Dear Ragavendran Sir,
Your article and song link for Raja Raja Chozhan is good
Printable View
Dear Ragavendran Sir,
Your article and song link for Raja Raja Chozhan is good
Ragulram sir,
I read your writing on Raja.
But most part of the analysis produced by you as 'copy & paste' method of writing on Raja by another hubber, who already wrote here in this same NT thread in part 1 or 2.
The centre part of your essay is very familier to everyone here word by word.
If it is so, please give the credit to the original writer.
re-presentation is not a harm, but with curtosy will be appreciated.
27-3-2013 குமுதம் இதழில் பேசும்படம் பகுதியில் வெளியாகியுள்ள 'ஆங்கிலத் திறமையை வளர்த்துக் கொண்ட சிவாஜி' என்ற முக்தாவின் சிறப்புக் கட்டுரை.
http://i1087.photobucket.com/albums/...%20-2/k1-1.jpg
http://i1087.photobucket.com/albums/...%20-2/k2-2.jpg
Article about thalaivar.
Madras Musings August 1-15 2001
http://i1087.photobucket.com/albums/...I-No08-2-1.jpg
வாசு சார்
இதயக்கனி சினிமா ஸ்பெஷல் வசந்த மாளிகை சிறப்பிதழின் சில பக்கங்கள், ராண்டார் கய் அவர்களின் ஹிந்து நாளிதழ் கட்டுரை, குமுதம் நினைவூட்டல் பக்கம் என அனைத்தையும் நம்முடன் பகிர்ந்து கொண்டு அனைத்து ரசிகர்களின் நெஞ்சிலும் தங்களுடைய இடத்தை மேலும் ஸ்திரப் படுத்தி விட்டீர்கள். தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
முக்தா ஸ்ரீநிவாசன் குறிப்பிட்டிருக்க வேண்டியது அருணோதயம் படப்பிடிப்பு. அந்த நிழற்படத்தில் அவர் குறிப்பிட்டிருப்பது 1970ம் ஆண்டில் நடந்ததாகும். நேற்று நானும் முரளி சாரும் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது அவர் குறிப்பிட்டிருந்தார். நான் தங்களுடைய பதிவில் தன் அந்த நிழற்படத்தைப் பார்த்தேன். அவர் சொன்னது போல் இது அருணோதயம் படப்பிடிப்பாகும்.
வி.கோபாலகிருஷ்ணன் அவர்கள் வாய்ஸ் ஆப் அமெரிக்கா இதழுக்காக நடிகர் திலகத்தைப் பேட்டி கண்டு அது அந்த வானொலியிலும் ஒலிபரப்பானது. அந்த வானொலிக்கு நான் கடிதம் எழுதினேன். இது வரை பதிலில்லை. அமெரிக்காவில் இருக்கும் நம் நண்பர்கள் யாராவது இதனை follow up செய்து அந்த நிகழ்ச்சியின் ஒலிப்பதிவின் ஒரு பிரதி கிடைக்கப் பெற்றால் மிக்க மகிழ்வுடன் இருப்போம்.
Our dear friend Gopal has mentioned my posting as Black Mark and there is no objection from any other friend. So I assume it is accepted by all and henceforth I shall mention my posts myself beginning with Black Mark Posts. If at all at some stage he has some courtesy and feels for the same, I shall stop that prefix.
Thanks Mr Vasu Sir for the Kumdudham Article and VM article in
Idyakkani.
Mr Raghavendra Sir,
It is not a question of accepting & rejecting and pls dont take into your
heart. Pls keep aside the remarks.
Regards
Dear Vasudevan Sir,
Yours posts Kumudham & Idhayakani Articles are good
Anandavikatan - Pokkisham
http://i1234.photobucket.com/albums/...psaacd238b.jpg
Blackmark Post (thanks to Gopal for the honor bestowed on my post)
If your view is termed as Blackmark will you keep it aside? Won't you feel hurt?
My view was about the film and it can be accepted or rejected and it was felt as hurting and immediately I expressed my acceptance, whereas is it correct to term the post itself as a blackmark? Will you not feel hurt on such remarks?
