https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...ce&oe=5B690F0C
courtesy senthilvel.s f book
Printable View
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...ce&oe=5B690F0C
courtesy senthilvel.s f book
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...c7&oe=5B67A38E
courtesy senthilvel.s f book
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...35&oe=5B663A04
courtesy senthilvel.s f book
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...fd&oe=5B63C6D4
courtesy senthilvel.s f book
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...b4&oe=5B28FC39
courtesy senthilvel.s f book
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...36&oe=5B2C14C8
courtesy senthilvel.s f book
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...d6&oe=5B5A0DF1
courtesy senthilvel.s f book
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...30&oe=5B68CF10
courtesy senthilvel.s f book
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...92&oe=5B5D225C
courtesy senthilvel.s f book
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...b7&oe=5B624DE5
courtesy senthilvel.s f book
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...19&oe=5B6CE235
courtesy senthilvel.s f book
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...3d&oe=5B295276
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...f1&oe=5B72FA9B
courtesy senthilvel.s f book
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...65&oe=5B72FA3E
courtesy senthilvel.s f book
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...ec&oe=5B686F2C
courtesy senthilvel.s f book
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...20&oe=5B6701C8
courtesy senthilvel.s f book
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...5f&oe=5B58B4DB
courtesy senthilvel.s f book
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...d8&oe=5B6A7B88
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...f7&oe=5B547EF9
courtesy senthilvel.s f book
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...92&oe=5B5CC109
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...20&oe=5B65854D
courtesy senthilvel.s f book
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...a0&oe=5B5A3490
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...5e&oe=5B5E60A0
courtesy senthilvel.s f book
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...55&oe=5B5596C1
courtesy amaran amaran f book
சிவாஜி கணேசன் எங்க ஊரு சம்பந்தி.நாகைக்கு சம்பந்தியாக, உயர்திரு.நாராயணசாமிக்கு தன் மகள் சாந்தியை மணமுடித்துத் திருமண வரவேற்புக்கு வந்திருந்தார்.
காவல் துறை அதிகா...ரி ஒருவர் வீட்டில் தான் நடிகர் திலகம் தங்கினார்.
அந்த வீட்டில் இருந்து, ஒரு மாமன்னன் வீதி உலா வருவது போல் மேளதாலத்துடன், சிவாஜி, காடம்பாடி மாளிகைக்கு அழைத்து கொண்டு வரப்பட்டார்.
மாலை சூட்டி எதிர்கொண்டு வரவேற்று, நாராயணசாமியும் அவருடைய சித்தப்பாக்களும் அழைத்து செல்கிறார்கள் சிவாஜி யை! திருமண வரவேற்பா! நடிகர் திலகத்துக்கு வரவேற்பா? இரண்டும் தான்!
நாகையே மக்கள் வெள்ளத்தில் சிக்கி, திக்கு முக்காடியது, திணறியது! அலங்கரித்து, புதுமணப் பெண்ணாக வந்த சாந்தி,மாப்பிள்ளை கோலத்தில் இருந்த நாராயணசாமி, இருவரும் நடிகர் திலகம் கால்களில் விழுந்து வணங்குகின்றனர்.
ஆனந்த கண்ணீர் மல்க, அருமை மகள் சாந்தியை யும் நாராயணசாமியும் ஆரத் தழுவிக் கொள்கின்றார் சிவாஜி. பாசம் சங்கமித்த பரவச நிலை!
தந்தையின் உணர்வுகளை நான் அன்று அவர் வடிவில் தரிசித்தேன்....மறக்க கூடிய காட்சியா அது???அவை யாவும் என் நெஞ்சில் பசுமை யாக பதிந்துள்ளது.
பின்னர் வாஹினி ஸ்டியோவில், அரங்கு ஒன்றில், நவமணி நாளிதழின் துணை ஆசிரியராக, பத்திரிகையாளராக நுழைகின்றேன்.
இவர் தான் நாகை தருமன் என்று, மதிஒளி சண்முகம் என்னை திலகத்திடம் அறிமுகம் செய்து வைத்தார்.
அமர்ந்த சிவாஜி எழுந்து நின்கிறார், கைகூப்பி வணக்கம் தெரிவிக்கிறார்.
