மூப்பிலும் சந்தி சிரிக்க வைக்கும்
மூளையை முடக்கும் கள்.
-
கிறுக்கன்
Printable View
மூப்பிலும் சந்தி சிரிக்க வைக்கும்
மூளையை முடக்கும் கள்.
-
கிறுக்கன்
அதீதஅன்பு பிரமிக்கபட்டு ரசிக்கபட்டு நாளடைவில்
சலித்திட ஒதுக்கப்பட்டு வெறுக்கபடும்.
-
கிறுக்கன்
உன்னால் உதிர்ந்த கண்ணீர் பாவம்
உனக்காக உதிர்வது பாசம்.
-
கிறுக்கன்
பிழையில்லா பொய்யான அன்பினும் பிழையுடனான
மெய்யான அன்பே சிறந்தது.
-
கிறுக்கன்
மக்களுக்கு
உயிரளித்தாய்
உயர்வளித்தாய்
உணவளித்தாய்
உணர்வளித்தாய்
படிப்பளித்தாய்
பகுந்தளித்தாய்
எல்லார்க்கும் தாயாகி
பாதுகாத்தாய்
அமரரானாலும்
மக்களின் அம்மா
உன் ஆன்மா
சாந்தியடைய வேண்டுகிறேன்....
-
கிறுக்கன்
மானங்கெட்டு போனதோ தமிழ்
மானிட சமுதாயம்
ஈன பிறவிகளின் பின்னாலே
ஈட்டம் கூடுவதேனோ
கள்வர் என தெரிந்தும்
கட்டுப்பட்டு நடப்பவர்
களவானி கூட்டமன்றோ
கழுத்தறுக்கும் கயவரன்றோ
அரசியல் செய்பவன்
அடிமையாய் நிற்கிறான்
அரசில் பணிப்பவன்
அசிங்கமாய் குழைகிறான்
படிப்பை சொல்லும்
பல்கலைகழகங்கள் பணிவிடை செய்தால்
படிக்கும் மாணவனின்
படைப்பு உருப்படுமோ
பணத்தின் பின்னே சென்று
பண்பை தொலைத்திட்டோம்
சகதியை செழிக்கவிட்டு
சாக்கடையில் மிதகின்றோம்
தன் தவறை சரி செய்யாது எவனும்
தட்டி கேட்க முடியாது
தடுமாறும் சமூகத்தை
தடுத்தாளவும் முடியாது....
-
கிறுக்கன்
நாதியற்று போனாயோ
நாற்றமடித்து போனாயோ
கொடிகட்டி பறந்த நீ
கொடூரமாய் இறந்தாயோ
எட்டி நின்ற கூட்டம் எல்லாம்
ஏளனமாய் சிரித்ததோ
எட்டாம் நாள் காரியம்
எண்பதாம் நாளில் நடந்ததோ
போலி மரியாதை கண்டு
மகிழ்ந்திடும் மனிதர்க்கு
உன் மரணம் ஓர்
ஒப்பில்லா பாடம்.
-
கிறுக்கன்
தவறை சுட்டிக்காட்டும் உறவு வரவு
குத்தி காட்டுவதோ செலவு.
-
கிறுக்கன்
கற்பழித்தவனும்
கொள்ளையடித்தவனும்
காலம் சென்றதால்
காவிய தலைவனாம்
கற்பிழந்தது யாரோ
என்பதினால்
தன் குடும்பம்
என்றிருந்தால்?
வாடிய பயிரை பார்த்து
வாடிய இனம் இன்று
தன் வயி்று நிறைவில்
ஆனந்தம் கொள்கிறது
மாட்டிற்காக மகனை
வதைத்த மன்னன் எங்கே
மகனுக்காக மாநிலத்தை
பிரித்த பாதகன் எங்கே
சிறு பிழைக்கே
நானோ அரசன்
நானே கள்வன் என்று
மாண்டான் அன்று
இன்றோ
நான் கள்வன் எனினும்
நானே அரசன் என்பவனையே
நமஸ்கரிக்கிறது
நரம்பில்லா கூட்டம்
தமிழினம் உணர்ச்சியில்லா
எருமைகளா இல்லை
உணர்வுள்ள காளைகளா
என்பதை காலமே
எடுத்துரைக்கும்
பிள்ளைகளை வெறும்
நிதி புகட்டி வளர்க்காது
நீதி புகட்டி வளர்த்திடுவோம்....
-
கிறுக்கன்
ஆழிப்பேரலை கண்ட
மெரினாவையே மெர்சலாக்கியது
மாணவர் பேரலை
அரசியல் வியாதிகளை
புரட்டியது புரட்சி அலை
மாணவிகளை மதித்து
முதிர்ந்தது பண்பு அலை
முகந்தெரியா மனிதருக்கும்
உணவளித்தது பாச அலை
அடக்கவந்த காவலரே
காண்பித்தது கவச அலை
உலகெங்கும் ஒலித்தது
தமிழனென்னும் திமிர் அலை.....
-
கிறுக்கன்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!!!!!!