தசாவதாரம் வெளிவருவதற்கு முதல் நாள், பிரத்தியேக காட்சிக்கு அழைத்திருந்தார் கமல். படம் பார்த்தேன். திரைப்படத்தின் தாக்கத்தில் இருந்து மீண்டு வர முடியவில்லை. அரங்கத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த கமலின் கையை பிடித்து முத்தம் கொடுத்து, இரண்டு வார்த்தைகளை சொல்லி விட்டு வந்தேன். "கமல்...... ஒன்லி கமல்! " என்று ஒவ்வொரு முறையும் கமல் நிரூபித்து வருகிறார். கமல் தசாவதாரத்தில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் என்று தோன்றியது எனக்கு. நம்பமாட்டீர்கள்... அன்று இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை. மீண்டும் மீண்டும் என் கண்ணுக்குள்ளேயே கமலின் பத்து அவதாரங்களும் நிழலாடிக்கொணடே இருந்தன. நடு நடுவில் "கல்லை மட்டும் கண்டால்" பாடலின் போது கமல் மேலே தொங்கும் அந்த மில்லியன் டாலர் ஷாட்டுகள்தான் வந்து போய்கொண்டிருந்தன.
--இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர்