Originally Posted by
saradhaa_sn
டியர் பம்மலார்,
'கௌரவக் களேபரங்கள்' கொஞ்சம் குறைந்தபின் இதைப்பதிவிடலாம் என்று தாமதித்தேன்.
'தர்மம் எங்கே' படத்தின் நிறைவுப்பகுதியாக அப்படம் பற்றி நடிகர்திலகம், கலைச்செல்வி, மற்றும் இயக்குனர் ஏ.சி.டி. ஆகியோரின் கட்டுரைகளைப் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. ரசிகர்கள் மட்டுமல்ல, அதில் பணியாற்றியோரும் அப்படத்தின் வெற்றியைப் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர் என்பது தெளிவாகிறது. படம் வெளியாகும் முன் வந்த இந்தக் கட்டுரைகளையும் அவற்றுடன் இருந்த ஸ்டில்களையும் பார்த்துதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறிப்போனது. அந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான 'ராஜா'வை இப்படம் வசூலில் மிஞ்சும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டதாம்.
அது (1972) நமது நடிகர்திலகம் சாதனைகளைப்புரிந்த ஆண்டு மட்டுமல்ல, அந்த சாதனைகளை இன்று இங்கு உரக்க பறைசாற்றிக்கொண்டிருக்கும் நீங்கள் பிறந்த ஆண்டும் கூட அல்லவா?.
'கைகொடுத்த தெய்வம்' வெளியீட்டு நாளையொட்டி உங்களின் விளம்பர அணிவகுப்பு அருமை. தேடிக்கொணர்ந்து குவிக்கும் உங்களை எப்படி பாராட்டுவது, எப்படி நன்றி சொல்வது?. அதற்கெல்லாம் அப்பாற்பட்டு போய்விட்டீர்கள்.
அட, ராஜபார்ட் ரங்கதுரையில் 'பகத் சிங்'கை கைதி உடையில் ஒரு படம் பிரசுரித்தீர்கள். நண்பர் அவர் தொப்பியணிந்த போஸில் உள்ள படம் வேண்டும் என்றதும் உடனே பதிக்கிறீர்கள். Google Search பகுதியில் தேடினால் கூட இவ்வளவு விரைவில் கிடைக்காது. அவ்வளவு வேகம், சுறுசுறுப்பு. நீங்கள் எங்களுக்குக்கிடைத்த பெரிய GIFT.
No Doubt.