திரு.சிரஞ்சீவி அனீஸ் பேசும்போது
http://i68.tinypic.com/513ot1.jpg
Printable View
திரு.சிரஞ்சீவி அனீஸ் பேசும்போது
http://i68.tinypic.com/513ot1.jpg
திரு.பூவை செங்குட்டுவன் பேசும்போது
http://i68.tinypic.com/ok0djm.jpg
திரு.ஆர்.கே.சண்முகத்துடன் , திரு சிரஞ்சீவி அனீஸ் .
http://i67.tinypic.com/mv2c8n.jpg
முற்றும்
நாளை (31/08/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "சந்திரோதயம் " திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது .
http://i67.tinypic.com/imowi9.jpg
நாளை இரவு 7 மணிக்கு , சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "ஒரு தாய் மக்கள் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/bi4jh5.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர் .
மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ் முகநூல் பக்கத்தில் இருந்து...
=================================================
நான் அபிநய சரஸ்வதி சரோஜா தேவி அவர்களை ஒரு முறை சந்தித்த போது ....,
பெற்றால் தான் பிள்ளையா.....? படம் குறித்து எங்கள் பேச்சு விரிய...., அவர் சொன்ன விஷயம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது.....
அதில் கை குழந்தை ஒன்றை எம்.ஜி.ஆர். பாசத்துடன் வளர்ப்பார்.... அதில் வரும்..,
"செல்ல கிளியே மெல்ல பேசு.... தென்றல் காற்றே மெல்ல வீசு.... " என்கிற பாடல் காட்சியின் படப்பிடிப்பின் போது அந்த கை குழந்தைக்கு உடம்பு முடியாமல் இருக்க அடிக்கடி மூக்கு ஒழுகி கொண்டே இருந்தது...
அந்த படத்தின் படப்பிடிப்பின் போது எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் ... நாங்க பேசிக்க மாட்டோம்...சண்டைக்கி நான் தான் காரணம் ரொம்ப சின்ன புள்ள மாதிரி எதுக்காச்சும் நான் சண்ட போட்டுக்கிட்டே இருப்பேன்..... ஆனா படத்துல அது தெரியாம பாத்துக்கிட்டோம்.... அதுக்கும் எம்.ஜி.ஆர் தான் காரணம் என் உதவியாளர் கிட்டே அவர் சொல்லி விட்டார்.... "
உங்க மேடத்தோட கோபத்த ஷூட்டிங் ஸ்பாட்ல காமிக்க வேணாம்னு சொல்லுங்க......" என்று சொல்லி விட்டார்.... அதே போல நானும் நடந்து கொண்டேன்.....
அந்த குழந்தைக்கு ஜலதோஷம் புடிச்சு இருந்ததால அது மூக்கு ஒழுகிகிட்டே இருந்துச்சு.... எம்.ஜி.ஆர் குழந்தையோட அம்மாகிட்டே "ஷூட்டிங்கை ரெண்டு நாள் கழிச்சு வச்சுக்கலாமா.....?" னு
கேட்டார் ...
அந்த அம்மா பதறி போய்..."அதெல்லாம் வேணாம்! "னு சொல்லீடுச்சு....
"இந்த குழந்தைக்காக ஷூட்டிங்கவா கேன்சல் பண்ணுறது.....னு" நான் கூட யோசிச்சேன்..... அந்த அம்மாவும் என் கிட்டே அப்படித்தான் சொல்லுச்சு..... என்ன போலவே யோசிச்சு இருக்கும் போல.... கடைசில அந்த பாட்டு ஸீன் சூட் பண்ணுனப்ப அந்த பாப்பா மூக்கு ரொம்பவே ஒழுக ... எம்.ஜி.ஆரே அந்த பாப்பாவுக்கு 2 - 3 வாட்டி மூக்கை கிளீன் பண்ணி விட்டார்.....
