https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...44&oe=5E956FE3
Printable View
அப்போது ஹாலிவுட்டின் மிகப்பெரிய நடிகர்களாக இருந்த ஐந்து நடிகர்கள் சிவாஜியோடு படம் எடுக்க விரும்பி சிவாஜியை நடுவே அமரச்செய்து மற்றவர்கள் அவர் அருகே நின்று கொண்டும் சிவாஜி அமர்ந்திருந்த நாற்காலியில் கைப்பிடிகளில் அமர்ந்து கொண்டும் படம் எடுத்துக் கொண்டார்கள். சிவாஜி சில பெரிய நடிகர்களின் தனிப்பட்ட அழைப்பின் பெயரில் அவர்கள் இல்லங்களுக்கும் சென்றார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சார்லஸ் ஹாஸ்டன். இவர் உலக அளவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட ‘டென் கமான்மெண்ட்ஸ்’ படத்திலும் ‘பென்ஹர்’ படத்திலும் நடித்து ஆஸ்கர் விருது பெற்றவர்.
இவருடைய இல்லத்திற்கு சிவாஜி சென்றபொழுது சார்லஸ் ஹாஸ்டன் தம்பதிகள் அவரை வரவேற்றார்கள். சிவாஜி அப்போது சார்லஸ் ஹாஸ்டனின் துணைவியாருக்கு தமிழ்நாட்டுப் பட்டுப் புடவையை பரிசாகத் தந்தார். திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அந்தப் பரிசைப் பெற்றுக் கொண்டதில் பெரிய மகிழ்ச்சி! எனவே தங்கள் இல்லத்திற்கு வந்த விருந்திருனரான சிவாஜியை கவுரவிக்க அந்தப் பட்டுப் புடவையை அப்போதே உடுத்திக்கொள்ள விரும்பினார்.
ஆனால் அமெரிக்கப் பெண்மணியான அவருக்கு புடவைக் கட்டிய பழக்கமேயில்லை. எனவே இதை எப்படி உடுத்திக் கொள்வது என அவர் கேட்டபொழுது சிவாஜி புடவையின் முனையை இப்படி மடித்து இடுப்பில் சொருகி புடவையை சுற்றிக்கொள்ள வேண்டும் என்பதை நடித்துக் காட்டினார். ஆனால் திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே சிவாஜியிடம், ‘‘இதை நான் உடுத்திக் கொள்ள எனக்கு உதவி செய்யுங்கள்’’ எனக் கேட்டுக் கொண்டார்.
சிவாஜிக்கு இதைக் கேட்டு சற்று திகைப்பு! ஒரு பெண்மணி புடவையை உடுத்திக் கொள்ள நாம் எப்படி உதவ முடியும்? என்று தாமதித்தார். ஆனால் சார்லஸ் ஹாஸ்ட்அனோ ‘‘என் மனைவிக்கு நீங்கள் உதவ வேண்டும்’’ என வற்புறுத்தி கேட்கலானார். அதன்பிறகு சிவாஜி திருமதி சார்லஸ் ஹாஸ்டன் புடவை அணிந்து கொள்ள உதவினார்.. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சிவாஜி என்ற மாபெரும் கலைஞரிடம் அவர்களுக்கிருந்த மரியாதையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
அமெரிக்காவில் கலையுலகம் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் மற்றும் உள்ள முக்கிய மனிதர்களும் சிவாஜியை தங்கள் விருந்தினராக அழைத்துப் பெருமைப்பட்டார்கள். அவர்களில் ஒரு சீமாட்டி சிவாஜிக்கு மிக உயர்ந்த பொருளைத் தரப்போவதாக கூறிக்கொண்டு ஒரு விலையுயர்ந்த சுருட்டை புகைப்பதற்கு தந்தார்.
சிவாஜி அந்த சுருட்டை கையிலே வாங்கிப் பார்த்துவிட்டு அந்தப் பெண்மணியிடம் கூறினார், ‘‘அம்மா இது உங்களுக்கு அபூர்வப் பொருளாக இருக்கலாம். ஆனால் இந்தச் சுருட்டு நான் இருக்கிற நாட்டிலே உற்பத்தியாகிற சுருட்டு, அதுவும் என் சொந்த ஊரான திருச்சி அருகிலுள்ள உறையூரில் தயாராகிற சுருட்டு’’ என விளக்கினார். அதைக்கேட்டு அந்தப் பெண்மணி பெரிதாக நகைத்தார்.
