மக்கள் திலகத்துடன் கமல் இருக்கும் அரிய படத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.
Printable View
'உலக சினிமா சரித்திரத்தில் எம்.ஜி.ஆர்' & 'தமிழக முதல்வரின் சிறப்புச் செய்தி' - முறையே திரை மற்றும் அரசியலில் மக்கள் திலகத்தின் வெற்றி சாதனையின் ஆவணங்கள்.
நன்றி வினோத் ஸார்.
வினோத் சார்,
திரு மு.க.முத்து விற்கும் அவசர காலத்தில் ஆஇஆதீமுக தான் உதவி செய்தது என்பது ஒரு புறம் இருக்க சமீபத்தில் எனது நண்பர் [தங்களுக்கும் அவரை தெரியும்] அவரை தொடர்பு கொண்டார் நலன் விசாரிக்க. அவரிடம் மிகவும் பாசத்துடன் மரியாதையாக தான் பேசினார். அனல் ஒரு சிலர் பற்றி பேசும் போது அவர் பேச்சில் ஒரு வெறுப்பு தென்பட்டதாக தெரிகிறது.
திரு மு க முத்து அவர்களும் மக்கள் திலகத்தின் ரசிகர் தான் - நான் அறிந்த தகவல்.
ஒரு விஷயம் : இவர் நடித்த படங்களின் உரிமை Raj Video Vision அவர்களிடம் உள்ளது.
திரு மு.க .முத்து அவர்கள் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர் என்பது உண்மை .
மக்கள் திலகம் அவர்கள் அண்ணா திமுக கட்சி துவங்கிய நேரத்தில்
பிரபல வசனகர்த்தா திரு சொர்ணம் [ தாயின் மடியில் - நேற்று இன்று நாளை ]
அவர்களை அழைத்து '' நீங்கள் திரு கருணாநிதியின் மைத்துனர் . என்னுடன் இணைந்து பணியாற்றினால் உங்களின் எதிர்காலம் வீணாகும் . எனவே நீங்கள் உங்கள் மாமாவுடன் இருப்பதே நல்லது என்று அறிவுரை கூறி சொர்ணத்தை அனுப்பி வைத்தார் .
அதேபோல் தந்தையுடன் பிணக்கு வந்த நேரத்தில் முக முத்து அண்ணா திமுகவில் இணைய விரும்பிய நேரத்தில் அவரை அதிமுகவில் சேர்க்க அனுமதி மறுத்தார் .
இதுதான் மக்கள் திலகத்தின் பெருந்தன்மை .
திரு சொர்ணம் அவர்கள் ஒரு அருமையான வசனகர்த்தா . அவருடைய பல படங்களில் வசனங்கள் மிகவும் புகழ் பெற்றவை .
தாயின் மடியில் -1964
கலங்கரை விளக்கம் -1965
அரசகட்டளை -1967
குடியிருந்தகோயில் -1968
கணவன் -1968
ஒளிவிளக்கு -1968
அடிமைப்பெண் -1969
நம்நாடு -1969
என் அண்ணன் -1970
குமரிகோட்டம் -1971
ஒரு தாய் மக்கள் -1971
ராமன் தேடிய சீதை -1972
இதய வீணை -1972
உலகம் சுற்றும் வாலிபன் -1973
பட்டிக்காட்டு பொன்னையா - 1973
நேற்று இன்று நாளை -1974.
ஒரு பக்கம் தன்னுடைய திரைப்படம் - அரசியல் செய்திகள் -பிரபல தினசரி இதழில் இருட்டடிடிப்பு.
மறுபக்கம் தான் சார்ந்திருக்கும் இயக்கத்தில் இருந்து வெளியேற்ற சதி
தன்னுடைய தயாரிப்பாளர்கள் எல்லோர்க்கும் கனிவான மிரட்டல்கள்
அதனால் 16 படங்கள் வாய்ப்பு இழந்த நிலை
தன்னுடைய ரசிக மன்ற நிர்வாகிகளுக்கு பலவித நெருக்கடிகள்
திரைஅரங்கு உரிமையாளர்கள் - விநியோகஸ்தர்களுக்கு மேலிட கட்டளைகள்
இதுதான் - மக்கள் திலகம் சந்தித்த இக்கட்டான சோதனை காலம் .
எந்த ஒரு தனி மனிதனும் இந்த சூழ் நிலையில் தன்னை காப்பாற்றிக்கொள்ள
வேறுவிதமாக முடிவு எடுத்து தன்னை நிலை நிறுத்த முயற்சி எடுத்திருப்பார்கள் .
மக்கள் திலகம் - புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்கள் மிகவும் நிதானத்துடன்
எல்லா பிரச்சனைகளையும் தைரியமாக எதிர்கொண்டு ரசிகர்களின் அமோக ஆதரவுடன் மக்களின் துணை கொண்டு வெற்றி பெற்ற வரலாறு உலகறியும் .
இதயவீணை ....
மீட்டும் .....
திரு. சைலேஷ் சார்..உங்களது ஐநூறுக்கு எனது ஆயிரம் வாழ்த்துக்கள்..
http://i43.tinypic.com/i70ntk.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
பணம் படைத்தவனின் பாடங்கள் தொடர்கிறது...