எனக்கு அது கூட அப்போ பெருசா தெரியல...... ஆனா நான் என்னோட அடுத்த தெலுங்கு சூட்டுக்கு போய் இருக்க அங்கே இதே போல ப்ராப்லம்... அந்த ஹீரோ குழந்தையை திட்டி அந்த பேபியை மாத்த சொல்லீட்டார்..... எனக்கு ஒரே ஆச்சர்யம் .... நம்ம எம்.ஜி.ஆர் எப்படியாப்பட்ட மனுஷன் னு நெனைச்சேன்..... நாங்க சேர்ந்து நடிச்ச அடுத்த பட ஸ்பாட்ல இத பத்தி நான் கேக்க..... அவர் சொன்னார்.....,
"குழந்தைக்கு தனக்கு என்ன செய்யுதுன்னு சொல்ல தெரியாது..... அதான் நான் அவங்க அம்மாகிட்டே ஷூட்டிங் கேன்சல் பண்ணலாமான்னு கேட்டேன்..... அந்த அம்மா ஒரு குழந்தைக்காக ஷூட்டிங் கேன்சல் ஆகரத விரும்பல..... அதான் நான் நடிச்சேன்.... ஆனா எனக்கு அதுல உடன்பாடே இல்ல.... என்னை பொறுத்த வரை ஆர்டிஸ்ட் ஆரோக்கியமா இருக்கணும் அது குழந்தைனா கூடுதல் கவனமா கையாளனும் ...." னு சொன்னார்.....
நான் தெலுங்கு மேட்டரை சொன்னேன்..... வியப்போடு கேட்டார்.... கூடவே இன்னொரு விஷயம் சொன்னார்....
"நீ இதை எல்லார்கிட்டயும் சொல்லி வைக்காதே..... அப்புறம் உனக்கு பட வாய்ப்பு இல்லாம போய்டும்" னு சொன்னார்.....
என்னோட பட வாய்ப்பு பற்றியும் கவலைப்பட்டார் அவர்..... அதுதாங்க எம்.ஜி.ஆர்.!!!
http://i64.tinypic.com/zxmphx.jpg
மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் 23.9.2016 அன்று திரைக்கு வரும் என்று தெரிகிறது .விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று தகவல் ..
மக்கள்திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் தயாரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று , மறு தணிக்கை செய்வதற்கு தயாராக உள்ளதாகவும் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா துவக்கத்தில் 2017ல் திரைக்கு வரும் என்று அப் படத்தின் தயாரிப்பாளர் திரு நாகராஜன் தெரிவித்தார் .
மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை . மற்றும் இதயக்கனி இரண்டு படங்களின் சினிமாஸ்கோப் மற்றும் டிஜிட்டல் பணிகள் முழு வீச்சில் நடை பெற்று கொண்டு வருகிறது .
செப்டம்பர் மாதத்தில் வெளியான மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் .
1. ராஜாதேசிங்கு
2. காவல்காரன்
3. கன்னி தாய்
4. தொழிலாளி
5. ஒளிவிளக்கு
6. தாய்க்கு பின் தாரம்
7. அன்னமிட்ட கை
8. தனிப்பிறவி
எம்ஜிஆரின் பிம்பம்
http://i64.tinypic.com/29b1rn8.jpg
இந்திய சினிமாவில் கடந்த 75 ஆண்டுகளில் பல் வேறு மொழிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான நடிகர்களை கண்ட ரசிகர்கள் குறிப்பிட்ட சில நடிகர்களை மட்டும் மறக்காமல் இன்னமும் அந்த நடிகர்களை நினைவு கூர்ந்து மகிழ்கிறார்கள் .அந்த வகையில் எம்ஜிஆர் மட்டும்தான் எல்லா துறைகளிலும் முதலிடம் வகிக்கிறார் .
எம்ஜிஆர் எப்போதுமே சமூக அக்கறையோடு தன்னுடைய படங்களில் நல்ல கருத்துக்களை மக்களுக்கு தந்து பல லட்சக்கணக்கான ரசிகர்களை நல் வழி படுத்தியுள்ளார் . உலகத்தில் எந்த ஒரு நடிகரும் செய்ய துணியாத புரட்சியை புரட்சி நடிகர் செய்து காட்டினார் .அதுதான் அவருடைய வெற்றியின் ரகசியம் .
