-
http://chennaionline.com/film/Photof...ouravam-24.jpg
கல்வியாளரும் திரு மகேந்திராவின் தாயாருமான திருமதி ராஜலட்சுமி பார்த்தசாரதி அவர்கள் தன்னுடைய வயதையும் பொருட்படுத்தாது உற்சாகத்துடன் வந்திருந்த காட்சி
http://chennaionline.com/film/Photof...ouravam-21.jpg
என்னய்யா, எங்கள் தலைவரைப் போல் இனிமேல் வர முடியுமா என்று திரு மகேந்திரா வினவுவது போல் உள்ளதல்லவா
-
இத்திரைக்காவியத்தினைத் தயாரித்த ஹிந்து பத்திரிகையாளர் ரங்கராஜன் அவர்களுக்கும், இந்தக் காலகட்டத்தில் மீண்டும் நினைவு கூர்ந்து ஹிந்து பத்திரிகையில் எழுதிய திருமதி மாலதி ரங்கராஜன் அவர்களுக்கும் நமது உளமார்ந்த நன்றியை இத்தருணத்தில் தெரிவிக்க விரும்புகின்றோம்.
இணைப்புகளைத் தந்த பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் நமது நன்றி.
அன்புடன்
-
-
பட்டையை கிளப்பும் பாரிஸ்டர் ரஜினிகாந்த் :boo:
-
ஆட்சியில் இல்லை, அதிகாரத்தில் இல்லை, ஆலாய்ப் பறக்க ஏவல்கள் இல்லை,
காசு, பணம், பதவிகளில்லை, டிக்கெட் கிழிக்க செல்வாககுள்ளவர்கள் இல்லை,
ஆனால்
மக்கள் உண்டு, நெஞ்சங்கள் உண்டு, உயிராய்த் தாங்கும் உள்ளங்கள் உண்டு,
உயிருள்ளவரை உன்னைத் தவிர, வேறு ஏதும் எண்ணாதவர்கள், உத்தம புத்திரர்கள் ஏராளமுண்டு,
ஏசுவோர் ஏசினாலும் தூற்றுவோர் தூற்றினாலும்,
சிகரத்தைக் கைகளால் மறைக்க இயலாது
உண்மை!!! உண்மை!!! உண்மையை தவிர வேறொன்றும் இல்லை......
-
டியர் ராகவேந்திரன் சார்,
விசாலி ஸ்ரீராம் அவர்கள் வடித்துள்ள அஞ்சலிக் கட்டுரை உருக்கத்தின் உச்சம். உணர்வுபூர்வமான கட்டுரையைத் தந்த அவருக்கும், அதனை நமது திரியில் சிரத்தையோடு பதிவிட்ட தங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !
எட்டு நிமிட வீடியோவில் எல்லையில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்திய Indiaglitz இணையதளத்திற்கும், அதன் இணைப்பை அம்சமாக இங்கே பதிவிட்ட தங்களுக்கும் மீண்டும் ஒரு முறை இதயங்கனிந்த நன்றிகள் !
டியர் பாலா சார்,
அரிய புகைப்படங்களை அள்ளி அளித்து வரும் தங்களுக்கு மனமார்ந்த நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
-
சகோதரி சாரதா,
நமது நடிகர் திலகம் திரியில் நான் பதிவிடத் தொடங்கிய 2009 செப்டம்பரிலிருந்து எனது பதிவுகளை வெகுவாகவும், மனமாரவும், உயர்வாகவும், உச்சமாகவும் பாராட்டியிருக்கின்றீர்கள். தற்போது தாங்கள் அளித்துள்ள மிகுந்த உச்சமான பாராட்டுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் ?! ஆனந்தக்கண்ணீருடன் எனது ஆத்மார்த்தமான நன்றிகளை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பேர்ப்பட்ட பாராட்டுக்களையெல்லாம் பெற்றது என் வாழ்வின் பேறு. மீண்டும் மனமார்ந்த நன்றிகள் !
எல்லாப் புகழும் எப்பொழுதும் என்றென்றும் நமது இதயதெய்வத்திற்கே !
அன்புடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
கௌரவத் திருவிழாவை அகிலமெங்கும் கொண்டு சென்றுள்ள moviejockey, tamiltinsel, chennaionline, galatta இணையதளங்களுக்கும், 'மாலை மலர்' நாளிதழுக்கும், அவற்றில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை இங்கே அழகுற இணைத்துப் பதித்துள்ள பாலா சாருக்கும், ராகவேந்திரன் சாருக்கும் கனிவான நன்றிகள் !
['மாலை மலர்' நாளிதழின் புகைப்படச் செய்தி இன்றைய [19.7.2011] சென்னைப் பதிப்பு மட்டுமன்றி அனைத்து பதிப்புகளிலும் வெளியாகியுள்ளது.]
அன்புடன்,
பம்மலார்.
-
-