அரசிளங்குமரி..செய்திகள்.. http://i57.tinypic.com/2eas9kz.jpg
Printable View
அரசிளங்குமரி..செய்திகள்.. http://i57.tinypic.com/2eas9kz.jpg
படமும் பாடலும்.. http://i58.tinypic.com/2mhc6ft.jpg http://i59.tinypic.com/v7dpn8.jpg
பெரியார் , காமாராஜர் , அண்ணா - இவர்களின் நூற்றாண்டு விழாவினை பார்த்து மகிழ்ந்த நமக்குநம் இதய தெய்வம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை காணும் பொன்னான அரிய வாய்ப்பு கிடைக்க உள்ளது. இதுவரை அதிமுக இயக்கமோ ,அதில் அங்கம் வகிக்கும் அனைத்துலக எம்ஜிஆர் மன்றமோ எவ்வித ஏற்பாடுகளை செய்ய முன் வரவில்லை .
17.1.2016ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு துவக்க விழா நடக்க உள்ளது . இன்னும் ஓராண்டுகாலம் இருந்தாலும் நூற்றாண்டுவிழா குழுக்கள் அமைத்து விரைந்து செயல் படவேண்டும் என்பதுஎன் தாழ்மையான கருத்து .
[/b][/size]
‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படம் சூட்டிங் நடந்துகொண்டிருந்த சமயம். ஒரு சூழலுக்கான பாடலை எழுத எம்.எஸ்..வியோடு உட்கார்ந்தார். ’தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை’ என்ற அந்த பாடல் தயாராவதற்கு முன் பல பல்லவிகள் பல சரணங்கள் எழுதியும் எம்.ஜி.ஆருக்கு எதுவுமே திருப்தியாக இல்லை. “இது கவித்துவமா இருக்கு. ஆனா நான் நெனச்சது வரலை.” “இது நல்லாஇருக்கு ஆனா வன்முறையாக இருக்கு.” என்று ஒவ்வொன்றையும் மறுத்துகொண்டேயிருந்தார். அவர் அப்படி மறுத்ததற்கு காரணம் இருந்தது. அது நெருக்கடி நிலை அமலில் இருந்த காலம். சண்டைககாட்சியில் வாளை காண்பிக்கலாம். ஆனால் குத்துவதை காட்டக்கூடாது. அடிக்கலாம் ஆனால் ரத்தம் வருவதை காட்டக்கூடது. இப்படி திரைத்துறைக்கு தணிக்கைக்குழு கடுமையான விதிமுறைகளை போட்டிருந்தது. அதனால்தான் எம்.ஜி.ஆர் அப்படி கவனமாக இருந்தார்.
முத்துலிங்கமும் எம்.எஸ்.வியும் உட்கார்ந்து வேலை பார்த்து ஒருமாதம் ஓடி விட்டது. பாடல் பூர்த்தியாகவில்லை. எம்.ஜி.ஆர் காத்திருந்து விட்டு தன் குழுவினருடன் மைசூர் அரண்மனையில் படப்பிடிப்பிற்கு சென்று விட்டார். இங்கு டியூனும், பல்லவிகளும் மாற்றி மாற்றி போட்டு பார்த்தும் எதுவும் எம்.ஜி.ஆர். விரும்பியது போல் இல்லை. இப்படியே இரண்டு மாதங்கள் ஓடி விட்டது கடைசியாக ஒரு ஐந்து டியூன்களை போட்டு அதற்கு கவிஞரை பாடல்கள் எழுத வைத்து, “நீங்க மைசூருக்கு கொண்டுபோய் காட்டுங்க. அவர் செலக்ட் பன்ணின பாடலை நாம் பதிவு செய்திடலாம்” என்று சொல்லி கவிஞரை மைசூருக்கு அனுப்புகிறார்.