கை குலுக்குகிறார்,நீண்ட காலம் பழகிய நேசத்தோடு தோள் மீது கை போட்டு, அருகில் இருந்த நாற்காலி யில் அமர வைத்து,
அதன்பின் அவர் உட்காருகின்றார்,என்றும் பணியுமாம் பெருமை, பணிவோடு இருப்பதும்,இனிய வார்த்தைகளை சொல்வதும் தான் பெருமைக்குரிய வர்களுக்கு பேரழகு!
இவைகளை நடிகர் திலகத்திடம் கண்டேன்,
கலையாக நிலையாக மக்கள் நெஞ்சில் நிறைந்து விட்ட இவர்,
கலைத்தாய் சிகரத்தில் ஒளி வீசும் மணிமகுடம்!
-பத்திரிக்கையாளர் நாகை தருமன்
(பிலிம் நியூஸ் ஆனந்தனின் செவாலியே விருது விழா மலர்,22.4.1995)
courtesy nadigarthilgam sivaji visirigal
காலத்தை வென்ற சிவாஜி படங்கள்.
15-4-2018, ஞாயிறு "டைம்ஸ் ஆப் இந்தியா"
இதழில், திருச்சி, பாரதி பாஸ்கர், துணத்தலைவர், மாவட்ட சிவாஜி மன்றம், பேட்டியுடன். படித்து மகிழ்வோம் !
http://oi66.tinypic.com/1zqvexv.jpg
courtesy Sundaram viswanathan f book
பாவமன்னிப்பு திரைப்படத்தில் வரும் , "சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்" என்ற இந்த பாடலுக்கு , இந்த படத்தின் இயக்குனர் A பீம்சிங் அவர்கள் என்ன நினைத்தாரோ என்னவோ, ஒரு காட்சியில், ஒரே முகம் வெவ்வேறு கோணத்தில், பாடலுக்கேற்ற மாதிரி வெவ்வேறு உணர்ச்சியில் ,அதுவும் ஒரே இடத்தில் வைத்தால் எப்படியிருக்கும் என்று நினைத்தார் அவரது கற்பனையில் , அப்போது கிராபிக்ஸ் இல்லாத காலம் அது ...எல்லாமே manual சேர்க்கைதான் பிலிம் சுருள்களை வைத்து ......ஆனாலும் பிரேம் சரியாக இருந்தால் போதும்... ,உடனடியாக செய்துவிடலாம் என்று தயாரிப்பாளர் ஏவிஎம் நிறுவனம் சொன்னவுடனே , 10 நிமிடம் direction ,10 நிமிடம் framing ...முடிந்து விட்டது ...........எப்படி சாத்தியம் ஆயிற்று இது ? நான் எதோ ஒருநாள் வீணாகிவிடும் என்று கவலைப்பட்டேன்டா பீமு என்றாராம் மெய்யப்ப செட்டியார் குடும்ப சகிதம் saravanan ... ..பீம்சிங் சொன்ன ஒரே பதில் கணேசன் இருக்கும்போது நான் ஒரு நடிகரை பற்றிய கவலையை விட்டு விட்டு framing மட்டும்தான் பார்ப்பேன் , காரணம் , சிவாஜி கணேசன் மீது உள்ள நம்பிக்கையோ இல்லை என்னவென்று தெரியவில்லை , அவரது ஒவ்வொரு நாடிதுடிப்பும் கேமரா முன்னால் யாரையும் ஏமாற்றாது இயன்றவரை வாரிக்கொடுக்கும் அவரது நடிப்பு என்ற ஒரே காரணத்தால்தான் என்றார் பீம்சிங்.... .. நினைத்ததை விட மிக அருமையாக செய்துவிட்டார் .முதலில் சிவாஜி கணேசனுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும் என்றார் பீம்சிங் .......................மெய்மறந்த பதிவுகள்.....See morehttps://scontent.fyyz1-1.fna.fbcdn.n...5f&oe=5B5972AA
courtesy Edwin prabaharan f book
இலங்கையின் அன்றைய வானொலி நிலைய வர்ணனையாளர் அப்துல் ஹமீது கூறுகிறார்,,,,,
'பைலட் பிரேம்நாத்' படத்தில் நடிப்பதற்காக அவர் இலங்கை வந்திருந்தபோது எனது மானசீக குருவான நடிகர் திலகத்தை இலங்கை வானொலிக்காகப் பேட்டி காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அன்று தான் அவரை நான் முதன் முதலாகச் சந்தித்தேன்.
