Panchalankurichi Vantheyalla Vantheyalla Koothu: http://youtu.be/7pJsLcy1Tuo
Printable View
Panchalankurichi Vantheyalla Vantheyalla Koothu: http://youtu.be/7pJsLcy1Tuo
//ஸ்ரீதேவில பார்த்த படம்னா இது.. பட ஆரம்பத்திலயும் கமல் சிவகுமாருக்கு ஒரு பாட் இருக்கும்னு நினைவு..//
'பாடலைச் சொல்லவா?
கேட்க நீ மெல்ல வா'
'என் காதலி யார் சொல்லவா?...
ஹச்சா!...நானும் கவி.
பாலா, ஏசு குரல்களில் அப்போதைய சூப்பர் டூப்பர் ஹிட்.
'வரவேண்டும் வயதான மாது
அந்த இளமையிலே ஆடாத ஆட்டங்கள் எது?
https://youtu.be/RFNwENsJDDU
வாசு ஜி புத்திசாலி... காதலிச்சாரு... சிக்கா.. இளமையிலே ஆடாத ஆட்டங்கள் ஏதுன்னு கேட்கறாரு...
சிக்கா.... பெண்களுக்கென்றொரு பெருமை உண்டு தெரியாதோ கண்ணா ?
( video தேட நேரமில்லை. யாராச்சும் கிடைச்சா போடுங்கோ )
ஹச்சா!...நானும் கவி. // வாங்க சேர்ந்து தாவலாம்..
நடுராத்திரி.. கொய்ங்க் என்ற மெலிதான ஏ.சியின் ரீங்காரம்..இழுத்துப் போர்த்திக்கொண்டு க்ண்ணுக்குள் அந்தக்கால ப் படத்தின்பாடலுக்காக கமலையும் சிவகுமாரையும் நினைத்தபடி ( நம்பணும்) உறங்கிக்கொண்டிருந்த வேளையில் டபக்கென மனதுக்குள் விழிப்பு.. என் காதலியார் சொல்லவா எனக் காதருகே யாரோ சொன்னாற்போல ஓசை..கொஞ்சம் விழித்து மலங்க மலங்க முழித்து பின் மறுபடியும் இ.போ உறங்கிவிட்டேன்..காலையில் எழுந்து போடலாம் என வந்தால்...
தாகமுடன் தானே தவித்திட வந்திங்கு
வாகாகச் சொன்னீரே வாசு..
ம்ம்..என்காதலீ யார் சொல்லவா நல் பாட் தான்..பெண்களுக்கென்றொரு பெருமை பாட் கிடைக்கலை..
இ.சு.பாடல்
https://youtu.be/GEzVtYzzwrE
எவ்வளவு தடவை கேட்டாலும் அந்த மெல்லிய உணர்வுகள் மனதில் கிளர்ந்தெழுவதை தடுக்க முடியவில்லை எனச் சொல்லும் வேளையிலே,வரிகள் இசை அது தான் முதற்காரணம் என மேலும் சொல்லி முடிக்கிறேன்..(ஹப்பா எவ்ளோ நீள வாக்கியம்)...
ஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்
அது தான் காதல் பண்பாடு..
ஆனபின்னாலே இருபக்க மேளம்
அது தான் வாழ்க்கை அன்போடு..
இது அவ்வளவாகக் கண்டுகொள்ளப் படாத பாடல் என வருத்தம் எனக்கு உண்டு..
https://youtu.be/yvbDJYvl1r0
முதல்ல ஆடியோ கேளுங்க. அப்புறம் வீடியோ தர ட்ரை பண்றேன். (சசிரேகா 'ஜம்').
http://www.mediafire.com/download/ww...ru+Perumai.mp3
அப்புறம் இதையும் ஏன் விட்டு வைப்பானேன்.
'அந்தப் பக்கம்தானா காதல் மயக்கம்'
ரெண்டு பக்கமும் 'லா' வும், 'ரி' யும் கிளப்புறாங்களே குரல்களாலே.