சிவாஜிக்கு அங்கே இன்னொரு மரியாதையும் கிடைத்தது. அமெரிக்காவிலுள்ள ஒரு நகரத்தின் மேயர் சிவாஜியை வரவேற்று ஒருநாள் மேயராக சிவாஜியை கவுரவப் பதவி ஏற்க வைத்தார். அதற்கு அடையாளமாக தங்கச் சாவி ஒன்றை அன்று முழுவதும் சிவாஜி கையிலே வைத்திருக்க வேண்டும் என அவரிடம் ஒப்படைத்தார்கள்.
அமெரிக்காவை அடுத்து சிவாஜிக்கு மிகப்பெரிய மரியாதையை தந்த நாடு பிரான்ஸ் என்று கூறலாம். பிரான்ஸ் நாடு சிவாஜிக்கு வழங்கிய ‘செவாலியே விருது’ மதிப்பில் மிக உயர்ந்தது. அதாவது ஆஸ்கர் விருதுக்கு இணையான மதிப்பு கொண்ட விருது. இந்ஹ விருதை இதுவரை உலகில் நான்கு நடிகர்களுக்கே பிரான்ஸ் வழங்கியுள்ளது.
சிவாஜி நடித்த ‘நவராத்திரி’ படத்தைப் பார்த்துவிட்டு சிவாஜிக்கு ‘செவாலிய விருது’ அளிக்க பிரான்ஸ் நாடு முன் வந்தது. அந்தப் படத்தைப் பார்த்து உடனே பிரான்ஸ் தேர்வு கமிட்டி ‘செவாலிய விருது’ கொடுக்க முடிவு செய்துவிட வில்லை.
ஒன்பது வேடங்களில் சிவாஜி வித்தியாசமான ஒன்பது மனிதர்கள்போல் நடித்திருக்கும் அந்த அற்புதமான நடிப்பில் முதலில் அவர்களுக்கு நிறைய சந்தேகம் இருந்தது. இது ஒரே நடிகராக இருக்க முடியுமா? என்ற சந்தேகத்தின் பெயரில் பலவித பரிசோதனைகள் செய்து கடைசியில்தான் அவர் ஒரே நடிகர்தான் என்பதை கண்டுபிடித்தார்கள்.
புகழ்பெற்ற பல இயக்குனர்கள் அமர்ந்து அந்தப் படத்தைப் போட்டுப்பார்த்து செவாலியே விருது வழங்குவது பற்றி முடிவு செய்தார்கள். இந்த விருதை சிவாஜிக்கு அளிப்பதற்கு முன் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர்கள் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்கள் நடித்த படங்களையெல்லாம் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்தார்கள். அதன் இறுதியிலேதான் சிவாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிவாஜியைப் பற்றி இந்தியாவிலே உள்ள ஒரு கலை மேதையிடம் கருத்தறிய அவர்கள் பிரபல வங்க இயக்குனர் சத்யஜித்ரேயை அணிகினார்கள். அவரோ, ‘சிவாஜி செவாலியே விருதுக்கு மிக தகுதியான கலைஞர்’ எனக் கருத்து தெரிவித்தார்.
சிவாஜியின் நடிப்பைப் பார்த்த ஒரு பிரான்ஸ் இயக்குனர் ‘‘இவருக்கு ஏன் இதுவரை ஆஸ்கர் விருது கொடுக்கப்பட வில்லை?ÔÔ என்ற சந்தேகத்தை கேட்டார்.
அவருக்கு இன்னொரு இயக்குனர் பதில் கூறும்பொழுது, ‘‘ஆஸ்கர் விருது இதுவரை வழங்கப்படாததற்கு சேர்த்துதானே இந்த செவாலியே விருதை வாங்குகிறோம்’’ எனக் கூறினார்.
இந்த ‘நவராத்திரி’ படத்தை அது வெளியான சமயத்தில் தியேட்டரில் பார்த்த தனது அனுபவத்தை நடிகரும், இயக்குனருமான விசு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறினார்.
