http://i61.tinypic.com/otiwjr.jpg
Printable View
புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர்."ஆயிரத்தில் ஒருவன் " 52 வது நாள் விழா
வெற்றி கொண்டாட்டங்கள், சென்னை ஆல்பட் திரை அரங்கு வளாகத்தில் ஞாயிறு (04/05/2014) மாலை நடைபெற்றது.
1965 ஜூலை மாதம் வெளியாகி சென்னையில் 3 அரங்குகளில் 100 நாட்கள் ஓடிய வெற்றி திரைப்படம்.
50 ஆண்டுகள் நிறைவு அடையும் தருணத்தில் சென்னையில் சத்யம் சினிமாஸ், ஆல்பட் காம்ப்ளெக்ஸ் -2 அரங்குகளில் 52 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடுகிறது.
இந்த வெற்றி திருவிழாவில் அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள்
உற்சாகமாக பங்கேற்பு.
ஆல்பட் திரை அரங்கு வளாகம் முன்பு உள்ள நெடுஞ்சாலையில்
புரட்சி நடிகர்/பொன்மனச்செம்மல்/மக்கள் திலகம்/கலை வேந்தன்/நடிக
மன்னன்/கலை பேரரசர் , நிருத்திய சக்கரவர்த்தி, தமிழ் திரையுலகின்
நிரந்தர வசூல் மன்னன் எம்.ஜி.ஆர். அவர்களின் பேனர்கள், பதாகைகள்
பல் வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளால் வைக்கப்பட்டிருந்தன.
மாலை காட்சி ஆரம்பிக்கும் முன்பு எல்லா அமைப்பு மன்ற தோழர்களும் அவரவர் பங்கிற்கு பாலபிஷ்கம், மலர் பூஜை மற்றும்
சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள், ஆரத்தி எடுத்து வரவேற்பு
எடுத்து புரட்சி தலைவருக்கு புகழ் சேர்த்தனர்.
வெளியூர் நண்பர்கள், குறிப்பாக பெங்களூரில் இருந்து திரு.சி. எஸ்.குமார்., கோவை வி.கே. எம். மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
பின்னர ஆல்பட் அரங்கு முன்பாக சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக
பல்வேறு அமைப்புகள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி ஆரவாரம்
செய்தனர்.
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம், இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் ,
போன்ற அமைப்புகள் இனிப்புகள் வழங்கி ரசிகர்களை /பொதுமக்களை வரவேற்றனர்.
ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட வசனகர்த்தா திரு.ஆர். கே. சண்முகம். அவர்கள் வந்தவுடன் அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கமும், இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு இணைந்து வைத்திருந்த மக்கள் திலகம் பேனருக்கு மலர் தூவி
வணங்கி , புரட்சி தலைவர் தனக்கு வசனம் எழுத வாய்ப்பு தந்ததற்கு
தன குடும்பத்துடன் வந்து நன்றி செலுத்தினார்.
அத்துடன் அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்க உறுப்பினர்கள்
சிலருக்கு , புரட்சி தலைவர் பேனருக்கு முன்பாக நினைவு பரிசுகளை
தன தள்ளாத வயதிலும் உற்சாகமாக கலந்து கொண்டு வழங்கி
மகிழ்வித்தார்.
பின்னர் தன குடும்பத்தினருடன் ஆயிரத்தில் ஒருவன் திரைபடத்தை
முழுதும் பார்த்து ரசித்தார். முக்கியமான கட்டங்களிலும், புரட்சி தலைவர் பஞ்ச் வசனங்கள் பேசும் போதும், அரங்கில் எழுந்த
ஆரவாரத்தினையும் , கை தட்டலையும், படம் முடிந்து வெளி வரும்போது நம்மிடம் பகிர்ந்து கொண்டு பெருமிதம் அடைந்தபோது
அவரது கண்களில் நீர் காண முடிந்தது.
இந்த வெற்றி .விழாவில் நடிகைகள் ராஜஸ்ரீ, சி.ஐ .டி. சகுந்தலா,
ஏ.எல்.எஸ். ஜெயந்தி கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி விவரங்கள் மாலையில் தொடரும்............
