http://i45.tinypic.com/2m4c8ll.jpg
Printable View
Vasudevan Sir this quiz was stopped by me using in MGR blog when people ignored to use. One time many were interested in the quiz and by two years they started to withdraw from the participation. So I stopped using quiz template and give more space to MGR postings.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
Directors Third installment. M.A.Thirumugam who directed 16 MGR movies of Devar Films banner.
http://www.mgrroop.blogspot.in/2013/...ctors-iii.html
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
இனிய நண்பர் வாசு சார்
மக்கள் திலகத்தின் திருடாதே மற்றும் தாயை காத்த தனயன் நிழற் படங்கள் மிகவும் அருமை .
புதுமையான முறையில் மக்கள் திலகத்தின் பட சம்பந்தப்பட்ட வினா தாள் .நன்றாக இருந்தது .வாழ்த்துக்கள் .
இனிய நண்பர் ஜெய் சார்
மக்கள் திலகத்தின் அழகான உடற் கட்டின் பெருமைகளை கவியரசு கண்ணதாசன் நீதிக்கு பின் பாசம் மற்றும் தாய் சொல்லை தட்டாதே படத்தில் i எழதிய பாடல்களை பதிவு செய்தமைக்கு நன்றி . காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் .
மக்கள் திலகம் - சரோஜாதேவி
மக்கள் திலகம் - ராதா சலுஜா
மக்கள் திலகம் - ஜெயலலிதா
சூப்பர் படங்கள் . மிக அழகான தோற்றத்தில் மக்கள் திலகம் .
நன்றி ரவி சார்
புரட்சி நடிகரின் புகழ் பூத்த சரித்திர சமூகப் படங்களின் பட்டியல் நீண்டதொன்றாகும்.
சரித்திரப் படங்கள் சில: அலிபாபாவும் நான்கு திருடங்களும் மன்னாதி மன்னன், மதுரைவீரன், குலோபகாவலி, அரசகட்டளை, நாடோடி மன்னன் (அவரின் இயக்கத்தில் வெளியானது), காஞ்சித் தலைவன், அடிமைப் பெண், ஆயிரத்தில் ஒருவன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் போன்றவை சமூகப் படங்கள் பல அவற்றுள் சில: பாசம், பெற்றால்தான் பிள்ளையா? மலைக்கள்ளன், தாய்க்குப் பின்தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, பணத்தோட்டம், பணக்காரக் குடும்பம், தாழம்பூ, மாடப்புறா , காவல்காரன், ஒளிவிளக்கு, தர்மம் தலைகாக்கும், விவசாயி, மாட்டுக்காரவேலன், தொழிலாளி, எங்க வீட்டுப் பிள்ளை போன்றவை.
1972 இல் தி.மு.க. விலிருந்து தூக்கி வீசப்பட்டு அ.தி.மு.க.வை அமைத்து 1977 இல் ஆட்சியைக் கைப்பற்றிய அந்த ஐந்து வருட இடைவெளியில் அரசியல் சூறாவளிப் பிரசாரம் செய்து இயங்கினாலும் பதினாறு வெற்றிப் படங்களைத் தந்த பெருமகன் எம்.ஜி.ஆர். என்பது இங்கு கவனத்திற்குரியது.
நாடாண்ட நடிகர் முதலமைச்சராக இருந்த போது ஒரு அவசரக் கூட்டம் கருதி நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. மதியநேரம் கொளுத்தும் வெயில், ஆள் , அம்பு, படை, ஜீப் சகிதம் முதலமைச்சர் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். செல்லும் வழியில் வயல்வெளி, ஆண்களும் பெண்களுமாக வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
எம்.ஜி.ஆர். வருவதை அறிந்து வழியை மறித்து நின்று எம்.ஜி.ஆரைப் பார்க்க வேண்டும் என்று கோஷமிட்டார்கள். கூட்டத்திற்கு காலதாமதமாகிவிட்ட காரணத்தால் முதலமைச்சருடன் வந்த மெய்க்காப்பாளர்கள் அந்த ஏழை விவசாயிகளை அடித்து விரட்டத் தொடங்கினார்கள். இதையறிந்து தனது காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். தது மெய்க் காப்பாளர்களைத் தடுத்து நிறுத்தி அந்த விவசாயிகளுடன் அளவளாவத் தொடங்கினார்.
விவசாயிகளுக்கோ தமது தெய்வத்தைக் கண்டதுபோல் பெரும் மகிழ்ச்சி , ஆனந்தக் கண்ணீர் விடாத குறை! சற்று நேரத்தின் பின்னர் முதலமைச்சர் தனது பிரயாணத்தைத் தொடர ஆரம்பமானார்.
