https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...78&oe=5E94A6CE
Printable View
'எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்..நான் வாழ யார் பாடுவார்..என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்..இனி என்னோடு யார் ஆடுவார்
இன்று 07/03/2020 - மதியம் 1.30 மணிக்கு ராஜ் டிஜிட்டல் இல்
நடிகர் திலகம் நடித்த - "எங்க மாமா" - சிறப்பு படத்தை காண தவறாதீர்கள். ¶
நடிகர்திலகம், ஜெயலலிதா, பாலாஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...3e&oe=5E91E203
Jeyavelu Kandaswami
#HERO83 #சென்னை
1964, 1972 ஆண்டுகளைப் போன்றே 1983 ஆம் ஆண்டிலும் நடிகவேந்தன் திரைத் துறையில் படைத்தச் சாதனைகள் அளப்பற்கரியது. அவற்றை எழுதினாலும் ஏடுகள் போதாது. இவரின் வெற்றிகள் அனைத்தும் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே படைக்கப்பட்ட ஒன்றாகும். தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனங்களையோ, அரங்க உரிமையாளர்களை மிரட்டியோ, பணிய வைத்தோ உருவாக்கப்பட்ட சாதனைகளல்ல இவருடையது. அடுத்தடுத்து தொடர்ந்து படங்களை வெளியிட்டு, சமயத்தில் ரசிகர்களே பார்க்கத் திணறிப் போகும் அளவுக்கு தனது மாறுபட்ட நடிப்புத் திறனால் வெவ்வேறு கதை அம்சங்கள் பாத்திரங்கள் கொண்ட படங்களில் நடித்து, அவற்றைத் தொடர் வெற்றிகளாக்கி தனது ஐம்பத்தைந்தாம் வயதிலும் அவர் செய்த சாதனைகள் வியப்புக்குரியது.
இந்த 1983 லும் அப்படித்தான். அவர் நடித்து தமிழில் வெளியான படங்கள் ஆறு. அவற்றில் இரண்டு படங்கள் வெள்ளிவிழாவும், இரண்டு படங்கள் நூறு நாளும் ஓடி வெற்றி பெற்றன. 1959, 1961,1972, 1978, 1983 ஆகிய ஆண்டுகளுக்குப்பின் ஒரே ஆண்டில் இரு படங்கள் வெள்ளிவிழா என்று ஆறாம் முறையாக ஓர் அற்புதச் சாதனையை அவர் படைத்திருந்தார். தெலுங்கில் ஒரு படமும், தமிழில் இரு படங்களென மூன்று படங்களில் இரட்டை வேடமேற்று நடித்திருந்தார். அதில், இரு படங்களில் இரு கதாபாத்திரங்களுக்கும் ஜோடிகள் இருந்தன. ( சந்திப்பு / பெஜவாடா பெப்புலி) ஆனால், வெள்ளை ரோஜா படத்தில் இரு வேடங்களுக்கும் ஜோடி இல்லை.
நான்கு படங்களில் அவரது மகன் பிரபு நடித்திருந்தார். மிருதங்க சக்கரவர்த்தி, சந்திப்பு, நீதிபதி ஆகிய படங்களில் கதையிலும் தந்தை மகனாக இருவரும் நடித்திருந்தனர்.
1983ல் சில புள்ளி விபரங்கள் / சென்னை நகர சாதனைகள்
1. மூலக்கடை வெங்கடேஸ்வரா அரங்கில் 50 நாட்களைக் கடந்த படம் நீதிபதி.
2. திருவொற்றியூர் வெங்டேஸ்வராவில் நூறுநாள் ஓடிய முதல் படம் வெள்ளைரோஜா.
3. 1983 ல் ஆறு படங்களில் திலகம் நடித்து நான்கு படங்கள் 100 நாள் ஓடின.
வேறு எவருக்கும் அந்த ஆண்டு ஓடவில்லை. ( நீதிபதி, சந்திப்பு, வெள்ளை ரோஜா, மிருதங்க சக்கரவர்த்தி)
4. சென்னை சாந்தியில் நீதிபதி, சந்திப்பு, மி. சக்கரவர்த்தி என்று மூன்று படங்கள் 100 நாள் ஓடின. இந்த மூன்றும் தனியரங்கில் 8 லட்ச ரூபாய்க்கும்மேல் வசூலித்தன. வெள்ளை ரோஜா சபையரில் மட்டுமே 8 லட்ச ரூபிய் வசூலித்தது. இதுபோல் தனி அரங்கொன்றில் 8 லட்சரூபாய் வசூலித்ததில் மற்றவர்க்கு இரண்டு படங்ளுக்கு மேல் கிடையாது.
