https://i.postimg.cc/YS6fb5XF/IMG-4481.jpg
Printable View
சினிக்கூத்து - நவம்பர் 2019
--------------------------------------------
நம்பியார் நூற்றாண்டு* -1919 -- 2019
--------------------------------------------------------
மாஞ்சேரி நாராயணன் நம்பியார் என்பதன் சுருக்க பெயர்தான் எம்.என்.நம்பியார் .ஜூபிடர் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தங்களது படங்களில் தொடர்ந்து நடிக்க மாத சம்பளத்திற்கு நம்பியாரை ஒப்பந்தம் செய்ய விரும்பி அழைத்தது .
நம்பியாரும் அங்கே சென்றார் .* ஏற்கனவே அந்நிறுவனத்தில் மாத சம்பள நடிகராக இருந்த எம்.ஜி.ஆர். முன்பின் பரிச்சயம் இல்லாதபோதும் நம்பியார் மீது அக்கறை கொண்டு உங்கள் திறமையை வியக்கும் முதலாளிகள் உங்களுக்கு மாத சம்பளமாக ஒரு நல்ல தொகையை பேசவிருக்கிறார்கள் .* அதனால் இந்த தொகையை (உதாரணமாக நூறு ரூபாய் கேளுங்கள் ) என நம்பியாரிடம் சொன்னார் .
இந்த ஆள் இந்த கம்பெனியில் ரொம்ப நாளாக மாத சம்பள நடிகராக இருக்கிறார் .நம்மை இந்த கம்பெனி முதலாளிகள் நிராகரிக்க வேண்டும் என்கிற கெட்ட எண்ணத்தில் பெரிய தொகை கேட்க சொல்கிறாரோ என எம்.ஜி.ஆர். மீது சந்தேகம் கொண்டார் நம்பியார் .**
ஜூபிடர் முதலாளிகளான சோமசுந்தரமும், மொய்தீனும் நம்பியாரை அழைத்து பேசி மாத சம்பளம் என்ன வேண்டும் என கேட்க நம்பியார் முன்யோசனையுடன்*குறைந்த சம்பளம் கேட்டார் .* (உதாரணம் ஐம்பது ரூபாய் ).**
ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்த நம்பியார் , ஏதோ சந்தேகம் கேட்க மீண்டும் அறைக்குள் நுழைய போனபோது கம்பெனி முதலாளிகள் பேசிக்கொள்வது நம்பியாரின் காதில் தெளிவாக விழுந்தது .
மாத சம்பளமாக நம்பியாருக்கு நல்ல தொகை தரலாம் என நினைத்தோம்*அவரோ குறைந்த தொகை போதும் என சொல்லிவிட்டாரே என வியப்பு தெரிவித்தனர் . முதலாளிகள் இருவரும் நம்பியாருக்கு தர திட்டமிட்டிருந்த தொகையைத்தான் எம்.ஜி.ஆர். கேட்க சொன்னார் .**
இதை உணர்ந்த நம்பியார் , அடடா நமக்கு நல்லது சொன்ன ராமச்சந்திரனை சந்தேகப்பட்டு விட்டோமே, என சங்கடமானார் .* அன்றில் இருந்து தொடங்கியது*எம்.ஜி.ஆர். நம்பியார் நண்பேன்டா சரித்திரம் .
எம்.ஜி.ஆர். கதாநாயகனாக அறிமுகமான ஜூபிடர் தயாரித்த ராஜகுமாரியில்*எம்.ஜி.ஆரின் நண்பராக நடித்தார் நம்பியார் .* ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர். தூக்கு மாட்டி கொள்ள வேண்டும்.* ஆனால் இயற்கை அவரை சாக விடாதபடி தூக்குமேடையின் பள்ளத்தில் எம்.ஜி.ஆர். விழுந்துவிடுவதாக காட்சி.**ஆனால் திட்டமிட்டதற்கு மாறாக தூக்கு கயிறு எம்.ஜி.ஆரின் கழுத்தை இறுக்க*சட்டென விரைந்து செயல்பட்டு எம்.ஜி.ஆரை கயிற்றிலிருந்து விடுவித்தாராம் நம்பியார் .**
எம்.ஜி.ஆர். நம்பியார்* நட்பில் சிலசமயம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிகழ்வுகளும் உண்டு.* இதுபற்றி நம்பியாரை ஒருமுறை சந்தித்து நாம் கேட்டபோது , நம்பியாருக்கு எம்.ஜி.ஆர். செய்த துரோகம்னு தலைப்பு வைச்சு நான் சொல்றத எழுதுங்க .* எம்.ஜி.ஆர்ன்னாலே அடுத்ததா நினைவுக்கு வருவது நம்பியார்.* அப்படி இருக்கையில் நம்பியாரை அம்போனு விட்டுட்டு அரசியல்ல இறங்கி முதலமைச்சராகி விட்டாரே .* இது நண்பன் நம்பியாருக்கு எம்.ஜி.ஆர். செய்த துரோகம்தானே , என பதில் தந்தார் நம்பியார் .
எம்.ஜி.ஆயருக்கு வில்லனாகவே பார்த்து பழகிய நம்பியாரை ஹீரோவாக வும் மாற்றி யோசித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார் எம்.ஜி.ஆர். அந்த படம் நினைத்ததை முடிப்பவன் .
https://youtu.be/JfQVIasUZD0.......... Thanks.........
https://youtu.be/LDZx8mN6P8Y............ Thanks...........
