Dear (Goldstar) Satheesh
காணக் கண்கோடி வேண்டும்.. அற்புத அணிவகுப்பு.. தலைவரின் புன்னகை தவழும் மதிமுகம் பார்த்தாலே பசி தீரும்...
அருமை அருமை அருமை..
Printable View
Dear (Goldstar) Satheesh
காணக் கண்கோடி வேண்டும்.. அற்புத அணிவகுப்பு.. தலைவரின் புன்னகை தவழும் மதிமுகம் பார்த்தாலே பசி தீரும்...
அருமை அருமை அருமை..
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...77027534_o.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...26396193_o.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
சுந்தர் சார்,
நண்பர் ஆர்கேஎஸ் கூறியிருப்பது சரியான கருத்து. ஆகவே இந்த பதிவை நீக்கி விடுகிறேன்.
அன்புடன்
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.[/quote]
சுந்தர்ராஜன் சார்
ஒரு சிறு விண்ணப்பம்.
இந்த பத்திரிகை செய்தி பதிவை நீக்கினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன்.
காரணம், நமது கர்ணன் காவியம் ஓட்டத்தை பற்றி ஏதேனும் தவறான தகவல் மாற்று திரியில் வெளியாகும் பட்சத்தில், இந்த பத்திரிகை செய்தி நாம் பதிவிட்டால் சரியாக இருக்கும் என்று நினைகிறேன்.
அப்படி எந்த பதிவும் வராத பட்சத்தில் இந்த பத்திரிகை செய்தி பதிவு செய்யவேண்டாமே சார். சுமூக உறவை நம் தரப்பில் இருந்து வளர்ப்போமே !
என் எண்ணம் / கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
Regards
rks
தரம் தாழ்துதலை பற்றி யார் யாருக்கு அறிவுரைப்பது என்பது வர வர விவஸ்தையே இல்லாமல் இருக்கிறது.
போடும் பதிவுகளில் ஒரு புள்ளியேனும் தரம் தாழ்த்தாமல் பதிவிடுவது யார் என்பது திரிகளை படிப்பவர்களுக்கு நன்றாக தெரியும்...விளங்கும். !
அதை கேட்டு பதில் பதிவு செய்தால் திரியில் குழப்பம் விளைவிக்கிறோம் என்று பிரச்சனையை ஞ்யாயம் கேட்பவர் தலைமேல் சுமத்துவது யாருக்கு கை வந்த கலை என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும்.
இப்போது கூட அதே நிலை. நண்பர் யுகேஷ் கேள்வி பதிவு பதிவு செய்தார் . அதற்க்கு சிவா பதில் அளித்தார். அதில் எந்த தவறும் இல்லை.
மேலும் யார் உண்மையான வசூல் சக்ரவர்த்தி, யாரால் தமிழ் திரை உலகம் செழிப்படைந்தது, கூத்தாடிகள் என்று அதுவரை கேலிசெய்யப்பட்ட கலையுலகினரை அவர் மானத்தை யார் காப்பாற்றினார்கள் என்பதும் உண்மை தமிழர்க்கு தெரியும். யாரால் தமிழ் திரை உலகம் உலகளவில் புகழ் பெயர் பெற்றது, மற்ற திரை உலகங்களை யார் திரும்பிப்பார்க்க வைத்தார் என்பதை நான்கு கண்டங்களும் நன்றாக அறியும்.
யாரும் நமக்கு அதை டியூஷன் எடுக்கவேண்டிய நிலையில் நாம் இல்லை.
மதுரையில் நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருந்தும் ...இரண்டு வாரங்களுக்கு முன்பு யார் நம்மை தமது கேவலமான காழ்புணர்ச்சியால் வயிற்றெரிச்சலால் போஸ்டர் அடித்து வீண் வம்பிழ்த்தார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
ஆகையால் தேவையற்ற வாத பிரதிவாதங்களை தவிர்த்து அவர் அவர் புகழ் பாடினால் நன்று.