பொய்யான சிலபேர்க்கு புது நாகரீகம்
புரியாத பலபேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்...
http://i39.tinypic.com/4gtftx.jpg
மேலைநாட்டு மோகத்தால் நம் தமிழர்களின் கலாசாரம் சீரழிந்து வருவதை அன்றே நம் தலைவர் தனது படத்தில் பாடலாக சொல்லிவிட்டார்..ஒரு பெண் குடும்ப விளக்காக இல்லாமல் தீவட்டியாகி மாறினால் அது தன்னை எரிப்பதுடன் மற்றவர்களையும் பாதிக்கும் என்பதை அழகாக எடுத்துகூறுவார்...சௌகார் ஜானகி தனது மரண தருவாயில்..'அத்தான் நீங்கள் எவ்வளவோ கூறினார்கள்..நான் கேட்கவில்லை..என் போன்ற பெண்களுக்கு இது ஒரு பாடம்' என்று கூறும்போது மேலே சொன்ன வரிகள் பின்னணியில் கேட்கும்...
பணம் படைத்தவனின் பாடங்கள் தொடர்கிறது...
தேசத்தை காக்கும் ராணுவ வீரர்
http://i40.tinypic.com/213fd0.jpg
ஒரு திரைப்படத்தில் எத்தனை நல்ல கருத்துக்கள்...தலைவர் அவர்கள் ஒரு முறை பேட்டியில்..நீங்கள் யாரை பார்த்து அரசியலுக்கு வந்தீர்கள் என்று கேட்டபோது..நேதாஜி சுபாஷ் சந்திரபோசை பார்த்து என்று கூறுவார்..இப்படத்திலும் கல்கத்தாவில் திரு.நேதாஜி வீட்டில் அவரது உருவத்தை பார்த்து.சல்யூட் செய்து விட்டு....தேசத்தைக்காப்பாற்ற ராணுவத்தில் சேர்வார்..
தெய்வப்பாடகர் திரு.டி.எம்.எஸ். அவர்களின் காதல் இழையோடும் இனிமையான பாடல்..எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்..இருவரின் உடைகளும் நடன அசைவுகளும் ரம்யமாக இருக்கும்.
பவழக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்..
புன்னகை என்றே பேராகும்...
http://i43.tinypic.com/nq470x.jpg
சாதி ஒழிப்பு..
http://i41.tinypic.com/2mzfic9.jpg
தலைவரின் பெரும்பாலான படங்கள் சாதி ஒழிப்பு..வறுமை ஒழிப்பு..தீண்டாமை ஒழிப்பு இதை மையமாக கொண்டே இருக்கும்..இந்த படத்திலும் தாழ்ந்த சாதியில் பிறந்த ஏழை கே.ஆர்.விஜயாவை, சாதி வெறி, பணவெறி பிடித்த தன் தந்தை வெறுத்து வெளியேற்றும்போது..தலைவர் அவரைப்பார்த்து...கண்மூடிதனங்கள் மண்மூடி போய்விட்டன..இன்னும் ஏம்பா சாதி வெறியில் இருக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டு, கே.ஆர்.விஜயாவுடன் வீட்டை விட்டு வெளியேறுவார்..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
கலை மன்னன்
கலை தோன்றிய விதம்
பழங்காலத்தில் மக்கள் தாங்கள் உழைத்த நேரம் போக ஓய்வு நேரங்களில், தங்களின் உடல் அலுப்பையும், மனக்கவலையை மறக்கவும் தங்களுக்குள், இயல், இசை, நாடகங்களை நடித்தும், கேட்டும், பார்த்தும் மகிழ்ந்தார்கள்..இந்த கலைகளில் சிறப்பாகவும், அனைவரையும் கவரும் விதத்தில் நடிப்பவர்கள் கலைஞர்கள் என்று அழைக்கப்பட்டனர்..இவ்வாறு உருவான கலைஞர்கள் தாங்கள் குழுக்களாக பல ஊர்களுக்கு சென்று தங்கள் திறமையைக்காட்டி மக்களை மகிழ்வித்தனர்..சிலர் மன்னர்கள் முன்பும் தங்கள் ஆடல், பாடல் திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகள் வாங்கி வந்தனர்...பண்டை தமிழகத்தை ஆண்ட சில மன்னர்கள் கூட இத்தகைய கலைத் திறமைகளைக் கொண்டிருந்தார்கள்..இந்த கலைஞர்கள் ராமாயண, மகாபாரத இதிகாசங்களையும், காப்பியங்களையும் தெருக்கூத்துகள் வாயிலாக மக்களிடையே நடித்து காட்டினர்..இந்த தெருகூத்துகள் பரிணாம வளர்ச்சியின் மூலம் நாடகமாக உருவெடுத்தது..பின்னர் இதற்கென நிலையான நாடக மன்றங்கள் உருவாகின.ஒரு கட்டத்தில் தமிழகத்தில் நாடக மன்றங்கள் பெருகி கலைவெள்ளம் பெருகி ஓடியது...அதில் ஒரு சில நாடக மன்றங்களில், பின்னாளில் திரைப்படங்களில் நட்சத்திரங்களாய் மின்னிய, பல கலைஞர்கள் பங்கேற்று நடித்து வந்தனர்...அவர்களில், சிறந்த நடிப்பின் மூலம் மக்களைக் கவர ஒரு சில கலைஞர்களால் மட்டுமே முடிந்தது..அவ்வாறு அனைத்து கலைகளிலும் தேர்ந்து நடிப்பின் அனைத்து சுவைகளையும் பிரதிபலித்து மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞர்களே சிறந்த கலைஞர்களாக மதிக்கப்பட்டனர்..சிறப்பிக்கப்பட்டனர்..அப்படி மக்களைக் கவர்ந்தவர்களில் நடிகப்பேரரசர் எம்ஜிஆர் அவர்கள் முதல் இடத்தைப்பெற்றார்..தான் திரையுலகில் இருந்த வரை அதைத்தக்க வைத்தும் கொண்டார்..அவரது எழில், அவரது நடிப்பு அனைவரையும் ஆட்கொண்டது உண்மை..அதனால் அவரைக் கண்டு.....