இப் புலனத்தில் உள்ள அன்புச் சகோதர - சகோதரியர் அனைவரும் அறிவது..... பொற்கால ஆட்சி தந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் 32 வது நினைவு நாளையொட்டி , சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகில் காலை 24.12.19 செவ்வாய்க் கிழமை காலை 11.00 மணி அளவில், சென்னை மாநகரில் புரட்சித் தலைலவர் பெயரில் இயங்கி வரும் அனைத்து அமைப்புக்களின் சார்பில் மாபெரும் அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது. இப்பேரணியில் தமிழகம் முழுவதிலுமிருந்து முகநுல் அன்பர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். எனவே, தாங்கள் அவசியம் காலை 11.00 மணிக்கே அண்ணா சிலை அருகில் வந்து விடவும். மிக்க நன்றி ! அன்புடன் அழைக்கும் .... சௌ. செல்வகுமார், செயலாளர், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கம்.......... Thanks.........
கோவை - சண்முகா dts., தினசரி 4 காட்சிகள் ஏக வசூல் சக்கரவர்த்தி நம் மன்னாதி மன்னர் வழங்கும்"பறக்கும் பாவை" காவியம் வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...
The beginning of a new history
என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகள் மலேசியா வீர வாலிபர்கள் ஹிமாலய மலையினை தாண்டி அன்னபூரண மலை உச்சியில் டாக்டர் எம்.ஜி.ஆர் உலக ஆராய்ச்சி மையத்தின் பெருமையினை நாட்டிய வீர மலேசியா ரத்தத்தின் ரத்தங்களை வரவேற்க்க ஆனந்த கண்ணீருடன் காத்திருக்கின்றேன் !
https://m.facebook.com/story.php?sto...85268901959424.......... Thanks...
கோவை டிலைட்டில் 24/12/19* செவ்வாய் முதல், புரட்சி தலைவரின் 32 வது*நினைவு நாளை முன்னிட்டு* "பணக்கார குடும்பம் " தினசரி 2 காட்சிகள் கண்டிப்பாக 3 நாட்கள் மட்டும் திரையிடப்படுகிறது .
தகவல் உதவி: கோவை நண்பர் திரு.புரட்சி மலர் சிவா .
கோவை டிலைட்டில் 27/12/19 வெள்ளி முதல் கலைவேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த*தேவரின் "தாயை காத்த தனயன் " தினசரி 2 காட்சிகள் திரைக்கு வருகிறது .
தகவல் உதவி : கோவை நண்பர் திரு.புரட்சி மலர் சிவா .
*“மச்சம்யா அந்த* *மனுஷனுக்கு !”*
எம்.ஜி.ஆர். பற்றி என் நண்பர்களோடு பேசும்போது “நச்”சென்று ஒரே வாக்கியத்தில் இப்படி கமெண்ட் அடிப்பார்கள்.
ஆம். அப்படி மற்றவர்கள் பொறாமைப்படும்படி வாழ்ந்த போற்றத்தக்க மனிதர்தான் எம்.ஜி.ஆர்.
சினிமாவில் இருந்தவரை சிகரம் தொட்ட சிம்மாசனம்.
அரசியலில் நுழைந்தால் , அரசாளும் அரியாசனம் .
இப்படி வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.
வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அவரது வெற்றி முகம் மட்டும்தான் தெரியும்.ஆனால் அவருக்குள் இருந்த வேதனை மனம் -
அதை யார் அறிவார் ?
தன் வாழ்க்கை பற்றி ஒரே வரியில் எம்.ஜி.ஆர். சொன்ன இந்த வாசகம் , நம் இதயத்தை உலுக்குகிறது.
எம்.ஜி.ஆர். சொன்னது :
”என் வாழ்க்கையில் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்றுவரை போராட்டமாகவே இருக்கிறது!”
இதை அவரது சாதாரண சங்கட காலங்களில் சொல்லி இருந்தால் பரவாயில்லை.
ஆனால் , புகழின் உச்சிக்குப் போனபின் , ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது இப்படிச் சொன்னாராம் எம்.ஜி.ஆர்.
ஆம் . போராட்டங்கள்தான் புரட்சி நடிகராக இருந்த எம்.ஜி.ஆரை , புரட்சி தலைவர் ஆக்கியது.
"எல்லோரும் எம்.ஜி.ஆர். போல ஆக முடியுமா ?" என என் நண்பர்கள் சிலர் என்னிடம் கேட்பதுண்டு.
அவர்களிடம் நான் கேட்கும் பதில் கேள்வி :
“ஏழாவது வயதிலேயே வயிற்றுப்பிழைப்புக்காக நாடகக் கம்பெனியில் சேர்ந்து , பசியிலும் பட்டினியிலும் சோர்ந்து ,
ஒரு நடிகராக உருவெடுப்பதற்குள் அவர் பட்ட அவமானங்கள்.
அதை நம்மில் எத்தனை பேர் பட்டிருப்போம் ; அல்லது படத் தயாராக இருப்போம் ?”
எனது இந்தக் கேள்விக்கு பல நண்பர்களின் பதில் மௌனமே !
அது மட்டுமா ?
1959 இல் நாடகத்தில் நடித்தபோது கால் முறிவு.
1967 இல் துப்பாக்கிசூடு.
1972 இல் தான் வளர்த்த சொந்தக் கட்சியை விட்டு தூக்கி எறியப்பட்ட அவலம்.
இது எல்லாவற்றையும் விடுங்கள்.
