Gap fillers from Ramu Tamil and Telugu!
https://www.youtube.com/watch?v=3y5tnNfoQbw
https://www.youtube.com/watch?v=OO6jQQYBvNk
Printable View
Gap fillers from Ramu Tamil and Telugu!
https://www.youtube.com/watch?v=3y5tnNfoQbw
https://www.youtube.com/watch?v=OO6jQQYBvNk
Veera Abimanyu! Same song sequences with GG nd NTR!!
https://www.youtube.com/watch?v=JHSH63HPf7Q
https://www.youtube.com/watch?v=fR8V5u5hR80
Missiammaa GG vs Missammaa NTR vs Miss Mary GG!!
https://www.youtube.com/watch?v=oRrnQg4SboQ
https://www.youtube.com/watch?v=qoMI8OdajYY
https://www.youtube.com/watch?v=jXf1noLLokE
https://www.youtube.com/watch?v=daJdkHGeZ00
GG's top-notch performance in Hindi Miss Mary (1957) based on successful Missiammaa!:roll:
https://www.youtube.com/watch?v=XqEd4yA6BwE
https://www.youtube.com/watch?v=WR9iniPioVc
Gap fillers!
https://www.youtube.com/watch?v=KP67YJXrzdk
A Bird's eye view on some Hollywood Love stories reminding us of GG...the debonair!
Part 1 : Robert Taylor comparable to GG!!
The tale of love between a brave soldier and a dancing damsel....poles apart!Quote:
....reminiscence of WATERLOO BRIDGE starring Robert Taylor with Vivien Leigh...(famous Gone with the Wind heroine opposite to Clarke Gable)!a poignant love story woven in GG standards of dignified love and affection!!
Robert Taylor the suave debonair hero reminding us of GG's traits!!
https://www.youtube.com/watch?v=Ee7HPhr25ug
https://www.youtube.com/watch?v=72d7N1stylU
https://www.youtube.com/watch?v=gdRr...D4KfAth7BigIVA
Gapfillers to commemorate Waterloo Bridge starring Robert Taylor, in a way a role model to follow by GG!!
https://www.youtube.com/watch?v=SlE3QFTtAAg
https://www.youtube.com/watch?v=3d8TrjkFpWw
https://www.youtube.com/watch?v=jQlNzMiPa74
Striking similarities of acting style between GG and Robert Taylor...both suave debonair tailor-made gentlemen in creating the surge for love scenes!!
https://www.youtube.com/watch?v=gdRrMSFcJRU
GG resembling Robert Taylor in his army man get up!
https://www.youtube.com/watch?v=viCLnZsAA8I
Quote:
மரத்தை வைப்பவர் தண்ணீர் ஊற்ற மறந்து விட்டால் மரம் தளிர்த்து இலைகளும் மலர்களும் காய்கனிகளும் துளிர்க்குமோ!?
மழை பெய்யும்போது நீரூற்ற அவசியமில்லைதான்...... மழையின்றி பூமி வறண்டுபோகும்போது வழிப்போக்கருக்கும் மனம் வருமே நீரூற்றிட !
ஜெமினி கணேசனுக்கான கற்பகத்தருவான மேன்மைத் திரி வறண்டு விடாமல் தழைத்தோங்கி வளர்ந்து செழித்திட மானசீகமான நீராதரவை நல்கி வரும் பார்வையாளர்களுக்கும் ஊக்குவிப்பாளர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்!!
செந்தில் ....தளராத துவளாத ஜெமினித்தீவு மேம்பாட்டில் ....... 400 என்னும் திரிநிறைவை நோக்கி.....இன்னும் பல கருத்துக் கோர்வைகளில்
அமரர் ஜெமினி கணேசனின் வாழ்நாள் சாதனை நடிப்புப் பக்கங்களை வரும் தலைமுறையினரும் போற்றிக் கொண்டாடிட ...!!
Coming up with improvised themes on GG's on screen contributions to cherish with!
Quote:
திரைப்படங்களில் ஒரு குணாதிசய வெளிப்பாடு மக்கள் மனங்களில் பசுமரத்தாணி போல பதிந்து அதன் தாக்கங்கள் காலங்களையும் கடந்து தலைமுறைகளையும் தாண்டி நின்று நிலைத்திட துல்லியமான படப்பதிவும் காமிரா கோணங்களும் ஒளிப்பதிவின் முறையான சேர்க்கையும் பிசிறற்ற ஒலிப்பதிவும் கண்ணுக்கும் மனதுக்கும் இதமான காட்சிப் புலமும் இன்றியமையாததே!
கருப்பு வெள்ளை காலமாகட்டும் வண்ண யுகமாகட்டும் காமிரா கோணங்களும் லைடிங்கும் சொதப்பினால் கருத்துள்ள கானங்களும் ஈடுபாடான நடிப்பு வெளிப்பாடுகளும் இயக்குனரின் எண்ணத்தில் விளைய வேண்டிய செயலாக்கமும் வீணே !
மகிழ்ச்சியான தருணங்களைக் காட்டிலும் கனத்த மனதில் துயரம் படிந்து குழப்பம் மேலோங்கி உடலும் மனமும் செயலற்ற நிலைக்குத் தள்ளப்படும் சோகசூழலில் கதாபாத்திரத்தின் உணர்வு பூர்வமான முகபாவனைகளும் உடல் மொழியும் அருமையான லைட்டிங்கில் வித்தியாசமான வியத்தகு காமிரா கோணங்களும் பின்னணி இசைக்கோர்ப்பும் பாடலின் கருத்தாழமும் பார்வையாளனின் மனநிலையை எங்கோ கொண்டு செல்லும் அபூர்வமான அதிசயமான நிகழ்வு சுமைதாங்கி படத்தில் அமரர் ஜெமினியின் மறக்கவே முடியாத நடிப்புச் சிதறலில் !!
முடிவெடுக்க இயலாத குழப்ப சூழலில் தவிப்போருக்கு தைரிய தன்னம்பிக்கை மாமருந்து இப்பாடல் வரிகளும் அவற்றைப் படமாக்கியிருக்கும் விதமும் இசைக் கோர்ப்பும் காட்சி பிரேம்களில் ஜெமினி தன் silhouette மனசாட்சி குரலாகவும்..... Excellent piece of acting that deserves a place in any school of acting!!
Even GG's silhouette and shadow too act and reflect his mood!
https://www.youtube.com/watch?v=wmjEXNFNupM
In the same movie SUMAITHANGI two other songs do exemplify the significance of camera angles and lighting besides music in order to enhance the acting output!!
https://www.youtube.com/watch?v=PGn5WYkK3TY
Gap fillers for top and side angle shots at their effects!
https://www.youtube.com/watch?v=oGCv1mrcMUc
page filler!!
https://www.youtube.com/watch?v=WLky4knFpf0
The Magic without Logic in GG's Maayaajaal movies!
Quote:
ஒரு கால கட்டத்தில் தமிழிலும் தெலுங்கிலும் புராண இதிகாச ராஜா ராணி மந்திர தந்திர விட்டலாச்சார்யா பாணி படங்களே அதிகம் வந்து
கொண்டிருந்தன. பெரும்பாலும் பெண்கள் கணவர் மீது வைத்திருக்கும் பதிபக்தி தாலி செண்டிமெண்ட் இவையே அடிப்படைக் கருவாக இருக்கும் இறுதியில் சூழ்ச்சிகளை முறியடித்து எப்படி ஒரு மனைவி கணவரை மீட்டெடுக்கிறாள் என்பதே சாராம்சமாக இருந்தது! கூடவே அலுவல் காரணமாகவும் அரச கட்டளை நிறைவேற்ற வேண்டியும் பிரிந்து சென்ற கணவன் மந்திரவாதி வில்லனால் மடக்கப்பட்டு பில்லி சூனிய மந்திர
தந்திர சூ மந்திரக்காளிகளால் எப்படியெல்லாம் சபிக்கப்பட்டு உருமாறி கூடுவிட்டுக் கூடு பாய்ந்து இன்னல்களையும் மனைவி கூட இல்லாத சந்தர்ப்ப சூழல்களில் வேறு பெண்டிர் தரும் காதல் டார்ச்சர்களையும் எதிர்கொள்கிறார் என்பதும் திரைக்கதையின் பிரிக்க முடியாத திகில் அம்சமாகவே காரசாரமாக மசாலாவாக தூவப்பட்டிருக்கும்! கூடவே தோழர் தோழியரின் இம்சைக் காமெடியும்....
இவையெல்லாவற்றையும் மிஞ்சும் வண்ணம் தங்கப்பன் ஆசாரியார் போன்ற தொழில்நுட்ப வல்லுனர்களின் செட்டுக்களும், ரவிகாந்த் நிகாய்ச் போன்ற அந்தக்கால தந்திரக்காட்சி வல்லுனர்களின் அப்பழுக்கற்றஉழைப்பும் கருப்புவெள்ளைக் காட்சிகளுக்குக் கூட மெருகேற்றிப் பிரகாசிக்க வைத்தன!
கணவனே கண்கண்ட தெய்வம் படத்தில் வரும் இவ்விரு காட்சியோட்டங்களும் இன்றும் நிலைத்திட்ட சான்றுகளே! அதுவும் கிராபிக்ஸ் ஒப்பனைகளைமீறி ஜெமினி நடித்திருக்கும் விதம் அந்தக்கால இந்தக்கால ரசிகப் பார்வையில் அபாரமே!!
https://www.youtube.com/watch?v=CT_1v2GKq7w
https://www.youtube.com/watch?v=237n4Co-5fY
Gemini Ganesan's acting Viswaroopam!
https://www.youtube.com/watch?v=KUIZ62ZkQ0w
Fantasy filled.....
https://www.youtube.com/watch?v=YZnNcm2Lp9s
All is well climax of KKKD! GG's Jewel in the Crown of acting calibre!!
https://www.youtube.com/watch?v=nDVCkC5H9JM
mood changer!
https://www.youtube.com/watch?v=9oX5PSgH-cI
From the ace movie of GG's on-screen Galaxy Karpagam directed KS Gopalakrishnan!Quote:
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நடிப்பு பாணி தனித்துவம் நிறைந்த இதமான இயல்பும் இனிமையும் நிறைந்த யதார்த்த வாழ்வியலின் வெளிப்பாடே!