http://i42.tinypic.com/2pq3qtc.jpg
ஆடாத மனமும் உண்டோ...
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
ஈடேதும் இல்லாத கலை சேவையில்
தனி இடம் கண்ட உமைகண்டும்
இப்பூமியில்...
.
என்ன ஒரு பொருத்தமான வரிகள்..இவருடைய நடிப்பு மக்கள் அனைவரையும் கவர்ந்து முதல் இடத்தில் நின்றது மட்டுமல்லாது நாட்டில் நல்லதொரு மாபெரும் சமூக மாற்றத்தையே உண்டாக்கியது என்றால் மிகையாகாது..
...தொடரும்...
super description about our mannadhi mannan with majestic still.
thanks kpv sir
http://youtu.be/ogtom7PGgoI
கலைகள் தோன்றிய விதம் & மன்னாதி மன்னன் மக்கள் திலகம் ஸ்டில் - இரண்டுக்கும் நன்றி கலியபெருமாள் ஸார் .
சைலேஷ் ஸார்,
இன்னும் பல்லாயிரம் பதிவுகள் மக்கள் திலகம் திரியில் தர வாழ்த்துகள்.
திரைப்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய
மக்கள் திலகம்
தமிழ் திரையுலகில் அன்று அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் புகழ் இன்றும் மங்காமல் மறையாமல், இருப்பதற்கு முதல் காரணமாகத் திகழ்வது அவரின் சமூக அக்கறையாகும். அதாவது ஏதோ பிறந்தோம். வளர்ந்தோம். வாழ்ந்தோமென்பதைவிட இருந்தோம், நல்லது செய்தோம், சாதித்தோமென்ற மனோ நிலையில் கடைசிவரை இருந்தமையினால்தான் இன்றும் அவர் கோடான கோடி மக்களின் மனங்களில் இதய தெய்வமாக வாழ்கிறார்.
http://i43.tinypic.com/34yxt9e.jpg
எம். ஜி. ஆர். திரையுலகில் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் 1936ல் தனது 19வது வயதில் சதிலீலாவதி, படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றி நடித்தவர். 30வது வயதுவரை சிறு சிறு பார்த்திரங்களில் நடித்தார். 1947ல் தான் கதாநாயனகாக ‘ராஜகுமாரி’ படத்தில் நடித்தார். ஆனால் இவர் தன்னுடைய படங்களில் சமூக சிந்தனையுடன் கூடிய கருத்துக்களை வெளிப்படுத்தினார். ஆரம்ப காலத்தில் சரித்திர கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தாலும் கூட அவற்றின் மூலமாக சீர்த்திருத்த கருத்துக்களை சமூக சிந்தனையுள்ள கருத்துக்களையும் தெரிவிக்கத் தவறவில்லை. அப்படியான படங்களில் ‘மர்மயோகி’, ‘சர்வாதிகாரி’ மலைக் கள்ளன் ‘குலே பகாவலி’ ‘மதுரைவீரன்’ ‘புதுமைப் பித்தன்’ ‘நாடோடி மன்னன்’ மற்றும் மன்னாதி மன்னன் ஆகியவற்றை உதாரணங்களாக எடுத்துக்கொள்ளலாம்.
இவர் தாயின் மீது அதிக அன்பும் பாசமும் கொண்டவராகையினால் தாய் பாசத்தின் மகிமையையும் தன்னுடைய படங்களில் கூற தவறில்லை.
‘தாய் சொல்லைத் தட்டாதே’ ‘தாயைக்காத்த தனயம்’ ‘நீதிக்குப் பின் பாசம்’ ‘தெய்வத்தாய்’ ‘தாயின்மடியில்’ ‘அடிமைப் பெண்’ போன்ற திரைப்படங்களில் தாயின் பெருமை பற்றி அவர் மிக சிறப்பாக நடிப்பின் மூலம் காட்டியிருக்கிறார்.
சமூகத்தில் மலிந்துக் கிடக்கும் வஞ்சம், ஏழைப் பணக்காரன் என்ற வேறுபாடு, சாதிக்கொடுமை, பெண் கொடுமை, அடிமைத்தனம், வஞ்சகம், சூது, கொலை, கொள்ளை உட்பட பல சமூகப் பிரச்சினைகளை கையிலெடுத்து அதற்கான சரியான தீர்வினையும் தன்னுடைய படங்களில் ஆணித்தரமாக அழகாக சொல்லிய விதம் மக்களுக்கு பிடித்திருந்தது. குடி, சிகரெட், பெண் சகவாசம் போன்றவற்றை வெறுத்து ஒதுக்கிய எம். ஜி. ஆர். அதை தன் திரைப்படங்களின் வாயிலாகவும் வெளிக்கொண்டுவந்தார்.