கொழும்பு நகரில் கடற்கரையை ஒட்டியிருந்த அந்த மிகப் பெரிய நட்சத்திர ஹோட்டலின் ஐந்தாவது மாடியில், கடலை எதிர்நோக்கி இருந்த உப்பரிகை போன்ற பகுதியிலே நிலா வெளிச்சத்திலே அவர் அமர்ந்திருந்தார்.
அவரை நெருங்கி...'வணக்கம் அண்ணா...'என்று நான் சொன்னதும் எனது கைகளைப் பற்றிக் கொண்டு 'வணக்கம் கேப்டன் சாம்பசிவம்' என்று அவருக்கே உரிய பாணியில் என்னை வரவேற்றார்.
கேப்டன் சாம்பசிவம் என்பது இலங்கை வானொலியில் ஒரு வருட தொடராக நான் தயாரித்து வழங்கிய ஒரு வீடு கோயிலாகிறது என்ற நாடகத்தில் நான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் .
அந்தப் பாத்திரத்தின் பெயர், நடிகர் திலகத்தின் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது என்பதை அறியும்போது சொல்லொணா மகிழ்ச்சியும், அதே சமயம் ஒரு வித நடுக்கமும் என்னுள் பரவியது.
அவர் சொன்னார்...
என் மனைவி உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது நானும் தங்கியிருக்க நேர்ந்தது. அப்போது பொழுது போக்காக இலங்கை வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டேன்.
தற்செயலாக உங்கள் ஒரு வீடு கோயிலாகிறது நாடகத்தையும் கேட்டேன்.
அந்த நாடகம் என்னை வெகுவாகக் கவர்ந்ததால், தவறாமல் கேட்கத் தொடங்கினேன்.
அதிலும் நீங்கள் ஏற்று நடித்த கேப்டன் சாம்பசிவம் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது.
அன்று தொடங்கிய எங்கள் நட்பு, அவர் குடும்பத்தினர் அனைவரும் என்னையும் என் குடும்பத்தையும் நேசிக்கும் அளவுக்கு வளர்ந்தது.
ஒரு குடும்பம் ஒற்றுமையாக ஒரு கூட்டுப் பறவைகளாகத் திகழ வேண்டும் என்பதில் அவருக்கு மிகுந்த அக்கறை.
நடிப்புலகில் எத்தனையோ தலைமுறைகளைக் கண்ட அவர், தன் குடும்பத்துத் தலைமுறைகள் ஒன்றாக வாழ வேண்டும் என்பதிலும் மிகுந்த அக்கறை உள்ளவராக இருந்தார்.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று அவர் பாடியது போலவே தன் வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டார்.
நடிகர் திலகம் அபாரமான நினைவாற்றல் கொண்டவர்.
அவரை முதன் முதலாகச் சந்தித்தபோது எனது மகனுக்கு ஒரு வயது தான்.அவனைத் தன் மடியிலே வாங்கி வைத்துக் கொண்டு பெயர் என்ன ? என்று கேட்டார்..
சிராஜ் என்று சொன்னேன். அவர் உடனே சிராஜூதீன் தவுலா என்ற வரலாற்று வீரனின் பெயரைக் குறிப்பிட்டு அவனை உச்சிமோந்தார்.
பின்பு, 21 ஆண்டுகள் கழித்து அவரை மீண்டும் சந்தித்தபோது அதே பெயரைச் சொல்லி என் மகனை வரவேற்றார்.
நடிப்புலகில் பலருக்கு நடிப்புக் கல்லூரியாக இருக்கும் கலைக்குரிசில் சிவாஜி கணேசனிடம் நான் காணும் சிறப்பு :
உலகப் புகழ்பெற்ற நடிக மேதைகளில், ஓவர் ஆக்டிங், அண்டர் ஆக்டிங் மற்றும் இவை இரண்டுக்கும் இடைப்பட்ட நடிப்பு... என தனித்தனிப் பாணியில் பிரகாசித்தவர்கள் உண்டு.
