CK
http://i818.photobucket.com/albums/z...pspv44p8ck.jpg
Printable View
உங்களைப் போலவே சொல்லிக் கொண்டிருக்கும் கலையை உண்மை பேசவைத்து விட்டு உங்களிடம் வருகிறேன் ரவி.
உங்களுக்குத் தெரியோமோ என்னவோ. அவரிடம் யாரோ பூஜ்யத்திற்கு மதிப்பில்லை என்று சொல்லிவிட்டார்களாம். அதனால் 108 என்ற எண்ணை 18, 18 என்று சொல்வதோடு அதுதான் தன் வயதும் என்று கிளிப் பிள்ளையாய் இருக்கிறார். இல்லை அவ்வளவு வயதில்லை அவர் சொன்னாலும் 81 வயதிற்கும் மேலான முதிர்ச்சி அவர் எழுத்தில் படுகிறது என்பதை படிக்கும் நண்பர்களோடு பேசும்போது சொன்னார்கள். ஏன் என்றால் அவர்களது 95 வயதிற்கும் மேலான தாத்தாக்கள், கொள்ளுத்தாத்தாக்கள் இப்படித்தான் பேசுகிறார்களாம். ஏன் அவர் எழுத்தில் நீங்களே உணரவில்லையா? 81 என்ற எண்ணையும் அவர் மாற்றிக்கொண்டு 18, 18 என்று கிளிப் பிள்ளையாய் இருக்கலாம்.
உடம்பு சுத்துது அதனால..
வள்ளல் வாசு சார்,
மிக்க நன்றி, தங்கள் வீடியோ பதிவுகளுக்கு. என்ன கேட்டாலும் கொண்டு வந்து விடுகிறீர்கள். கல்நாயக் கூறியது போல நீங்கள் எந்திரரோ?
ரவி சார்,
பாராட்டுக்கு நன்றி. கருவின் கரு கலக்குகிறீர்கள்.
சின்னக் கண்ணன்,
வியட்நாம் வீடு பாடலுக்கு இதுவரை கேட்டறியாத விளக்கம். சுவையாக இருந்தது. அந்த விளக்கத்தோடு காட்சியைப் பார்த்தால் மேலும் சுவை.
கல்நாயக்,
எதற்கு வம்பு? உண்மையை பேசிவிடுகிறேன். வயதில் மட்டுமல்ல, அறிவில், அன்பில், அடக்கத்தில் மட்டுமல்ல, தன்னை சிறியவனாக்கி விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மையிலும் நீங்களே பெரியவர். (சைக்கிள் கேப்பில் பிளேனை விடும் ரவி சாரை பாத்தீங்களா? பிள்ளையாம்.)
வாசு சார் 4 நாட்களுக்கு முன் , ‘மதுரகானம் திரி இளைப்பாறும் திரி. அங்கு சண்டை போட முடியாது. பாரபட்சம் காட்ட முடியாது’ என்று இன்னொரு திரியில் கூறியிருந்தார். முடியாதுக்கும் கூடாதுக்கும் வேறுபாடு உண்டு. முடியும் ஆனால் கூடாது என்பது கட்டுப்பாடு. ஆனால், முடியாது என்பது வாய்ப்பில்லை என்று அர்த்தம். சண்டையிடவும் பாரபட்சம் காட்டவும் நம்மால் முடியவே முடியாதே, அந்த எண்ணமே இங்கு வராதே. வாசு சாரின் ஒவ்வொரு எழுத்தும் சத்தியம். மகிழ்ச்சியாக உள்ளது. (கல்நாயக், இவ்வளவு தூரம் சொல்கிறேனே, பெரியவர் என்று உங்களை ஒப்புக் கொள்ளக் கூடாதா?)
-----------------------------------------------------
டாஸ்மாக் இணையதளத்தில் மதுவகைகள் என்னென்ன? எப்படி இருக்கும்? எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? என்றெல்லாம் விவரிக்கப்பட்டுள்ளதாம். மது குறித்து நேரடியாகவோ மறைமுகமாகவோ விளம்பரப்படுத்துவது சட்டப்படி குற்றம். மதுக்கடைகளிலும் மது பாட்டில்களிலும் கூட குடிக்கு எதிரான வாசகங்கள் உண்டு. அப்படி இருக்க, அரசின் இணையதளத்திலேயே மது பற்றி விளம்பரம் தவறு என்றும் அதை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
விட்டால் இந்தப் பாட்டையும் சேர்த்துக் கொள்வார்கள் போலிருக்கிறது. காஞ்சித் தலைவன் படத்தில் ஏ.எல். ராகவன் பாடியுள்ள,
உலகம் சுத்துது எதனால?
நம்ப உடம்பு சுத்துது அதனால..
(பாடல், நீர் மேல் நடக்கலாம் என்ற சரணத்துடன் ஆரம்பிக்கும்)
சூரியனை சுற்றும் பூமி தன்னைத்தானே சுற்றியபடி செல்கிறது என்கிறது அறிவியல். ஆனால், அது சுழல்வது நம் கண்ணுக்குத் தெரியவில்லை. மது உள்ளே போனால் உலகம் சுத்துமாம். ஏன்? நம் உடம்பு சுத்துகிறதே? சுவையான விளக்கம்.