மீனவர்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு வெளியான ‘படகோட்டி’ எம். ஜி. ஆருக்கு அந்த சமூகத்தின் ஆதரவை அள்ளித் தந்ததைப் போலவே, உரிமைக்குரல், உழைக்கும் கரங்கள், விவசாயி போன்ற படங்களின் மூலமாக விவசாயிகளின் பேராதரவைப் பெற்றுக் கொண்டார்.
ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு முக்கியமானவைகளில் முதன்மையானது சட்டம், ஒழுங்கு, நீதியை நிலை நாட்டக்கூடிய காவலர்கள் எப்படியிருக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் தன்னுடைய பல படங்கின் வாயிலாக எடுத்துக் காட்டினார்.
http://i44.tinypic.com/2qtx4b6.jpg
‘திரைப்படங்கள்’ பொழுது போக்கும் ஓர் அம்சமாக மக்கள் சில மணி நேரம் கவலையெல்லாம் மறந்து சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருந்து விட்டு போவதற்கான சாதனமாகவே மட்டும் இருந்த நிலையில் அதை மாற்றி நல்ல கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடிய ஊடகமாக மாற்றிய பெருமை எம். ஜி. ஆரையே சேரும்.
courtesy
பாலா சங்குப்பிள்ளை
http://www.youtube.com/watch?v=RJrD2...ature=youtu.be
NAALAI NAMATHE - 3
தீவிர ரசிகர் என்பதை ஏற்பதற்கு சற்று நெருடல். காரணம்...சமையல்காரன் என்ற ஒரு திரைப்படம்...அதில் ஒரு காட்சி. திரு.vkr அவர்கள் திரு முத்துவிடம் ஓஹோ...உலகம் சுத்தும் வாலிபனா என்று கேட்பார் அதற்க்கு முத்து அவர்கள்....ஊஹூ ...உண்மையான வாலிபன் என்று நகைப்புடன் பதில் கூறுவார். ஒரு தீவிர ரசிகர், இந்த வசனத்தை எப்படி அனுமதித்தார் என்று எனக்கு விளங்கவில்லை !
ஒரு வேளை தந்தையாரின் நிர்பந்தம் ?
Thanks for your comments masanam sir .
மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய 60 வயதில் ,கடைசி படத்தில் என்னமாய் பம்பரமாக சுழன்று கத்தி சண்டை வீரப்பாவுடன் மோதும் பிரமாண்டமான மைசூர் அரண்மனையில் அருமையான ஒளிப்பதிவுடன் காட்சி
திரைப்பட சரித்திரத்தில் சகாப்தம் படைத்த வரலாற்று
புகழ் உலக பேரழகன் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பதில்
பெருமை அல்லவா ?
http://youtu.be/NJjCea4ohYk
1972 ....நினைவலைகள்.....
மக்கள் திலகம் அவர்களுக்கு ''பாரத்'' பட்டம் பெற்றதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நடிகர் திலகம் தலைமையில் சிறப்பாக நடந்தது .
திமுக கட்சி சார்பாக அன்பகத்தில் பாராட்டுவிழா நடைபெற்றது .
ஸ்டண்ட் நடிகர்கள் சங்கம் சார்பாக கோடம்பாக்கத்தில் மக்கள் திலகத்தை ரதத்தில் அமர்த்தி பிரமாண்டமான ஊர்வலம் நடத்தி பாராட்டு கூட்டம் நடத்தினார்கள் .
''
மதுரை நகரில் நடைப்பெற்ற திமுக மாநாட்டில் மக்கள் திலகம் முதலில் பேசிவிட்டு சென்ற பின்னர் மாநாடு திடலில் இருந்த கூட்டம் கலைந்து போனது ஒரு பேரதிர்ச்சியாக கருதப்பட்டது .
தினத்தந்தி - முரசொலி பேப்பரில் மக்கள் திலகம் சினிமா - அரசியல் செய்திகள்
அடியோடு நிறுத்தப்பட்டது .
தென்னகம் பேப்பர் மட்டும் மக்கள் திலகத்தின் சினிமா -அரசியல் செய்திகள்
வந்தன .
தொடரும்...
Dear Esvee Sir,
Fantastic Stunt Sequence. We have seen many heroes of these days use either graphics or unrealistic stunts ( One hero hitting and 10 thugs flying in 10 different directions) Hope they see this and change their format of fights.
In the same picture, there is one ANAL PARAKKUM SWORD FIGHT with Legendary Mr.Nambiar. I would give little more marks for that stunt because it is not a smooth fight fought between two on mosaic floor that also contains little speed cam technique if we watch carefully...the stunt with Mr.Nambiar has mixture of uneven floor, Sand etc., which is a real treat to watch....
Hope, you would put that here for all of us to enjoy !
Thanks..!!
மக்கள் திலகத்தின் 125 வது படம்
'' நாளை நமதே ''
4.7.1975......38வது ஆண்டு நிறைவு தினம் இன்று .
http://i39.tinypic.com/309hmk8.jpg
மக்கள் திலகத்தின் ''நினைத்ததை முடிப்பவன் '' வெற்றிகரமாக பல அரங்குகளில் 8வது வாரமாக தமிழகமெங்கும் ஓடிகொண்டிருந்தபோது வெளியான படம் .