வரலாற்றின் பக்கங்களில் அவரது நடிப்பு நம்மையும் ஈர்த்து திரையில் அவருடனேயே நாமும் பக்கத்தில் இருக்கிறோமோ என்று எண்ண வைக்கும் விந்தையான உணர்வுக்குள் நம்மை ஆட்கொண்ட அவரது காதல் சார்ந்த கண்ணியம் மிக்க குடும்பப் பாங்கான படங்கள் இன்றளவும் நின்று நிலைத்திருப்பதே சாட்சி !
கற்பகம் திரைப்படத்தில் படம் முழுவதும் ஜெமினி கணேசன் இந்த விதமான உணர்வலைகளை உருவாக்கினார் !
மிகச் சிறந்த குணசித்திர நடிகரான ரங்காராவ் அவர்களுடன் ஜெமினி கணேசன் தோன்றும் செண்டிமெண்ட் நிறைந்த காட்சிகள் என்றுமே நமது நெஞ்சை விட்டு அகலாதவை !!
https://www.youtube.com/watch?v=HnEd...58E6D01C9EF1C8
நான் அவனில்லை- 1974.
தமிழ் படங்கள் 1973 முதல் கேவலமான நெருக்கடியை எதிர்கொண்டன. ஸ்ரீதர் ,கே.எஸ்.ஜி ,பீம்சிங் போன்றோர் தேய்ந்து மறைந்து கொண்டிருந்த நேரம். ஹிந்தியில் பாபி,யாதோன் கி பாரத் ,அபிமான் ,ஷோலே,சோடி சி பாத் என்று தூள் கிளப்ப , ஆர்.டீ.பர்மன்,லட்சுமி-பியாரி, சலில் போன்றோர் இசையில் பட்டையை கிளப்ப ,தமிழில் மூன்றாந்தர இயக்குனர்கள், தன் பழைய பெருமைகளில் தோய்ந்து தமிழ் படங்களை தேய்த்து தரை மட்டமாக்கி கொண்டிருந்த ஹீரோக்கள்,பெருங்காய டப்பா மட்டுமே மிஞ்சிய இசையமைப்பாளர்கள் என்று இளையராஜா,பாரதிராஜா,மகேந்திரன் ,பாலுமகேந்திரா வருகை தந்த 1977 வரை களப்பிரர் ஆட்சி போல இருண்ட காலத்தில் அவதியுற்ற தமிழ் பட ரசிகர்களின் ,ஒரே நம்பிக்கையாக புதுமையான ,தரமான படங்களை தந்து கொண்டிருந்தவர் கே.பாலசந்தர்.
1973 அரங்கேற்றம் முதல் ,தன் பாணியையே மாற்றி புது அலைக்கு தக்க தன் அலைவரிசையை tune பண்ணி மெருகேற்றி ,தரமற்ற தமிழ் பட talkie களுடன், கற்பனை வளமற்ற சாரமற்ற திரைகதை,நேரிடை cliched வசனங்கள், அதை விட கற்பனை வளமில்லா நேரிடை cliche நடிப்பு, ஆகியவற்றுடன் கே.பீ. one man army ஆக போராடி கொண்டிருந்தார். அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், பின்னால் வெளியான அவள் ஒரு தொடர்கதை,அபூர்வ ராகங்கள்,மன்மத லீலை என்று, கற்காலத்திற்கு பின் தங்கி இயங்கி ,உலகத்தை விடுங்கள்,இந்திய நீரோட்டத்துடன் கூட இணைய மறுத்த தமிழ் படங்களின் ஒரே காவலனாக போராடி கொண்டிருந்த காலம்.
நாயகர்களை முன்னிறுத்தி ,வெறியர்களுக்கு தீனி போடாமல்,கதைகளத்தை முன்னிறுத்தி,காலத்தோடு மாற விரும்பிய இயக்குனர்களின் ஒரே நம்பிக்கை பழைய தலைமுறையாயினும் ,ஜெமினி ஒருவரே .
அதுவரை ஜெமினி soft sophisticated romance ,intelligent situational காமெடி ,விரக்தி மற்றும் தாழுணர்வு கொண்ட கதாபாத்திரங்கள், நல்மனம் கொண்ட கிராமத்து மனிதர் பாத்திரங்களிலேயே சோபித்தார்.முதல் முறையாக ,ஜெமினியின் நிஜ இயல்புக்கு ஒத்த ,நிஜ கதையை தழுவிய வங்காள நாடக inspiration இல் பாலசந்தர் தந்த காலத்தை மீறிய அதிசயம் நான் அவனில்லை.
இந்த படத்தை திருச்சி பாலஸ் திரையரங்கில் கே.பாலச்சதரின் அக்காள் மகன் என் நண்பர் பீ.அசோக் குமார் உடன் பார்த்த அனுபவம்.(கே.பீ யின் மகள் புஷ்பாவும்,மகன் கைலாசமும் எனது கல்லூரியில் உடன் படித்த (ஒன்றிரண்டு வருட வித்யாசம்)நண்பர்களே)
இனி நான் அவனில்லை படத்தை பற்றி பார்ப்போம்.