திரு. ராகவேந்திர சார்,
அவருடைய பதிவுக்கு யாரும் object செய்யவில்லை என்றால், அவர் எழுதியது சரி என்றும், நீங்கள் எழுதுவது தவறு என்றும் அர்த்தம் இல்லை. நீங்கள் எழுதியதை குறை சொல்லவில்லை , அந்த நண்பரை தவிர. குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குபவர்களில் அவரும் ஒருவர்.
சுட்டும் விரலால் குற்றம் கூறுகையில், மற்ற முன்று விரல்கள் தன் மார்பினை காட்டுதடா ........... என்பதை நண்பர் மறந்துவிட்டார் போல.
அடுத்தவர் செய்யும் நல்ல செய்வைகளை பாரட்ட மணம் இல்லை என்றாலும், குறை சொல்ல வேண்டாமே நண்பரே.
Note :
R.r.c. எங்கள் t.v. Malai யில் மீனாக்ஷி திரை அரங்கில் 50 நாட்கள் ஓடிய படம். எங்கள் ஊரில் 50 நாட்கள் ஓடியது என்றால் , அந்த படம் ஒரு வெற்றி படமே.
Sir,
If anyone post their reply 'IN SUPPORT OF' Mr.S.Gopal's post, then only it can be taken as accepted.
It does not mean that, those who are all not condemn his post, are accepting it.
When you, Mr.Vasu, Mr.Pammalar, Mr.K.C.Sekhar are publishing many paper cuttings and news, only few hubbers are posting their appreciation and thanks. That means others not like them or enjoying them?. Everyone like them.
Regarding Rajaraja Cholan, as it was the first cinemasope movie in Tamil, everyone expected it as a Silver Jubilee movie, but ended with a normal hit (but I am sure it is not a failure one).
Mr Raghavendra Sir,
I completely agree with the views posted by Mr Bala & Mr Adhiram.
As they rightly mentioned it does not mean we support our friend view.
Dear Balakrishnan, Adiram, Vasudevan and friends,
தங்களுடைய பதிவுகள் நிச்சயம் மனதுக்கு ஆறுதலாக உள்ளது. தங்களுக்கு எனது நன்றி. இப்போது தான் நமது திரி ஓரளவுக்கு சகஜமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. என் மனக் கஷ்டத்தைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டேனே தவிர, இதை மேலும் வளர்க்க நான் ஒரு காரணமாக இருக்க விரும்பவில்லை.
தங்கள் அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள்.
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் மனது புண்பட்டுள்ளது நன்றாகப் புரிகிறது. ராஜ ராஜ சோழன் பற்றிய தங்களுடைய பதிவில் எந்தவொரு குறையும் இருப்பதாக எனக்குப் படவில்லை. அனைவரும் இதே கருத்தைதான் கூறியுள்ளனர். எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் பணிகளைத் தொடருங்கள்.
mr raghavendran sir my humble request is that L DON'T TAKE THINGS SERIOUS OR TO THE HEART. nobody is supporting our friend's views. to be more specific some times his posts are sarcastic MAY BE IT IS HIS NATURE.
and if we start discussions it is not good for the HUB.
MYoinion raja raja cholan was a much expected movie We saw it prmiere show earlier night at anand theatre arranged by madras entertainers local sabha and I was also one of the fans very much disapointed. as you say the plot was not handled by Apn unfortunately.
my opinion it is not even average successful movie. no regrets about
our NT who did is job as usual remarkably. what is the use.
'பொம்மை' அரிய ஆவணம்.
பட பூஜைகளில் நடிகர் திலகம்.
http://i1087.photobucket.com/albums/...t%20-2/b-4.jpg
இது எந்தப் படத்துக்கான துவக்க விழா என்று ஊகிக்க முடிகிறதா? கீழே உள்ள 'பொம்மை' செய்தியில் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://i1087.photobucket.com/albums/...t%20-2/a-3.jpg
Vasudevan sir,
Is it Pasumponn..?
Crystal Clear Picture of RRS. Thanks NV.
