https://i.postimg.cc/htwrpFn3/IMG-4563.jpg
Printable View
தினமலர் -வாரமலர் -22/12/19
----------------------------------------------
எஸ்.விஜயன் எழுதிய எம்.ஜி.ஆர். கதை என்ற நூலிலிருந்து ;
எம்.ஜி.ஆர். தன்னை பகைவனாக கருதியவரையும் நண்பனாக மாற்றி , நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தார் என்பதற்கு எடுத்து காட்டாக , அவர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு இது.
திரைப்பட துறையில் எம்.ஜி.ஆர். கொடிகட்டி பறந்தபோது அவரை கதாநாயகனாக வைத்து,பல வெற்றி படங்களை தயாரித்த தேவர் பிலிம்ஸ், சாண்டோ சின்னப்பா தேவரை யாரும் மறக்க முடியாது .* தேவருக்கும் , எம்.ஜி .ஆருக்கும் இடையே உள்ள நட்பு பட உலகில் உள்ள அனைவராலும் இன்றைக்கும் பேசப்படும் அளவுக்கு நெருக்கமானது .
இத்தனை நட்புடன் விளங்கிய எம்.ஜி.ஆரும் , தேவரும் சில ஆண்டுகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் வினோதம் கொண்டிருந்தது , சினிமா உலகில் பலரும் அறிந்திராத தகவல் .**
அரசிளங்குமரி படம் முடியும் தருவாயில் கிளைமாக்சில் சண்டை காட்சி ஒன்று இடம் பெற வேண்டும் என்று விரும்பினார் எம்.ஜி.ஆர். அதில் தன்னோடு மோதி நடிப்பதற்கு சின்னப்பா தேவரை விட்டால் வேறு ஆளில்லை என்று எண்ணினார் .அதனால் தயாரிப்பாளரான ஜூபிடர் அதிபர்* சோமசுந்தரத்தின் மகன் காசியை தேவரிடம் அனுப்பினார் .
நடந்ததை எம்.ஜி.ஆரிடம் வந்து சொன்னார் தயாரிப்பாளர்.* தேவர் மறுத்த விஷயம் அறிந்த எம்.ஜி.ஆர். தயாரிப்பாளரிடம், நாளைக்கு நீங்க தேவரை பார்த்து பேசும்போது எனக்கு போன் செய்யுங்க . நான் காத்திருக்கிறேன், என்றார்*
அதன்படி, தயாரிப்பாளர் மறுநாள் தேவரை சந்திக்க , மீண்டும் மறுத்த தேவர்*கோபத்துடன் ஸ்டூடியோ நோக்கி புறப்பட்டார் . அவரை எதிர்பார்த்து காத்திருந்த எம்.ஜி.ஆர். கைகளை விரித்தபடி , முருகா* முருகா என்று ஓடி வந்து , காரை விட்டு தேவர் இறங்கும் முன்பே அவரை கட்டிபிடித்துக் கொண்டார் . பின்னர் அருகில் உள்ள அலுவலகத்திற்கு இருவரும் சென்றனர் .தயாரிப்பாளருக்கு*ஒரே பதைபதைப்பு.* உள்ளே என்ன நடக்குமோ என்று மற்றவர்களுக்கும் எதுவும் புரியவில்லை .* நேரம் போய் கொண்டிருந்தது .* அரை மணி நேரத்திற்கு பின் கதவு திறந்தது .* வேட்டியை மடித்து கட்டி கொண்டு தேவர் வெளியே வந்தார் .சில நொடிகளில் எம்.ஜி.ஆரும் வெளியே வந்தார் .
மறுநாள் காலை 10மணிக்கு தேவர் ஸ்டுடியோவிற்கு வந்தார் ..எம்.ஜி.ஆர். தேவருடன் சண்டையிடும் காட்சி படமாக்கப்பட்டது .* ஏதோ சண்டை போடுவது போல் புறப்பட்ட தேவர் , எம்.ஜி.ஆரிடம் அடங்கி போன மர்மம் யாருக்கும் விளங்கவில்லை*
இந்த சம்பவத்திற்கு பின்னர்தான் வரிசையாக தேவரின் ஆறு படங்களில் நடிக்க*ஒப்பந்தம் ஆனார் எம்.ஜி.ஆர். பிரிந்திருந்த நட்பும், உறவும் முன்பைவிட பன்மடங்கு வலுவானது .
நாகிரெட்டி நினைவுகள
எம்.ஜி.ஆரைப் பார்க்க விஜயா வாகினி அதிபர் நாகிரெட்டி அவர்கள் தோட்டத்துக்கு வந்தார். ""ரெட்டியார் சார் வந்து பேசி விட்டுப் போகும் வரை யாரையும் அறைக்குள் அனுப்ப வேண்டாம்'' என்று தன் காவல் அதிகாரி விவேகானந்தராஜிடம் எம்.ஜி.ஆர். சொல்லியிருந்தார். ஹாலில் அமைச்சர்கள் பலர் இருந்தனர்.
ரெட்டியார் வந்ததும் அவர்களை மட்டும் செம்மலின் உதவியாளர் மாணிக்கம் வந்து உள்ளே அழைத்துப் போனார். நான், ரெட்டியாரின் உடன் வந்த உதவியாளரிடம் ஹாலில் பேசிக் கொண்டிருந்தேன். ""ரெட்டியார் விஜயா கார்டனில் புதிதாக ஒரு ஹெல்த் சென்டர் கட்டறாங்க. அதுக்கு தலைவர் பெயர் வைக்க அனுமதி கேட்க வந்திருக்காங்க'' என்று சொன்னார்.
""நட்பு என்பது, என்ன பெறுவது என்ற எண்ணத்தில் கொள்ளும் உறவல்ல. என்ன தருவது? என்று காக்கும் உறவு என்ற பெரியோர் சொல்படி ரெட்டியார் வந்திருப்பதை உணர்ந்தேன்'' என்கிறார் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கே. ரவீந்தர் "விழா நாயகன்' புத்தகத்தில்.
எம்.ஜி.ஆருக்கும் என் தந்தையாருக்கும் இருந்த நட்புறவு எந்த அளவுக்கு வளர்ந்தது.
என் தந்தையார் சொல்லக் கேட்போம்:
""தன் மனைவி, தன் மக்கள், வீடு, சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு என்றிருக்கும் கடுகு உள்ளம் கொண்டவர்களுக்கு மத்தியில், மற்றவர்களும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்த எம்.ஜி.ஆரின் வாழ்க்கை, இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடம். பள்ளிக்கூடம் போகாமல் இந்த அளவுக்கு எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இந்த அறிவு எப்படிக் கிடைத்திருக்கும்? எம்.ஜி.ஆர். அதிகம் படிக்காதவர்தான். ஆமாம்... பள்ளியிலும் கல்லூரியிலும் சென்று படிக்காதவர். ஒருமுறை அவரைச் சந்திக்க ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றிருந்தேன். அவர் என்னை தன் வீட்டின் அடித்தளத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே புதையலைப் போல் ஒரு பெரிய நூலகத்தையே வைத்திருந்தார். நேரம் கிடைக்கும்போது படிக்கலாம் என்பதற்காக அதை அவர் வைத்திருக்கவில்லை நேரம் ஒதுக்கி தினமும் படிக்கவேண்டும் என்பதற்காக வைத்திருந்தார். அதன்படியே தினமும் படிக்கவும் செய்தார். "ஒவ்வொரு நூலகமும் திறக்கப்படும்போது, ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது' என்பது போகிற போக்கில் படித்துவிட்டுப் போகிற பொன்மொழி அல்ல. வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய நன்மொழி. எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரையில் நூலகம்தான் அவருக்கு கோயில், தன் அன்னை சத்யா அம்மையார், காந்தி அடிகள், பெரியார், அண்ணா போன்ற பெரியோர்களின் படங்களை அந்தக் கோயிலில் வைத்திருந்தார். ஒவ்வொரு நாளும் அவர் வெளியே கிளம்பும்போது அந்தக் கோயிலுக்குச் சென்று வணங்கிவிட்டுதான் செல்வார்.
"சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா
சமத்துவம்தான் நான் அறிந்த தத்துவம் அம்மா...'
என்று பின்னாளில் ஒரு திரைப்படத்தில்கூட அவர் பாடியுள்ளார்.
பிரபல நடிகர் என்ற வகையில் மட்டும் எம்.ஜி.ஆர். பிரபலமாகவில்லை. நேர்மை, மக்கள் நலனில் குறிப்பாக, பின்தங்கிய மக்கள் நலனில் அவர் கொண்டிருந்த அக்கறையினாலும்தான் அவர் பிரபலமானார். தமது இளமைக் காலத்திலிருந்தே ஈர இதயமும் இரக்க சிந்தனையுடையவராகவும் வாழ்ந்தார்''.
எம். ஜி. ஆர். முதலமைச்சராக இருந்த சமயம். என் தந்தையாருக்கு உடல் நலம் சரியில்லாத நேரம். அவரது உடல் நலக் குறைவு பற்றிக் கேள்விப்பட்டு, பாதுகாவலர்கள் புடை சூழ விஜயா கார்டனுக்கு முன் அறிவிப்பு ஏதும் செய்யாமல் வந்து விட்டார். வந்தவர் காரை ரிக்கார்டிங் தியேட்டருக்கு அருகிலேயே நிறுத்திவிட்டு... கார்டனில் தந்தையார் தங்கியிருந்த இல்லத்துக்கு நடந்தே வந்து விட்டார்.
""உங்களுக்கு உடல் நலம் சரியில்லை என்று கேள்விப் பட்டேன். அதுதான் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்'' என்ற எம். ஜி. ஆர். ""ஏதாவது வெளிநாட்டு மருந்து வேண்டுமா... சொல்லுங்கள். வாங்கித் தருகிறேன்''... என்றார் தந்தையாரிடம்.
