https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...4b&oe=5E95C4F4
Printable View
"ஊழல் செய்பவன் யோக்கியன் போலே
ஊரை ஏய்ப்பவன்.. உத்தமன் போலே
காண்கின்றான் நீங்கள் அத்தனை பேரும்..உத்தமர் தானா சொல்லுங்கள்" !!!
இன்று 07/03/2020 மதியம் 12.00 மணிக்கு முரசு தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த !!!
" என் மகன் " படத்தை கண்டு களியுங்கள் !!!
இதில் நடிகர்திலகம், மஞ்சுளா நடித்துள்ளனர்.
நடிகர் சிவகுமார் ஆற்றிய உரையிலிருந்து.....
நான் பிறந்த காலங்களில் சினிமா பார்ப்பது என்பது பீடி, சிகரெட், தண்ணி மாதிரி பாவச்செயல். தீபாவளி பொங்கல் மாதிரி பண்டிகைகளில் அதுவும் பகல் காட்சி மட்டும் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும்.
அந்த மாதிரி ஒரு பண்டிகை நாளில் 1956ல் “வணங்காமுடி” படம் பார்த்தேன். வசனம் எழுதியவர் ஏ கே வேலன் நடித்தவர் நம்ம வாத்தியார் சிவாஜி. உயிர் ,உடல் என எங்கும் நீக்கமற நடிப்பு ஊறிப்போனவர். சிற்பி இளவரசியை காதலிக்ககூடாது என சொல்ல இவர் காதலிப்பார் இவரை நாடு கடத்த, மன்னன் உத்தரவிட அதனை எதிர்த்து வசனம் பேசுவார். அரங்கமே அதிரும்.
அப்போதே சாவதற்குள் அந்த மனிதனை பார்த்துவிட்டு சாக வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2 வருடங்களில் 1958 ல் சிவாஜிக்கு நெருக்கமானவர் குடும்பத்தில் கோயம்புத்தூரில் அவரை அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.
காலம் ஓடியது, ஓவிய கல்லூரி சேர்ந்து ஓவியம் கற்றேன். 1965 ல் நடிப்புதுறைக்குள் வந்தேன். மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் சிவாஜியின் மூத்த மருமகனாக நடித்தேன். அதே நேரத்தில் கந்தன் கருணை படத்தில் முருகனுக்கு 36 பேரைப்பார்த்து கடைசியாக நான் தேர்வாகி நடித்தேன்.
அதில் தூதுவனாக வீரபாகுவாக என் வாத்தியார் சிவாஜி நடித்தார். அவரும் அசோகனும் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்ட போது போய்ப் பார்த்தேன். அவர்கள் இருவரும் பேசிய வசனத்தை பார்த்து மிரண்டுவிட்டேன்.
சினிமாவில் எதுவும் தெரியாமல் ஒப்பேத்த முடியாது என முடிவு செய்து சொந்தமாக நாடக ட்ரூப் ஆரம்பித்தேன் அது முடியமால் மேஜர் சுந்தர் ராஜன் ட்ரூப்பில் இணைந்து இந்தியா முழுக்க ஆயிரம் நாடகங்கள் நடித்தேன். அப்போது தான் மனப்பாடம் செய்யும் கலையை கற்றேன்.
இப்போது உரையின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
வாத்தியார் சிவாஜிக்கு செவாலியர் விருது வழங்கப்பட்டது. கலை உலகம் திரண்டு விழா எடுத்தது. ஜெயலலிதா தலைமை தாங்கினார் அப்போது வாசித்த வாழ்த்து மடலை இப்போது படிக்கிறேன்.