http://www.mediafire.com/download/so...CLRE-SG%29.mp3
கவர்ச்சி மாயா (கொஞ்சம் அழகாகத் தெரிகிறார்) கிளப் டான்ஸ் எடுக்க, 'கிளப்'பில் ஜெயகணேஷ், மாதவி ஜோடி காதல் நெருக்கத்தில் மயங்கி இருக்க, எதிர்பாராமல் அங்கே வரும் 'நடிகர் திலகம்' தன் மனதில் வைத்த காதலியை இன்னொருவனுடன் பார்த்து அதிர்ச்சியில் உறைய, மறக்காமல் எம்.எஸ்.வி ராட்சஸிக்கு தன் சொந்தப் படத்தில் காலம் கடந்தும் பாட வாய்ப்புத் தர, டிரம்ஸ், பாங்கோஸ் உருட்டல்களின் சப்தத்தில் ஜெய், மாதவி பாடலின் நடுவே ஜாய்ன் செய்ய, நடிகர் திலகம் தாங்க மாட்டாமல் பாட்டில் பாட்டிலாக பாரில் விழுங்க, (நடிகர் திலகத்தின் வெறுப்பு உமிழும் பார்வை அற்புதம். முகம் அழகாகவே இருக்கிறது.) நாம் கொஞ்சம் மறந்து போன பாடல்தான். ஜானகி ப்ளஸ் பாலா ராட்சஸி கூட இணைந்து பாடுவதும் கொஞ்சம் புதுமைதான். கேட்டு, பார்த்து நாளாச்சுதானே! 'அமர காவிய'மாகி இருக்க வேண்டிய படம் சாதா காவியமா சொதப்பிடுச்சி...'மு.கா.சிக்' தனி ரூட் அப்ப போட்டு பட்டை கிளப்பிடுச்சே...ம்...
https://youtu.be/pg2H9Urfhs4
சிக்கா..... அந்த தேனோடும் தண்ணீரின் மீது பாட்டின் படக்காட்சி பாட்டுக்கு சம்பந்தம் இல்லாதது போலவே எப்போதும் எனக்குத் தோன்றும். அட்லீஸ்ட் ஏதாவது குட்டையின் கரையில் உட்கார்ந்தாவது பாடி இருக்கலாம். மொத்தப் பாட்டும் தண்ணீர் சம்பந்தப் பட்டு இருக்க பார்க்கில் கூட்டமாக ஆடறாங்க... ( தண்ணி பற்றாகுறை காலமோ ?) செந்தில்ஜிஸ், வாசுஜிஸ், ராகவ்ஜி, வாத்தியாரையா இவங்க என்ன நினைக்கிறாங்க ?
ஏதாவது குட்டையின் கரையில் உட்கார்ந்தாவது பாடி இருக்கலாம். மொத்தப் பாட்டும் தண்ணீர் சம்பந்தப் பட்டு இருக்க பார்க்கில் கூட்டமாக ஆடறாங்க... ( தண்ணி பற்றாகுறை காலமோ ?) // ஆரம்ப ஷாட்டே ஒரு குட்டை அல்லது குளம் காண்பிச்சுட்டு தானே மிச்சப் பாட்டு வருது..அது போதும்னு டைரக்டர் திருப்தியாகிருப்பார் போல..:)
அமர காவிய'மாகி இருக்க வேண்டிய படம் சாதா காவியமா சொதப்பிடுச்சி...'// செம தெகிரியம்ப்பா.. ம்ம்.. நான் இதயம் பேசினால் பாட்டுக்கே பயந்து பயந்து எழுதினேன்..இன்னும் நீங்க போட்ட பாட் பார்க்கலை..
ஹச்சோ.. நான் இந்தக் கூட்டணி பத்திக் கேள்விப் பட்டதே இல்லியே.. :)
ஆகாயம் ஏன் இன்று அழுகின்றது
அதில் உன் அழுகை ஏன் விழுகின்றது
சொர்ண புஷ்பம் , கேப்டன் + மழை..
https://youtu.be/OTUbSuOxbhU
தொட்டது போலே கனவு கண்டேன் தூக்க க் கலக்கமா
என் தோளைத் தழுவும் காளையைக் கண்டேன்
துணைவன் மயக்கமா..
அது சரி.. கனவு கண்டா சரி..அதுக்காக வண்டு வந்து பூவில் வந்தது எக்ஸடீரான்னு இப்படித் தான் அபினயம் பிடிச்சு நாட்டியம் ஆடுவாங்காங்காட்டியும்..ம்க்கும்..
அதாவது பரவால்ல ஹீரோ என் ட்ரி குடுட்தவுடனே அசக் அசக்னு டப்பாங்குத்தும் ஆடற்து இருக்கே..என்னமோ போங்க :)
https://youtu.be/EGG9huQcYdU
கெளரிகல்யாணத்தில் ரவிச்சந்திரன் ஜெயலலிதா..ஆமா படம் எப்டி இருக்க்கும்..ம் முன்னால கேட்ட படத்துக்கே யாரும் சொல்லலை.இதுக்கு சொல்லவா போறாங்க..(கண்ணா திங்க் பாஸிட்டிவ்... ஏதாச்சும் மீனு மாட்டும்! :) )
From Satyavan Savitri
Ambikaiye gathi nee......
http://www.youtube.com/watch?v=ADy1OyFOojg
சிக்கா.. கௌரி கல்யாணத்தில் ஜெய்சங்கரும் இருக்காரு.. தெரியுமில்ல... ஆனா அவருக்கு பெரிய மாமா ரோல்... அதாகப்பட்டது அம்மு... அம்மாவுக்கு அண்ணன்... இவங்க தபால்காரன் தங்கை..