ஆர். லோகநாதன்.
AAYIRATHIL ORUVAN - 50 DAYS CELEBRATION - URIMAIKURAL & PONMANACHEMMAL SRI MGR ASSOCIATION IMAGES SHALL BE POSTED TODAY EVENING. Thanks to Mr. BSR and other "Thozhamai" associations.
சிவாஜிகணேசனை வைத்துப் படம் எடுக்க வேண்டும் என்ற கோவைத்தம்பியின் விருப்பம், "மண்ணுக்குள் வைரம்'' படத்தின் மூலம் நிறைவேறியது.
கோவைத்தம்பி, எம்.ஜி.ஆரின் பரம பக்தர். எனினும், தனது மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில், சிவாஜிகணேசனை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று விரும்பினார்.
இந்த சமயத்தில், இளம் டைரக்டர் மனோஜ்குமாரிடம் ஒரு நல்ல கதை இருப்பதாகவும், அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கோவைத்தம்பியிடம் பாரதிராஜா சிபாரிசு செய்தார். அதைத்தொடர்ந்து, கோவைத்தம்பியை மனோஜ்குமார் சந்தித்து, "மண்ணுக்குள் வைரம்'' கதையைச் சொன்னார். கதை, கோவைத் தம்பிக்கு பிடித்துவிட்டது. "இது சிவாஜிக்கு ஏற்ற கதை'' என்று தீர்மானித்தார்.
அப்போது, ஒரு தெலுங்குப் படத்தில் நடிப்பதற்காக சிவாஜி ஐதராபாத்துக்கு சென்றிருந்தார். கோவைத்தம்பி, ஐதராபாத்துக்குச் சென்றார். படப்பிடிப்பில் இருந்த சிவாஜியை சந்தித்து `மண்ணுக்குள் வைரம்' கதையைச் சொன்னார்.
கதையைக் கேட்ட சிவாஜி, "கதை எனக்குப் பிடித்திருக்கிறது. மதர்லேண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படத்தில் நடிப்பதில் எனக்குப்பெருமைதான். ஆனால், என்னை நடிக்க வைப்பதாக அண்ணன் எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டீர்களா?'' என்று கேட்டார்.
"அண்ணனிடம் இதுபற்றி பேசி விட்டுத்தான் இங்கு வருகிறேன். என் படத்தில் நீங்கள் நடிப்பதில் அண்ணனுக்கு மகிழ்ச்சிதான்!'' என்று பதில் அளித்தார், கோவைத்தம்பி.
"அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி. உங்கள் படத்தில் நடிக்க எனக்கு சம்மதம்'' என்று சிவாஜிகணேசன் தெரிவித்தார்.
மனோஜ்குமார் டைரக்ஷனில், "மண்ணுக்குள் வைரம்'' படப்பிடிப்பு தொடங்கியது. சிவாஜிக்கு ஜோடியாக சுஜாதா நடித்தார். தேவேந்திரன் என்ற புதிய இசை அமைப்பாளர் இசை அமைத்தார்.
இதுபற்றி கோவைத்தம்பி கூறுகையில், "மண்ணுக்குள் வைரம் படம் 11-12-1986-ல் வெளிவந்து, 75 நாட்கள் ஓடியது. படம் நூறு நாட்கள் ஓடவில்லை என்றாலும், நடிகர் திலகத்தை வைத்து படம் எடுத்த மன நிறைவு இன்றளவும் எனக்கு இருக்கிறது'' என்றார்.
அடுத்து, "மங்கை ஒரு கங்கை'' என்ற படத்தை கோவைத்தம்பி எடுத்தார். இதில் சுரேஷ் -நதியா நடித்தார்கள்.
படத்தை மலையாள பட டைரக்டர் ஹரிஹரன் டைரக்ட் செய்தார். லட்சுமிகாந்த் -பியாரிலால் இசை அமைத்தனர்.
25-7-1987-ல் வெளியான இப்படம் 50 நாட்களே ஓடியது.
1987 டிசம்பர் 24-ந்தேதி எம்.ஜி.ஆர். மறைந்தபோது, கோவைத்தம்பி நிலைகுலைந்து போனார்.