நான் அவனில்லை கதை களம், சம்மந்த பட்டவர்களின் பங்களிப்பு இவற்றை ஆராயு முன்----
தமிழிலேயே எனக்கு மிக மிக பிடித்த படங்களில் ஒன்றாக நான் கருதுவது நான் அவனில்லை.
ஜெமினிக்கு ,இந்த படத்துக்காக தேசிய விருது கிடைக்காதது நமக்கெல்லாம் பெருத்த அவமானம்.என்ன ஒரு performance ? சும்மா புகுந்து விளையாடி பெடலெடுத்திருப்பார். அவரின் 9 சொச்ச வேடங்களும் தனித்தனியாக நில்லாமல் கதையுடன் பிணைந்து பயணிக்கும். காதல் மன்னனுடன் ,காதல் இளவரசனும் (அன்றைய வளரும் நடிகர்)ஒரு சிறு சுவையான வேடத்தில் மலையாளம் பறைவார்.
பாலச்சந்தரின் மருமகன் குறிப்பிட்டதில் இருந்து நான் அறிந்தது, ஜெமினிக்கும் (சொந்த படம்),கே.பிக்கும் பிணக்கு ஏற்பட்டு ,இடைவேளைக்கு பின்பு கே.பீ நினைத்த மாதிரி அமையாமல் கே.பீக்கு முழு திருப்தி இல்லையாம். ஆனால் புத்திசாலி ரசிகர்களுக்கு ,இது என்றுமே முழு திருப்தி தந்த படமே.
ஒரு சாதாரண கோர்ட் ரூம் டிராமா , எப்படி சுவையான பாத்திரங்களால்,nerrative surprise நிறைந்த திரைக்கதையால்,கூர்மையான இயல்பான வசனங்களால் ,ஒரு வித்தியாச சிந்தனை கொண்ட இயக்குனரால் பரிமளித்தது என்று பார்ப்போம்.வந்த போது பெரிய வெற்றி படமல்ல.புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காணாத காலம்.
இந்த படத்தில் விறுவிறுப்பு,திருப்பங்கள்,நகைச்சுவை(டயலாக்,si tuati on-linked) ,அங்கங்கே மிளீரிடும் மனிதம்,கட்டி போடும் வசனம்(ஒரு நிமிடம் நாம் கவனத்தை நகர்த்தினால் முக்கியமான லிங்க் போய் விடும்)என்று ,அருமையான ஒரு படைப்பு. இந்த அளவு wholesome என்று சொல்லத்தக்க படங்கள் இந்திய அளவில் மிக குறைவே.
நான் எஸ்.எஸ்.எல்.சி முடித்த கையோடு, பீ.யு.சீயில் படிக்கும் போது இந்த படம் பார்த்த போது தீவிர கே.பீ.ரசிகன். ஜெமினியை பிடிக்கும்.(தீவிர ரசிகன் என்று சொல்ல முடியாவிட்டாலும்)
அடுத்தடுத்த நாட்களில் ஐந்து முறை பார்த்து என் பெரியப்பா ,அப்பாவிற்கு போஸ்ட் கார்டு எழுதி உன் பையனுக்கு எதிர்காலமே இல்லை என்று தெரிவிக்கும் அளவு தீவிரமாகி, இந்த படம் என்னை பாதித்தது.
இன்று பார்க்கும் போதும் அதே உணர்வையே அடைகிறேன். இதை பற்றி விலாவரியாக எழுதும் துடிப்பை என் கைகள்,இதயம்,அறிவு மூன்றும் பரபரக்கிறது.
இனி முகவுரை முடிந்து படத்தினுள்.....
கதையை நேரிடையாக சொல்லி, மற்ற அலசல்களை தொடர்கிறேன்.(பார்த்தவர்களுக்கு தேவை படாது)
போலிஸ் ஒரு நடுத்தர வயது ஆங்கிலோ இந்தியன் ஒருவனை துரத்துவதில் ஆரம்பிக்கும் டைட்டில் , ஒரு கிராமத்து மனிதன் விபத்தில் மாட்டி சந்தேகத்தில் பிடி படுவதில் படம் துவங்கும். பின் நேரடியாக கோர்ட் ரூம்தான்.சாட்சிகள் ஒவ்வொருவராக வர, குற்றம் சாட்டப்பட்ட வடசேரியில் நெய்சு வேலை செய்து வருவதாக சொல்லும் நாஞ்சில் நம்பி ,தன்னுடைய டிபென்ஸ் வக்கீலை இன்சல்ட் செய்து துரத்தி தனக்காக தானே வாதாடி கொள்வதாக சொல்கிறான்.முதல் சாட்சியாய் சவப்பெட்டி தொழில் செய்யும் ஆல்பர்ட் ஆசீர்வாதம் எதிரில் நிற்பது தன்னுடைய B .A படித்த புத்தி கூர்மை ,பன்மொழி திறமை கொண்ட தன்னுடைய தம்பி டேவிட் ஆசிர்வாதமே, மனைவி(ஊமை),இரு குழந்தைகளை தவிக்க விட்டு 15 வருடம் முன்பு ஓடி விட்டவனே என்று சொல்கிறான். நாஞ்சில் நம்பியோ,நான் அவனில்லை என்று நிறுவ பார்க்கிறான்.
அடுத்த சாட்சி மாதவ ராவ் என்ற அரசாங்க ஊழியன் ,சி.என்.எ .சாரி என்ற பெயரில் தனக்கு நல்ல வேலை வாங்கி தருவதாக சொல்லி 15000 ரூபாய் ஏமாற்றியது குற்றம் சாட்ட பட்டு கூண்டில் நிற்பவரே என்று சொல்கிறான்.
இடையில் இந்த வழக்கின் நீதிபதி ஜலால் ஹுசேன் மகள் சலீமா ஹுசேன் ,இந்த வழக்கில் தனக்கு ஒரு உண்மை தெரியும் என்று சொல்கிறாள்.அக்பர் அலி என்ற பெயரில் ரயிலில் வரும் தன்னுடன் அழகான உருது பேசி ,தன் அப்பாவிடம் 1000 ரூபாய் தந்தி மணி ஆர்டர் சலீமா என்ற பெயரை உபயோகித்து ஏமாற்றியவன் அவனே என்றுணர்ந்து ஒரு ஹீரோ வொர்ஷிப் கொண்டு,கோர்ட்டுக்கு வர ஆரம்பிக்கிறாள்.
அடுத்தடுத்து விஜயஸ்ரீ என்கிற தெலுங்கு பெண்,தன்னிடம் லட்சுமண சர்மா என்ற பெயரில் தன்னை மணந்து (இதில் சித்தப்பா சகாதேவ சாஸ்திரிகள் என்று வேறு )பணம்,நகைகளை ஏமாற்றியவன் என்றும்,அம்மு குட்டி என்ற கேரளா பெண் ,சத்ருகன மேனன் என்ற பெயரில் தன்னை மணந்து ,75000 ரூபாய் பணம்,30000 ரூபாய் நகைகளுடன் ஓடியவன் என்று அடுத்தடுத்து சாட்சி சொல்ல ,குற்றவாளியின் பதில் நான் அவனில்லை.இந்த பெண்கள் சொல்லும் ஒரு பெயர் ஜானி வாக்கர் என்ற நண்பன் அடிக்கடி கொடுக்கும் வாழ்த்து தந்திகள்,இறப்பு செய்திகள்.தேன் மொழி என்ற கல்யாண புரோக்கர். என்று சாட்சிகள்.
நாஞ்சில் நம்பி ஆங்கிலம்,தெலுங்கு,மலையாளம்,உருது என அனைத்து மொழிகளும் பேசுவதால்,அவன் தாய் மொழி அறிய ,எதிர்பாராமல் போலிஸ் கன்னத்தில் அறைய முஷே என்று கத்துகிறான்.அனைவரும் குடைந்து முஷே என்பது சீன மொழியில் அம்மாவை குறிப்பது என்று அங்கலாய்கிறார்கள்
.அடுத்து கிருஷ்ணா பாய் ,தங்கள் ஆஸ்ரமத்திற்கு வந்து ,தன்னுடைய பெண் ராணியை சர்வாலங்கார பூஷிதையாய் பழனிக்கு அழைத்து சென்று ஏமாற்றிய ஹரி ஹர தாஸ் ஸ்வாமிகள் ,நாஞ்சில் நம்பியை நிற்பவனே என்று சாட்சி கூற,அடுத்து violet solomon என்ற ஆங்கிலோ இந்திய பணக்கார மாது, தன் கணவன் ஜாக் சாலமன் அவனே என்றும் ,தான் அவனை இன்னும் விரும்புவதை கூற,நாஞ்சில் நம்பியில் விழி கடையோரத்தில் துளிர்க்கும் நீர்.அவளை குறுக்கு விசாரணையும் செய்யாமல் அனுப்புகிறான்.(மற்றவர்களை போட்டு கிழி கிழிதான்)அடுத்த சாட்சி ராணி.தன்னை ஏமாற்றி தன் நகைகளை எடுத்து கொண்டு ஓடிய ஹரிஹரதாஸ் ஸ்வாமிகள் அவனே என்றும்,தன்னை பலர் கற்பழித்து,ஒரு நடன விடுதியில் நடன மாதாக இருக்கும் பொது,ஒரு இளைஞன் வாழ்வு கொடுத்ததாக கூறுகிறாள்.(அம்மு குட்டியின் தம்பியே).
