ரெண்டு லேடீஸ் என்பதால் ஒரே பதிவு ரெண்டாயிடுச்சா மகனே! அவ்வளவு வெறியா?
Printable View
ரெண்டு லேடீஸ் என்பதால் ஒரே பதிவு ரெண்டாயிடுச்சா மகனே! அவ்வளவு வெறியா?
சக்கரவாகம்.(கர்நாடக பெயர்)/ஆஹிர் பைரவ் (ஹிந்துஸ்தானி)
தமிழ் இசை சக்ரவர்த்தி சீர்காழி அவர்களின் மறக்க முடியாத ,ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் ஒரு உலக தமிழ் நடிகன் மரண மூச்சை நினைவுறுத்தி தொண்டையில் முள் உருள செய்யும் அதிசய பாடல்.ஆரம்பம் எங்கேயோ பாட்டை கொண்டு நிறுத்தும். சரணம் சரஸாங்கி சாயல் என்று டி.கே.ராமமூர்த்தி விளக்கினார்.அவர் போட்ட பாடலல்லவா? அந்த அபிமானம். (குறுக்கே ஒரு இசை அரசியல் வந்து நாம ஏம்பா பேசி போரடிக்கணும் ,ஜனங்க பாட்டை கேட்கட்டும் என்று வெட்ட கண்ணதாசன் விழாவில் அந்த அடக்க திலகத்தின் சாயம் வெளுத்தது) "உள்ளத்தில் நல்ல உள்ளம் " விட்டு கொடுத்து ஒதுங்கி நின்றது.(சொந்தமில்லை என்பதாலோ என்னவோ இந்த காவியம் மறு வெளியீட்டில் சக்கை போடு போட்டு விழா எடுக்கும் போது கேரளா வல்லிசை வேந்தர் ஒதுங்கியே நின்றார்.)
சக்கரவாகம் ,ஆரம்பமே களை கட்டும் ரக ராகம்.உருக்கத்தை வார்த்து எடுத்து உருக வைத்து உலுக்கும்.இது ஒரு மேளகர்த்தா சம்பூரணமே .
என்னை கவர்ந்த மற்றவை.
மேகங்கள் என்னை தொட்டு போனதுண்டு-அமர்க்களம்.
கற்பனைக்கு மேனி தந்து காற்சலங்கை-பாட்டும் பரதமும்.
பிச்சாண்டி தனை கண்டு- கங்கா கௌரி.
இன்றைய ஸ்பெஷல் (8)
மீண்டும் ஒரு அற்புதமான பாடல் (சற்றே வித்தியாசமான நடையில்)
'சமையல்காரன்' படத்தில். இயக்கம் திருமலை மகாலிங்கம்.
http://shakthi.fm/album-covers/ta/a89d6d0a/cover_m.jpg
மு.க.முத்து, 'வெண்ணிற ஆடை' நிர்மலா ஜோடி.
டி.எம்.எஸ், சுசீலா நடத்தும் ராஜாங்க அராஜகம்.
இப்பாடலின் சிறப்புக்கு இன்னொரு காரணம் 'வெண்ணிற ஆடை' நிர்மலாவின் அழகான, அருமையான முகபாவங்கள், அங்க அசைவுகள்.
'வெண்ணிற ஆடை' படத்தில் 'கழுக் மொழு' க்கென்று மெழுகு பொம்மை போல் ஸ்ரீகாந்துடன் 'சித்திரமே நில்லடி'யிலும், 'ஒருவன் காதலனி'லும் 'முழி முழி' என்று முழித்த நிர்மலா இப்பாடலில் நம் உள்ளங்களை தன் அற்புதமான மூவ்ஸ்களால் திருடிக் கொள்வார். ரொம்ப ஸ்லிம்மாக இருப்பார். தலையில் சூடிக் கொண்டிருக்கும் மல்லிகைப் பூச்சரம் தோள்களின் வழியே மார்பில் தவழ்ந்து மணக்கும் அழகோ அம்சமான அம்சம். பிரில் வைத்த ஜாக்கெட் வேறு ஜம்மென்று ஜமாய்க்கும்.
மு.க.முத்து அப்படியே எம்ஜியாரின் கார்பன் காப்பி என்று அவருக்கே தெரியும். இப்பாடலில் மு.க.முத்து திருதிருவென்று விழிப்பார்.
ஜெயிலில் இருந்து வந்த எம்.ஆர்.ராதா நம்மை 'உச்' கொட்ட வைப்பார். பாவம். பரிதாபம்.
இனி பாடல்
பாடல் முழுதும் 'வெண்ணிற ஆடை' பெண்ணுக்கு சமர்ப்பணம்.
நிர்மலா: உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ?
அ ... உள்ளத்தின் ஆசையை அறிவிக்கவோ?
சொல்லவோ! என்னென்று சொல்லவோ!.... ஓ...ஓ......ஓஓ
பல்லாக்கு என் மேனி
பட்டத்து ராஜா நீ
பக்கம் வந்தாடவோ!