அப்போது ஒரு இளம் பெண் கூட்டத்தை விலத்திக் கொண்டு ஓடிவ ந்து முதலமைச்சரின் காலில் வீழ்ந்து வணங்கி ஐயா இன்னமும் ஐந்து நிமிடம் தாமதித்து தங்கள் பயணத்தை மேற்கொள்ளுங்கள் எனது தாயார் தங்களைக் காண மிகுந்த ஆவலாக இருக்கிறார் என்றார். எம்.ஜி.ஆர். ஏன் அம்மா இப்போது வரவில்லையா? என்று வினாவினார். அதற்கு அந்தப் பெண்மணி இல்லை ஐயா, நான் போய்த்தான் அம்மாவை அனுப்ப வேண்டும் என்றார்.
எம்.ஜி.ஆர். அந்த இளம் பெண்மணி போய் தாயார் வரும் வரை காத்திருந்தார். தாயாரும் வந்தார். எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி ஆனால் ஒரு விடயம் நன்றாகப் புரிந்தது. தாயும் மகளும் ஒரேயொரு சேலையைத் தான் மாறிமாறி அணிகிறார்கள் என்பது.
எம்.ஜி.ஆர். தனது பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை மீண்டதும் அவர் செய்த முதற்காரியம் அந்தப் பெண்மணியின் கிராமத்திற்கு புத்தம் புதிய வண்ண வண்ணச் சேலைகள் ஆயிரம் அனுப்பி வைத்ததே!
மேலும் அமரர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஈழத்தமிழர் பால் அளவற்ற அன்பு கொண்டிருந்தார் என்பது அவர்கள் தாக்கப்பட்ட போதெல்லாம் கண்டனக் குரல் கொடுத்து இந்திய மத்திய அரசையும் விழிப்படையச் செய்தாரென்பதும் அகில உலகும் அறிந்த உண்மையே! தவிர அண்ணாவின் இதயக்கனி எம்.ஜி.ஆர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கு இந்திய நாணயத்தில் ரூபா ஒரு இலட்சத்திற்கு மேலான பெறுமதி மிக்க நூல்களை வழங்கினார். அந்த நூல்கள் இன்றும் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் உள்ளன. அமரரைக் கௌரவிக்கும் முகமாக அன்னாரின் பெரியதொரு புகைப்படம் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தை அலங்கரிக்கின்றது.
நன்றி-தினக்குரல் - தை 17, 2012
கவியரசு கண்ணதாசனின் பாடல்கள் - ஒரு ஆய்வு
நன்றி - தமிழ்தேசம் .
பணத்தோட்டம் .
கவியரசர், புவியரசர் எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி எழுதிய தத்துவப்பாடல்கள் இரண்டினையும் இங்கே கேட்கலாமா?
தொகையறா:
“குரங்குவரும் தோட்டமடி பழத்தோட்டம்
வண்டுவரும் தோட்டமடி மலர்த்தோட்டம்
மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம் – அந்த
மனிதன் விளையாடுமிடம் பணத்தோட்டம்!”
பாடலின் தொடக்கமாம் தொகையறாவிலேயே தத்துவங்கள், முத்திரைகள் பதித்து முழங்கி வருவதைக் கேட்டோமா?
மனத்தோட்ட மனிதன் விளையாடும் இடமோ பணத்தோட்டம்! பணத்தோட்டம்!! பணத்தோட்டம்!!!
இதனாலன்றோ வான்மறை ஈந்த வள்ளுவரும், ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை!’ என்று உறுதிபடக் கூறினார்.
இன்னும் இந்தப் பணத்தோட்டத்தைத் தேடி மனிதன் போடும் ஆட்டங்கள்தான் எவ்வளவு?
அவற்றை, கவிஞர் கவிதைமொழியில், எம்.ஜி.ஆர் எடுத்துச் சொல்ல… நம் உள்ளங்கள் உணரட்டுமே!
“மனத்தோட்டம் போடுமென்று
மாயவனார் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி – முத்தம்மா
பணத்தோட்டம் போட்டதேயடி!
சங்கத்தால் பிறந்த இனம்
சிங்கம்போல வளர்ந்த குணம்
தங்கத்தால் அழிந்ததேயடி – முத்தம்மா
தங்கத்தால் அழிந்ததேயடி!”
சித்தர்களின் சீதனம்போல், சிறுகூடற்பட்டிக் கவிஞர், கலியுகப் பாரிவள்ளல் வழங்கிடத் தந்த வரலாற்றுப் பாடல் வரிகளை நாம் மறக்க முடியுமா?
மனமது செம்மையாக, மாயவனாம் இறைவன் ஈந்த உடல் பணத்தோட்டம் போட்டதாம்! அதனால்…….
சங்கமத்தில் பிறந்த இனம்: மூன்று தமிழ்ச்சங்கங்கள் இருந்த பூமியில் பிறந்த இனம் தங்கத்தால் அழிந்ததாம்.
ஆமாம்! ஆசைகளில் பொன்னாசையும் ஒன்றல்லவா!
