Originally Posted by
RAGHAVENDRA
நண்பர்களே,
மீண்டும் மீண்டும் திரு பாஸ்கர் அவர்கள் நடிகர் திலகத்தைக் குறை கூறுவதிலேயே பிடிவாதமாக இருக்கிறார். அவர் கருத்தைக் கூறும் போது நான் பதிலளிக்காமல் இருக்க மாட்டேன்.
மாற்றுத் திரி நண்பர்கள் விமர்சிக்கும் போது ஏன் வெகுண்டு எழவில்லை என்று கேட்கிறார். திருப்பி அவர்கள், உங்கள் திரியிலேயே உங்கள் நண்பர்களே உங்கள் தலைவனை விமர்சிப்பதும் இழிவாகப் பேசுவதும் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா, எங்களிடம் ஏன் வருகிறீர்கள் எனக் கேட்க மாட்டார்களா..
முதலில் நம் மக்கள் தலைவனை நாம் விமர்சிக்காமல் இருந்தால் தான் மற்றவர்களிடம் செல்ல முடியும். எதிர் கருத்து சொல்லக் கூடாதா எனக் கேட்கிறார்கள். எதிர் கருத்து என்றால் அவர்களும் கேட்கலாம் அல்லவா.. இது பொது விவாத அரங்கமாயிற்றே. நம் நண்பர்கள் மட்டும் எதிர் கருத்து சொல்லலாம், மாற்றுத் திரி நண்பர்கள் சொல்லாமல் இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கப் போகிறது.
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.
நடிகர் திலகம் அரசியலில் அப்பழுக்கற்ற தலைவர். பொது வாழ்க்கையிலும் சரி, தொழிலிலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, எந்தத் தவறும் இழைக்காத உயர்ந்த மனிதர், தெய்வப் பிறவி, தமிழ்த்தாய் ஈன்ற தவப்புதல்வன், உத்தம புத்திரன் என்றால் அதை நிரூபித்து வாழ்ந்தவர், அவரைத் தலைவராக ஏற்று வாழ்பவர்கள் கனவில் கூட அவரைக் குறை சொல்ல முனைய மாட்டார்கள்.
இதையும் மீறி திரும்பத் திரும்ப அவரைக் குறை கூற வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார்கள் என்றால் அவர்களின் நோக்கத்தைப் பற்றி படிப்பவர்களே யூகித்துக் கொள்ளட்டும்.