Tomorrow is the 40 years completion of
'BHARATHA VILAS' (24.03.1973 - 24.03.2013)
which taught patriotism in another different way.
Let us celebrate in every home by watching Bharatha Vilas in vcd / dvd tomorrow.
டியர் வாசு சார்,
தங்களின் அன்பு வார்த்தைகளுக்கு உளமார்ந்த நன்றி.
ராஜ ராஜ சோழன் அட்டகாசமான, தெள்ளத் தெளிவான நிழற்படங்கள் ... அருமை..
புதுப்பட பூஜை ஸ்டில் என் வாரிசு - ஒவ்வொரு ரசிகனின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஸ்டில்லாச்சே...
நடிகர் திலகத்திற்கு கலைக்குரிசில் பட்டம் எப்போது யாரால் வழங்கப் பட்டது?
from fb page http://www.facebook.com/mohanraj.kr/...f¬if_t=likeQuote:
1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23, 24 ஆம் திகதிகளில் தினகரன் ஆதரவில் வரலாற்றில் இடம்பிடித்த மாபெரும் தமிழ் விழா ஒன்று கொழும்பில் நடைபெற்றது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவை அன்று கண்டு களித்தவர்கள் கொடுத்து வைத்தவர்களே. விழாவிற்கு தமிழகத்திலிருந்து பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், பிரபல கதாசிரியர், நாவலாசிரியர் அகிலன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோர் வந்திருந்தனர். இவ்விழாவில் வைத்துத்தான் நடிகர் திலகத்திற்குக் “கலைக்குரிசில்” என்ற பட்டம் கலையரசு சொர்ணலிங்கம் அவர்களால் வழங்கப்பட்டது. விழாவில் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, பேராசிரியர் சு. வித்தியானந்தன், வித்துவான் க. ந. வேலன் போன்ற பல தமிழ் அறிஞர்கள் பங்கு பற்றினார்கள். சிவங் கருணாலய பாண்டியனார் தலைமையில் கவியரங்கம், லயஞான குபேரபூபதி தவில்மேதை வி. தெட்சணா மூர்த்திப்பிள்ளை குழுவினர், யாழ்ப்பாணம் நாதஸ்வர மேதை அளவெட்டி என். கே. பத்மநாதன் குழுவினர் ஆகியோரது நாதஸ்வரக் கச்சேரிகள், பிரபல நடனதாரகை திருமதி திலகவதி கனகசபையின் நடனம், சைவ மங்கையர் கழக மாணவிகளது கலை நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு கலைநிகழ்ச்சிகளாலும் தமிழ் விழா பெரும் விழாவாக இந்திர விழா போன்று களைகட்டியது.
நன்றி - முகநூல் நண்பர் திரு கிருஷ்ணன் நரசிம்மன்
திலகப் புதிருக்கான விடை
சிலர் சிவந்த மண் படத்தை யோசித்திருப்பீர்கள். ஆனால் சரியான விடை அடுத்து நம் திரைப்பட்டியல் பகுதியில் இடம் பெற இருக்கும் வணங்காமுடி.
abhklabi சார்,
குற்றம் கண்டு பிடித்து பேர் வாங்கும் புலவர். சுட்டும் விரலால் காட்டுகையில் மற்றும் மூன்று விரல்கள்- ராகவேந்தர் சாரை attack பண்ணுவது போன்ற இந்த பதிவை நான் ஆட்சேபிக்கிறேன். சொக்கலிங்கம் மீது, சோ மீது, என் மீது குற்றம் சொன்னவர் அவர்தான்.
தனக்கு நேரும் போது கூக்குரலிடுகிறார்.கொஞ்சம் பழைய பதிவுகளை பாருங்கள் தலைகளே.
ஆதிராம் சார்,
http://ecx.images-amazon.com/images/...SL._SX500_.jpg
நாளை கலக்கலாம்.