விசு வெளிநாட்டினர் சிலருடன் நவராத்திரி படம் பார்க்கச் சென்றிருந்தாராம். இடைவேளை வரை படத்தை அந்த வெளிநாட்டினர் மிக அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தார்களாம். இடைவேளையின்போது விசு அவர்களைப் பார்த்து, ‘‘இப்போது நான் உங்களுக்கு ஒரு செய்தியை கூறப்போகிறேன். இது மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம்’’ என்று கூறிவிட்டு அந்தச் செய்தியை கூறியிருக்கிறார்.
‘‘அதாவது இப்போது நாம் பார்த்தப் படத்தில் கிணற்றில் விழப்போகிற கதாநாயகியை காப்பாற்றுகிற பணக்காரரும், அடுத்து வருகிற குடிகார வாலிபனும், மூன்றாவதாக வருகிற டாக்டரும், நான்காவதாக வருகிற பயங்கரவாதியும் நான்கு வெவ்வேறு நடிகர்கள் அல்ல; ஒரே நடிகர்தான் அந்த நான்கு வேடங்களிலும் வருகிறார்’’ என விசு குறிப்பிட்டிருக்கிறார்.
இதைக் கேட்டு அந்த வெளிநாட்டினர் பெரிதும் வியந்து போனார்களாம், ‘‘ஒரே மனிதரா இவ்வளவு வித்தியாசமாக தோன்றி நடிக்கிறார்? இதை முதலிலேயே சொல்லியிருந்தால் ஆரம்பத்திலேயே கூர்ந்து கவனித்திருப்போமே’’ என குறைபட்டுக் கொண்டார்களாம்.
பின்னர் இடைவேளைக்குப் பின்னர் மேலும் ஐந்து வேடங்களில் வரும் சிவாஜியைக் கண்டு பெரிதும் வியந்து பாராட்டினார்கள் என விசு அந்தப் பேட்டியிலே குறிப்பிட்டார்.
நன்றி!
விகடன்.காம் இணைய பகுதியிலிருந்து.....
Thanks Ganesh Pandian
ஒரு முறை வெளிநாட்டு குழு ஒன்று தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க வந்தது. அப்போது எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தார். அந்த வெளிநாட்டு குழுவுக்கு போட்டு காட்டுவதற்காக எம்.ஜி.ஆர்., நடித்த எங்க வீட்டு பிள்ளை படத்தை தேர்வு செய்து வைத்திருந்தனர். விஷயத்தை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்., பதறிப்போய் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து திட்டினார்.
அதுவே ஒரு ஹாலிவுட் படத்தோட தழுவல் தான் அதைப்போயி அவிங்கிட்டேயே போட்டு காட்டுவீங்களா? சிரிக்க மாட்டாங்களா என்னோட படத்துல பாட்டும் பைட்டும் தான் இருக்கும். அதை பார்த்து அவர்கள் என்ன செய்யப்போறாங்க.
தில்லானா மோகனாம்பள் படத்தை காட்டுங்க, இந்த மண்ணையும், நம் கலாச்சாரத்தையும் அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றாராம்.
நன்றி! தினமலர்.காம்
இணைய பகுதியிலிருந்து.....
"உங்கள் மந்தையில் இருந்து இரண்டுஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன..இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே... "
இன்று 09.03.2020 மதியம் 2.00 மணிக்கு பாலிமர் டிவி யில் - நடிகர்திலகம் நடித்த வெற்றி படம். !!!
" ஞான ஒளி " படத்தை கண்டு களியுங்கள். !!!
சிவாஜி, சாரதா, மேஜர்சுந்தராஜன் நடித்து உள்ளனர். !!!
இன்று 09/03/2020 ஜெயா டி.வி.யில். காலை 10 மணிக்கு நடிகர்திலகமும், பாக்யராஜூம் இணைந்து நடித்த 'தாவணி கனவுகள்' கண்டு களியுங்கள்
"கவிஞன் பாடிய காவியம் படித்தால்
போதை வரவில்லையா...கல்லினில் வடித்த சிலைகளைப் பார்த்தால்
மயக்கம் தரவில்லையா.."
இன்று 09/03/2020 இரவு 7.00.P.M. மணிக்கு முரசு டிவி யில் நடிகர் திலகத்தின் மெகா ஹிட் படம். √
" நவராத்திரி " - சிவாஜி 9 வித்தியாசமான வேடம் ஏற்று அற்புத நடிகர் என நிரூபித்த படம். √
ஒவ்வொரு கதாபாத்திரம் ஏற்ப தன் பாவங்களை மாற்றி நடித்து உலகத்தை அசத்தினார் - காண தவறாதீர்கள். √
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...36&oe=5E951097
" கடவுள் நினைத்தான் மணநாள் கொடுத்தான்.. வாழ்க்கை உண்டானதே..
கலை மகளே நீ வாழ்கவே..அவனே நினைத்தான் உறவை வளர்த்தான்.. இரண்டும் ஒன்றானதே திருமகளே நீ வாழ்கவே.."
இன்று 10.03.2020 மதியம் 1.30 மணிக்கு புதுயுகம் டிவி யில் - நடிகர்திலகம் நடித்த வெற்றி படம். ¶
" கீழ்வானம் சிவக்கும் " படத்தை கண்டு களியுங்கள். ¶
இதில் நடிகர்திலகமும், சரிதாவும் போட்டிபோட்டு நடித்துள்ளனர். ¶
இன்று 10/03/2020 - இரவு 08.00 மணிக்கு ராஜ் தொலைக் காட்சியில் நடிகர்திலகம் நடித்த "சாதனை". !
நடிகர்திலகம், பிரபு, கே.ஆர்.விஜயா, மற்றும் பலரும் நடித்துள்ளனர். !
படத்தை காண தவறாதீர்கள். !
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...c6&oe=5E9645AE
வேலூர் மாவட்டம் ரத்தினகிரி பூட்டுதாக்கு கணேஷ் டூரிங் டாக்கிசில்
வசந்தமாளிகை நடைபெறுகிறது.
10. 03. 2020 இன்று இரவு 6.00 மணி காட்சியில் வேலூர் சிவாஜி ரசிகர்களின் ஆர்பாட்டம்.
ச.அமரன்.வேலூர்.
https://www.facebook.com/amaran.s.19...9835477153312/
"அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல... அடியெடுத்து வைத்ததோ?....அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ? "
இன்று 11/03/2020 மதியம் 1.00 மணிக்கு
கே டி.வி.யில் நடிகர் திலகம் நடித்த குடும்ப படம் "பேசும் தெய்வம்". ¶
படத்தை காண தவறாதீர்கள். ¶
சிவாஜி, பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
இன்று 11/03/2020 - மதியம் 1.30 மணிக்கு ராஜ் டி.வி. இல். !!!
நடிகர்திலகம் நடித்த - " தாம்பத்தியம் "- படத்தை காண தவறாதீர்கள். !!!
நடிகர்திலகம், அம்பிகா, ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...f9&oe=5E932AE4
இன்று 11/03/2020 மதியம் 1.30 மணிக்கு புதுயுகம் டிவி யில்
நடிகர்திலகம் சிவாஜி நடித்த. ¶
அழகான பாசம் நிறைந்த " ப ந் த ம் " படத்தை கண்டு களியுங்கள். ¶
இந்த படத்தில் நடிகர் திலகத்துடன், ஆனந்த் பாபு, பேபி ஷாலினி, மனோரமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
அனைவருக்கும் வணக்கம்
நமது நடிகர் திலகத்தை ஒரு முறை ஏற்றுக்கொண்டால் அவரை விட்டு யாரும் விலகுவதில்லை அது பணக்காரனாக இருந்தாலும் சரி இல்லை பரம ஏழையாக இருந்தாலும் சரி அவரை விட்டு விலகுவதுமில்லை.
அப்படி ஒருவர் வேலூர் நகரில் வாழ்ந்து வருகிறார். இவரின் தொழில் உப்பு, மற்றும் கோளம் மாவு , பல அறிஞர்களின் புத்தங்களை மலிவு விலையில் விற்று வாழ்க்கை நடத்துபவர்.
இவர் வண்டியில் தலைவர் நடிகர் திலகத்தின் படத்தை மாட்டி அந்த படம் வெய்யிலில் வெலுத்து போகாமல் இருக்க குடையை கொண்டு மறைத்து வைத்திருக்கிறார்.
இவரை வியாபாரம் செய்யும் இடத்தில் பார்த்து நான் கேட்டகேள்வி, அண்ணே இப்படி நடிகர் திலகத்தின் படம் வைத்து வியாபாரம் செய்கிறீர்களே அதில் என்ன பலன் கண்டீர்கள்? சிவாஜியின் மீது இவ்வளவு பற்று வைத்திருக்கிறீர்களே எப்படி என்றேன்.
