். எம்.ஜி.ஆர்தான் வீரப்பாவிற்கு வாள் வீச்சு கற்றுக் கொடுத்தவர். திரையில் இருவரும் அதி அற்புதமாக கனல் தெறிக்க சண்டையிடுவதன் பின்னணியில் இருவரும் எடுத்த தீவிர பயிற்சிகள்தான் காரணம். ஒருமுறை படப்பிடிப்பின் போது வீரப்பாவுக்கும் எம்.ஜி.ஆரும் நடிக்கும் வாள் சண்டை படக்காட்சியை எடுத்துக் கொண்டிருந்தனர். சூழ்நிலை மறந்து திடீரென்று பள்ளத்தில் உருண்டு விழப் போனார் வீரப்பா. எம்.ஜி.ஆர் மட்டும் அச்சமயத்தில் கவனித்து காப்பாற்றா இருக்காவிட்டால், விபத்துக்குள்ளாகி வீரப்பா எனும் கலைஞரை திரைத்துறை இழந்திருக்கும். அடிக்கடி இவ்விஷயத்தை நினைவுகூரும் வீரப்பா எம்.ஜி.ஆர் ஒரு மாமனிதர், தனக்கு திரைவாழ்க்கையில் கைகொடுத்தது மட்டுமின்றி, உயிரைக் காப்பாற்றவும் செய்தார். தோள் கொடுப்பான் தோழன் எனும் பதத்துக்கு உதாரணமாக விளங்கியவர் எம்.ஜி.ஆர் என நெகிழ்ச்சியாகக் கூறி மகிழ்வார். தொடர்ந்து எம்.ஜி.ஆர் வீரப்பா ஜோடி பல படங்களில் நடித்து வெற்றிக் கூட்டணியாக வாகை சூடிக் கொண்டிருந்தது திரை ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனில் அவருக்கு வீரப்பாதான் வில்லன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனோவா, அலிபாபாவும் நாற்பது திருடர்களும், நாடோடி நண்பன், மீனவ நண்பன், ராணி லலிதாங்கி, பத்தினி தெய்வம், பதிபக்தி, நாடோடி மன்னன், ராஜராஜன், யார் நீ, நவரத்தினம், நீலமலை திருடன், பார்த்திபன் கனவு, கைதி கண்ணாயிரம் உள்ளிட்ட பல படங்களில் தனது மிகச் சிறந்த நடிப்பாற்றலால் கதாநாயகன் அளவிற்கு, அதிலும் சில படங்களில் நாயகனை விட வில்லன் கதாபாத்திரத்தை வியந்தோகிப் பேசச் செய்தவர் வீரப்பா.
வீரப்பா பேசும் அனல் தெறிக்கும் வசனங்களும் அந்நாட்களில் மிகவும் பிரபலம். சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கத்தில், எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த மகாதேவி என்ற படத்தில் வீரப்பா பேசிய வசனங்கள் காலம்கடந்தும் ரசிகர்கள் மனதில் ஆழப்பதிந்த ஒன்று. அப்படத்தில் நடிகை சாவித்திரியின் பெயர் மகாதேவி. வீரப்பா சாவித்ரியை காதல் பொங்க பார்க்கும் பார்வையும், ‘மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரண தேவி’ என்று பேசும் வசனமும் காலத்தால் அழிக்க முடியாத வல்லமை பெற்றது. அன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் இந்த வசனத்திற்கு கைதட்டல்களையும் விசில்களை பலத்த கரகோஷத்தையும் திரை அரங்குகளில் வெளிப்படுத்தியிருக்கின்றனர். மேலும் காதலிக்கும் இளைஞர்கள், தங்கள் காதலியின் பெயரை சேர்த்து ‘மணந்தால் மீனாட்சி, இல்லையேல் மரணதேவி’ என்று கூறி மகிழ்வார்களாம்.
1956-ம் ஆண்டு வெளியான அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் பி.எஸ்.வீரப்பா தலைமையில் திருடர்கள் அனைவரும் அணிவகுத்து குதிரையில் வரிசையாக வரும் காட்சி, அழகியலுடனான ஒரு திரை அனுபவத்தை அள்ளித் தரும். ‘அண்டா காகசும் அபு காகசம் திறந்திடு சீசே’ என்று அவர் ஒரு மந்திரத்தைக் கூறி அந்தக் குகைக் கதவைத் திறக்கச் செய்யும் காட்சி அன்றைய ரசிகர்களை சொக்கிப் போகச் செய்தது. ‘கொள்ளையடிப்பதும் ஒரு கலைதான்’ என்று வீரப்பா பேசிய வசனமும் பெரிதும் சிலாகிக்கப்பட்டது. கதாபாத்திரம்.........