""என் உடம்புக்கு இப்போது ஒன்றுமில்லை... சற்று ஓய்வு தான் தேவை. ஏதாவது மருந்து தேவைப்பட்டால், நம் மருத்துவ மனையில் பார்த்துக் கொள்கிறேன்...'' என்று தந்தையார் சொல்ல, எம். ஜி.ஆர். சமாதானம் அடைந்தார்.
முதலமைச்சராகப் பல பணிகளுக்கு இடையே இருந்தவர், நேரில் வந்துதான் உடல்நலம் விசாரிக்க வேண்டும் என்பதில்லை. தொலைபேசியே போதும். ஆயினும் எம். ஜி. ஆர். வந்தார். மனிதத் தன்மையைப் பதித்துவிட்டுச் சென்றார்.
தமிழக அரசின் சத்துணவுத் திட்டக் குழுவில் என் தந்தையாரை உறுப்பினராக நியமித்தார் முதலமைச்சர் எம். ஜி. ஆர்., தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சத்துணவுத் திட்டக் கூட்டத்திற்கு என் தந்தையாரை அழைத்தார்; சென்றிருந்தார். கூட்டம் முடிந்து வெளியே வரும்போது பழைய தோழமை உணர்வோடு, என் தந்தையார் தோளில் கையைப் போட்டுக் கொண்டு நடந்து வந்தார் எம். ஜி. ஆர். என் தந்தையாரும் அவரை அணைத்துக் கொண்டே வந்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் எல்லோரும் அவர்களை வேடிக்கையாகப் பார்த்தனர். "அவரோ முதலமைச்சர். நாம் சாதாரணமானவன்தானே? அவருடன் அதிகாரிகள் முன்னிலையில் சகஜமாக பழகிவிட்டோமே... அவர் தவறாக எடுத்துக் கொள்வாரோ' என்று தந்தையார் நினைத்ததற்கு, எம்.ஜி.ஆரிடம் இருந்து தொலைபேசி மூலமாக சமாதானம் வந்தது.
""என்னங்க ரெட்டியார்... எதற்காக வீண் வருத்தம்? சி. எம். என்பது இரண்டெழுத்து. இது தற்காலிகமானது. எம். ஜி. ஆர் என்பது மூன்றெழுத்து. இது நிரந்தரமானது. பதவி இன்றைக்கு வரும் நாளைக்குப் போகும். ஆனால், நீங்கள் என்றைக்கும் எனக்கு முதலாளி. நான் தொழிலாளி'' என்று அன்புடன் பேசி என் தந்தையாரைச் சமாதானப்படுத்தினார்.
எம். ஜி. ஆர். என்ற மூன்றெழுத்து இன்று நிரந்தரமாக மக்கள் மனதில் பதிந்து விட்டது. ஆனால்... முதலாளி தொழிலாளி என்று சொன்னாரே... அது மட்டும் யாருக்கு யார் முதலாளி, யார் தொழிலாளி... என்ற கேள்விக் குறியுடன் இருக்கிறது. ஆனால் இதற்கும் அவரே படத்தில் பதில் சொல்லியிருக்கிறார்.
ஆண்டவன் உலகத்தின் முதலாளி என்று.
அவரது இளமைக்காலத்தில் உதவியவர்களையும், அவரது முன்னேற்றத்திற்குப் பாடுபட்டவர்களையும் நினைவில் வைத்திருந்து, தனக்கு வசதி வந்த போது, அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவினார் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கும், படவுலக நண்பர்களுக்கும் நன்கு தெரியும்.
இந்த சந்தர்ப்பத்தில் என் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவத்தையும் குறிப்பிட விரும்புகிறேன்.
அப்போது சென்னையில் ஷெரீப், துணை ஷெரீப் என்னும் கெளரவப் பதவிக்கு உரியவர்களை அரசு தேர்ந்தெடுத்து நியமிப்பது வழக்கம்.
1986ஆம் ஆண்டில் ஷெரீப் ஆக ஏவி.எம். சரவணனையும் துணை ஷெரீப் ஆக என்னையும் எம்.ஜி.ஆர். தாமாகவே முன்வந்து நியமித்து, தொடர்ந்து இரண்டாண்டுகள் பணியாற்றும் வாய்ப்பினைத் தந்து சிறப்பித்தார்.
இரண்டு பிரபல திரைப்பட நிறுவனங்களின் வாரிசுகளை இந்தப் பதவியில் நியமித்து எம்.ஜி.ஆர். இந்த வகையிலும் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார் என்று சொல்லலாம்.
"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று'
என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் எழுதி வைத்தார். அதை வாழ்க்கையில் கடைப்பிடித்தவர் எம். ஜி. ஆர்.
எம்.ஜி.ஆர். மெமோரியல் எப்படி வந்தது? என் தந்தையார் சொல்லக் கேட்போம்:
""வாகினியின் மேற்குப் புறமாக ஒரு பகுதியில் விஜயா மருத்துவமனை, தென்புறமாக விஜய சேஷமகால் திருமண மண்டபம் அமைக்கப்பட்டது. விஜயா வாகினி யின் பரப்பளவு குறைந்தது. மாறி வரும் சூழ்நிலைகளுக்கேற்ப திரைப்படத் தயாரிப்பில் தொடர்ந்து என்னால் ஈடுபடமுடியவில்லை. எனவே மனதை தொண்டு என்ற திசையில் திருப்பினேன், விஜயா மருத்துவமனையை 1972ல் நிறுவினேன்.
அப்போது அதில் 46 படுக்கை வசதிகள் இருந்தது. 15 ஆண்டுகளில் தீவிர இருதய சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை, கண் மருத்துவம் என பல பிரிவுகளை உள்ளடக்கி 200 படுக்கை வசதிகளைக் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக வளர்ந்தது. பிற மாநிலத்தவர் மட்டுமல்ல, பிற நாட்டவரும் சிகிச்சை பெற வந்தனர். எனவே மருத்துவமனையை உலகத்தர வரிசையில் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
எம். ஜி. ஆர். முதலமைச்சராக இருந்த சமயம். அப்போது உடல் நலம் இல்லாமல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
அமெரிக்கா சென்று திரும்பிய எம். ஜி. ஆரை நான் அவரது இல்லத்தில் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடத்தில், "உலகத்துலே பிறந்தோம்... இருந்தோம்.... இறந்தோம் என்று இல்லாமல் எப்போதும் நிலைத்து இருக்கும்படியாக ஏதாவது செய்ய வேண்டும்... நான் எத்தனையோ ஆஸ்பத்திரிகளுக்குப் போயிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் எனக்கு ஓர் உண்மை தெரிந்தது. ஆலயங்களில் மக்கள் மனப்பூர்வமாக கடவுளை நினைக்கிறதில்லை. ஆஸ்பத்திரியிலேதான் நினைக்கிறாங்க... ரெட்டியார்... அமெரிக்காவில் நான் பெற்ற சிகிச்சையை மறக்க முடியாதது. வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. நான் முதலமைச்சராக இருந்ததால் அப்படிப்பட்ட சிகிச்சை,யைப் பெற முடிந்தது. ஆனால் சாதாரண மனிதர்களுக்கும் அந்த சிகிச்சை தேவைப்படும்போது என்ன செய்வது? அதனால், நீங்கள் ஒரு ஹெல்த் சென்டர் கட்டுங்கள். ஆஸ்பத்திரி மாதிரி இல்லாமல் ஒரு ஹெல்த் ரிசார்ட் மாதிரி வேண்டும். எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்'' என்றார் எம்.ஜி.ஆர்.
""கடவுள் கிருபையால் பணத்துக்குக் குறைவில்லை. உங்கள் வாழ்த்துகள் ஒன்றே போதும்... விரைவில் கட்டுகிறேன்'' என்றேன். எம். ஜி. ஆர். மிகவும் மகிழ்ந்தார். அவர் ஆசைப்பட்டது போலவே 1987ஆம் ஆண்டு விஜயா கார்டனில் ஹெல்த் சென்டர் பச்சைப் பசேலென்ற சுற்றுச்சூழலில் நல்ல காற்றோட்டமும் வெளிச்ச வசதியோடும் கட்டி முடிக்கப்பட்டது. நோய்கள் 25 சதவிகிதம் மருந்துகளாலும் 75 சதவிகிதம் ஆரோக்கியமான சுற்றுப்புறத்தாலும் குணமாகின்றன. ஹெல்த் சென்டருக்கு யாருடைய பெயரைச் சூட்டலாம் என்று யோசித்தேன்.
"யான் பெற்ற இன்பம், பெறுக இந்த வையகம்' என்று ஞானிகள் கூறியது போல், தான் பெற்ற நல்ல சிகிச்சை நாட்டு மக்களும் பெற வேண்டும் என்று ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர். பெயரையே சூட்டலாம் என்று முடிவெடுத்து, அவரிடம் சொன்னேன். அவரோ, "பணியுமாம் என்றும் பெருமை' என்ற திருக்குறள் இலக்கணத்துக்கு இலக்கியமாய் ஆனார். என் பிள்ளைகள் மீது அவருக்கு எப்போதும் நல்ல பிரியம் உண்டு. அதனால், மறைந்த என் மூத்த மகன் பிரசாத் பெயரை வைக்கச் சொன்னார். அதற்கு மேல் நான் அவரை வற்புறுத்தவில்லை.
பிரசாத் மெமோரியல் என்ற பெயரில் அந்தப் புதிய ஹெல்த் சென்டரை எம்.ஜி.ஆரை வைத்தே திறந்திடலாம் என்ற இன்பக் கனவில் மகிழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால்... கனவு நினைவு ஆவதற்குள் எம்.ஜி.ஆர். அமரர் ஆகிவிட்டார். யாருக்கு யார் ஆறுதல் சொல்லிக் கொள்ள முடியும்?