இது இருந்தால்தானே மற்ற மண்ணாசை, பெண்ணாசையை இந்த பெரும்பூமியில் மனிதன் பெற்று நிறைவுகாண முயற்சிக்க முடியும்!
இந்த ஆசைகள் போகுமா? மாறுமா? இவற்றுக்கான விடைகள்?!
பாடலில் மீதியைப் பார்த்தபின் காண்போமே!
“ஊசிமுனைக் காதுக்குள்ளே
ஒட்டகங்கள் போனாலும்
காசாசை போகாதடி – என் முத்தம்மா
கட்டையிலும் வேகாதடி!
எண்ணெயுடன் தண்ணீரை
எப்படித்தான் கலந்தாலும்
இரண்டும் ஒன்று சேராதடி – முத்தம்மா
இயற்கை குணம் மாறாதடி!”
மீதியைப் பார்த்தோம்!
ஊசிமுனையோ மிகவும் சிறியது… அதற்குள்ளே முதுகு நீண்ட ஒட்டகங்களே நுழைந்து போனாலும் போகலாமாம்! ஆனால்….!
மனிதனுக்குள்ள காசாசை மட்டும் போகாதாம்! அவன் உடல் கட்டையில் வெந்தாலும், அவனது காசாசை மட்டும் வேகாதாம்!… என்னே கொடுமை!
எண்ணெயுடன் தண்ணீரை எப்படித்தான் கலந்து வைத்தாலும், இரண்டும் எப்போதும் ஒன்று சேராதாம். அதுபோல் பணத்தோட்டம் போடும் மனிதனின் மனத்தோட்டத்தின் இயற்கை குணமும் எப்படி மாற்றினாலும் மாறாதாம்.
நம் உள்ளங்கள் உணர்ந்து கொண்ட விடைகளையும், பாடல் உணர்ந்தும் உயர்ந்த தத்துவங்களையும் மறக்க முயன்றாலும் முடியுமா?
இனி என்ன........
‘என்னதான் நடக்கும்! நடக்கட்டுமே!’ அடடா! இது கவிஞர் எழுதிய ‘பணத்தோட்டம்’ படப் பாடலல்லவா?
அதையும் பார்த்து விடுவோம்!
“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே – ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே!
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன்வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு!”
‘நீதி இருட்டினில் மறையட்டும்! என்னதான் நடக்கும் நடக்கட்டும்! – நீ ஏன் பயப்படுகிறாய்? எல்லாமே தன்னாலே வெளிவரும்! தயக்கம் கொள்ளாதே! ஒரு தலைவன் இருக்கிறான் – அதனால் மயக்கம் கொள்ளாதே!
அவனது அடிச்சுவடுகள் தெரிகிறது பின்னாலே!
அவனது வீடு இருப்பது முன்னாலே!
நடுவினிலே நீ விளையாடு!
தினமும் நல்லதை நினைத்தே போராடு!
விளைவுகள்! நல்லனவாய் விளைந்திடும்!
எப்படி?
“உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி – மனம்
கலங்காதே! மதி மயங்காதே!
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு”
இப்படித்தான்….!
உலகினிலே திருடர்கள் சரிபாதியாய்; ஊமையராய், குருடர்களாய், ஆமைச் சமூகத்தில் ஊமை முயல்களாய் சரிபாதியினரும் இருக்கின்றனர்.
இங்கே நீதி எப்படிக் கிட்டும்? ‘கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும்!’ என்ற பாமர மக்களின் உள்ளப்பாங்கின்படியே, ‘கலகத்தில் பிறப்பதுதான் நீதி!’ என்றே புரட்சித்தலைவரைக் கவிஞரின் கவிதைவரிகள் உரைக்க வைத்தது.
‘மனம் கலங்காதே! மதி மயங்காதே!’ என்று ஊருக்கு உபதேசம் செய்தபடியேதானே எம்.ஜி.ஆரும் இறுதிவரையிலும் இருந்தார்.
தன் மனசாட்சிக்கு மட்டுமே பயந்து, தன்மானத்தை உறுதியாகக் கொண்டு; வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்ற வகையில் கொண்ட கொள்கையில் நிலைத்து நின்று, இரட்டை வரல்களைக் காட்டி, இரட்டைஇலைச் சின்னத்தால் வென்றுதானே, இருக்கின்ற வரையில் அவர் புகழோடு வாழ்ந்தார்.
இவற்றிலெல்லாம் கண்ணதாசன் சொன்ன வாக்கு… ஆமாம் நம் கவிஞர் வாக்கு…. எம்.ஜி.ஆரைப் பார்த்த பார்வையில் பாடிய வாக்கு…. எல்லாமே தானே பலித்துள்ளன.
மக்கள் திலகத்தின் மனதைச் சரியாக எடைபோட்ட மகோன்னதக் கவிஞர் எழுதிய தத்துவப்பாடல் ஒன்றை இப்போது நாம் காண்போமே!