இதில் கவிஞருக்கு உள்ள நெருக்கடி என்னவென்றால் மைசூர் அறண்மனை அப்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. எம்.ஜி.ஆருக்காக இரண்டு மாதங்கள் அனுமதியளித்திருந்தார்கள். அந்த காலகெடு முடிய இன்னும் இரண்டு நாட்கள்தானிருந்தது. இன்னும் பாட்டை எம்.ஜி.ஆர். தேர்வு செய்யவில்லை. அதனால் உள்ளுக்குள் ஒரு பதட்டத்தோடு மைசூருக்கு டியூனோடு விமானத்தில் ஏறி உட்கார்ந்தார். (இது அவருக்கு இரண்டாவது விமான பயணம்) நல்லவேளை கொண்டு போன ஐந்து பாடல்களும் எம்.ஜி.ஆருக்கு பிடித்திருந்தது. அதுவும் அந்த பாடலில் வரும் ‘வீரமுண்டு வெற்றியுண்டு விளையாட களமுண்டு’ என்ற வரிகள் அவரை ரொம்பவே கவர்ந்தன. மூன்று பல்லவிகளையும் ஒரே பாடலாக மாற்றச் சொல்லி விட்டார். எப்படியோ பாட்டு முடிந்து விட்டதென்று கவிஞர் நிம்மதி பெருமூச்சு விட, அதற்கும் தடை போட்டது போல் அடுத்த யோசனையை சொன்னார் எம்.ஜி.ஆர். பாடலில்,
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடைமைச் சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
என்று வரும் இடத்தில் “நமது கொடி என்பதற்கு பதில் வேறு சொல்லை போடுங்கள்.” என்று ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர். கவிஞர் விடாமல், ”ஏன்” என்க, “சென்சார் அனுமதிக்க மாட்டார்கள்” என்றார் பளிச்சென்று, உடனே கவிஞரும் ”பாண்டிய நாட்டு மக்களிடையே பாடுவதால் மகரக் கொடி என்று மாற்றலாம். ஆனால் நீங்கள் நமது கொடி என்று பாடினால்தான் ரசிகர்களிடையே ஆரவாரம் இருக்கும்.” என்றார். எம்.ஜி.ஆரும் சரியென்று ஒப்புக்கொண்டு “நமது கொடி, மகரக்கொடி இரண்டு சொல்லையும் பாடுவது போல் தனிதனியாக படமெடுத்து வைத்துக்கொள்ளலாம். நமது கொடி காட்சியை சென்சார் வெட்டினால் மகரக் கொடி காட்சியை வைத்துக்கொள்ளலாம்.” என்று சொல்லி அதன் படியே முடிவானது. மைசூரிலிருந்து கவிஞர் சென்னைக்கு பறக்கிறார். டைரக்டர் கே.சங்கரிடம் விஷயத்தை சொல்கிறார். படப்பிடிப்பு நடக்கிறது.
எம்.ஜி.ஆர். மைசூரிலிருந்து வருகிறார். பாடல் காட்சி அவருக்கு திரையிட்டு காண்பிக்கப்படுகிறது. கோபம் வருகிறது அவருக்கு. முத்துலிங்கத்தை என்னிடம் பேசச்சொல்லுங்கள் என்று சொல்கிறார். போனில் வருகிறார் கவிஞர். ”ஏன் நான் சொன்னதுபோல இரண்டு காட்சிகளை எடுக்கல.” என்கிறார். “சென்சார் அதை வெட்ட மாட்டார்கள் தலைவரே” என்றார் கவிஞர். “எனக்கு தெரியுமா உனக்கு தெரியுமா” என்கிறார் கோபத்தில். உடனே கவிஞர்,”மைசூரிலிருந்து நான் வந்ததும் சென்சார் அதிகாரியை பார்த்து ‘எம்.ஜி.ஆர். நமது கொடி பறக்க வேண்டும் என்பது போல் காட்சி எடுக்கப்போகிறார். உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருந்தால் சொல்லுங்க. மாற்றி விடுகிறோம். ஒரு பாடலாசிரியன் என்ற முறையில் இதை கேட்கிறேன்னு கேட்டேன். அவர்கள் எம்.ஜி.ஆர் தானே பாடுறார். எங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னு சொல்லிட்டாங்க தலைவரே. அதனால்தான் இரண்டு விதமாக எடுக்கலை.” என்று சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர். போனை வைத்து விட்டார்.
மறுநாள் இயக்குனர் கே.சங்கர் முத்துலிங்கத்திடம், “நேற்று தலைவர் உங்களை பற்றிதான் பேசிக்கொண்டிருந்தார். “எதுக்காக நான் முத்துலிங்கத்தை சப்போர்ட் பண்றேன்னு இப்ப தெரியுதா. வேறொரு கவிஞரா இருந்தா எனக்காக சென்சார் அதிகாரியை சந்திச்சு பேசியிருப்பாங்களா. அதுதான் முத்துலிங்கம்.’னு பெருமையா பேசினார்”னு கவிஞரிடம் சொல்லியிருக்கிறார். கவிஞரும் மெல்லிய புன்னகையோடு சிரித்துக்கொண்டார். இப்படி இந்த தலைமுறை மறக்கக்கூடாத மாமனிதர் கவிஞர் முத்துலிங்கம்.
