Originally Posted by Murali Srinivas
படத்தின் highlight - ஆறு மனமே ஆறு பாடல் காட்சி! என்ன ரசிப்பு என்ன ஆரவாரம்! சாதாரணமாக எந்த நடிகனின் ரசிகனும் தன் அபிமான நடிகர் தாடி நீக்கி, மீசை நறுக்கி நேர்த்தியாக உடையணிந்து மிக அழகாக தோற்றமளிக்கும் போது தான் மிக அதிகமாக ரசிப்பார்கள், ஆரவாரம் செய்வார்கள்,கை தட்டுவார்கள். ஆனால் இங்கேயோ தன் அபிமான நடிகன், பரதேசி போல் முடி குறைத்து, முள்ளு முள்ளான தாடி வைத்து, கிழிந்த காவி வேட்டி கட்டி வரும்போதுதான் ரசிகன் உச்சக்கட்ட ஆரவாரத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிறான். தன் நடிப்பின் மூலமாக ரசிகனின் ரசிப்பு தன்மையையும் வளர்த்தவர் நடிகர் திலகம் என்று சொன்னால் அது வேறு யாருக்கும் கிடைக்காத ஒரு பாக்கியம்.
அன்புடன்