-
எதிரி 'ஆதி'யை நல்லவன் என்று நினைக்கும் அளவுக்கு துரோகிகள் கூட்டம் பெருகி வருகிறது, கோலங்களில்...
துரோகி - 1 கிருஷ்ணன்...
ஆர்த்தியை அலுவலகத்தில் கொண்டு வந்து வைப்பது தொடர்பாக, அபியும் தொல்ஸும் பேசியதை அரைகுறையாக கேட்டு வத்தி வைத்த கிருஷ்ணன், அதன்மூலம் ஆர்த்தியிடம் தனக்கு பலன் பெருகுவதைக்கண்டு, மேலும் மேலும் தொல்ஸைப்பற்றி இல்லாததும் பொல்லாததுமாக சொல்லி, தனக்கு ப்ரமோஷனும் வாங்கி தனி கேபினும் வாங்கி விட்டான். அலுவலக பெண் தொழிலாளர்களிடம் தொல்ஸ் சகஜமாக பழகுவதை, ஆர்த்தியிடம் வேறு மாதிரியாக திரித்து கூறி, தொல்ஸை ஒரு பென் பித்தன் என்ற அளவுக்கு நினைக்க வைத்து விட்டான். (அதுக்காக தொல்ஸைப்பார்த்து ஆர்த்தி முந்தானையை இழுத்துப்போர்த்திக்கொண்டு தொல்ஸைப்பார்ப்பது கொடுமை). அதுபோக அலுவலகத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எடுக்கும் தவறான முடிவுகளுக்கு தொல்ஸ் முட்டுக்கட்டை போடுவது வேறு அவளுக்கு தொல்ஸ் மேல் எரிச்சலை அதிகமாக்குகிறது. கூடவே தூபம் போட கிருஷ்ணன். (தொல்ஸுக்கு இந்த இன்ஸல்ட்கள் தேவைதானோ என்று தோன்றுகிறது. அமெரிக்கா செல்ல்லும் அபி, தொல்ஸிடம்தானே நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்ளச்சொன்னாள்?.)
-
Thank you Saradha
please continue with your updates
-
துரோகி - 2 திருவேங்கடம்...
காசுக்காக எதையும் செய்யும் தற்காலத்திய 'டிப்பிக்கல்' அரசியல்வாதியின் வடிவமான திருவேங்கடம், தன்னை எம்.எல்.ஏ. ஆக ஆக்குவேன் என்று ஆசைகாட்டிய, ஆதியின் வார்த்தையில் மயங்கி, அவன் அவ்வப்போது போடும் பிச்சைக்காசுக்காக, ஆடியின் தம்பியும், தன் அண்னன் மகனுமான அர்ஜுனை முழுநேர குடிகாரனாக ஆக்குகிறார். சித்தப்பா, தனக்காக அண்ணனிடம் போராடி சொத்துக்களி மீட்டுத் தருவார் என்று நம்பும் அர்ஜுனும் அவர் சொல்லும் பேச்சுக்கெல்லாம் ஆட்டுக்குட்டியாய் தலையாட்டுகிறான்.
துரோகி - 3 கலா...
பக்கவாதம் அடித்த கணவனோடு நடுத்தெருவில் நின்ற தன்னை, ஆதரித்து வீட்டுக்கு அழைத்து வந்து தங்க வைத்த ராஜேஷுக்கும், அவளுக்கு முழு மனதோடு தங்க அனுமதியளித்த ஆர்த்திக்கும் எதிராக, அதே வீட்டில் தங்கியிருக்கும் அனுவுக்கு தூபம் போடுவதும், அனுவுக்கு தெரியாமல் ஆர்த்தியின் ஆபீஸுக்குப்போய் அவளுக்கு தூபம் போடுவதுமாக குடும்பத்தில் குழப்பத்தை உண்டுபண்ணுகிறாள். இப்போது ஆர்த்தியும் அனுவும் உள்ளுக்குள் எலியும் பூனையும்.