பள்ளிப் படிப்பு இல்லை,
பரம்பரை பெருமை இல்லை,
இளமையில் வறுமையை இறுகத் தழுவியவன்,
ஆயினும் கலை உலக நாயகி கலைவாணியின் ஆசி பெற்று திரைஉலகில் அழியாது இடம்பிடித்து விட்டான்
ஒருசாண் முகத்தில் ஒராயிரம் பாவனை காட்டி, சிம்மக்குரலில் தீந்தமிழ் பேசி, அவன் படைத்த பாத்திரங்கள் திரையில் அசைகின்ற ஓவியங்கள்,
கர்ணனாக, கட்டபொம்மனாக, சிவாஜியாக, செங்குட்டுவனாக, அரிச்சந்திரனாக , அசோகனாக, அப்பராய், ஐந்தாம் ஜார்ஜாக, வ உ சி யாக, வாஞ்சியாக அவன் ஏற்ற வேடங்கள் எங்களுக்கு பாடங்கள். நடக்கும் நடையில் நானூறு வகை காட்டினான்.
மொத்தத்தில் நவரசங்களில் நமக்கு நவராத்திரி காட்டிவிட்டான்.
கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்கு பின் என மானிட வரலாறு சொல்ல,
சிவாஜிக்கு முன் சிவாஜிக்கு பின் என தமிழக திரைவரலாறு சொல்லும்.
வாழ்க சிவாஜி நாமம்!
ஓங்குக சிவாஜி புகழ்! நன்றி.”என சொல்லி முடித்தார்.
நன்றி!
cinema murasam.com
இணையத்திலிருந்து...
"உங்கள் மந்தையில் இருந்து இரண்டுஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன..இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே... "
இன்று 08.03.2020 மதியம் 1.30 மணிக்கு புதுயுகம் டிவி யில் - நடிகர்திலகம் நடித்த வெற்றி படம். !!!
" ஞான ஒளி " படத்தை கண்டு களியுங்கள். !!!
சிவாஜி, சாரதா, மேஜர்சுந்தராஜன் நடித்து உள்ளனர். !!!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...21&oe=5E977228
"வசந்த மாளிகை"
சிங்கிள் டீ குடிக்கக் காசில்லாவிட்டாலும், ஒவ்வொரு ஆண்மகனுமே தன்னை அழகாபுரி ஜமீனாகத்தான் நினைப்பான். ஆனால், வாணிஶ்ரீயைப் போன்ற ஒரு அழகு தேவதை தன் வாழ்க்கையை வந்து மாற்றுவாள் என்று எதிர்பார்ப்பான். சிலருக்கு அந்தத் தேவதை கிடைக்கலாம்; கிடைக்காமல் போகலாம். ஆனால், அந்த தேவதையோடுதான் மனத்தளவில் வாழ்வான், இதுதான் ஆணின் மனநிலை. இதுவே இந்தப் படம் ஆண்களால் இன்றும் கொண்டாடப்படுவதற்குக் காரணம்.
காட்சிப்பொருளாகத் தன்னை நினைப்பதைவிட, சுயமரியாதையும் நேர்மையுமே ஒருபெண்ணின் அழகு என்பதை நிரூபித்து, வறுமையிலிருந்தாலும் வைராக்கியத்துடன் வாழும் பெண்ணாக வாணிஶ்ரீயைக் காண்பித்ததால், பெண்களும் இந்தப் படத்தைக் கொண்டாடினார்கள்.
சிவாஜி கணேசன்சிவாஜி கணேசன்
படம் வெளிவந்த 1972-ஆம் ஆண்டு எல்லாப் பத்திரிகைகளிலும் பின் அட்டை மற்றும் நடுப்பக்கத்தில் ஆரஞ்சு வண்ணப் பட்டுப் புடவையில் வாணிஶ்ரீயும், வெளிர்நீல கோட்டில் சிவாஜியும் அரவணைத்துக்கொள்ளும் படம்தான் இடம்பெற்றது. இன்றைக்கு அறுபது வயதிலிருக்கும் பலரின் ஞாபக மலராக இந்தப் புகைப்படம்தான் சினிமா ஸ்டில்லாக இருந்து வருகிறது.
