நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் திலகம் வேடமணிந்து வந்தவர்கள் .
http://i57.tinypic.com/20p02c.jpg
Printable View
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் திலகம் வேடமணிந்து வந்தவர்கள் .
http://i57.tinypic.com/20p02c.jpg
https://www.youtube.com/watch?v=FTK8wxub3ug
ஆயிரத்தில் ஒருவன் பிரம்மாண்டத்தின் மகுடம் சிறப்பு நிகழ்ச்சி தயாரித்து வெளியிட்டது ஜெயா தொலைக்காட்சி
https://twitter.com/onlynikil/status.../photo/1/large
ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்த்து மடல்
https://www.youtube.com/watch?v=ZN2gR2BO8DM&hd=1
ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட ட்ரைலர் வெளியீட்டை முன்னிட்டு ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட செய்திகள்
தமிழ் இன தலைவர் ''மக்கள் திலகம் ''
" தலைவர் பிரபாகரனும் நானும் யோகி என்கிற யோகரத்தினமும் எம்.ஜி.ஆரிடம் அழைத்துச் செல்லப்பட்டோம். முதலமைச்சருடன் தீட்சித்தும் இருந்தார். இந்திய – இலங்கை ஒப்பந்தம் பற்றியும் அதில் பரிந்துரைக்கப்பட்ட மாகாண சபைத் திட்டம் பற்றியும் இம் மாகாண சபைத்திட்டம் மூலம் ஈழத் தமிழரின் அரசியல் அபிலாஷைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளது என்றும் தீட்சித் சொன்னதை நாடியில் கையூன்றியவாறு பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.”
""தமிழர் விடுதலைக் கூட்டணியும் சகல போராளிக் குழுக்களும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றன. ஆனால் இவர்கள் மட்டும் இதனை எதிர்க்கிறார்கள். தமிழீழத் தனியரசைத் தவிர இவர்கள் எதையுமே ஏற்க மாட்டார்கள் போலத் தெரிகிறது. ஆனால் இந்திய அரசு தனியரசு அமைவதை ஒருபொழுதும் அனுமதிக்கப் போவதில்லை. இவர்கள் இந்தியாவை விரோதித்தால், பாதகமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்றார் இந்தியத் தூதுவர்.
" இந்த மாகாண சபைத் திட்டத்தில் உருப்படியாக ஒன்றுமில்லை. தமிழ் மக்களின் அபிலாஷையை இது பூர்த்தி செய்யவில்லை. அப்படியிருக்க, இத்திட்டத்தை நாம் எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும்?” என்றார் யோகி என்கிற யோகரத்தினம். இதைத் தொடர்ந்து யோகிக்கும் தீட்சித்துக்கும் கடும் வாக்குவாதம் மூண்டது.
" சென்றவாரம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பூரி இந்த ஒப்பந்தம் பற்றியும் மாகாணசபைத் திட்டம் பற்றியும் உமக்கு விவரமாக விளக்கினாராம். அப்போது அதற்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் இப்போது எதற்காக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?” என்று தீட்சித் கேட்க, ""யாழ்ப்பாணத்தில் இந்த ஒப்பந்தம் பற்றி எதுவுமே பேசப்படவில்லை” என்றார் யோகி.
""என்னை ஒரு பொய்யன் என்று சொல்கின்றீர்களா?” என்று கேட்டார் தீட்சித். ""நீங்கள் உண்மை பேசவில்லை” என்றார் யோகி.
வாக்குவாதம் சூடுபிடித்தது. முதலமைச்சரைப் பார்த்து, ""பாருங்க சார், என்னைப் பொய்யன் என்று சொல்கிறார்” என்றார் தீட்சித்.