எனக்கு எதுவும் நேரவில்லை. யாரையும் நான் குற்றம் கண்டு பிடிக்கும் நோக்கத்தோடு பதிவிட்டதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அந்தந்த விவாதங்களில் அவரவர் கருத்தை சொல்வது போன்று தான் என்னுடைய கருத்தாக அமைந்திருக்குமே தவிர யாருடைய பதிவினையும் ஒரு முறை கூட நான் தங்களைப் போல black mark என்பது போல மனம் புண்படும் படி விமர்சித்ததில்லை. தாங்கள் தான் என்னை தனிப்பட்ட முறையில் பல முறை கிண்டல் செய்தும் தாக்கியும் என் வயதையும் உடல் நலத்தையும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறீர்கள். என்னுடைய பதிவில் தனிப்பட்ட முறையில் நான் எழுதவும் மாட்டேன், நினைக்கவும் மாட்டேன். தாங்கள் black mark என்று எழுதியது எந்த அளவிற்கு மனதைப் பாதிக்கும் என்பதை உணர்வீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அது தவறு என்று தாங்கள் சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்.Quote:
தனக்கு நேரும் போது கூக்குரலிடுகிறார்.கொஞ்சம் பழைய பதிவுகளை பாருங்கள் தலைகளே.
நடிகர் திலகத்தின் மேன்மையைப் பற்றியும் அவரது புகழைப் பற்றியும் எழுத 100 பாகங்கள் கூட போதாது. எனவே வம்பிழுத்து பக்கங்களை நிரப்பி இந்தத் திரியை வளர்க்கிறார்கள் என்கிற வாதத்திற்கு இடம் தரவேண்டாம். அப்படி செய்து தான் இந்தத் திரியின் பக்கங்களின் எண்ணிக்கையை நிரப்ப வேண்டும் என்பது நமக்கு தேவையில்லை.
தங்களைத் தவிர இங்கு வேறு யாரும் அறிவாளி இல்லை என்ற மனப்போக்கில் தான் தங்களுடைய பதிவுகள் ஒவ்வொரு முறையும் அமைகின்றன. எழுதும் போது மற்றவர்களின் மனது புண்படுமே என்று சிறிதும் சிந்திக்காமல் தாங்கள் எழுதுவீர்கள். நாங்கள் அமைதி காக்க வேண்டும் இதைத் தான் தாங்கள் எதிர்பார்க்கிறீர்கள். இதைச் சொன்னால் கூக்குரலிடுவது என்று சித்தரிக்கிறீர்கள்.
என்ன சொல்ல... இதையெல்லாம் தாங்கும் மனப்பக்குவத்தை நடிகர் திலகம் தான் தர வேண்டும்.
பாரத விலாஸ் - பொம்மையில் வெளி வந்த கட்டுரையின் நிழற்படம்
http://i1146.photobucket.com/albums/...psd0d8bb80.jpg
பக்கங்கள் தனித்தனியாக
http://i1146.photobucket.com/albums/...ps261376c9.jpg
http://i1146.photobucket.com/albums/...ps1b0072a6.jpg
பாரத விலாஸ் 55வது நாள் விளம்பரத்தின் நிழற்படம்
http://www.nadigarthilagam.com/paper...thavilas55.jpg
பாரத விலாஸ் 100வது நாள் விளம்பரத்தின் நிழற்படம் - உபயம் கொரட்டூர் கிரிஜா
http://www.nadigarthilagamsivaji.com...00days/036.jpg
ஒரு மினி ஆய்வு.
http://www.whatsonindia.com/WhatsOnT...atha_Vilas.jpg
http://img259.imageshack.us/img259/9...1973dvdrip.png
ஆதிராம் சார் அழகாகச் சொன்னது போல தேச ஒற்றுமையை வித்தியாசக் கோணத்தில் நகைச்சுவையோடு பறைசாற்றிய படம் இல்லை இல்லை பாடம்.