தன் சாட்சியாக நாஞ்சில் விசாரிப்பது தானம்மாள் என்கிற தன் மனைவியை மட்டுமே.(3 ஆண் 2 பெண் குழந்தை 10 வருட வாழ்க்கை)
அடுத்து ஜானி வாக்கர் என்ற பெயரில் தந்தி கொடுத்த தம்பிதுரை மாட்ட, ஜாக் சாலமனாய் கொடைக்கானலில் உலவிய டேவிட் என்கிற,நாஞ்சில் நம்பி என்கிற,சாரி என்கிற,அக்பர் அலி என்கிற,சத்ருகன மேனன் என்கிற,லட்சுமன் சர்மா என்கிற,ஹரிஹரதாஸ் ஸ்வாமிகள் என்கிற நான் அவனில்லை ,அம்முகுட்டியின் தம்பி,விஜயஸ்ரீ,அம்முகுட்டி,வயலெட் எல்லோரிடமும் ஒரு சேர மாட்ட தப்பித்து ஓடும் போது……
இறுதியில் 14 வருடம் கடுங்காவல் பெறும் அவனிடம் அண்ணன் ஆல்பர்ட் ,இப்போதாவது ஜீசஸ் இடம் பாவமன்னிப்பு கோர சொல்ல திமிராக சாதிக்கும் அவனிடம் கோபம் கொண்டு கத்தியால் குத்தி விட கடைசியில் ,ஜீசஸ் என்று தன்னை வெளிக்காட்டி மரணமடையும் டேவிட் என்கிற perverted genius deviant .genius .
The High light of Naan Avanillai lies in its Novel Theme, Structuring of the movie soaked well in Layered Nuances, Well rounded Multi Dimensional Characters, its narrative surprises,Intelligent Pauses, and the space given to all minor characters.Infact protagonist cum Antagonist of the movie is built on minor blocks of different Hues&shades.
Unfortunately ,Tamil audiences used to bonding with the character who is our Emotional Proxy or substituting our wishes on the characters and the characters are usually the collection of traits necessary for the nerrative and their decision,choices ,Traits cause something which shapes the flow or outcome of nerrative soaked in exaggerated melodrama.
Nan Avanillai broke this jinx and not far from reality as it is based on a true story of a deviant individual .It can even be classified under Classic Film Noir which is strange,Erotic and Ambivalent with Black Humour.The deconstruction of the nerrative with elusive phenomena lies in its non-chronological progression but coherent in logic and aesthetic consistency.
The central dynamic of the story uses coincidences to worsen the characters' plight. The inherent Form&contents offer Anticipation and surprises and Finger pointing devices are implanted intelligently in the Film.The pacing out of the dramatic elements with confrontation and squaring off between characters of conflicting interests with intelligent sub-plots and Minor characters etched properly with different spaces.The Film slowly gain in knowledge search,investigate with time indication intensify the expectation with unique tone,Style and Atmosphere.
The screen play has plenty to offer in reversals,surprises and revelations,A problem to solve,New Experiences,Clearly defining the premise, starting with a situation ,Win attention by involving the Audience thru minor characters (Saleemaa,Spectator achacho chitra). But Audience are primarily engrossed and enthralled by the main character .The cognitive process happens thru constant testing and revising previous conclusions.
One anticipates,curious&Surprised,feels cheated at times , amazed with the deviant theme from normal life.Proper emphasis given at times with strong painful emotions,empathy with underdogs enhances audience kinesthetic response.
The story gains momentum with new and constant sensation with scene constructions thru odds and obstacles enhanced with dramatic tension, the process of problem,obstacle,choice,pressure ,tension,challenge,imbalance,conflicting values,clash,disharmony,discord with dramatic progression in crises,tension. The sequence of events one leads to another escalate in intensity and plant many questions with appropriate anger at social issues.
It arranges cues with something introduced new always ,withholding something,to intrigue and tantalise the audience.
What else ,as a sensation, is required in a Film?Kudos to K.Balachandar.
நான் அவனில்லையில் ஜெமினியின் நடிப்பு விசேஷமாய் அலச பட வேண்டியது. வெளி பார்வைக்கு நகைச்சுவையாய் தோன்றும் ஆழ்ந்த கதையமைப்பில் அவர் பங்கு மிக மிக delicate ஆனது. exemplarily executed &Near perfect .
பல வேடங்கள் புனையும் ஜெமினியின்,படம் முழுக்க பிரதான இணைப்பாக வரும் வேடம் நெய்சு வேலை செய்யும் நாஞ்சில் நம்பி.இந்த வேடத்திலேயே பிடி படுவதாலும்,கோர்ட் விசாரணை முழுக்க இந்த பாத்திரமே கையாளுவதாலும் ,இதுவே முக்கிய பாத்திரமாகும்.
இது கொஞ்சம் சிக்கலான பாத்திரம்.
