http://i62.tinypic.com/2jdrx2h.jpg
Printable View
புரட்சித்தலைவரின் உண்மை விசுவாசியும், இதய தெய்வத்தின் மெய்க்காப்பாளருமான திரு. சங்கர் அவர்களின் மறைவிற்கு மக்கள் திலகத்தின் பக்தர்கள் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரது ஆன்மா நம் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். இறைவனடி இளைப்பாற எல்லாம் வல்ல நம் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
எம்.ஜி.ஆர். வேடத்தில் விஷால்!
எம்.ஜி.ஆரின் மிக பெரிய ரசிகரான, இயக்குனர் சுந்தர்.சி, அவர் நடித்த படங்களில் ஒன்றை, ரீமேக் செய்ய வேண்டும் என்ற லட்சியம் வைத்திருந்தார். தற்போது, உலகம் சுற்றும் வாலிபன் படத்தை, இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப, ரீமேக் செய்ய முடிவு செய்திருக்கிறார். முக்கியமாக, அந்த கதையின் கரு மாறாத வண்ணம், 'ஸ்கிரிப்ட்' செய்யப் போவதாக கூறுகிறார். தெலுங்கு படத்தில் நடித்து வரும் விஷாலை, அப்படத்தை முடித்ததும், உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார் சுந்தர்.சி.
— சினிமா பொன்னையா
courtesy dinamalar varamalar