இந்தியத் தூதுவர் தீட்சித் உணர்ச்சிவசப்படுகிறார் என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர்., ""நீங்கள் சிறிது நேரம் வெளியே இருக்கிறீர்களா? நான் இவர்களுடன் பேச வேண்டும்” என தீட்சித்தை வேண்டிக்கொண்டார். சிறிது தயக்கத்துடன் அங்கிருந்து வெளியேறினார் இந்தியத் தூதுவர்.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகள் பற்றியும் அதனை ஏற்றுக்கொள்ள நாம் மறுப்பதன் காரணங்கள் பற்றியும் எம்.ஜி.ஆர். எம்மிடம் வினவினார். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி எமது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கினோம். ஈழத்து அரசியல் கட்சிகளும், ஆயுதக் குழுக்களும் இந்திய அரசின் நெருக்குதலுக்கும், மிரட்டலுக்கும் பணிந்துவிட்டார்கள் என்றும், இந்திய அச்சுறுத்தல்களுக்குப் பணிந்து நாம் எமது மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்றும் சொன்னோம்.
தமிழரின் இனப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணாத நிலையில், சிங்கள ஆயுதப் படைகள் தமிழர் மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சூழ்நிலையில், எமது ஆயுதங்களைக் கையளித்து, எமது போராளிகளைச் சரணடையுமாறு கேட்பது நியாயமற்றது என்பதையும் எடுத்து விளக்கினோம்.
எமது விளக்கங்களை முதலமைச்சர் பொறுமையுடன் செவிமடுத்தார். எமது நிலைப்பாட்டின் நியாயப்பாடுகளையும் அவர் புரிந்து கொண்டார். இந்திய – இலங்கை ஒப்பந்தமானது இந்தியாவின் கேந்திர – புவியியல் நலனைப் பேணுவதற்காகவே செய்து கொள்ளப்பட்டது என்பதையும் உணர்ந்து கொண்டார். இந்திய – இலங்கை ஒப்பந்த விவகாரத்தில் பிரபாகரன் என்ன முடிவு எடுக்கின்றாரோ, அதற்குத் தனது முழு ஆதரவும் இருக்கும் என்றார் எம்.ஜி.ஆர். அழுத்தங்களுக்கு விட்டுக் கொடுக்காது, கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பது குறித்து பிரபாகரனை அவர் பாராட்டவும் தவறவில்லை.
முதலமைச்சருக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். முதலமைச்சரின் சந்திப்பு அறைக்கு வெளியே தீட்சித்தும் ஓர் இந்தியப் புலனாய்வு அதிகாரியும் நின்று கொண்டிருந்தனர். எம்மை வழிமறித்த இந்தியத் தூதுவர், ""ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி முதலமைச்சர் வற்புறுத்தினார் அல்லவா?” என்று கேட்டார். நாம் பதிலளிக்காது மௌனமாக நின்றோம். ""முதலமைச்சர் சொன்னபடியே செய்யுங்கள்” என்றார். ""அப்படியே செய்வோம்” என்று கூறிவிட்டுச் சென்றோம்.
- விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன்பாலசிங்கம் தான் எழுதிய "விடுதலை’
நூலிலிருந்து .
http://i57.tinypic.com/ofyjig.jpg
https://www.youtube.com/watch?v=ibiLQKE5DPs&hd=1
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படடிஜிட்டல் இசை வெளியீட்டை முன்னிட்டு ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட செய்திகள்
தினத்தந்தியில் 30/03/2014 விளம்பரம்.
http://i58.tinypic.com/308gto6.jpg
'இலங்கை போர் குற்றம்' குறித்த அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக, ஐ.நா., மனித உரிமை கவுன்சில் வாக்கெடுப்பில், இந்தியா பங்கெடுக்கவில்லை என்பதை அறிந்த; அடுத்த நாளே, அந்நாட்டு சிறைகளில் வாடும், அனைத்து தமிழக மீனவர்களையும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே விடுவித்ததோடு, முடிச்சு போட்டு பேசுவது, அரசியல் ரீதியாக சிலருக்கு பயன்படலாம். ஆனால், லோக்சபா தேர்தலுக்கு, இதனால், யாருக்கும், எந்த பயனும் ஏற்படப் போவதில்லை என்றே சொல்லலாம்.
ஜெனிவா வாக்களிப்பை, இந்தியா புறக்கணித்ததற்கு காரணகர்த்தா என்று சுட்டிக் காட்டப்படும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி, தமிழக தேர்தலில் பெரிதாக எதையும் சாதித்துவிடப் போவதில்லை. தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் மற்ற எந்த கட்சியோடும், காங்கிரஸ், கூட்டணி அமைத்திருக்கவில்லை. அந்த வகையில், 'செத்த பாம்பை அடிக்கும்' இந்த, 'வீர' விளையாட்டு, யார் யாராருக்காகவெல்லாம் அரங்கேற்றப்படுகிறது என்று தெரியவில்லை. ஜெனிவா வாக்கெடுப்பிற்கு பின், புது டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு துறை செயலர் சுஜாதா சிங், மீனவர் விடுதலையை சுட்டிக் காட்டினார். இலங்கையின் இந்த முடிவை தொடர்ந்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்பு கூறியிருந்தது போல், 'இரு நாட்டு மீனவர்கள் பேச்சு, மீண்டும் துவங்கப்பட வேண்டும்' என்று அவர் கூறியதாகவே, இதைக் கருத வேண்டும்.
மாறாக, அமெரிக்காவின் தீர்மானத்தையும், மீனவர்கள் விடுதலையையும் முடிச்சுப் போட்டு பேசுவது, வாதத்திற்கு வேண்டுமானால், சரியாக இருக்கலாம்; அந்த வாதம் உண்மையாக இருந்திருந்தால், தமிழக மீனவர்கள் மீது, மத்திய அரசு அந்த அளவிற்கு அக்கறை கொண்டுள்ளது என்று பொருளாகி விடும்.
வட இலங்கை அரசியல்:
மேலும், 'இலங்கை இன பிரச்னை' குறித்த உள்நாட்டு அரசியலில், நம் மாநிலத்தில் உள்ள, 'உரிமை பேசும்' கட்சிகள், தமிழக மீனவர்களின் உயிரை, பகடைக் காயாக்கி விளையாடுகின்றனரோ என்ற, எதிர்மறை எண்ணத்தையும், இது போன்ற கருத்துக்கள் ஏற்படுத்தி விடும்.ஆனால், நிச்சயமாக இது, அவர்களது எண்ணமல்ல.இலங்கையில், தமிழர்கள் மட்டுமே உள்ள, வடக்கு மாகாணத்தில் தான், தமிழகத்தின், இராமேஸ்வரம் மற்றும் அண்டை பகுதிகளில் உள்ள மீனவர்கள், 'டிராலர்'கள் மற்றும் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். இது போன்று மீன் பிடிப்பது, இராமேஸ்வரம் கடல் பகுதியை போலவே, யாழ்ப்பாணம், மன்னார் போன்ற, இலங்கையில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும், மீனே இல்லாத நிலையை ஏற்படுத்தி விடும்.
இதன் காரணமாக, வட இலங்கை மீனவர்கள், கடலில் பரப்பும் மீன் வலைகளும், அவர்களது வாழ்வாதாரங்களும் அழிந்து விடும் ஆபத்தும் ஏற்பட்டு விடும். இது போன்ற வலைகளையும், மீன்பிடி முறைகளையும் எதிர்த்து, தென் தமிழக பகுதிகளிலும், பாரம்பரிய முறைகளில் மீன்பிடி தொழிலை மேற்கொண்டுள்ள பல்லாயிரக் கணக்கானோர், பல ஆண்டுகளாக போராடி வருவதும் குறிப்பிடத்தக்கது.ஆனால், இன பிரச்னையை முன்னிறுத்தி போராட்டம் நடத்தி வரும், இலங்கையின் வட மாகாணத்தில் ஆட்சி செய்யும், தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசோ, கடல் பகுதிகளை சாராத அந்த கட்சியின் தலைவர்களோ, அந்நாட்டு தமிழ் பகுதி மீனவர்களை, கண்டு கொள்வதே இல்லை என்பதே உண்மை. அவர்களை பொறுத்த வரை, இன பிரச்னை மற்றும், 'போர் குற்றங்கள்' குறித்த, தங்களது தற்போதைய நிலைபாட்டிற்கும், எதிர்கால போராட்டங்களுக்கும், தமிழக அரசியல் தலைமைகளின் ஆதரவு தேவை; அவ்வளவு தான்!
