யுகேஷ் பாபு ,
உங்களுக்கு நன்றி. விரைவில் நீங்கள் காண போகும் 3000 க்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Printable View
Thank you Sirs ESVEE,Rahul,Subramaniam Ramajayam,Ragavendhar,Ravi Kiran Surya,Ragavan,Gopu,S.Vasudevan,RajeshK.V,K.C.Sekar ,Anand,Sarathy.
நண்பர் ரவிகிரன் சூர்யா அவர்கள் வெளியிட்ட உயர்நீதிமன்ற நீதிபதியின் இக்கால திரைப்படம் எப்படி இருக்கவேண்டும் என்ற தீர்ப்பின் பதிவை படித்த உடன் ஏற்பட்ட ஒரு தாக்கம் இந்த கட்டுரை .சமீபத்திய சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் இந்த கட்டுரை வெளியிடப்பட்டு உள்ளது . நிறைய பேர் இதை படித்து இருக்கலாம் . இருந்தாலும் படிக்காதவர்கள் இருந்தால் படித்து இக்கால திரை உலகத்தின் போக்கு பற்றி கட்டுரையாளரின் வருத்தம் உணரப்பட வேண்டும் என்ற அவாவின் வெளிபாடே இந்த பதிவு .
இந்த பதிவு இங்கு ஏற்புடையது அல்ல என்ற எண்ணம் யாருக்கேனும் ஏற்பட்டால் தயங்காமல் தெரிவிக்கவும் .நீக்கி விடவும் தயாராக இருக்கிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன் .இங்கு சொல்லப்பட்டு இருக்கும் திரைப்படங்கள் ஒரு உதாரணங்களே
"பச்சைவிளக்கு' படத்தில் சிவாஜி கணேசன் ரயில் ஓட்டுநராக நடித்திருப்பார்."படகோட்டி'யில் எம்.ஜி.ஆர். மீனவராக நடித்திருப்பார். "பாசமலர்', "பாகப்பிரிவினை', "தங்கப்பதக்கம்', "ரிஷிமூலம்', "ரிக்ஷாக்காரன்', "நல்லநேரம்', "அவர்கள்', "அபூர்வ ராகங்கள்', "நினைத்தாலே இனிக்கும்' என எந்தப் படத்தைப் பார்த்தாலும் கதாநாயகன் யார் என்று ஒரு பிடிமானம் இருக்கும். ஏதோ ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பார்கள். அவர் கல்லூரி மாணவராகவோ, வேலை தேடுபவராகவோ இருப்பதும்கூட கதாபாத்திரத்தின் வேர் எங்கே ஊன்றப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லும்.
சமீபகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ்ச் சினிமாக்களில் ஹீரோக்கள் வெட்டி ஆபீஸராக வந்து கொண்டிருப்பதுதான் வேதனை.
காதல் செய்வதோ, காதலர்களைச் சேர்த்துவைப்பதோ மட்டுமே முழு நேரப்பணியாகக் காட்டப்படுவதுடன் இந்த வேலைவெட்டி இல்லாதவர்களுக்குக் கல்லூரி மாணவிகள், கல்லூரி பேராசிரியைகள் காதலிகளாக அமைந்திருப்பது அடுத்தக் கட்ட வேதனை.
அமீர் இயக்கிய "பருத்திவீரன்' படத்தில் கார்த்தி ரெüடித்தனம் பண்ணிவிட்டு ஜெயிலுக்குப்போவதைப் பெருமையாக நினைப்பவர். கைது செய்து காவல்துறையினர் போட்டோ எடுக்கும்போது கம்பீரமாகப் போஸ் கொடுப்பவர். அவருக்கு பள்ளிமாணவி பிரியாமணி காதலி!
"சுப்பிரமணியபுரம்' படத்தில் கூலிப்படை ஆசாமி ஜெய்க்கும் பள்ளிமாணவிக்கும் காதல்.
"நாடோடிகள்' படத்தில் சசிகுமாரின் நண்பர்கள் பட்டாளம் அனைவருமே எந்த வேலைவெட்டியும் இல்லாமல் சும்மா பொழுதைப் போக்குபவர்கள்தான். காதலர்களைச் சேர்த்துவைப்பதுதான் இவர்களது முழுநேர வேலை. எங்கும் எப்படி! முழுநேர வேலை.
"களவாணி' படத்தில் வீட்டுக்கு அடங்காமல் அலம்பல் பண்ணிக் கொண்டிருக்கும் விமல் காதலிப்பது பள்ளிக்குச் செல்லும் மாணவியை.
"ஆடுகளம்' படத்தில் சேவல் சண்டை தனுஷ் காதலிப்பது கல்லூரி மாணவியை. "நந்தா' படத்தில் லைலா காதலிப்பது தாதா சூர்யாவை.
"பிதாமகன்' படத்தில் லைலா காதலிப்பது லேகிய வியாபாரம், சில்லரைத் திருட்டு எனத் திரியும் சூர்யாவை.
"அவன் இவன்' படத்தில் இன்னும் ஒருபடி மேல் திருடன் பெண்போலீஸ் விரட்டி விரட்டிக் காதலிக்கிறான்.
"படிக்காதவன்' படத்தில் படிக்காத தனுஷை காதலிப்பார் கல்லூரி மாணவி தமன்னா.
"பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் பிளஸ் டூ பாஸ் பண்ண முடியாமல் பிட் அடித்துக் கொண்டிருக்கும் ஆர்யாவை டுடோரியல் கல்லூரி ஆசிரியை காதலிப்பார்.
படிக்காத, வேலைபார்க்காத அல்லது சமூக விரோத செயல் செய்பவர்களை தமது திரையுலகக் கதாநாயகர்கள் காதலித்துக் கொண்டிருப்பது வேதனையான முன்னுதாரணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தெருவோர ரோமியோக்களுக்கு இத்தகைய படங்கள் கல்லூரி மாணவிகளை காதலிக்கும் அசட்டு தைரியத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத அநீதியாக இருக்கிறது. இது போன்ற சினிமாக்களை பார்த்துவிட்டு, தெருவில் வேலைவெட்டியில்லாமல் சுற்றும் நபர்களைப் பள்ளி மாணவிகளும், படித்த பெண்களும் திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையைக் காதலுக்காகத் தியாகம் செய்து கொள்ளத் தொடர்கிறார். அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?
சினிமா என்கிற சக்தி வாய்ந்த மீடியம் இதற்குத்தானா பயன்பட வேண்டும்? அசட்டுத்தனமான இத்தகைய காதல்கள் அந்த நேரத்தில் படம் பார்ப்பவர்களுக்கு ஒருவகை நகைச்சுவை உணர்வைத் தருவதோடு சரி. இத்தகைய முரண்பட்ட இருவர் காதலராகிச் சேர்ந்து வாழ்வது பொருத்தமில்லாத பல்வேறு சமூகச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை இயக்குநர்கள் உணரவேண்டும். திரைப்படக் கதாசிரியர்களுக்கும், இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் சமுதாயக் கடமை கிடையாதா? சினிமா பொழுதுபோக்குதான், உண்மை. ஆனால் பொழுதுபோக்கு என்ற பெயரில் சமுதாயத்தைச் சீரழிக்க முற்படுவதுகூட ஒரு சமூகவிரோதச் செயலல்லவா!
சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான கட்டுரை
Congratulations for your 3000 posts Mr. Gopal sir.
திரு கிருஷ்ணா,
தாங்கள் என்னை ஆச்சர்ய படுத்தவே செய்கிறீர்கள்.தங்கள் இரட்டை வேடம் எனக்கு புரிவதே இல்லை. தாங்கள் ஒரு மிக சிறந்த சிவாஜி ரசிகராக இனம் காட்டியுள்ளீர்கள்.ஆனால் இங்கு வந்து ஒரு சிறப்பான பதிவையும் இட்டதில்லை. ஒரு பாடலையும் ,புண்ணாக்கையும் ஆராய்ந்ததில்லை.மதுர கானங்கள் திரியில் உங்கள் அசல் பதிவுகளை பல முறை நான் வேண்டிய போது ஒரு முயற்சியும் புரியாமல் வீண் சண்டையிட்டீர்கள்.
கம்பர் ஜெயராமன் பதிவில், ஒரு ஊழலுக்கு அப்பாற்பட்ட புனிதர் என்று சொல்ல படும் ஒருவரை கருப்பு பணம் சேர்த்தவர் என்பதை கூட நீக்காமல் போட்டு , அதே போல மிக முரண் படும் பதிவுகளை cut paste நீக்காமல் போட்டவர்.முரண் பட்ட என்னிடம் அனாவசிய மோதல்கள்.
இப்போது எங்கோ சென்று தேக்கு மரம்,புளிய மரம் (wooden facial Expressions? )என்று வீண் கொஞ்சல். அவ்வளவு ஆராய்ச்சிக்கு நேரமிருந்தால்,உங்களுக்கு பிடித்த விஷயங்களை,பிடித்த இடத்தில் பதிக்கலாமே?
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். சொல்லில் தேனிருந்தால்,போதுமென்று நினைத்து பாதை மாறியவர்கள்,காரை விற்று,பல்லவன் பஸ்ஸில் டிக்கெட் வாங்கி பயணித்து மரித்தார்கள்.எந்த வள்ளன்மையும் ,நம்பியவர்களுக்கு துணை நிற்கவில்லை.
மாற்றான் வலி அறிய எங்கள் எழுத்துக்களை படிக்க வேண்டாம். அவை வெறும் புற தோற்றங்களே.
நடிகர்திலகம் என்ற உண்மை தமிழன், உன்னத நடிகர்களின் நடிகன் நமக்கு சொத்துக்களாக விட்டு சென்றிருக்கும் உன்னத படங்களை பாருங்கள் மாண்பிற்குரிய எதிர் அணியினரே!!!அப்போதுதான் எங்கள் வலிமை எதில் உள்ளது என்று புரியும்.
நடிகர்திலகம் என்பது பிம்பமல்ல. அசல் உண்மை. ஆளுமை. இது வீண் பிரசாரங்களாலோ, பொய்மைகளாலோ ,உண்மையற்ற செய்திகளாலோ , வீண் அர்ச்சனைகளாலோ கட்டமைக்க பட்டதல்ல. எக்காலமும் கண்டு,கேட்டு,உண்டு,உயிர்த்து, ஐம்புலனும் கண்டு அடைய வேண்டிய சத்திய உண்மை.
இருக்கும் இடத்தை விட்டு ,இல்லாத இடம் தேடி,எங்கெங்கோ அலைகின்றார் ஞான தங்கமே. அவர் ஏதும் அறியாரடி ஞான தங்கமே!!!!