Rks
Sri. MUKTHA RAVI's FACEBOOK INTERVIEW ABOUT NADIGAR THILAGAM's DEDICATION & MAGNANIMITY
படம்: அந்தமான் காதலி
பாடல் ;"பணம் என்னடா பணம்"
அந்தமானில் எடுத்து விட்டு, .சென்னை வந்த பிறகு . படத்திற்கு இந்த பாடல்அவசியம் என்பதால் மதுரை அருகே அதே(அந்தமான் ) போல் காட்சி தரும் இடத்தில எடுக்கபட்டது
மதுரை விமானத்தில் இருந்து இறங்கும் பொழுது கால்தடுக்கி விழுந்ததில் கால் Fracture. அருகே மதுரை hospitalil
காலில் கட்டு போட்டார்கள்.
http://i501.photobucket.com/albums/e...psu9jmassb.jpg
நாங்கள் சென்னை திரும்பிவிடலாம் என்று முடிவு செய்தவுடன் .. சிவாஜி .. இல்லை. ஷூட்டிங் நிற்க கூடாது என்று பிடிவாதமாக அவர் எங்களுக்கு முன்னாடி தேக்கடி பக்கம் காரில் சென்றார் ,
மறுநாள் காலை ஷூட்டிங் ... மேக் அப் போட்டு ரெடியாகி விட்டார் & அவருக்கு ஜுரம் வேறு .
ஒரே நாளில் ஷூட்டிங் .
அவர் சொன்னது "விரக்தியில் பாடர பாட்டு Moodum வலியும் sync ஆகும் . மலையின் மேடு பள்ளத்திலும் நடந்தார்.
அதுலேயும் அவரின் நகைச்சுவை உணர்வு :
"பணம் என்னடா பணம் பணம் .. காலை பார்த்து "குணம் (கால் வலி) தானடா நிரந்தரம்... அம்மா ( என்று சிரித்தார் ) "
இன்றும் பாட்டைஇப்ப முரசு டிவி யில் பார்க்கும் பொழுது .. அவர் கஷ்ட்டபட்ட நினைவுகள் .... மனதை நெருடும்
நாகரீகம் கருதி நடிகர் திலகம் திரிக்கு வராதவர் பற்றி இங்கு எல்லோருக்குமேநன்றாக தெரியும். நேருக்கு நேராக வரட்டும் என்று சொல்லி கண்ணாடி முன் அமர்ந்து பதில் அளிப்பவர்தானே அவர். நாம் போனால் 'இது எங்க ஏரியா. உள்ளே வராதே' என்று நேருக்கு நேராய் வரவேற்பவராயிற்றே!!! செவாலியே பட்டம் புதுவையில் எத்தனை பேர் துட்டு குடுத்து வாங்கினார்கள் என்று லிஸ்ட் போட்டவராயிற்றே. சிவாவின் பதிலுக்கு பதில் சொல்வதை விட்டு பதிவை நீக்கச் சொல்லி கேட்கிறார். உண்மை பதிவை நீக்கச் சொல்லி கேட்கும் அவர் தான் சொன்ன பொய் பதிவுகளை நீக்கினால் ஒன்றிரண்டாவது நிற்குமா என்று தெரியவில்லை.
வாய்யா கல்நாயக் சிங்கம். இப்பத்தான் களை கட்டுச்சு.
இவர்கள் ,தங்கள் வாத்யாரின் மற்ற நீதி கருத்துக்களை காற்றில் விட்டு விட்டு ஒன்றை மட்டுமே எடுத்துள்ளார்கள்.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த .......
உன்னை புரிந்து கொண்டோம்.
இங்கு வந்து சாட்டையுடன் கலாட்டா பண்ணியதெல்லாம் மறந்துடுச்சா?
From the facebook
கண்களில்
பக்தியும், பண்பும் நீந்த,
கந்தக் கடவுளுக்கு முன்
கைகூப்பி நிற்கிற
கம்பீரத்தை..
மக்களின் குறை கேட்க
ஓட்டமும், நடையுமாய்
விரைந்தோடும் எழிலை..
தம்பி மகள்
வாள் சுழற்றும்
அழகை ரசிக்கையில்,
வாளோடு வாளாகச்
சுழலும் அந்தக் கண்களை..
திருடனைப் பிடித்து விட்டால்
அவன் குடும்பம் என்னாகும்?
என குழந்தை வினவ,
அந்த அக்கறையை வியக்கும்
அய்யாவின் பாவனையை..