ஒரு சாதாரண சராசரி மனிதனாக அவரது இதயத்தின் அடித்தளத்தில் இருந்த ஏக்கம்... அது ஈடில்லாத பெரும் துக்கம்.
இதோ, அந்த சோகம் -
அவரது சொந்த வார்த்தைகளில் :
“எனக்கு ரெண்டு, மூணு கல்யாணம் ஆகியும் ஒரு குழந்தை கூட பிறக்கலியே ! எந்த ஒரு புண்ணியவதியாவது என் வாரிசை அவ வயித்திலே பத்து மாசம் சுமந்து பெத்து என் கையிலே குழந்தையா கொடுக்க மாட்டாளா ? அப்படிங்கற அந்த நிரந்தரமான ஏக்கம் என் நெஞ்சை விட்டு எப்பவுமே நீங்க மாட்டேங்குது !”
நெஞ்சை நெகிழ வைக்கிறது அந்த நினைத்ததை முடிப்பவனின் நிறைவேறாத ஆசை.
நான் நண்பர்களிடம் சொல்வேன் : “இவ்வளவு சோதனைகள் , ஏக்கங்கள் , அவமானங்கள் ...
எல்லாவற்றையும் படத் தயாராக இருந்தால் , எம்.ஜி.ஆர். ஆக ஆசைப்படலாம் , எல்லோருமே!”
இதற்கு என் நண்பர்களின் பதில் , ஏக்கப் பெருமூச்சு மட்டுமே !
ஆம் . நாம் ஏக்கத்துடன் பார்க்கும் பல பெரிய மனிதர்களின் வாழ்க்கை
ஏக்கங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது !✍🏼🌹............ Thanks.........
நாளை (20/12/19) வெள்ளி முதல் விருதுநகர் அல்லம்பட்டி ஸ்ரீராமில்* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அகிலம் போற்றும் "ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டலில் தினசரி 4* காட்சிகளில் வெள்ளி* திரைக்கு வருகிறது .
தகவல் உதவி :மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .
மாலை மலர் -19/12/19
அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது :அ.தி.மு.க. நிறுவனர் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 32 வது* ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது .**
இதையொட்டி வருகிற 24ந்தேதி* செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ .தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும்* துணை முதல் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளரும் , முதல்* அமைச்சருமான*எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அமைச்சர்களும், தலைமை கழக நிர்வாகிகளும்* மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர் .
அதை தொடர்ந்து ,எம்.ஜி.ஆர். நினைவிடத்தில்* உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.* இதில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் , எம்.பி. , எம்.எல்.ஏக்கள் மற்றும் அனைத்து பிரிவு பிரதிநிதிகளும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது .
மாலை முரசு -19/12/19
டிசம்பர் 24ந்* தேதி 32 வது நினைவுநாள்*
-------------------------------------------------------------
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி - ஓ .பி.எஸ். அஞ்சலி*
---------------------------------------------------------------------------------------------
வருகிற 24ந் தேதி எம்.ஜி.ஆரின் 32 வது* ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு*அவரது* நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்துகின்றனர் .இது குறித்து அ. தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள* செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது :
எம்.ஜி.ஆரின் 32வது* ஆண்டு நினைவு நாளான 24-12-2019 செவ்வாய்க்கிழமை*காலை 10.35 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள*எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ. தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் , துணை முதல்*அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ,இணை* ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தலைமை கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர்* வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர் .* அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவிடம், வளாகத்தில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது .**
வெள்ளி முதல் (19/12/19) திருப்பூர் அனுப்பர்பாளையம், கணேஷில் புரட்சி தலைவர்*புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "குடியிருந்த கோயில் " தினசரி 4 காட்சிகளில் வெள்ளித்திரைக்கு விஜயம் .
தகவல் உதவி : திருப்பூர் நண்பர் திரு.நடராஜன் .
சென்னை அகஸ்தியாவில் வெள்ளி முதல் (20/12/19) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நினைவுநாளினை முன்னிட்டு , தேவரின் "விவசாயி " தினசரி மாலை காட்சி மட்டும் திரையிடப்படுகிறது .
தகவல் உதவி : தங்கசாலை திரு.ராமு .
அறிந்தும் அறியாதது
தெரிந்தும் தெரியாதது
புர*ட்சித்த*லைவ*ருட*ன் சிலோன் எம்ஜிஆர் என்றழைக்க*ப்ப*ட்ட* விஜ*ய* கும*ர*ணதுங்கே!
இவ*ர் 114 ப*டங்க*ளில் ந*டித்துள்ளார். பெரும்பாலும் வெற்றிப்ப*ட*ங்க*ளே. பாட*க*ர், அர*சிய*ல் த*லைவ*ர், த*யாரிப்பாள*ர் என ப*ன்முக*த்தன்மை கொண்ட*வ*ர்.
தன*து அர*சியல் எதிரிக*ளால் 1988 பிப்ர*வ*ரியில் கொடூர*மாக சுட்டுக்கொல்ல*ப்ப*ட்டார். அப்போது இவ*ர் வ*ய*து 43 மட்டுமே. விஜ*ய* கும*ர*ணதுங்கே ம*றைந்த* பிற*கும் இவ*ர் ந*டித்த சில ப*ட*ங்க*ள் வெளியாகி வெற்றி பெற்ற*ன. த*மிழில் ந*ங்கூர*ம் என்ற* ப*ட*த்தில் லட்சுமிக்கு ஜோடியாக* ந*டித்துள்ளார்.