இலங்கை தமிழர்களிடையேயோ, நம் மாநிலத்திலேயோ, மீனவர்கள் சமூகத்திற்கென, ஒருங்கிணைந்த, உருப்படியான அரசியல் தலைமை இல்லை. தற்போது, தமிழகத்தில் மொத்தமுள்ள, 39 லோக்சபா தொகுதிகளுள், பதினான்கில், மீனவர் சமுதாயத்தினர் வசிக்கின்றனர்.
துரதிர்ஷ்டமே
கடந்த காலங்களில், எம்.ஜி.ஆர்., தன் திரைப்படங்கள் வாயிலாகவும், அரசியல் வானிலும், 'மீனவ நண்பன்' என்று தன்னை, அடையாளப்படுத்திக் கொண்டார். அவரது காலத்திற்கு பின், அந்த இடத்தை, யாராலும் நிரப்ப முடியவில்லை.எந்த அரசியல் கட்சியோ, தலைவர்களோ, அதற்கான முயற்சி எடுத்ததும் இல்லை.கடந்த, 2004ல், ஆசியாவின் கடற்கரைப் பகுதிகளைச் சூறையாடிய, 'சுனாமி'யில், மீனவர்களும், அவர்களது உடமைகளும் அடித்துச் செல்லப்பட்ட போது கூட, நம் மீனவ சகோதர, சகோதரிகளைக் காட்டி, வெளிநாட்டு உதவி பெற்று, தங்கள் வரையில் வயிறு பிழைக்க, அனேகம் பேர் தோன்றினரே தவிர, மீனவர்களை, அரசியல் ரீதியாக இணைக்கும் எண்ணமோ, அதற்கான உழைப்போ, யாரிடமும் இருக்கவில்லை. அந்த நிலையே, இன்னும் தொடர்வது, நம் மீனவ சகோதரர்களின் துரதிர்ஷ்டமே! இலங்கையுடனான மீனவர் பிரச்சனைக்கு, சரியான, நிலையாக செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள், இந்திய கடல் எல்கைக்குள் இருக்கிறதே தவிர, இலங்கை உட்பட்ட, வேறு எந்த நாட்டின் கடல் பகுதிகளிலும் இல்லை என்பதே உண்மை.இந்த உண்மையை, அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும், நம் மீனவ சகோதரர்களை வைத்து, அந்த சமூகத்தினருக்கும் அப்பால் சென்று, 'போட்டா போட்டி அரசியல்' செய்வது தான், நம் தலைவர்களுக்கும், அவர்கள் சார்ந்துள்ள அல்லது தலைமையேற்றுள்ள கட்சிகளுக்கும், மிகவும் பிடித்த, 'வீர விளையாட்டு!'
என். சத்தியமூர்த்தி- Courtesy Dinamalar Today Edition
http://i125.photobucket.com/albums/p...ps000f5bb4.jpg
Message given by MGR Devotee from Malaysia Sree Sitharan.
Ayirathil Oruvan restored version is released yesterday in Malaysia. Below is the paper cut of list of theatres.
http://i125.photobucket.com/albums/p...ps4143e42d.jpg
Newspaper image given by Malaysian MGR Devotee Sree Sitharan.
Thanks Roop Sir For uploading Aayirathilr oruvan news paper Ad . Last two days i am trying the newspaper cutting for aayirathil oruvan in singapore daily's but i couldn't findout.
Thanks for Mr.Sreetharan for sharing this Aayirathil oruvan News paper Ad.
This is the Pokkisham for our thread.
:thumbsup::thumbsup::thumbsup::thumbsup::thumbsup: :thumbsup:
one more request roop sir , please mention which date and which newspapers this ad display this is useful for us. because our enemy's group's not accept after some time
http://www.youtube.com/watch?v=41t6DNDIo50
Thalaivar Vicotry details shown this evergreen song.