பிரசாத் மெமோரியல் அமைக்கச் சொன்ன, எம். ஜி. ஆர். பெயரில் மெமோரியல் அமைக்க வேண்டிய நிலை வந்தது. அதனால்தான், மருத்துவமனையின் ஒரு பகுதிக்கு அவருடைய விருப்பப்படி பிரசாத் மெமோரியல் என்றும், இன்னொரு பகுதிக்கு நான் விரும்பியபடி எம். ஜி. ஆர். மெமோரியல் என்றும் நுழை வாயிலில் வளைவுகள் அமைத்து அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்தேன்.
எங்கள் இருவரது ஆசையும் நிறைவேறியதில் எனக்கு நிரம்ப திருப்தி.
விஜயா ஹெல்த் சென்டரில் தீவிர சிகிச்சைப் பிரிவுடன் அனைத்துவிதமான சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளும் உள்ளன. 24 மணி நேர அவசர கால விபத்து சிகிச்சை மையம் ஆகியவற்றுடன் சுமார் 350 படுக்கையைக் கொண்ட மருத்துவமனையாகத் திகழ்கிறது விஜயா ஹெல்த் சென்டர்.
என்னைப் பொறுத்தவரையில் மனிதனுக்குச் செய்யும் தொண்டே மகேசனுக்கு செய்யும் தொண்டு. அதிலும் மருத்துவமனை என்பது மனித இனத்துக்கு தொண்டு செய்யும் ஆலயம். அங்கே வரும் நோயாளிகளின் துன்பத்தை (வலி) போக்கி அவர்களுக்குள் இன்பத்தை (மகிழ்ச்சி) வரவழைக்கும் இடம்.
அந்தக் கண்ணோட்டத்தில் நிறுவப்பட்டதுதான் இயற்கையன்னை வாழும் விஜயா ஹெல்த் சென்டர். முப்பிறவி கண்ட எம். ஜி. ஆர். விருப்பப்படி அமைக்கப்பட்ட விஜயா ஹெல்த் சென்டரின் நுழைவாயிலுக்குள் வருபவர்களை எம். ஜி. ஆர். மெமோரியல் என்னும் வார்த்தைகள் வரவேற்கும்போதே அவர்களுக்கு தகுந்த சிகிச்சை கிடைத்து விட்டதாக உணர்கிறார்கள். காரணம் அவர்களை வாழ்த்தும் தெய்வமாக அங்கே எம். ஜி. ஆர். வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கைதான்'.......... Thanks.........
மிகவும் மகிழ்ச்சியான தருணம்
9 வருடங்களாக என் கனவாகவும் லட்சியமாகவும் சுமந்த ஒன்றை பிரசவித்துவிட்டேன்.
தலைவரின் திரையுலக பவளவிழா ஆண்டில் தலைவரின் படங்களின் தலைப்புக்களை கொண்டு வாழ்கை சுவடுகளை மையப்படுத்தி ❤❤காலத்தை வென்றவன்கவிதை மணவாழ்கை அரசியல்வாழ்கை என இரண்டு அத்தியாயம் கொண்டு 103 தலைப்புகளை பயன்படுத்தபட்டுருக்கின்றது அதனலோ என்னவே பலதடைகளை தாண்டி பல முயற்சி களுக்கு பின் 103 பிறந்த நாளில் வெளியிட நூல் வடிவம் பெற்று தயராகிவிட்டது
கடந்த ஆண்டில் இருந்து அன்புகுரிய அண்ணண் திரு பாலசுப்பிரமணியன் முன்னெடுப்பிலும் திரு சந்திரசேகர் அவர்களின் ஊக்கதாலும்
தன் கடுமையான பணி சுமைகளுக்கிடையில் சென்னையின் போக்குவரத்து நெரிசலீலும் அச்சகத்திற்க்கும் டைப்பிங் சென்டருக்கும் 6 மாத கலமாக அலைந்து பிழைதிருத்துகிறேன் பேர்வழி என்று அவரை நிறையமுறை தொடர்புக்கொண்டபோதும் அலுத்து கொள்ளமல் ஒவ்வொருமுறையும் சரி செய்து என்னுடைய கனவை தன்னுடைய லட்ச்சியமாக கருதி உழைத்து இன்று வெளியிடும் நூலக்கி என் கைகளில் தந்துள்ள மரியாதை குரிய பேராசிரியர் சௌ. செல்வகுமார் Selva Cpcl Kumar. (அனைத்துலக MGR பொதுநலசங்கம்) அவர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள் மேலும் இதற்க்கு வாழ்த்துரை வழங்கிய தலைவரின் தளபதிகளில் ஒருவர் நடிகராகவும் இயக்குனர் தயாரிப்பாளர் திரு லியாகாத் அலிகான் அவர்களுக்கும் நன்றிகள் பலஇதற்க்கு தனது ஒவியங்களை பயன்படுத்த அனுமதியளித்த ஒவியர் திரு திருவள்ளுவர் அய்யாவிற்க்கும் நன்றி இக் கவிதை நூல் வெளியிடு விரைவில் இடம் தேதி அறிவிக்கப்படும்
செம்மலின் நேசன் க.செல்வகுமார்....... Thanks.......
நாளை (24/12/19) தூத்துக்குடி சத்யாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்* 32 வது* நினைவு நாளை முன்னிட்டு , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "குடியிருந்த கோயில் " கண்டிப்பாக ஒரு நாள் மட்டும் 3 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .
நாளை முதல் (24/12/19) முதல் கோவை டிலைட்டில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 32* வது* நினைவு நாளை முன்னிட்டு* "பணக்கார குடும்பம் " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி :கோவை நண்பர் திரு.புரட்சி மலர் சிவா .
நாளை (24/12/19) முதல் கோவை சண்முகாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்* 32 வது* நினைவு நாளை முன்னிட்டு "தாய் சொல்லை தட்டாதே " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி : கோவை நண்பர்கள் திரு.ஆறுமுகம் , திரு.கண்ணன்*
மங்கா புகழுக்கு சொந்தக்காரர், வெற்றியின் விலாசம், சரித்திரம் படிக்காமல் சரித்திரம் படைத்தவர், தமிழக அரசியலில் கடந்த ஐம்பது ஆண்டுகள் பல முதல்வர்களை உருவாக்கியவர், பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர், எம்ஜிஆர் அவர்களின் நினைவுநாள் நினைவஞ்சலி ஊர்வலம் வரும் செவ்வாய்க்கிழமை (24:12:2019)காலை 11மணிக்கு சென்னை மவுண்ட் ரோட்டிலுள்ள அண்ணா சிலையிலிருந்துதலைவர் சமாதிக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்கு அனைத்து சங்கங்கள் சார்பாக செல்கிறோம், இந்த பதிவை பார்க்கும் அனைத்து ரத்தத்தின் ரத்தங்களும் தவறாமல் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துவோம்......... Thanks.........
திரையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அவர்களின் பிரமாண்டமான லட்சிய தயாரிப்பாம்... "உலகம் சுற்றும் வாலிபன்" atmos 4k டிஜிட்டல் வடிவம் 2020ம் ஆண்டு " பொங்கல்" திருநாள் நேரத்தில் சுவரொட்டிகள் எங்கும் ஒட்டப்பட்டு... Trailor வெளியிடப்பட்டு பின்பு திரைக்கு கொண்டு வர சிறப்பான ஏற்பாடுகள் துவங்க பட்டு வருகிறது என்ற மகிழ்ச்சியான தகவல்கள் மேற்கண்ட காவியத்தின் ஒட்டு மொத்த விநியோகஸ்தர்கள் திரு நாகராஜன், திண்டுக்கல்... அவர்கள் கூறியுள்ளதை இங்கே அனைவரிடமும் பகிர்வதில் மெத்த மகிழ்ச்சி...
கடைசியாக கிடைத்த தகவலின்படி , கோவை சண்முகாவில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "பறக்கும் பாவை " பக்தர்களின் அமோக வரவேற்பு காரணமாக மேலும் 3 நாட்கள் நீடித்து ஒரு வாரம் ஓடும் என கோவை நண்பர்கள் தகவல் அளித்துள்ளனர் . எனவே , ஏற்கனவே 24/12/19 முதல் வெளியாகவிருந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின்* 'தாய் சொல்லை தட்டாதே " திரைப்படம் வெளியாவது தள்ளிவைப்பு .
இன்று (24/12/19) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 32 வது* நினைவு தினத்தை முன்னிட்டு, அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் /சங்கங்கள்*சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து*மௌன ஊர்வலம் காலை 11 மணியளவில் துவங்கி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சதுக்கத்தை அடைகிறது.**
தனியார் தொலைக்காட்சிகளில் இன்று ஒளிபரப்பாக உள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் பட்டியல்*
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜெயா டிவி* - மதியம் 1.30 மணி* *- ஆயிரத்தில் ஒருவன்*
* * * ** * * * * * * * * * * * *இரவு 11 மணி* * * - ஊருக்கு உழைப்பவன்*
கேப்டன் டிவி* - மதியம்* 2 மணி* - காலத்தை வென்றவன்*
மெகா டிவி* - இரவு 8 மணி* - குடியிருந்த கோயில்*
வசந்த் டிவி* -* மதியம் 1.30* - நான் ஏன் பிறந்தேன்*
* * * * * * * * * * * * * *இரவு 7.30* மணி - ராமன் தேடிய சீதை*
*விவசாயிகள் தினம்-புரட்சித் தலைவர் நினைவு நாள்*
*உழவர் திருநாள்- பொன்மனச்செம்மல் அவதரித்த திருநாள்*
இன்று நாடு முழுவதும் விவசாயிகள் தினம் அனுசரிக்கப்படுகின்றது. அதற்கு முத்தாய்ப்பு வைத்தது போல் இந்த வாரம் அகஸ்தியாவில் பொன்மனச்செம்மலின் *"விவசாயி"* திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மக்கள் திலகம் *பல்லாண்டு வாழ்க* படத்தில் சொல்வார், *"நாம் நல்லதை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் அது நம்மை நோக்கி பத்தடி எடுத்து வைக்கும்"*. அதுபோல் உலகின் அனைத்து நல்ல விஷயங்களும் கடலில் சங்கமிக்கின்ற நதிகளைப் போல் புரட்சித்தலைவரிடம் தஞ்சமடைந்தன என்பது வரலாறு. நல்லவைகளின் ஒட்டு மொத்த உருவமாக தலைவர் திகழ்ந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் எதையும் தேடிப் போனதாக சரித்திரம் கிடையாது.
ஏன் இப்படி குறிப்பிடுகிறேனெனில், ஒருவரது பிறப்பும், இறப்பும் ஆண்டவன் கையில் என்று கூறுவார்கள்.
விவசாயிகள் தினத்துக்கு அடுத்த நாள், அதாவது நாளை *தலைவரின் நினைவுநாள்* . அதே போல் உழவர் திருநாளன்று தான் *தலைவரின் பிறந்தநாள்* கொண்டாடப்படுகிறது. இதெல்லாம் ஒருவருக்கு தானாக அமைய வேண்டும்.
வேளாண்மைக்கும் அவருக்கும் இருந்த பிணைப்பும், தமிழக விவசாயிகள் பால் அவர் வைத்திருந்த பாசம், பற்று மற்றும் அக்கறையையும் பறை சாற்ற இதைவிட வேறு சான்று தேவையா? இன்று அவரது அபிமானிகளால் கடவுளாக போற்றப்படும் தானைத்தலைவர், உழவுத்தொழில் மட்டுமின்றி அத்துறை சார்ந்த இன்னபிற தொழில்களான மீன்பிடித்தொழில், கைத்தறி நெசவு மற்றும் பல எண்ணற்ற குறு மற்றும் சிறு தொழில்கள் மேம்படவும், அத்தொழிலில் ஈடுபட்டிருந்த இலட்சக்கணக்கான தமிழக மக்களின் வாழ்வு வளம் பெற்று அவர்களின் இன்னல்கள் களையப்பட்டு சமுதாயத்தில் சாதி மத வேறுபாடின்றி அவர்கள் உயர்நிலை அடையவும் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். தான் நடித்த படங்களின் காட்சிகள், வசனங்கள் மற்றும் பாடல்கள் மூலம் பல நல்ல நல்ல கருத்துக்களை புகுத்தி புரட்சியை ஏற்படுத்தியதால் *புரட்சித்தலைவர்*. பாமரர்களுக்கு திரைக்கொட்டகைகளையே பள்ளக்கூடங்களாக்கி திரைப்படங்கள் மூலம் அறிவூட்டிய *வாத்தியார்*. அது மட்டுமல்லாமல் அவர்கள் துயர் துடைக்க தன்னால் இயன்ற உதவிகளை (பணம், பொருள்) உடனுக்குடன் செய்து *எட்டாவது வள்ளல்* என்ற பெயரை எட்டினார்.
படங்களில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் அதிகம் வலம் வந்தவர் மக்கள் திலகம் தான். அதே போல் வேளாண்மை சார்ந்த அதிகப் படங்களில் நடித்து தனது பாடல்கள் மூலம் உழவுத்தொழிலின் உன்னதத்தை எடுத்துரைத்ததோடு நில்லாமல் விவசாயிகள், கூலித்தொழிலாளிகள் முதலான பாட்டாளி வர்க்கத்தினர் சந்தித்து வரும் துன்பங்கள், அவர்களது கஷ்டநஷ்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் விளக்கி, நிலத்தில் வாழ்கின்ற திமிங்கிலங்களான அதிகார வர்க்கத்தினர் மற்றும் வசதி படைத்த கல்நெஞ்சம் கொண்ட முதலாளிகளிடமிருந்து அப்பாவி ஏழை மக்களை காக்கும் காவல் தெய்வமாகவே தான் நடித்த அனைத்து படங்களிலும் வேடம் தரித்து வெற்றிக்கொடி நாட்டினார். அன்றாடங்காய்ச்சிகள் படும் துயரங்களுக்கான தீர்வையும் தனது படங்கள் மூலம் அறிவுப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் அவ்வப்போது அரசாங்கத்துக்கு உணர்த்தியவர் நமது பொன்மனச்செம்மல். படத்தில் தான் கூறிய கருத்துக்களின் படியே வாழ்ந்து காட்டிய *மஹான்* .
பணம் ஒன்றே குறி என்ற பேராசைக்காரனாக இல்லாமல் அடித்தட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தனது இலட்சியம் என்ற கொள்கையுடன் அல்லும் பகலும் அயராது உழைத்து அதன் மூலம் ஈட்டிய செல்வங்களையும் இம்மக்களுக்காகவே அர்ப்பணித்தார். தன் சுக துக்கங்களை தமிழ் கூறும் நல்லுலகத்திற்காக தியாகம் செய்து இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற மக்கள் தலைவராக இன்றும் விளங்குபவர் தலைவர் ஒருவரே. உலகமே வியந்து போற்றும் சத்துணவு வழங்கிய *சரித்திர நாயகன்* . பதவிகள் அவரைத் தேடி வந்து புகலிடம் அடைந்து பெருமை பெற்றன. தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலி அவர் அமர்ந்ததால் புணிதமடைந்தது. உலகில் யாருமே அடைய முடியாத உச்சத்தை அடைந்த பின்னும் துளிக்கூட தலைக்கனமின்றி
படங்களில் தான் நடித்த கதாபாத்திரம் போலவே தனது கடைசி மூச்சு வரை வாழ்ந்தவர். படத்தில் கூறிய கொள்கைகளையெல்லாம் சட்டமாக்க அரும்பாடு பட்டார். கருணையே வடிவாக உருவெடுத்த கலைத்தாயின் தலைமகனின் உயிரை காலன் பறிக்காமல் விட்டிருந்தால் இன்று தமிழ்நாட்டில் ஏழைகளே இருந்திருக்க மாட்டார்கள், ஏழ்மை ஒழிந்து அனைத்து தரப்பினரும் இன்புற்றிருந்திருப்பார்கள், தனி ஈழம் அமையப்பெற்று நம் தொப்புள் கொடி உறவுகள் தன்மானத்துடன் வாழ வகை கண்டிருப்பார். உலகெங்கும் வாழும் தமிழ்ச்சமூகம்
எல்லையில்லா மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் கொண்டிருந்திருக்கும்.
எனவே, பொன்மனச்செம்மலின் விட்டுப் போன, நிறைவேறாத, தமிழக மக்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் நலம் சார்ந்த கனவுகள் அனைத்தையும் நல்லமுறையில் நிறைவேற்றுவது தான் அவரது ஆன்மாவுக்கு அவரது பெயரில் ஆட்சி நடத்துபவர்கள் ஆற்றுகின்ற தலையாய கடமையாகும். மேலும், அதிகார வர்க்கத்தின் பல இன்னல்களை எதிர்கொண்டு இரத்தத்தின் இரத்தங்கள் அரும்பாடுபட்டு வளர்த்த கட்சி எந்த நோக்கத்திற்காக தோற்றுவிக்கப்பட்டதோ அந்த இலட்சியங்களை அடையும் வண்ணம் புரட்சித் தலைவரின் வழி வந்தவர்கள் செயல்பட்டு தலைவர் கட்டிக்காத்து வந்த மாண்பினை கடைபிடித்தால் *"என்றும் ஆளும் எங்களாட்சி இந்த மண்ணிலே"* என்று பாடிய அந்த தீர்க்கதரிசியின் எண்ணம் என்றும் நிலைத்திருக்கும். ஏனெனில், அதிமுக வின் வெற்றியானது மற்ற கட்சிகள் பெறுகின்றது போன்ற சாதாரண வெற்றி கிடையாது. தலைவர் கூறியது போல் அக்கட்சித் தொண்டர்களின் "தியாகத்தின் வெற்றி" என்றே இன்றுவரை கருதப்படுகின்றது
நமது நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் *நினைத்ததை முடிப்பவனின்* நினைவை போற்றும் வண்ணம் நாளை பகல் 11.30 மணி அளவில் வருடாவருடம் நடைபெற்று வருவது போலவே அமைதிப்பேரணி நடக்கவுள்ளது. பேரணி மவுண்ட்ரோடில் அமைந்துள்ள தலைவரின் ஆசான், அறிஞர் அண்ணா சிலையிலிருந்து தொடங்கி வாலாஜா சாலை வழியாகச் தலைவர் நினைவகத்தை சென்றடையும். நாளை நடைபெறவிருக்கும் இப்பேரணியில் வழக்கம் போல் சென்னையைச் சேர்ந்த அனைத்து தலைவர் அமைப்புகளின் தொண்டர்கள், பக்தர்கள் மற்றும் வெளியூரைச் சார்ந்த தலைவர் அபிமானிகள் அனைவரும் பெருந்திரளாக பங்கு கொண்டு உலகில் உனக்கு நிகர் எவருமில்லை என்பதை இவ்வுலகிற்கு மீண்டுமொருமுறை உணர்த்தி பெருமை கொள்வோம்.
வாழ்க புரட்சித் தலைவர் நாமம்
வளர்க பொன்மனச்செம்மல் புகழ் ✌✌✌✌
க. சந்திரசேகர், தலைவர் பக்தன்,
இணைச்செயலாளர், அனைத்துலக எம்ஜிஆர் பொதுநலச்சங்கம், சென்னை.......... Thanks.........
புரட்சித் தலைவா ! புகழின் புதல்வா !!
எத்தனையோ நடிகர்கள் இவ்வுலகில் தோன்றி வாழ்ந்து மறைந்த காட்சியை , பார்த்திருக்கிறோம் , சரித்திரங்கள் படித்திருக்கிறோம் ,
மும்முறை ஆண்ட முதல்வரே ,
உங்களுக்கு தானே முப்பிறவி தோன்றியது
மூன்று பிறவி இணைந்து ஒரு பிறவியான தலைவனை நாடு கண்டதில்லை !
