-
டியர் வாசு சார்,
அசத்தல் என்றால் இது தான். நண்பர் கார்த்திக் சொன்னதை 100க்கு 1000 மடங்கு அப்படியே ஏற்றுக் கொள்ளலாம். ஒரே பதிவில் கிட்டத் தட்ட 1500 வார்த்தைகளில் சந்திப்பின் சந்திப்பை சூப்பராக சொல்லி யுள்ளீர்கள். மற்றவர்களுக்கு கிட்டத் தட்ட 75 பதிவுகள் - ஒரு பதிவுக்கு 20 வார்த்தைகள் என்ற கணக்கில் வைத்துக் கொண்டால் - தேவைப் படும் விஷயத்தை ஒரு பதிவில் சொல்லி கலக்கி விட்டீர்கள். இது போல் இன்னும் பல தியேட்டர் அனுபவங்களையும் மன்ற அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்.
அன்புடன்
ராகவேந்திரன்
-
அன்பு பம்மலார் சார்,
வார்த்தைகள் வரவில்லை தங்களை வாழ்த்த. நெஞ்சமெல்லாம் நிறைந்து போய் சந்தோஷக் கடலில் மிதப்பது போல ஒரு உணர்வு. 3000 பதிவுகள் என்பது சாதாரண ஒரு விஷயமல்ல. ஒரு சீரிய அர்ப்பணிப்பு. தெய்வத்தின் மேல் உள்ள ஈடுபாடு, வாஞ்சை. கருமமே கண்ணாக ஒன்றே செய் அதை நன்றே செய் என்பதை வெகு அழகாக, படு நேர்த்தியாக பளிங்கு போன்ற தங்கள் பதிவுகள் மூலம் நிரூபித்துக் கொண்டு வருகிறீர்கள். பிரம்மிப்பாகத்தான் இருக்கிறது. உலகெங்கும் உள்ள உத்தமரின் ரசிகர்களின் பார்வையில் பம்மலாரின் பதிவுகள் படாமல் போகாது என்றால் அது மிகையல்ல. மூவாயிரத்துக்குப் பின்னால் உள்ள உழைப்பு அசுரத்தனமானது. பசி நோக்காமல், கண் துஞ்சாமல், ஓய்வெடுக்காமல், ஒழிச்சல் இல்லாமல், கால நேரம் பார்க்காது எக்காலமும், எந்த நேரமும் ஆவணங்கள்... ஆவணங்கள்.... பதிவுகள்....பதிவுகள் என்று எங்களுக்கு பதிவு அன்னமிட்ட அன்புச் சகோதரராய் அள்ளி வழங்கிய தாங்கள் மூன்று லட்சம் பதிவுகளானாலும் சளைக்க மாட்டாமல் பதிவுப் பணி புரிய நல் உடல் ஆரோக்கியத்தையும், வளத்தையும் நம் ஆண்டவர் தங்களுக்கு அளித்து காலமெல்லாம் தங்கள் மூலம் எங்களையெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் மிதக்க வைக்கப் போவது உறுதி. மூவாயிரம் பதிவுகளுக்கும் தனித்தனியே என் மூவாயிரம் நன்றிகள். தொடர்க தங்கள் தொண்டு. வாழிய தாங்கள் வளமுடன்.
நெஞ்சு நிறைய வாழ்த்தும்.
அன்புச் சகோதரன் வாசுதேவன்.
-
அன்பு பம்மலார் சார்,
'சந்திப்பு' சினிமா எக்ஸ்பிரஸ் முதல் வெளியீட்டு விளம்பரப் பதிவு முத்தான மூவாயிரம் பதிவுகளை அளித்த தங்களை நம் இறைவனார் தம் இரு கரங்களினாலும் நெஞ்சு நிறைய வாழ்த்துவது போல அமைந்தது எவ்வளவு பொருத்தம்!
தங்களது 3000- ஆவது அசத்தல் மற்றும் ஸ்பெஷல் பதிவான 'இருவர் உள்ளம்' 'பேசும் படம்' பதிவுகள் அப்படியே அள்ளிக்கொண்டு போகின்றன.
இருவர் உள்ளங்களை மட்டுமல்ல... இரண்டு கோடி உள்ளங்களை மகிழ்வுறச் செய்யும் அற்புதப் பதிவு. சூப்பர்.
சுந்தரத்தமிழன் புகழ்பாடும் சுவரொட்டிகள், பதாகைகள் படு அமர்க்களம். அழகான பதிவுகளுக்கு அன்பு நன்றிகள்.
மறந்து விட்டேன். நண்பர்கள் தினத்தை முன்னிட்டு தாங்கள் கடந்த 5 -8-2012 அன்று அளித்திருந்த தலைவரும், ஜெமினியும் இணைந்த பா.ப. தீரும் ஸ்டில் தூள். 'உனக்காக நான்' எனக்காக நீ என்று வாழும் நம்மை நினைவு படுத்துவது போல் 'ராமு ஐ லவ் யூ' பாடலை நம் நட்பின் அடையாளமாக வீடியோவாக அளித்ததற்கு நன்றி!
-
VASU sir
SANDIPPU essay simply superb. more than the movie we have enjoyed MUTHAIAH theatre experience.
-
VasuDevan,
Very nice write up on Santhippu experience .. Bus Stand-kku pakkathula oru Bridge-kku keeLa irukkume ..antha theatre thaan Muthaih-vaa ?
-
மூவாயிரம் பதிவளித்த பம்மலாரே! முப்பதினாயிரம், மூன்று லக்ட்ஷம், முப்பதுலக்ட்ஷம், ... என பலப்பல கடந்து செல்ல, பல்லாண்டு வாழ்ந்து நடிகர் திலகம் புகழ் பாடிட வாழ்த்துகள்.
