http://oi65.tinypic.com/v66b75.jpg
Printable View
23.5.2019 (வியாழன்) இரவு 10 மணிக்கு ஜெ.மூவி தொலைக்காட்சியில்...... ஸ்டைல் மன்னனின் மெகா ஹிட் மூவி....
*****THE KING OF STYLE *****
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...22&oe=5D9CB18B
http://oi68.tinypic.com/fk5hsn.jpg
amradeepam
பழைய படங்களை டிஜிட்டல் செய்து
வெளியிடப்பட்ட முதல் தமிழ் படம்
நடிகர்திலகத்தின் கர்ணன்.
அதனை தொடர்ந்து மற்ற நடிகர்களின் படங்கள் டிஜிட்டல் செய்யப்பட்ட போதிலும்,
மக்களிடத்திலும், சினிமா ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைக்கவில்லை.
சில படங்கள் டிஜிட்டல் செய்யப்பட்டும் வெளியிட முடியவில்லை.
கர்ணனுக்கு பிறகு காலத்தால் அழியாத காதல் காவியம் வசந்தமாளிகை டிஜிட்டல் செய்யப்பட்டு, மாபெரும் வசூல் சாதனை படைத்தது.
தற்போது, ஏற்கனவே டிஜிட்டல் செய்யப்பட்ட வசந்த மாளிகை மேலும் மெருகேற்றப்பட்டு, மீண்டும் டிஜிட்டல் செய்யப்பட்டு, விரைவில் வெளிவர இருக்கிறது.
மறு டிஜிட்டல் செய்யப்பட்ட வசந்தமாளிகையின் டிரைலர் தற்போது தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.
விரைவில் வர இருக்கும் வசந்தமாளிகையில்
குடிபுக தயாராகுங்கள்...
அட்வான்சாக தியேட்டர்களில் டிரைலரை கண்டு மகிழுங்கள்...
http://oi64.tinypic.com/2d9p5y8.jpg
நன்றி சுந்தர்ராஜன்
எங்கும் சிவாஜி மயம்....
இன்று (25.05.2019) சனிக்கிழமை முதல் திருச்சி கெயிட்டியில் வருகிறது சரஸ்வதி சபதம் திரைக்காவியம்.
சென்ற வருடம் வெளியாகி வசூல் சாதனை படைத்த சரஸ்வதி சபதம், மீண்டும் சாதனை படைக்க வருகிறது.
... திருச்சி வாழ் நடிகர்திலகத்தின் அன்பு இதயங்களே, வித்யாபதிக்கும், நாரதருக்கும் மாபெரும் வரவேற்பு கொடுக்க தயாராகுங்கள்.
http://oi63.tinypic.com/209krrq.jpg
நன்றி சுந்தர்ராஜன்
கலை கடவுள் செவாலியே நடிகர்திலத்தின் நினைவுநாளை முன்னிட்டு,
மதுரை சென்ட்ரல் திரையரங்கில்
12.07.2019 வெள்ளி முதல்,,
... மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள்
சிவனாக அருள் பாவிக்கும்
திருவிளையாடல் பக்தி காவியம்
தினசரி 4 காட்சிகளாக வெற்றிநடை போட வருகிறது.
திருவிளையாடல் திரைப்படத்தின் போஸ்டர்
உங்கள் பார்வைக்கு....
http://oi64.tinypic.com/t5hj5f.jpg
நன்றி சுந்தர்ராஜன்
இன்று 25.5.2019 (சனி) இரவு 7.30 மணிக்கு முரசு தொலைக்காட்சியில்...நடிகர் திலகத்தின் கிளாசிக் ஸ்டைலில்......
மந்தமாருதம் தவழும்..சந்திரன் வானிலே திகழும், இந்த வேளையே..., இன்பமே.. ஏகாந்தமான,.. இந்த வேளை....இன்பமே....
அசத்தலான ஸ்டைலில் #நானேராஜா.
http://oi67.tinypic.com/33wwrqg.jpg
நன்றி Sheik Ali
விரைவில்.....
நவீன டிஜிட்டல் வடிவில்....
நடிகர்திலகத்தின் காதல் காவியம்....
... இது சமாதி அல்ல சந்நிதி....
இறந்து போன ராணிக்காக கட்டப்பட்ட
தாஜ் மகால் அல்ல...
உயிரோடிருக்கும் காதலிக்காக கட்டப்பட்ட வசந்தமாளிகை.
காசு கொடுத்து வாங்க இதயம் எந்த கடையிலே கிடைக்கும்னு தெரிய்லயே...
