https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...01&oe=5EA3C75A
Printable View
#HERO83 #சென்னை
1964, 1972 ஆண்டுகளைப் போன்றே 1983 ஆம் ஆண்டிலும் நடிகவேந்தன் திரைத் துறையில் படைத்தச் சாதனைகள் அளப்பற்கரியது. அவற்றை எழுதினாலும் ஏடுகள் போதாது. இவரின் வெற்றிகள் அனைத்தும் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே படைக்கப்பட்ட ஒன்றாகும். தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனங்களையோ, அரங்க உரிமையாளர்களை மிரட்டியோ, பணிய வைத்தோ உருவாக்கப்பட்ட சாதனைகளல்ல இவருடையது. அடுத்தடுத்து தொடர்ந்து படங்களை வெளியிட்டு, சமயத்தில் ரசிகர்களே பார்க்கத் திணறிப் போகும் அளவுக்கு தனது மாறுபட்ட நடிப்புத் திறனால் வெவ்வேறு கதை அம்சங்கள் பாத்திரங்கள் கொண்ட படங்களில் நடித்து, அவற்றைத் தொடர் வெற்றிகளாக்கி தனது ஐம்பத்தைந்தாம் வயதிலும் அவர் செய்த சாதனைகள் வியப்புக்குரியது.
இந்த 1983 லும் அப்படித்தான். அவர் நடித்து தமிழில் வெளியான படங்கள் ஆறு. அவற்றில் இரண்டு படங்கள் வெள்ளிவிழாவும், இரண்டு படங்கள் நூறு நாளும் ஓடி வெற்றி பெற்றன. 1959, 1961,1972, 1978, 1983 ஆகிய ஆண்டுகளுக்குப்பின் ஒரே ஆண்டில் இரு படங்கள் வெள்ளிவிழா என்று ஆறாம் முறையாக ஓர் அற்புதச் சாதனையை அவர் படைத்திருந்தார். தெலுங்கில் ஒரு படமும், தமிழில் இரு படங்களென மூன்று படங்களில் இரட்டை வேடமேற்று நடித்திருந்தார். அதில், இரு படங்களில் இரு கதாபாத்திரங்களுக்கும் ஜோடிகள் இருந்தன. ( சந்திப்பு / பெஜவாடா பெப்புலி) ஆனால், வெள்ளை ரோஜா படத்தில் இரு வேடங்களுக்கும் ஜோடி இல்லை.
நான்கு படங்களில் அவரது மகன் பிரபு நடித்திருந்தார். மிருதங்க சக்கரவர்த்தி, சந்திப்பு, நீதிபதி ஆகிய படங்களில் கதையிலும் தந்தை மகனாக இருவரும் நடித்திருந்தனர்.
1983ல் சில புள்ளி விபரங்கள் / சென்னை நகர சாதனைகள்
1. மூலக்கடை வெங்கடேஸ்வரா அரங்கில் 50 நாட்களைக் கடந்த படம் நீதிபதி.
2. திருவொற்றியூர் வெங்டேஸ்வராவில் நூறுநாள் ஓடிய முதல் படம் வெள்ளைரோஜா.
3. 1983 ல் ஆறு படங்களில் திலகம் நடித்து நான்கு படங்கள் 100 நாள் ஓடின.
வேறு எவருக்கும் அந்த ஆண்டு ஓடவில்லை. ( நீதிபதி, சந்திப்பு, வெள்ளை ரோஜா, மிருதங்க சக்கரவர்த்தி)
4. சென்னை சாந்தியில் நீதிபதி, சந்திப்பு, மி. சக்கரவர்த்தி என்று மூன்று படங்கள் 100 நாள் ஓடின. இந்த மூன்றும் தனியரங்கில் 8 லட்ச ரூபாய்க்கும்மேல் வசூலித்தன. வெள்ளை ரோஜா சபையரில் மட்டுமே 8 லட்ச ரூபிய் வசூலித்தது. இதுபோல் தனி அரங்கொன்றில் 8 லட்சரூபாய் வசூலித்ததில் மற்றவர்க்கு இரண்டு படங்ளுக்கு மேல் கிடையாது.
