ராஜாவின் பேச்சைக் கேட்டபோது, இன்னும் அவர் தனது மாயையான வட்டத்திலிருந்து இறங்கி வரவில்லை எனத் தெளிவாகத் தெரிகிறது. மக்களோடு மக்களாக உலாவும் இடத்தில் எல்லோரும் ஒரு தளத்தில் பேச, இவர் மட்டும் ஏதோ வேறு ஒரு கிரகத்திலிருந்து வந்தது போல பேசுவதே இவரது தொடர்ந்து வரும் இயல்பாக இருக்கிறது.
"சினிமா சத்யமா? வாழ்க்கை சத்யமா?" யாகவா முனிவர் தோற்றுவிடுவார் ராஜாவிடம்..
"எழுதாத கவிஞர்களை கூப்பிட்டு இங்கு பேச வைத்தார்கள் என்று சொன்னார்கள். நீங்கள் எல்லாம் எழுதுகிற கவிஞர்கள். எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர்கள். எழுதினால் தான் கவிதையா? உங்கள் வாழ்வே கவிதை! உங்கள் வாழ்வே கவிதையே அல்லவா!.. வாழ்க்கையே ஒரு கவிதை!"
எனக்குச் சுத்தமா புரியல.. விளக்குமாற்றால் விளக்குங்களேன்! தெரிந்துகொள்கிறேன்.
"மேடைப் பேச்சுகளில் ஒன்று தன்னைப் பற்றி பெரிதாக பேசிக்கொள்வது..இல்லையென்றால் அடுத்தவர்களை மட்டம் தட்டிப் பேசுவது" என்ற வரையறையே தவறான முடிவு.
ஒரு பாடல் வெளியிட்டு விழாவில் என்ன பேச வேண்டும்? பாடல் ஆசிரியரை பாராட்டலாம். தன்னுடன் பணியாற்றும் இசைக்கலைஞர்களை பாராட்டலாம். அதையெல்லாம் மறந்து விட்டு, "சினிமா சத்யமா? வாழ்க்கை சத்யமா?" எனப் பேசுவதால் ஒரு பயனும் இல்லை.
ராஜா அவர்களே! தயவுசெய்து இனி மேடைப் பக்கம் வந்துவிடாதீர்கள். அந்த நேரத்தில் சப்த சுரங்களில் மூழ்கி முத்தெடுங்கள். ரசிகர்கள் எங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.