Courtesy- net
'அதோ அந்தப் பறவைபோல் வாழவேண்டும்'
எம்ஜிஆர் , ஜெயலலிதா நடிப்பில், பி.ஆர்.பந்துலு தயாரிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வரும் 'அதோ அந்தப் பறவை போல' பாடல் மிகவும் புகழ்பெற்ற திரைப்படப் பாடல்களிலொன்று. கண்ணதாசன் எழுதிய இப்பாடல் விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள் இசையமைப்பில் டி.எம்.செளந்தரராஜன் மற்றும் குழுவினர் பாடிய பாடல்.
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதமயப்பட்ட காலத்தில் போராளிகள் பலரின் பிரியமான பாடல்களிலொன்றாக விளங்கிய பாடல்களிலொன்று. நீண்ட காலம் இலங்கை வானொலியில் இந்தப் பாடல் ஒலிபரப்பாமல் இருந்ததற்குக் காரணம் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் பாடலென்பதால்தான்.
எம்ஜிஆர் , ஜெயலலிதா நடிப்பில், பி.ஆர்.பந்துலு தயாரிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வரும் 'அதோ அந்தப் பறவை போல' பாடல் மிகவும் புகழ்பெற்ற திரைப்படப் பாடல்களிலொன்று. கண்ணதாசன் எழுதிய இப்பாடல் விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள் இசையமைப்பில் டி.எம்.செளந்தரராஜன் மற்றும் குழுவினர் பாடிய பாடல். ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதமயப்பட்ட காலத்தில் போராளிகள் பலரின் பிரியமான பாடல்களிலொன்றாக விளங்கிய பாடல்களிலொன்று.
நீண்ட காலம் இலங்கை வானொலியில் இந்தப் பாடல் ஒலிபரப்பாமல் இருந்ததற்குக் காரணம் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் பாடலென்பதால்தான். இந்தப் பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. முக்கிய காரணம் பாடலின் வரிகளில் சில. அடுத்தது எம்ஜிஆரின் துடிப்பான அனைவரையும் கவரும் உற்சாகமூட்டும் நடிப்பு.
திரைப்படத்தில் அடிமைகளின் தலைவனாக வரும் எம்ஜிஆர் அனைவருக்கும் விடுதலையில் நம்பிக்கை ஊட்டும் வகையில் பாடுவதாக வரும் வரிகள் கொடிய அடக்கு ஒடுக்குமுறைகளுக்குள் வாழும் மக்களுக்கு எப்பொழுதும் நம்பிக்கையினையும், ஆறுதலையும் தருவன. 'விண்ணில் எவ்வளவு ஆனந்தமாக, சுதந்திரமாகப் பறவை பறக்கிறது. அதனைப் போல் சுதந்திரமாகச் சிறகடித்துப் பறக்குமொரு வாழ்க்கை வேண்டும்.
கடலின் நீரலைகள்தாம் எவ்வளவு சந்தோசமாக, எந்தவித அச்சமுமற்று ஆடி, ஓடி வருகின்றன. இந்த அலைகளைப் போல் அடிமைத்தளைகளுக்குள் வாழும் நாமும் ஆனந்தமாக ஆடும் வாழ்க்கை வேண்டும்' என்று தன்னை நம்பியிருக்கும் மக்களுக்கு நம்பிக்கையினையும், அடைய வேண்டிய விடுதலை என்னும் இலட்சியத்தையும் எடுத்துரைக்கின்றான் தலைவன்.
இந்த வானில், இந்த மண்ணில் நாம் பாடுவதும் உரிமைக்கீதமாகவே இருக்கட்டுமென்கின்றான். தலைவனது நம்பிக்கையூட்டும் கூற்றினால் நம்பிக்கைகொண்ட ஏனைய அடிமைகளும் அவனுடன் சேர்ந்து விடுதலைக் கனவுடன் ஆடிப்பாடுகின்றார்கள்.
தலைவன் தொடர்கின்றான். இங்கு வீசும் காற்று நம்மை அடிமை என்று ஒதுக்குவதில்லை. கடல் நீரும் அடிமையென்று எம்மைச் சுடுவதில்லை. நாம் அடிமைகள் என்று காலம் நம்மை விட்டு விலகி நடப்பதில்லை. காதல், பாசம், தாய்மை போன்ற பந்தபாசங்களும் நம்மை மறப்பதில்லை. எம்மை அவை சுதந்திரம் மிக்க மனிதர்களாகவே நடாத்துக்கின்றன.