ஆனால் இந்த மூன்று பாணிகளிலும் நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவராக விளங்கிய நடிகர் உலகிலேயே சிவாஜி ஒருவர் தான்.
நடிகர் திலகம் அவர்களுக்கு பாரதத்தின் பெருமை மிக்க தாதா சாகிப் பால்கே விருது, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம், பிரெஞ்சு அரசின் செவாலியே விருது அனைத்தும் வழங்கப்பட்டதை சிறப்பிக்கும் வகையில், தமிழகத்தை முந்திக் கொண்டு இலங்கையில்தான் முதல் மரியாதை விழா எடுத்தோம்.
அந்த விழா அமைப்புக்குழுவி
லே நானும் இடம் பெற்றிருந்தது எனது பெரும் பாக்கியம்.
இனப் பிரச்சனையால் சிதறுண்டு போயிருக்கும் அந்த நாட்டிலே, கலைக்கு இன மத மொழி பேதம் கிடையாது என்பதை நிரூபிக்கின்ற வகையில், காமினி பொன்சேகா முதற்கொண்டு சிங்களப் படவுலகின் முன்னணிக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு அந்த விழாவைச் சிறப்பித்தார்கள்.
சிவாஜி மன்னன் அணிந்த மணியைப்போல் முழுக்க முழுக்க தங்கத்திலே செய்து விழா மேடையில் அவருக்குச் சூட்டினோம்.
அந்த கௌரவத்தை பார்த்ததும் நடிகர் திலகம் அவர்கள் மிகவும் நெகிழ்ந்து போய்விட்டார். சபையோருக்கும் மெய்சிலிர்த்தது.
அதன் பிறகு -சிங்கப்பூரில் சுமார் பத்தாயிரம் பேர் கூடியிருந்த மாபெரும் அரங்கிலே அந்த மகத்தான கலைஞனுக்குப் புகழாரம் சூட்டும் பெருவிழா நடைபெற்றபோது அதைத் தொகுத்து வழங்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
அதே மேடையில் தனக்கே உரிய கம்பீரத்துடனும் சாந்தம் தவழும் புன்னகையுடனும் வந்து நின்ற நடிகர்திலகம்...கோடிக்கணக்கான ரசிக நெஞ்சங்கள் வழங்கிய நல்லாசியும், இறைவன் அருளும்தான் என்னைக் காப்பாற்றின.. என்று கண்ணீர் மல்கக் கூறினார்.
அந்த விழாவைச் சிறப்பிக்க வந்திருந்த ஒவ்வொரு பிரமுகரையும் குறிப்பிட்டு அவர் நன்றி தெரிவிக்கும்போது
...இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து பறந்து வந்து என்னை கௌரவிக்க மேடைக்கு வந்திருக்கும் இலங்கை நண்பன் அப்துல் ஹமீதின் அன்பை என்னவென்று சொல்வேன்... என்று சொன்னார்.
நான் உருகிப் போனேன்.
நடிகர் திலகத்தின் இறுதி ஊர்வலத்தை நேர்முக வர்ணனை செய்யுமாறு இலங்கை வானொலி, லண்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் உள்ள 24 மணி நேர தமிழ் சாட்டிலைட் வானொலி நிலையங்கள் என்னைக் கேட்டுக் கொண்டன.
சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தில் ஆரம்பித்து, பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச் சடங்கு முடியும்வரை அந்த நேர்முக வர்ணனையை கண்ணீரையும் சோகத்தையும் கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலையில் நான் வழங்க வேண்டியதாயிற்று.