5. 1983 ல் திரையிட்ட அனைத்து அரங்குகளிலும் நூறுநாளைக் கடந்த சிவாஜியின் படங்கள் 3. ( நீதிபதி, சந்திப்பு, வெள்ளைரோஜா )மற்றவர்க்கு இரண்டுகூட இல்லை.
6. 1983ல் வெளியான படங்களில் 100 காட்சிகளுக்கும் மேல் தொடர்ந்து அரங்கு நிறைந்ததும் திலகத்துக்குத்தான். நீதிபதி, சாந்தி, அகஸ்தியா, அன்னை அபிராமி அரங்குகளிலும், சந்திப்பு - சாந்தி, கிரௌன், புவனேஸ்வரியிலும், வெள்ளைரோஜா - தேவி, புவனேஸ்வரி, கிரௌனிலும், மிருதங்க சக்கரவர்த்தி சாந்தியிலும் தொடர்ந்து 100 காட்சிகளுக்கும் மேல் தொடர் HOUSEFULL ஆகின.
7. 1983 -ல் சென்னையில் 100 நாட்களில் 30 லட்சம் வசூலித்த ஒரே படம் வெள்ளை ரோஜா மட்டுமே.
8. சாந்தியில் 3 படங்களும், கிரௌனில் இரு படங்களும், புவனேஸ்வரியில் இரு படங்களும், அகஸ்தியா, அன்னை அபிராமி, தேவி, உதயம், அபிராமி ஆகியவற்றில் தலா ஒரு படமும் திலகம் நடித்து 100 நாட்களைக் கடந்தன.
9. தீபாவளி வெளியீட்டில் சென்னையில் 6 திரைகளில் 75 நாட்களும், 5 திரைகளில் 100+ நாட்களும் ஓடிய ஒரே படம் வெள்ளை ரோஜா.
10. சென்னையில் மட்டும் சிவாஜி நடித்து வெளியான ஆறு படங்கள் மூலம் வசூலான மொத்தத்தொகை ஒரு கோடிக்கும்மேல்.
11. 1983ல் நடிகர்திலகம் நடித்து நீதிபதி, சந்திப்பு, வெள்ளைரோஜா மூன்றும் தமிழகமெங்கும் ஒரு கோடி ரூபாய்க்கும்மேல் வசூலித்தது. ஆனால், மற்றவர்க்கு?
12. சென்னை தேவி மற்றும் உதயம் அரங்குகளில் நூறுநாள் ஓடிய முதல் தமிழ்ப்படம் வெள்ளை ரோஜா. சபையர் திரையரங்கில் 75 நாட்களைக் கடந்த முதல் தமிழ்ப் படமும் அதுவே. அத்திரையரங்கு நிர்மாணித்த காலந்தொட்டு பெண்கள் கூட்டம் அதிகம் அலைமோதியது வெள்ளைரோஜா படத்துக்குத்தான் என்று அப்போதைய தினமணிக்கதிர் செய்தி வெளியிட்டிருந்தது.
( மதுரை, கோவை, சேலம், திருச்சி சாதனைகள் நாளை....)
நன்றி : மதுரை ரசிகர்களின் சிறப்புமலர்
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்
'பாலுக்குள்ளே வெண்ணெய் உண்டு.. நான் அறிவேன்..பாவை க்குள்ளே என்ன உண்டு நீ அறிவாய்.....நாலுக்குள்ளே ரெண்டும் உண்டு மூனுமும் உண்டு..
உன் நாடகத்தில் காதல் உண்டு நாலும் உண்டு...'
நாளை ( 13/03/2020 ) காலை 07.00 A.M. மணிக்கு ஜெயா மூவிஸ் தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" ராஜா " மெகா ஹிட் படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, பாலாஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...e9&oe=5E915626
முரசு சேனலில் இருவர் உள்ளம் தற்போது....