குற்றவாளிகள் என்ற இனம் தானே தோன்றிய வேற்று கிரக வாசிகளல்ல. குண பிறழ்வு,பிறவி கோளாறுகள் என்ற 10% தவிர்த்தால், நாகரிக நல்ல மனிதர்கள் என்ற நாம் உருவாக்கி வைத்திருக்கும் மதம்,இனம்,சாதி,போலி நீதிகள்,சுரண்டல் அமைப்புகள் ,பெண்ணடிமை சங்கிலிகள்,சமுதாய சுரண்டல்கள்,வறுமை இவைகளினால் உருவாக்க பட்ட அனுதாபத்திற்குரிய இனம்.(நான் முற்றிலும் தூக்கு தண்டனை ஒழிப்புக்கு எதிரானவன் என்ற போதும்,குறைக்க பட வேண்டும் என்று கருதுபவன்)
காவல் தெய்வம் என்ற ஜெயகாந்தனின் படத்தில் ,அவர்களை ரத்தமும் ,சதையும் கொண்ட மனிதர்களாக சித்தரித்தார்கள்.பின்னனணியை சொன்னார்கள். மனிதத்திற்கு அர்த்தம் கற்பித்தார்கள்.
இதற்கு மாறாக பின்னால் வந்த ஒரு தழுவல் படத்தில், வழக்கம் போல ஹீரோ வொர்ஷிப் செய்ய ,ஏதோ குற்றவாளிகள் என்பவர்கள் ஈனர்கள் போல,கோமாளிகள் போல,வேற்று கிரக வாசிகள் போல சித்தரித்து ,சிரிப்பு படமாக்கினார்கள்.நகத்தால் (வெட்ட படாத)பிராண்டி கொள்ளலாம் போல தோன்றும்.இந்த மாதிரி கட்டமைப்பு படங்களில் உருவாக்க படுவது,தனி மனித உறவுகளை,புரிதலை,நேயத்தை சிதைக்கவே செய்யும் .(பிம்பங்கள் போதுமே ஆராதிக்க)
வாழ்த்துக்கள் கோபால்
3000 பதிவுகள் 30000 ஆக உயரட்டும்
ரவிகிரன் சூர்யா,
நாம் தமிழருவி கருத்தை வேறு விதமாக பார்க்க வேண்டும்.
நடிகர்திலகம் எல்லா பாணியிலும்,எல்லா விதமான நடிப்பு பள்ளிகளிலும் கரை கண்டவர். மனோரஞ்சித பூ போன்ற முக அமைப்பு.எல்லா பாத்திரங்களுக்கும் பொருந்தி வந்தது.
ஆனால் அவர் நடிப்பு பாணி எல்லா காலகட்டங்களிலும் ஒரே மாதிரி இருக்காது. பல சோதனை,மாற்றங்கள். சில விஷயங்களை மட்டுமே அவரிடம் எதிர்பார்த்து செல்லும் திறந்த மனதில்லாத சில தமிழர்களுக்கு ஏமாற்றம் வர வாய்ப்புள்ளது. அவர்கள் ரசனை,ஒரே மாதிரி எதிர்பார்ப்பினால் சுருங்கியே இருக்கும். அவர்களால் திறந்த மனதுடன் சோதனை முயற்சிகளை அணுக முடியாது. இவர்களுக்கு formula படங்கள்,ஒரே மாதிரி (ஐந்தே முறையில் கைகால் அசைவுகள்,ஒரே மாதிரி சிரிப்பு அது வில்லனா,கதாநாயகியா எப்படியாக இருப்பினும்)நடிப்பு முறை.இவர்கள் எதிர்பார்ப்பு கூடி விட்டால் போதும்.சுருங்கிய மூளை,மனம்,கொண்ட அடிப்படை மனிதர்கள்.
எனக்கே சில படங்களில் அவரது பாணி ஒவ்வாது. ஆனால் சிலர் அதை ரொம்ப சிலாகிப்பார்கள்.(உ.ம்.ராமன் எத்தனை ராமனடி,எங்க ஊர் ராஜா)ஆனால் அது நம் ரசனை குறை பாடு ,புரிதல் குறைபாடு.நடிகனின் குறைபாடல்ல. என்றேனும் நமக்கு தெளியலாம்.
தமிழருவி சொன்னதில் இரு கருத்துக்களில் எனக்கு உடன்பாடுண்டு.
1)சிவாஜி உலகத்திலேயே சிறந்த நடிகர்.
2)எங்க வீட்டு பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர் கொடுத்த energy level ,கூடுதல் உற்சாகம் ,யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாதது. எனக்கே இப்படியென்றால்,அவருடைய ரசிகர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? நான் அதை தெலுங்கில்,ஹிந்தியில் பார்த்துள்ளேன். என்.டி.ஆர்,திலிப் இருவருமே ,10% கூட எம்.ஜி.ஆர் அருகே நெருங்க முடியாது.
எங்க வீட்டு பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர் கொடுத்த energy level ,கூடுதல் உற்சாகம் ,யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாதது. எனக்கே இப்படியென்றால்,அவருடைய ரசிகர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? நான் அதை தெலுங்கில்,ஹிந்தியில் பார்த்துள்ளேன். என்.டி.ஆர்,திலிப் இருவருமே ,10% கூட எம்.ஜி.ஆர் அருகே நெருங்க முடியாது.
THANKS GOPAL SIR .
சக பதிவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். திரு கோபால் அவர்கள் என் பெயரை குறிப்பிட்டு சொல்லி பதிவு இட்டு இருந்ததால் இந்த பதிவு இங்கே போட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. மன்னிக்க வேண்டுகிறேன் .
திரு கோபால் அவர்களுக்கு
என்னை பொறுத்தவரை நடிகர் திலகம் ஆதர்சம். (இது ஏற்கனவே நடிகர் திலகத்தின் இன்னும் ஒரு சிறந்த ரசிகர் திரு பார்த்தசாரதி அவர்கள் கூறிய ஒன்று). ஆனால் அதற்காக மற்ற நடிகர்களையோ அவர்களுடைய திறமையையோ மதிக்க கூடாது என்று சொல்லும் வன்முறையை எதிர்ப்பவன் . சிவாஜி ரசிகர் ஆக இருப்பவர் மற்ற நடிகர்களின் சிறந்த குணாதிசயம்களை பாராட்ட கூடாது என்று நீங்கள் எப்படி எதிர்பார்கிறீர்கள் என்று புரியவில்லை.நடிகர் திலகம் அவர்களே தன்னை சந்திக்கும் ரசிகர்கள் எல்லாரிடத்திலும் சொல்லும் வார்த்தைகளே இவை தான். 'என் படத்தை மட்டும் பார்க்காதே .எல்லோரின் படங்களையும் பார் .அப்போது தான் என்னிடத்தில் உள்ள திறமை என்ன மற்றவர்களிடத்தில் உள்ள திறமை என்ன என்று உனக்கு தெரியும்" .
உங்கள் உடைய பிரச்சனை இது தான் . வார்த்தைகளை அள்ளி கொட்டி விடுகிறீர்கள். 'நெல்லை கொட்டினாலும் அள்ளலாம் சொல்லை கொட்டினால்' என்ற முது மொழியை மறந்து விடுகிறீர்கள். இங்கு இரட்டை வேடம் போடும் திறமை எல்லாம் கிடையாது .நான் வெறும் அசடு. உங்கள் வார்த்தையில் சொல்வதனால் மூன்றாம் தர குமாஸ்தா. ஆனால் நான் மூன்றாம் தர குமாஸ்தா வேலை பார்ப்பவன் அல்ல.இன்னும் ஒன்று குமாஸ்தாகள் எல்லாம் மூன்றாம் தரமாக வேலை பார்பவர்கள் அல்ல.
1970 களில் இருந்து பெருந்தலைவர் அவர்களின் ஸ்தாபன காங்கிரஸ் (வெறும் 10 வயது தான்) இல் சிவாஜி மன்றம் மூலமாக மாணவர் அமைப்பில் பணி ஆற்றிய பெருமை உடையவன். பின்னாட்களில் பெரியவர் திரு நெல்லை ஜெபமணி அவர்களின் வெற்றிக்காக சாத்தான் குளம் தொகுதியில் பிரசாரம் செய்தவன் . அந்த தேர்தலில் மிக பெரிய அரசியல்வாதி, தினத்தந்தி என்ற மிக பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்ட முன்னாள் மந்திரி திரு சி பா ஆதித்தனார் (சுயேச்சை சின்னத்தில் போட்டி இட்டவர்) அவர்கள் வெற்றி உறுதி என்று மூலை முடுக்கு எல்லாம் பிரசாரம் நடந்து கொண்டு இருந்த போது ஒரு 20 அல்லது 30 விலைக்கு போகாத, வாங்க முடியாத நடிகர் திலகத்தின் அரசியல் மாற்றத்தை ஏற்று கொள்ள முடியாத சில தன்னலம் அற்ற காமராஜர் தொண்டர்களால் (என்னையும் சேர்த்து ) தான் அடைந்த வெற்றி அது . 37 ஆண்டுகள் கழித்து இன்னும் எனக்குள் அது பசுமை மாறாத நினைவுகளாகதான் உள்ளது
எனக்கு திரு எம் ஜி யார் அவர்களின் உடல் அமைப்பு பிடிக்கும் என்றால் அதை சொல்வதில் எனக்கு என்ன தயக்கம் .தன உடலை பேணி காப்பதில் அக்கறை உள்ளவர் . இறுதி வரை அதாவது திரை உலகில் பணி புரிந்த வரை உடலின் எந்த பாகத்திலும் தேவை அற்ற கொழுப்பு என்ற சமாச்சாரத்தை அண்டவிடாமல் தவிர்த்தவர். முகத்தில் முதுமை வந்த போதும் (60 வயதுகளில் எல்லோருக்கும் வரும் ஒன்று) கழுத்துக்கு கீழ் தன உடல்கட்டை பேணி காத்தவர். சில படங்களில் அவர் உடல் தேக்கு மரம் போல் இருந்தது உண்மை தான் என்னை பொறுத்த வரை .வரலாறு சில சம்பவங்களை நமக்கு சுட்டி காட்டும் .அதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன நண்பர் கோபால் அவர்களே .
1967 முதல் 1976 வரை நடிகர் திலகமும் தன உடல் கட்டை பேணி காத்தவர் தான். அதனால் தான் அவர் உடைய ராஜாவையும்,சொர்கத்தையும் ,நீதியையும்,கலாட்ட கல்யாணம்,சுமதி என் சுந்தரி,எங்க மாமா,தங்க சுரங்கம்,அஞ்சல் பெட்டி 520 (இவை உதாரணங்களே ) இப்படி எத்தனையோ படங்களை ரசித்தவன்.
எனக்கு யாரையும் கொஞ்ச வேண்டும்,கெஞ்ச வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. திரு கலை வேந்தர் அவர்கள் ஒரு பாடலை குறிப்பிட்டு அந்த பாடலின் சாரம்சத்தை ஒரு சங்கீத ரசிகர் என்ற முறையில் கேட்கும் போது .கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு பாடலை விளக்க எந்த பேதமும் பார்க்காமல் திரு கலை வேந்தர் அவர்கள் அழைக்கும் போது .திரு முரளி அவர்கள் மூலமாக தெரிய வரும் போது அதை விளக்குவதற்கு எனக்கு கடமையும் உண்டு உரிமையும் உண்டு.சங்கீத ராகங்களை பற்றி முழுதும் அறிந்த சாம்ராட் நீங்கள் ஒரு சக பதிவருக்கு ராகங்களின் பெருமையை இன்னொரு பதிவர் சொல்லும் போது சந்தோஷ பட வேண்டுமே தவிர அதில் பேதம் ஏன் கொள்ள வேண்டும். எனக்கும் உங்கள் பதிவு புரியவில்லை.
அந்த பதிவிலே நான் நடிகர்திலகம் அவர்களை தாழ்த்தி எழுதி இருந்தால் நீங்கள் வருத்தப்படலாம் கேள்வி கேட்கலாம். இந்த நேரத்தில் திரு முரளி அவர்களின் ஒரு பதிவில் சொல்லி இருந்த வார்த்தை தான் நினைவிற்கு வருகிறது.காழ்ப்பு உணர்ச்சி தேவை இல்லையே.
இன்னொன்றும் சொல்கிறேன் அடுத்தவர் உடைய (கம்பர் ஜெயராம்) கட்டுரையை எடுத்து உங்கள் பாணியில் சொல்வது போல் கட் அண்ட் பேஸ்ட் செய்யும் போது அதில் மாற்றத்தை விரும்பாதவன்.அதில் சில தவறான தகவல்கள் கட்டுரையாளரால் அல்லது பேட்டியாளரால் சொல்லப்பட்டு இருந்தால் அதை குறிப்பிட்டு இந்த தகவல் தவறு என்று சொல்வதற்கு உங்களுக்கு உரிமை உண்டு.ஆனால் அந்த பதிவு போட கூடாது என்று சொல்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.நீங்கள் ஒரு பதிவர். இரண்டாவது அந்த பதிவு நடிகர் திலகத்தின் திரியில் இடப்பட்ட பதிவு அல்ல. மதுர கானம் என்பது ஒரு பொது திரி. அந்த திரியில் நடிகர் திலகத்தின் மிக சிறந்த ரசிகர் திரு வாசு அவர்களும்,திரு கார்த்திக் அவர்களும் திரு எம்ஜீயார் அவர்களின் பாடலை பதிவு இடவில்லையா ? .மதுர கானம் பிரச்சனை இந்த திரியில் அலசப்பட கூடிய பிரச்சனை அல்ல.அதை நாம் அங்கு பேசி கொள்ளலாம்
இறுதியாக சொல்கிறேன் ஆனால் உறுதியாக சொல்கிறேன்.யாரிடத்திலும் உரசலை ஆரம்பித்தவன் நான் அல்ல.கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் திரியில் இருப்பவன்.வேண்டுமானால் பரபரப்பாக பதிவுகள் போடாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக பதிவுகளை போட்டவன் என்று சொல்லலாம் யாரிடத்திலும் பகைமை பாராட்டியது இல்லை. அன்பு காட்டி நண்பர் ஆகத்தான் பழகி உள்ளேன். கிட்ட தட்ட 800 பக்கங்கள் உள்ள (இரண்டு பாகத்திலும் சேர்த்து ) மதுரகானத்தை எடுத்து பாருங்கள் . என் உடைய பதிவு யாரையாவது காய படுத்துகிறது என்று என் உள் உணர்வு சொன்னால் உடனே அதை பதிவிலோ அல்லது பர்சனல் மெசேஜ் மூலமாகவோ மன்னிப்பு கேட்க தயங்காதவன் .
நீங்கள் எனது பகைவர் அல்ல. நானும் பாதை மாறவில்லை.
நான் சினிமாவை நேசிப்பவன்.நடிகர் திலகத்தின் நல்ல ரசிகர். மற்ற நடிகர்களையும் அவர்களடித்தல் உள்ள நல்ல பல திறமைகளுக்காக நேசிப்பவன். 70 களில் வந்த மெல்லிசை மன்னர்,சங்கர் கணேஷ்,விஜய பாஸ்கர்,வீ குமார்,திரை இசை திலகம்,ஷ்யாம் போன்ற இசை அமைப்பாளர்களின் நல்ல பல பாடல்களை விரும்புவன்.அதே நேரத்தில் இளையராஜா,ரெஹ்மான் போன்ற திறமையாளர்களின் வருகையால் ஏற்பட்ட மாற்றத்தை வரவேற்றவன்,வரவேற்பவன்.
ஏற்கனவே உங்களிடம் சொல்லி இருக்கிறேன் என்று நினைவு பணதிற்க்காகவோ பொருளுக்காகவோ பதிவுகள் போடுபவன் நான் அல்ல .
ஒரு மலரும் நினைவுகளுக்காக தான் இங்கு பதிவுகள் போடுகிறேன். அது பிடிக்கவில்லை என்றால் விலகி கொண்டு திரியின் ஒரு பார்வையாளராக இருந்து விட்டு போகிறேன்.
பதிவு நீண்டு கொண்டே போகிறது .முடித்து கொள்கிறேன்
இது தன்னிலை விளக்கம் மட்டுமே .யாரையும் காயபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட ஒன்று அல்ல .
Three in one action! thy name is Sivaji Ganesan!!
நடிகர் திலகம் தான் ஏற்கும் பாத்திரத்தோடு ஒன்றி நிற்பவர் என்பது தெரிந்ததுதான். ஆனாலும் அவரிடம் நான் பிரம்மிக்கும் இரண்டு அம்சங்கள்: இந்த ராஜ உடை அணிந்ததும் அவர் மேனியில் புலப்படும் முறுக்கு, அவர் வதனத்தில் குடிகொள்ளும் ராஜகளை , அவர் நடையில் தென்படும் மிடுக்கு..கண்களில் தெரியும் காந்தப்புலம், பேச்சில் வெளிப்படும் கம்பீரம் .....நடிப்பின் இந்திரஜித்(தன்) அவரே! குதிரையை அவர் கையாளும் விதம் மற்ற கலைஞர்களிடமிருந்து மிகமிக வேறுபட்டு ஒரு தேர்ந்த குதிரைவீரனின் அம்சங்களை அவர் வெளிப்படுத்தும் லாவகமே தனி முத்திரைதான்! மன்னவன் வந்தானடி(1975) திரைப்படத்தில் இப்பாடலில் இவ்விரு நுணுக்கங்களையும் நடிகமேதை எவ்வளவு நயத்துடன் கையாண்டிருக்கிறார்!! (வலது கையால் குதிரையை கட்டுப்படுத்திக்கொண்டே இடது கையால் கதாநாயகியை கைப்பற்றிக்கொண்டு முகத்தில் ராஜபாட்டையில் பாடலுக்கு அவர் தந்திருக்கும் உதட்டசைவுகள் காலத்தை வென்று நிற்கும் நடிப்புப்பாடமே!)
https://www.youtube.com/watch?v=vY3_cdfF-Ms
Garuda Sowkyama (1978) : யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே !
கருடா சௌக்கியமா திரைப்படம் நடிகர் திலகத்தின் மிகமிக வித்யாசமான நடிப்புப் பரிமாணத்தை வெளிக்கொணர்ந்தது. ஒரு சாதாரண சாமான்யன் நிழலுலக சாம்ராஜய சக்கரவர்த்தியாக உருமாற்றம் காணும் God Father mould திரைக்கதை. கோட்டுசூட்டு போட்டு நடிகர்திலகத்தின் ஹாலிவுட் சகலை சீமான் மார்லன் பிராண்டோ உச்ச பட்ஜெட்டில் உருட்டிமிரட்டியதை மிக எளிதாக ஒரு ஜெமினிஜிப்பாவில் husky voice modulationல் நாயகனுக்கு முன்னோடியாக புரட்டிப்போட்டிருப்பார் நமது கோலிவுட் கோமான்! சாமானியனாகவும் நாயகசீமானாகவும் அவர் காட்டியிருக்கும் இன்னொரு குறளிவித்தை!
https://www.youtube.com/watch?v=-FWGP3ubDus
https://www.youtube.com/watch?v=eZyzQ4xq3JQ
நண்பர்களே
யூ டியுப் - இல் கிடைத்த இந்த தெலுங்கு மொழி மாற்ற படம் பற்றி மேலான தகவல்கள் தர வேண்டுகிறேன்.
நடிகர் திலகம், கிருஷ்ணா நடிப்பில் "மிஸ்டர் மகேந்திரா" பட லிங்க் இதோ:
https://www.youtube.com/watch?v=6ftl1v1T4PA
திருச்சியில் சிவாஜி மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற சிவாஜி பிறந்தநாள் விழாவில் 10 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை
வழங்கபட்டது. இதில் வியட்நாம் வீடு சுந்தரம், முதல் மரியாதை ஒளிப்பதிவாளர் திரு.கண்ணன், திரு.மருதுமோகன், திரு.இளவரசு கலந்து கொண்டனர்.
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...ca643ba6f79438
திருச்சியில் சிவாஜி மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற சிவாஜி பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினர் உரையாற்றிய படங்கள்
https://scontent-a-kul.xx.fbcdn.net/...a0&oe=54B58976
திருச்சியில் சிவாஜி மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற சிவாஜி பிறந்தநாள் விழாவில் வியட்நாம் வீடு சுநதரம் அவர்கள் சிறப்புரையாற்றிய போது
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...58b5943c85116b
முத்திரை பதித்த பதிவுகளை இந்த திரியின் மூலம் பதிவு செய்து எங்கள் மனங்களை குளிரச்செய்து கொண்டிருக்கும் திரு. கோபால் அவர்களே
தங்களது மூன்று கோடி பதிவுகளை காண விரும்பும் உங்கள் அன்பு தம்பி
சிவாஜி பக்தன் ராமச்சந்திரன், திருச்சி
கோபால் சார்
நான் தமிழருவி அவர்கள் கூறிய ஒரு சில கருத்தைதான் ஒத்துக்கொள்ளவில்லை.
மற்றபடி எங்க வீட்டு பிள்ளை பாடல் காட்சி பற்றி இரு வேறு கருத்தில்லை. இருந்தாலும், நடிகர் திலகம் நடித்திருந்தால் அந்த காட்சி அதே மாதிரி அமைகப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே ! காரணம் ஒவ்வொருவரும் அவர்களது பாணி பிராண்டிங் உண்டு. அதுபோல தான் காட்சிகள் அமைக்கப்படும்.