1984ல் ஸ்ரீல*ங்கா ம*காஜ*ன க*ட்சியை விஜ*ய*குமார*துங்கே துவ*க்கினார். இவ*ர*து மனைவி ச*ந்திரிகா குமார*துங்கே 10 ஆன்டு காலம் இலங்கை அதிப*ராக இருந்துள்ளார்.......... Thanks.........
பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் சிறப்புகள்...
---------------------------------------------------------------------
உலக சினிமா சரித்திரத்தில் , 1995ம் ஆண்டு இடம் பெற்ற மூன்று இந்தியர்களில் முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்..
புரட்சி நடிகர் , மக்கள் திலகம் , பொன்மன செம்மல் , கொடை வள்ளல், எட்டாவது வள்ளல் ,வாத்தியார் , கொள்கை வேந்தன், கலை வேந்தன், கலைச்சுடர், நிருத்திய சக்கரவர்த்தி, வசூல் சக்கரவர்த்தி, ஏழை பங்காளன் , கலைக்காவலன் , விநியோகஸ்தர்களின் அமுதசுரபி , கற்பக விருட்சம், அட்சய பாத்திரம், நடிக மன்னன் , நடிகர் சக்கரவர்த்தி, மக்கள் தலைவர் , பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனி ,ஏழைகளின் இதயதெய்வம் , போன்ற எண்ணற்ற பட்ட பெயர்களை பெற்றவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .
நடிகர்களில் தேசிய அளவில் "பாரத்" விருது பெற்றதில் முதல்வர் ...........
மூன்றுமுறை தொடர்ந்து முதல்வராக 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆண்டவர் .முப்பிறவி கண்ட முதல்வர் ..........
1967ல் குண்டடிபட்டு , அரசு மருத்துவமனையில் அமர்ந்து கொண்டே தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமலேயே சட்ட மன்ற உறுப்பினராக ஆனதோடு , தி.மு.க. அரசு கட்டிலில் அமர முழுமுதல் காரணமாக திகழ்ந்தவர் .- பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டது .
1984ல் அமெரிக்காவில் படுத்துக் கொண்டே பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமலேயே மீண்டும் வெற்றி பெற்று ,
தமிழக முதல்வராக ,எதிரிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து பதவி ஏற்றவர் .
1987ல் மறைந்த பின்னர், 1988 ம் ஆண்டு, மறைந்தும் மறையாது தமிழர்கள் நெஞ்சங்களில் வாழும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரு.க்கு "பாரத ரத்னா" எனப்படும் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது ............
1972ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 2022ல் பொன்விழா காண உள்ளது .
இந்த தருணத்தில் அ. தி.மு.க. தொடர்ந்து ஆட்சியில் பயணிப்பது சிறப்பான
விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது .
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
பெயர் - மத்திய அரசு செயலாக்கம் .
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் - சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு அறிவிப்பு .
மதுரை மாட்டுத்தாவணியில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் செயல்பாடு - தமிழக அரசு அறிவிப்பு .
சேலம் புதிய பேருந்து நிலையம் -பாரத ரத்னா டாக்டர் எம்.ஜிஆர். பேருந்து நிலையம் என சில வருடங்களுக்கு முன்பு பெயர் மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு .
திருநெல்வேலியில் புதிய பேருந்து நிலையம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையமாக செயல்பாடு - சில வருடங்களுக்கு முன்பு தமிழா அரசு அறிவிப்பு
சென்னை போரூர் மேம்பாலத்திற்கு பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். மேம்பாலம் என்று பெயர் அமைப்பு - சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு
சென்னை நுங்கம்பாக்கத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை உருவாக்கம் .
சென்னை கே.கே.நகருக்கு அருகில் எம்.ஜிஆர். நகர் .
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள், துணை நகரங்களில் எம்.ஜி.ஆர்.நகர் , எம்.ஜி.ஆர். தெரு உருவாக்கம் .
பாராளுமன்றத்தில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். முழு உருவச்சிலை .
மலேசியாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முழு உருவ சிலை .
சமீபத்தில் மலேசியாவில் மக்கள் தலைவர் எம்.ஜி..ஆர். மையம் திறப்பு .
1970ல் ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ 70ல் படமாக்கப்பட்டு , 1973 ல் வெளியாகி வசூலிலும், சாதனைகளிலும் தமிழ் திரையுலகை புரட்டிபோட்டதோடு ,மறுவெளியீடுகளில் அவ்வப்போது வெளியாகி விநியோகஸ்தர்களின் அமுதசுரபியாக திகழ்வதோடு , விரைவில் டிஜிட்டல் தொழில்நுடபத்தில் வெளிவந்து அசுர சாதனை நிகழ்த்த உள்ள ஒரே திரைக்காவியம் உலகம் சுற்றும் வாலிபன்
1978ல் சினிமாவில் நடிப்புத்துறையில் இருந்து விலகி 41 வருடங்கள் , 1987ல் உடலால் மறைந்து , உள்ளத்தால் தமிழர்களின் இதயங்களில் 32 ஆண்டுகளாக
வாழ்ந்து வரும் நேரத்தில் , சென்னை, மதுரை, கோவை, வேலூர், சேலம், நெல்லை, திருச்சி , தூத்துக்குடி, மற்றும் துணை நகரங்கள், சிற்றூர்களில்
மறுவெளியீடுகளில் முதல்வராக இன்னும் பவனி வரும் ஒரே நடிகர் எங்கள்
மக்கள் திலகம் மட்டுமே .
