Respected AArurdoss sir.
your articles in saturday dinamalar continues to be interesting. a small correction
ANNNAIILLAM was released in CASINO not SHANTHI RAN FOR MORE THAN 100DAYS.
Printable View
Respected AArurdoss sir.
your articles in saturday dinamalar continues to be interesting. a small correction
ANNNAIILLAM was released in CASINO not SHANTHI RAN FOR MORE THAN 100DAYS.
MY DEAR BROTHER PAMMALAR SIR.
many many HAPPY RETURNS OF THE DAY MAY GOD BLESS YOU ALL WEALTH AND GOOD HEALTH.
MY BLESSINGS.
This is the precise issue with you guys . I am least bothered on gate collections . I wud love to watch Andha naal or Devar magan even if it might have flopped at BO ( they have done well is another thing ). I repeat, its the fans of the 70s who killed Sivaji's progress by vouching for undesirable movies and you guys take pride in their success too . Well, this is the main reason why Sivaji's skills deteriorated from the mid 70s. Those fans spoilt his image by making them successful.
I dont see any answer for Ravi's question here . Why didnt he take up direction ? He missed a great opportunity here.
இன்று பிறந்தநாள் காணும் அன்பு சகோதரர் பம்மலார் அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
ஆவணத்திலகம், ஆவணக்காப்பகம், ஆவணப்பெட்டகம் எங்கள் பம்மலார் சுவாமிநாதன் அவர்களுக்கு இதயம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
நடிகர்திலகத்தின் சாதனைகளை உலகமெலாம் அறியச்செய்யும் உயரிய சேவையை செய்துவரும் தங்கள் பல்லாண்டு, பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
தங்கள் அரிய சேவை நமது திரியில் தொடர்ந்திட தவமிருக்கிறோம்......
இன்னும் சில தினங்களில் தலைவர் வில்லனாக அமர்க்களம் புரிந்த மிக அபூர்வ மாணிக்கமான
http://www.inbaminge.com/t/t/Thuli%20Visham/folder.jpg
படத்தைப் பற்றிய ஆய்வுப் பதிவு வெளியாகும் என்று மகிழ்ச்சியுடன் தங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.
டியர் சந்திரசேகர் சார்,
எனது பதிவுக்கு தங்கள் வழங்கிய மேலான பாராட்டுக்கு மிக்க நன்றி.
வரும் 29 அன்று நடைபெற இருக்கும் முப்பெரும் விழா சீரோடும், சிறப்போடும் நடைபெற இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.
நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் தங்கள் அயராத பணி, மக்கள் நலத்திட்டங்கள் ஆக தொடர்வதில் மிக்க மகிழ்ச்சி.
சேவைத்திலகம் சந்திரசேகர் அவர்கள் பல்லாண்டு வாழ்க......
வாசு சார்
துள்ளிக் குதிக்க வைக்கும் சூப்பர் ஸ்டைலுடன் நடிகர் திலகத்தின் அட்டகாசமான நடிப்பில் [இல்லையென்றால் உட்கார முடியுமா இப்படத்திற்கெல்லாம் என சில நண்பர்கள் நினைப்பது எனக்கும் மனக் கண்ணில் தெரிகிறது ] துளிவிஷம் பற்றிய தங்கள் ஆய்வினை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
டியர் நெய்வேலி வாசுதேவன் சார்,
எனது பதிவுக்கு தங்கள் விரிவான பாராட்டுக்களை அளித்தமைக்கு மிக்க நன்றி. எல்லாம் தங்களைப்போன்ற அன்புள்ளங்கள் அளிக்கும் ஊக்கமே காரணம். பதிவைப் பாராட்டியதோடு வழக்கம் போல அப்பதிவுக்கு தொடர்பான முத்தான நான்கு நிழற்படங்களையும் அளித்து பெருமைப்படுத்தி விட்டீர்கள். அதற்கு ஸ்பெஷல் நன்றி.
எனது கணினியில் நிழற்படங்களை அப்லோடு செய்யும் வசதிகள் எல்லாம் இல்லாததால் வெறும் எழுத்துக்களால் மட்டுமே பதிவிட முடிகிறது. (இது ஹைதர்அலியின் மகன் திப்புசுல்தான் உபயோகித்த கம்ப்யூட்டர். ஸ்ரீரங்கப்பட்டினம் அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்திருக்கும் போலும். மியூசியத்தில் கொண்டுபோய் வைக்கவேண்டியதை என் மேஜையில் கொண்டுவந்து வைத்துவிட்டனர்).....
http://www.indopia.com/imagereposito...0213112527.jpg
ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க நாளை .. 22.09.2013 ஞாயிறு காலை 11.30 மணிக்கு ... நடிகர் திலகத்தின் 150வது வெற்றித் திரைக்காவியம் ... சினிமா நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக ... சத்யம் திரையரங்கில் சீஸன்ஸ் திரையில் திரையிடப் படுகிறது.
