Originally Posted by
Gopal,S.
இன்று என் இளைய மகனின் பிறந்த நாள். தெய்வ மகன் விஜய் ஞாபகார்த்தமாக,விஜயதசமி அன்று பிறந்த குழந்தைக்கு விஜய் என்றே பெயரிட்டோம்.தெய்வ மகன் விஜய் போன்றே அழகானவன்.செல்லம்.
தங்க தட்டுடன் பிறந்த குழந்தை .இரு வேலையாட்கள்,இரு ஓட்டுனர்கள் என ,உலக பள்ளியில் ,பல நாட்டு பிள்ளைகளுடன் பயின்றாலும் ,20 வயதிற்குள் 23 நாடுகளை பார்த்து விட்டாலும்,அடிப்படை மறக்காத அற்புத குழந்தை.
தன்னுடைய தேர்ந்தெடுப்பில் சைவ உணவை மட்டுமே உண்டு ,சுற்றியிருக்கும் விலங்குகள் ,சூழ்நிலை,சக மனிதர்களிடம் நேயம் கொண்ட சிறந்த ஒருவன். அவன் என் பிள்ளை என்பதில் எனக்கு பெருமை.சிறு வயது முதல்,தன் தேவைகளை தானே பார்த்து கொள்வான். செல்வ சூழ்நிலையை தவறாக பயன் படுத்த மாட்டான்.நிறைய நண்பர்கள் கொண்ட ,முழுமை மனிதன்.சிறு வயது முதல் கடைகளில் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்பான்.எதையும் விரயம் செய்வதோ,சூழலை பாழ் செய்வதோ பிடிக்காது.சக மனிதர்களுடன் ,அவன் பழகும் முறை ,அவர்கள் என்ன தொழில் செய்பவராக,வறியவராக இருந்தாலும் அக்கறை காட்டி ,பண்போடு பழகுவான். தமிழ் மன்றங்களில் தூய தமிழில் மட்டுமே 10 நிமிடங்கள் பேசி பரிசு வாங்கியவன்.விளையாட்டு,கலை,படிப்பு,பொழுது போக்கு அனைத்தையும் சம நிலையில் வைத்து சம தேர்ச்சியுடன் அணுகுவான்.
பொறியியலில் அணு சக்தி படிப்பு,பெட்ரோல் படிப்புகள்,shale gas படிப்புகளில் வாய்ப்பு வந்தும் ,உலகத்தை காக்கும் ,எதிர்கால சந்ததிகளை காக்கும் சுத்த சக்தி (energy) ,சுழற்சி செய்ய கூடிய சக்தி ,இயற்கை சக்தி,சக்தி காப்பு (மித செலவழிப்பு) சம்பத்த பட்ட மேற்படிப்பை தேர்ந்தெடுத்து அமெரிக்காவில் படித்து வருகிறான்.சமீபத்தில் அமெரிக்க அரசாங்கம் சிறந்த பங்களிப்புக்காக அவனை கௌரவித்தது.
அவனை நான் எதிலும் நிற்பந்திக்காத நண்பனாகவே தொடர்ந்துள்ளேன்.என்னுடன் 8மணி முதல் 9 மணி வரை இரவு நேரங்களில் 10-11 வயதாக இருக்கும் போது நான் ஊரிலிருக்கும் நாட்களில் செலவிடும் போது ,சன் தொலைகாட்சியில் பிரபலங்கள் ரசித்த காட்சி ஓடும்.வாரம் தவறாமல் அனைத்து பிரபலங்களும் ரசித்த காட்சியாக தெய்வ மகன் படத்தில் மூன்று சிவாஜி தோன்றும் காட்சி கண்டிப்பாக வரும். அப்பா ஏன் எல்லோரும் இந்த ஒரு காட்சியையே கேட்கிறார்கள்?இந்த படத்தை நான் பார்க்க முடியுமா என்று கேட்டு ,சி.டீ வாங்கி பார்த்து, அவன் சொன்னது அப்பா ,அந்த விஜய் பாத்திரம் அற்புதம் என்று. அப்போது சொன்னேன் ,அவன் பெயரையே நீ சுமக்கிறாய் என்று.பெருமை பட்டான். பிறகு அவனாக கேட்டு வாங்கி நிறைய பார்த்து சிவாஜி ரசிகனாகி தொடர்கிறான். கர்ணனை ,சத்தியத்தில் பார்த்து அசந்து கேட்டான். அவருடைய நிறைய படங்களை இந்த மாதிரி போடலாமேப்பா என்றான்.
அவனுக்கு எனது, பெருமை நிறைந்த வாழ்த்துக்கள்.குடியின் value based education ,humility ,True Philanthrophy ,மாண்புகள்,மனிதம்,சுற்று சூழல் காப்பு,எளிமை, குடும்ப இணைப்பு அனைத்தும் உன்னால் சங்கிலி தொடர் போல ,வாழையடி வாழையாய் தொடர்ந்து ,மனிதம் தழைக்க உதவட்டும்.