உங்கள் அன்பின் குளிரில் ஊட்டியின் குளிர் காற்றும் வென்றதில்லை !!
இல்லை என்ற வார்த்தை உங்கள் வாயிலிருந்து வந்ததில்லை !
அந்த வாயில் உங்களை நம்பிய
( நாங்கள்) தொண்டர்கள் கெடும் வகையில் பீடியோ ,
சிகரேட்டோ தூக்கிபோட்டு போட்டு
பிடித்ததில்லை !
மது அருந்தியதில்லை ,
" கள் " உண்டு போதைவரும் காரியத்தை செய்ததில்லை !!
உங்கள் அன்பான தும்பலும் என்னால் வந்ததே என்று மார்தட்டிக் கூறிய நல் உள்ளங்கள் தான் எத்தனை !எத்தனை !!
அத்தனையும் இல்லை என்று சொல்ல முடியாதே !
புத்துணர்வு போர்வையில் சத்துணவு தந்த சரித்திர நாயகனே இனிவருவாயா !
மக்கள் கூட்டத்தை ஆர்பரிக்க செய்த மக்கள் திலகமே இனிவருவாயா !!
பசி என்று கதரியவருக்கு புசியென்று வாரிவழங்கிய வள்ளலே இனிவருவாயா !
ஆட்சி காலமெல்லாம் அண்ணா நாமம் பாடிய
அன்னமிட்டகையே இனிவருவாயா !!
என்று ஏங்கினாலும் ,
பூஜ்ஜியமாக கட்சியை ஆரம்பித்து ,
32 ஆண்டு காலம் ஒரு ராஜ்ஜியத்தையே உண்டாக்கி ,
மக்கள் கனவுகளை நனவாக்கி , உள்ளத்தை குளிராக்கி ,
வழி தெரியாத ஏழை மக்களுக்கு கலங்கரை விளக்காக ,
எங்கள் உள்ளங்களில் குடி கொண்ட எங்கள் வீட்டு பிள்ளையாக ,
எங்கள் நாடி நரம்புகளில் உதிரமாக
ஓடுகின்ற ஆயிரத்தில் ஒருவனாக ,
தங்கமே கானாத மக்களுக்கு எங்கள் தங்கமாக விளங்கிய
புன்னகை மன்னனே !
32 ம் ஆண்டிலும் உங்கள் ஆட்சியே !!
தொடரும் 2021 ம் ஆண்டும் !
புகழ் பாடும் வானம்பாடி
சேவல் அனல்
M. அமரநாதன் B.Sc,
தலைமை கழக பேச்சாளர்,
அ இ அண்ணா தி மு கழகம் குடியாத்தம், வேலூர் மாவட்டம்........... Thanks.........
மானுடம் போற்றும்
மனித இனத்தின்
மாபெரும் தலைவரே!
ஏழைகளின் ஏந்தலே! ஆண்டு
முப்பத்திரண்டு? நீ
மரணமெய்தியது!
உன்இழப்பு
தமிழகத்திற்கு
பேரிழப்பு!!
கருணைஎன்ற
பெயரே உன்னாலே
உருவானதோ?
மற்றவர், ஏன்?
மாற்றாரின்
தேவையையே
பூர்த்தி செய்த
பூபாலன் நீ?
கோமகனே!
அள்ள, அள்ள குறையாத
அட்சய பாத்திரம் நீ
கொடுத்து சிவந்தது உன்கரம்
உன்மனமோ
பொன்மனம்.
இருக்கும்வரை
எல்லோருக்கும்
ஈந்துவிட்டு
இறந்த பின்னும்
இன்னும் வாழுகிறாய்
கலைகடலே!
அரசியல் ஞானியே!
உன்விதைதான்
இன்று,
ஆலவிருட்சம்
போல், அகன்று விரிந்து, தமிழகத்தின்
மூலை
முடுக்குகளில்
உன் திருநாமம்
மட்டுமேகாதினில்
தேனாக
தீந்தமிழாக
ஒலிக்கிறது.
புரட்சி த்தலைவரே
உன் ஆட்சியின்காட்சி
மக்கள் திலகமே
நீ தந்த
முவர்ணகொடி
மக்கள்
கனவிலும் மறவாத
நீ தந்த
இரட்டை இலை
இன்னும் எத்தனை
நூற்றாண்டாலும்
இதயத்தை விட்டு
நீங்காது.ஆம்
மன்னாதிமன்னன்
புன்னகை மன்னன்
மக்கள் தலைவன்
உன் நினைவு நாள்
இன்று ஒரு நாளல்ல,எங்கள்
உயிர் மூச்சு உள்ளவரை! உன்
நினைவை,உன்
கனவை, உன்
லட்சியத்தை
ஏந்திப் பிடிப்போம்.
என்றும் உன் நினைவில்,
எஸ்.எம்.பாட்சா
பாட்சா தியேட்டர்
ஜார்ஜ் டவுன்
சென்னை........... Thanks.........
நான் மிகவும் நேசித்த ரசித்த
புரட்சித் தலைவருக்கு
32 ம் ஆண்டு புகழஞ்சலி
❤️❤️❤️❤️
MGR ஒரு சகாப்தம்
இது எப்படி சாத்தியமானது
இறந்து 32
ஆண்டுகள் ஆகியும்
இறவா புகழோடு இன்றும் வாழ்கிறார்
மறைந்தாலும் மக்கள் மனதில்
மறையாமல் இன்றும் வாழ்கிறார்
நான்கு தலைமுறைகள்
நான்கு திசைகளிலும்
தமிழ் கூறும் நல்லுலகில்
MGR எனும் மந்திரச்சொல்
உச்சரிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது
கிராமத்து மக்களுக்கும் பெண்களுக்கும்
இன்றும் அவர் தான் ஆதர்ச நாயகன்
இறந்த பிறகு அவரை நேரில் பார்த்திராத
இன்றைய தலைமுறைக்கும்
அவர் தான் சூப்பர் ஹீரோ
தாத்தா பாட்டி
அப்பா. அம்மா
மகன்.. மகள்
பேரன்.. பேத்தி. என
எல்லோரையும் ஒரு மனிதன்
எப்படி கட்டி போட முடியும்
அதுதான் MGR எனும் தாரகமந்திரம் செய்யும் சித்து வேலை
அதனால் தான் அவர் யுக புருசர்
இதெல்லாம் எப்படி சாத்தியம்
எல்லோரும் கேட்கும்
ஆச்சரியமான கேள்வி
ஆனால் ஒன்று உண்மை
ஒரு மனிதன் வாழும் போது
நல்லவனாக
நேர்மையாக
கண்ணியமாக
தன்னை சுற்றி உள்ள அனைவரின்
கஷ்டத்துக்கு உதவி செய்து
தான் சம்பாதித்த பணத்தை
ஏழை எளிய மக்களுக்கு
எல்லா நேரங்களிலும் வாரி வழங்கி
திரையில் மட்டுமல்ல
நிஜத்திலும் நல்ல பழக்க வழக்கங்களோடு வாழ்ந்து
மனிதநேயத்தோடு
மக்களோடு மக்களாய் கலந்து
சாமான்யன் தனக்கு
கஷ்டம் என்றால்
கடவுளை வேண்டுவான்
நிஜத்தில் தன்னை நாடி வரும்
மக்களின் கஷ்டத்தை நீக்கி
எல்லோர்க்கும் அவர்
நிஜ கடவுளாகினார்
தன்னை பார்த்திராத
தன்னை சந்திக்காத மக்களை கூட
இந்த மந்திரம் கட்டி போட்டு உள்ளது
காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்ப்பவன்
விழிகளில் நிறைபவன்
வெற்றி திருமகன் நீ
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊரிருக்கும்
அந்த ஊருக்குள்
எனக்கொரு பேர் இருக்கும்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்
இதெல்லாம் வெற்று வரிகளில்லை
நேரில் நாம் காணும் நிஜம்
உன் போல் ஒருவர் இனி வரபோவதில்லை
உலகம் உள்ளவரை
உங்கள் புகழ் மறைய போவதில்லை
தலைவா உங்களுக்கு இந்த
எளியவனின் புகழஞ்சலி
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி ....... Thanks.........
இன்று தலைவரின்
நினைவுதினம்......
படத்திற்குப் பூ வைத்து
தலைவருக்கு அஞ்சலி
செலுத்தி விட்டேன்.......
என்றும் அவர் வழியில்
நடப்பேன்........
இன்று "நவரத்தினம் "......
படம்.......காவியம்.........
நடிகர்கள் 1.எம்.ஜி.ஆர்.,
2.லதா
3.சுபா
4.ஸ்ரீபிரியா
5.ஜெயசித்ரா
6.ஜரினாவகாப்
7.பி.ஆர்வரலட்சுமி
8.ஜெயா
9.குமாரிபத்மினி
10.Y.விஜயா
11.தேங்காய் சீனிவாசன்
12.நம்பியார்
13.அச்சச்சோ சித்ரா
14.எஸ்.வரலட்சுமி
15.பி.எஸ்.வீரப்பா
16.கே.கண்ணன்
17.ஒருவிரல் கிருஷ்ணாராவ்
18.ஏவி.எம்.ராஜன்.
19.ஐசரிவேலன்
20.நமது குரூப்பில்
இருக்கும் ரஜினி நிவேதிதா
21.எஸ்.என்.லட்சுமி........... Thanks.........
வெளியான தேதி 05.03.1977...
கதாபாத்திரமாக தங்கம்...
நிறுவனம் சி.கே.சி.பிலிம்ஸ்
வசனம் ஏ.பி.என்.
பாடல்கள் ...
1.உங்களிடத்தில் அண்ணாவைப் பார்க்கிறேன்.