நகைச்சுவையும் காட்ட வேண்டும்,seriousness இழக்க படகூடாது. நாஞ்சில் slang பேசும் பாமரனாக காட்ட வேண்டும்.தன் வழக்கில் தானே வக்கீலாகவும் வாதாட வேண்டும்.சாட்சிகளை, குறுக்கு விசாரணை செய்யவும் வேண்டும்,அதே நேரம் மித மிஞ்சிய புத்திசாலித்தனம் வெளியாகவும் கூடாது.சாட்சிகளின் பலவீனத்தை வைத்து மடக்க வேண்டும்.அதே நேரம் தெரிந்ததாக காட்டி கொள்ள கூடாது. குற்ற சாட்டுகளால் பாதிக்க பட வேண்டும்.அதே சமயம் அந்த குற்றங்கள் தன்னை சேராதவை என்று குறிப்புணர்த்த வேண்டும்.இந்த கத்தி மேல் நடக்கும் பாத்திரத்தில் ஜெமினி தவிர வேறொரு நடிகனை கற்பனை கூட செய்ய முடியாது.(என் நெஞ்சில் நிறைந்த இதய தெய்வத்தையும் சேர்த்தே).வெகுளி தனத்தில்,அவ்வப்போது எட்டி பார்க்கும் குரூர புத்திசாலித்தனத்தை அவர் உணர்த்தும் பாங்கு.ஆனாலும் என்னதான் perverted crook என்றாலும் violet unconditional love காட்டும் போது(பாவம் ,இவளுடன் செட்டில் ஆகவே விழைவார்),கண்களின் ஓரத்தின் துளிர்க்கும் துளியே துளி நீர்,அவளை குறுக்கு விசாரணை செய்யாமல் காட்டும் மெல்லிய பரிவு. காதல் மன்னன் ஜால வித்தை காட்டுவார்.
சாரியாக ஒரு வினோத நடை,(சவடால் வைத்தியை ஒத்த பாத்திரம்),வித்தியாச பேச்சு,அக்பர் அலியாக உருதுவில் கிளப்புவது,முக்கியமாக ஸ்டேஷன் மாஸ்டர் இடம் சலீமா தான்தான் என்று விளக்கும் அடாவடி. சித்தப்பா சகாதேவ சாஸ்திரி யாக (வினோத பொடி டப்பா)பேராசை கொண்ட வேத வித்துவாக,லக்ஷ்மண சர்மா,சத்ருகன மேனன் என்று கன்னட ,மலையாள slang பேசி மாட்டி கொள்ளும் கட்டத்தில் மாறி மாறி சமாளிப்பு, ஹரிஹர தாஸ் சுவாமிகளாக அண்ணாவுடன்,நேருவுடன்,மகாத்மாவுடன் கற்பனை உரையாடல்,கைவீக்கம்,கால்வீக்கத்திற்கேல்லாம் முற்பிறவி ரீல் ,ஜாக் சாலமன் என்ற தும்மல் பார்டி ஆங்கிலோ இந்தியராக படத்தையே இமாலய உயரத்திற்கு தூக்கி விடுவார்.ஒரு black humour ,situational humour இழையோடும் காட்சிகளில் எந்த முக சேட்டையும் இல்லாது நம்மை நகைச்சுவை புன்னகை பூக்க வைப்பார்.
நான் அவனில்லை ஒரு மனோரஞ்சித மலர். முழு யானையை பார்க்க வழியில்லாத குருடர்களான தமிழர்கள், அதன் ஏதாவது ஒரு பாகத்தை தொட்டு உணர்ந்திருந்தாலே போதும்.இந்த படம் மிக உயரங்களை அடைந்திருக்கும்.
இந்த படத்தை ஒரு ஜாலியான பொழுது போக்கு படமாக பார்க்கலாம். ஈர்ப்பான காட்சிகள்,நிறைய heroine கள். சிறப்பான பாடல்கள்.
மிக சுவையான நகைச்சுவை படமாக பார்க்கலாம்.
சமுதாய கருத்துக்கள் விரும்புவோர்க்கும் நிறைய.(இந்த மாதிரி ஜென்மங்கள் இன்றும் உண்டு.)படத்தில் தீனி உண்டு.
புதுமை விரும்பிகளுக்கு buffet டின்னெர்.
ஆனால் ஒன்று. ஒரு நொடி கூட கண்ணையோ,காதையோ,மூளையையோ மூடி casual ஆக பார்க்க முடியாமல்,நம் நேரத்தை இந்த படம் மட்டுமே தக்க வைத்து விடும்.
ஒரு ஸ்டாம்ப் பின் பக்கம் எழுதி விட வேண்டிய oneliner இவ்வளவு சுவையாக நம் கருத்தை கவனத்தை ஈர்த்தது கே.பாலசந்தர் என்ற ஒரு மேதையால்தான்.சம்பவ நகைச்சுவை மற்றோர் ஏமாறும்,மற்றோரை ஏமாற்றும்,கதாநாயகனின் இயல்பு சார்ந்ததே. சாட்சிகளின் குறுக்கு விசாரணையில் பாத்திரங்களின் தன்மைக்கேற்ப plasticity கொண்ட நாஞ்சில் நம்பியின் இயல்பான நகைச்சுவை,ராணி போன்ற புத்திசாலியாக்க பட்ட பாத்திரங்களின் திருப்பும் நேர்த்தி,ஜட்ஜ்-மகள் இடையேயான புத்திசாலித்தனம் நிறைந்த,நேர்த்தியான கதையை நகர்த்தும் அன்னியோன்யம்,நாயகனின் ஒரே சாட்சியான தானம்மாள் போன்றோரின் கதையுடன் ஒட்டிய crude (கோவை சரளா type )நகைச்சுவை,கடைசியில் முத்தாய்ப்பாக நாஞ்சில் நம்பியின் பார்வை வீச்சில் அச்சச்சோ படும் அச்சச்சோ என்று படம் முழுதும் தெறிக்கும் நகைச்சுவை பொறிகள், எண்ணி மாளாது.
