Originally Posted by
MASTHAAN SAHEB
மதுரை சென்டரலில் மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு ரெகுலெர் ஷோ ஆக ஓடுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலைக்காட்சி அரங்கு நிறைந்ததாக தகவல்.
கோவை சண்முகா தியே்ட்டரில் மக்கள் திலகம் வாரத்திலும் அங்கு நேற்று ஒளிவிளக்கு படம். அங்கும் நேற்று மாலைக்காட்சி அரங்கம் நிறைந்தது எனத் தகவல் வந்துள்ளது. மதியம் இரவு காட்சிகளிலும் நல்ல கூட்டம் வந்திருக்கிறது.
ஒளிவிளக்கு திரைப்படம் இப்போது தமிழகம் முழுவதும் டிஜிட்டிலில் வெளியிடப்படவில்லை. இருந்தாலும் வெவ்வேறு ஊர்களில் ஒரே நாளில் ஓடுகிறது. மக்கள் திலகத்தின் படங்கள் மக்களால் எப்படி வரவேற்கப்படுகிறது என்பதற்கு இது உதாரணம்.