இதனிடையே, தன்னுடைய ஒவ்வொரு தாக்குதலின்போதும் குறுக்கே புகுந்து மேனகாவைக் காப்பாற்றிவிடும் தொல்காப்பியனைத்தேடி, தொல்ஸ் இல்லாத நேரம் வீட்டுக்கு வரும் டேவிட்டை, வீட்டு சொந்தக்காரன் 'தாய் மாமன்' என்று தானே கற்பனை பண்ணிக்கொண்டு, தொல்ஸ் வீட்டு சாவியைத் தந்து அதில் தங்க வைக்க, அவன் தொல்ஸிடமிருந்த அவர்களுடைய பழைய போட்டோக்களை எடுத்துச் சென்று விடுகிறான். போகும்போது மேனகாவின் புதிய ப்ராஜக்டான 'மேனகா டவர்ஸ்' துக்க விழா செய்தியடங்கிய செய்தித்தாளை தொல்ஸின் அறையில் விட்டுப்போய் விடுகிறான். இரவில் வீட்டுக்கு வரும் தொல்ஸிடம் அவருடைய தாய்மானைப்பற்றி வீட்டு உரினையாளர் சொல்ல, தொல்ஸுக்கு அதிர்ச்சி. 'இல்லாத தாய்மாமன் எங்கிருந்து வந்தான்?' என்ற யோசனையில் இருந்தபோது, டேவிட் வந்த அன்று தன் வீட்டில் நடந்த விசேஷத்தின் வீடியோவில் அவன் முகம் பதிவாகியிருப்பதைக்காட்ட, தொல்ஸுக்கு மேலும் அதிர்ச்சி. 'இவன் மேனகாவைக் கொல்ல அலிகிறவனல்லவா?' என்ற எண்னத்துடன் வீட்டுத்தரையில் கிடக்கும் நியூஸ் பேப்பரைப்பார்க்க, அதில் மேனகா டவர்ஸ் துவக்க விழா பற்றிய செய்தி....
-
அபி வீட்டில் குழப்பத்தை உண்டு பண்ணி அவர்களை தனித்தனியாக பிரிக்க எண்ணிய ஆதிக்கு ஒரு வாய்ப்பு. அலுவலகம் முடிந்து இரவில் தனியாக ஆட்டோவில் வரும் ஆர்த்தியை, ஆட்டோக்காரனும், இன்னும் ஒருவனும் கடத்தி ஊர் எல்லைக்கு வெளியே கொண்டு செல்ல, அங்கு தற்செயலாக கிரியுடன் வரும் ஆதி, ஆர்த்தியை யாரோ சீரழிக்க முயல்வதைக்கண்டு, அவர்களை விரட்டியடித்து ஆர்த்தியைக்காப்பாற்றுகிறான். ஆட்டோக்காரன், ஆதியின் துப்பாக்கியைக்கணடதும் தலைதெறிக்க ஓடுகிறான். 'தங்கை'(??) ஆர்த்தியைக்காப்பாற்றி தன் காரில் அழைத்து வரும் ஆதி, காரில் வரும்போது ரொம்ப கரிசனமாக பேசுகிறான். 'ராத்திரி நேரத்தில இப்படி தனியா வராதே. உன் புருசன் ராஜேஷை வரச்சொல்லி அவனோடு வா' என்று அட்வைஸ் பண்ண, 'அண்ணனின்'(??) பாசத்தில் ஆர்த்தி உருகுகிறாள். வீட்டில் கொண்டு வந்து விடும்போதும், ரொம்ப அட்வைஸ் பண்ணிவிட்டுப்போகிறான்.