"சக்கை போடு போடு ராஜா"... தலைவரைப் பற்றி குறிப்பிட இதைவிட சிறந்த வரிகள் உண்டோ?.... சும்மா சக்கை போடு போட்டிருப்பார் இந்தப் படத்தில். காமெடி நடிப்பில் காந்தமாய் நம்மைக் கவருவார். அடிக்கடி உணர்ச்சிவசப்படும் சாதாரண இளைஞன் கோபாலின் அத்துணை பக்கங்களையும் அழகாய் மெருகேற்றி அற்புதமாய் பிரதிபலிக்க இந்த நடிப்பு ஆண்டவரை விட்டு விட்டு வேறு எவரை நினைத்துப் பார்க்க முடியும்?
http://padamhosting.com/out.php/i678...nshot00001.jpg
வியாபாரப் போட்டி பெண் விற்பனையாளர் விஜயாவிடம் இவர் பண்ணும் வீம்பு களேபரங்கள் குபீர் சிரிப்பு வெடிகள். வயிற்றுக்கு மேல் தூக்கி விடப்பட்ட தொள தொள பேண்ட்டும், Inn பண்ணின லூஸ் ஷர்ட்டுமாய் sales rep ஆக நீலுவிடம் அச்சு அசல் விற்பனைப் பிரதிநிதியாய் பிரமாதப் படுத்துவாரே. அது ஒண்ணு போதுமே ராஜா....
http://img542.imageshack.us/img542/3...1974dvdrip.png
கல்யாண நாள் முதலிரவன்று படபடக்கும் இதயத்துடன் தன்னையொத்த மனசாட்சி உருவத்துடன் மல்லுக்கட்டி அல்லாடுவது நடிப்பின் வேறொரு பரிமாணங்களின் உச்சங்களைத் தொட்ட விஷயம். அதே போல பாடகர் திலகம் நடிகர் திலகத்திற்கான வசனங்களுக்கு அப்படியே உயிர் கொடுத்து அவர் பின்னணிக் குரலில் பல உச்சங்களை அநாயாசமாகத் தொட்டு விட்டு வருவார்.( டேய்! என்னை நீ ரேக்காதே!) போ..ரா..ட்டம் என்று விட்டு விட்டு வார்த்தைகளை அவர் அடுக்கும் அழகை அள்ளி அள்ளிப் பருகிக்கொண்டே இருக்கலாமே! ஆக ஒரே உறையில் இரண்டு கத்திகள் வெற்றிகரமாக சாத்தியம்.
கணவன் மனைவி இருவரும் ஒருவருக்குத் தெரியாமல் வேலையை விட்டு விட்டு நான் முந்தி நீ முந்தி என்று தங்கள் வேலை நிறுத்தக் கதையை சொல்லி அதுவும் இவர் 'உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்' பாட்டு பாடுவது (வேலை போனதற்கு தூணில் சாய்ந்து கொண்டு ஒரு ஒய்யாரப் போஸ் கொடுப்பார் பாருங்கள்! அடா... அடா... அடா ) கலக்கல் காமெடி.
சிங் மேஜரை வீட்டைவிட்டுத் துரத்த வாசுவுடன் சேர்ந்து தெரியாத்தனமாய் பாத்ரூமில் மாட்டிக் கொண்டு திரு திருவென முழிக்கும் கட்டங்கள் கல கல...
வில்லன் ராஜபாண்டியன் விரித்த வலையில் (சி.ஐ.டி சகுந்தலா) விவரம் தெரியாது சிக்கி அதிலிருந்து மீள வழி தெரியாமல் இறுதியில் விலாஸின் விசுவாச நண்பர்கள் துணை கொண்டு அதை முறியடிப்பது ஆக்ஷன் கில்லி.
வாடகை இருந்த வீடு விலைக்கு விற்கப்படும் நிலையில் எதிர்பாராவிதமாக வாடகைக்கு இருந்த நண்பர்களே வீட்டைத் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளும் புத்திசாலித்தனமான சடுதி நேர்த்தி...