நான் முன்பு கூறியது போல கட்டபொம்மன் படத்தில் திரு mgr நடித்திருந்தால் சண்டைகாட்சிகள் அதிகமும் வசன காட்சிகள் சிறிது குறித்தும் அமைக்கப்பட்டிருக்கும். நடிகர் திலகம் என்று வரும்போது வரலாற்றில் உள்ளது போல காட்சிகள் அமைந்துள்ளது. போர்கள காட்சிகள் கூட போர்கள காட்சிபோல தான் இருக்கும்...கட்டபொம்மன் தனியே ஒரு 50 - 60 பேரை வாள்கொண்டு வெட்டி சாய்க்கவில்லை...என்று கூற வருகிறேன்.
ஒவோருவருடைய பாணி என்று ஒன்று உண்டு என்பதை மறந்து தமிழருவி பேசியது ஏற்புடையது அல்ல !
மேலும் வாசகர் கேட்ட கேள்வி...ஒன்று ,,,,அதற்க்கு தமிழருவி கொடுத்த பதில் தேவையில்லாத ஒன்று !
இன்று உலக கைகழுவும் தினம்
ஊட்டி வளர்த்த உறவுகள்....வளர்த்த கடா மார்பில் பாயும்போது....வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சப்ப்படும்போது.....நம்பிக்கை துரோகிகளை கைகழுவுவதுதானே நியாயம்! நிலை தடுமாறி மனம் மரத்துப்போன பாசவலையில் சுமைதாங்கியான நாயகனின் மனநிலை..... பார்ப்பவர் மனம் மருகிடச்செய்யும் மகுடம் சூட்டிய நடிப்பின் வீரியம் நம் மனதில் பசுமரத்தாணியே! NT at one of his best moments!!
https://www.youtube.com/watch?v=tTOYpVX7nBk
NT’s Bird connection! : Cock (a racko) for early morning wake-up alarm service and Pigeon/Dove-tailed for (love) Courier service!
We normally tuck-in shirts into pants. but NT introduced the style of tucking in shirt into a lungi! NT looks smart in this attire too!
And sparrow (Chittukkuruvi) for building (nest) construction!
https://www.youtube.com/watch?v=u3Ur3mG0Z-E
https://www.youtube.com/watch?v=_fIUqvQ8TV8
https://www.youtube.com/watch?v=kDLjdJ2we5c
https://www.youtube.com/watch?v=wgelNLb5YEc
கிருஷ்ணா,
நான் கேட்டது ஒரே கேள்வி. தங்களுக்கு பிடித்த,ஆதர்ஷ நடிகரை பற்றி ,ஒரு உருப்படியான பதிவு கூட இடவில்லையே ?ஏன்?எல்லைகோடு,டப்பிங் படங்கள் என்றெல்லாம் புகுந்து புறப்படும் தங்களுக்கு இதற்கு மட்டும் நேரமில்லையா?மற்றவர்களின் கவர்ந்த அம்சங்களையும் குறிப்பிடலாம். ஆனால் இங்கு போட்டது போக மீதி நேரமே அதை செய்யலாம்.மற்றபடி,நெல்லுக்கு இறைத்தது போக,நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கு பொசிவதில் ,எனக்கொன்றும் ஆட்சேபனையில்லை.நடிகர்திலகத்திற்காக பதிவு இடா விட்டாலும் ,அவரை பற்றி சரியான புரிதல் இல்லாத பதிவுகளை cut paste பண்ணுவதை தவிர்க்கலாமே?மதுர கானம் திரியை எஸ்.வீ எப்படி உபயோக படுத்துகிறார் ?வாசுவும் ,நீங்களும் மட்டுமே பெருந்தன்மை காட்டி என்ன லாபம்?
உங்களுக்கு எதிர்ப்பு என் மூலம் மட்டும் வரவில்லை.நாசூக்காக பலர் சொன்னது மண்டையில் ஏறாததால் நான் சொல்ல வேண்டி வந்தது.கார்த்திக் ஆரம்பித்து வைத்தார். பலர் சின்ன கண்ணன் வரை நாசூக்காக சொல்லியும் உமக்கு ஏறாததால் ,நான் அந்த திருப்பணியை ஏற்றேன்.
நான் இந்தியாவில் பதித்தது ஒரே ஒட்டு.அது நெல்லை ஜெபமணிக்கு ,மயிலையில் இட்ட ஒட்டு.
எனக்கு வாழ்க்கையில் விரோதிகள் கிடையாது.நீங்கள் எப்போதும் என் உயிர் நண்பரே.நான் பசப்ப மாட்டேன் என்பது உங்களுக்கே தெரியும்.அப்படி இருந்தால் நான் சொல்லி விடுவேன்.
கலை வேந்தன்,
தங்கள் பதிவில் முதிர்ச்சி கூடி வருகிறது. இது தொடருமேயானால் திரிகளுக்குள் நல்லுறவு ஏற்படும். தங்களின் தரக்குறைவான பதிவுகளே,நாங்கள் களத்தில் இறங்க வழி வகுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
மற்றபடி, என்னுடைய பதிவுகள் பொய் சொல்லாது.பசப்பாது.மனசாட்சியை அடகு வைத்து சக தமிழனை இழிவு படுத்தாது. சத்தியம் என்று நான் நம்புபவற்றை என்றுமே காப்பேன்.
நல்லதை கொள்வது எவ்வளவு முக்கியமோ ,அதை விட முக்கியம் அல்லாததை புறம் தள்ளுதல்.
Today, Kattabomman's ninaivu Naal. The credit goes to our NT for bringing this legend in film and now everyone will think NT as Kattabomman due to powerful
portrayal by the acting GOD.
Regards
ராமன் எத்தனை ராமனடி - By Saradha Madam
1969 இறுதியில் தீபாவளியன்று வந்த பிரமாண்ட படமான 'சிவந்தமண்'ணை அடுத்து 1970 பொங்கலன்று வெளியான 'எங்க மாமா' படம் பத்து வாரங்களைத் தொட்டு சுமார் வெற்றி யடைந்தது. நாடகமாக வெற்றியடைந்த 'வியட்நாம் வீடு' படம் படமாக்கப் பட்டபோதும் பல இடங்களில் 100 நாட்களைக்கடந்து ஓடி, 70-ம் ஆண்டில் நடிகர்திலகத்துக்கு முதல் வெற்றிப்படம் என்ற பெருமையைப் பெற்றது. நடிகர்திலகம், A.P.நாகராஜன், K.V.மகாதேவன் இணைந்த 'விளையாட்டுப்பிள்ளை' ரசிகர்களுக்கு நிறைவைத்தரவில்லை. முதல் முறையாக நடிகர் திலகமும் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரும் இணைந்து உருவாக்கிய முதல் படமான (இறுதிப்படமும் அதுதான்), ரசிகர்களாலும் பொதுமக்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'எதிரொலி' ஒரு வெற்றிப்படத்துக்குரிய எல்லா அம்சங்களும் நிறைந்திருந்தும் ஏன் மக்கள் மத்தியில் அவ்வளவாகச்சென்றடையவில்லை என்பது இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. இந்நேரத்தில் ரசிகர்களின் ஆவலைப்பூர்த்தி செய்யும் வண்ணம், நடிகர்திலகம் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான பாத்திரப் படைப்போடு வந்த படம்தான் 'ராமன் எத்தனை ராமனடி'.
முற்பாதியில் கள்ளம் கபடமற்ற, உருவத்தில் இளைஞனாகவும், உள்ளத்தில் குழந்தையாகவும், தன் வயதுக்குப்பொருத்தமில்லாத பள்ளிச்சிறுவர்களுடன் சுற்றித்திரியும் சாப்பாட்டு ராமனாக வும், பிற்பகுதியில் உலகமே மெச்சும் திரைப்பட நடிகராவும் இருவேறு பரிமாணங்களுடன் அற்புதமாகச்செய்திருப்பார். கிராமத்து அப்பாவி இளைஞன் எப்படி சென்னைக்குப்போய் பெரிய நடிகராகிறார் என்பதை ஒப்புக்கொள்ளும்படியான காரண காரியங்களுடன் சொல்லியிருப்பார்கள் கதாசிரியர் பாலமுருகனும், இயக்குனர் மாதவனும்.
பூங்குடி கிராமத்தில் உலகமே அறியாமல், அந்த கிராமத்தின் எல்லைகள் மட்டுமே உலகம் என்று சுற்றிக்கொண்டிருக்கும் ராமன். தன் ஆயாவுக்கு கோயிலில் இருந்து சிதறு தேங்காய் பொறுக்கிக்கொடுப்பதும், ஆயா சுட்டுத்தரும் இட்லிகளை மூக்குப்பிடிக்க வெட்டுவதும், மற்ற நேரங்களில் பள்ளிக்கூட சிறுவர்கள் சிலருடன் சுற்றித்திரிவதும்தான் தன்னுடைய வேலை, அதைத்தாண்டி உலகத்தில் வேறெந்த விஷயமும் இல்லையென்ற ரீதியில் வாழ்ந்து வரும் இளைஞன். அவனுக்கும் ஒரு வீக்னஸ். எதையாவது பார்த்து அதிர்ச்சியடைந்தால் காக்கா வலிப்பு வந்து அவஸ்தைப்படுவான். அந்த கிராமத்தில் ஒரு மைனர். தனது பணக்கார திமிரில் கிராமத்து மக்கள் அனைவரையும் கிட்டத்தட்ட தனது அடிமையாக நடத்துபவன். அவனது தங்கை தேவகி நகரத்தில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு காரில் கிராமத்துக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது, குளக்கரையில் காக்காவலிப்பு வந்து துடித்துக்கொண்டிருக்கும் ராமனை, தன் சாவிக்கொத்தைக்கொடுத்துக் காப்பாற்றுகிறாள். படித்துறையில் அவள் தலை யிலிருந்து விழும் மல்லிகைப்பூவை ஏதோ புனிதப்பொருள்போல எடுத்து அணைத்துக் கொள்ளும் அவன், அந்த சம்பவத்தை தன் நண்பர்களான சில்லுண்டிகளிடம் சொல்லும்போது, அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். மறுநாள் அவர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கும்போது, தோழிகளுடன் அந்தப்பக்கமாக வரும் அவள் அவனைப்பார்த்து சிரித்து விட்டுப்போக, அந்த சந்தோஷத்தில் சிறுவர்களுடன் ஆடிப்பாடுகிறான். இன்னொருநாள் இரவில் வீட்டில் ஆயா இல்லாத நேரம், மழைக்காக அவன் வீட்டில் ஒதுங்கும் தேவகி ராமனிடம் கூழ் வாங்கி சாப்பிட்டுப்போகிறாள். இதையெல்லாம் சிறுவர்களிடம் அவன் சொன்னதும், அவர்கள் ஒட்டுமொத்தமாக, 'டேய் சாப்பாட்டு ராமா. தேவகியம்மா உன்னைக் காதலிக்கிறாங்கடா. நீயும் உன் காதலை அவங்க கிட்டே சொல்லிடு. சம்மதிச்சாங்கன்னா, வர்ர ஞாயத்துக்கிழமைதான் எங்களுக்கு ஸ்கூல் லீவு. அன்னைக்கு கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொல்லிடு' என்று அப்பாவித்தனமாக உசுப்பேத்தி விட, அதை நம்பிய அவனும் கொஞ்சமும் யோசனையில்லாமல் நள்ளிரவில் தூங்கிக்கொண்டு இருக்கும் தேவகி வீட்டு மாடி ஜன்னல் வழியாக உள்ளே குதித்து தன் காதலைச்சொல்ல, அவள் அதிர்ச்சியடைகிறாள். இந்த ரெண்டுங்கேட்டானுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்று எண்ணும் அவள், தனக்காக எதையும் செய்வதாகச்சொல்லும் அவனிடம் 'எங்கே எனக்காக இந்த மாடியிலிருந்து குதி' என்று சொல்ல, அவனும் எந்த யோசனையுமின்றி குதித்து விட அவள் அதிர்ச்சியடைகிறாள். இந்த களேபரத்தில் விழித்துக் கொள்ளும் மைனர், கால் உடைந்து கிடக்கும் ராமனை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறான். ஆஸ்பத்திரியில் ராமனைப் பார்க்க வரும் தேவகியை ஆயா திட்டி அனுப்புகிறாள். ஆஸ்பத்திரியில் குண்மாகி வீட்டுக்குத்திரும்பும் ராமனை, மீண்டும் அரைடிக்கட்டுகள் சந்தித்து, தேவகிக்கு வேறிடத்தில் கல்யாண ஏற்பாடுகள் நடப்பதாகவும், அவன் நேராக மைனரிடம் போய் பெண் கேட்கும்படியும் ராமனைத் தூண்டிவிட, மைனரின் பங்களாவுக்குப்போகும் ராமன் பெரிய பணக்காரர்கள் மத்தியில் பேசிக்கொண்டு இருக்கும் மைனரிடம் விஷயத்தைச்சொல்ல, அனைவரும் சேர்ந்து ராமனை அடித்து துவைக்கிறார்கள். மைனர் சவுக்கால் விளாசுகிறான். தன் தங்கையை கல்யாணம் செய்ய பெரிய பெரிய பணக்காரர்களெல்லாம் போட்டிபோடுகிறார்கள் என்று சொல்லும் மைனரிடம், தானும் பெரிய லட்சாதிபதியாக வந்து தேவகியை பெண் கேட்கப்போவதாக சவால் விடுகிறான். கடைசியாக மைனர் எட்டி உதைக்க, வாசலில் போய் விழும் ராமனுக்கு மீண்டும் காக்காவலிப்பு வர, காம்பவுண்டின் இரும்பு கேட்டை எட்டிப்பிடிக்கும் அவனது காக்காவலிப்பு நிற்கிறது.
