Nadai mannan Nadigarthilagam
https://www.youtube.com/watch?v=4vxjQgPzYA8
Printable View
Nadai mannan Nadigarthilagam
https://www.youtube.com/watch?v=4vxjQgPzYA8
Server crash - 5 Sep 2016
Hello Hubbers,
We had a major server issue on Monday morning and subsequently the Hub went down for more than a day. We tried hard but in the end we had to resort to retrieving data from backups. However, the latest backup we could successfully retrieve was the one dated Sep 3. (The other backups didn't work as expected, unfortunately). So we lost posts from late Saturday and until Sunday. If you find some recent posts missing, it could be because of this. Sorry about that! We will try to avoid such incidents in future.
The above message is by RR, the administrator of our Hub.
நடிகர்திலகம் விருது பெறப்போகும் வாணிஸ்ரீ,ஒய் .ஜீ .மகேந்திரா ,விஸ்வநாதராய்,சங்கர்-கணேஷ் மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு வாழ்த்துக்கள்.
1)வாணிஸ்ரீ- எந்த சிவாஜி ரசிகரை கேட்டாலும் சிவாஜிக்கு பொருத்தமான மூவரை சொல்லுங்கள் என்றால் கண்ணை மூடி கொண்டு வரும் பதில் பத்மினி ,தேவிகா,வாணிஸ்ரீ.இதில் வாணிஸ்ரீ மிக அதிர்ஷ்டசாலி. அவருடைய மிக சிறந்த காதலி என்று அழைக்க படும் வசந்தமாளிகை லதாவாகும் வாய்ப்பு பெற்றவர். நடிகர்திலத்துடன் உயர்ந்த மனிதன்,நிறைகுடம்,குலமா குணமா ,வசந்தமாளிகை ,சிவகாமியின் செல்வன்,வாணிராணி,வாழ்க்கை அலைகள்,ரோஜாவின் ராஜா,புண்ணியபூமி,இளையதலைமுறை,நல்லதொரு குடும்பம் என்று 11 படங்களில் 1968 தொடங்கி 1979 வரை 11 வருடம் நடித்தவர்,சிவாஜியின் மிக சிறந்த ரசிகை என்று பலமுறை வெளி படுத்தி உள்ளார்.
2)ஒய் .ஜீ .மகேந்திரா ,கெளரவம் (1973) தொடங்கி சுமார் 35 படங்களில் நடிகர்திலகத்துடன் பணி புரிந்தவர். குடும்ப நண்பர். நடிகர்திலகத்தின் மிக சிறந்த பக்தர்களில் ஒருவர். எங்கே நடிகர்திலகத்துக்கு விழா நடந்தாலும் இவர் ஆஜர். இவர்களின் u .a .a .நாடகங்களை அடிப்படையாக்கி நடிகர்திலகத்துக்கு கிடைத்த முத்துக்கள் பார் மகளே பார் (பெற்றால்தான் பிள்ளையா),கெளரவம் (கண்ணன் வந்தான் ),பரீட்சைக்கு நேரமாச்சு(பரீட்சைக்கு நேரமாச்சு). நடிகர்திலகத்தின் மிக சிறந்த நாடகங்களை மீள் உருவாக்கம் செய்வதில் ஆர்வம் காட்டுபவர்.(வியட்நாம் வீடு). மிக குறிப்பிட வேண்டிய படம் பரீட்சைக்கு நேரமாச்சு.
3)விஸ்வநாத ராய்- இவர் நடிகர்திலகத்தின் 14 படங்களுக்கு கேமரா இயக்கம் செய்தவர். முக்கியமாக ஏ.சி.திருலோகச்சந்தர் படங்களில். பாபு (1971)தொடங்கி,பாரதவிலாஸ் ,அவன்தான் மனிதன்,அன்பே ஆருயிரே,டாக்டர் சிவா,ஜெனரல் சக்ரவர்த்தி,ஜஸ்டிஸ் கோபிநாத்,நான் வாழவைப்பேன்,தர்மராஜா,விஸ்வரூபம்,வசந்தத்தில் ஓர் நாள்,குடும்பம் ஒரு கோயில்,அன்புள்ள அப்பா ,தாம்பத்யம்(1987) 14 படங்கள். 16 வருடங்கள்.அவன்தான் மனிதன் குறிப்பிடத்தக்க படம். இவரின் அற்புதமான திறமையை ஆட்டுவித்தால் யாரொருவர் பாடலில் காணலாம்.
4)சங்கர் கணேஷ்- இவர் நடிகர்திலகத்தின் 70 படங்களுக்கு மேல் விஸ்வநாதன்-ராமமூர்த்தி மற்றும் விஸ்வநாதனுக்கு உதவியாக பணி புரிந்திருந்தாலும் ,துணை (1982),ஊரும் உறவும்,நெஞ்சங்கள்,பந்தம்,நீதியின் நிழல்,ஆனந்தக்கண்ணீர்,ராஜமரியாதை,வீரபாண்டியன்,அன்பு ள்ள அப்பா(1987) போன்ற 9 படங்களில் இசையமைப்பாளராக (இவற்றில் 2 சிவாஜி பிலிம்ஸ் படங்கள்)பணி புரிந்தவர்.சிவாஜியால் முன்னேறிய ஜீ.என்.வேலுமணி மருமகன்.
5)வெண்ணிற ஆடை நிர்மலா- நடிகர்திலகத்துடன் லட்சுமி கல்யாணம், தங்கசுரங்கம்,எங்கமாமா,தங்கைக்காக,பாபு, உனக்காக நான் போன்ற படங்களில் பங்கேற்றவர். தாமதத்தால் ,சிவகாமியின் செல்வனை லதாவிற்கு தாரை வார்த்தவர்.ஜோடியாக ஒரே படம் தங்கைக்காக. (உன்னை தேடி வரும் எதிர்காலம்)
முதல் மூவருக்கு நிஜமான மனம் கனிந்த வாழ்த்துக்கள். கடைசி இருவருக்கு வாழ்த்துக்கள்.
தகவுலுக்கு நன்றி முரளி சார்Quote:
Server crash - 5 Sep 2016
Hello Hubbers,
We had a major server issue on Monday morning and subsequently the Hub went down for more than a day. We tried hard but in the end we had to resort to retrieving data from backups. However, the latest backup we could successfully retrieve was the one dated Sep 3. (The other backups didn't work as expected, unfortunately). So we lost posts from late Saturday and until Sunday. If you find some recent posts missing, it could be because of this. Sorry about that! We will try to avoid such incidents in future.
The above message is by RR, the administrator of our Hub.
என்னுடைய பதிவுகள் பல காணாமல் போயிருந்தன
விபரம் புரியாமல் இருந்தேன் .
தங்கள் தகவல்மூலம் விபரம் தெரிந்துகொண்டேன் நன்றி.
http://oi63.tinypic.com/25tgcow.jpg
முகநூல் ஒன்றிலிருந்து இப்படத்தை கொப்பி எடுத்தேன்.
அதில் இப்படத்தைபற்றிய விளக்கம் இருக்கவில்லை.
சிவாஜி கணேசன் ,எம் ஜீ ஆர் இருவரையும் அடையாளம் காணமுடிகிறது,
ஏனையவர்கள்பற்றிய விபரம் தெரியவில்லை.
எலலோர் முகத்திலும் ஒருவித சோகத்துடன்,
எதைப்பற்றியோ தீவிரமாக ஆலோசிப்பதுபோல் தெரிகிறது.
விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் தாருங்கள்.
திரிசூலம் திரைப்படம்
2 கோடி வசூல் பெற்றதற்கான
பத்திரிகை ஆதாரம்
http://oi68.tinypic.com/ae7ipg.jpg
பாகிஸ்தான் யுத்த நிதிக்காக ஸ்ரீதரும் சிவாஜியும் தமிழகத்தின் ஆறு முக்கிய நகரங்களில் இணைந்து நட்சத்திர இரவுகள் நடத்தினர். அதில் நவீன துஷ்யந்தன் - சகுந்தலை நாடகம் முக்கியமானது. ஜெமினியும் சாவித்ரியும் ஜோடியாக நடித்தார்கள். மேடையில் அவர்கள் இணைந்து அரிதாரம் பூசியது அதுவே முதலும் கடைசியும். கிட்டத்தட்ட 12 லட்சங்களுக்கும் மேல் வசூலானது. அதைப் பெற்றுக் கொள்வதற்காகவே சென்னை வந்தார் பாரதப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி.
http://media.dinamani.com/2015/07/10...g%20jewels.jpg
அதுவும் போதாமல் சிவாஜி, சாவித்ரி, ஸ்ரீதர் உள்ளிட்டோர் தாங்கள் அணிந்திருந்த ஆபரணங்கள் அனைத்தையும் சாஸ்திரியிடம் கொடுத்தார்கள். பிரதமருக்கு முன்பாக சாவித்ரி தன் காதுகளிலிருந்து கம்மலைக் கழற்றும் புகைப்படம் புகழ் பெற்றது.
61ல் தமிழில் சிவாஜி கணேசன் நடித்த மூன்று படங்கள் டில்லிக்குச் சென்றன. மூன்றுமே பரிசு பெற்றுத் திரும்பின. பாவமன்னிப்பு ‘தங்கப்பதக்கம்’ பெற வேண்டியது. ஏ.பீம்சிங் அதற்காக மெனக்கெட விரும்பாததால் சில ஓட்டுகளில் அதை இழந்தது. அதற்கு இந்தியாவிலேயே சிறந்த இரண்டாவது படம் என்கிற விருதும், கப்பலோட்டிய தமிழனுக்கு வெள்ளிப் பதக்கமும், பாசமலருக்கு சிறந்த படம் என்கிற தரச் சான்றிதழும் கிடைத்தது.
பாசமலரில் ஜெமினியின் வளர்ப்புத் தாயாக ஒரு அம்மா நடித்திருப்பார், அபாரம்...! சிவாஜி ஒரு பென்சிலைச் சீவிக்கொண்டு ஜெமினியிடம் " ஆனந் நீயும் உனது கூட்டமும் பக்டரியை இழுத்து மூடினாலும், ஒரு அகல்விளக்கின் சிறு ஒளியில் ஒரு ஜீவன் அங்கும் இங்கும் ஓடி வேலை செய்துகொண்டு இருக்கும் அதுதான் தொழிலாளி ராஜு " என்று பேசும் வசனம் அன்று எமது பஞ்ச் டயலாக்....!
(வாசகர் ஒருவரது பதிவு)
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by sivaa http://www.mayyam.com/talk/images/bu...post-right.png முகநூலில் இருந்து
1964-ல் விருது நகர் மாவட்டம் மம்சாபுரத்தில் கால்நடைகளுக்காக ஒரு பெரிய கால்நடை மருத்துவமனை அமைத்து கொடுத்து வாயில்லா ஜீவன்களான கால்நடைகள் நலம் பெற வழி செய்தவர் வள்ளல் சிவாஜி
http://www.mayyam.com/talk/newreply....treply&t=12043
http://oi65.tinypic.com/117foy0.jpg
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 143 – சுதாங்கன்.
http://www.dinamalarnellai.com/site/...ews_Nellai.jpg
பச்சை விளக்கு’ வளர்ந்து கொண்டே வந்தது! படம் எட்டாயிரம் அடி வரை வந்துவிட்டது. அப்போதுதான் அந்த சிக்கல் வந்தது. படத்தை ஏவி.எம். செட்டியார் பார்த்தார். படம் பார்க்கும்போதே முகத்தை சுளித்தார். படம் பார்த்து முடிந்தபின் அவருக்கு திருப்தி இல்லை.
`எடுத்த வரையில் ஸ்க்ராப் பண்ணிடுங்கப்பா. இதே பேக்கிரவுண்டில் வேறு கதை தயார் பண்ணிடுங்க’ என உறுதியாக சொல்லிவிட்டார்.
அப்படியே வேறொரு கதையை தயார் செய்து எடுத்தார்கள். அதில் ஏவி.எம். ராஜன் – புஷ்பலதா காட்சிகளை டெவலப் செய்து மீண்டும் எடுத்தார்கள். அத்தனை பாடல்களும் செம ஹிட்! மறுபடியும் கண்ணதாசன் – விஸ்வநாதன் காம்பினேஷன் கொடி கட்டி பறந்தது. இந்த தொடரைப் பற்றி நான் ஏற்கனவே இங்கே சொல்லியிருக்கிறேன். அதாவது நான் சிவாஜி படங்களை வருட வரிசையில் எழுதவில்லை.
அதிக சுவாரஸ்யம் கொண்ட சம்பவங்களை அடக்கிய பின்னணி தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தான் எழுதி வருகிறேன்.
அதனால் இப்போது `பச்சை விளக்*கு’ படத்திற்கு முன்னால் வந்த படத்தை பார்ப்போம். பிரபல கதை, வசனகர்த்தா ஆரூர்தாஸின் அருமையான வசனங்களை நாம் `பாசமலர்’ படத்தில் பார்த்தோம். அந்தப் படம் முடியும் தறுவாய்! ஒரு நாள் காலை சிவாஜியின் மேக்–-அப் அறைக்குள் நுழைந்தார் ஆரூர்தாஸ்!
கண்ணாடி வழியாக இவர் வருவதை கவனித்த சிவாஜி, `….. வா, ஆரூரான்’, அப்படித்தான் சிவாஜி ஆரூர்தாஸை அழைப்பார். ‘காலங்காத்தாலே உனக்கு ஒரு சந்தோஷமான சேதி சொல்றேன்.. நம்ம ` காஸ்டி*யூமர்’ ராமகிருஷ்ணனுக்கு சிவாஜி பிலிம்ஸ் ஆதரவோடு ஒரு படம் பண்ணிக் கொடுக்கப்போகிறோம்.
இதே ` பாசமலர்’ யூனிட்டுதான் ஒர்க் பண்றாங்க.` பீம்பாய்’ டைரக்*ஷன். நான், ஜெமினி கணேசன், சாவித்தி*ரி, ராதா அண்ணன் எல்லாம் நடிக்கிறோம். விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசை. கண்ணதாசன் பாட்டு. வசனம் எழுதுறதுக்கு நான் உன்னைத்தான் சொல்லியிருக்கேன். நீ சண்முகத்துக்கிட்டே பேசி, அட்வான்ஸ் வாங்கிட்டு எழுத ஆரம்பி. நம்ம சிவாஜி பிலிம்ஸ் ரிலீஸ்தான்.
அத்தனை விரைவாக மீண்டும் சிவாஜி படம் வரும் என்று ஆரூர்தாஸ் நினைக்கவில்லை. (இதையெல்லாம் ஆரூர்தாஸே அவருடைய ‘சிவாஜி கண்ட சினிமா ராஜ்ஜி*யம் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்
அதே சமயத்தில் ஆரூர்தாஸ் நினைக்காத ஒரு சம்பவம் நடந்தது. இரண்டாவது படத்தின் கதையைக் கேட்ட ஜெமினி, சிவாஜியின் அண்ணன் பாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.
சிவாஜி, பீம்சிங், சாவித்திரி எல்லோருமே எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள்.
ஜெமினி இசையவில்லை. ஆரூர்தாஸும் ஜெமினியும் நெருங்கிய நண்பர்கள். அதனால் ஆரூர்தாஸ் சொன்னால், ஜெமினி கேட்பார் என்று அவரை அனுப்பினார்கள்.
இவரும் போய் ஜெமினியிடம் விளக்கமாகச் சொன்னார்.
`வாத்யாரே! (அப்படித்தான் ஜெமினி ஆரூர்தாஸை அழைப்பார்) நான் சொல்றதை நல்லா கவனி. சாவித்திரி, வாழ்க்கையில் என் மனைவி. கதைப்படி சிவாஜிக்காக அவளை பெண் பாக்கப் போற நான், அவ மேலே ஆசைப்பட்டு சூழ்ச்சி பண்ணி, என் தம்பியான சிவாஜியை ஏமாத்தி அவளை கட்டிக்கிடறேன். அவ தனக்கு மனைவியா வராததனால தம்பி சிவாஜி வாழ்க்கையில் நிம்மதியில்லாம கஷ்டப்படறான். நான் சாவித்திரியோடு சந்தோஷமாக வாழ்வதாக கதை போகிறது. படத்தில் `பக்கா’ வில்லன் ஆகி, ரசிகர்களோட வெறுப்புக்கு ஆளாக வேணாம். வேண்டாம், இந்த விஷப்பரீட்சை, என்னை விட்டுடு’.
`அண்ணே நீங்க சொல்றது சரிதான். ஆனால் என்னை இங்கே கொண்டு வந்து அறிமுகப்படுத்தினது நீங்கதான். இதே யூனிட்ல இன்னொரு படம் வரும்னு நான் எதிர்பார்க்கலே. அதுல நீங்க ஒருத்தர் இல்லாமப் போனா என் மனசுக்கு வேதனையா இருக்கும். அதனாலதான் சொல்றேன்’ என்றார் ஆரூர்தாஸ்.
`அவ்வளவுதானே… கவலைப்படாதே வெகு சீக்கிரத்துல இதே யூனிட்டோட இன்னொரு படத்துக்கு உனக்கு அழைப்பு வரப்போகுது. அதுல நான் உன்னோடு இருப்பேன்’ என்றார் ஜெமினி.
ஜெமினி நடிக்காத அந்த வேடத்தில் பாலாஜி நடித்தார். அந்த படம் 14.4.1962ம் ஆண்டு வெளிவந்தது. அந்த படம் நூறு நாட்கள் ஓடியது. அந்த படம்தான் ‘டித்தால் மட்டும் போதுமா’.
இப்போது படத்தைப் பார்த்தாலும் ஜெமினி சொன்னது எத்தனை உண்மை என்பது புரியும். காதல் மன்னனாக சிவாஜியின் நண்பராக பார்த்த ஜெமினியை வில்லனாக பார்க்க ரசிகர்கள் விரும்பியிருக்க மாட்டார்கள்.
பாலாஜி அந்த வேடத்திற்கு மிகவும் சரியாக பொருந்தியிருப்பார்.
`படித்தால் மட்டும் போதுமா’ ஒரு வித்தி*யாசமான கதைக்களம்.
இதிலும் கண்ணதாசன், விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஜோடி கொடி கட்டி பறந்தது.
எப்போதும் போலவே இந்த படத்தின் பாடல்களும் படம் வெளிவருவதற்கு முன்பே இலங்கை வானொலியில் பட்டையை கிளப்பியது.
அதிலும் முதலில் எல்லோரையும் ஈர்த்தது, டி.எம்.எஸ். பி.பி.எஸ். சேர்ந்து பாடிய `பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை. படத்தின் கதையையே கோடி, காட்டியிருப்பார் கண்ணதாசன்.
இந்த படத்தில் `தன்னிலவு தேனிறைக்க வாழைமரம் நீர் தெளிக்க’ ஒரே பாடலை மட்டும் மாயவநாதன் எழுதியிருப்பார்.
இந்த படம் வெளியான போது எனக்கு நான்கு வயது. பின்னாளில் மீண்டும் திரையிடப்பட்ட போது, இந்த படத்தில் வரும் `நல்லவன் எனக்கு நானே நல்லவன்’ பாட்டுக்கு சிவாஜி நின்று கொண்டே ஆடும் ஆட்டத்திற்கும், அவருடை*ய கை அசைப்பிற்கும் தியேட்டரில் எப்போது பார்த்தாலும் விசில் பறந்து கொண்டிருந்தது.
அது சரி!
இதே யூனிட்டில் அடுத்து ஒரு படம் ஆரூர்தாஸுக்கு வரும். அதில் நானும் நடிப்பேன் என்று ஜெமினி சொன்னாரே!
அது என்ன படம்?
ஆரூர்தாஸும் கேட்கவில்லை, ஜெமினியும் சொல்லவில்லை!
`வரவேண்டிய நேரத்தில், வரவேண்டிய ஒன்று, வேண்டியவர் மூலமாக வரவேண்டியவருக்கு வந்தே தீரும்’.
அதுவும் எப்படி வந்தது?
ஒரே சமயத்தில் இரண்டாவது, மூன்றாவது படங்களுக்கும் எழுத வேண்டிய வாய்ப்பு ஆரூர்தாஸுக்கு வந்தது. ஒரு குடுகுடுப்பைக்காரர் சொன்னதைப் போல் ஜெமினி ஆரூடம் சொன்னார். அவர் சொன்னதைப் போலவே நடந்தது.
அந்த மூன்றாவது படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம்.
சிவாஜி. ஜெமினி, சாவித்திரி, சரோஜாதேவி, சவுகார் ஜானகி, குழந்தை கமலுக்கு இரட்டை வேடம் !
இந்த இரண்டு படங்களுமே மூன்று மாத இடைவெளியில் வந்து சக்கை போடு போட்டன.
ஆனால் மூன்றாவது படம் இரண்டாவது படத்திற்கு முன்பே வெளியானது.
காரணம் மூன்றாவது படத்தை தயாரித்தது ஏவி.எம். நிறுவனம்
அவர்கள் எப்போதுமே சரியாக திட்டமிட்டு படத்தை வெளியிடுவார்கள்.
அந்த படம்தான் `பார்த்தால் பசி தீரும்’.
(தொடரும்)
1980 'களில் ரசிகர்மன்ற செயல்பாடுகளில் ஒரு பிரதான அம்சமாக விளங்கியது தியேட்டர்களில் காட்டப்படும் ரசிகர்மன்றஸ்லைடுகள்.படம் ஆரம்பிக்கும் முன்காட்டப்படும் ரசிகர் மன்ற ஸ்லைடுகள் ரசிகர்களிடையே பெரிய ஆரவாரத்தை உண்டாக்கும்.சாதாரண டூரீங் தியேட்டர்களிலேயே மீண்டும் திரையிடப்படும் பழைய படங்களுக்கே பல ரசிகர்மன்ற ஸ்லைடுகள்காண்பிக்கப்படும்.
அப்படியிருக்க நகரங்களில் புதிய படங்களுக்கு கேட்கவே வேண்டாம்.அவற்றிலும் ரசிகர்மன்றங்களிடையே பலத்த போட்டியும் இருக்கும்.ஒரு ரசிகர்மன்றமே பல ஸ்லைடுகளை தியேட்டரில் கொடுத்தும் போட வைக்கும்.அந்த ஸ்லைடுகளை காண்பதற்காகவே ரசிகர் மன்றங்கள் படம் ஆரம்பிப்பதற்கு முன்னரே வேகமாய் தியேட்டருக்குள்முந்திக் கொண்டு வரும்.அப்போது அவர்கள் செய்யும் அலப்பரையில் தியேட்டரே அலறும்.
http://uploads.tapatalk-cdn.com/2016...f41201cfa6.jpg
சுமார் 28 வருடங்களுக்கு முந்தைய ஸ்லைடு இது.பொள்ளாச்சி தியேட்டர்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஸ்லைடுகளில் இதுவும் ஒன்று.
கருடா சௌக்கியமா?
சில முக்கிய 'நறுக்'வசனங்கள் ஒலிச்சித்திரமாக உங்களின் பார்வைக்கு...
Karuda sowkiyama: https://youtu.be/CMtHkzcCJeY
திரைக்கதம்பம்...
[IMG]http://uploads.tapatalk-
cdn.com/20160918/6a8fa8da1ce1b265ecb94f0a28e09233.jpg[/IMG]