'மேனகா டவர்ஸ்' துவக்க விழாவுக்கு ஒரு மலையாள பத்திரிகைகாரர் நாராயணன் நாயர் என்பவரைப்போல போலி அடையாள அட்டையுடன் நுழையும் டேவிட், பையில் துப்பாக்கியுடன் மேனகாவைக்கொல்ல தருணம் பார்த்திருக்கும் நேரம், ஓட்டலின் தலைவாசல் வழியாக நுழைய செக்யூரிட்டிகளால் அனுமதி மறுக்கப்படும் தொல்ஸ், பின் வழியாக ஏஏறிக்குதித்து உள்ளே நுழைந்து மாடிப்படி வழியாக இறங்கும் நேரம், கையில் துப்பாக்கியுடன் மேனகாவைக் குறிபார்க்கும் டேவிட் இடமிருந்து மேனகாவைக் காப்பாற்ற, மெயின் ஸ்விட்சை அணைத்து மின்சாரத்தை துண்டித்து விட, இருட்டில் சுடும் டேவிட்டின் துப்பாக்கிக்கு இரண்டு செக்யூரிட்டிகள் பலியாகின்றனர். மீண்டும் விளக்கு வந்ததும் டேவிட் மாயமாகிவிட்டான். ஆனால் வீடியோவில் பதிந்துள்ள முகத்தை போலீஸாரும் மற்றவர்களும் பார்த்து விடுகின்றனர். இதனிடையே டேவிட்டினால் கட்டிப்போடப்பட்டிருந்த ஒரிஜினல் பத்திரிகையாளர் நாராயணன் நாயரை போலீஸார் அழைத்து வருகின்றனர்.
-
துரோகி - 4 மனோ.....
'சொந்தக்கார்களுக்குள் பிஸினஸில் கூட்டு வைத்துக்கொள்ளக் கூடாது' என்று அபி சொன்னதையும் மீறி, எங்கோ தெருவில் நின்ற மனோவையும் அனுவையும் மனதில் கள்ளம் கபடமில்லாத ராஜேஷ் தன் வீட்டுக்கு அழைத்து வந்ததுடன், தன்னுடைய ஆர்த்தி ட்ராவல்ஸில் பார்ட்னராகவும் ஆக்கியதை மறந்து, அவனுக்கே துரோகம் செய்யும் விதமாக, ராஜேஷுக்கு தெரியாமல் 'அனு ட்ராவல்ஸ்' என்ற பெயரில் துவக்கி, அது 'ஆர்த்தி ட்ராவல்ஸி'ன் கிளைதான் என்று பொய் சொல்லி அத்தனையும் கஸ்டமரையும் தான் பிடித்துக்கொள்ள, தன்னுடைய ட்ராவல்ஸில் வண்டிகள் எல்லாம் சவாரி போகாமல் நிற்பதைக் கண்டு கஸ்டமரிடம் ராஜேஷ் விசாரிக்க குட்டு உடைகிறது. கஸ்டமர் போல பேசி தன்னிடம் வரவழைக்கும் ராஜேஷ், ஆத்திரத்தில் மனோவை செருப்பால் அடித்து விடுகிறான். அப்புறம் என்ன வீட்டில் பஞ்சாயத்து. இரண்டு பக்கமும் வசைமாரிகள். குறுக்கே கலா புகுந்து தன் கொழுந்தனுக்காக பேசுகிறாள். மனோ மனைவி குழந்தையுடன் வீட்ட விட்டு வெளியேற, ஆர்த்தியிடம் திரும்பும் கறபகம், 'ஆர்த்தி என்னடி இதெல்லாம்?' என்று ஆரம்பிக்க, அவள் 'போம்மா' என்று போய்விடுகிறாள். (நல்ல வேளை, இல்லாவிட்டால் கற்பகத்தின் அறுவை வசனங்களை யார் கேட்பது?)
-
நன்றி
போகிற போக்கைப் பார்த்தால் இன்னும் 4 வருடங்கள் இழுக்கும்போல்....