ஒரு கைத்தொலைபேசியை வைத்துக் கொண்டு நேர்முக வர்ணனையை வழங்கிக் கொண்டிருந்தேன்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா போன்றவர்கள் மட்டுமன்றி விஜய் போன்ற இளைய தலைமுறை நடிகர்கள் அனைவருமே அப்பா.. அப்பா என்று அழைத்துக் கதறிய காட்சி என்னை மேலும் நிலை குலைய வைத்தது,,,,,
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...94&oe=5B61F3C1
courtesy Krishmoorthy. G-. f book
கட்சி அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக தெற்கு போக் ரோடு வழியாக காரில் சென்று கொண்டிருந்த மேற்கு வங்க முதல்வரிடம் காரில் அருகில் அமர்ந்திருந்தவர் இதுதான் நடிகர் சிவாஜிகணேசனின் வீடு என்று சொல்ல, உடனே வண்டியை நிறுத்துமாறு உத்திரவிடுகிறார். முன்னாலும் பின்னாலும் சென்று கொண்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் வாகனங்களை நிறுத்தி இறங்கி ஓடி வருகிறார்கள். அவர்களிடம் நான் சிவாஜியை சந்திக்க வேண்டும் ஏற்பாடு செய்யுங்கள் என்று கூற , நிகழ்ச்சி நிரலில் இல்லாத இடத்துக்கு எப்படி போக முடியும் என்று ச...ொல்ல அதெல்லாம் எனக்குத் தெரியாது இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர் அவர் தான் பிறந்த நாட்டிற்க்கும், மாநிலத்திற்கும் உலக அளவில் புகழ் தேடித் தந்த அவரை காண இப்போது விட்டால் எனக்கு இனியொரு சந்தர்ப்பம் கிடைக்காது என்று கூற, அன்னை இல்லம் நோக்கி அதிகாரிகள் பறந்தனர். அய்யனும் அன்று இல்லத்தில் இருந்தார்.விஷயத்தை சொன்னதும் அன்னை இல்லம் பரபரப்பானது. ஜோதிபாசுவை வரவேற்க அய்யன் இல்லத்தின் வாசலுக்கு விரைந்தார். வாசலிலே காரை நிறுத்தி, இறங்கி நடந்தே வந்தார் மேற்கு வங்க முதல்வர். அவரை அன்னை இல்லத்து உறவுகள் சகல மரியாதைகளோடு உள்ளே அழைத்துச் சென்றனர்.அய்யனோடு சுமார் இருபது நிமிடங்களுக்கு மேல் அளவளாவிக் கொண்டிருந்தார் முதல்வர்.கட்சிக்கார்கள் அய்யன் கட்சி அலுவலகம் கட்ட செய்த பண உதவியை சொல்ல முதல்வரும் அய்யனும் நெகிழ்ந்து போனார்கள். விடை பெறும் நேரத்தில் முதல்வர் ஜோதிபாசு அய்யனை தன்னோடு அலுவலக திறப்பு விழாவிற்கு வரும்படி வேண்டினார். அய்யனும் அவரோடு சென்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது கூடுதல் தகவல். எல்லோருக்கும் நல்லவர் நம்மவர். அவர் போல் ஓர் உயர்ந்த மனிதனை காண்போமா பாரினிலே. வாழ்க அய்யன் புகழ்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...0f&oe=5B58472A
courtesy Lakshmanan Lakshmanan-. f book
உங்களுக்குத் தெரியுமா ...?
1956 ல் சென்னை மாநகரில் இருந்த திரையரங்குகளின் எண்ணிக்கை சுமார் 34.
அதில் 22 திரைகளில் இரண்டுமாத காலத்திற்கு அய்யனின் திரைப்படங்களே ஓடிக்கொண்டிருந்தது என்று சொன்னால் நம்புவீர்களா....
உண்மைதான்.
சென்னையின் எப்பகுதிக்குச் சென்றாலும் அவரின் திருமுகமே அரங்குகளில் நிழலாக இருந்தது. மிச்சமிருந்த இடங்களில்தான் மற்றவர்களின் படங்கள் ஓடின....
அந்த வரலாற்றுப் பட்டியல் உங்கள் பார்வைக்காக...
1. 14:01:1956 நான் பெற்ற செல்வம்
பாரகன் / உமா/ ராஜகுமாரி/ கிருஷ்ணா
2. 14:01:1956 நல்லவீடு
கெயிட்டி / காமதேனு / மகாலட்சுமி/
மகாராணி
3. 25:01:1956 நானேராஜா
அசோக்/ சன் / கபாலி / முருகன் /
பிரைட்டன் / நூர்ஜகான்
4. 03:02:1956 தெனாலி ராமன்
நியூகுளோப் / ஸ்டார் / ராக்ஸி / கிரவுன்
5. 17:02:1956 பெண்ணின் பெருமை
காசினோ/ பிராட்வே / மகாலட்சுமி
6. 25:02:1956 ராஜா ராணி
வெலிங்டன் / உமா / கிருஷ்ணா
இவற்றில் எல்லா திரைப்படங்களும் அன்றைக்கு 5 வாரங்களுக்குக் குறையாமல்
ஓடியது என்பதே வசூலுக்கான சாட்சி.
