-
ஆயிரத்தில் ஒருவன் 50வது நாள் விழா
ஓல்டு இஸ் கோல்டு என்பார்கள். அது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் படங்களுக்கு கட்டாயம் பொருந்தும். 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த காலத்தால் அழிக்க முடியாத காவியம் ஆயிரத்தில் ஒருவன். படத் தயாரிப்பில் நஷ்டமடைந்து பொருளாதார சிக்கலில் இருந்த பி.ஆர்.பந்தலுவுக்கு உதவுவதற்காக எம்.ஜி.ஆர் தானே முன்வந்து நடித்துக் கொடுத்த படம். இன்றைக்கு பலரது கடனை அடைத்துக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கு பி.ஆர்.பந்தலு சிவாஜியை வைத்து தொடர்ந்து படம் எடுத்தவர்.
திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் ஆயிரத்தில் ஒருவனை டிஜிட்டல் மற்றும் சினிமாஸ்கோப்பாக மாற்றி புதிய தரமான ஒலிப்பதிவை சேர்த்து மீண்டும் வெளியிட்டார். தமிழ்நாடு முழுவதும் சுமார் 150 தியேட்டர்களில் ரிலீசானது. இன்றைய பெரிய ஹீரோக்கள் படமே 25 நாட்களை தாண்டுவதற்குள் நாக்கு தள்ளிவிடுகிறது. மக்கள் திலகத்தின் படம் ஆல்பட் தியேட்டரில் 50 நாள் ஓடி சாதனை படைத்து விட்டது.
ஆயிரத்தில் ஒருவன் ஆஃப் செஞ்சுரி அடித்ததை அவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடிவிட்டார்கள். எம்.ஜி.ஆர் கட்வுட், பாலாபிஷேகம், வாழ்த்து போஸ்டர்கள் என ஆல்பர்ட் வளாகத்தை ஆட்டிபடைத்து விட்டார்கள். நிகழ்ச்சியில் பழம்பெரும் நடிகைகள் ராஜஸ்ரீ, சி.ஐ.டி சகுந்தலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு திவ்யா பிலிம்ஸ் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. 50வது நாள் அன்று படம் பார்க்க வந்திருந்த ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள் இனிப்பு வழங்கினர்.
COURTESY DINAMALAR
http://cinema.dinamalar.com//tamil-n...es-50-days.htm
-
நூறாவது நாட்களை நோக்கி வெற்றி நடைபோடும் ஆயிரத்தில் ஒருவன்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் டிஜிட்டலில் கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் இன்று வெற்றிகரமாக 50வது நாளை கொண்டாடுகிறது.
பி.ஆர்.பந்தலு இயக்கத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனின் அற்புதமான இசையில் கடந்த 1965ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் சுமார் 50 வருடங்கள் கழித்தும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்று இருப்பது பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
சென்னையில் சத்யம் காம்ப்ளக்ஸில் உள்ள ஸ்டுடியோ 5 மற்றும் பேபி ஆல்பர்ட் ஆகிய இரண்டு தியேட்டர்களிலும் தினசரி ஒரு காட்சியாக இன்னும் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருப்பதை பார்த்தால் இந்த திரைப்படம் நூறு நாட்களை கண்டிப்பாக தாண்டும் என்று கூறப்படுகிறது.
இந்த படம் டிஜிட்டலில் வெளியான தினத்தில் முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.thedipaar.com/cinema/ayir...ruvan-50thday/
-
-
MGR and Jayalalitha starrer Aayirathil Oruvan Movie 50 Days Celebration at Baby Albert Theatre, Chennai. Director BR Panthulu daughter BR Vijayalakshmi, Shanthi Chokkalingam graced the event.
http://cinema.nilavaithedi.com/2014/...tion-stills-3/
-
உறங்கையிலே பானைகளை
உருட்டுவது பூனைக்குணம் - காண்பதற்கே
உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்குக் குணம் - ஆற்றில்
இறங்குவோரைக் கொன்று
இரையாக்கல் முதலைக்குணம் - ஆனால்
இத்தனையும் மனிதனிடம்
மொத்தமாய் வாழுதடா !
பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போகப் போகப் மாறுது - எல்லாம்
இருக்கும்போது பிரிந்த குணம்
இறக்கும்போது சேருது !
பட்டப்பகல் திருடர்களைப்
பட்டாடைகள் மறைக்குது - ஒரு
பஞ்சையைத்தான் எல்லாஞ் சேர்த்து
திருடனென்றே உதைக்குது !
காலநிலையெ மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது - புலியின்
கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலைப்பிடிச்சி ஆட்டுது - வாழ்வின்
கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத்தேடிப் பூட்டுது - ஆனால்
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது !
புரளிகட்டிப் பொருளைத் தட்டும் சந்தை - பச்சை
புளுகை விற்றுக் சலுகை பெற்ற மந்தை - இதில்
போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை
உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் - நம்பி
ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் - நாம்
உளறி என்ன,கதறி என்ன?
ஒன்றும் நடக்கவில்லை தோழா - ரொம்ப நாளா !
https://www.youtube.com/watch?v=v-tn4VycSPM
-
-
-
OUR GOD MGR MEANS
best actor in the world
best director in the world
best technician in the world
best producer in the world
evergreen boxoffice empereor in the world cinema
evergreen popularity politician of the india
evergreen style king of world cinema
million of people worship god
best humanity person in the world
-
எங்க வீட்டு பிள்ளை திரைப்பட வசூலை அடிமை பெண் திரைப்படம்
மட்டுமே முறியடித்து உள்ளது என்பதற்கு ஆதாரமாக விவரங்கள்
வெளியிட்டுள்ள நண்பர் திரு.வினோத் , அதை வழிமொழிந்தாற்போல்
செய்திகள் வெளியிட்டுள்ள நண்பர்கள் திரு. கலிய ;பெருமாள், திரு.யுகேஷ் பாபு, திரு. செல்வகுமார் ஆகியோரின் கருத்துக்களை
நான் ஆமோதிக்கிறேன.
அப்போது மட்டுமல்ல எப்போது திரையிட்டாலும் , அன்றும் இன்றும்
என்றும் எங்க வீட்டு பிள்ளை திரைப்பட வசூலை மற்றொரு மக்கள்
திலகத்தின் படம் மட்டுமே முறியடிக்க முடியும்.இதுதான் நிதர்சனமான
உண்மை. அதற்கு ஆதாரமாக பழைய பிரிண்ட் வைத்து கொண்டே
விநியோகஸ்தர்கள் அவ்வப்போது அரங்குகளில் திரையிட்டு லாபம்
ஈட்டுகின்றனர்.
ஆர்.லோகநாதன்.
-
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
"இன்று போல் என்றும் வாழ்க" காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் பக்க தோற்றம் : http://i61.tinypic.com/28m1kox.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Thank you very much it is a treasure for MGR Fans.