-
'மேனகாவைக்கொல்ல முயற்சிக்கும்போதெல்லாம் தொல்காப்பியன் ஏன் வந்து இடையூறு செய்கிறான். அவனுக்கும் மேனகாவுக்கும் என்ன சம்மந்தம்' என்ற சிந்தனையுடன், தொல்ஸ் வீட்டிலிருந்து திருடி வந்த போட்டோக்களைப்பார்க்கும் டேவிட்டுக்கு அதிர்ச்சி. செல்லம்மாவுடன் ஒரு பையனும் ஒரு பெண்ணும் இருக்கும் படத்தைப் பார்த்ததும், அவளுக்கு ஒரு ஆண் வாரிசும் இருப்பது தெரிய வர, அவன் யாராக இருக்கும் என்ற சிந்தனையில் ஆழ்ந்திருக்க, உடன் இருக்கும் அவர்கள் வீட்டு விசுவாச வேலைக்காரன், அந்தப்படத்தில் இருக்கும் பையன் நிச்சயம் தொல்காப்பியனாகத்தான் இருக்கும் என்று சொல்ல, இப்போது டேவிட் இரட்டை வேட்டைக்கு தயாராகிறான். முதலில் தொல்காப்பியனை தீர்த்தால் மட்டுமே, மேனகாவை நெருங்க முடியும் என்ற எண்ணம் மேலோங்க, தொல்காப்பியனைத்தேடி முன் சென்ற வீட்டுக்கு (இப்போது சாமியார் வேடத்தில்) செல்ல.....
தன் மகள்களில் ஒருத்தியை தொல்ஸ் தலையில் கட்டிவிடலாம் என்ற நப்பாசையில் இருந்த வீட்டு சொந்தக்காரர், 'தொல்ஸ் தன் வீட்டிலிருந்து காலி செய்துவிட்டுப் போய் விட்டதாகவும் எங்கு சென்றார் என்பது தெரியாது என்றும்' சொல்லி சாமியார் எண்ணத்தில் மண்ணைப்போடுகிறார். டேவிட்டும் வேலைக்காரனும் பழைய இடத்திலிருந்து இடம் மாறி, ஒரு கோயில் மண்டபத்தில் தங்கியுள்ளனர்....
தேர்தலில் தனக்கு சீட் தரவில்லையென்ற கோபத்துடன் ஆதி வீட்டுக்குச் செல்லும் திருவேங்கடம், ஆதியிடம் கோபமாக சத்தம் போட, ஆதி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதைக்காண்பிக்க, செய்தியில் திருவேங்கடம் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்தி வாசிப்பவர் அறிவிக்கிறார். அங்கே (முன்பு திருவேங்கடத்தை தன் அடியாட்களுடன் புரட்டியெடுத்த) தேவராஜ் பாண்டியனும் இருக்கிறான்.
(கோலங்கள் பார்க்கும்போது, மற்ற சேனல்களில் என்ன நிகழ்ச்சி ஒளிபரபாகிறது என்பதை அறிய, எப்போது சேனல் மாற்றுவீர்கள்?. விளம்பரத்தின்போதா?. நான், அபியின் அம்மா பேச ஆரம்பிக்கும்போது மாற்றுவேன். சுமார் பத்து சேனல்கள் சுற்றி முடிந்து வந்து பார்த்தால், அப்போதுதான் சத்யபிரியா ரெண்டு வார்த்தை பேசி முடித்திருப்பார். 'ரொம்ப ஸ்மார்ட்' :lol: :lol: )
-
Thanks Saradhaa.....
Egappatta episodes- ai commercial BREAK illamal, SATHYAPRIYA-vin azugai illamal, 5 nimidathil partha thripthi erpattuvittadhu.
To be frank, I never see serials. Watched kolangal for sometime and then left.
Now I read lots of serial stories, with your fantastic write up.
As aanaa said, this is going to go on for years.... ROMBA SMART
-
Saradhaa madam :clap:
nice write up :D
-
உஷாவின் வீட்டில் தங்கியிருக்கும் ஈஸ்வரன், கோயிலில் மனைவி கற்பகத்தை சந்தித்தபோது (சீரியல் பாத்திரங்களுக்கு, கோயில் என்பது மீட்டிங் பாயிண்ட் ஆகிவிட்டது. சரி, அது என்ன எல்லா சீரியல்களிலும் கோயிலில் ஒரே ஐயர்...?) மனோவுக்கும், ராஜேஷுக்கும் நடந்த சண்டை மற்றும் அதன்பின் நடந்தவற்றைக்கூற, ஈஸ்வர் மனோ மற்றும் அனுவை சந்தித்து சமாதானம் பேச முயல்கிறார். வழக்கம்போல அவருக்கு இன்ஸல்ட்டுகளும், வசவுகளும், அவமானங்களும் பை நிறைய கிடைக்கின்றன. (என்னவோ இவர் பேச்சை எல்லோரும் வேதவாக்காக கேட்டு அப்படியே ஏற்றுக்கொள்வதைப்போல, ஒவ்வொரு பிரச்சினையிலும் இவர் மூக்கை நுழைப்பது வேடிக்கை. மொத்த சீரியலிலும், எந்த ஒருவராலும் மதிக்கப்படாத ஒரே நபர் இவர்தான்).