தமிழ்நாட்டில் முக்கிய நகரங்கள், துணை நகரங்கள், மூலை முடுக்கெல்லாம் மக்கள் தலைவரின் மார்பளவு, மற்றும் முழு உருவ சிலைகள்.
சென்னை திருநின்றவூர் அருகில் நத்தமேடு கிராமத்திலும், பொதட்டூர்பேட்டை அருகில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கோவில்கள் .
வரும் 13/06/2019 & 14/06/20/19 நாடககளில் சென்னை தரமணியில் உள்ள மைய தொழில்நுட்ப பயிலாக வளாகத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்வு இருக்கை யின் அகில இந்திய கருத்தரங்கம்
நடைபெற உள்ளது .நிகழ்ச்சியில் கலை, பண்பாடு , மொழி, சமூகம் ஆகியவற்றில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு பற்றி முனைவர்கள், சான்றோர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள்.
முன்னாள் அமைச்சர் திரு.சி.பொன்னையன் ,அமைச்சர் திரு.பாண்டியராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்வர் .
வெளிநாடுகளில், சிங்கப்பூர், மலேசியா, துபாய், லண்டன்,(பாரிஸ் ) பிரான்ஸ், பர்மா ,இலங்கை (கொழும்பு ), மொரீஷியஸ் , ஆகிய வற்றில்
அவ்வப்போது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய விழாக்கள், நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன .
இந்த சிறப்புகள், இந்திய துணை கண்டத்தில் வேறு எந்த ஒரு நடிகருக்கும் ,மாநில தலைவருக்கும் கிடைத்திராதவை என்பது குறிப்பிடத்தக்கது .
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தினரும், பக்தர்களும், ரசிகர்களும் ,விசுவாசிகளும், அபிமானிகளும் அ .தி.மு.க. தொண்டர்களும் பெருமையாக கருதவேண்டிய விஷயங்கள்........... Thanks...........
.மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 32 வது* நினைவு நாளை முன்னிட்டு தமிழகத்தில் இந்த வாரம் (20/12/19) வெளியான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் பட்டியல் விவரம்*
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை அகஸ்தியா - விவசாயி* - தினசரி மாலை காட்சி மட்டும் .-
மதுரை அனுப்பானடி பழனி ஆறுமுகா* -* எங்க வீட்டு பிள்ளை -* * * * ** * * * * * * * * * தினசரி 3 காட்சிகள்*
திண்டுக்கல் - என்.வி.ஜி.பி.* *- எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்*
கோவை* - சண்முகா* - பறக்கும் பாவை - தினசரி 4 காட்சிகள்*
கோவை - டிலைட்* * - பணக்கார குடும்பம்* -தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * * * * * * * * * * * * * (24/12/19 முதல் )
திருப்பூர் அனுப்பர்பாளையம்* கணேஷ் - குடியிருந்த கோயில் -* 24/12/19* அன்று சிறப்பு* காட்சி மட்டும்*
விருதுநகர் அல்லம்பட்டி ஸ்ரீராம் -* ஆயிரத்தில் ஒருவன் _தினசரி 4 காட்சிகள்*
விவரங்கள் கிடைத்ததன் அடிப்படையில் பதிவு செய்துள்ளேன். மேலும் பல நகரங்கள், துணை நகரங்கள் , கிராமங்களில் அவ்வப்போது வெளியாகும் தலைவர் படங்கள் நமக்கு தகவல் தெரியாமல் ஓடி கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது .
இன்றைய தனியார் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------------------
20/12/19* - கே.டிவி* *- பிற்பகல் 1 மணி* - வேட்டைக்காரன்*
* * * * * * * *** * * * * * * * * *வசந்த்* *=* பிற்பகல்* 1.30 மணி* - தாயின் மடியில்*
* * * * * * * * * *ஜெயா டிவி* *- இரவு* 11 மணி* - விக்கிரமாதித்தன்**
#காதலிலும் #கண்ணியம்
#எம்ஜிஆர் அவர்கள் படத்தில் காதல் காட்சிகள் ‘ஸ்வீட்டாக’ இருக்கும்...
நடிகை ஸ்ரீதேவியிடம் எடுத்த பேட்டி ஒன்றில் எம்.ஜி.ஆர் பற்றிக் கேட்டபோது இப்படிக் குறிப்பிட்டார். இதற்கு மேல் துல்லியமாக எம்ஜிஆர் படக் காதல்காட்சிகளை வருணிக்க இயலாது...
அவர் ஒரு நடிகை என்பதாலும் சிவாஜி, என்.டி.ஆர், நாகேஸ்வரராவ் போன்ற மூத்த நடிகர்களோடு காதல் காட்சிகளில் நடித்தவர் என்பதாலும் எம்.ஜி.ஆர் படக் காதல்காட்சிகளை ‘ஸ்வீட்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இன்றைய படங்களில் வரும் காதல் காட்சிகளைக் குடும்பத்தோடு பார்க்கவே முடியாது. காதலை விட விரசம் தான் அதிகமாக இருக்கும்...காதல் என்னும் போர்வையில் "காதலைக் கேவலமாக்கி" வைத்திருப்பர்...
ஆனால் புரட்சித்தலைவர் படங்களில் காதல் பாடல்களில் முத்தக்காட்சிகள் இலைமறைக் காயாக, பூடகமாக இடம் பெற்றன. அவற்றில் ஒரே ஒரு திரைக்காவியத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.
