Originally Posted by
makkal thilagam mgr
அருமை சகோதரர் திரு. வினோத் அவர்களின் நெத்தியடி பதில் super..
அன்பு சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்களின் கருத்து மிகச் சரியே !
சகோதரர் திரு. ரவிகிரன் சூர்யா தேவையில்லாமல் நம் திரியில் நுழைந்து வாதங்கள் வைப்பது, பின்பு பின் வாங்குவது என்றே வாடிக்கையாகிவிட்டது.
தமிழ் திரைப்பட உலகின் முடி சூடா மன்னன், ஒரே வசூல் சக்கரவர்த்தி அதுவும் நிரந்தரமான (1956 முதல் இன்று வரை) வசூல் சக்கரவர்த்தி என்பது உலகறிந்த உண்மை. இது அந்த கால கட்டங்களில் வெளிவந்த பல சினிமா பத்திரிகைகள் உறுதி செய்துள்ளன.
எனவே, ரவிகிரண் சூர்யா அவர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள் ! மக்கள் திலகம் அவர்கள் எவருடனும் ஒப்பிட முடியாத கலியுக கடவுள். அவரது திரைப்பட சாதனைகளை எவராலும் மிஞ்ச முடியாது. அரசியல் சாதனைகளும் அவ்வாறே ! அதனால் வீண் விவாதங்களுக்கு இடம் தர வேண்டாம்.
இன்று மக்களிடையை ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தினாலும், என்றும் விரும்பக்கூடிய - ஒரு மகத்தான இயல்பான நடிகரும், மாபெரும் அரசியல் தலைவரும், சிறந்த மனிதாபிமானம் கொண்டவரும், குறிப்பறிந்து உதவக்கூடிய வள்ளலும், பொன்மனம் கொண்ட பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களே ! என்றுதான் தேர்வு செய்வர்.
வேறு எவரும் அவரது நிழலைக் கூட நெருங்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்