“ஒருவன் மனது ஒன்பதடா – அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா!
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா! – அதில்
உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா!
ஏறும்போது எரிகின்றான்!
இறங்கும்போது சிரிக்கின்றான்!
வாழும் நேரத்தில் வருகின்றான்!
வறுமை வந்தால் பிரிகின்றான்!
தாயின் பெருமை மறக்கின்றான்!
தன்னலச் சேற்றில் விழுகின்றான்!
பேய்போல் பணத்தைக் காக்கின்றான்!
பெரியவர் தம்மைப் பழிக்கின்றான்!
பட்டம் பதவி பெற்றவர் மட்டும்
பண்புடையோராய் ஆவாரா?
பள்ளிப்படிப்பு இல்லாத மனிதர்
பகுத்தறிவின்றிப் போவாரா?”
நாம் கண்ட இப்பாடலில் உள்ள எந்தக் கருத்தைத் தவறென்பது?
‘ஒருவன் மனதில் ஒளந்து கிடக்கும் எண்ணங்கள் எத்தனையோ? அவை எண்பதையும் தாண்டுமே?
உருவத்தைப் பார்த்தே எடைபோடும் மனிதர் உலகில்; எவனொருவன் உள்ளத்தைப் பார்த்து எடைபோடுகிறானோ அவன் இறைவன்தானே!’
ஒருவனது உயர்வைக் கண்டு எரிச்சலும்; தாழ்வைக் கண்டு மகிழ்ச்சியும் காணும் மனித சமுதாயத்தை இன்றளவும் காண்கின்றோமே! வசதியாக வாழும்போது சொந்தம் கொண்டாடிட தூரதேத்தவரும் வருகின்றாரே! வறுமை வந்துவிட்டால் பக்கத்துச் சொந்தமும் பாராமுகமாய்ப் பிரிந்து போவதைப் பார்க்கின்றோமே!
பெற்ற தாயையும் மறந்து, தன் பெருமை பேசும் சுயநலவாதிகள்! பேயைப் போல் பணத்தைக் காக்கும் திமிங்கலங்கள்! பெரியோர் தம்மைப் பழித்துப் பேசும் பண்பற்றவர்! எல்லோரையுந்தான் எங்கும் பார்க்கின்றோமே!
பட்டம் பதவிகள் பெற்றவர் எல்லோரும் பண்புடையோராய் இருக்கின்றார்களா? அவர்கள்தானே இலஞ்சலாவண்யக் காரியங்களின் கதை மாந்தர்களாய் உலவுகின்றனர்! பள்ளிப்படிப்பு இல்லாத பாமர மக்கள் தானே சேற்றிலே கால் பதித்து, பாரிலுள்ளோர் சோற்றுக்கு வழிவகுத்து, பண்போடு நடக்கும் பகுத்தறிவு மனிதர்களாய் வாழுகின்றனர்!’
மக்கள் மத்தியில் இத்தகு மகத்துவத் தத்துவங்களை, மக்கள் திலகம்தானே கூறவேண்டும். அதற்கான பாடலைக் கவியரசர் தானே ஆக்கித் தரவேண்டும்.
அப்படி அமையும்போது அப்பாடல் ஆன்றோர் அவையிலும், பாமரர் நாவிலும் அற்புதமாய் நடமாடத்தானே செய்யும்!
தர்மம்! என்ன செய்யும்?
தலை காக்கும் – எப்படி?
இதோ…….பார்ப்போமே!
“தர்மம் தலைகாக்கும்!
தக்க சமயத்தில் உயிர்காக்கும்!
கூட இருந்தே குழிபறித்தாலும்
கொடுத்தது காத்து நிற்கும்! – செய்த
தர்மம் தலைகாக்கும்!
மலைபோல வரும் சோதனை யாவும்
பனிபோல் நீங்கிவடும்! – நம்மை
வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்துவிடும் – செய்த
தர்மம் தலைகாக்கும்!
அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்தப் பூந்தோப்பு! – வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை – இது
நான்குமறைத் தீர்ப்பு!”
இப்பாடல் வரிகளைப் பார்த்தோம்!
எம்.ஜி.ஆர் என்ற நடிகருக்காக, எந்தக் கவிஞர் இப்படிப்பட்ட இதயப்பூர்வமான பாடல் வரிகளைப் படைத்தார்கள்?
எண்ணிப் பாருங்கள்!
எம்.ஜி.ஆர் சார்ந்திருந்த இயக்கம் 1967 – ஆம் ஆண்டு மகத்தான வெற்றி பெற்று ஆட்சிக்கட்டில் ஏறியது. அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர், அந்த இயக்கம் எம்.ஜி.ஆர் என்ற பெறற்கரிய சக்தியால் 1971 – ஆம் ஆண்டு பெரும் வெற்றி பெற்றது.
1972 – ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்; தி.மு.கழகம் எனும் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும், அவர் பின்னால் அளப்பரிய மக்கள் சக்தி திரண்டது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் அவரால் உருவாயிற்று.
திண்டுக்கல் பாராளுமன்ற இதைத்தேர்தலில் அவர் காட்டிய இரட்டை விரல் சின்னமாம் இரட்டை இலைச் சின்னம் மகத்தான வெற்றி கண்டது.
இப்படிப் படிப்படியாக எம்.ஜி.ஆர் கண்ட வெற்றிகளைக் கண்டல்லவா மற்ற கவிஞர்கள், அவரது படப்பாடல்களில் அவரது புகழைக் கலந்து எழுதினார்கள்.
ஆனால், கவியரசர் கண்ணதாசனோ, திராவிட இயக்கத்தில் தான் இருந்தபோது எழுதிய பாடல்களோடு, வசனங்களோடு, எம்.ஜி.ஆரைப் பார்த்த பார்வையை மட்டும், தான் தேசீய இயக்கத்தில் பயணித்தபோதும் மாற்றிக் கொள்ளவில்லையே!
அங்கேதானே அந்தக் கவிஞர் தனித்துவத்தோடு இன்று நம் மனங்களில் நிற்கிறார்.
இந்தப் பாடலில்,
“தர்மம் தலைகாக்கும்!
தக்க சமயத்தில் உயிர் காக்கும்!”
என்ற வரிகள்,
எம்.ஜி.ஆர் வாழ்க்கையில் எத்தைனை முறைகள் உயிர்பெற்று எழுந்துள்ளன?
கால் எலும்பு முறிந்தபோது, எம்.ஜி.ஆர். ராதாவால் சுடப்பட்டபோது, அமெரிக்காவில் புருக்ளீன் மருத்துவமனையில் இருந்தபோது….
இப்படி எத்தனையோ முறைகள் உயிர்பெற்று எழுந்துள்ளன!
“கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிற்கும்!”
இந்த வரிகளும் உயிர் பெற்றெழுந்த உயர் வரிகள்தானே!
மலைபோல எம்.ஜி.ஆருக்கு வந்த சோதனைகள் எத்தனையோ? அவரது ஆட்சியே கவிழ்க்கப்பட்டது… அதுபோன்ற பல சோதனைகள்! அவையெல்லாம் பனிபோல் விலகியதை நாமும் கண்டோம்!
அவரை வீழ்த்த நினைத்தோர்! அரசியலை விட்டே விரட்ட நினைத்தோர், அவரது வாசலில் நின்று வணங்கி பதவிகள் பெற்று உயர்ந்த பல கதைகள் இந்த உலகிற்கே தெரியுமே! அவரது தர்மம் அவரை என்றுமே காத்து நின்றது.
அள்ளிக்கொடுத்து வாழ்ந்த எம்.ஜி.ஆர் நெஞ்சம், என்றும் ஆனந்தப் பூந்தோட்டமாகவே புன்னகை பூத்து நின்றது. வாழ்வில் நல்லவர் எம்.ஜி.ஆர் மட்டுமல்ல… எந்த நல்லவரும் கெடுவதில்லை.
இது நான்கு வேதங்களின் தீர்ப்பு!… என்று கவிவேந்தர் கண்ணதாசன் சொல்லிய வாக்கு என்றுமே பலிக்கும்… தேவ வாக்காகும்.
இதுவரையிலும் நாம் பார்த்த, கண்ணதாசன் பாடல்கள் எழுதி, எம்.ஜி.ஆர் நடித்த, பணத்தோட்டம், கொடுத்து வைத்தவள், தர்மம் தலைகாக்கும் ஆகிய மூன்று திரைப்படங்களும் ஒரே சமயத்தில் சென்னை மாநகரத்தில் ஒன்பது திரையரங்குகளில், சென்னை நகரில் சிறந்த படங்கள்’ என்ற தலைப்பில், ‘எம்ஜியார் பிக்சர்ஸ் வெளியீடு’ எனும் பெயரில் ஓடி வசூலைக் குவித்த சாதனைகளையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இம்மூன்று படங்களும் ஒரே நேரத்தில் ஓடி ஒப்பற்ற சாதனைகள்படைத்தன என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
இன்றைய நிலையில், தமிழ்க் திரையுலக வரலாற்றை, நடிகர்களின் நிலைமைகளை நினைத்து பார்த்தால்தான், வசூல் சக்கரவர்த்தி, நிருந்திய சக்கரவர்த்தி என்ற பெயர் எம்.ஜி.ஆருக்குப் பொருத்தமே என்ற உண்மைகளை உணரமுடியும்.
எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள்
நம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான்; அது உண்மையில் நம்பிக்ககைக்க உரியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் வெற்றிக் கிட்டும்.
கடமைகளை இன்முகத்துடன் ஆற்றி உரிமைகளைப் பெற்றிடுவோம்! அமைதியும் ஒற்றுமையும் காத்து வளர்ச்சிக்கு வழிவகுப்போம்! புதிய சமத்துவ சமதர்ம அமைப்புக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம்!
அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.
சமுதாய உணர்வோடு நாம் பிரச்சினைகளை அணுக வேண்டும்; நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது!
வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொண்டால் மட்டும் போதாது! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
வன்முறைதான் போராட்ட முறை என்றால் தோல்விதான் அதற்குப் பரிசாக்க் கிடைக்கும் என்பது நிச்சயம்.
எழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும் அந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள்.
எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை. பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை. பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒருவகை அப்படிச் சிந்திக்க மறுப்பபவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒருவகை.
எழுத்தாளர் என்றால் எழுத்தை ஆள்பவர்கள் என்று கருதுவதால் அந்த எழுத்துக்கு அவர்கள் உரிமையுள்ளவர்கள்.
உழைப்பே உயர்வு தரும்; உழைப்போம் உயர்வோம்; உழைப்போரே உயர்ந்தோர்; உழைப்பவராலே உலகம் உயர்ந்திடும்.
நமது சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும்; சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.
அரசியலோடு நாகரிகத்தை, அரசியலோடு நாணயத்தை, அரசியலோடு நல்ல நோக்கத்தை, அரசியலோடு ஜனநாயகத்தை, அரசியலோடு உயர்ந்த பண்பாட்டை இணைத்துத் தந்த நல்ல ஜனநாயகவாதி அண்ணா அவர்கள்.
சமத்துவச் சமுதாயம் காண்பதே உழைக்கும் வர்க்கத்தின் உண்மையான இலட்சியம் எனும் மூலக் கருத்திற்கு முதலிடம் தாருங்கள்.
உழைக்கும் மக்களே ஒன்று சேர்ந்திடுங்கள். பேதப்படுத்தும் சக்திகளை ஒதுக்கித் தள்ளிடுவீர். உழைப்பவரே உயர்ந்தோர் என்னும் த்துதவத்தை நிலைநாட்டுவீர்.
ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை தேவை. மகிழ்ச்சி தேவை. இந்தத் தேவைகளுக்கு அடிப்படை வளரவும் வாழவும் தடையில்லாமல் இருப்பதுதான்.
தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோரின் நலன்களைக் காப்பாற்றி அவர்களை மேம்படுத்தப் பாடுபடுவோம்.
சமுதாயத்தில் மக்கள் வாழ்வதற்காக ஏற்றத் தாழ்வற்ற சமதர்ம சமுதாயத்தை அமைக்க வேண்டும்.
சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பதுஅவசியம்.
தமிழ் நலன், தமிழின் பண்பாடு, தமழ்ச் சமுதாயம் தமிழ் கலாச்சாரம் வளர வேண்டும் என்பது நமது நோக்கமாக இருத்தல் வேண்டும்.
ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே போதாது. செயலும் பண்பாட்டுடன் இருக்க வேண்டும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கும்.
மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குமோ, அது போல மக்கள் தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்கு கேடு உண்டாக்கக் கூடியவை.
கூட்டுறவு என்பது மனிதனுக்கு மனிதன் தகுதியை உணர்வது மட்டுமல்ல – தரத்தை மட்டுமல்ல. அவர்களை மதிக்கக் கூடிய பணியைப் பெறுவது மட்டுமல்ல, தங்களுக்கு முடிவதைப் பிறர் இயலாமையை எண்ணி அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய அந்த எண்ணமே கூட்டுறவு இயக்கத்தின் அடிப்படை மூலதனமாகும்.
கோபதாபம் மனிதர்களுக்கு மட்டுமல்ல இசைக்கும் உண்டு. இசையின் மூலம் அமைதியைக் காட்ட முடியும். கோபதாபத்தையும் காட்ட முடியும்.
மனிதர்களுக்குச் சில குணங்கள் உண்டு. அவர்களைக் கட்டுப்படுத்தி வாழ்ந்தால் சரியான முறையில் தங்களது சந்ததியினரை வழி நடத்திச சென்றால் அழகான குடும்பத்தினரை உருவாக்க முடியும்.
கடவுளை இரண்டு வழிகளில் அணுக முடியும். ஒன்று இசையால், மற்றொன்று கடுமையான தவத்தால்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் அமைதியில்தான் ஆரம்பமாகிறது. பிறகு இறுதியில் உச்சக்கட்டம் ஏற்பட்டு முடிகிறது.
பாடல் முதலில் தனக்காகப் பாடப்பட வேண்டும். தான் ரசிப்பதற்காகப் பாட வேண்டும். பிறர் ரசிப்பதற்காக அல்ல! ஆடலும் பாடலும் அதுபோலத்தான். ஆடுபவர்கள் தமக்காகத்தான் ஆட வேண்டும். பிறர் மகிழ்வதற்காக அல்ல.
குழந்தை எந்தத் தொழிலை விரும்புகிறதோ அதையே நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
கலை எப்போதும் இருக்கும். ஆனால் கலைஞர்கள் இருக்கமாட்டார்கள்.
இன்றைக்கு வாழ்கின்ற நாம் நமது கடமையைச் சரியாகச் செய்தால்தான் எதிர் காலத்தில் வரும் நமது சந்ததியினர் நல்வாழ்வு வாழமுடியும்.
சிலர் மக்களை ஏமாளிகள் என்று கருதுகிறார்கள். அவர்கள் இன்னும் மக்களைப் புரிந்துகொள்ளாத்தே இதற்குக் காரணம்.
பதவிகள் எல்லாம் வந்தால் வரும்; போனால் போகும். நான் நடிகனாக இருந்தவன்; அந்த உணர்வை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது.
கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்படுவது சிக்கலை ஏற்படுத்துவதற்காக அல்ல; அவசியமான நன்மைகளைப் பெறுவதற்கும் தேசிய ஒருமைப்பாடு வலுப்பெருவதற்குமேயாகும்.
ஒரே கட்சி ஆட்சிதான் இந்தியாவில் இருக்க வேண்டுமென்று யார் விரும்பினாலும் சரி, அது இந்த நாட்டிற்கு ஒத்து வராது என்பதை நான் கண்டிப்பாக்க் கூற விரும்புகிறேன்.
மக்கள் திலகத்தின் பொன்மொழிகள் -
கடந்த காலங்களில் மக்கள் திலகம் அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து தொகுக்க பட்ட உன்னதமான பொன்மொழிகளின் பதிவுகள் -மிகவும் அருமை .
கண்ணதாசனின் பாடல்களின் ஆய்வுகளும் பிரமாதம் .
நன்றி திரு வினோத் அவர்களே .
http://www.youtube.com/watch?v=8lMoQ...ature=youtu.be
படத்தின் பெயர் : பணம் பத்தும் செய்யும். இந்த கௌண்டமணி நடித்த காட்சியின் வீடியோ யாரிடமாவது இருந்தால் தயவு செய்து இங்கே பதிவு செய்யவும்.
Dear Ravichandran Sir,
Thank you for the nice images, of our beloved God with Madam Saroja Devi, Madam Latha, Late Padmini, Ms. Radha Saluja and others, posted in this Thread.
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
இன்னா செய்தாரை ஒறுத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் - சம்பவம் 4
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நடிகை பி. பானுமதி அவர்கள், "நாடோடி மன்னன்" படத்தில் நடித்தது தொடர்பாக, நமது பொன்மனச்செம்மலுடன் அவராகவே மனத்தாங்கல் கொண்டு, சற்று விலகி இருந்த நேரம் அது. (1957-58 கால கட்டம்).
இருப்பினும், அதனை பொருட்படுத்தாமல், நமது மக்கள் திலகம் அவர்கள் பெருந்தன்மையாக, நடிகை பானுமதியை மன்னித்து அவருக்கு தனது அடுத்தடுத்த படங்களில் (ராஜா தேசிங்கு, கலை அரசி, காஞ்சித்தலைவன்) கதா நாயகியாக வாய்ப்பளித்து கவுரவப் படுத்தினார்.
அப்போது அபிநயசரஸ்வதி சரோஜாதேவி அவர்கள் உட்பட பல புதுமுக நாயகியர் தமிழ் திரை உலகில் இருந்த போதிலும், பானுமதி அவர்கள் சில படங்களில் கதாநாயகி அல்லாத பத்திரங்களில் நடித்த போதும், அவரை கதாநாயகி பாத்திரங்களுக்கு ஒப்பந்தம் செய்து அவருக்கு தமிழ். திரை உலகில் மீண்டும் வாழ்வளித்தார்.
அது மட்டுமல்லாது, நமது புரட்சித்தலைவர் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றபின், அவருக்கு தமிழக அரசின் இயல் இசை நாடக மன்ற தலைவராக நியமித்து அவரை பெருமைப்படுத்தினார். உடனே பானுமதி அவர்களும் புரட்சித்தலைவரின் இந்த மாண்பினை கண்டு வியந்து தொலைபேசியில் நமது புரட்சித்தலைவருக்கு நன்றி கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
http://i46.tinypic.com/2z53rye.png
================================================== ================================================== =======
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
ARTICLE FROM DECCAN CHRONICLE
Romance and Tamil cinema always go hand in hand, for it’s our on-screen stars who have made us reach out for the tissues through the years with their trendsetting sizzling chemistry. There have been numerous pairs who have charmed the silver screen in hundreds of Tamil movies. But a few of them have made a lasting impression and conserved a place in the hearts of millions of viewers. On Valentine’s Day, DC presents K’town’s 10 hottest jodis who have scorched the screen right from the MGR-Sivaji times.
MGR – Saroja Devi
http://i48.tinypic.com/29z3qsg.jpg
The evergreen on-screen pair of the late 50s through a decade was Makkal Thilagam MG Ramachandran and Abhinaya Saraswathi Saroja Devi. The hot couple who began with Naadodi Mannan had back-to-back super hits and went on to give a series of 26 blockbusters including Anbe Vaa, Enga Veettu Pillai and Padagotti. Saroja Devi even made a fashion statement with her trendy choice of saris, blouses, ornaments and hairstyles which inspired many women to follow it.
மதிப்புக்குரிய செல்வகுமார் சார்
அவர்களுக்கு
மகத்தான மாமனிதர் மக்கள் திலகத்தின் சிறப்புக்களை பறைசாற்றும் நிகழ்வுகளை தாங்கள் பதிவிட்டு வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
எஸ். ரவிச்சந்திரன்
------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
------------------------------------------------
திரு. வினோத் சார்,
கவியரசு பாடல்கள் பற்றி தாங்கள் பதிவிட்ட கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது. பாராட்டுக்க்கள்.
எஸ். ரவிச்சந்திரன்
------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-------------------------------------------------
புரட்சித்தலைவர் புகழை வெளிபடுத்தும் மக்கள்திலகம் திரியில் நீண்ட கால முயற்சிக்கு பின்பு உள்ளே வரும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது
முதலிள் எங்கள் குலதெய்வம் எம்ஜியார் அவர்களை வணங்குகிறேன்
இதுவரை திரியில் பதிவிடும் அனைத்து நண்பர்களையும் வணங்குகிறேன்
நானும் திரியில் இடம்பெற்றதில் பெருமை கொள்கிறேன்
நன்றி வினோத் சார் மற்றும் திரு.ரூப்குமார் சார்
வெற்றி மீது வெற்றி வந்து ..
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக் கண்டேன்
தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக் கண்டேன்
உண்ணாமல் இருக்க கண்டேன்
உறங்காமல் விழிக்கக் கண்டேன்
மற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ
இது உன்னிடத்தில் நான் அறிந்த பாடம் அல்லவோ
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம்
பிள்ளையால் பன்னீர் ஆகும்
அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம்
பிள்ளையால் பன்னீர் ஆகும்
ஆசை தரும் கனவுகள் எல்லாம்
அவனால்தான் நனவுகள் ஆகும்
அன்று தொட்டு நீ நினைத்த எண்ணம் என்னம்மா?
அதை இன்று தொட்டு நான் முடிக்கும் வண்ணம் பாரம்மா
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
Hearty welcome to Puratchi Nadigar
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
http://www.youtube.com/watch?v=1O0mqFukEqg&feature=youtu.be
காஞ்சி சங்கராச்சாரியார்ர் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்
சைலேஷ் பாசு சார்,
காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளுடன் மக்கள் திலகத்தின் அனுபவங்கள் பற்றிய பதிவிற்கு நன்றி
மக்கள் திலகம் அவர்களுடன் பல நடிகைகள் ஜோடியாக நடித்திருந்தாலும் மிகவும் பொருத்தமான ஜோடி என்று பலராலும் பாராட்டை பெற்றவர் மக்கள் திலகம் - சரோஜாதேவி .
26 படங்களில் 1958-1967 வரை நடித்திருந்தார்கள் .
எனக்கு பிடித்த 10 மக்கள் திலகம் -சரோஜாதேவி படங்கள்
1. படகோட்டி
2. தாய் சொல்லை தட்டாதே
3. தாயை காத்த தனயன்
4. எங்க வீட்டு பிள்ளை
5. அன்பே வா
6. தெய்வத் தாய்
7. பறக்கும் பாவை
8. பணக்கார குடும்பம்
9. பெரிய இடது பெண்
10.கலங்கரை விளக்கம்
மக்கள் திலகம் திரிக்கு புதியவரான திரு புரட்சி நடிகர் mgr என்ற பெயரில் இணைந்திருக்கும் புது மக்கள் திலகம் நண்பரை அன்புடன் வரவேற்கிறேன் .
படகோட்டி படத்தில் இடம் பெற்ற அருமையான காட்சியின் வீடியோ பதிவிட்ட இனிய நண்பர் திரு ஜெய் அவர்களுக்கு நன்றி .
மக்கள் திலகத்தின் உடற்கட்டு 47 வயதில் கட்டுகோப்பாக , வலிமையாக , எழிலான தோற்றத்தில் இருப்பது கண்களுக்கு விருந்தாக உள்ளது .
1958 - மக்கள் திலகம் - சரோஜாதேவி - நாடோடி மன்னன் .
http://i50.tinypic.com/2i9k0zm.png
2வது படம் - 1961- திருடாதே
http://i47.tinypic.com/10ne4o6.png
3வது படம் - தாய் சொல்லை தட்டாதே-1961
http://i50.tinypic.com/n34yt3.png