இதில் அதிசயம் என்னவெனில், அய்யனின் இந்த ஆறு படங்களும் 1956 ஜனவரி 14 ல் இருந்து 1956 பிப்ரவரி 25க்குள்,
வெறும் 41 நாட்களில் வெளியாகி உள்ளன என்பதுதான்.
மேலும், 1956 ல் தமிழ் சினிமாவில் வெளியான மொத்த நேரடித் திரைப்படங்கள் 33. அதில் நடிகர்திலகம் நடித்தவை 9. கிட்டதட்ட நான்கில் ஒரு பங்கு.
இதையெல்லாம் படித்தப்பின்பு உங்களுக்கு ஒன்று புரிந்திருக்குமே...!?
அன்றைக்கு நடிகர்திலகத்தைத் திரையுலகிலிருந்து ஒழித்தேத் தீரவேண்டும் என்று எதிரிகள் ஏன் வரிந்துகட்டிக் கொண்டு நின்றார்கள் என்ற ரகசியம்.
இத்தகைய அளப்பரிய சாதனைகளை யெல்லாம் இன்றைய மீடியாக்களின் காதுகளில் யார் போய் சொல்வது?
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...03&oe=5B61A3D8
courtesy vaannila vijayakumaran f book
பாவ மன்னிப்பாச்சே, மிஸ் செய்துவிட்டால் பிறகு எங்கே பாவ மன்னிப்பைப் பெறுவது,
வேறு ஒரு சூழலில் சிக்கியதால் வந்த மன உளைச்சல்,
எப்படியும் மஹாலட்சுமியை சென்றடைய வேண்டும், என்ன தலைவரின் ஓப்பனிங் சீனை விட்டு விடுவோம் ஐயோ எல்லோரும் கொண்டாடுவாங்களே எப்படி விட்டுவிட முடியும்,
பாரத விலாஸ் சக்கப் போடு போடு ராஜா விதமாக எனக்குள்ளாகப் பேசிக் கொண்டே கைகளில் அகப்பட்ட டூ வீலரில் பறக்கிறேன்,
வேப்பேறியை நெருங்கும் போது போஸ்டர்களின் வரவேற்பு, போகப் போக பாதியளவு போஸ்டர்களை பா...விகள் எதை எதையோ ஒட்டி மறைத்து இருந்தனர், அந்தப் பாவிகளுக்கு பாவ மன்னிப்பு கிடையவே கிடையாது,
சரி ஒரு வழியாக தியேட்டரை சென்று அடைந்து அருகில் சென்றால் கேட் பூட்டப்பட்டு " ஹவுஸ்புல்" போர்டை தொங்க விட்டிருந்தார்கள், கேட் கிரில் கேட் என்பதால் உள்ளே அலசினேன் யாராவது நண்பர்கள் உதவுவார்கள் என்பதால், என்னை தியேட்டர் ஊழியர் கவனித்து சோகமாக பார்த்தார், " சார் ரொம்ப சிரமம் எடுத்து வந்திருக்கேன் எனக்கு உட்கார இருக்கையெல்லாம் வேண்டாம் டிக்கெட் மட்டும் கொடுத்து உள்ளே அனுமதியுங்கள் என்றேன்" அவரோ இல்லை சார் டிக்கெட் மொத்தம் தீர்ந்துப் போயிடிச்சி என்றார், " ஏதாவது ஒரு வழியை நீங்களே சொல்லுங்க சார் என்றேன்" கொஞ்சம் வெயிட் பன்னுங்க சார், யாராவது வெளியே போக வருவாரு அப்படி வந்தாரானால் அந்த டிக்கெட்டை வாங்கிக் கொண்டு உள்ளே செல்லுங்கள் என்றார்,
கொஞ்சம் பொறுத்த எனக்கு தியேட்டர் ஊழியர் எதிர்பார்த்தபடி ஒரு நண்பர் அவசர அவசரமா வெளியே போக வந்தாரு , அவர் டிக்கெட்டையும் எனக்குக் கொடுத்தாரு நானும் டிக்கெட் கட்டணத்தை அவருக்கு கொடுத்தேன் ஆனால் நம்மவராச்சே வாங்க மறுத்து " சார் நான் திண்டிவனம் போகனும் தலைவருடைய முகத்தை பார்த்துட்டு போயிடலாம்னு வந்தேன், நேரமாகுது நீங்க பாருங்க என்று கிளம்பிவிட்டார், நானும் டிக்கெட்டை பெற்றுக் கொண்டு அதற்கான கட்டணத்தை தியேட்டர் ஊழியரின் கையில் கொடுத்து விட்டு உள்ளே பாய்ந்தேன்,
அதற்கு மேல் சொல்ல எப்படி சொல்ல?