திரு. ஏழுமலை அவர்களின் பதில்.நான் சிவாஜியின் பக்தன், அவர் தான் எனக்கு கடவுள் நான் சிறுவயதில் இருந்தே சிவாஜி அவர்களின் படங்களை பார்த்து வந்தவன் அவரின் நேர்மை குணமும், அன்பும், பாசமும் எனக்கு பிடித்து போனதால் என் வியாபாரத்திலும் அதிக லாபம் இல்லாமல் நேர்மையான வியாபாரம் செய்து வருகிறேன்.
நடிகர் திலகத்தின் வாழ்க்கை குறிப்பு புத்தகங்களை குறைந்த விலைக்கும், சில நேரங்களில் பொருளில்லாற்க்கு இலவசமாகவும் வழங்கி நமது நடிகர் திலத்தின் புகழை பரப்பி வருகிறேன்.
என்ற போது என் மனம் நெகிழ்ந்து இப்படி ஒரு சிவாஜி ரசிகனா என்று வியந்து அவரை வாழ்த்திவிட்டு விடை பெற்றேன்.
அந்த நல்லவரை நீங்களும் வாழ்த்துங்களேன்.
ஓங்குக சிவாஜி புகழ்! வாழ்க ஏழுமலை..
ச.அமரன்.வேலூர்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...70&oe=5EA64829
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...cd&oe=5EA60526
Thanks Amaran
engirundho Vanthal madurai central
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...1b&oe=5E941441
நடிகர்திலகத்தின்155வதுபடம்.
ஞானஒளி.11.3.72ல்வெளியாகி
100நாட்களுக்குமேல்ஓடிசாதனைபுரிந்த
படம்.........
இப்படம்தஞ்சைமாவட்டம்
திருகாட்டுப்பள்ளிஎன்றஊர்அருகே
பூண்டிமாதாபேராலயம்.
அங்கேசர்ச்காட்சிகள்.படமாக்கபட்டதாம்.
இக்கோவிலுக்குநடிகர்திலகம்.அவர்கள்.
அன்றுஅதிகபணமான30.000.ரூபாய்க்கு
பெரியஆலயமணிதானமாகவாங்கி
கொடுத்துள்ளார்.
இன்றுபூண்டிமாதாபேராலயம்.
புகழ்பெற்றஆலயமாகவும்.
சுற்றுலாதலமாகவும்உள்ளது.
ததெரியாதவர்கள்சென்றுபூண்டி
மாதாவைவேண்டிஆலயமணியை
பார்த்துவாருங்கள்.பெரியமணி
அந்தஆலயமணிஅடித்தால்
நான்குஊருக்குகேட்குமாம்.
நடிகர்திலகம் புகழ்வாழ்க.
ஓங்குக!நடிகர்திலகம் கொடைசெய்தி.
1972 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள் மட்டுமே மிகவும்வெற்றிகரமாக ஓடியது
Rajah 100 days
Gnana oli 100 days
pattikkaada?pattanama? 182 days
damam enge? avarage
thavp pudalvan 100 days
vantha maalikai 200 days ( 250 days in sri lanka )
neethi 99 days
சிவாஜி ஹீரோ 72
"ஆல்ப்ஸ் மலையின்சிகரத்தில்...அழகிய ரெய்ன் நதி ஓரத்தில்... மாலைப் பொழுதின் சாரத்தில் மயங்கித் திரிவோம் பறவைகள் போல ". ¶
இன்று 12/03/2020 சன் லைஃப். டி.வி. யில் காலை 11.00A.M. மணிக்கு நடிகர் திலகம் நடித்த மெகா ஹிட் படம்.¶
" சிவந்த மண் " கண்டு களியுங்கள். ¶
இதில் நடிகர்திலகம், காஞ்சனா, முத்துராமன், நம்பியார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...0d&oe=5E8F5797
"ஏனழுதாய்...ஏனழுதாய்.. என்னுயிரே..ஏனழுதாய்?..
நானழுது ஓய்ந்ததற்கோ.. நன்றி சொல்லவோ அழுதாய்?...¶
இன்று 12/03/2020 இரவு 7.00 மணிக்கு முரசு டி.வி.யில் நடிகர்திலகம் நடித்த "இருவர் உள்ளம்".
படத்தை காண தவறாதீர்கள். ¶
சிவாஜி, சரோஜாதேவி, M.R. ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...ca&oe=5E8F615F