பணக்காரக் குடும்பம்' படத்தில் ஒரு பாடல் முத்தத்தில் தொடங்கி அதன் உணர்வுகளை விளக்குவதாகத் தொடரும். ஆனால், முத்தமிடும் காட்சிப் பூடகமாகக் கூடக் காட்டப்பட்டிருக்காது...
வெளியே ஒரே மழை. ஒரு மாட்டுவண்டியின் அடியே எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் மழைக்கு ஒதுங்கி உட்கார்ந்திருப்பார்கள். எம்ஜிஆர் சரோஜாதேவியை முத்தமிட நெருங்கி வருவார். அடுத்த காட்சியில் சரோஜாதேவி பாடத்தொடங்குவார்.
“இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா? இப்படியென்று தெரிந்திருந்தால் தனியே வருவேனா? என்று கேட்கும்போது ‘இதற்காக’ என்பது ‘முத்தத்திற்காக’ என்பது பார்வையாளருக்குத் தெரிந்துவிடும்.
“அதுவரை வந்தால் போதும் போதும்
அடுத்தது என்னம்மா?
ஆரத்தி மேளம் மணவறை கோலம்
வருமா சொல்லம்மா?
என்று கேள்வியாகவே பதில் அளிப்பார் ‘அதுவரை’ என்று குறிப்பிட்டது ‘முத்தம் மட்டும்’ பெற்றால் போதும் என்று சொல்வதாகப் பார்வையாளர் உணர்ந்துகொள்ளலாம்.
சரோஜாதேவி இந்தப் பாட்டில் தான் பெற்ற முத்தத்தின் மகிழ்ச்சியை
“அம்மம்மா இது புதுமை – நான்
அறியாதிருந்த …… (சிரிப்பார்)
பேச முடியாத பெருமை – இந்த
இனிமை இனிமை இனிமை
என்று இனிமையான முத்தத்தை ரசித்துப் பாடியிருப்பார்.
இந்தப்பாட்டில் முத்தம் இடம் பெற்றதைத் சரோஜாதேவியின் முகபாவத்திலும் மகிழ்ச்சியிலும் ஊகித்து அறியலாம்.
சண்டைக்காட்சியிலும் மனிதாபிமானம், காதலிலும் கண்ணியம்
#அதான் #வாத்தியார்.......... Thanks.........
செய்தி திருத்தம்
----------------------------
திருப்பூர் அனுப்பர்பாளையம் கணேஷ் அரங்கில் இன்று முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.இரு வேடங்களில் நடித்த "குடியிருந்த கோயில்"தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது என்பது தவறான செய்தி.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு வரும் செவ்வாய் கிழமை அன்று சிறப்பு காட்சி நடைபெற உள்ளது என்பது சரியான தகவல் .தவறுக்கு வருந்துகிறேன்
பெங்களூர் "அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை"
பனிவுடன் படைக்கும்
நம் தெய்வம் டாக்டர். எம்ஜிஆர் அவர்களின் பெருமைமிகு புரட்சி வரலாறுகளை உலகெங்கும் பரப்பும் முயற்ச்சியில்...
மற்றுமொரு சாதனையாக வருகின்ற 2020ன் , 103வது பிறந்தநாளை முன்னிட்டு,
அட்வான்ஸ் கொண்டாட்ட விழாவாக விசுவாசமுள்ள புரட்சித் தொண்டர்களின் இல்லத்தில் ஜொலிக்கும் வகையில் அசத்தலான பெரிய அளவில் கண்ணை பரிக்கும் அழகு வண்ணத்தில் அபூர்வ புகைப்படங்களுடன் 2020ம் ஆண்டு எம்ஜிஆர் காலண்டர் வெளியிடப் படுகிறது.
வாங்கி பாதுகாத்து மகிழ தொடர்பு கொள்ளுங்கள்....
எம்ஜிஆரின் காலடி நிழல்
க. பழனி 6364043271
சம்பங்கி ஜி. எஸ். ஆர்.
9731185524
க. ராஜசேகர் 9880825975
டி. பிரகாஷ் 9964466361
சுதர்சன் 7019119815
.......... Thanks.........
தலைவர் தன் குருவாக மதித்த கலைவாணர் தன் 49 ஆவது வயதில் நோய்வாய் பட்டு சிகிச்சை பெற்று வர.
அவர் உடன் இருந்த 5 முக்கிய சீடர்கள் காக்கா ராதாகிருஷ்ணன், டனால் தங்கவேலு மற்றும் அனைவருடனும் தம்பி எம்ஜியார் மிகவும் நல்லவர் நான் மறைந்து விட்டால் அவருக்கு உதவியாக இருங்கள் என்று பல முறை கூற
ஒரு நாள் சிகிச்சை பெற்று வந்த போது அசந்து தூங்கி விட கண் முழித்த பின் இங்கு என்னை பார்க்க தம்பி எம்.ஜி.ஆர் ., வந்து இருந்தாரா ?!என்று கேட்க, ஆமாம் அண்ணே... நீங்க உறங்கி கொண்டு இருப்பதால் எழுப்ப வேண்டாம் என்று சொல்லி போய் விட்டார் அவர் சொல்ல.
எப்படி எம்.ஜி.ஆர்., வந்தாரா? என்று சரியாக கேட்கிறீர்கள் என்று அனைவரும் கேட்க.
வேறு எவர் இந்த நாட்டில் நான் தூங்கி கொண்டு இருக்கும் போது என் தலையணை கீழே ஒரு பேப்பரில் சுற்றி இவ்வளவு பணத்தை வைக்க போகிறார் என்று சொல்ல.