காதலின் வலியை உணர்த்தும் உணர்ச்சிமிக்க வசனங்களில்
வசந்தமாளிகை.
http://oi65.tinypic.com/21jwqi0.jpg
நடிகர்திலகம் இரண்டு வேடங்களில் 15 படங்கள் நடித்திருக்கிறார். பல படங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
உத்தமபுத்திரன் திரைப்படம் தான் நடிகர்திலகம் இரண்டு வேடங்களில் நடித்த முதல் படம்.
இந்த படத்தை பார்த்து விட்டு அன்றைய காலகட்டத்தில் இருந்த பல நடிகர்களுக்க இரட்டை வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
...
பின்னாளில் எம்ஜிஆரின் நாடோடி மன்னன் திரைப்படத்தின் முன்னோடியே உத்தமபுத்திரன் திரைப்படம் தான்.
இரட்டை வேடம் என்றால்,
ஒருவருக்கு மீசை கீழ்நோக்கியும், மற்றொருவருக்கு மேல்நோக்கியும் இருக்கும்,
அதே போல் ஒருவருக்கு முகத்தில் மரு இருக்கும், மற்றொருவருக்கு இருக்காது.
மற்றபடி உடலை வருத்தியோ அல்லது குரலில் வித்தியாசம் காண்பித்தோ நடிக்க மாட்டார்கள்.
ஆனால, நடிகர்திலகம் நடித்த இரண்டு வேடங்களில் முதல் படமான உத்தமபுத்திரன் ஆகட்டும்,
சரஸ்வதி சபதம், எங்க ஊர் ராஜா, கெளரவம், என்மகன், என்னைப்போல் ஒருவன் மற்றும் திரிசூலம் படத்திற்கு பின்பு வெளிவந்த எமனுக்கு எமன், ரத்தபாசம், விஸ்வரூபம், மாடிவீட்டு ஏழை, சங்கிலி, சந்திப்பு, வெள்ளை ரோஜா போன்ற படங்களில்,
இரண்டு பேரும் வெவ்வேறு நபர்கள் தான் என்று உணரும் வகையில், தன்னை வருத்தி உடலமைப்பிலும், குரலிலும் வித்தியாசம் காட்டியிருப்பார்.
இவரை போல் பலர் முயற்சி செய்து கூட பார்க்க முடியாது என்பது தான் உலகறிந்த உண்மை.
இதுவே இன்று வரை நடிகர்திலகத்தின் புகழ்
நிலைத்து நிற்பதற்கு காரணம்.
சிவாஜி என்று சொல்லடா....
நெஞ்சம் நிமிர்த்தி செல்லடா.....
எங்க ஊர் ராஜா திரைப்படத்திலிருந்து
அட்டகாசமான ஸ்டில் உங்களுக்காக..
http://oi63.tinypic.com/313m7nm.jpg
நன்றி சுந்தர்ராஜன்
அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே, நடுநிலையாளர்களே, பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி ஊடகங்களே,,
சிவாஜி இல்லாமல் இருக்கலாம், ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் சிவாஜி அவர்களின் பங்கு அவசியம் இருக்கும்.
இதோ அதன் விபரம்...
... 1. பா.ம.க தேர்தல் அறிக்கையில் எம்.ஜி.ஆர் பெயரில் நடிப்புக்கு தேசியவிருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தது. விளைவு பாமக பூஜ்யம்.
2. விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அவர்களோ, கேப்டனுக்கு எம்.ஜி.ஆர் பாடல்கள் தான் பிடிக்கும், அதிலும் ஒளியமயமான எதிர்காலம் என்ற எம்.ஜி.ஆர் பாடலைத் தான் எப்போதும் பாடுவார், என்று பேட்டி அளிக்கிறார். விளைவு தேமுதிக பூஜ்யம்.
3. அனைத்திற்கும் மேலாக பிஜேபியோ பாரம்பரியமிக்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை வைத்தது.
( யாரோ எம்.ஜி.ஆர் பெயரை சொன்னால் மக்கள் நமக்கு வாக்களித்து விடுவார்கள் என்று தவறாக சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். விளைவு பிஜேபி பூஜ்யம். (தேசிய அளவில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும் தமிழநாட்டில் 0 தானே)
4.ஓபிஎஸ் மகன் மட்டும் எப்படி ஜெயித்தார். நடிகர்திலகம் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு சென்னையில் இருந்து கொண்டே எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வராமல் தவிர்த்தார்.
ஓபிஎஸ் அவர்கள் தான் மணிமண்டபத்தை திறந்து வைத்தார். அதன் விளைவு தான். தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் அதிமுக தோற்ற போதும், ஓபிஎஸ் மகன் மட்டும் ஜெயித்தார்.