டியர் கார்த்திக்
ஐட்டம் கேர்ள் என்ற ஒரு சொல்லில் அடை மொழியிடப் பட்டாலும் இந்தக் கதாபாத்திரங்கள் திரைப்படங்களின் போக்கினை நிர்ணயிக்கும் வலுவான பாத்திரங்களாக அமைந்து விடுகின்றன. அந்த வகையில் ஜெய்குமாரி நடிகர் திலகத்தின் திரைப்பட ஆராய்ச்சிகளில் நிச்சயம் இடம் பிடிப்பார், அவர் ஏற்ற இந்த கௌரவம் மற்றும் எங்கிருந்தோ வந்தாள் திரைப்படங்களின் மூலம். விஜயலலிதா வைப் பொறுத்த மட்டில் அந்த அளவிற்கு வலுவுள்ள கதாபாத்திரங்கள் என்று கூறப் படமுடியாவிட்டாலும் நடிகர் திலகத்துடன் அவர் நடனம் ஆடிய பாடல்கள் சாகா வரம் பெற்றவை [கே.வி.எம். சொதப்பிய எதிரொலி படப்பாடலைத் தவிர ]. குறிப்பாக திருடன் படத்தில் இரு பாடல்களில் அவருக்குக் கிடைத்த முக்கியத்துவம் கதாநாயகியான கே.ஆர்.விஜயாவிற்குக் கிடைக்கவில்லை என்பது வியப்பான உண்மை. அதுவும் நினைத்தபடி பாடலை எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத அளவிற்கு வெள்ளை உடையில் ஸ்டைல் சக்கரவர்த்தி கலக்கியிருப்பார். கோட்டை மதில் மேலே பாடல்... சொல்லவே வேண்டாம்.. இதே போல் இன்னொரு ஐட்டம் கேர்ள் பாத்திர நாயகியான ஆலம் அவர்களுக்கும் அமைந்த பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்கள் .. வேலாலே விழிகள், ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் போன்றவை.
தாங்கள் குறிப்பிட்ட அனைத்து நடிகையரின் கதா பாத்திரங்களைப் பற்றியும் விரிவாக எழுத வேண்டுகிறேன்.
தங்கள் பதிவில் உள்ள சிறப்பைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். தாங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட காட்சியமைப்போ, நடிகையரோ அல்லது உடையமைப்போ எதுவாக இருந்தாலும் மதில் மேல் பூனையாக மிகவும் எச்சரிக்கையுடனும் அருமையாகவும் எழுதி வருகிறீர்கள்.
பாராட்டுக்கள். தொடருங்கள்.
நாளை 22.09.2013 தேதியிட்ட தினமலர் இதழுடன் வெளியாகும் வார மலரில் நடிகர் திலகத்தைப் பற்றிய வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களுடைய கட்டுரை இடம் பெறுகிறது.
இந்த திரியின் செல்லப்பிள்ளை திரு பம்மலார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கார்த்திக் சார்
கவிதா கல்பனா (ஜெயகுமரி) பற்றி ஒட்டியும் வெட்டியும் எழுதி உள்ள உங்கள் பதிவு ஒரு அருமையான சுஜாதா நடையில் எழுதப்பட்ட பதிவு வாழ்த்துகள் ஜெயகுமாரி பற்றி நீங்கள் குறிபிட்டது உண்மை இன்னமும் அவர் வறுமையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் வீடு வேலை செய்யும் (செர்வன்ட் மிட்) தொழில் செய்து கொண்டு இருப்பதாக கேள்விபட்டென் பெருங்குடியில் சிறு ஓடு வீடு ஒன்றில் இருப்பதாக எனது நண்பர் ஒருவர் கூறினார் (இரண்டு ஆண்டுகளுக்கு முன் )
மேஜர் சுந்தர் ராஜன் சிறிது காலம் உதவி செய்தார் என்றும் அறிந்தேன்
அடுத்த ஐட்டத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.
Gkrishna
To pammalar
many more happy returns of the day
gkrishna
வாசு வருக. விஷத்தை (துளிதான்) பருக ஆவலாக உள்ளேன். தருவது நீயாயிற்றே? நாம் இருவரும் நேர்மையாக தராசு போல ஆய்வு செய்யும் இரு மேதைகள் அல்லவா?அதனால் எதிர்பார்ப்போடு உள்ளேன்.
கார்த்திக் சார்,
அடுத்து விஜயