ஊர்கோலம் போகின்ற கிளி கூட்டங்கள் எல்லாம் ஊரார்க்கு சொல்லுங்கள் இன்று ரவி யின் நினைவு நாள் என்று
https://encrypted-tbn1.gstatic.com/i...31zmIecSTWLd6dhttp://www.aambal.co.uk/static/uploa...07/ravicha.pnghttp://www.aambal.co.uk/static/uploa...vichandran.jpghttp://antrukandamugam.files.wordpre...2jpg.jpg?w=487
ரவிச்சந்திரன் – அற்புதமான ஒரு திரைப்படக் கலைஞன்
ரவிச்சந்திரன் திருச்சியில் பிறந்த ஒரு தமிழர்; ஆனால் அவரது இளமைக் காலம் மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூரில்தான் கழிந்தது. அவர் 1951ஆம் ஆண்டு தனது சகோதரியின் திருமணத்திற்காக இந்தியா திரும்பினார். அதன்பின் திருச்சியில் பட்டப்படிப்பை செயின்ட் ஜோசப் கல்லூரியில் மேற்கொண்டார்.
1963ல் பிரபல இயக்குநர் ஸ்ரீதரைப் பார்த்தபொழுது அவரது வாழ்க்கையில் மாபெரும் திருப்பம் ஏற்பட்டது. 1964ல் தமிழில் மிகச்சிறந்த படங்களில் ஒன்றான ‘காதலிக்க நேரமில்லை’ வெளிவந்தபொழுது, அதன் நேர்த்தியான கதை அமைப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் மற்றும் நடிகர்கள் நாகேஷ், பாலையா போன்றோரின் நகைச்சுவை, புதிய பொலிவுடன், துடுக்கான இளைஞனாக கதாநாயகனாக அறிமுகமாகிய ரவிச்சந்திரனை மிகவும் எதிர்பார்ப்புடன் மக்கள் கவனிக்கத் தொடங்கினர்.
தமிழ் திரைப்பட வரலாற்றில் தியாகராஜ பாகவதரா, பி.யூ. சின்னப்பாவா? எம்.ஜி. ராமச்சந்திரனா அல்லது சிவாஜி கணேசனா என்ற ரசிகர்களின் போட்டியின் தொடர்ச்சியாக ரவிச்சந்திரனா, ஜெய்சங்கரா என்ற போட்டியும் விவாதமும் ஆரோக்கியமான வளர்ச்சியாக அமைந்தது.
ரவிச்சந்திரன் தனது ஆளுமையால் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து விட்டார். அதுமட்டுமல்லாமல் திரைப்படங்களின் பல நுணுக்கங்களையும், பெற்றிருந்தார். நடிப்புடன் நில்லாது தயாரிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை, பாடல்கள், படத்தொகுப்பு என பல்துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகிறார். பல குணசித்திர வேடங்களிலும் நடித்தவர் நடிகர் ரவிச்சந்திரன்.
ஒருகாலகட்டத்தில் தமிழ்ப்பட வளர்ச்சியில், திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினர். அந்த வகையில் திரைப்படக் கல்லூரியில் பயின்ற அரவிந்தராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘ஊமை விழிகள்’ படம் இளந்தலைமுறையை ஒரு உசுப்பு உசுப்பியது. அதில் வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றி தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் உள்ளத்தில் மாறாத இடத்தை பிடித்தவர் நடிகர் ரவிச்சந்திரன்.
பிரபல மலையாள நடிகை ஷீலாவைத் திருமணம் செய்த இவர், பின்னர் அவரை விட்டு பிரிந்து, மீண்டும் முதல் மனைவியிடம் தஞ்சம் அடைந்தார்
அண்மையில் இவரது மகனான அம்சவிர்தனை வைத்து ‘மந்திரன்’ என்னும் திரைப்படத்தை இயக்கினார்.
நடிகர் ரஜினிகாந் நடித்த ‘அருணாச்சலம்’, கமல்ஹாசனின் ‘பம்மல் கே சம்பந்தம்’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றிய இவர் அண்மையில் வெளிவந்த ‘ஆடு புலி’ திரைப்படத்திலும் குறிப்பிடத்தக்க வேடத்தில் நடித்திருக்கிறார்.
தமிழ்த் திரைப்படத்தில் ஸ்டைல் நடிப்பை புகுத்திய பெருமைக்கு சொந்தக்காரராக இவர் விளங்குகிறார்.
(நன்றி - ஆம்பல)
நடிகர் ரவிச்சந்திரன் மரணம்- தினமலர்:-ஜூலை 25,2011,21:06 IST
சென்னை: தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த, பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.”காதலிக்க நேரமில்லை’ படத்தின் மூலம் டைரக்டர் ஸ்ரீதரால் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டவர் ரவிச்சந்திரன்,71. இதயக்கமலம், குமரிப்பெண், நான், மூன்றெழுத்து, மாடி வீட்டு மாப்பிள்ளை, அதே கண்கள், அருணாச்சலம், ரமணா <உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன், சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. இதனால், இரண்டு சிறுநீரகங்கள் செயலிழந்தன. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில்,”டயாலிசிஸ்’ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.<உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்த நிலையில், அவருக்கு கடந்த 19ம் தேதி இரவு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் இருந்ததால், செயற்கைச் சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், இரவு 8.50 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு விமலா என்ற மனைவியும், இரண்டுமகன்களும் உள்ளனர்.