மஹாலட்சுமி தியேட்டர் 57 ஆண்டுகளுக்கு முன் சென்று விட்டது,
பாவ மன்னிப்பு வெளியான அன்றைய கொண்டாட்டத்தை நமக்கு உணர்த்தும் விதமாக நடிகர் திலகத்தின் பக்தர்களின் அமர்க்களம்,
உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன்,
மற்ற நடிகர்களுக்கு அமைந்த ரசிகர்கள் சண்டைக் காட்சிக்கும், பாடல் காட்சிக்கும் மட்டுமே விஷில் அடிப்பதும் கூச்சல் போடுவதும்
ஆனால் நடிகர் திலகம் ரசிகர்கள்
நடிகர் திலகம் தோன்றும் ஒவ்வொரு பிரேமிலும் வெளிப்படுத்தும் நடிப்பை கொண்டாடுகின்ற ரசிகர்கள் 57 ஆண்டுகள் கடந்தும் பாவ மன்னிப்பை ரசிக்கும் அழகு,
நடிகர் திலகம் ரசிகனாய் இருப்பதற்கும் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...c8&oe=5B742272
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...2f&oe=5B2A11C9
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...2a&oe=5B65F8D9
courtesy sekar f book
பஞ்சமில்லா நடிப்புக்காரன்
பகட்டுகளில்லா வித்தைக்காரன்
பக்திமான்களுக்கோர் பாசக்காரன்
படிக்காத மேதையான பண்புக்காரன்
... பெருந்தலைவரின் பெரும்பக்தன்
பெரும்தேசம் மேல் பக்திகொண்டவன்
தலைவர்க்கெல்லாம் தன்மானம் செய்தவன்
தக்காரைச் சார்ந்து சுயநலம் பேணாதவன்
அன்னையைத்தான் பூஜித்தவன்
பிதாவைத்தான் நேசித்தவன்
துணைவியைத்தான் பக்கத்தில் வைத்தவன்
வம்சங்களைத்தான் போஷித்தவன்
இல்லத்தைத்தான் ஆலயமாய் போற்றியவன்
நம்பினோர்க்கு பாதகம் செய்யாதவன்
அண்டினோர்க்கு சாதகம் செய்தவன்
செய்நன்றியை செத்தும் காட்டியவன்
எல்லோருக்கும் எல்லாம் -வழி சொன்னவன்
பொம்மனாருக்கு இடம் கொடுத்தவன்
பாரதிக்கு பொருள் கொடுத்தவன்
வள்ளுவனாருக்கு உருவம் கொடுத்தவன்
மாவீரனுக்கு சிலை கொடுத்தவன்
எட்டப்பர்களை பக்கத்தில் சேர்க்காதவன்
கலைமகளுக்கு கிரீடம் சூட்டியவன்
மலையாய் கலையை உயர்த்தியவன்
விலையாய் குருதியை கொடுத்தவன்
சிலையாய் நெஞ்சினில் உயர்ந்தவன்
சூதறியா அரசியல் நடத்தியவன்
சுற்றிலும் பண்பாட்டை காத்தவன்
இது யார்வாய் வந்தாலும் - சிவாஜி
அது பார் போற்றிடும் பெரிய பேர்.
courtesy senthilvel f book
பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியுடன் பக்தவச்சலம், நடிகர் திலகம், கமலா அம்மாள், சாவித்திரி, தேவிகா, ஏ.எல்.எஸ், மாதவி, கோபாலகிருஷ்ணன், சந்தியா ,ஜெயலலிதா, ஜெமினி ராஜசுலோசனா, சுசீலா, ஏ.வி எம்.ராஜன், S. வரலட்சுமி,வி. கே.ராமசாமி , டைரக்டர் ஸ்ரீதர் மற்றும் பலர்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...23&oe=5B722945
courtesy Lakshmankumar f book
அங்கே நீதி நேர்மை என தம்பட்டம் அடித்தவர்களின் நேர்மை எங்கே போய்விட்டது?