எஸ்.பி.பாலசுப்ரமணியன்
வாணிஜெயராம் பாடியது.
2.பாலமுரளிகிருஷ்னா
அவர்கள் 2 பாடல்கள்
பாடியிருப்பார்.
குருவிக்காரன் பொன்ஜாதி நான்.
3.ஏத்தா உனதா மில கண்ட தீ
சீதா கவுரி
கர்நாட்டிக் ராகம்
4.ஹிந்தி கலந்த
லடுக்கீஸி மிலி லடக்கா
கோயி மந்தோகோகி
தீவனுகியாபெகுரா கேஸி தத் தத்
5.பிரியாததை புரிய
வைக்கும் புது இபம்
பி.சுசீலா பாடியது.
மேலும் ஒரு பாடல்
ஆடியோ மட்டும்.
மானும் ஓடி வரலாம்
யேசுதாஸ் பாடியது.
இப்படத்திற்கு
குன்னக்குடி வைத்தியநாதன் இசை
இயக்குனராக ஏ.பி.நாகராஜன்... Thanks.........
படம் ரிலீஸ் ஆனதும்
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க
இந்திராகாந்தி கூட்டணியுடன் அமோக
வெற்றி ...
சட்டசபை தேர்தலில்
தலைவர் முதல்வர் ஆனார்.
இப்படத்தில் நரிக்குறத்தி வேடத்தில்
லதா தோன்றுவார். அவள் தலைவரைப் பார்த்து
எங்கள் கூட்டத்தின் மீது
என்ன அபிப்பிராயம்
என்பார் அதற்கு அவர்
அவர்களை மற்றவர்களாக நினைக்கவில்லை
என் ரத்தத்தின் ரத்தமாக கருதுகிறேன்
என்பார்.......... Thanks.........
வங்கக் கடல் தாலாட்ட
தங்கத் தமிழ் பாராட்ட
மங்காப் புகழுடனே
சிங்கமென உறங்குகிறான்
சத்தியத்தாய் கோபாலன் ஈன்ற
நித்திய பூபாளம்_ இவன் போல்
சத்தியமாய் கண்டதில்லை
இந்திய பூகோளம்
தோட்டாவும் உன்னிடம் தோற்றதுண்டு
தோற்றப்பொலிவில் உன்போல் எவருண்டு
ராமாவரம் வாழ்ந்த சாகாவரம் நீ
சாமான்ய மக்களின் சாம்ராஜ்யராஜன் நீ
சூரியனையே சுருட்டி வீசிய சந்திரன் நீ
சுயம்புவாய் ஜொலித்து வந்த இந்திரன் நீ
கொழும்புவை மிரள வைத்ந ராஜதந்திரன் நீ
படுத்துக்கொண்டே படை வென்ற மன்னன் நீ
கொடுத்துச் சென்றே பெயர் பெற்ற கர்ணன் நீ
ஊனுடல் நீங்கலாம் தமிழகம் விட்டு உன்
மானுடம் நீங்காது தமிழர் அகம் விட்டு
நித்திரையில் நீங்கினாய் இம்மண்ணை விட்டு
இத்தரையில் வாழும் வரை
வணங்குவோம் தலைவா
உன் பாதம் தொட்டு!!...
24/12/2019..
32 ம்ம் ஆண்டு நினைவு தினமாம்..
மங்கா புகழ் கொண்ட
மன்னாதி மன்னரே.....
மனிதரில் புனிதரே......
மறந்தால் உன்னை நினைப்பதற்கு.....
32ஆண்டு அல்ல...
32 யுகம் கடந்தாலும் உன் புகழ் மறையாது............. Thanks........
மனித வடிவமாக வந்த தெய்வம் புரட்சித் தலைவருக்கு
32வது ஆண்டு நினவு அஞ்சலி.
https://i.postimg.cc/B6d9F7j2/IMG-4583.jpg
Thanks to Mr.Ranjith
தனியார் தொலைக்காட்சிகளில் இன்று ஒளிபரப்பாகிய (24/12/19) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் பட்டியல்*
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜெயா டிவி* - மதியம் 1.30 மணி* *- ஆயிரத்தில் ஒருவன்*
* * * ** * * * * * * * * * * * *இரவு 11 மணி* * * - ஊருக்கு உழைப்பவன்*
கேப்டன் டிவி* - மதியம்* 2 மணி* - காலத்தை வென்றவன்*
* * * * * * * * * * * * * * *மாலை 4 .30 மணி - ராஜா தேசிங்கு*
மெகா டிவி* - இரவு 8 மணி* - குடியிருந்த கோயில்*
வசந்த் டிவி* -* மதியம் 1.30* - நான் ஏன் பிறந்தேன்*
* * * * * * * * * * * * * *இரவு 7.30* மணி - ராமன் தேடிய சீதை*
புதுயுகம் டிவி* - இரவு 7 மணி - தாய் சொல்லை தட்டாதே*
ஜெயா மூவிஸ் -மாலை 4 மணி* - குமரிக்கோட்டம்*
* * * * * * * * * * * * * * * * இரவு 7 மணி* - தாய்க்கு பின் தாரம்*
* * * * * * * * * * * * * * * * *இரவு 10மணி - இதய வீணை*
https://i.postimg.cc/3xhxc1KK/IMG-4596.jpg
நன்றி - திரு பூமிநாதன் ஆண்டவர்
வங்கக் கடல் தாலாட்ட
தங்கத் தமிழ் பாராட்ட
மங்காப் புகழுடனே
சிங்கமென உறங்குகிறான்
சத்தியத்தாய் கோபாலன் ஈன்ற
நித்திய பூபாளம்_ இவன் போல்
சத்தியமாய் கண்டதில்லை
இந்திய பூகோளம்
தோட்டாவும் உன்னிடம் தோற்றதுண்டு
தோற்றப்பொலிவில் உன்போல் எவருண்டு
ராமாவரம் வாழ்ந்த சாகாவரம் நீ
சாமான்ய மக்களின் சாம்ராஜ்யராஜன் நீ
சூரியனையே சுருட்டி வீசிய சந்திரன் நீ
சுயம்புவாய் ஜொலித்து வந்த இந்திரன் நீ
கொழும்புவை மிரள வைத்ந ராஜதந்திரன் நீ
படுத்துக்கொண்டே படை வென்ற மன்னன் நீ
கொடுத்துச் சென்றே பெயர் பெற்ற கர்ணன் நீ
ஊனுடல் நீங்கலாம் தமிழகம் விட்டு உன்
மானுடம் நீங்காது தமிழர் அகம் விட்டு
நித்திரையில் நீங்கினாய் இம்மண்ணை விட்டு
இத்தரையில் வாழும் வரை
வணங்குவோம் தலைவா
உன் பாதம் தொட்டு!!...
24/12/2019..
32 ம்ம் ஆண்டு நினைவு தினமாம்..
மங்கா புகழ் கொண்ட
மன்னாதி மன்னரே.....
மனிதரில் புனிதரே......
மறந்தால் உன்னை நினைப்பதற்கு.....
32ஆண்டு அல்ல...
32 யுகம் கடந்தாலும் உன் புகழ் மறையாது............. Thanks........
எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்,
பெயர்.................................:மருதூர ் கோபாலமேனன் இராமச்சந்திரன்,
நாம் அறிந்த பெயர்......:(இராமச்சந்திரன்)MGR.
பிறப்பு.................................: ஜனவரி 17, 1917
பிறந்த இடம்..................:நாவலப்பிட்டி(இலங்கை)
இறப்பு................................:டிசம்ப ர் 24, 1987,
மனைவிகள் .................:3,தங்கமணி, சதானந்தவதி, வி. என். ஜானகி,
பிள்ளைகள்....................:கிடையாது,
தந்தை பெயர்............................................. ............:திரு. கோபாலமேணன்
தாயார் பெயர்............................................. ........... திருமதி. சத்தியபாமா
சகோதரர் பெயர்............................................. ...... திரு.எம்.ஜி.சக்கரபாணி
பள்ளியின் பெயர்............................................. ....கும்பகோணம் ஆணையடி பள்ளி.
படிப்பு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,, 3-ம் வகுப்பு
கலை அனுபவம்........................................... ........7 வயது முதல்
நாடக அனுபவம்........................................... ........1924 முதல் 1963 வரை - 40 வருடங்கள்
சென்னை வருகை............................................. ...சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில்-1932 யானைகவுனி
சென்னையில் முதலில் வசித்த இடம்..........பங்காரம்மாள் வீதி
திரையுலகில் அறிமுகம் செய்தவர்................திரு.கந்தசாமி முதலியார்
திரை உலக அனுபவம் ......................................1934 முதல் 1977 வரை - 44 வருடங்கள்.
நடித்து வெளிவந்த படங்கள் .............................137 படங்கள்
கதாநாயகனாக நடித்த திரைப் படங்கள்.........115 படங்கள்
முதல் படம் வெளியான தேதி.........................28/03/1936 - சதிலீலாவதி
முதல் வேடம்............................................. ...........காவல் துறை அதிகாரி - சதிலீலாவதி
முதல் கதாநாயகன் வேடம்...............................ராஜகுமாரி - ஜுபிடர் நிறுவனம்
100 வது படம்.............................................. ............ஒளி விளக்கு - 20/09/1968
கடைசி படம் வெளியான தேதி .....................14/01/1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
மறைவுக்கு பின் வெளியான படம்................அவசர போலீஸ் 100
அரசியல் அனுபவம் ...........................................1933 முதல் 1987 வரை - 55 ஆண்டுகள்
முதன் முதலாக இருந்த இயக்கம் ................இந்திய தேசிய விடுதலை காங்கிரஸ்
தி.மு.க.வில் இருந்த ஆண்டுகள் ....................1950 முதல் 1972 வரை
அ.தி.மு.க. துவங்கிய ஆண்டு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,1972
தமிழக முதல்வரானது,...................................... .1977 முதல் 1987 வரை - 11 வருடங்கள்
சென்ற வெளிநாடுகள்
மலேஷியா, இலங்கை, பர்மா, சிங்கப்பூர்,ஹாங்காங், பாங்காக், தாய்லாந்து, ஜப்பான்,பிரான்ஸ், கிழக்கு ஆப்பிரிக்கா, லண்டன்,ரஷ்யா, அமெரிக்கா, மொரீஷியஸ்.
