Tirunelveli – Ram Muthuram, Friday first show house full, news forwarded by S.M.S.Jalli, Arumugam and Azhvai Rasappasamy.
Printable View
Tirunelveli – Ram Muthuram, Friday first show house full, news forwarded by S.M.S.Jalli, Arumugam and Azhvai Rasappasamy.
புரட்சித்தலைவரின் பொன்னான வரிகள்:
இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புகளுக்கு ஓர் அறிவுரை
1971 மேடையில் பேசிய பேச்சில் என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே இன்று எனக்கு மன்றங்கள் இருப்பதில் எனக்கு பெருமை இல்லை. நான் மறைந்த பின்பும் இந்த மன்றங்கள் இந்த நாட்டுக்கு சொந்தமாக இருக்க வேண்டும். மக்களுக்கு மக்களின் எண்ணங்களுக்கும், துணையாக இருக்க வேண்டும். என் கொள்கைகளுக்கு லட்சிய பொருளாக இருக்க வேண்டும். அப்போதுதான் மன்றங்களுக்கும் பெருமையே தரும். ஒருவர் உயிரோடு இருக்கும் போது, மன்றங்கள் இருக்குமே தவிர அது நிரந்தரமான பரிகாரம் ஆகாது. என்பதே என் கருத்து. இது 1971ல் மக்கள் திலகம் பேசியது. அப்போது எல்லாம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் ரசிகர்களாக இருந்தவர்கள் இப்போது எம்.ஜி.ஆர். பக்தர்களாகி விட்டார்கள். ஆக, இந்த ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் எப்போதுமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை தன் இதயத்தில் வைத்து பூசிப்பார்கள். அவர் தூங்கம் இடத்தில் கற்பூரம் ஏற்றுகிறார்கள். அவர் வாழ்ந்த இடத்தில் உள்ள அவருடைய உருவசிலைக்கு மாலை போட்டு வணங்குகிறார்கள். வாரி, வாரி, கொடுத்த இந்த வள்ளலை யார் தான் மறக்க முடியும் யாராலும் மறக்க முடியாது.
என்றும் பணிவுடன் - Mugam theriyada Bakthar - Courtesy Net
THANKS ROOP SIR
RAMMUTHRAM- NELLAI
http://i57.tinypic.com/r7lxjr.jpg
GOOD NEWS ... MAKKAL THILAGAM M.G.R STRIKES SILVER SCREEN..
மக்கள் திலகத்தின் ''என் என்கடமை ''
இன்று பொன்விழா ஆண்டு நிறைவு நாள் .
13.3.1964 அன்று வந்த படம் . வேட்டைக்காரன் படம் 8 வது வாரம் ஓடிய நேரத்தில் வந்த படம் .
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு - இனிய பாடல்கள் - கண்ணுக்கு விருந்தான நடனங்கள் - ரசிகர்களுக்கு விருந்து . நடிகர் பாலாஜி மக்கள் திலகத்துடன் நடித்த ஒரே படம் .
மாறு வேடத்தில் மக்கள் திலகம் தோன்றும் காட்சியிலும் மேலை நாட்டு பாணி நடனமும்
அருமை .
ஹலோ மிஸ் .. ஹலோ மிஸ் எங்கே .....
நில்லடி நில்லடி .. சீமாட்டி
யாரது ..யாரது சொந்தமா ..
மீனே மீனே மீனம்மா
பாடல்கள் சூப்பர் .
மக்கள் திலகம் - சரோஜாதேவி இருவரும் லக்கி நம்பர் 7 பற்றி கூறும் காட்சியில் மிகவும்
ரம்மியமாக நடித்திருப்பார்கள் . நல்ல பொழுது போக்கு படம் .
100 திரையரங்குகளில் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் எந்த மொழியில் பார்த்தாலும் அது கொடுக்கும் உணர்வு ஒன்றாகத்தான் உள்ளது. ஒரு காதல் படத்தை நாம் புரியாத ஒரு மொழியில் பார்த்தாலும் கூட நம்மால் அந்தப் படத்தில் வரும் நாயகன் மற்றும் நாயகியின் உணர்வுகளை நாம் நன்றாக உணர்ந்துகொள்ள முடியும்.
இதற்குக் காரணம் சினிமா என்ற உலகப் பொதுமொழி அனைவருக்கு எளிதில் புரியும்படி உள்ளதுதான். திரைமொழியை நன்றாகப் புரிந்துகொண்டு அதைத் திரையில் சிறப்பாகக் கொண்டுவரத் தெரிந்தவர் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்று சொல்லலாம். திரைமொழியை நன்றாக உணர்ந்து நடிப்பவர் தான் சிறந்த நடிகர் என்றும் சொல்லவேண்டியதில்லை. அப்படிப்பட்ட திரைமொழியை தன் உடலில் அழகாக அனைவரும் உணரும் வண்ணம் எளிமையாக நடிக்கத் தெரிந்த ஒரு நடிகர் தான் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் எளிய மக்களுக்குப் புரியும் நடிகராகத்தான் தன்னைக் காட்டிக்கொள்வார். அப்படி, எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்து பெரிய வெற்றிபெற்ற ஒரு திரைப்படம் தான் 1965-இல் வெளிவந்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்தார். எம்.என். நம்பியார், நாகேஷ், ஆர். எஸ். மனோகர் மற்றும் மாதவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படம் டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டு தமிழ்நாடு முழுவதும் 100 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பி.ஆர். பந்துலுவின் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் இனிமையான பாடல்களும் கொண்ட பெரிய வெற்றிப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்' என்பது குறிப்பிடத்தக்கது.