சிறு தொகையாவது
வரியாகச் செலுத்தக் கோரும்
ஆங்கில அதிகாரியிடம்,
மறுத்து அவர்
நியாயம் உரைக்கும்
தோரணையை..
வேறு வேடத்தில் வந்த
எட்டப்பனைப் புரிந்து கொண்டு
மடக்கும் வீராவேசத்தை..
அவனைப் புரிந்து கொண்டாலும், காட்டிக்
கொள்ளாமல்
கிண்டலாகச் சொல்லும்
'அதாவது'களை..
பாம்பிடமிருந்து
காதலர்களைக் காப்பாற்றி,
"நான்கு நாட்கள்
பொறுக்க முடியுமா?"
எனக் கேட்டுச் சிரிக்கும்
தெய்வீகச் சிரிப்பை..
வந்து பேட்டி காணும்படி
கர்வமாய் w.c.ஜாக்ஸன் எழுதிய கடிதம்
வாசிக்கப்படும் போது,
"பார்த்தீர்களா?"என்பது போல்
அய்யா முகம் கேட்கும்
கேள்வியை..
அளிக்கப்படாத ஆசனத்தை
தனதாக்கிக் கொள்கிற
ஆண்மையை..
அமர்ந்த ஆசனத்தின்
கைப்பிடியில் இடக்கை ஊன்றி
விரல் நுனிகளைத்
தொட்டு உருட்டும் அழகை..
கொள்ளையையும்,கொலையையும்
தடுக்க வேண்டிய மந்திரியே
கொள்ளைக்கும்,கொலைக்கும்
காரணமானது கண்டு வெகுண்டு,
ஆத்திரமும், ஆவேசமும்,
அர்த்தமுள்ள
உள்ளப் பொருமலுமாய்
அவரை வாங்கு, வாங்கென்று
வாங்குவதை..
முருகக் கடவுளை
வணங்கி நிற்கையில்,
எட்டப்பர் உளவு சொல்லி,
அன்றிரவே ஆங்கிலேயர்
படையெடுத்து வரப் போகும்
தகவல் வர,
உடல் திருகி, விழி உருட்டி,
கை பிசைந்து
அடி வயிற்றிலிருந்து சொல்லும்
வெற்றி வேல்..வீரவேலை..
வெள்ளையத் தேவனும்,
ஊமைத்துரையும்
அவரவர் மனைவியரிடம்
பக்கம்,பக்கமாய்ப் பேசும்
வசனத்திலிருக்கும் வீரத்தை,
உருவிய குறுவாளை
மீண்டும் உறைக்குள்ளிடும்
ஒரே விஷயத்தில்
காட்டுகிற திறமையை..
நாடு விட்டு
வந்திருக்கலாகாது
எனக் காட்டும்
குற்ற உணர்வுக்கான
குரல் கரகரப்பை..
பிடிக்க ஆளனுப்பிய
புதுக்கோட்டை மன்னருக்கு
எள்ளலுடன் போடும்
"ராஜ..ராஜ.."-வை..
கொக்கரிக்கும்
இரும்புத் தலையருக்கு,
கோபத் தமிழால் கொடுக்கும்
வசனச் சாட்டையடிகளை..
அணிவகுத்து நின்று
அழுது கதறும்
மனிதப் பெருங்கூட்டத்தின்
நடுவே,
ஒரு சிங்கமென
நடந்து செல்லும்
பேரழகை..
நான் போவது
வருத்தமெனினும்
நாடு காக்க
ஒரு கூட்டம் வருமென்று,
தூக்குக் கயிறை
முத்தமிட்டுத் தரும்
கடைசி நம்பிக்கையை..
விழிகளிளெல்லாம்..
மனங்களிலெல்லாம்..
நீக்கமற நிறைந்திருக்கிற
நம் நடிகர் திலகத்தின்,
"வீரபாண்டிய கட்டபொம்மன்"
எனும்
ஐம்பத்தாறு ஆண்டுகளுக்குப்
பிறகு புதிய தொழில் நுட்பம்
அணிந்து வரும்
புரட்சிக் காவியத்தை..
மீண்டும்
காணத் துடித்திருக்கின்றன-
கோடிக்கணக்கான விழிகளோடு
என் இரண்டு விழிகளும்.