தமிழ்நாட்டு கோபால், பஞ்சாப் பல்தேவ் சிங், கேரளா முஸ்லீம் இப்ராகிம், ஆந்திர நரசிம்ம நாயுடு என்று கூட்டுக் குடும்பமாய் குட்டி இந்தியாவை பாரத விலாஸுக்குள் காண வைக்கும் நான்கு திசை நாயகர்கள்.
http://img26.imageshack.us/img26/896...1980dvdrip.png
வீடு தங்கள் வசமானதும் எடுக்கும் அட்டகாசமான அந்தத் தேசத் திருவிழா பாடல் அன்று முதல் இன்றுவரை ஏன் என்றும் 'இந்திய நாடு என் வீடு' என்று தேசமெங்கும் இடைவிடாது ஒலிக்கக் காரணமாகி விட்டதே! பார்ப்பவர், கேட்பவர் அனைவரையும் 'வந்தே மாதரம் என உச்சரிக்கச் செய்த வல்லமை பெற்ற பாடல் இடம் கொண்ட படமன்றோ! வானொலியிலும், தொலைக்காட்சிகளிலும், குடியரசுதின மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது எத்தனை முறை ஒ(ளி)லிபரப்பப்பட்டிருக்கும் என்று சொல்ல எவருக்கேனும் 'தில்' உண்டா!
இப்பாடல் நம் காதுகளில் ரீங்காரமிட்டு நுழையும் போது நம்மையறியாமல் நம் தேச இன உணர்வு நம் அங்கங்களினூடே ஊடுருவிப் பாய்வதை உணராதவர் எவரேனும் இருக்க முடியுமா?
'சுனோ சுனோ... பாய் சுனோ சுனோ' என்று ஆட்டமே தெரியாத மேஜரை ஜம்மென்று ஆட வைத்த துணிச்சல்...
அதே போல VKR யும் விட்டு வைக்காமல் கைலியின் இருபக்கங்களைப் பிடித்தவாறே 'படைச்சோன்...படைச்சோன்' என்று அவரையும் ஆட வைத்த பாங்கு...
ஜன கண மன நாட்டுப்பண்ணுக்கு இணையாக அனைவராலும் வரி விடாமல் மனனம் செய்யப்பட்ட இன்னொரு தேசிய கீதமன்றோ இந்த தேச பக்திப் பாடல்!
ஆந்திர ANR உடன்
http://i1087.photobucket.com/albums/..._000786929.jpg
மலையாள 'மது'வுடன்.
http://i1087.photobucket.com/albums/..._000801377.jpg
வடநாட்டு சஞ்சீவ் குமாருடன்
http://i1087.photobucket.com/albums/..._000819328.jpg
வெறும் படம்தானே என்று எண்ணிவிட முடியுமா? மலையாளத்திலிருந்து மதுவையும், ஆந்திராவிலிருந்து ANR யும், வடக்கிலிருந்து சஞ்சீவ் குமாரையும் தருவித்து இன, மொழி, கலாச்சார ஒற்றுமையை கண்டவர் அனைவரையும் செயல்பட வைத்து களிப்புற செய்த காவிய விலாஸ் அல்லவா!
வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல அடிக்கடி விலாஸ் நண்பர்களுக்கிடையே நடக்கும் சின்ன சின்ன சுவையான சச்சரவுகள், சண்டைகள் ரசிக்கும் படியாக...அதுவும் அருமையான தீர்வுகளுடன்.
நடுத்தர வயதில் வாழ்க்கையில் ஏற்படும் ஒரு பிடிப்பின்மை, விரக்தியை அப்படியே வெளிப்படுத்தி பின் மனையாளின் மதியூகத்திற்குக் கட்டுப்பட்டு கோபால் அடங்கும் அழகு.
(இந்த கோபாலாவது அடங்குகிறாரே!)
பின் புதிய தலைமுறையோடு நம் பழைய தலைமுறை....பிள்ளைகளுக்கு பொறுப்பான பெற்றோர்கள் ஸ்தானம்... படிக்க வைத்தல், பெரியவர்களுக்கே உரித்தான சந்தேகப் பார்வைகள், அதனால் நட்பிழப்பு, (ஒரு உயிரிழப்பும் கூட) கல்யாணப் பொறுப்பு, சீர் செனத்தி பேச்சு வார்த்தைகள், அதில் தோல்வி, அதனால் அடையும் அவமானங்கள், அவமானங்களைத் துடைத்தெறிந்து மானம் காக்கும் பாரத விலாஸின் நண்பர்களே இறுதியில் சொந்தபந்தங்களாகிவிடும் சொக்கத்தங்கக் காட்சிகள்...