எம்.ஜி.ஆர் பற்றி சில சுவையான தகவல்கள்....
•எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936).கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).
•பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்ததாகவே இருக்கும். ‘உரிமைக்குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்குப் படம் !
•எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி !
•எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !
•விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !
•சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம் !
•முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷீட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார் !
•‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம் ’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !
•நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும்,ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார் !
•எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா !
•எம்.ஜி.ஆர் – கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !
•காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார்.எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது !
•நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் – மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷ்ன் செய்த படங்கள்.
•சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள்.ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !
•எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா !
•தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970 – ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான்….‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க. அப்படி வெச்சாத்தான் படம் ஓடும் !’
•‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை !
•அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் – சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார்!
•ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார் !
•ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே !’ என்றுதான் அழைப்பார் !
•அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !
•எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர் !
•முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம் !
•அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார்.
•‘நான் ஏன் பிறந்தேன்?’ – ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள் !
வாழ்க்கைக் குறிப்பு,,,,,,,,
இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பட்டியில் மருதூர் கோபாலமேன்னுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடை தந்தையின் மறைக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத் தொடர முடியாததால் இவர்
நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்பட்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிக்கையாலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவர். இவர் தங்கமணியை மணந்தார். இவர் நோய்க்காரணமாக இறந்தார. அதன்பிறகு சதானந்தவதியை மணந்தார். இவரும் நோய்க்காரணமாக இறந்தார். பின்னர் இவர் வி.என்.ஜானகியை மணந்து கொண்டார். இவருக்கு பிள்ளைகள் கிடையாது
திரைப்பட வாழ்க்கை,,
1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை. நல்ல குணங்கள் நிறைந்த கதா பாத்திரங்களையே தேர்வு செய்து நடித்தார்
எம்.ஜி.ஆர் என்ற மனிதர், நடிகராகி, புரட்சி நடிகராக, மக்கள் திலகமாக, நடிக மன்னராக, வசூல் சக்கரவர்த்இதயாக, மூன்றெழுத்து மந்திரமாக, எங்க வீட்டுப் பிள்ளையாக, தாய்க்குலத்தின் தாரக மந்திரமாக, புவி போற்றிடும் புரட்சித் தலைவராகப் படிப்படியாகத் தனது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி, தனது நிலைகளை மெல்ல மெல்ல உயர்த்தி, இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்திலேயே எந்த நடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்தார். 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் காலை 10:30 மணி வாக்கில் 12G பேருந்தில் பயணித்த போது,மயிலாப்பூர் லஸ் கார்னர் நிறுத்தத்தில் கடைகள் எல்லாம் அவசரமாக மூடும் காட்சி.பயணிகள் வியந்து பார்த்துக்
இத்தகைய உயர்வுகளைக் காண அவருக்கு உதவியன இரண்டே! ஒன்று, அவரது உயர்ந்த கருணை உள்ளம்! மற்றொன்று அவர் நடித்த திரைப்படங்கள்!
எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களோ 135. இவற்றுள்ளும் அவர் கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை என்று பார்த்தாலோ 115 படங்கள்தான்
கொண்டிருந்த போது,சக பயணி "என்ன எம்.ஜி.யார். பூட்டாரா" என்று வியந்தார்.அடுத்த நொடி அந்த பயணியின் அருகில் அமர்திருந்தவர் அவர் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை வைத்தார்.அது எம்.ஜி.யார் உடல்நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் இருந்த நேரம்.இந்திரா காந்தி கொல்லப்பட்ட செய்தி பின்னர் தெரிந்தது.அதாவது எம்.ஜி.யார் இறப்பு என்பதைக் கூட கேட்க தயாராக இல்லாத அளவுக்கு அவர் மேல் அன்பு வைத்திருந்த மக்கள்.
இலங்கையில் பிறந்து கும்பகோணத்தை வந்தடைந்து,சினிமா உலகில் 1936ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார்.ஆனால் 1947ம் ஆண்டில் "ராஜகுமாரி" படத்தின் மூலம் தான் பிரபலமடைந்தார். அதன் பிறகு முப்பது வருடத்திற்கு திரை உலகின் முடிசூட மன்னராக விளங்கினார்.இவருக்கு இசையில் மிகுந்த நாட்டம் இருந்தது.இவர் திரைப்படப் பாடல்கள் பலவற்றை இன்றும் கேட்டு மகிழ முடியும்.
தமிழக முதல்வராக இருந்த போது ஒரு முறை மதுரையில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் இசை நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வந்தவர், மூன்று மணி நேரமும் அமர்ந்து ரசித்துக் கேட்டுச் சென்றதை உதாரணமாகக் கொள்ளலாம்.
மற்றவர்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு உதவும் குணம் இவரிடம் இயற்கையாகவே இருந்தது.இயற்கை பேரழிவுகள் மற்றும் தனி மனித துன்பங்களுக்கு உதவுவது என்பதை பல முறைகள் செய்திருக்கிறார்.ராமதாசும் அவர் மகனும் இன்று ஒவ்வொரு நடிகராக சிகரட் மற்றும் குடிக்கும் காட்சிகளை படங்களில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதை எம்.ஜி.யார் என்றோ கடை பிடித்தார் என்பதை நினைத்துப் பார்க்க ஆச்சிரியமாக இருக்கிறது.எம்.ஆர்.ராதாவால் சுடப் பட்ட போது அவருடைய போராடும் குணமும்,தன்னம்பிக்கையும் வெளிப் பட்டது.
ஏழைப் பங்காளனாக சினிமாவில் அவர் வளர்த்து வந்த உருவம் பிற்காலத்தில் அரசியலில் அவருக்கு பெரும் உதவியாக இருந்தது.அண்ணாதுரையும் எம்.ஜி.யாரை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.1967ம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் நடந்த எல்லா பொதுத் தேர்தல் முடிவுகளையும் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்தார் எம்.ஜி.யார்.எம்.ஜி.யாரின் அரசியல் மற்றும் ஆட்சி பல விதமான விமர்சனத்திற்கு உள்ளானது. அவருடைய அரசியல் எந்த குறிப்பிட்ட கொள்கையோ,நீண்ட கால திட்டத்தை அடிப்படையாக கொண்டதாகவோ இருக்கவில்லை.
கருணாநிதியை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தான்.அதை இறுதி வரை அவரால் செய்ய முடிந்ததுதான் ஆச்சிரியம்.தி.மு.கவில் இருந்து வெளியேற்றிய உடன் கருணாநிதியைப் பற்றி கடுமையானப் பிரசாரத்தை மேற்கொண்டார்.1972ம் ஆண்டிலிருந்து 1977ம் ஆண்டு வரை இடை விடாமல் மக்களின் மத்தியில்,குறிப்பாக கிராம மக்களிடையே கருணாநிதி மேல் ஒரு தீராத வெறுப்பை ஏற்படுத்தினார்.அதனால் ஏழு ஆண்டு தண்டனை போதாதா,புறங்கையைத் தானே நக்கினோம் என்றெல்லாம் மன்றாடியும் கருணாநிதியால் எம்.ஜி.யார் இருந்த வரை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனது.
அண்ணாயிசம் என்ற சித்தாந்தத்தை கடைபிடிக்கப் போவதாக அறிவித்தார்.ஆனால் அதை சரியாக வரைமுறை செய்யவில்லை.
பல விளக்கங்களைக் கூறினார்.ஆனால் எதுவும் தெளிவாக இல்லை.உதாரணமாக ஏற்கனவே நாடோடி மன்னன் படத்தில் இதைப் பற்றி தான் கூறியதாகச் சொன்னார்.அண்ணாயிசம் என்பது பலராலும் கேலிக்குரிய பொருளானாலும்,அவருக்கு வாக்களித்த மக்களுக்கு அதைப் பற்றிய பெரிய கவலை இருந்ததாகத் தெரியவில்லை.பெரியாரின் முக்கியமான நாத்திகக் கொள்கையில் இவருக்கு பெரிய அளவு ஈடுபாடு இருந்ததாக தெரியவில்லை.தாய் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வந்தது ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.ஆனால் பெரியாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை மிக சுலபமாக செயல் படுத்தினார். பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 69% இட ஓதுக்கீடு அமல் படுத்தியது இவர் ஆட்சியின் ஒரு பெரிய மைல் கல்லாகக் கருதப் படுகிறது.
அண்ணா பல்கலைக் கழகம் அமைத்து அதற்கு ஒரு தனி கவனத்தை பெற்றுக் கொடுத்தார்.இன்று அது மிகவும் புகழ் பெற்ற பல்கலைக் கழகமாக மாறி இருப்பது எம்.ஜி.யாருக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.தமிழ் பல்கலைக் கழகமும், பெண்களுக்கான தனி பல்கலைக் கழகமும் அமைத்தது அவர் ஆட்சியின் நற்செயலாகக் கருதப் படுகிறது.காமராஜால் அறிமுகப் படுத்தப் பட்ட மதிய உணவு திட்டத்தை விரிவாக்கியும்,சீர்த்திருத்தியும் அமல் படுத்தியது பெரிய வரவேற்பை பெற்றது.அதை கருணாநிதி கூட ஆதரிக்கும் நிலை ஏற்பட்டது.
அவர் ஆட்சியின் மிகச் சிறப்பான பகுதியாக கருத வேண்டுமென்றால்,பொது விநியோக முறையை நிர்வகித்த விதம் தான்.ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் அத்தியாவசப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் இல்லாமல் இருந்தது.அதனால் கீழ் தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அன்றாட வாழ்கையை பிரச்சனை இல்லாமல் நடத்த முடிந்தது.இலங்கையில் உள்ள தமிழர்கள் இன்று கடுமையான துன்பத்திற்கு உள்ளாகும் நிலையில், எம்.ஜி.யார் அவர் ஆட்சி காலத்தில் இலங்கையில் தமிழர்களின் மீது நடந்த கூட்டுக் கொலையின் போது இலங்கை தமிழர்களுக்கு செய்த உதவியை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
புள்ளியியல் படி எம்.ஜி.யார் ஆட்சியில் அவருக்கு எப்போதும் ஆதரவளித்து வந்த கீழ் தர மக்கள் மிகுந்த நன்மை அடைந்ததாகக் கூற முடியாது.பெரிய தொலை நோக்குப் பார்வை இருந்ததாகக் கூற முடியாது.ஒரு வித உள்ளுணர்வின் அடிப்படையில் ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.முதல் 2 1/2 ஆண்டுகள் ஊழல் இல்லாத மது விலக்கை கடைபிடித்த ஆட்சி கொடுத்தாலும்,1980௦ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவுடன்,பெரிய அளவில் ஊழலும், மதுவிலக்கு நீக்கத்தால் மது தயாரித்து விற்ற நிறுவனங்களும்,அதன் அதிபர்களும் அடைந்த லாபமும் பெருத்த ஏமாற்றம் தான்.கருணாநிதியின் ஊழலை எதிர்த்து ஆரம்பித்த கட்சி,ஜெயலலிதாவின் வரலாறு காணாத ஊழலால் சரித்திரம் படைத்தது. இன்னும் இரட்டை இலை சின்னத்திற்கு இருக்கும் ஆதரவு இன்றும் எம்.ஜி.யாருக்கு மக்களிடையே இருக்கும் ஈர்ப்பு சக்தி தான் காரணம்
தமிழ்நாடு அரசு எம். ஜி. ஆர் நினைவாகச் சென்னையில் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்துக்கு அருகில் அவரது உடல் புதைக்கப்பட்டது. அந்த இடத்தில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆரின். மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும், அவருடைய சில பொருட்களும் மக்களின் பார்வைக்கு தனி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
தாமரை மலர் விரிந்த நிலையில் இருப்பது போன்ற அமைப்பின் நடுவே அவர் உடல் வைக்கப்பட்டுள்ள சமாதி உள்ளது. சமாதியின் அருகே நினைவுத்தூண் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது............ Thanks.. ..........
அவனியில் எவரும் பிறந்து மறைந்திடலாம்.. ஆனாலும் எங்கள் தலைவர் போல் வருமா?
வாழ்கின்ற போதே வரலாறாய் ஆனவர்..
மறைந்திட்ட போதும் வரலாற்றைப் படைக்கிறார்!
ஏற்றிட்ட இலட்சிய தீபத்தைக் காத்தவர்
ஏந்தலின் வழியினில் இன்றைக்கு இலட்சக்கணக்கானோர்!
ஏழைக்கு வாழ்வு என்றைக்கு மலருமோ ..
எந்நாளும் இதயத்தால் வழிகள் கண்டார்..
கொடுத்துக் கொடுத்து அவர் தந்தவை எத்தனையோ
திரும்பும் திசையெல்லாம் அவரின் புகழ்க் கவிதை!!
எம்.ஜி.ஆர். என்கின்ற மூன்றெழுத்து மந்திரத்தை
எந்நாளும் உச்சரிக்கும் பக்தர்கள் கூட்டமிங்கே!
வயதினைக் கடந்தாலும் தலைவருக்கு அஞ்சலி செய்திட.. அலைகடலெனவே திரண்டமக்களிங்கே!
எத்தனை மைல்கள் ஆனபோதிலும் என்வருகை நிச்சயம் என்றிட்ட குரல்கள் கணக்கினிலடங்கா!
பிரான்ஸ் முதல் மெரீனா நோக்கிய படையெடுப்பு..
சாரை சாரையாய் ரசிகர்கள் அணிவகுப்பு!!
நேர்மையை.. நீதியை.. இலட்சியப் பாதையை..
எம்.ஜி.ஆர் என்னும் கீதையை.. நெஞ்சில் சுமந்தபடி
அன்பினைப் பொழிபவர் அனைவரின் உள்ளத்திலும்
ஆட்சி நடத்துகின்ற பொன்மனச்செம்மலவர்
32வது நினைவுநாள் பேரணி.. உலகில் இதுவரை.. எவருக்கேனும் இதுபோல் தானாக சேரும் கூட்டம் தரணியில் வாய்த்ததுண்டா? வாய்ப்பும் உண்டா?
ஒரே சூரியன்! ஒரே சந்திரன்! ஒரே எம்.ஜி.ஆர்!!
அன்புடன்
காவிரிமைந்தன்.......... Thanks.........
https://www.facebook.com/groups/MGR1...xp5GbvCFBzFdqg........... Thanks.........
மக்கள் திலகம் அவர்களின் மாபெரும் பிறந்த நாள் மனித நேய திருநாள் விழா இதயம் கமழும் இன்னிசை ஆன்றொர்களின் ஆசியுடன்உங்களின் ஆதரவுடன் ஜனவரி 26.01.2020 நடைபெறும் விழாவிற்க்கு அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன் அன்புடன் எம் எஸ் மணியன் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் நற்பணி சங்கம்........ Thanks...
நமது இதய தெய்வம் புரட்சி தலைவர் டாக்டர் திரு எம்ஜிஆர் அவர்கள் நினைவு தினம் இன்று அனைவரும் தலைவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியவர் மற்றும் அவர்கள் பகுதியில் அஞ்சலி செலுத்தியவர் எண்ணிக்கை கடந்த வருடம் சாதனை முறியடிப்பு. நமது தலைவர் அனைவரின் உள்ளத்தில் வாழ்ந்து வழி காட்டி வருகிறார். அவரது வழியில் அனைவரும் செல்வோம். வெற்றி மகுடத்தை அவருக்கு நாம் சமர்பிப்போம்....... Thanks.........
உலகிலேயே... எந்த பதவியும் வகிக்காத போதே அமெரிக்கா ,ரஷ்யா, சிங்கப்பூர், மொரீஷியஸ், இலங்கை, போன்ற நாடுகள் ஒரு அதிபருக்கு வழங்கும் பைலட் காரோடு வரவேற்றது எம் ஜி ஆரை டாக்டர் உதயகுமார் எழுதிய அமேரிக்காவில் எம் ஜி ஆர் எனும் நூல் மூலமும் இதயக்கனி மூலம் மொரீஸ் நாட்டில் சுதந்திர தின கொண்டாடத்தில் அந்த நாட்டு பிரதருக்கு அடுத்து அமரவைத்து சிறப்பு செய்ய பட்ட எம் .ஜி. ஆரி.ன் பெருமைகளை அறியமுடியும் .........
வாழ்க எம் ஜி ஆர் புகழ்.............. Thanks.........
ஈகை பாடம் கற்றுக்கொடுத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்
தீமையே வெல்லும் என்ற கருத்தை எதிர்த்துப் புரட்சி செய்து கலியுகத்தை கலியுகத்தின் தத்துவத்தை தோற்கடித்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்
புயல் வெள்ளச் சேதங்களுக்கு இன்றைக்கும் மற்ற மாநிலங்களை விட சினிமாகாரர்களும் தொழிலதிபர்களும் தமிழகத்தில் இருந்து உதவுகிறார்கள் என்றால் அதற்கு மூலகாரணமே நமது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கற்று கொடுத்த ஈகை பாடம் என்று உறுதியாக கூறலாம் அந்த புரட்சியை தொடர்ந்து எடுத்து செல்ல அதற்கு பின் வந்தவர்களால் இயலவில்லை ; காரணம் அதற்கு சில தனிப்பட்ட சந்தோஷங்களை தியாகம் செய்ய வேண்டும் .
அதற்கு இன்றுள்ளவர்கள் தயாராக இல்லை இன்னொன்று வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடும் இரக்க சுபாவம் வேண்டும் அதுவும் இன்று பலரிடம் இல்லை .........
புரட்சித் தலைவரின் நாமம் வாழ்க.
ஸ்ரீ எம்.ஜி.ஆர் துணை
ஸ்ரீ எம்.ஜி.ஆர் பக்தன் சு.சரவணன்............ Thanks...
மக்கள் போற்றும்
மக்கள் திலகம் !
___________________
புரட்சித்தலைர் எம் ஜி ஆரை தமிழக மக்கள் நடிகராக அல்லது முதலமைச்சராக மட்டும் பார்க்க வில்லை தாய்க்கு மகனாக தங்கைக்கு அண்ணனாக உழைக்கும் மக்களின் தோழனாக ஏழைகளுக்கு நம்பிக்கையூட்டும் சக்தியாக சுருக்கமாக சொல்வதென்தென்றால் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே எம் ஜி ஆரை மக்கள் கருதினார்கள் அதனால்தான் அவர் மரணம் வரையிலும் தோல்வி காணாத முதல் அமைச்சராய் இருந்தார் !
நன்றி! திரு சைதையார் !.......... Thanks.........
மக்கள் திலகம் அவர்களின் மாபெரும் பிறந்த நாள் மனித நேய திருநாள் விழா இதயம் கமழும் இன்னிசை ஆன்றொர்களின் ஆசியுடன்உங்களின் ஆதரவுடன் ஜனவரி 26.1.2020 நடைபெறும் விழாவிற்க்கு அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன் அன்புடன் எம் எஸ் மணியன் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் நற்பணி சங்கம்........ Thanks.........
https://youtu.be/QNWzXi3RSL8......... Thanks.........