அந்தக் கால போஸ்டர்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க... கவனிச்சீங்களா... அதுவும் பண்டரிபாய் நடிக்கிற படம் என்றால் ஹீரோ காணாமலே போயிடுவார் போலிருக்கே ?
காலையில் காவடியுடன் தொடங்குவோம்.
'காபரே பாடல்களில் மட்டும்தானா கலக்குவேன்....காவடிப் பாட்டிலும் காவியம் படிப்பேன்'
என்கிறோரோ 'எல்லார்' எண்ணத்திலும் நிறைந்த எல்.ஆர் ஈஸ்வரி. (ஏற்கனவே 'பழனி சந்தன வாடை' பிடித்தவராயிற்றே)
'பேபி' சுமதியின் பொய்க் கால் குதிரை ஆட்டம், ஜெயாவின் மயிலாட்டம், காவடி ஆட்டம்.... அப்புறம் சப்போர்ட்டுக்கு இருக்கவே இருக்கு தேங்கா.
'மகளுக்காக' படத்தின் மறந்து போன பாடல்.
https://youtu.be/EHMYGSiyXqU
'கௌரி கல்யாண'த்தில் போட்டி நாயகர்களுக்கிடையே பலப்பரீட்சை பார்க்கும் அற்புதமான பலமான சண்டைக் காட்சி ஒன்று உண்டே! அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டதாமே! நிஜமாகவே அருமையாகத்தான் இருந்தது.
46.55க்கு தொடக்கம். பார்த்துட்டு எங்கிட்ட சண்டை போடாதீங்க.:)
https://youtu.be/ZgKTTn3srZ0
[QUOTE=vasudevan31355;1291207]//ஸ்ரீதேவில பார்த்த படம்னா இது.. பட ஆரம்பத்திலயும் கமல் சிவகுமாருக்கு ஒரு பாட் இருக்கும்னு நினைவு..//
'பாடலைச் சொல்லவா?
கேட்க நீ மெல்ல வா'
'என் காதலி யார் சொல்லவா?...
ஹச்சா!...நானும் கவி.
பாலா, ஏசு குரல்களில் அப்போதைய சூப்பர் டூப்பர் ஹிட்.
'வரவேண்டும் வயதான மாது
அந்த இளமையிலே ஆடாத ஆட்டங்கள் எது?
/QUOTE]
வாசு,
வர வர உன் பதிவுகளில் தவறுகள் ரொம்ப அதிகமாகி வருகிறது.நம் மதிப்புக்குரிய ஜேசுதாஸ் அண்ணா இலமயிலெ என்று பாடுவார். திருத்தி கொள்.
[QUOTE=Gopal,S.;1291368]'பில்லைத் தமிழ்' பாடிவிட்டேன் பிள்ளைகாள்.:) பிழை பொறுக்க. பிழைத்துப் போக விடுக. 'மதுர கானங்கள்' இன்று அதிரும் சப்தம் கேட்கிறதே....என்ன நடக்கப் போகிறதோ! எச்சரிக்கை. அனைவரும் 'ஜாக்ரதோ...ஜாக்ரதோ'.:)
ஆண்டவா! இன்று எப்படியாவது பாண்டியில் 'கர்ண'னுக்கு டிக்கெட் கிடைக்க வேண்டுமே! 'கர்ணன்' யாரையுமே கைவிடுவதில்லை.:)
முத்தையன் அம்மு சார்,
அற்புதமான பாட்டுப் புத்தகங்களின் அட்டைப்பட அணிவகுப்புகள் ஜோர். மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
ஆஹா... அந்தக் காலத்தில் சில பாடல் புத்தகங்களின் பின் அட்டையில் இந்த "தலை வெட்டி முனியப்பன்" பட விளம்பரம் பார்த்த நினைவு உண்டு... அது வந்துச்சா இல்லையா ?
ம்ம்.. ஆசை அண்ணா அருமைத் தம்பி என்றொரு படப்பாட்டு புத்தகம் தூள் தூளாக உதிர்ந்து மின்விசிறி போட்டதும் பறந்தே போயிடுச்சு.. கரையான்கள் ஒழிக !
முத்தையன் சார்
தங்கள் சேவையைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
அபூர்வமான பாடல் புத்தகங்களை வழங்கி அசத்தி வருகிறீர்கள்.
நன்றி
From Akbar, Tamil dubbed version of MUghal E Azam (1960)
kanavu kaNda kaadhal kadhai kaNNeer aachche........
http://www.youtube.com/watch?v=qpQk4puv_fg
From the Hindi original Mughal E Azam
mohabbat ki jhooti kahani pe roye.....
http://www.youtube.com/watch?v=Rk2Tooe-CXo
'அம்மா எங்கே' எங்கே?