'என்ன ஆயா, பணமாம் பெரிய பணம். நானும் பணக்காரனா வந்து அந்த மைனர்கிட்டே பொண்ணு கேட்கிறேனா இல்லையா பாரு' கொடியில் கிடக்கும் துணிகளை சுருட்டி பைக்குள் வைத்துக்கொண்டே பேசும் ராமனிடம் என்ன சொல்வதென்று புரியாமல் ஆயா விழித்துக் கொண்டு நிற்க, அந்நேரம் அங்கு வரும் தேவகி, ராமன் பணக்காரணாக திரும்பி வரும் வரை அவனுக்காகக் காத்திருப்பதாகச் சொல்ல, ராமன் சென்னைக்கு ரயிலேறுகிறான். அங்கு கைவண்டி இழுத்து, ஒவ்வொரு பைசாவாகச்சேர்த்து வைக்கும் ராமனை ஒருநாள் இரவு சந்திக்கும் அவனது சிறுவர்பட்டாளத்தில் ஒருவனான மூக்குறுஞ்சி, தான் இப்போது சினிமாவில் நடிப்பதாகவும், ராமனையும் சினிமாவில் சேர்த்து விடுவதாகவும் சொல்லி ஸ்டுடியோவுக்கு அழைத்துப்போக, அங்குள்ள இயக்குனருக்கு ராமனின் அப்பாவித்தனம் பிடித்துப்போக, சினிமாவில் நடிக்க வைக்கிறார்.
இதனிடையே பூங்குடி கிராமத்தில் ஒரு வீட்டில், விருந்தினராகத்தங்கியிருக்கும் பட்டணத்து படித்த இளைஞனொருவன், கோயிலில் தவறுதலாக தன் தங்கையின் மீது இடித்துவிட்டதை யறிந்த மைனர், அந்த இளைஞன் தங்கியிருக்கும் வீட்டுக்காரரை அழைத்து, அவ்விளைஞனை ஊரைவிட்டே அனுப்பவேண்டும் என்று எச்சரிக்க, இதையறிந்த அவ்விளைஞன் கிராமத்தில் தனக்கு நேர்ந்த அவமானத்துக்கு சரியான பதில் கொடுப்பேன் என்று புறப்பட்டுப்போகிறான். ஆனால் மைனரும் இளைஞனும் நேரடியாக சந்திக்கவேயில்லை
திரைப்பட நடிகரான ராமு, கோடீஸ்வரனாக கிராமத்துக்கு வர, அது யாரென்று அறியாத மைனர் பெரிய வரவேற்பளிக்கிறார். தன்னை யாரென்று அடையாளம் காட்டும் ராமன், தன்னை முன்னர் அடித்தபோது பக்கத்திலிருந்த பணக்காரர்கள் மத்தியில் மைனரை அடிக்க சாட்டையை
எடுக்கிறான், அடிக்கவில்லை. பெட்டி நிறைய பணத்தை மைனர் மீது கொட்டி, தேவகியைத் திருமணம் செய்து தரும்படி கேட்க, இப்போது தானே விரும்பினாலும் தன் தங்கையை திருமணம் செய்து தர முடியாதென்றும், அவள் ஏற்கெனவே திருமணமாகி கணவன் வீட்டுக்குப்போய் விட்டாளென்றும் சொல்ல அதிர்ச்சியில் ராமு நொறுங்கிப்போகிறான்.
ஏமாற்றத்துடன் சென்னை திரும்பும் ராமன், ஒருநாள் காரில் போகும் நேரம், ரோட்டோரத்தில் தேவகியைக் காண, ராமுவைப்பார்த்து அவள் ஓட, விரட்டிச்சென்று பார்க்கும் ராமுவுக்கு அதிர்ச்சி. அவள் கணவனைப்பிரிந்து ஒரு குடிசையில் கைக்குழந்தையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவள் வாழ்க்கையில் ராமுவுக்கு ஏற்பட்டதைவிட பலத்த அடியும் ஏமாற்றமும். அவளது கதை ஃப்ளாஷ்பேக்கில் விரிகிறது. அவள்விட்டு வந்த கணவன் வேறு யாருமல்ல, கிராமத்தில் மைனரால் அவமானப்படுத்தப்பட்ட இளைஞன்தான். (ஆனால் மைனரும் அவ்விளைஞனும் ஏற்கெனவே சந்தித்திருக்கவில்லை).தன் குடிகார நண்பர்கள் மத்தியில் கணவன் அவளைப்பாடவிட்டு அவமானப்படுத்த, அதில் ஒருவனால் தன் கற்புக்கு களங்கம் நேர முற்படும்போது, அதையும் கணவன் கொச்சைப்படுத்திப்பேச கணவனை விட்டுப் பிரிந்து தனியே வாழ்கிறாள். மனபாரத்தோடு அவளைப்பிரிந்து ராமு வீட்டுக்கு வர, ஒரு நள்ளிரவில் தேவகி கைக்குழந்தையுடன் அவனைத்தேடி வருகிறாள். மீண்டும் தன் வீட்டுக்கு வந்து தன்ன மானபங்கப்படுத்த முற்பட்ட கயவனைக்கொன்று விட்டதாகவும், தான் சிறையிலிருந்து திரும்பி வரும் வரை தன் பெண் குழந்தையை ராமுதான் வளர்க்க வேண்டுமென்றும் சொல்லி சிறைக்குப்போக..... பெண் குழந்தை ராமுவின் கஸ்ட்டடியில் வளர்ந்து பெரியவளாகிறாள்.
கல்லூரியில் படிக்கும் அவளுக்கு, அம்மாவுக்கு நேர்ந்ததைப்போன்ற அதே ஒரு சூழ்நிலை. மாணவன் போர்வையில் ஒரு கயவனால் அவளது கற்பு பறிபோகும் நேரம் அங்கு அவளைத்தேடி வரும் ராமு தன் வளர்ப்பு மகளைக்காப்பாற்றும் முயற்சியில், அந்தக்கயவனைக் கொன்று விடுகிறார். நடந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் மறைக்க முயற்சிக்கும் மகள், ஒரு டாக்ஸியில் ராமுவை அழைத்துப்போக, அந்த டாக்ஸியின் ட்ரைவர் வேறு யாரும் அல்ல. அவளுடைய அப்பாதான். ராமு பெரிய நடிகர் என்ற முறையில் அவர் அடையாளம் தெரிந்து கொள்ள, அவர் பேசும் பேச்சைக்கொண்டு அவர்தான் தேவகியின் கணவர் என ராமு தெரிந்து கொள்கிறார். வீட்டுக்குப்போனதும் முதல் வேலையாக போலீஸுக்கு போன் செய்யும் ராமு, தான் செய்த கொலையைப்பற்றிச்சொல்லி தன்னைக் கைது செய்ய வரும்படி அழைக்கிறார். தேவகியையும் அவளது கணவரையும் சேர்த்து வைத்த பின் ராமு சிறைக்குச்செல்வதோடு படம் நிறைவடைகிறது.
படத்தின் இறுதியில் நடிகர்திலகம் சிறைக்குச்செல்லும் வரிசைப்படங்களில் ராமன் எத்தனை ராமனடி படமும் ஒன்று (அவரது பட்டியலில் புதிய பறவை, கவரிமான் என்று நிறைய உண்டு).
அவர் நடிகராக மாறியதும் பாத்திரத்தின் பெயரும் விஜயகுமார் என்று மாறி விடும். இதை வைத்துதான் இந்தப்படத்தின் தயாரிப்பாளரகளான அருண்பிரசாத் மூவீஸார் பின்னாளில் தங்களுடைய 'பொண்ணுக்குத் தங்க மனசு' படத்தில் அறிமுகப்படுத்திய ஒரு நடிகருக்கு ‘விஜயகுமார்’ என்று பெயர் சூட்டினர். அவர் வேறு யாருமல்ல, இப்போது குணச்சித்திர நடிப்பில் கொடிகட்டிப்பறக்கும் விஜயகுமார்தான்.
