சாரதா,Quote:
Originally Posted by saradhaa_sn
அந்த பாடலின் மூன்றாவது வரியில் "காலழகு பார்த்தால்" என்று சொல்லிவிட்டு ரோஜா ரமணியின் போலியோ பாதிக்கப்பட்ட கால்களை பார்த்துவிட்டு நடிகர் திலகம் ஒரு விநாடி தடுமாறுவார், முக பாவம் மாறி கண்ணீர் சிந்துவார். உடனே குழந்தை மனம் வருத்தப்பட கூடாதே என்று "தெய்வதிற்கு" என்று தொடர்ந்து பாடுவார். தியேட்டரில் கைதட்டல் அதிரும். இதை பற்றி சொல்லும்போது, நான் முதலில் இந்த படத்தை பார்த்த சம்பவம் நினைவிற்கு வருகிறது.
படம் 1968-ல் ரிலீஸ் ஆன போது மதுரையில் சென்ட்ரல் சினிமாவில் இந்த படம் எனது தாய் மற்றும் உறவினர்களோடு பார்த்தேன். படம் வெளியான மூன்றாவது நாள் (ஞாயிற்றுக்கிழமை) பார்க்கிறேன். நான் சிறுவன். இந்த காட்சிக்கு பயங்கர கைதட்டல். சில நாட்களுக்கு பின் வானொலியில் இந்த பாடல் ஒலிப்பரப்பாகிறது. ஆவலுடன் கேட்டேன். அந்த வரி வருகிறது. ஆனால் எனக்கு ஏமாற்றம். கைதட்டல் கேட்கவில்லை. "அன்னிக்கு தியேட்டரில் கேட்ட கைதட்டல் இன்னிக்கு ஏன் கேட்கலே?" என்று எனது அம்மாவிடம் ஒரே கேள்வி மயம். இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது.
பிரபா,
நாங்கள் எழுதியிருந்தாலும் உங்கள் கருத்துகளை நீங்களும் சொல்லுங்கள். அறிவாளி மற்றும் சவாலே சமாளி (ராஜ் டிவியில் பல நேரங்களில் பல காட்சிகளை கட் பண்ணி விடுவார்கள். ஆகையால் DVD/VCD பாருங்கள்)
அன்புடன்