A detailed article from srimgr.com on the first victory of ADMK under our Thalaivar Leadership.
http://mgrroop.blogspot.in/2013/05/a...t-victory.html
மதுரை மாநகரில் ஆயிரத்தில் ஒருவன் படம் சரியாக ஓடவில்லை என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்தது உண்மை .ஒரே நேரத்தில் மதுரை நகரில் பல அரங்குகளில் திரையிடப்பட்டது தவறாகும் . ஓரிரு அரங்கில் வந்திருந்தால் படம் நன்றாக ஓடியிருக்கும் . ஆயிரத்தில் ஒருவன் மதுரை மாவட்டத்தில் பல வருடங்கள் பல முறை தொடர்ந்து திரையிடப்பட்டு உள்ளது .
மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் மக்கள் திலகத்தின் பல படங்கள் இன்றும் ஓடிகொண்டிருக்கிறது .
தற்போது தாழம்பூ படம் மதுரையில் நடை பெறுகிறது .மதுரை பொறுத்த வரை மக்கள் திலகத்தின் செல்ல நகரம் .மக்கள் திலகம் வாழ்ந்த காலத்திலும் சரி இன்றும் சரி அவருடைய படங்கள் மற்றும் ஒட்டு வங்கி எமாற்றியதே இல்லை .
மதுரை வீரன் -1956 - மதுரையில் வெள்ளிவிழா படம் .
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - 1978 மக்கள் திலகத்தின் கடைசி படம் .
மதுரையில் உலகத்தமிழ் மாநாடு
மதுரைக்கு பல பெருமைகள் சேர்த்தவர் மக்கள் திலகம் .
மதுரை நகரமும் மக்கள் திலகத்திற்கு பல வெற்றிகளை தந்துள்ளது .
16.5.2014 அன்று தேர்தல் முடிவுகள் - அறிவிப்பில் மதுரை நகரை அதிமுக முதல் முறையாக கைப்பற்றியது என்ற
இனிக்கும் செய்தி .....நம்பிக்கையுடன் நாளை நமதே என்று காத்திருப்போம் .
தம்பி ....
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை
தம்பி ....
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைபோல் கந்தை அணிந்தார்
இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைப்போல் கந்தை அணிந்தார்
ஏணியாக தாழந்தவர்க்கு உதவி புரிந்தார்
இன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார்
(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று )-
http://i58.tinypic.com/6jhymb.jpg
நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
ஏற்றுக் கொண்ட பதவிகெல்லாம் பெருமையைத்தந்தார்
தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்
(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று )-
தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்
(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று )-
வீடுகெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே
தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே
வீடுகெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே
தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே
ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார்
தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்
(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று) -
ஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஒரு நாள் இந்த நிலைமைகெல்லாம் மாறுதல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு
ஒரு சம்பவம் என்பது நேற்று -
நேற்று அது சரித்திரம் என்பது இன்று -
இன்று அது சாதனை ஆவது நாளை -
நாளை வரும் சோதனைதான் இடை வேளை
Dear Yukesh Sir,
Nobody is your group's enemy ! Whether some people accept or not...TRUTH IS GOING TO BE ALWAYS A TRUTH ..isnt it ?
Request you not to look at things in a narrow way ! What enmity we have got between us? Did both of us do anything wrong personally to each other ? No is nt it?
Once again, request you to avoid such words..! We have born in this world and we all know that we are going to leave this world one day or other...! why to treat ourselves with so hatred..?
Hope you will consider the request posted on behalf of everybody !
thanks and warm regards
RKS
AYIRATHIL ORUVAN TODAY 6.40pm @ STUDIO 5 - SOLD OUT
http://i501.photobucket.com/albums/e...psea732eae.jpg
http://i58.tinypic.com/2v3swsg.jpg[/IMG]
நமது பெருமைமிகு திரியானது நல்ல சீரான வேகத்தில் நடைபோடுவது மிகுந்த மன மகிழ்ச்சியை அளிக்கிறது... மக்கள்திலகம் புகழ், பெருமையை உலகிற்கு பறை சாற்றும் நமது நல்ல உள்ளங்களின் அற்புத உழைப்பில் மிளிரும் பதிவுகள் அருமையோ அருமை!!!
IMG]http://i61.tinypic.com/j9ng3l.jpg[/IMG]