நடிகர்திலகம் நடித்த படங்களில் இது ஒரு புதிய பரிமாணத்தை காட்டிய படம். அவரது அறிமுகமே வித்தியாசமாக இருக்கும். " 150 வாழைப்பழம், 60 முறுக்கு, ஒரு முழு பலாப்பழம், ஒரு டஜன் சோடா அனைத்தையும் பத்தே நிமிடங்களில் சாப்பிட்டு சாதனை புரிவான் நம்ம சாப்பாட்டு ராமன்" என்று அறிவித்ததும் சப்பணமிட்டு உட்கார்ந்த நிலையில் நம்மைப் பார்த்து வெகுளிச் சிரிப்போடு கும்பிடுவார். (அன்றைக்கு ஒரு கதாநாயகன் இந்த மாதிரி ரோலில் நடிப்பதற்கும், இப்படி ஒரு அறிவிப்புடன் அறிமுகமாவதற்கும் தனி 'தில்' வேண்டும். இவரைப்பொறுத்த வரை எப்போதுமே இமேஜாவது மண்ணாவது. அதையெல்லாம் காப்பாற்றிக் கொள்ள வேறு ஆட்கள் இருந்தனர்). அப்போது வரிசையாக வந்த படங்களைப் பாருங்கள்... 'எதிரொலி'யில் திருட்டு வக்கீல், இந்தப்படத்தில் சாப்பாட்டு ராமன், சொர்க்கத்தில் குடிப்பவர், எங்கிருந்தோ வந்தாளில் பைத்தியம். ரொம்பத்தான் தைரியம். இப்போதுள்ள நிலை வேறு. அப்போதெல்லாம் கதாநாயகன் என்றால் ‘அப்பழுக்கில்லாத சுத்தமான அவதார புருஷன்’ என்று காட்டப்பட்டு வந்த காலம்.
அவர் நடிகரானதும் எப்படி முன்னேறுகிறார் என்பதைக்காட்ட இயக்குனர் மாதவன் புது யுக்தியைக் கையாண்டிருந்தார். அவர் நடித்த படிக்காத மேதை, பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன், எங்க ஊர் ராஜா, தெய்வமகன் ஆகிய படங்களின் முக்கிய காட்சிகளைக்காட்டி அவற்றுக்கிடையே மக்கள் ஆரவாரத்துடன் 100-வது நாள், வெள்ளி விழா என்ற எழுத்துக்களைக் காட்டினார். (இதே உத்தி பின்னர் ஜெயலலிதா நடித்த 'உன்னைச்சுற்றும் உலகம்' படத்திலும் கையாளப்பட்டது).
ரசிகர்களுக்கு ரொம்ப நாளாக ஒரு ஏக்கம். இவர் என்னென்னவோ வரலாற்று பாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார். ஆனால், 'சிவாஜி கணேசன்' என்ற பெயரை அவருக்குப்பெற்றுத்தந்த மாவீரன் சத்ரபதி சிவாஜியாக வேடமிட்டு நாம் பார்க்கவேயில்லையே. பெரியார் செய்த பாக்கியம் இந்த சிறியார்களுக்கும் கிடைக்கவில்லையே என்று ஏங்கிய ரசிகர்களின் ஆவலைப்பூர்த்தி செய்யும் வண்ணம் இத்திரைப்படத்தில் சிவாஜியாக நடிக்கும் காட்சியில் வருவார். அறுபதுகளுக்கு முன் வந்த படங்களில் வந்த ஓரங்க நாடகம் போல அனல் பறக்கும் வசனங்கள். ஒருகாலத்தில் காங்கிரஸ் அரசாங்கத்தை தாக்கி எழுதப்பட்ட 'யாரது மண்ணிலே யாரது நாடகம் பார்ப்போம் என்று நான் படையெடுக்க', 'வாழ வந்த வஞ்சகக்கூட்டம் மக்களின் மடமையைக்கொண்டே வளரும் கூட்டம்' போன்ற வசனங்கள் 'பூமராங்' ஆக மாறி தங்களையே திருப்பித்தாக்கும் என்று அன்றைய (ஒன்றுபட்டிருந்த) தி.மு.க.வினர் நினைத்திருக்க மாட்டார்கள். சந்திரமோகன் நாடகத்துக்காக கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்த வசனங்கள் பொருத்தமான முறையில் செருகப்பட்டிருந்ததை ரசிகர்கள் புரிந்து கொண்டு உற்சாகமாக கைதட்டி மகிழ்ந்தனர்.
படத்தின் பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். படத்தில் இரண்டு முறை வரும் ' அம்மாடீ.... பொண்ணுக்குத் தங்க மனசு' பாடல் அப்போது (இப்போதும்) SUPER HIT.. அதிலும் இரண்டாவது பாடலைவிட, முதலில் அப்பாவி ராமு பாடும் பாடல், மெட்டு ரீதியாகவும், காட்சி ரீதியாகவும் ரொம்பவே பாப்புலர். இந்தப்பாடலுக்கு முன்னால், கே.ஆர்.விஜயாவும் தோழிகளும் வருமுன்னர் கூட்டாளிகளோடு 'கொலை கொலையா முந்திரிக்கா' விளையாடிக் கொண்டிருக்கும் நடிகர்திலகத்தைக்காட்டி, ‘இவர்தாம்பா வீரபாண்டிய கட்டபொம்மனிலும், பாசமலரிலும் நடித்தவர். இவ்வளவு ஏன், இதற்கு முந்தைய படமான வியட்நாம் வீட்டில் பிரிஸ்டீஜ் பத்மனாபனாக நடித்தவர்தான்யா இதோ ‘கொலை கொலையா முந்திரிக்கா’ விளையாடிக் கொண்டிருக்கிறார்’ என்றால் யாராவது நம்புவார்கள் என்கிறீர்களா?. ஆம், எங்கள் அண்ணன் நடிப்பின் எல்லா நீள, அகல, உயர, ஆழங்களையும் அளந்து முடித்தவர் என்று மார்தட்டிச்சொல்வோம்.
சில ஆண்டுகளுக்குப்பிறகு அதே லொக்கேஷனில், தனித்தவராக ஏமாற்றத்தின் விளிம்பில் நின்று அவர் பாடும்... 'அம்மாடீ... பொண்ணுக்கு தங்க மனசு... தங்க மனசு... தங்க மனசு...' அடுத்த வரி பாட முடியாமல், அண்ணாந்து பார்க்க, அங்கே எரிந்துகொண்டிருக்கும் டியூப் லைட், கிராமம் ரொம்ப மாறிவிட்டது என்பதற்கு அடையாளம் காட்டும்.
எந்த தேவகி என்ற மந்திரச்சொல் தன் வாழ்க்கைப்பாதையையே மாற்றி அமைத்ததோ அந்த தேவகியை சந்திக்கப்போகிறோம் என்ற உற்சாகத்துடன் ரயிலில் வந்துகொண்டிருக்கும் ராமு வுக்கு, முந்தைய ஸ்டேஷனிலேயே தன்னை வரவேற்க வந்து நிற்கும் தேவகியுடன், ரயிலில் பயணிக்கும்போது தேவகி (கே.ஆர்.விஜயா) பாடுவதாக வரும், 'சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்' பாடல் மெல்லிசை மன்னரின் அபார திறமைக்கு எடுத்துக்காட்டு. 'சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்துரதங்கள் ஊர்வலம் போகும்' என்பது ஒரு மெட்டு, 'தேரில் வந்த ராஜராஜன் என்பக்கம்' இன்னொரு மெட்டு, சரணத்தில் 'அந்நாளிலே நீ கண்ட கனவு காயாகி இப்போது கனியானதோ' என்பது இன்னொரு மெட்டு... இந்த வாமனர், தன் மூன்று காலடிகளில் இசையுலகையே அளந்து முடித்து விட்டார் என்றால் அது மிகையா?. இல்லவே இல்லை. இப்பாடலுக்கு பக்க வாத்தியமாக வரும் ரயிலின் தாலாட்டு, அது பக்க வாத்தியமல்ல 'பக்கா' வாத்தியம். அக்கால நீராவி எஞ்சினின் விசில் சத்தமாகக் காட்டி அதையே, ஸ்ருதி மாறும் போது ராமு என்கிற விஜயகுமார், புல்லாங்குழல் வாசிப்பதாகக்காட்டுவது மெல்லிசை மன்னரின் கம்போஸிங்கை இயக்குனர் பி.மாதவன் எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம். பாடலும் தேவகியும் கனவு என்று அறியும்போதும், அதை மாஸ்டர் பிரபாகர் கிண்டல் செய்யும்போதும் அவர் முகத்தில் தோன்றும் நாணம்.
இந்தப்பாடல் முடிந்து ஸ்டேஷனில் வந்திறங்கும்போது, ஃபுல் சூட்டும் கண்களில் குளிர்க் கண்ணாடியுமாக, ரயில் பெட்டியின் வாசலில் தோன்றும்போது ரசிகர்களின் கைதட்டல் காதைக் கிழிக்கும். (வரவேற்கும் பேண்டு வாத்தியத்தில் 'செல்லக்கிளிகளாம் பள்ளியிலே' பாடல்) இதே உடையுடனும், மைனர் அணிவிக்கும் ஆளுயர மாலையுடனும் அவர் நிற்கும் போஸ்தான் படத்தின் முழுப்பக்க விளம்பரம்.
கே.ஆர்.விஜயாவின் ஃப்ளாஷ்பேக் கதையில் வரும் 'நிலவு வந்து பாடுமோ' பாடல் மட்டும் என்னவாம். இந்தப்பாடலிலும் மெட்டு மாறும்... சரணத்தில்
'தலைகுனிந்த பெண்களும் தலை நிமிர்ந்த ஆண்களும்
நிலைகுலைந்து போனபின் நீதி எங்கு வாழுமோ'
என்ற வரிகள் ஒரு மெட்டு
'வாழட்டும் மனது போல போகட்டும்
பார்க்கட்டும் அறிவு கொண்டு பார்க்கட்டும்'
என்ற வரிகள் வேறொரு மெட்டு.
(பாடல் பாடி ரிக்கார்ட் பண்ணியபிறகுதான் படமாக்குகிறார்கள். படத்தில் முத்துராமன், கே.ஆர்.விஜயா காலை மிதிக்க 'ஆ' என்று கத்தும் அவர் பின்னர் அதை அப்படியே ராகமாக்கிப் பாடுகிறார். எங்கே அது மாதிரிப்பாடுங்கள் என்று சுசீலாவிடம் சொல்லியிருக்க, அப்படியே சுசீலா பாடியிருப்பார் பாருங்கள்... வாவ்) பாவம், இதையெல்லாம் சொல்லிக்காட்ட அன்றைக்கு அவர்களுக்கு எந்த டி.வி.சேனலும் இல்லை. இன்றைக்கு ஒண்ணேமுக்க்கால் படத்துக்கு இசையமைத்தவர்களும், ரெண்டேகால் பாடல் (??) பாடியவர்களும் தங்களின் அனுபவத்தை (???????) இருபது சேனல்களில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
(ரசிகர்கள் கவனத்துக்கு.... நடிகர்திலகத்துக்கு கதாநாயகியுடன் டூயட் பாடல் இல்லாத பல படங்களில் இப்படமும் ஒன்று)
டிகர் விஜயகுமார் (நடிகர்திலகம்) தலைமை தாங்க, சிறையில் பள்ளிக் குழந்தைகள் பாடி நடிக்கும்' சேர சோழ பாண்டி மன்னர் ஆண்ட தமிழ்நாடு' பாடல், நாட்டின் பிரிவினைக் கோரிக்கைகளைச்சாடி, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் பாடல். சிறையில் இருப்பது தன் அம்மா என்று தெரியாமலேயே, விஜயாவின் குழந்தை ராணி அவருக்கு இனிப்பு வழங்குவதும், அது உன் குழந்தைதான் என்று நடிகர்திலகம் ஜாடை காட்டுவதும் ரசமான இடம்.