அதையெல்லாம் மீறிய பாலச்சந்தரின் லாஜிக் மீறாத தற்செயல் சம்பவங்களின் சுவையான இணைப்பு கோர்ப்பு,ஒரு சம்பவம் இன்னொன்றுக்கு துணையாகி வேறொரு அபத்தத்தில் முடியும் சுவையான linked situations ,ஒவ்வொரு சம்பவத்துக்கும் சுவையான leads என்று இக்கால திரை கதை,வசனகர்த்தாக்கள்,இயக்குனர்கள் படிக்க வேண்டிய பாடம்.
இன்றைய டொராண்டினோ,நோலன் போன்று பரிமளித்திருக்க கூடிய உலக இயக்குனர் தமிழில் பிறந்து தொலைத்தது....(நடிகர்திலகத்துக்கு நேர்ந்த அதே விபத்து.தமிழனாய் பிறந்து தொலைத்த தமிழின் இரு பால்கேக்கள்)
இந்த படத்தின் சுவையான காட்சிகளை விஸ்தாரமாக விவரிக்க ஆசையிருந்தாலும்,இது கண்டு,கேட்டு,களித்து,சுவைக்க வேண்டிய, நான் மிக மிக strong ஆக prescribe செய்யும் ஒரு படம்.
மெல்லிசை மன்னரின் நான் சின்னஞ்சிறு பிள்ளை ,மந்தார மலரே,ராதா காதல் வராதா அந்த கால popular numbers
எனக்கு பிடித்த பாலுவின் மற்றொரு பாணி.சினிமாடிக் லைசென்ஸ் உபயோகித்து அவர் கொடுக்கும் எதிர்பாரா அதிர்ச்சிகள்.புன்னகையில் கற்பழிப்பு காட்சிக்கு பாடல் உபயோகிப்பு.இதில் பக்தர்கள் அனைவரும் ராணியை பண்ணும் மாஸ் rape .
மற்றபடி அனந்து,சர்மா,கிட்டு,லோகநாதன்,என்று இயக்குனர் சிகரத்தின் வழக்க கூட்டணி.
Quote:
நாயகர்களை முன்னிறுத்தி ,வெறியர்களுக்கு தீனி போடாமல்,கதைகளத்தை முன்னிறுத்தி,காலத்தோடு மாற விரும்பிய இயக்குனர்களின் ஒரே நம்பிக்கை பழைய தலைமுறையாயினும் ,ஜெமினி ஒருவரே .
நான் அவனில்லை ஒரு மனோரஞ்சித மலர். முழு யானையை பார்க்க வழியில்லாத குருடர்களான தமிழர்கள், அதன் ஏதாவது ஒரு பாகத்தை தொட்டு உணர்ந்திருந்தாலே போதும்.இந்த படம் மிக உயரங்களை அடைந்திருக்கும்.
by Gopal
Hats off to this one liner that speaks volumes about the acting prowess of GG and this excellent movie itself!Thanks a lot Mr Gopal!
senthil
Gap filler from Pava mannippu! GG and MRRadha interludes!!
https://www.youtube.com/watch?v=lNXV6L2VavM
https://www.youtube.com/watch?v=HG_5...J_5al&index=41
https://www.youtube.com/watch?v=pUWb...J_5al&index=48
https://www.youtube.com/watch?v=HCeC...J_5al&index=62
ஜெமினிகணேசனின் மாபெரும் திரை வெற்றி காதல் மன்னன் பட்டமே !
பெரும்பாலான வணிகரீதியான திரைப்படங்களில் அன்று தொட்டு இன்று வரை காதல் என்பதே காமம் தடவித்தான் ரசிகர்களுக்குப் பரிமாறப்படுகிறது. குடும்பத்தோடு அமர்ந்து திரையரங்கில் ஒரு படத்தை ரசிக்கும்போது இக்காட்சிகள் நம்மை நெளிய வைத்து
முகம் சுழிக்க வைப்பதும் சர்வசாதாரணமாகி விட்ட உகத்தில் கண்ணியமான திரைக்காதலின் சக்கரவர்த்தியாக மணிமகுடம் தரித்த ஜெமினியின் இடத்தை நிரப்பிட எவருமில்லை !
ஜெமினி என்றதும் நினைவுக்கு வருவது அவரது மென்மையான கார்பரேட் குணாதிசயங்கள் மேலோங்கிய படித்த பண்பாளரான மேன்மையான தோற்றமும், பனிக்குழைவான தேன்மதுரக் குரலில் ஏ எம் ராஜாவும் பிபிசீனிவாசும் அவரது உச்சரிப்பு ஸ்டைல்உதட்டசைவுக்கு ஏற்றபடி பட்டையைக் கிளப்பிய பாடல்களுமே !
From Then Nilavu...by AMRaajaa!!
https://www.youtube.com/watch?v=a81BgcQumKw
From VPKB by PBS!
https://www.youtube.com/watch?v=DjbFwPJgDTE
From PavaMannippu!
https://www.youtube.com/watch?v=52kDVborPjQ