திருவேங்கடம் தேர்தலில் நிற்பது உறுதியாகிவிட்ட நிலையில், இவர் ஏற்கெனவே இருந்த கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த தங்கராசு, அந்தக்கட்சியில் இருந்து விலகி திருவேங்கடம் கட்சியில் தொண்டராக சேருகிறார். (ஒவ்வொரு ஊரிலும் ஓடும் சாக்கடைகளுக்கு தனிப்பெயர் உண்டு. ஆனால் நாடு முழுக்க பொதுவாக ஓடும் ஒரே சாக்கடை அரசியல் என்பது தெரிந்த விஷயம்தானே). திருவேங்கடம் தன் குடும்பத்தினரை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும்போது அவர்கள் ஒவ்வொருவரையும் மகாத்மா காந்தி ரேஞ்சுக்கு தியாகிகளாக சித்தரிப்பது அருமை. (நடிகர் ராமச்சந்திரன் அரசியலுக்கு போனால், அவரது பேச்சாற்றலுக்கு அமைச்சர் பதவி உறுதி). தொண்டர்கள் மத்தியில் 'வாழ்க' கோஷங்கள் முழங்கும்போது, டி.வி.செய்தியில் ஒரு அறிவிப்பு.... 'பொதுவுடைமை இயக்கத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஒரு நபர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதால் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அந்த இயக்கத்தின் வேட்பாளராக 'தோழர்' பாலகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்' (வேறு யார்..? நம்ம 'செந்தமிழ்' பாலகிருஷ்ணன்தான்). இந்த அறிவிப்பு திருவேங்கடத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது 'தோழருடன்' தொல்காப்பியனும், ஆனந்தியும் அமர்ந்துள்ளனர். தோழருக்கு தன் பத்திரிக்கை முழு ஆதரவு அளிக்கும் என்றும், அவருக்காக பிரசாரம் செய்யும் என்றும் ஆனந்தி அறிவிக்கிறாள்.
ஆக, கதை இப்போது அரசியலுக்குள் நுழைந்து விட்டது.... 'தண்டலம்' இடைத்தேர்தலில் (ஊர் பெயர் சரிதானா?. என் காதுக்கு அப்படித்தான் கேட்டது) ஒருபக்கம் திருவேங்கடமும் அவருக்கு பக்க பலமாக ஆதி, மற்றும் தேவராஜ் பாண்டியன். மறுபக்கம் 'தோழர்' பாலகிருஷ்ணன், அவருக்கு ஆதரவாக தொல்காப்பியன் மற்றும் ஆனந்தி.
இவற்றுக்கிடையே....
தொல்காப்பியனையும், மேனகாவையும் கொல்ல அலையும் டேவிட்..
தொல்காப்பியனை ஒழித்துக்கட்ட நினைக்கும் ஆர்த்தி...
என்னவானார்கள் என்றே தெரியாமல் இருக்கும் பாஸ்கர், அலமேலு வகையறாக்கள்...
ஒருவரை ஒருவர் தொலைத்துக்கட்ட நினைக்கும் மனோ மற்றும் ராஜேஷ்...
திரிசங்கு சொரக்கத்தில் உஷா மற்றும் அவளது பெற்றோர்...
தனக்கு நியாயம் கிடைக்கும் என்று இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் அர்ஜுன்...
நிரந்தர வில்லன் ஆதித்யா...
இவர்கள் எல்லோரையும் விழுங்கி ஏப்பம் விட துடிக்கும் மேனகா...
'கோலங்கள்' இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு உறுதி.