கதை வசனம் பி.மாதவனின் ஆஸ்தான கதாசிரியர் பாலமுருகன் எழுதியிருந்தார். கிராமத்தில் சிறுவர்கள் பேசிக்கொள்ளும் யதார்த்த வசனங்கள். நடிகரானபின் முதன்முதலில் குடிசையில் கைக்குழந்தையுடன் தேவகியைச் சந்திக்கும் ராமு பேசும் வசனங்களில் ஆழமும் கூமையும் அதிகம்.
நடிகர்திலகம் :
படத்தின் முற்பாதியில் சாப்பாட்டு ராமனாகவும், பிற்பகுதியில் நடிகர் விஜயகுமாராகவும் தோன்றும் இவர், நடிப்பின் இரு பரிமாணங்களையும் இருவேறு கோணங்களில் தொட்டுக் காட்டியிருப்பார். ஆயாவைப்பார்த்து 'ஏன் ஆயா கதவை சாத்துறே, ஏன் ஆயா கரண்டியை எடுக்கிறே, ஏன் ஆயா அடுப்புல வைக்கிறே. ஐயோ ஆயா, இனிமேல் தப்பு பண்ணமாட்டேன் ஆயா' என்று வாயில் விரலை வைத்துக்கொண்டு அழுதுகொண்டே, பெட்டிக்குப்பின்னால் போய் ஒளிவதும், கே.ஆர்.விஜயாவின் தோழிகளிடம் 'அடிங்கொப்பன் தன்னானே, அதை நீ சொல்லாதே அவங்க சொல்லட்டும்' என்று வெகுளியாக கலாய்ப்பதுமாக, கிராமத்து அப்பாவி ராமு வேடத்தில் கலக்கியிருப்பார். அவர் நடிகராக மாறியதும் சுத்தமாக வேறு நடிப்புக்கு மாறிவிடுவார். பிற்பகுதியில் அவரது வழக்கமான நடிப்பு பல இடங்களில் தலைகாட்டும்.
கோடீஸ்வர நடிகராக வந்து மைனரை அசத்தும்போது, மைனரின் பணக்கார நண்பர்களைப்பற்றி, தான் சாப்பாட்டு ராமனாக இருந்தபோது அவர் சொன்னதை நினைவு வைத்து, மைனர் சொல்லி முடிக்கும் முன்பே 'டெல்லி எருமை', 'மாந்தோப்பு', 'வைர வியாபாரம்' என்று மடக்கும் இடம் ரசிகர்களிடம் கைதட்டல் பெறும். (ஆனால், மைனரிடம் தான் யாரென்று வெளிப்படுத்தும் காட்சியை இயக்குனர் இன்னும் கொஞ்சம் நாசூக்காக கையாண்டிருக்கலாமோ என்று தோன்றும். சடாரென்று சட்டையைக்கழற்றி, சாட்டையடித்தழும்புகளைக் காட்டுவது கொஞ்சம் சப்பென்று இருக்கும்).
மைனராக எம்.என்.நம்பியார்: கிராமத்திலேயே பெரிய பணக்காரன் என்ற திமிர், ஆணவம். இவருக்கு சொல்லணுமா?. ரத்தத்திலேயே ஊறிய பாத்திரம். அவரே பலமுறை நடந்து பழகிய பாதை. அசத்துகிறார். முத்துராமன் விருந்தாளியாக தங்கியிருக்கும் வீட்டுக்காரனைப்பார்த்து ஒருபக்கம் தலையை சாய்த்துக்கொண்டே உருட்டிய விழிகளோடு "ஏண்டா, நீயெல்லாம் நான் கூப்பிட்டு வர்ர அளவுக்கு பெரிய மனுஷன் ஆயிட்டியா?" என்று கேட்குமிடத்தில் பணக்கார திமிர். ஆனால் கிராமத்து மைனர் என்றால் கூட, வடநாட்டு பாணியில் (அதாவது வைரமுத்து பாணியில்) குர்தாதான் அணிய வேண்டுமா?. வேட்டி, சட்டையில் காட்டியிக்கலாமே.
முத்துராமன்: கிராமத்தில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்க மைனர் தங்கையையே மணந்துகொண்டு, அண்ணன் செய்த தவறுக்காக அப்பாவி மனைவியை பழிவாங்குவது கொடுமை என்றால், மனைவியின் கற்புக்கு ராமதாஸினால் களங்கம் ஏற்படநேரும்போது, துப்பாக்கிக்கு பயந்து ஓடிவிடுவதும், பின்னர் மனைவியை சந்தேகப்படுவதும் அதைவிட கொடுமை. இவரே பின்னர், பள்ளிக்கூட பஸ் டிரைவராகவும், டாக்ஸி டிரைவராகவும் வருவது கொஞ்சம் நெருடுகிறது.
கே.ஆர்.விஜயா: கல்லூரிப்படிப்பை முடித்து விட்டு காரில் வரும் முதல் காட்சியிலேயே பளிச்சென்று இருக்கிறார். பின்னர் சாப்பாட்டு ராமனை சந்திக்கும்போதெல்லாம் தனது ட்ரேட்மார்க் புன்னகையை வீசுகிறார். முற்பாதியில் வாய்ப்புக்குறைவு. பிற்பாதியில் அவரது வழக்கமான சோக நடிப்பு. இரண்டு அருமையான தனிப்பாடல்கள் இவருக்கு.
சின்ன வயது மகளாக பேபி ராணி, வளர்ந்த மகளாக எம்.பானுமதி, ஆயாவாக எஸ்.என்.லட்சுமி, கிராமத்தில் சாப்பாட்டுராமனோடு சுற்றும் சில்லுண்டிகளாக 'பக்கோடா' காதர், சதன், மாஸ்டர் பிரபாகர் மற்றும் இரண்டு சிறுவர்கள். இவர்க்ளோடு செந்தாமரை, பத்மினி, நாகையா, ராமதாஸ் ஆகியோரும் கௌரவமாகத் தலைகாட்டியிருப்பார்கள்.
இயக்கம் பி. மாதவன்: எங்க ஊர் ராஜா, வியட்நாம் வீடு, ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, மன்னவன் வந்தானடி, ராஜபார்ட் ரங்கதுரை, தங்கப்பதக்கம் போன்ற, நடிகர்திலகத்தின் பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கிய இவர்தான், இந்த படத்தையும் இயக்கி வெற்றி கண்டார். நடிகர்திலகத்தின் வெற்றி சூட்சுமங்களை அறிந்த வெகு சில இயக்குனர்களில் ஒருவர். ஸ்ரீதரின் சித்ராலயா என்ற கூத்துப்பட்டறையில் வடிவமைக்கப்பட்ட இயக்குனர். முதல் படமான மணி ஓசை படத்திலேயே பேசப்பட்டவர். மிகச்சிக்கனமாக படமெடுக்கத்தெரிந்த வித்தகர்
அருண்பிரசாத் மூவீஸுக்கு இது இரண்டாவது படம். முதல் படமான ‘எங்க ஊர் ராஜா’ 70 நாட்களைக் கடந்து ஓட, இப்படம் 100 நாட்களைக்கடந்து வெற்றியடைந்தது. மூன்றாவது படமான ‘பட்டிக்காடா பட்டணமா’ வெள்ளிவிழாப்படமாக அமைந்தது. (ஆகா, ஒரு நிறுவனத் துக்கு வளர்ச்சியென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்). ராமன் எத்தனை ராமனடி ஆகஸ்ட் 15-ல் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும்போது சரியாக 76-வது நாளன்று தீபாவளி வந்தது. அதனால் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கும்போதும் பல ஊர்களில் தீபாவளி புதிய படங்களுக்காக இப்படம் 75 நாட்களில் மாற்றப்பட்டது. இருந்தும் சென்னை பாரகன், மற்றும் மதுரை நியூசினிமா அரங்குகளில் 100 நாட்களைக்கடந்து வெற்றி நடைபோட்டது.
'ராமன் எத்தனை ராமனடி' படம் பற்றிய என் கருத்துக்களைப்படித்த அனைவருக்கும் என் நன்றி.
இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் தினம் !!
தமிழகம் மட்டுமல்ல உலக தமிழர்களுக்கு கட்டபொம்மன் என்றால் என்றுமே நினைவிற்கு வருவது, நம்முடைய நடிகர் திலகம் அவர்கள் மட்டுமே.
7 வயதில் தேவர் இன மக்கள் நடத்திய கட்டபொம்மன் நாடகம் பார்த்து கலைத்துறையில் வர விரும்பிய நடிகர் திலகம், பின்னாளில் பல முறை வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் அரங்கேற்றி...பின்னர் திரைப்படமாக அது வெளிவந்து, தான் மட்டுமல்ல...தமிழ் திரை உலகையும், தமிழனையும், அதில் பங்கு கொண்ட ஒரு கன்னடனையும் (BRB ) மொழி வித்தியாசம் பாராமல் உலகறிய செய்த அந்த சாதனை சரித்திர சஹாப்ததினை விட மேலானது.
http://www.youtube.com/watch?v=rR3CCJRjA2U
நடிகர் திலகத்துடன் இருக்கும்வரை, நடிகர் தியாகத்துடன் தொடர்புகொண்டதால் BRB என்ற தயாரிப்பாளர் இயக்குனர் நடிகரின் புகழ் என்றென்றும் இருக்கும் வண்ணம் ஒரு கப்பல் ஒட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் மூலம் அமைந்ததை நாம் அறிவோம்.
கட்டபொம்மனால் உலக புகழ் பெற்றதற்கு நன்றிகடனாக கயத்தாறில் சிலை நிறுவி பின்பு அந்த இடத்தையே தமிழக அரசாங்கத்திற்கு இனாமாக கொடுத்து மகிழ்ந்தவர் நம்முடைய நடிகர் திலகம் !
