அத்துடன் ‘சன் பிக்சர்ஸ்’ போல
‘சாக்ஸ் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனத்தையும் இவர் தொடங்கியிருக்கிறார். ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை குறித்து உருவான ‘சாருலதா’ படத்தை தமிழகம் முழுக்க வெளியிட்டது ‘சாக்ஸ் பிக்சர்ஸ்’தான்.
இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு சத்யம் திரையரங்கில் நடந்தது. அப்போது பேசிய சக்சேனா, சன் டிவி தன்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டதையும், தனக்கு ஏற்ப்பட்ட துன்பங்களிலிருந்து தான் மீண்டடெழுவதற்கு முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார். அந்த முயற்சின் தொடக்கமே ‘சாக்ஸ் பிக்சர்ஸ்’ எனவும் குறிப்பிட்டார். இந்த பேனரில் மேலும் படங்களை அவர் தயாரிக்கவுள்ளதாகவும், அது தவிர வரும் ஜனவரி 15, தைப்பொங்கல் தினத்தில் புதிய தமிழ் தொலைக்காட்சியை ஆரம்பிக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டார். இத் தொலைக்காட்சிச் சேவை சிறுபடத் தயாரிப்பாளர்களுக்கு உதவும் நோக்கினை முதன்மையாகக் கொண்டிருக்கும் என்றும் திருவாய் மலர்ந்தார்
அதாவது எந்த சிறு தயாரிப்பாளர்களை சாக்ஸ் அழிக்க முயற்சித்தார் என முன்பு குற்றம்சாட்டப்பட்டாரோ, அதே சிறு தயாரிப்பாளர்களைத்தான் இப்போது ஆதரித்து கரை சேர்க்கும் அவதாரமாக மலர்ந்திருக்கிறார்.
இதையே ‘சுண்டாட்டம்’ பட ஆடியோ வெளியீட்டின்போதும் குறிப்பிட்டிருக்கிறார். தன்னால் தமிழகம் முழுக்க 200 திரையரங்குகளில் ஒரு படத்தை வெளியிட முடியும் என்று சொல்லியிருக்கிறார்.
அதாவது அக்யூஸ்டின் கையில்தான் கஜானா சாவி இப்போதும் இருக்கிறது!