திருச்சி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி இன்று(16.04 2018) வந்துள்ளது உங்கள் பார்வைக்கு
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...b0&oe=5B668CBB
courtesy s.annadurai s.annadurai f book
பஞ்சமில்லா நடிப்புக்காரன்
பகட்டுகளில்லா வித்தைக்காரன்
பக்திமான்களுக்கோர் பாசக்காரன்
படிக்காத மேதையான பண்புக்காரன்
... பெருந்தலைவரின் பெரும்பக்தன்
பெரும்தேசம் மேல் பக்திகொண்டவன்
தலைவர்க்கெல்லாம் தன்மானம் செய்தவன்
தக்காரைச் சார்ந்து சுயநலம் பேணாதவன்
அன்னையைத்தான் பூஜித்தவன்
பிதாவைத்தான் நேசித்தவன்
துணைவியைத்தான் பக்கத்தில் வைத்தவன்
வம்சங்களைத்தான் போஷித்தவன்
இல்லத்தைத்தான் ஆலயமாய் போற்றியவன்
நம்பினோர்க்கு பாதகம் செய்யாதவன்
அண்டினோர்க்கு சாதகம் செய்தவன்
செய்நன்றியை செத்தும் காட்டியவன்
எல்லோருக்கும் எல்லாம் -வழி சொன்னவன்
பொம்மனாருக்கு இடம் கொடுத்தவன்
பாரதிக்கு பொருள் கொடுத்தவன்
வள்ளுவனாருக்கு உருவம் கொடுத்தவன்
மாவீரனுக்கு சிலை கொடுத்தவன்
எட்டப்பர்களை பக்கத்தில் சேர்க்காதவன்
கலைமகளுக்கு கிரீடம் சூட்டியவன்
மலையாய் கலையை உயர்த்தியவன்
விலையாய் குருதியை கொடுத்தவன்
சிலையாய் நெஞ்சினில் உயர்ந்தவன்
சூதறியா அரசியல் நடத்தியவன்
சுற்றிலும் பண்பாட்டை காத்தவன்
இது யார்வாய் வந்தாலும் - சிவாஜி
அது பார் போற்றிடும் பெரிய பேர்.
courtesy senthilvel f book
யாரோ எழுதிய கவிதை..!?
என் அலைபேசியின் கஜானாவிலிருந்து....
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...36&oe=5B722F59
courtesy vaannila.vijayakumaran f book
கோவை நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த பழனி என்னும் ரசிகர் நடிகர்திலகத்தின் படங்களை பார்ப்பதில் தீவிர நாட்டம் உடையவர்.மதுரை திருச்சி சேலம் என்று எங்கு நடிகர்திலகத்தின் படங்கள் திரையிடப்பட்டாலும் படம் பார்பதற்கு முன்
ஒரு நாள் முன்பாகவே அந்த ஊருக்கு சென்று தங்கி விடுவார்.படம் பார்த்தபின்னர்தான் ஊருக்கு திரும்புவார்.அந்த வழக்கம் இன்று வரை மாறவில்லை.அவருக்கு வயது 70க்கு மேல் இருக்கும்.நடிகர்திலகத்தின் நடிப்பு ஈர்ப்பு வாழ்நாள் முழுவதும் மயக்கிக் கொண்டேதான் இருக்கும்.
மஞ்சள் குறிக்குள் இ...ருப்பவர்தான் பழனி
இது போன்ற ரசிகர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.அவர்களுக்கெல்லாம் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவை எல்லாம் தெரியாது.அவர்களுக்கு நடிகர்திலகத்தின் திரைப்படங்களே உற்சாகம்.
அவர்களையெல்லாம் தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.அவர்கள் ஆலமர விழுதுகள் போன்றவர்கள்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...68&oe=5B698345
courtesy senthilvel f book