ம்...
பொன் மஞ்சம் என் நெஞ்சம் (அடடா! இரண்டே வார்த்தைகளில் ஒரு பெண்ணின் முக்கால்வாசி அழகும் அழகாக விளக்கப்பட்டு விட்டதே!)
பூவண்ணம் தேன் கிண்ணம்
சொந்தம் கொண்டாடவோ!
வா! வா! (செல்ல அழைப்பு)
உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ?
அ...உள்ளத்தின் ஆசையை அறிவிக்கவோ?
சொல்லவோ! என்னென்று சொல்லவோ ஓ...ஓ......ஓஓஓ
(கொடி இடை விந்தைகள் புரியும்)
நிர்மலா: என் வாழ்வுக்கு நீதான் வெண்ணிலவோ?
முத்து: வெண்ணிலவுக்கு வானம் தான் உறவு
(காதலன் கொஞ்சம் பிகு பண்ணிக் கொள்கிறான். 'நீ இல்லம்மா என் உறவு...)
நிர்மலா: இந்தத் தாமரைப் பூ வந்து மலராதோ!
(என்ன அழகாக கைகளைத் தாமரைப் பூப்போல குவிக்கிறார் நிர்மலா!)
முத்து: அந்த சூரியன் சுடர் வந்து தழுவாதோ (இங்கேயும் சூரியனா!) (அப்படியே எம்ஜியார் கைகள் )
நிர்மலா: உடல் கொதிக்குது குளிர்ந்திட வழி சொல்லு
(பெண்ணின் தாபத்தை, தாகத்தை எப்படி எழுதியிருக்கிறார் பாடலாசிரியர்!)
முத்து: குளிர் நதியில் போய்க் கொஞ்சம் நீராடு (வழியும் சொல்லியாயிற்று)
நிர்மலா: நீ ஆசையில்லாத ஆண்மகனோ?
(அடப் போடா! இவ்வளவு கிட்ட கிட்ட நெருங்கி வருகிறேன். ஆத்துல போய்க் குளிக்க சொல்றியே! புரியலையா உனக்கு? மக்கு!மக்கு! கொஞ்சங்கூட 'இது' இல்லாம நீ பாட்டுக்கு ஓட்றியே! நீயெல்லாம் ஒரு ஆண் பிள்ளையா?) நிர்மலா சற்றே கோபத்துடன் முறைத்து கொஞ்சம் முரட்டுத்தனமாக முத்துவின் தோள்களை கைகளால் பற்றுவார்.
முத்து: உன் ஆசைக்குக் காரணம் நான்தானோ!
முத்து: உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ?
அ...உள்ளத்தின் ஆசையை அறிவிக்கவோ?
சொல்லவோ! என்னென்று சொல்லவோ ஓ...ஓ......ஓஓஓ
முத்து: மாணிக்கம் வைடூர்யம்
ஆனிப்பொன் எல்லாம்
உன் அங்கம் என்றானதோ
பவழத்தின் பெட்டிக்குள்
தவழும் நல்முத்துக்கள் பற்கள்
என்றானதோ!
(கே.ஆர்.விஜயா கோவிச்சுக்கப் போறார்)
(வரும் இடையிசையில் நிர்மலா தோள்களைக் குலுக்கியபடி வலதும் இடதுமாக ஆடியபடி ஓடி வரும் அழகைக் காணக் கண்கோடி வேண்டும்)
முத்து: இந்த மைவிழி பாண்டியன் மீன்கொடியோ? (மீன் போன்ற கண்களைக் கொண்டவளாம்)
நிர்மலா: இளமீன் வந்து முகத்தினில் மிதப்பதுண்டோ! (போய்யா! உன் மீனை நீயே கட்டிக்கிட்டு அழுவு! என் கண்ணிரண்டுக்கு ஈடாகுமா உன் மீனு!)
(நிர்மலாவின் கண்கள் மீன்களைவிட ஜாலம் புரிவதை பார்த்துதான் நீங்கள் உணரவேண்டும். என்ன சுழல் சுழலுது இரு விழிகளும்! என்ன அழகான தலையாட்டல்!)
முத்து: இந்தப் புருவங்கள் சேரனின் வில்கொடியோ? (இதற்கு விளக்கம் தேவை இல்லை)
நிர்மலா: இதை வீர்கள் கைகளில் வளைப்பதுண்டோ! (வில்லை வளைக்கலாம் மகனே! என்னை நீ வளைக்க முடியுமா?)
(இந்தக் கொடியிடையாள் காதலன் கைகளில் வில்லாக வளைவாள்.
அதுமட்டுமல்லவே! இந்த 'வெண்ணிற ஆடை' அழகியின் இடது புருவம் அர்ச்சுனன் வில் போலே என்னமாய் வளைகின்றது! ஏறி ஏறி இறங்குகின்றது!)