யாதோன் கி பாரத் இந்தி பட தழுவல் என்றாலும் தமிழில் சில மாற்றங்கள் செய்து எடுக்கப்பட்ட படம் .
மெல்லிசை மன்னரின் இசைஅமைப்பில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
மக்கள் திலகத்தின் இரட்டை வேட நடிப்பில் வந்த ஹாட்ரிக் படம்
சங்கர் - விஜய் என்ற இரண்டு மாறுபட்ட நடிப்பில் மக்கள் திலகம் அபாரமாக நடித்திருப்பார் .
சங்கர் வேடத்தில் மிகவும் இறுக்கமாக ,உணர்ச்சி பிழம்பாக
அருமையாக நடித்திருந்தார் .
விஜய் - வேடத்தில் இளமை துள்ளலுடன் ஆடி பாடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் .
நாளை நமதே 50 வது நாளன்று மக்கள் திலகத்தின் ''இதயக்கனி '' வெளிவந்ததால் எதிர் பார்த்த வெற்றி பெறவில்லை.
சென்னை - மதுரை நகரில் மட்டும் 9 வாரங்கள் ஓடியது .
இலங்கையில் மட்டும் 100 நாட்கள் மேல் ஓடி வசூலில் சாதனை புரிந்தது .
http://i42.tinypic.com/2elvz2f.jpg
மொத்தத்தில் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு என்றென்றும்
திகட்டாத காவியம் - நாளை நமதே.
கலை மன்னன்
இயற்கை நடிகர்
ஆங்கிலேய ஆட்சியின் மூலம் திரைப்படங்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டன. பின்னாளில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் உள்ள நடிகர்களை வைத்தே திரைப்படம் தயாரிக்க தொடங்கினர்..அதில் நடிக்க நாடக மன்றங்களில் நடித்த கலைஞர்களை வைத்து திரைப்படங்கள் எடுத்தனர்..ஆரம்பத்தில் அவ்வாறு உருவான திரைப்படங்களில் நாடகத்தன்மை மேலோங்கி இருந்ததில் வியப்பொன்றுமில்லை..ஏனெனில் பெரும்பாலான பாத்திரங்கள் நாடக மன்றங்களிலிருந்து வந்தவர்களே..எனவே பழைய திரைப்படங்கள் நாடகத்தின் சாயலையே பிரதிபலித்தன..பெரும்பாலான நடிகர்கள் தங்கள் இயற்கையான நடிப்பைக் காட்ட மறந்தனர்...ஆனால் மக்கள் திலகம் போன்ற நடிகர்கள் ஆரம்ப கால படங்களிலிருந்தே வீரமாகவும் உணர்ச்சி பூர்வமாகவும், யதார்த்தமாகவும் நடிக்க ஆரம்பித்தனர்..ராஜா ராணி கதை இல்லாத மக்கள் திலகத்தின் ஆரம்ப கால படங்களில் இது நன்றாகவே தெரியும்..அதனால்தான் அனைவரும் மக்கள் திலகத்தை புரட்சி நடிகர், இயற்கை நடிகர் என்றனர்..பத்திரிகைகளும் இதையே பறைசாற்றின..ராஜா ராணி படங்களில் கூட அவருடைய நடிப்பு இயற்கையாகவும் நாடக சாயல் இல்லாமலும் இருக்கும்..நாம் வாழும் காலத்தில் சாதாரண குடிமகனும், ஆட்சி செய்பவர்களும் எப்படி இருக்கிறார்களோ, அப்படிதான் முன்னாளில் இருந்திருப்பார்கள் என்ற அடிப்படையில் அவரது படங்களில் குடிமகனும், அரசனும் சித்தரிக்கப்படுவார்கள்..அவரது நாடோடி மன்னன் படத்திலும் நாடோடி மற்றும் மன்னன் பாத்திரங்களை அழகாக, யதார்த்தமாக படைத்திருப்பார்.அதில் கொஞ்சம் கூட மிகையிருக்காது..
http://i41.tinypic.com/swv1fq.jpg
மன்னர்களுக்குரிய பேச்சு, நடவடிக்கை, வீரம், கோபம், காதல், புன்னகை ஆகியவற்றை மார்த்தாண்டன் பாத்திரத்திலும், ஒரு குடிமகனுக்குரிய அனைத்து குணங்களையும் வீராங்கன் பாத்திரத்திலும் அருமையாக படைத்திருப்பார்..அதே போல் ஆடல் கலையில் வல்லவராகவும், மானம் காப்பவராகவும் மன்னாதி மன்னன் படத்தில் வாழ்ந்திருப்பார்..
http://i43.tinypic.com/beslkl.jpg
மகாதேவி படத்தில் 'கொக்கு பறக்கும், குருவி பறக்கும், இங்கே புலி பறக்கிறது என்று அவர் சண்டையிட்டுக்கொண்டே வீரத்துடன் ஆர்ப்பரிக்கும் காட்சியை என்னவென்று சொல்வது..கண் இழந்தது போல நடிக்கும் காட்சியில் தத்ரூபமாக நடிப்பும் அதில் இரண்டு பாடல்களும் மிகவும் அருமையாக இருக்கும்...
http://i43.tinypic.com/2j5exvt.jpg
மல்யுத்தத்தில் புகழ்பெற்று மாமல்லன் என்று பெயர் பெற்ற காஞ்சித்தலைவன் படத்தில் மல்யுத்த சண்டையிலும்,அரியணையில் இருந்து இறங்கி வரும் காட்சியிலும், ஏறும் காட்சியிலும் முத்திரை பதித்திருப்பார்..தவறு செய்துவிட்டோம் என்று வருந்தி கையை தீயில் இடும் காட்சியிலும், பானுமதி தன்னை இழிவுபடுத்தும் சொற்களில் சிரித்துக்கொண்டே கோபப்படும் காட்சியிலும் புரட்சி நடிகரின் நடிப்பு பிரமாதமாக இருக்கும்...
http://i40.tinypic.com/m7ylvn.jpg
http://i40.tinypic.com/95t0kh.jpg
...இயற்கை தொடரும்...