தாயில்லாமல் யாரும் பிறப்பதில்லை. சொல், மொழியில்லாமல் யாரும் பேசுவதில்லை. பசியில்லாமல் யாரும் வாழுவதில்லை. அதுபோல் விடுதலைக்காகப் போராடும் மக்கள் வேறு வேறு பாதைகளில் செல்வதில்லை. இவ்விதமாகத் தொடர்ந்தும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் தலைவன் அடிமைச் சூழலில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் அனைவரும் அச்சமின்றி ஆடிப்பாடிட, சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு விடுதலை வேண்டும்.
வானம் ஒன்று. இந்த மண்ணும் ஒன்று. அதுபோல் விடுதலைக்காக நாம் பாடும் கீதமும் ஒன்றாகவேயிருக்கட்டும். அது விடுதலைக்கான உரிமைக் கீதமாகவேயிருக்கட்டும் என்று தொடர்ந்தும் நம்பிக்கையூட்டிப் பாடுகின்றான்.
தலைவனின் நம்பிக்கையும், உற்சாகமும், ஆட்டமும் அவனைச் சுற்றியிருந்த அனைவரையும் பற்றிக்கொள்கிறது. எல்லோரும் அவனுடன் சேர்ந்து விடுதலைக்கனவுடன், நம்பிக்கையுடன், தம் மண்ணில் வாழும் மக்களின் அடிமை வாழ்வை உடைத்தெறிவதற்காக 'அதோ அந்தப் பறவை போல் வாழ வேண்டும்' என்று உரிமைக் கீதம் இசைக்க ஆரம்பிக்கின்றார்கள்.
எம்ஜிஆரின் உற்சாகமும், மகிழ்ச்சியும் ததும்பும் நடிப்பும் அவரது ஆடை அலங்காரங்களும். இந்தப் பாடலில் எனக்குப் பிடித்த ஏனைய விடயங்கள். சிறுவயதில் நெஞ்சில் வாழ்வின் சுமைகளற்று உல்லாசமாகத் திரிவோம். அந்தச் சமயங்களில் உள்ளங்களின் ஆழங்களில் பதிந்துவிடும் எவையும் பின்னர் அழிவதில்லை. அழியாத கோலங்களாக மானுட வாழ்வுடன் நிலைத்து நின்றுவிடுகின்றன. அவ்விதம் அழியாத கோலங்களாக பதிந்துவிட்ட தருணங்களிலொன்றுதான் இந்தப் பாடலும், திரைப்படமும். எத்தனைதரம் கேட்டாலும் சலிக்காத, மனதுக்கு இன்பமூட்டும் பாடல்களிலொன்று கவிஞர் கண்ணதாசனின் 'அதோ அந்தப் பறவை போல் வாழ வேண்டும்.'
'சிட்டுக்குருவியைப் போல் சிறகடிக்க ஆசைப்பட்டான் மகாகவி பாரதி. கவிஞர் கண்ணதாசனோ 'அடிமைத்தளையறுத்து, அச்சமற்ற ஆடிப்பாடி அதோ அந்தப் பறவைபோல் வாழ வேண்டுமென்று' விடுதலை நாடி உரிமைக்கீதமிசைக்கின்றார். இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் எமதுள்ளமும் விண்ணில் பறக்கும் சுதந்திரப்புள்ளாகச் சிறகடிக்க ஆரம்பித்துவிடுகின்றது.
courtesy - giridharan - net
http://i61.tinypic.com/vcrmyo.jpg
சென்னை நகரில் மிகவும் பிரபலமான் திரை அரங்குகளில் ஒன்றான ''காசினோ ''வில் பல தமிழ் படங்கள் 100 நாட்களும் , வெள்ளி விழாவும் கண்டு சாதனைகள் புரிந்துள்ளது .இயக்குனர் ஸ்ரீதரின்
பெரும்பாலான படங்கள் இந்த அரங்கில் நன்கு ஓடியுள்ளது .
1965 பொங்கல் அன்று வெளிவந்த ''எங்க வீட்டு பிள்ளை '' இவ்வரங்கில் 30 வாரங்கள் ஓடி இமாலய சாதனைகள் புரிந்தது . 1966 பொங்கல் அன்று வெளிவந்த ''அன்பே வா'' 150 நாட்கள் ஓடி சாதனைhttp://i58.tinypic.com/25z174k.jpg
புரிந்தது .http://i125.photobucket.com/albums/p...pillai_175.jpg
இன்றும் இந்த திரை அரங்கு இயங்கி கொண்டிருப்பது மகிழ்ச்சியே .
மக்கள்திலகம் புகழ் பாடுவதில் உங்களோடு இணைவதில் பெறுமை அடைகிறேன்