1981 ல் திருச்சி கலையரங்கம் ஏ சி தியேட்டரில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு 100 நாட்கள் ஓடி சாதனை செய்த படம்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...c3&oe=5E93340D
Thanks Shankar Muthuswamy
நடிகர் திலகம் நடிகர்களின் திலகம் மட்டுமல்ல. சாதனைகளின் திலகமும் கூட. அவர் செய்த சாதனையை பிற நடிகர்களால் முறியடிக்க முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வகை சாதனைகளை பல செய்திகள் மற்றும் பதிவுகள் மூலம் அறிந்திருக்கிறோம். ஆனால் இயல்பாகவே சில விஷயங்களும் அமைந்து விடுகின்றன. அதில் ஒன்று தான் 1972ம் ஆண்டு நிகழ்ந்தது.
1972ம் ஆண்டை பொறுத்த வரை நடிகர் திலகத்திற்கு மிகவும் குறிப்பிடத்தக்க ஆண்டு. எல்லா படங்களும் வெற்றியடைந்தது. ஆனால் அதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் வருடத்தின் முதல் மாதத்திலும், கடைசி மாதத்திலும் ஒரே டீம் பணி புரிந்து (அதாவது கதாநாயகன், கதாநாயகி, தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர்) இரு படங்கள் வெளியாயின. அந்த இரு படங்கள் ஜனவரி மாதத்தில் வெளியான ராஜா மற்றும் டிசம்பர் மாதத்தில் வெளியான நீதி.
இவ்வாறு வருடத்தின் தொடக்க மாதத்திலும் இறுதி மாதத்திலும் வேறு நடிகர்கள் ஒரே டீமில் பணியாற்றி படங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...da&oe=5E952BAE
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...ea&oe=5EA44F7F
Thanks Bala Krishnamurthy
'யார் இந்த நிலவு ஏன் இந்த கனவு.. யாரோ சொல்ல யாரோ இங்கு வந்த உறவு... காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு...'
இன்று 13/03/2020- மதியம் 1.30 மணிக்கு கே. டி.வி. யில் நடிகர்திலகம் நடித்த " சாந்தி ". !
நடிகர்திலகம், தேவிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். !
படத்தை காண தவறாதீர்கள். !
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...75&oe=5E929BD4
'போற்றி பாடடி பெண்ணே.. தேவர் காலடி மண்ணே..தெக்கு தெசை ஆண்ட.. மன்னர் இனம் தான் ஓஹோய்..'
இன்று 13/03/2020 'விஜய் சூப்பர்' டிவி யில் காலை 09.00 மணிக்கு நடிகர் திலகம், கமல் நடித்த மெகா ஹிட் படம். ¶
" தேவர் மகன் " படத்தை கண்டு களியுங்கள். ¶
இந்த படத்தில் நடிகர் திலகம், கமலாஹசன், நாசர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...ea&oe=5E8F30EF
'வெற்றி வேல் வீர வேல்...சுற்றி வந்த பகைவர் தம்மை...தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்..ஞான சக்தி வேல்..'
இன்று 13/03/2020 சன் லைஃப். டி.வி. யில் காலை 11.00A.M. மணிக்கு நடிகர் திலகம் நடித்த பக்தி படம்.¶
" கந்தன் கருணை" கண்டு களியுங்கள். ¶
இதில் நடிகர்திலகம், ஜெமினிகணேசன், சிவகுமார், சாவித்திரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...36&oe=5EA49E94
விநியோகஸ்ர்கள்...
சினிமா ரசிகர்கள்...
பொதுமக்கள்.... என
தமிழகமெங்கு்ம் ஒரே பேச்சு...
வியட்நாம் வீடு...
திரைப்படத்தை பற்றி...
மதுரையில்
100 ஆட்டோக்களில் வலம் வரும்
வியட்நாம் வீடு
விளம்பரம்...
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...6b&oe=5E90D386
அடி நீதானா அந்தக் குயில்..யார் வீட்டு சொந்தக் குயில்..ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி..பறந்ததே ஒலகமே மறந்ததே..."
இன்று 14/03/2020 மதியம் 1.00 மணிக்கு ஜெயா மூவிஸ் தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" முதல் மரியாதை " மெகா படத்தை கண்டு களியுங்கள். !!!
சிவாஜி கணேசன், ராதா
நடித்துள்ளனர். !!!
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...65&oe=5E9364B8