என் ரத்தத்தின் ரத்தமே:
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க மாபெரும் வெற்றி பெற்று, தமிழக முதல்வராக, ஜூலை 30, 1977 -இல் பதவி ஏற்றார் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் சரித்திரத்தில் புதிய சகாப்தம் உருவான நாள் அது. அண்ணா சமாதியில் அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விழாவுக்கு வந்தார். தமிழக கவர்னர் பிரபுதாஸ் பட்வாரி, சென்னை ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆருக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அதை அடுத்து, அதுவரை தமிழகத்தில் எந்த முதல்வரும் செய்திராத சாதனையை செய்தார் எம்.ஜி.ஆர். பல லட்சக்கணக்கான மக்களை ஒருங்கே சந்தித்து, அவர்களுக்கு நன்றி கூறி, அவர்களின் நல் ஆசியுடன் தன் ஆட்சியை ஆரம்பித்தார்.
ராஜாஜி ஹால் நிகழ்ச்சியை அடுத்து, அண்ணா சாலையில், அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து, அருகே அமைக்கப்பட்டிருந்த பெரிய மேடைக்கு வந்தார். பதவி ஏற்றதுமே, மக்களைச் சந்திக்கவேண்டும், அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார் எம்.ஜி.ஆர்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் எல்லோரும் அங்கே இருந்தனர். தமிழகமெங்கும் இருந்து மக்கள் பலர் லாரி, வேன் பிடித்து சென்னை வந்து சேர்ந்தனர்.
ஜெமினி மேம்பாலத்திலிருந்து அண்ணா சிலை வரை; மறுபக்கம் காசினோ தியேட்டர் முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை; இன்னொரு பக்கம் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் வரையிலும் எம்.ஜி.ஆரின் முகத்தை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் காலை 11 மணி வெயிலில் தார் ரோட்டில் மக்கள் உட்கார்ந்திருந்தனர்.
பெரும்பான்மையினர் எம்.ஜி.ஆரை நேரில் பார்க்க முடியாத நிலைமை இருந்தாலும், அவர் பேசுவதை நன்றாக கேட்கும் வகையில் மைக் ஏற்பாடுகள் எல்லா இடங்களிலும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. பேச ஆரம்பிப்பதற்கு முன்னர், மேடையின் எல்லா பக்கங்களுக்கும் சென்று, மக்களைப் பார்த்து கை அசைத்தார். அவர் கை அசைத்ததும், விசில் சத்தம், கை தட்டல், ஆரவாரம் பல நிமிடங்கள் தொடர்ந்து வானை பிளந்தன.
குறைந்தபட்சம் என்று கணக்கெடுத்தாலும் பத்து லட்சம் பேருக்கு அதிகமாக இருக்கும் தார் ரோடுகளிலும் கட்டிடங்கள் மேலேயும், மரங்களிலும், தரையிலும் எங்கிருந்தெல்லாம் எம்.ஜி.ஆரை அன்று பார்க்க முடியுமோ, அவர் பேசுவதை கேட்க முடியுமோ, அங்கெல்லாம் வேறு எந்த சிரமத்தையும் பொருட்படுத்தாது மக்கள், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இருந்தார்கள்.
'மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய தமிழக அமைச்சர்களே, பாராளுமன்ற உறுப்பினர்களே, சட்டசபை அங்கத்தினர்களே, பெரியோர்களே, தாய்மார்களே' என்று எம்.ஜி.ஆர் பேச ஆரம்பித்தார். அடுத்து 'என் ரத்தத்தின் ரத்தமான என் அன்பு உடன்பிறப்புக்களே' என்று எம்.ஜி.ஆர் சொன்னதும் மீண்டும் கரகோஷம் விண்ணைத் தொட்டன. எங்கும் மகிழ்ச்சி, எங்கும் ஆரவாரம்.
கே.ராஜாராம், காளிமுத்து, ராஜா முகமது, பி.டி.சரஸ்வதி, அரங்கநாயகம், ராகவானந்தம், நாஞ்சில் , எட்மன்ட் உட்பட அனைத்து அமைச்சர்களும், எம்.ஜி.ஆரின் பர்சனல் டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் அங்கு இருந்தார்கள்.
மேடையில், 'இந்த வெற்றி என் வெற்றி இல்லை; இது உங்கள் வெற்றி. நான் உங்களில் ஒருவன்; உங்களுக்காகவே பாடுபடுவேன். இது உங்கள் ஆட்சி; மக்கள் ஆட்சி. மக்களுக்கு செய்கிற தொண்டே, மகேசனுக்கு, ஆண்டவனுக்கு செய்கிற தொண்டு என்று நான் நம்புகிறேன். தமிழகமும், தமிழக மக்களும் செழிப்பாக இருக்க வேண்டும்; அது தான் என் லட்சியம். என் லட்சியத்தில் நான் வெற்றி பெற, உங்களுடைய ஆசிகளை வேண்டுகிறேன்...' என்று பேசினார் எம்.ஜி.ஆர்.
மக்களின் பெருத்த ஆரவாரத்தின் இடையே அவர் பேசிக்கொண்டு இருந்தார். அவ்வளவு மக்கள் பாசத்துடன், அன்புடன் அவரைப் பார்க்க, பேசுவதை கேட்க கூடி இருந்தது எம்.ஜி.ஆர் வாழ்க்கையிலேயே அவருக்கே மறக்க முடியாத நாள் என்றே நான் சொல்வேன்.
மக்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, முதல்வர் பதவியை ஏற்க முதல்முறையாக அங்கிருந்து, தமிழக அரசின் நிர்வாக மையமும், தலைமைச் செயலகமான கோட்டைக்குச் சென்றார் எம்.ஜி.ஆர். தன் அறையில், சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை சந்தித்து நிர்வாகம் பற்றி பேசிக் கொண்டிருந்தார். மாலை நான்கு மணிக்குத் தான் வீட்டுக்கு திரும்பினார்.
தமிழகத்தின் முதல்வராக மூன்றாம் முறையாக எம்.ஜி.ஆர் பதவி ஏற்ற நிகழ்ச்சியும், அதற்க்கு சில தினங்களுக்கு முன் பரங்கிமலையில் நடைபெற்ற கூட்டத்தில் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டதும் மறக்க முடியாத நிகழ்ச்சிகள்...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ப்ரூக்ளின் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, Feb 1985 இல் சென்னை திரும்பினார் எம்.ஜி.ஆர். அப்போது எம்.ஜி.ஆர் உடல்நிலை பற்றி தவறான வதந்திகள் பரவி கொண்டிருந்த நேரம்.
அமெரிக்காவிலிருந்து திரும்பியதும், ஒரு பொதுக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர் கலந்து கொள்கிறார் என்று அறிந்ததும், பல மாதங்களாக அவரை பார்க்க முடியாத மக்கள், தமிழகம் முழுவதும் இருந்து பஸ், லாரி, வேன் பிடித்து வந்துவிட்டனர். சென்னை பரங்கிமலையில், இந்திய ராணுவத்திற்கு சொந்தமான மிகப்பெரிய மைதானத்தில், பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஆர்வத்தோடு கூடியிருந்தனர்.
அவரால் நடக்க முடியாது; கை, கால்கள் செயலிழந்து விட்டன என்றெல்லாம் அவரது அரசியல் எதிரிகள் புரளிகளை கிளப்பிவிட்டிருந்த நேரம் அது. விமானம் வந்து நின்றதும், தானே விமானப் படிகளில் யார் துணையும் இன்றி இறங்கி வந்தார். அவர் முழு பொலிவுடன், சிரித்த முகமாக விமான படிகளில் இறங்கி வந்த காட்சி இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.
விமான நிலையத்திலிருந்து நேராக மிலிட்டரி மைதானத்திற்கு எம்.ஜி.ஆரும், அவரது துணைவி ஜானகியும் காரில் வந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு செல்லும் படிகளில் எப்போதும் போல வேகமாக ஓடி ஏறினார். அவர் நன்றாக இருக்கிறார், உடல் வலிமையோடு இருக்கிறார் என்பதையெல்லாம் பார்த்ததும் அங்கிருந்த லட்சக்கணக்கான மக்கள் மிகவும் உற்சாகமாயினர்.
புரட்சித்தலைவரின் மனிதநேயம்:
1977 இல் எம்.ஜி.ஆர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி ஏற்றிருந்த சமயம். எம்.ஜி.ஆருக்கு எல்லா மட்டங்களிலும் ரசிகர்கள் உண்டு. எம்.ஜி.ஆரின் உயர்மட்ட விசிறிகளில் குறிப்பிடத்தக்கவர் கர்நாடக மாநிலத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டுராவ்.
பெங்களூரில் உள்ள தன் வீட்டுக்கு வரவேண்டும் என்று குண்டுராவ் எப்போதும் அழைத்துக்கொண்டே இருப்பார். குண்டுராவின் பிறந்த நாளன்று, பெங்களூருக்கு நேரில் சென்று, அவரை வாழ்த்தவேண்டும் என்று முடிவு செய்தார் எம்.ஜி.ஆர்.
பிற்பகலில் TMX 4777 என்ற எண்ணுள்ள பச்சை அம்பாசிடர் காரில் கிளம்பினார் எம்.ஜி.ஆர். அவருடன், அவரது மனைவி ஜானகி அம்மா, ஜானகி அம்மாவின் சகோதரர் நாராயணனின் மகள் லதா இருவரும் வந்தனர். மற்றொரு வேனில் நாங்கள் அவர் வண்டியை பின்தொடர்ந்தோம்.
பெங்களூரை அடைந்ததும் எம்.ஜி.ஆரும், அவரது குடும்பத்தினரும் அங்கு 'வெஸ்ட் எண்ட்' என்கிற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கினர். நாங்கள் அதற்க்கு அருகே வேறொரு ஹோட்டலில் தங்கினோம்.
மறுநாள் காலை ஒன்பது மணிக்கு கர்நாடக முதல்வர் குண்டுராவ் வீட்டுக்கு சென்றோம். பெரிய பார்சல் ஒன்றை அவருக்கு பரிசாக அளித்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி பரமசிவம், செக்யுரிட்டி ஆபிசர் கண்ணுசாமி உடன் இருந்தனர். பால் பாயாசத்தோடு எங்கள் அனைவருக்கும் நன்றாக சைவ சாப்பாடு அளிக்கப்பட்டது. சாஷ்டாங்கமாக எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து நமஸ்கரித்தார் குண்டு ராவ். அவரை மனதார வாழ்த்தினார் எம்.ஜி.ஆர்.
பத்து மணிக்கு மேல் அங்கிருந்து கிளம்பினோம். அப்போது எம்.ஜி.ஆர் தான் வரும் அம்பாசிடர் காரில் என்னை வரச் சொன்னார். 11 மணிக்கு மேல் ஓசூர் வரும்போது நல்ல வெயில். காரில் பயணம் செய்யும்போது எம்.கே.தியாகராஜ பாகவதர் படிய பாடல்களை எப்போதும் ரசித்துக் கேட்பார் எம்.ஜி.ஆர்.
ஓசூர் தாண்டியிருப்போம். இடது பக்கம் நெடுஞ்சாலை ஓரத்தில் வயதான கிழவி மற்றும் பத்து வயது சிறுமி இருவரும் தலையில் பெரிய புல்கட்டை சுமந்தவாறே காலில் செருப்பு இல்லாமல் வெயிலில் தவித்துக் கொண்டிருந்தனர். கொஞ்ச நேரம் நடந்து, பிறகு வெயிலுக்காக ஓரமாக நின்று மீண்டும் நடை.
'ராமசாமி, காரை நிப்பாட்டு...' என்று டிரைவர் ராமசாமியிடம் சொன்னார் எம்.ஜி.ஆர். 'ராமு, போய் அவங்களை விசாரித்துவிட்டு வா...' என்றார் என்னிடம். ராமகிருஷ்ணன் என்ற என் பெயரை பல நேரத்தில் 'ராமு' என்று சுருக்கியே அவர் கூப்பிடுவார்.
'கால் சுடுதய்யா நிற்கிறோம்...' என்றார் அந்தக் கிழவி. 'தூரத்திலிருந்து புல்லை அறுத்து, கட்டி சுமந்து சென்று விற்றால் தலைச்சுமைக்கு பன்னிரெண்டு அணா கிடைக்கும்...' என்றார். எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்.
தன் மனைவி ஜானகி அம்மா, லதா இருவரிடம் அவர்கள் அணிந்திருந்த செருப்புகளைக் கழற்றச் சொன்னார். காரில் பயணம் செய்யும்போது எப்போதும் ஒரு கருப்பு பேட்டியில் பணம் வைத்திருப்பார். அதிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து, 'அவர்களிடம் கொடு...' என்றார்.
இரு ஜோடி செருப்புகளையும் எடுத்துக் கொண்டுபோய் அவர்களிடம் கொடுத்து, எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னார் என்று ஆயிரம் ரூபாயையும் கொடுத்தேன். அப்படியே நெகிழ்ந்து போயினர். எதிர்பாராமல் பணம் கிடைத்ததில் அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. நன்றிகூட சொல்லாமல் அப்படியே நின்றனர்.
காரின் கண்ணாடியை இறக்கி வணக்கம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர். அங்கிருந்து நாங்கள் புறப்பட்டோம்.
தன்னிடம் உதவி கேட்டவருக்கு மட்டும் என்று இல்லாமல், உதவி கேட்காதவர்களுக்கும் குறிப்பறிந்து உதவி செய்வதுதான் எம்.ஜி.ஆரின் குணம். இந்த மனிதநேயம் தான் அவரை உயரத்தில் வைத்தது. தனக்கு உதவியவர் தமிழக முதல்வர் என்று அந்த கிழவிக்குத் தெரியுமா, தெரியாதா? எனக்குத் தெரியவில்லை. எந்தப் பிரதிபலனும் பாராமல் செய்யப்பட்ட மனிதநேய செயல் அது.
தகவல்களுக்கு நன்றி: 'எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்', விகடன் பிரசுரம்.
மல்யுத்தத்தில் புகழ்பெற்று மாமல்லன் என்று பெயர் பெற்ற காஞ்சித்தலைவன் படத்தில் மல்யுத்த சண்டையிலும்,அரியணையில் இருந்து இறங்கி வரும் காட்சியிலும், ஏறும் காட்சியிலும் முத்திரை பதித்திருப்பார்..தவறு செய்துவிட்டோம் என்று வருந்தி கையை தீயில் இடும் காட்சியிலும், பானுமதி தன்னை இழிவுபடுத்தும் சொற்களில் சிரித்துக்கொண்டே கோபப்படும் காட்சியிலும் புரட்சி நடிகரின் நடிப்பு பிரமாதமாக இருக்கும்...
super scene kpv sir
http://youtu.be/IB4Fc4Bfm-M
Congrats Sailesh Sir for completing 500 posts most with video, a painstaking work.