கொடுக்கும் உதவி கூட அடுத்தவர் நிலை அறிந்து விளம்பரம் செய்யாமல் கொடுத்த வள்ளல் புகழ் என்றும் காப்போம்.
வாழ்க எம் ஜி.யார்., புகழ் நன்றி..தொடரும்............. Thanks.........
பிரான்சு எம் ஜி ஆர் பேரவை - புதுவை எம் ஜி ஆர் பேரவையினரின் அன்பான வேண்டுகோள் : வரும் 24/12/2019 செவ்வாய் கிழமை காலை 11.30 மணியளவில் சென்னை மாநகர அனைத்து தலைவர் அமைப்புகள் ஓரணியில் ஒருங்கிணைந்து பேரணியாய் அமைதியாக அறிஞர் அண்ணா சிலையருகில் இருந்து புறப்பட்டு வங்கக் கடலோரம் துயில் கொள்ளும் தங்கத் தலைவரின் சதுக்கத்தில் மலரஞ்சலி செலுத்துகிறார்கள் ! அதில் அயல் நாட்டு பக்தர்கள் அபுதாபி சைலீஸ்பாசு அவர்களும்,துபாய் இரவிச்சந்திரன் அவர்களும் இன்னும் சிலரும் கலந்துக் கொள்கிறார்கள் ! உள்ளூர்,வெளியூர்,வெளி மாநில பக்தர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம் !நன்றி !.......... Thanks...
தினமலர் - இது உங்கள் இடம் -21/12/19
--------------------------------------------------------------
பன் ச்* டயலாக்* பேசி முதல்வரா* ?
------------------------------------------------------
கடலூர் செல்வநாதன்*
1996 லிருந்து அரசியலுக்கு வருவதாக கூறும் நடிகர் ரஜினி 22 ஆண்டுகள் கடந்தும்*இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை.* அப்போது பிறந்த குழந்தைகள் ஓட்டளிக்கும் தகுதிக்கு வந்துவிட்டனர் .* ஆனால் தேர்தல் வரும் 2021ல் ரஜினி கட்சி ஆரம்பித்து, உடனே, வெற்றி பெற்று விடுவாராம் .
எம்.ஜி.ஆருக்கு அரசியல் அனுபவம் இருந்தது .* 1972ல் தி.மு.க.விலிருந்து அவர் நீக்கப்பட்ட உடனே , அ.தி.மு.க.வை துவக்கினார் .* 1973ல் திண்டுக்கல்லில் நடந்த*லோக்சபா இடை தேர்தலில் அ .தி.மு.க. வெற்றி பெற்றது .* அதன்பின் 1977ல் சட்டசபை பொது தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார் .**
எம்.ஜி.ஆர். நடிகராக இருந்ததால்தான் முதல்வர் ஆனார் என ரஜினி நினைத்துக் கொண்டிருக்கிறார் . அதையும் தாண்டி மனித நேயத்தால் மக்கள் அன்பை பெற்றிருந்தார் .* அதனால் எம்.ஜி.ஆரால் வெற்றி* பெற முடிந்தது .
எம்.ஜி.ஆர். முதல்வர் ஆகும்வரை நடித்துக் கொண்டிருந்தார் .என கூறி இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த் . இது உண்மைதான் .மீனவ நண்பன், மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகிய படங்கள் முடியும் தருவாயில் இருந்ததால் அப்படங்களை முடித்து கொடுத்து முதல்வரானார் .
ரஜினி சொல்வதை பார்த்தால் , முதல்வர் பதவி மீது* ஆசை இருக்கிறது என்றே தோன்றுகிறது .
எம்.ஜி.ஆர்* மக்களோடு இருந்து மாளிகையை பார்த்தவர் .* ரஜினி மாளிகையில் இருந்து மக்களை பார்க்கிறார் .* அவர் இன்னும் மக்கள் மத்தியில் இறங்கி பழகவில்லை .* எம்.ஜி.ஆர். 10 ஆண்டுகள்* தொடர்ந்து முதல்வராக இருந்து*அமரரானார் .* இன்றும் அவர் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் .
ஆனால் ,ரஜினி 70 வது வயதில் கட்சியே ஆரம்பிக்காமல் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார் .* அது எப்படி சாத்தியம்* . பன் ச்* டயலாக் பேசி முதல்வராக முடியாது,* மக்கள் அன்பை மிகுதியாக பெற்றால்தான் அரசியலில் வெற்றி பெற முடியும் .* இது இல்லாத ரஜினியால், முதல்வராகும் கனவுகூட காண முடியாது .
வண்ணத்திரை வார இதழ் -கவிஞர் முத்துலிங்கம் பேட்டி .
-------------------------------------------------------------------------------------------
அரசியல் பற்றி உங்கள் கருத்து ?
என்னை அரசியல்வாதின்னுலாம் சொல்லிவிட முடியாது .* என்னோட முதன்மை*அடையாளம் கவிஞன்* என்பதுதான் .எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் சட்ட மன்ற மேலவை உறுப்பினராகவும், அரசவைக்கு கவிஞராகவும் இருந்தேன் .* தமிழ்த்தான் என்னை எல்லா இடத்திற்கும் கொண்டு சேர்த்தது*
எம்.ஜி.ஆரோடு நெருக்கமாக இருந்தீங்க இல்லையா ?