பாடலுக்கு திரு.எம்.ஆர்.ராதா அவர்கள் நடித்திருப்பார். எல்லாரும் குடித்துவிட்டு கோஷ்டியாக ஆடுவார்கள். திரு.ராதா ஏற்கனவே விவகாரமான ஆள். குடித்தது போல நடிப்பது என்றால் கேட்க வேண்டுமா?
கன்னம் சிவக்குது எதனால?
கன்னிப் பொண்ணு அதனால
கன்னத்தில் ஒண்ணு.... என்று இழுத்தபடியே
கன்னத்தை அவர் காட்டும்போது ‘சப்’ என்று ஒரு அறை விழும். விரசமும் கலக்காமல் அப்படி விரசமாக கேட்க நினைத்தால் என்ன கிடைக்கும் என்பதை விளக்கும் வகையில் நகைச்சுவையான முறையில் காட்சி அமைப்பும் பாடல் வரிகளும்.
1956-ம் ஆண்டு திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் கழகம் தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டு 57ம் ஆண்டு தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் முதல் முறையாக 15 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. தேர்தல் வியூகம் வகுப்பதிலே காங்கிரஸ்காரர்கள் (அப்போதைய) வல்லவர்கள். அடுத்த தேர்தலில் இந்த 15 தொகுதிகளும் குறிவைக்கப்பட்டன. சரியாக அந்த 15 தொகுதிகளிலும் திமுக தோல்வியடைந்தது.
அந்த பத்ம வியூகத்தில் பேரறிஞர் அண்ணாவும் தப்ப முடியவில்லை. காஞ்சிபுரம் தொகுதியிலே பஸ் முதலாளியும் காங்கிரஸ் வேட்பாளருமான நடேச முதலியாரிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். அந்த தேர்தலில் குறிவைக்கப்பட்ட 15 தொகுதிகளில் போட்டியிட்டவர்களில் 14 பேர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தனர்.
ஒருவர் மட்டும் தப்பினார். நிலவரம் அறிந்ததாலோ என்னவோ, குளித்தலை தொகுதியில் இருந்து தஞ்சை தொகுதிக்கு மாறி போட்டியிட்டார். அங்கும் போட்டி எளிதாக இல்லை. (திராவிட இயக்க கொள்கைகளை ஏற்றுக் கொண்ட எனக்கு சாதி பெயரை குறிப்பிடுவதில் விருப்பமில்லை. என்றாலும் நான் குறிப்பிடப்போகும் பின்வரும் பிரமுகர்கள் பெயரோடு சாதி பிரிக்க முடியாதபடி ஆகிவிட்டதால் நானும் குறிப்பிடுகிறேன், மன்னிக்கவும்)
கபிஸ்தலம் மூப்பனார், பூண்டி வாண்டையார், உக்கடை தேவர், வலிவலம் தேசிகர், குன்னியூர் சாம்பசிவ அய்யர், வடபாதிமங்கலத்தார் என்று அழைக்கப்பட்ட பெருநிலக்கிழார் வி.எஸ்.தியாகராஜ முதலியார் (இவர் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தக்காராக இருந்தவர். அப்போது நடந்த சுவையான சம்பவத்தை நேரம் கிடைக்கும்போது பார்ப்போம்) போன்றோர் ஆண்ட ஒருங்கிணைந்த தஞ்சை ஜில்லாவிலே போட்டி.
தஞ்சையிலே யாகப்ப நாடார் என்றால் எல்லாருக்கும் தெரியும். பெரும் தனவந்தர். அவரது பெயரில்தான் யாகப்பா டாக்கீஸ் அமைந்திருந்தது. (இப்போது இருக்கிறதா என தெரியவில்லை) அவரது திருக்குமாரர் பரிசுத்த நாடார்தான் காங்கிரஸ் வேட்பாளர். தொகுதி மாறி, கடும் போட்டியில் காங்கிரசாரின் பத்ம வியூகத்தை உடைத்து வெற்றி பெற்ற அந்த கெட்டிக்காரர்தான் மேற்கண்ட பாடலை எழுதியவர்.
தெரிந்திருக்குமே. இன்று 92வது பிறந்த நாள் விழா காணும் திமுக தலைவர் திரு.கருணாநிதி அவர்கள். அவரது அரசியலில் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும், சும்மா சொல்லக் கூடாது. சில விஷயங்களில் மனுஷர் sharp மட்டுமல்ல, shark.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
https://www.youtube.com/watch?v=bUFQoLEIiqM
மக்கள் கலைஞர் ஜெய்யின் நினைவு தினம் இன்று. இப்பாடலை விட சிறந்த நினைவூட்டல் இருக்குமோ...
கலை நன்னா எழுதியிருக்கேள்..ஆனா பாடடு தான் கிடைக்கலை..//sharp மட்டுமல்ல, shark.// :) நீரும் தான்,,கரெக்டா விஷயத்தைப் புகுத்துவதில்.. :) .
கலை,
அப்படியே விவகாரத்தை மாத்திட்டீங்களே. இங்கே பிரச்சினை, நான் பெரியவனா, சின்னவனா என்பதில்லை. நானும் உங்கள் வலையில் விழுந்துட்டேன். இங்கு உள்ள அனைவருக்கும் வயதில் மிக பெரியவர் நீங்கள்தான் என்பது. எப்படியோ அதை ஒத்துக் கொண்டதற்கு நன்றி. இந்த பிரச்சினையை இவ்வளவு சீக்கிரம் முடித்து வைப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
மற்ற எல்லோரும் நம்மை அடிக்க வருவதற்கு முன்பு ஒப்புக்கொண்டு என்னை மட்டுமில்லாமல் உங்களையும் காப்பாற்றிக்கொண்டதில்தான் உங்கள் வயதின் முதிர்ச்சி, அனுபவ அறிவு பளிச்சிடுகிறது. திமுக தலைவர் திரு.கருணாநிதி அவர்கள் பிறந்த நாளை அலசி ஆராய்ந்த முறையும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாக உள்ளது.
கலை , கல்நாயக் - உங்கள் கன்னித்தீவு தொடர்ந்து கொண்டே இருக்கின்றதே:) - உங்கள் இருவரிடம் இருந்து, சிறியவர்கள் நாங்கள் பல கற்றுக்கொள்ள வேண்டும் . உங்கள் இருவரிடம் இருந்தும் நான் தனிப்பட்ட முறையில் இதுவரை கற்றுக்கொண்டது :
1. பெரியவர்களாக இருந்தும் இருவரும் அதை ஒப்புக்கொள்ளாததது .
2. தன்னடக்கம்
3. முதிர்ச்சி நிறைந்த எழுத்தோட்டங்கள் .
4. ஆரோக்கியமான , என்றுமே முடிவடையாத விவாதங்கள் .
இன்னும் எவ்வளவோ - சொல்லிக்கொண்டே போகலாம் - திருடன் போலீஸ் விளையாட வேண்டும் - கொஞ்ச நேரம் தான் வீட்டில் அனுமதி - விடிந்தால் quaterly exam வேறு . நண்பர்கள் வேறு அழைத்துக்கொண்டே இருக்கிண்டார்கள் - இவ்வளவு தான் எழுத நேரம் கிடைத்தது .
கல்நாயக் சார் ! எழுத்தின் முதிர்ச்சியை வைத்து ஒருவரின் வயதை கண்டுபிடிக்க முடியுமா ? அப்படி முடியும் என்றால் என் வயது 6 க்கு மேல் தாண்டியிருக்க சாத்தியமே இல்லையே . இன்னுமொரு உதாரணம் - திரு ஞானசம்பந்தருக்கு 4 வயது கூட நிரம்பாமல் பல முதிர்ச்சி நிறைந்த பாடல்களை பாடியுள்ளாரே ! கலையின் பக்கமா என்று கேட்காதீர்கள் - ஒரு சின்ன சந்தேகம் அவ்வளவே !!:)
ரவி
சுமக்கும் பாடல்கள் மூலம் நல்ல தெலுங்குப் பாடல்கள் கிடைகின்றன. கங்கை கதை அருமை. முக்கயமாக நளதமயந்தி. அந்துலேனி கதா. (அவள் ஒரு தொடர்கதை...'ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்'. ) கலக்குங்கள்.
கல்நாயக்,
வயதுச் சண்டை வம்பு ஓயாதோ? கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குற மாதிரியும் தெரியுதே. நல்லா ஓய்வெடுத்து விட்டு வாங்க. பாகம் 3 ஐ ஓய்வெடுக்காமல் கொண்டு போனீங்க. அதனால இப்ப கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம். தப்பில்லை. ஆனாலும் வீ ஆர் வெயிட்டிங்.
"பூப்பூப்பூ பூப்பூத்த சோலை பூப்பூப்பூ பூமாதுளை" பாடலுக்கு ஸ்பெஷல் நன்றிகள். வாவ்...என்ன பாட்டு அது! டேப் ரெகார்டரில் பதிவு செய்த சாமியாரின் 'விசிறி' கேசட்டை போட்டு தலையணை அருகில் இரவில் இந்த பாடலை எத்தனை முறை என்னுடைய இருபத்தொன்பதாவது வயதில் கேட்டிருப்பேன். இப்போது என்னுடைய வயது 53. இன்னும் கூட சில சமயம் அப்படிக் கேட்டு மகிழ ஆசை. ஆனால் டேப் ரெகார்டர் அவுட்.
என் உண்மையான வயதை சொல்லிபுட்டேன். ஆனா கல்லும், கலையும் கொல்லுதுங்க.:) இப்பவாவது உண்மை வருதா இல்லை கன்னித் தீவா தொடருதான்னு பார்க்கலாம்.:)
ராஜேஷ்ஜி!
குருஜி என்று இனி அழைக்கலாம்.:) பக்தி மணம் கமழ்கிறதே!
'திரையில் பக்தி' புதிய தொடருக்கு வாழ்த்துக்கள். நிறைய பாடல்கள் வருமே! இதிலும் அரிதானவற்றை எதிர்பார்க்கலாமா?