நடிகர் திலகம் நடித்தார் என்ற ஒரே காழ்புணர்ச்சி காரணமாக கட்டபொம்மன் சிலை கூட நிறுவாத பெருமை மிகு அரசாங்கம் நம்முடைய தமிழ்நாட்டு அரசாங்கம்,
அப்போதிருந்த congress, அதற்க்கு பிறகு அரியணையில் அமர்ந்த கழகங்களும் சரி,
ஒரு அரசாங்கம் செய்யமுடியாத விஷயத்தை, தனி மனிதனாக, சென்ஜோற்றுகடன் தீர்த்த கர்ணனை போல ஆனால் தனி மனிதனாக அந்த அரும் பணியை செய்து தன்னுடைய நன்றியினை வெளிபடுத்தியவர் நம்முடைய மண்ணின் மைந்தர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் !
நடிகர் திலகம் இல்லையென்றால் ....திரை உலகமே ஒரு பூஜ்யமாக சூனியமாக இருந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை !
நடிகர் திலகம் என்ற கலைவாணியின் கலை அவதாரம் BRB மட்டுமல்ல அவரோடு தொடர்பு ஏற்படுத்திய அனைவருக்கும் கொடுக்கும் புகழ் இதுதான்.
தோல்விகளை மட்டுமே பரிசளித்து பழகியவர்கள் மத்தியில் ஒரு தெய்வ மகனாய், ஒரு உயர்ந்த மனிதனாய் , தன்னுடைய எதிரிகளுக்கு மட்டுமல்ல துரோகிகளுக்கும் தனது வெற்றியை மட்டுமே பரிசளித்து, அதுகூட போதாது என்று நினைத்தவர்களுக்கு தன்னுடைய ஆயுளில்கூட ஒரு பகுதியை கொடுத்து அழகு பார்க்க பழகியவர் கலைவாணியின் அருள் பெற்ற ஒரே கலை அவதாரம் நடிகர் திலகம் !
இதனை பிற்காலத்தில் பாடலில் கூட கவிஞர் புகழ்ந்ததுண்டு -
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே ...ஆனால் நண்பரிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே !
முதல் வரி என்றுமே நடிகர் திலகத்தை அவரது தொழிலை குறிக்கிறது. உத்தியோகத்தில் அவரை வெல்ல பலர் கனவு கண்டிருக்கலாம்...ஆனால் அவர்களுக்கெல்லாம் நடிகர் திலகம் அவர்கள் எட்டாத கிடைக்காத நெல்லிக்கனியாக இருந்திருப்பது அனைவருக்கு தெரியும் !
ஆனால் இரெண்டாவது வரி நடிகர் திலகம் வாழ்வில் நிறைய நடந்துள்ளது - ! - 1953 முதல் 2001 வரை ஏதாவது ஒரு வகையில் நண்பர்களால் பாசத்திற்கு கட்டுப்பட்டு அவர்கள் மீது வைத்த அபரிதமான அன்பிற்கு கட்டுப்பட்டு - தாழ்வினை சந்தித்ததுண்டு !
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தோல்வியின் நிழல் கூட என்றுமே நெருங்கியதில்லை !
அதன் பொருள் கூட என்ன என்பது அவரது திரையுலக DICTIONARY கூட அந்த வார்த்தைக்கு அர்த்தம் கற்பித்ததில்லை.!
BUT...Vc கணேசனுக்கு அந்த தனிமனிதனுக்கு திரைத்துறை அல்லாத சில விஷயங்களில்..ஒரு சில தோல்விகள், அதன் நிழல்கள் நெருங்கியதுண்டு !!!!
அவர் தோற்றவராக இருக்கலாம் ஒரு சில விஷயத்தில்.. அந்த தோல்விகூட இவரிடம் உத்தரவு கேட்டுதான்... இவர் சம்மதம் கொடுத்த பிறகுதான் இவர் நிழலை தொடமுடிந்தது.....ஆனால் அப்படி தோற்றாலும் அதிலும் ஒரு வெற்றிகண்டவர் !!!
Rest Pause for Sarojadevi! NT's Anbalippu!!
நடிகர் திலகம் படங்களில் நடிக்கும்போது சரோஜாதேவி நிறைய home work செய்து அவரின் நடிப்புத்தாக்கத்தை சமன் செய்ய மெனக்கெடுவார். சாதாரண கவர்ச்சி கொலுபொம்மையாக இல்லாமல் தனது மறைந்துகிடந்த நடிப்புத்திறமையை வெளிக்கொணர்ந்ததில் நடிகர்திலகத் தின் பங்களிப்பை பேட்டிகளில் நன்றியுடன் நினைவுகூறுவார். பாலும் பழமும், ஆலயமணி, பாகப்பிரிவினை,புதிய பறவை, இருவர் உள்ளம்.......மறக்க முடியுமா? ஆனாலும் அவ்வப்போது நடிகர்திலகத்துடன் ஜாலியான கொலுபொம்மை பாத்திரங்களையும் ஏற்றிருக்கிறார். அன்பளிப்பு....சிறந்த ஜனரஞ்சகப் படம். துடிப்பான துள்ளலுடன் கிராமத்து இளைஞனான நடிகர்திலகம் சரோஜாவுடன் பங்குபெற்ற இனிமையான இதமான வேகம் நிறைந்த பாடல்காட்சிகள்:
https://www.youtube.com/watch?v=0eTOWFNLasw
https://www.youtube.com/watch?v=Wo7Tz6Pm5hE
VPKB memoirs! வீரபாண்டிய கட்டபொம்மனின் ஈரமான மறுபக்கம்!! The Soft Centered Steel!!
எல்லா வீரத்தின் விளைநிலங்களும் கட்டபொம்மன் உட்பட குழந்தைகளின் முன் குழந்தைகளே ! சிறுமியின் கைவீச்சு கால்வீச்சு கண்வீச்சு வாய்வீச்சுக்கு முன்னே கட்டபொம்மனின் வாள்வீச்சு தாள் பணிதலே !
வீரக்குழந்தையை தூங்கவைக்கும் தீரக்குழந்தையின் நடனம்
https://www.youtube.com/watch?v=2MVzY-elSjI
திரையுலகில் 'பீம் பாய்' என்று அன்பாக அழைக்கப்பட்ட....'' தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனர் பீம்சிங் அவர்களின் 90 வது பிறந்த தினம் இன்று ! ( அக்டோபர் 15 )
இயக்குனர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறனோடு விளங்கிய ஒரு திரை கலைஞர் !
ஒரு இயக்குநர் என்பவர் எடிட்டராகவும் இருக்க வேண்டும் என்று சொன்னதோடு நில்லாமல் , அவரது படங்களை அவரே எடிட்டிங் செய்திருக்கிறார் !
ஆரம்ப காலங்களில் , இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சுவிடம் உதவி இயக்குநராக இருந்த போது , .பராசக்தி படத்தில் சிவாஜிக்கு வசனம் சொல்லி கொடுக்கும் பொறுப்பு இவருடையது !
இவர் இயக்கிய முதல் படம் அம்மையப்பன். ...கலைஞர் மு. கருணாநிதி வசனம் எழுதிய இந்தப் படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்தார். ...ஆனால் படம் அவ்வளவாக வெற்றி பெற வில்லை !
அவரது இயக்கத்தில் உருவான ... இரண்டாவது படம் .சிவாஜி - பத்மினி நடித்த .' ராஜா ராணி!
இந்த படமும் அவ்வளவு வெற்றிகரமாக ஓட வில்லை !
, பின்னர் இவரது இயக்கத்தில் உருவான படம் “பதிபக்தி” ! ....சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், சாவித்திரி, சந்திரபாபு, விஜயகுமாரி ஆகியோர் நடித்த இந்தப்படம், பெரிய வெற்றிப்படமாக அமைந்தது !
அந்த படம்தான் 'ப' வரிசை படங்களின் தொடக்கம். !
அதை தொடர்ந்து , வெளி வந்த , பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பாசமலர், பாலும் பழமும், பாவ மன்னிப்பு மூன்று படங்களும் வெள்ளி விழா கண்டன !
. சிவாஜி - பீம்சிங் கூட்டணியில் , பாவமன்னிப்பு , பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார் என்று “ப” வரிசைப் படங்கள் தொடர்ந்து வெளிவந்து, மாபெரும் வெற்றி பெற்றன !
தமிழ் மொழியை தாண்டி இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களையும் பீம்சிங் டைரக்ட் செய்துள்ளார் !
. நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மிகச்சிறந்த படங்கள் பலவற்றை டைரக்ட் செய்தவர் என்ற பெருமைக்குரியவர் ஏ.பீம்சிங்.!
இவர் , பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய “சில நேரங்களில் சில மனிதர்கள்” நாவலை, படமாக அதே பெயரில் தயாரித்தார். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, அகில இந்திய சிறந்த நடிகைக்கான “ஊர்வசி” விருதை நடிகை லட்சுமிக்கு பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது !
தமிழ் திரைப்பட உலகில் முத்திரை பதித்த பீம்சிங்கின் கடைசி படம் “கருணை உள்ளம்”. !
NT - Bhimsingh : The most successful association that endures till today!
Paraasakthi the maiden venture of NT catapulted him to the pinnacle of his fame from where he could never slide down! With Bhimsingh's entry in the professional life of NT, the Pa..series closely followed the success trajectory in line with Pa..rasakthi. Bhimbai could also influence the personal life of NT by putting him on the right track of spiritual 'bakthi maarkkam'! We take stock of all his movies with NT as Bhimsingh remains one of the pillars to stabilize NT's market with rich story based films providing ample scope for NT parading his histrionics!
Enjoy NT's most attractive dress sense in the scintillating song sequence from the not so successful Bhimsingh movie 'Paadukappu". As the myth goes 'NT's movie may fail occasionally but NT never fails in his duty of acting...'!
https://www.youtube.com/watch?v=4XKaI4jrsWA
Tomorrow 17.10.14 - Kannadasan Ninaivu Naal. Great friend of NT and both have given countless songs which are immortal.
Like NT never before never after a poet like Kannadasan.
Regards
Advance congratulations to Mr Raghavendra Sir for his milestone of 6000 posts. Do post regularly in NT' forum.
Regards
WoW....." I am a singer .....not a Song " What a way of handling this dialogue !!!
I dont think anyone else could have expressed and pronounced this sentence in a way that it conveys the meaning of it...!!!
Nadigar Thilagam - Only Wonder to have wondered by the very Wonder itself !!!
https://www.youtube.com/watch?v=hYynckRbsl8
ACTOR RAJESH ON OUR NADIGAR THILAGAM
https://www.youtube.com/watch?v=jv2HoTnMvHM#t=54
What is generation gap for a seasoned wood like NT?
: NT/4G spectrum survival saga 1!!
Age might have carved rills on his face but his energy level at this age is amazing!
Enjoy NT's rip roaring stylish dance movements and his flair for updating his dress passions in the company of Vijay and Simran. You may long to ask Once More!
https://www.youtube.com/watch?v=XvNOufo3bHo
ACTOR RAJESH ON OUR NADIGAR THILAGAM - PART - 2
https://www.youtube.com/watch?v=hcXDE_teYd4