அதுபற்றி அவர் கூறியதாவது:-
"எம்.ஜி.ஆர். மறைந்த அந்த நாள், என் வாழ்க்கையில் மிகத் துயரமான நாள். வானமே இடிந்து என் தலையில் விழுந்தது போல இருந்தது. நூறு குத்தீட்டிகளைக்கொண்டு, யாரோ என் இதயத்தைக் கிழிப்பது போன்ற ரண வேதனை ஏற்பட்டது. புகழின் உச்சியில் இருந்து, புழுதி மேட்டுக்குத் தள்ளப்பட்டு விட்டது போன்ற உணர்வு.
இந்தத் துயரில் இருந்து நான் விடுபட பல நாட்கள் ஆயின.
courtesy malaimalar
COURTESY - THIRU PAMMALAR MALAR MALAI -1
http://i61.tinypic.com/2ztgbjo.jpg
" இன்று போல் என்றும் வாழ்க " திரைப்பட வெளியீட்டினையொட்டியும், " திரை உலகம் " பத்திரிகையின் 16 ஆண்டு சேவையினையொட்டியும் சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்பட்டது.
ஆசிரியர் துரைராஜ் அவர்களை வாழ்த்தி நம் இதய தெய்வம் மக்கள் திலகம் வழங்கிய வாழ்த்து, நம் திரியின் அன்பர்கள் பார்வைக்கு
http://i61.tinypic.com/s5yf0l.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
1990 ம் ஆண்டு " இதயம் பேசுகிறது " பத்திரிகை எழுதிய தலையங்கம் : http://i57.tinypic.com/2u5ueeg.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ்!
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
1990ம் ஆண்டிற்கான "எம். ஜி. ஆர். விருது " பெற்ற நடிகர் ஜெமினிகணேசன் அவர்களும், நடிகை சௌகார் ஜானகி அவர்களும் அளித்த பேட்டி
http://i58.tinypic.com/ju7pdf.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
ஆதரவு பத்திரிகை தவிர வசூல் details வேறு எந்த பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது என்று கூறுவதோடு அல்லாமல் பதிவிட முடியுமா எஸ்வி சார் ?
அனைவருக்கும் தெரியும்...அனைவருக்கும் தெரியும் என்றால் ..என்போன்றவர்களுக்கும் அது இனியாவது தெரியட்டுமே...ஆகையால் பதிவிடுங்கள்..என்றொரு விண்ணப்பம் வைக்கிறேன்..!
ஆதாரபூர்வமாக வந்துள்ளது...என்றால்...நான் இதுவரை பார்க்கவில்லை. நீங்கள் குறிப்பிடுவது 100வது நாள் விளம்பரம் என்றால் அதை நான் பார்த்திருகிறேன். விஷயம் 100 நாள் பற்றியோ வெள்ளிவிழா பற்றியோ அல்ல !
வார்த்தைகளால் மட்டுமே விபரங்கள் பதிவிட்டதால் அது பற்றி எனக்கு தெரிந்த விபரங்கள் (என்னுடைய கருத்து ...நீங்கள் ஒத்துக்கொள்ளவேண்டும் என்று நான் கூறவில்லை எதிர்பார்க்கவும் இல்லை ) பகிர்ந்தேன்.
வசூல் விளம்பரம் நடுநிலை பத்திரிகையில் வந்திருந்தால் நீங்களும் தயவு செய்து பதிவிடுங்கள்....இது எனக்கு மட்டுமல்ல..அதை பார்காத பலருக்கும் தெரியவரும்..பிறகு சர்ச்சை இருக்காதல்லவா !
மனத்ருப்திக்காக நான் எழுதுவதில்லை..!
அதேபோல நீங்கள் உண்மைகளை / சந்தேகம் உள்ள கருத்துக்களை மட்டும் எப்போதும் நகைச்சுவையாக எடுத்துகொள்வது ....உண்மையிலயே இப்போது நகைச்சுவையாக உள்ளது.
சிரிக்கவைத்ததர்க்கு நன்றி !
If it is not acceptable to you or anyone else, kindly ignore as usual !
RKS...!
http://i59.tinypic.com/2qdoeix.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்