முத்து: உன் எழில் நடை சோழனின் புலிக்கொடியோ?
(உடனே இந்த அம்மா... இல்லை இல்லை... இந்தக் கன்னி கொடியிடை அசைத்து அசைத்து நடந்தபடியே... என்ன ஒரு சுந்தர எழில் நடை! )
நிர்மலா: என் இனத்தவள் புலியையும் விரட்டலையோ?
( நீ என்னப்பா புலிக்கொடியைப் பற்றி என்னிடம் சொல்றது? என் பாட்டி முப்பாட்டி எல்லாம் உங்க தாத்தனுக்கு முன்னாடியே புலியை முறத்தாலே அடிச்சி விரட்டிட்டாங்கப்பா. ரொம்பத் துள்ளாதே!)
இப்போதும் இந்த 'வெகுளிப்பெண்' கைகள் அபிநயத்தில் 'இப்படியும் ஒரு பெண்' ணா? என்று ஆச்சர்யப்பட வைப்பார். 'அவளுக்கு நிகர் அவளே'!
முத்து: நீ ஆசை இல்லாத பெண்மகளோ! (இப்போது காதலன் டெர்ம் போல் இருக்கிறது)
அதற்கு யோசிக்காமல் இந்த அழகு தேவதையிடமிருந்து வரும் பதிலில் கொப்பளிக்கும் பெருமையையும், கர்வத்தையும் பாருங்கள்
நிர்மலா: உன் ஆசைக்குக் காரணம் என் அழகோ!
(நிர்மலா முகத்தில் தன் அழகைப் பற்றிய, அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாத, என்ன ஒரு அலட்சிய கர்வம்! அதுவும் வாய்களை சற்றே குவித்து வாயசைப்பது வாட்டி எடுக்கிறது நம்மை)
இருவரும் சேர்ந்து: உனக்கொரு விஷயம் தெரிவிக்கவோ
உள்ளத்தின் ஆசையை அறிவிக்கவோ
சொல்லவோ! என்னென்று சொல்லவோ ஓ...ஓ......ஓஓ
முழுக்க முழுக்க நிர்மலா ஆக்கிரமிப்பு செய்த பாடல். என்னை நிர்மூலமாக்கிய பாடல்.
என் நெஞ்சம் மகிழ்ந்து பல நூறு தடவைகள் நான் கேட்டுக் கொண்டிருக்கின்ற, பார்த்துக் கொண்டிருக்கிற அட்டகாசமான பாடல். மெல்லிசை மன்னரைப் பற்றி ஒன்றுமே சொல்வதற்கில்லை. மெய்யாலுமே மெய் மறக்கச் செய்து விட்டார் நம்மை இந்தப் பாட்டிலே!
http://www.youtube.com/watch?v=Cly0B...yer_detailpage
// .(சொந்தமில்லை என்பதாலோ என்னவோ இந்த காவியம் மறு வெளியீட்டில் சக்கை போடு போட்டு விழா எடுக்கும் போது கேரளா வல்லிசை வேந்தர் ஒதுங்கியே நின்றார்.) //
ஒதுங்கவில்லை.
150-வது நாள் ஷீல்டுடன் கம்பீரமாக....
வாசு சார்
ஒரு பாடலை இப்படி கூட ரசிக்க முடியுமா ரசித்து விளக்க முடியுமா
விளக்கி எங்களுக்கு புரிய வைக்கவும் முடியுமா
ஒரு புறம் ஸ்ரிங்காரம் மறு புறம் அசட்டுத்தனம்
என்னே உன் வர்ணிப்பு
பரிமெலழகர் எல்லாம் கற்று கொள்ள வேண்டிய விளக்கவுரை
VASU SIR
AGAIN ISAI ARAKKI
http://youtu.be/31PghS_OwMQ
சின்னக் கண்ணன் சார்
எங்கள் செல்லக்கண்ணன் நீங்கள். நீங்கள் பல நல்ல பாடல்கள் அடங்கிய தொகுப்பை (பாட்டுப் பேச வா) அருமைத் தமிழில் பதித்து (இடையிடையே தங்களுக்கே உரிய குறும்பு கலந்த நகைச்சுவையோடு) ரசிக்கத் தக்க வகையில் தொடராகத் தருவதற்கு என் அன்புப் பாராட்டுக்கள்.
வினோத் சார்,
'திக்குத் தெரியாத காட்டில் ஆவண விளம்பரம் படு தெளிவு. சூப்பர்.
கார்த்திக் சார்,
'ஜெயந்தியின் கணவர்கள்' பற்றி ஒரு தொலைக்காட்சி டிராமாவே தயாரிக்கலாம் போல் இருக்கிறதே!
எப்படி இம்மாதிரி விஷயங்களை ஞாபகம் வைத்து இருக்கிறீர்களோ!
வெரி ஷார்ப். உங்கள் அசாத்திய ஞாபக சக்திக்கு என் நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்.