இதற்கொரு விசேஷக் காரணம் உண்டு. 'பிரேம் நகர்' என்ற இந்தக் கதையை எழுதியவர், கௌசல்யா தேவி எனும் தெலுங்குப் பெண் எழுத்தாளர். பாத்திரங்களின் சிருஷ்டியிலேயே சம்பவங்களைக் கருக்கொள்ளச் செய்யும் உன்னதமான கதை.
'வசந்தமாளிகை' எனும் கதையைக் காலத்தால் அழிக்க முடியாத காவியமாக்கிய வேறு இருவர் கவியரசர் கண்ணதாசனும், கே.வி.மகாதேவனும்தான்.
சிவாஜி கணேசன்சிவாஜி கணேசன்
திரையில் இடம்பெற்ற பாடல்களை டி.எம்.எஸ், சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் தங்களின் குரல் வளத்தால் கேட்கத் திகட்டாத தேன்கிண்ணமாக்கினார்கள். தமிழக வானொலியிலும், இலங்கை வானொலியிலும் இந்தப் பாடல்கள் ஒலிக்காத நாள்களே இல்லை. டீக்கடையில் பாட்டைக் கேட்டால் சைக்கிளை நிறுத்திப் பாடலைக் கேட்டுவிட்டுத்தான் போவார்கள். காரணம் டேப்-ரெக்கார்டர், சிடிக்கள், டி.விக்கள் இல்லாத காலம் அது.
இவை மட்டும்தான் காரணமா என்ன? ஒரு திரைப்படம் உள்ளடக்கத்திலும், உருவாக்கத்திலும் கைதேர்ந்த கலைஞர்களிடம் கிடைக்கும்போது அதைச் சிற்பமாகச் செதுக்கிவிடுவார்கள்.
படத்தில் இடம்பெற்ற வசனங்கள்
''லதா விஸ்கியைத்தானே குடிக்கக்கூடாதுனு சொன்ன... விஷத்தைக் குடிக்கக்கூடாதுனு சொல்லலையே...''
''நான் பொறந்தது யாருக்காகன்னு தெரியாது...! ஆனா, நீ பொறந்தது எனக்காகத்தான்...''
வசந்தமாளிகை
வசந்தமாளிகை
“இது இறந்துபோன காதலிக்காகக் கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல, உயிரோடு இருக்கும் காதலிக்காகக் கட்டப்பட்ட வசந்த மாளிகை. இது சமாதி அல்ல. சந்நிதி. ஆண்டவன் மட்டும் எனக்குப் பறக்கும் சக்தியைக் கொடுத்திருந்தால், அந்த வானத்து நட்சத்திரங்களையெல்லாம் எடுத்து வந்து நீ வாழப்போகும் வீட்டுக்கு வண்ணத் தோரணங்களாகத் தொங்க விட்டிருப்பேன்.''
இவையெல்லாம் வசனத் துளிகளின் சாம்பிள். காதல் கதைகளில் இப்படி ஒரு படம் வந்ததுமில்லை, இனி வரப்போவதுமில்லை.
''என் இதய மாளிகையில் என்றும் குடியிருப்பவர் 'வசந்தமாளிகை' சிவாஜி. என் அனுபவத்தில் நான் 'வசந்த மாளிகை' திரைப்படத்தை 40 முறைக்குமேல் பார்த்திருப்பேன். முதல் முறை மட்டுமே சிவாஜிக்காகப் பார்த்தேன். மீதம் 39 முறைகளிலும் நான் சிவாஜியாகிவிட்டேன். உணர்வு ரீதியாக நானும் சிவாஜியும் ஒன்றாகவே பயணித்தோம்.''
இது சிவாஜி ரசிகர் ஒருவரின் கருத்து.
நன்றி!; சினிமா விகடன்.காம்
இணையத்திலிருந்து......
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...39&oe=5E95721A
Madurai central Engirundho vanthal