http://i60.tinypic.com/fzcims.jpg
Printable View
முரளி சார்Quote:
ஒன்றே ஒன்று. ஒரு நல்ல விவாத அரங்கம் என்ற அமைப்பு நிறுவப்படுவதின் நோக்கமே பல்வேறு கருத்துகள் நாகரீகமாக முன்வைக்கப்பட்டு வரம்பு மீறாமல் விவாதிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான். அப்படியிருக்க எதிர் கருத்துக்களே வரக்கூடாது என்று சொன்னால் ------ என்ன சொல்வது?
எதிர் கருத்தே வரக்கூடாது என்று எங்கே நான் சொன்னேன். ஜனநாயகம் என்று சொல்கிறீர்கள். அந்த அடிப்படையில் தான் நானும் கூறுகிறேன். எப்போது யார் நேரடியாகவோ மறைமுகமாகவோ நடிகர் திலகத்தின் அரசியலைக் குறை கூறினாலும் அதற்கு நான் பதிலளிப்பேன் என்று தானே கூறியுள்ளேன். நடிகர் திலகம் அரசியலில் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை நிலைநாட்டுவது என் லட்சியம். ஒருவர் ஒரு கருத்தைக் கூறும் போது நான் என் கருத்தைக் கூறுகிறேன். இதை நான் தொடர்ந்து செய்து கொண்டு தானிருப்பேன்.
இதில் எந்தத் தவறுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
Ground Reality என்பது நேரத்துக்கு நேரம் மாறுபடும் போலிருக்கிறது. அவரவர்க்குத் தேவைப்படும் போது மட்டும் Ground Reality கை கொடுக்கவேண்டும். அது 1989க்கு ம்டடுமே பொருந்தும், 1975க்குப் பொருந்தாது போலும். இது என்ன அணுகுமுறையோ..
இது மட்டும் அவரவர் தங்கள் சொந்தக் கருத்தைத் திணிப்பது ஆகாதா...
நடிகர் திலகத்தைக்குறை கூறுவோர் மனம் புண்படக்கூடாது, ஆனால் அவரை ஆதரித்து எழுதுபவர் மனம் புண்பட்டால் கவலையில்லை. இது என்ன தர்மமோ தெரியவில்லை.