வாசுதேவனாரே!
கடலூர் முத்தையா திரைஅரங்கு 'சந்திப்பு' வெளியீடு விவர கலாட்டா கொண்டாட்டத்தை எழுதி எனது நினைவுகளையும் கிளறி விட்டீர்கள். நான் உங்களை போல் அதிதீவிர ரசிகனில்லை தான் (படம் வெளியானபோது சற்றே சிறுவன்). வீட்டிலும் ரசிகனாய் இப்படி கொண்டாட அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் வாய்ப்பு கிடைத்தால் நடிகர் திலகத்தின் திரைப்படங்களை பார்க்கத்தவற மாட்டேன். நானும் கடலூரில் குறிப்பிட்ட காலம் வாழ்ந்தவன்தான். முத்தையா திரை அரங்கை நன்கு அறிவேன். கடலூர் திரை அரங்குகளுக்குள் நடிகர் திலகத்தின் திரைப்படங்களை வெளியிடுவதற்கு போட்டியிருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதிலும் இந்த குடோன் முத்தையா திரை அரங்க நிர்வாகிகளுக்கு நடிகர் திலகத்தின் படங்களை திரை இடுவதற்கு பயங்கர பேராசை. எப்படியோ சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பு 'சந்திப்பு' படத்தை வெளியிடுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது. பேராசை பேரு நஷ்டமாகி விட்டது. இந்த ரகளை ஆகிவிட்டது. நானும் ரசிகர்களின் ரகளையை பிறர் சொல்ல கேட்டிருக்கிறேன். இப்போது நீங்கள் உறுதி செய்து விட்டீர்கள்.
நானும் 'சந்திப்பு' வெளியான முதல் வாரத்திலேயே இதே முத்தையாவில் ஒரு நாள் இரவு காட்சிக்கு எனது தந்தையாருடன் சென்று பார்த்து வந்திருக்கிறேன். எனது அப்பா கூட்டம் எப்படி என்று பார்க்க வரிசையினை சுற்றி பார்க்க போய், எனது அப்பாவின் கட்டுமஸ்த்தான உடலை பார்த்து மப்டி-யில் போலிஸ் வந்திருப்பதாக நினைத்து ஒருவர் பயந்து 'போலிஸ், போலிஸ்' என்று கத்தி கியூ-வில் குறுக்கே புக நினைத்தவர்கள் கியூ-வை விட்டு விலகி ஓடி ஒழுங்காக வரிசையில் நின்று டிக்கட் எடுத்து சென்றதும், நாங்கள் எளிதாக டிக்கட் எடுத்ததும் இப்போதும் என் நினைவில் புன்னகை தவழ வைக்கிறது.
-
சந்திப்பு வெளியான போது நான் 5-வது வகுப்பு மாணவன் என நினைக்கிறேன் ..சந்திப்பு படத்தை பார்த்தே ஆக வேண்டும் என வீட்டில் நான் அடம் பிடிக்க அம்மா என் அண்ணணிடம் என்னை நாகர்கோவிலுக்கு கூட்டிச்சென்று சந்திப்பை சந்திக்க அனுமதி தந்தார்கள் .அண்ணனும் என்னை நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்குக்கு அழைத்துச் செல்ல கூட்டமென்றால் கூட்டம் அப்படி ஒரு கூட்டம் ..அரங்கு நிறைந்தது என சொல்லப்பட நானோ கிட்டத்தட்ட அழும் நிலையில் :lol: ..வேறு வழியில்லாமல் வந்தது வந்தோம் என அண்ணன் அழைத்துச் சென்ற படம் தங்கம் திரையரங்கில் 'மெல்லப் பேசுங்கள்' .பின்னர் மீண்டும் அடம் பிடித்து எப்படியோ சந்திப்பு பார்த்த பின்னர் தான் ஓய்ந்தேன் .
அப்போதெல்லாம் கல்யாணம் மற்றும் சுபகாரியங்களுக்கு ஊர் முழுக்க ஒலிபெருக்கி கட்டி பாட்டு போடும் போது ஒரு பெட்டி நிறைய ஒலித்தட்டுகள் இருக்கும் ..அதன் கவர் அந்த படத்தின் ஸ்டிகளோடு அருமையாக இருக்கும் ..சந்திப்பு ஒலிவட்டு கவரில் இருக்கும் படத்தை பார்ப்பதற்காகவே ஒலி அமைப்பாளரை போய் நச்சரித்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது .. ஷோலாப்பூர் ராஜா ..ஷோலாப்பூர் ராணி :)
-
Vasu sir,
Excellent write up on Santhipu. More than the movie your writing was nice .Expecting more from you
-
டியர் பம்மலார் சார்,
இருவர் உள்ளம் அற்புதத் திரைக்காவியத்தின் பேசும் பட நிழற்படங்கள் தங்களுடைய மூவாயிரமாவது பதிவாய் அமைந்து முத்திரை பதித்தது மிகப் பொருத்தம். புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை ஆயிற்றே, கண்ணெதிரே தோன்றினார், கனிமுகத்தைக் காட்டினார், தண் தமிழைக் காட்டினார், தனித்துவத்தை நிலை நாட்டினார்....
வாழ்த்துக்கள் மீண்டும் மீண்டும் ....
அன்புடன்
ராகவேந்திரன்
-
மலேசிய சிவாஜி கணேசன் கலை மன்றம் சார்பில் நடைபெற்ற நடிகர் திலகம் சிவாஜி நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்வில், சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் திரு மருது மோகன் ஆற்றிய சிறப்புரையினை நாம் இங்கு காணொளியாய் பகிர்ந்து கொள்ளலாம். முதலில் பாகம் 1.
http://youtu.be/cft1NcCONXw