ஆமாம். அவர் முதல்வராக இருந்த பத்தாண்டுகளில் அவரோடு நெருக்கமாக இருந்தவர்களில் நானுமஒருவன் .* அலை ஓசை பத்திரிகையில் இருந்து விலகிவிட்டேன் என்கிற* செய்தியை சொல்லுவதற்கு* அவரோட அலுவலகத்திற்கு போயிருந்தேன் .* போனவுடனேயே செய்தி கேள்விப்பட்டேன் .* செலவுக்கு கொஞ்சம் பணம் வாங்கிக்குங்க . என்று சொன்னாரு .* பணம்லாம் வேண்டாங்க .உங்க படங்களில் தொடர்ந்து வேலை கொடுங்கன்னு சொன்னேன்.* என்னோட தன்மானத்தை பெரிதும் பாராட்டினார் .* அப்போது ஸ்ரீதரின் மீனவ நண்பன் படத்திலே எல்லா பாட்டும் ரெக்கார்ட் ஆயிடிச்சு,* எனக்கு வேலை கொடுக்கணுமேன்னு இல்லாத ஒரு சிச்சுவேஷனை படத்தில் உருவாக்கிக் கொடுத்தார் .அப்போ எழுதின பாட்டு தான் , தங்கத்தில் முகமெடுத்து , ஏழெட்டு வருஷம் கழிச்சு* அவர் முதல்வர் ஆகி எனக்கு பாரதி தாசன் விருது வழங்கறப்போ மேடையிலே இந்த சம்பவத்தை எல்லாம் துல்லியமாக நினைவு கூர்ந்து சொன்னார் இது எனக்கு மறக்க முடியாத நிகழ்வு..*
ஜூனியர் விகடன் - கேள்வி பதில்*
------------------------------------------------------
சினிமா நட்சத்திரங்களில்* அரசியல் முன்னேற்றம், எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா வுடன் முடிந்ததாக கருதலாமா ?
சலசலப்புகளை உண்டாக்கலாமே தவிர, ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு தனிப்பட்ட வகையில் யாரும் இன்னும் வளரவில்லை .* என்பதுதான் டி.ராஜேந்தர், பாக்யராஜ், சரத்குமார், விஜயகாந்த் ஆகியோரின் அனுபவம் சொல்லும் உண்மை.* கமல்ஹாசன் இப்போதுதான் களம் இறங்கி இருக்கிறார் .* அடுத்து ரஜினியும், பாயதயாராக இருக்கிறார் .* அவர்கள் எவ்வளவு தூரம் பயணிக்கிறார்கள் என்பதை வைத்துதான் முடிவு* சொல்ல முடியும்**
புரட்சித் தலைவரின்
நினைவு தினத்தை முன்னிட்டு.........
தலைவருக்காக...
பொன்னேரி -
வெற்றிவேல் A/C DTS.,
திரையரங்க
உரிமையாளர்
வேண்டுகோளுக்கு இணங்க...
நாளை முதல்...
தினசரி 4 காட்சிகளாக
புரட்சித் தலைவர் மாறுபட்ட
இரண்டு வேடங்களில் நடித்த தமிழ்திரையுலகில் பல சாதனைகள் படைத்த காலத்தால் அழியாத காவியம்
"எங்க வீட்டு பிள்ளை" ...
திரை காவியம்
திரையிடப்படுகிறது...
ரசிகர்களுக்காக
கட்டணத்தில்
பாதியை
குறைத்து
50/=ரூபாய்
கட்டணத்தில்
திரையிட
தியேட்டர்
உரிமையாளர்
ஒத்து கொண்டுள்ளார்...
அந்த நல்ல உள்ளத்துக்கு
புரட்சித் தலைவர் ரசிகர்கள் சார்பாகவும்
நம் குழுவின் சார்பாகவும்
திரைப்பட
விநியோகஸ்தர் என்ற
முறையிலும்
இதயங்கனிந்த
நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
நன்றி நன்றி நன்றி....... Thanks mr. Cheena kani...
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நினைவுநாள் 89.4 தமிழ் எப்ஃஎம். (துபாய்) வானொலி
சிறப்பு நிகழ்ச்சி 24.12.2019 மற்றும் 17.01.2020 ஆகிய புரட்சித்தலைவரின் நினைவுநாள் மற்றும்
பிறந்த நாள் ஆகிய நாட்களில் இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை “எம்.ஜி.ஆர் நேரம்”
எம்.ஜி.ஆர். ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க.. இடம்பெறுகிறது.
உலகமெங்கும் பரவி வாழும் தமிழ் மக்கள் நெஞ்சில் நிலைத்த புகழுடன் வாழும் மக்கள் திலகம் பற்றி.. முதன் முறையாக 89.4 தமிழ்ப் பண்பலை வானொலியில் எம்.ஜி.ஆர் நேரம் என்கிற நிகழ்ச்சி வாயிலாக அவர்தம் நினைவுநாளில் உலகெங்கும் உள்ள மக்கள் இணையத்தின் வாயிலாகக் கேட்டு இன்புறும் வண்ணம் தொடங்கியுள்ள இந்தச் சேவை.. பிரபலங்களின் கருத்துரைகளுடன்.. தலைவரின் புகழ்பரப்பும் பாடல்களுடன்.. கேட்டு மகிழுங்கள்.. உங்கள் கருத்துக்களை kkts1991@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்..
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு. சைலேஷ் பாசு & கவிஞர் காவிரிமைந்தன்
இணையதள தரவுகள்.. கீழே கொடுக்கப்பட்டள்ளன.............. Thanks.. .........
https://youtu.be/Dji_xYKdT28......... Thanks.. .... ...