பொதுவாக பிள்ளைகள் தவறு செய்து பெற்றோர் கண்டிப்பதைப் பார்த்திருப்ப்போம். இந்தப் படத்தில் பிள்ளைகள் தவறு செய்யவே மாட்டார்கள். பெற்றோர்கள்தான் அவசரப்பட்டு தவறிழைப்பார்கள். பிள்ளைகள் சொக்கத் தங்கங்களாகவே வடிவமைக்கப் பட்டிருப்பார்கள். இதுவும் பாராட்டுக்குரிய ஒரு புதுமையே!
http://i41.tinypic.com/24vp1dv.jpg
நட்சத்திரப் பட்டாளம்...ஒவ்வொருவரும் தத்தம் முத்திரையைப் பதித்திருக்கும் பாங்கு...தலைவர், விஜயா, மேஜர், தேவிகா, வாசு, ஆச்சி, VKR, சமீபத்தில் காலமான ராஜசுலோச்சனா, சகுந்தலா, ராமதாஸ், சிவாஜி நாடக மன்ற நடிகர் ராஜபாண்டியன், நீலு, சந்திரபாபு மற்றும் இளைய முகங்கள் ஜெயசித்ரா, சசிகுமார், ஜெயச்சந்திரன், ஜெயசுதா, சிவகுமார், குட்டிப் பாப்பா ஸ்ரீதேவி என்று மூச்சு வாங்கச் செய்யும் பெயர்ப்பட்டியல். ஆனால் அத்தனை பேரும் நிகழ்த்திக் காட்டியது 'அற்புதம்' என்ற அந்த ஒரு வார்த்தையை.
http://img15.imageshack.us/img15/5/b...1983dvdrip.png
இன்னொரு சாதனையைக் குறிப்பிட்டே தீர வேண்டும். M.R.R.வாசு. வீட்டை வாங்க பொருள் வசதியில்லாமல் விலகிக் கொள்ள முற்படும்போது நாதழுதழுக்க அவர் மற்றவர்களிடம் இருந்து அழுதபடியே வீடு வாங்கலிலிருந்து விலகிக் கொள்வதாக கூறுமிடம். மனிதர் தன் ஆழ்ந்த குணச்சித்திர நடிப்பால் பார்ப்பவர் கண்களில் அருவியைக் கொட்ட வைத்து விடுவார்! அப்படி ஓர் உன்னத நடிப்பைக் கொட்டியிருப்பார் அந்த மகா நடிகர்! (வாசுவா கொக்கா!... நான் என்னை சொல்லவில்லை)
M.விஸ்வநாதராயின் குளுமையான ஒளிப்பதிவு அருமையான ஒளிவிருந்து. பாரத விலாஸின் பிரம்மாண்டத்தை அற்புதமாக படம் பிடித்துக் காட்டியிருக்கும் கண்ணில் ஒற்றிக்கொள்ளத் தூண்டும் அசத்தல் தொழில் திறமை.
சீரான தெளிவான குழப்பாத திரைக்கதை, இயக்கம்.... ஒற்றுமையுணர்வை, தேசபக்தி உணர்வை அல்வாவில் கலந்து கொடுப்பது போல அவ்வளவு சுவையாக கொடுத்திருக்கும் நம் ACT. எவ்வளவு சிக்கலான முள்மேல் நடப்பது போன்ற கதையை வெகு இலகுவாகக் கையாளுவார்! அதனால்தான் தெய்வமகனின் மனம் கவர்ந்த இயக்குனர் ஆனாரோ! ஒரு காட்சி கூட சோடை போகாதே! அத்தனைக் காட்சிகளும் அடிமனதில் இன்றுவரை நங்கூரம் பாய்ச்சி நச்சென்று பதிந்து விட்டதே!