5. 1983 ல் திரையிட்ட அனைத்து அரங்குகளிலும் நூறுநாளைக் கடந்த சிவாஜியின் படங்கள் 3. ( நீதிபதி, சந்திப்பு, வெள்ளைரோஜா )மற்றவர்க்கு இரண்டுகூட இல்லை.
6. 1983ல் வெளியான படங்களில் 100 காட்சிகளுக்கும் மேல் தொடர்ந்து அரங்கு நிறைந்ததும் திலகத்துக்குத்தான். நீதிபதி, சாந்தி, அகஸ்தியா, அன்னை அபிராமி அரங்குகளிலும், சந்திப்பு - சாந்தி, கிரௌன், புவனேஸ்வரியிலும், வெள்ளைரோஜா - தேவி, புவனேஸ்வரி, கிரௌனிலும், மிருதங்க சக்கரவர்த்தி சாந்தியிலும் தொடர்ந்து 100 காட்சிகளுக்கும் மேல் தொடர் HOUSEFULL ஆகின.
7. 1983 -ல் சென்னையில் 100 நாட்களில் 30 லட்சம் வசூலித்த ஒரே படம் வெள்ளை ரோஜா மட்டுமே.
8. சாந்தியில் 3 படங்களும், கிரௌனில் இரு படங்களும், புவனேஸ்வரியில் இரு படங்களும், அகஸ்தியா, அன்னை அபிராமி, தேவி, உதயம், அபிராமி ஆகியவற்றில் தலா ஒரு படமும் திலகம் நடித்து 100 நாட்களைக் கடந்தன.
9. தீபாவளி வெளியீட்டில் சென்னையில் 6 திரைகளில் 75 நாட்களும், 5 திரைகளில் 100+ நாட்களும் ஓடிய ஒரே படம் வெள்ளை ரோஜா.
10. சென்னையில் மட்டும் சிவாஜி நடித்து வெளியான ஆறு படங்கள் மூலம் வசூலான மொத்தத்தொகை ஒரு கோடிக்கும்மேல்.
11. 1983ல் நடிகர்திலகம் நடித்து நீதிபதி, சந்திப்பு, வெள்ளைரோஜா மூன்றும் தமிழகமெங்கும் ஒரு கோடி ரூபாய்க்கும்மேல் வசூலித்தது. ஆனால், மற்றவர்க்கு?
12. சென்னை தேவி மற்றும் உதயம் அரங்குகளில் நூறுநாள் ஓடிய முதல் தமிழ்ப்படம் வெள்ளை ரோஜா. சபையர் திரையரங்கில் 75 நாட்களைக் கடந்த முதல் தமிழ்ப் படமும் அதுவே. அத்திரையரங்கு நிர்மாணித்த காலந்தொட்டு பெண்கள் கூட்டம் அதிகம் அலைமோதியது வெள்ளைரோஜா படத்துக்குத்தான் என்று அப்போதைய தினமணிக்கதிர் செய்தி வெளியிட்டிருந்தது.
( மதுரை, கோவை, சேலம், திருச்சி சாதனைகள் நாளை....)
நன்றி : மதுரை ரசிகர்களின் சிறப்புமலர்
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...25&oe=5E986E7B
நன்றி : வான்நிலா விஜயகுமாரன்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...38&oe=5E909DC1
நம் இதயதெய்வத்தின்150வதுதிரைக்காவியமானசவாலே.சமாளிபடத்தின்விழாபேரணிதிருச்சிமாநகரில்மிகபிரமாண்டமாகநடைபெற்றதுபேரணிமுடிவில்நடந்த வெற்றி விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய செல்வி ஜெயலலிதா நடிப்பு என்றால் என்ன எப்படி நடிக்கவேண்டும் என்று நடிகர் திலகத்தின் படங்களில் நடிக்கும் போது தான்தெரிந்துகொண்டேன்என்றுபேசினார் ஒருமுறை சவாலே சமாளி திருப்பூர் டைமண்ட் தியேட்டரில் மறுமுறை ரீலீஸான போது படத்தின் இடைவேளை யில்வெற்றிவிழா பேரணி காண்பிக்க ப்பட்டது
Thanks Selvaraj ,K