எம்ஜிஆர் படங்களில் புதுமையான சண்டை காட்சிகள் , இனிமையான பாடல்கள் நிச்சயம் இருக்கும் .ரசிகர்கள் தங்களை மறந்து படம் பார்க்கும் அளவிற்கு எம்ஜிஆரின் பிம்பம் மிகவும் நேர்த்தியாக இருக்கும் . அவருடைய ஒப்பனை , உடை அலங்காரம் , நடன அசைவுகள் , வீரமான தமிழரின் பாரம்பரிய காளை அடக்குதல் , மல்யுத்தம் , குத்து சண்டை , வாள் வீச்சு , கம்பு சண்டை மற்றும் பல புதுமையான சண்டை காட்சிகள் எம்ஜிஆர் ரசிகர்களை மட்டுமன்றி மக்களையும் கவர்ந்து இழுத்து .
எம்ஜிஆர் நடிக்கும் காட்சிகளில் ஒரு மின்னல் வேக சுறுசுறுப்பு காட்சிகள் இருக்கும் .பல காட்சிகளில் எம்ஜிஆர் என்ற மனிதரின் பிம்பம் மட்டுமே படத்தில் சுழன்று கொண்டு வரும்என்பது உண்மை .
எம்ஜிஆரின் வசீகர தோற்றம் - கட்டுக்கோப்பான உடற்கட்டு - புன்சிரிப்பு - அளவான வசனங்கள் - நேர்மறை சிந்தனை தூண்டும் காட்சிகள் - இதுதான் எம்ஜிஆரை இமயத்தின் உச்சிக்கே அழைத்து சென்றது .1947-1977
முப்பது ஆண்டுகளில் எம்ஜிஆர் 115 படங்களில் கதாநாயகனாக நடித்து முடி சூடா மன்னனாக இந்திய திரை உலக வசூல் மன்னனாக என்றென்றும் முதலிடம் வகித்தார் .அது மட்டுமா
1977க்கு பிறகு அவருடைய பழைய படங்கள் தென்னாடெங்கும் ஆயிரக்கணக்கான திரை அரங்குகளில் பல படங்கள் வெளிவந்து வசூலை வாரி குவித்தது . 2016 இன்றும் வசூலை குவித்து கொண்டு வருகிறது .எம்ஜிஆர் மறைந்து 29 வது ஆண்டு நெருங்கும் நேரத்தில் எம்ஜிஆரின் சினிமா மற்றும் அரசியல் பிம்பம் இன்னமும் மக்கள் மனதில் குடி கொண்டிருப்பது அதிசயமே .
எம்ஜிஆர் என்ற தனி மனிதர் தன்னுடைய உழைப்பில் கிடைத்த வருமானத்தை தன்னை வாழ வைத்த தமிழ் நாட்டு மக்களுக்கும் , ரசிகர்களுக்கும் , கட்சிகார்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் ,வாரி வாரி வழங்கியதை பற்றி இந்த உலகமே நன்கு அறியும் .
எம்ஜிஆர் ஆட்சியில் அமர்ந்த பின்னர் தன்னுடைய அதிகாரத்தை உட் படுத்தி அவர் ஏழைகளுக்கு செய்த நன்மைகள் திட்டங்கள் சத்துணவு திட்டம் என்று மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை உருவாக்கியதில் முதலிடம் வகிக்கிறார் .
எம்ஜிஆரின் புகழ் - பிம்பம் ..... இன்னும் எத்தனை நூறு ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் மனதில் பல தலை முறைகள் தாண்டி அழியா புகழுடன் நிலைத்து நிற்கும் என்பது உண்மை .
அருமையான விமர்சனம். தங்களின் கூற்று மாசற்ற உண்மை.
நண்பர் திரு. வினோத் அவர்களுக்கு நன்றி.
http://i63.tinypic.com/2h6h5p5.jpg
தொடரும்.....!!!
குமுதம் வார இதழ் -07/09/2016
http://i68.tinypic.com/4q4fmb.jpg
Makkalthilagam MGR's "Rickshawkaaran" photos, documents, matters really super -----Friends...
ரிக்க்ஷாக்காரன் படம் குறித்த பழைய செய்திகள், ஆவணங்கள் சிறப்பாக இருக்கிறது. நன்றி.