5, தமிழகத்தில் இன்னும் காங்கிரஸ் என்ற கட்சிக்கு மக்கள் வாக்களிக்கின்றனர் என்றால், அது, சிவாஜி அவர்கள் போட்ட அஸ்திவாரம் தான். ( இதைப் பற்றி விரிவான பதிவு தனியாக)
ஆனால், சிவாஜிக்கு உண்டான மரியாதையை காங்கிரஸ் கட்சி தராத காரணத்தால் தான், இன்று தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
மக்கள்தலைவர் சிவாஜிக்கு துரோகம் செய்தவர்கள், செய்பவர்கள் யாராக இருந்தாலும், தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்.
http://oi64.tinypic.com/35hlhdk.jpg
நன்றி சுந்தர்ராஜன்
http://oi68.tinypic.com/4zxqc7.jpg
நன்றி H O S
http://oi68.tinypic.com/2h7qqac.jpg
நன்றி H O S
அன்றைய காலகட்டத்தில் சிம்மக்குரலோனுக்கு, உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உண்டு...
இன்று போல, வளைதளமோ, மற்றும் தகவல் சாதனங்களோ இல்லாத காலம் அது....
திரைப்படங்களும் உடனுக்குடன் பிரபலமாக அறிய இயலாத நிலையிலும், சிவாஜிக்கு, நமது நாட்டிலிருந்து அலுவல் காரணமாக வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் மூலமாகவும், சக்தி வாய்ந்த ரேடியோ மற்றும் அயல்நாட்டு பத்திரிகை வாயிலாக மட்டுமே, அந்தந்த நாடுகளில் செய்திகள் அறிய இயலும்....
ஒரு முறை, (1962 ல்) அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்ற...ு, சிவாஜி அவர்கள் அங்கு சென்று விட்டு திரும்பும் போது, ரோம் நகருக்குச் சென்றார்... பிரபல ஹோட்டலில் உணவருந்த சென்ற போது, அந்த ஹோட்டலின் உரிமையாளர், சிவாஜியின் சாதனைகளைப் பற்றி கேள்விப்பட்டு, அவரை பெருமையுடன் வரவேற்று, பல்வேறு "போஸ்" களில் புகைப்படம் எடுத்து, அதை தனது வரவேற்பு அறையில், தங்கத்தால் பிரேம் செய்து மாட்டியுள்ளார்....
கலைக்கு மொழியில்லை....
இதய தெய்வத்தின் பக்தர்களுக்கு, இனிய ஞாயிறு காலை வணக்கம் நட்புகளே....
http://oi67.tinypic.com/2e0uvso.jpg
நன்றி நிர்மல் தியாகராஜன்
அன்பிற்கினிய நடிகர் திலகத்தின் ரசிகர்களே! திருச்சி கெயிட்டியில் வெற்றி நடை போடும் சரஸ்வதி சபதம் காவியத்தில் 26.05.2019 ஞாயிறு மாலை 5.00 மணியளவில் ரசிகர் சந்திப்பு .அனைவரும் வருக!! வருக!!!
http://oi65.tinypic.com/j8lcoo.jpghttp://oi67.tinypic.com/2hhq36b.jpghttp://oi66.tinypic.com/289c3lv.jpg
நன்றி பாஸ்கர் கோவிந்தன் (முகநூல்)
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
நாளை புதன் மாலை 6.01 மணிக்கு
சரித்திரநாயகனின் சாதனை காவியம்,
... படம் வெளிவரும் போதெல்லாம் மாபெரும் வசூல் சாதனை படைத்து,
எதிரிகளை பிரமிக்க செய்த காதல் காவியம்
வசந்தமாளிகை திரைப்படத்தின்
டிரைலர் வெளியீட்டு விழா
மதுரை அண்ணாமலை திரையரங்கில் நடைபெறுகிறது.
குழந்தை உள்ளம் கொண்ட
உன்னத தலைவனின் விழாவிற்கு
அலைகடலென திரண்டு வாரீர்..
அன்பு இதயங்களின் வருகையால்
மிரண்டு போகட்டும் எதிரிகள்...
எத்தனை முறை வந்தாலும்,
எதிர்த்து போட்டியிடும்
அனைத்து படங்களையும் டெபாசிட் இழக்க செய்யும்
வசந்தமாளிகை திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
http://oi65.tinypic.com/2wnw9pk.jpg
நன்றி சுந்தர்ராஜன்
http://oi63.tinypic.com/105e1b7.jpghttp://oi63.tinypic.com/1538o0p.jpg
நன்றி S பேச்சிமுத்து (நடிகர்திலகம் சிவாஜி விசிறிகள்)