நாடு மறக்கவே முடியாத பலமொழிப் பாடல் கலவையை ஒரே குடுவையில் கொடுத்த விஸ்வநாதன் சார்...'இந்திய நாடு என் வீடு' என்று ஒருமித்தக் குரலில் அனைவரையும் கூவ வைத்த வாலி அவர்கள் இருவரும் இந்த உயிர்க்காவியத்தின் இரு நுரையீரல்கள் அல்லவா!
மின்மினிப் பூச்சிகளை ராட்சஷப் பாடகியின் குரலில் கேட்டு சொக்காத பேரும் உண்டோ! அது என்னவோ தெரியவில்லை.... ஈஸ்வரி, சி.ஐ.டி.சகுந்தலா, எம்.எஸ்.வி கூட்டணி சேர்ந்தாலே 'நானொரு காதல் சந்நியாசி' (தவப்புதல்வன்) அரிதிற்பெரும்பான்மை வெற்றிதான்.
மதுரை திருமாறனின் மண்மணக்கும் வசனங்கள். ("வியட்நாமில் இருக்கிற மக்கள் கஷ்டப் படுறாங்களேன்னு விருதுநகர்ல இருக்கிற ஜனங்க ஏன் வேதனைப்படணும்?) ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பத வசனம்.
இப்படி ஒரு தேச ஒற்றுமையை வலியுறுத்தும் படம் இனி வரும் காலங்களில் வருமா?!வரத்தான் முடியுமா?
படத்தின் வெற்றி... சொல்லித் தெரிய வேண்டுமா... பாடல் வரிகளைப் போல சக்கை போடு போட்ட படம். ஆதாரங்களை அள்ளி வழங்கியுள்ளார் ரசிக வேந்தர்.
படத்தின் வெற்றிக்கு இன்னொரு சிறு உதாரணம். இக்காவியத்தை எப்போது தொலைக்காட்சியில் போட்டாலும் அன்று என் மனைவி என்ன சொல்வார்கள் தெரியுமா?
"இன்றைக்கு ஓட்டலில் சாப்பாடு வாங்கி வந்து விடுங்கள்"
இந்த பிரத்தியோக ஸ்டில் எனக்காக. என் மனம் கொள்ளை கொண்ட 'மொரட்டுப் பயல்' ஆண்டனியின் ஆண்டவர் கோகுல்நாத் அதே பாதிரியாராக இங்கு கோபாலுடன்.
http://i1087.photobucket.com/albums/..._000764607.jpg
டியர் வாசு சார்
பாரத விலாஸுக்கே நம்மை அழைத்துச் சென்று விட்டீர்கள். அது என்னமோ தெரியவில்லை, வாசு என்றாலே சூப்பர் தான். தங்களையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்.
இந்தப் படத்திற்கு வாசு என இரு சிறப்புகள் உண்டு.
மெல்லிசை மன்னரின் இசையில் மலேசியா வாசுதேவன் பாடிய முதல் படம், பாடல் இந்திய நாடு என் வீடு.
அதே போல் மின்மினிப் பூச்சிகள் பாடலும் சூப்பர் [நீராட நேரம் நல்ல நேரம் பாடலைப் பாடியவர் வாணி ஜெயராம் அவர்கள்]
இந்தியர்களுக்கு ஜன கன மன அதி நாயக ஒரு தேசிய கீதம் என்றால் சிவாஜி ரசிகர்களுக்கு இரண்டு ... இந்திய நாடு என் வீடும் சேர்த்து.
பாடகர் திலகம் சௌந்தர்ராஜன் பிறந்த நாள் இன்று. அவர் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து நம் தமிழுக்கு ஒரு அடையாளமாய் திகழ இறைவன் அருள வேண்டும்.
http://www.kalyanamalaimagazine.com/...ndararajan.jpg
இந்நாளில் அவருக்காக நமது தேசிய கீதத்தைப் பார்ப்போமா ...
http://youtu.be/cngPzFh1cU8
பாராட்டிற்கும் திருத்ததிற்கும் மிக்க நன்றி ராகவேந்திரன் சார்! திருத்தி விட்டேன்.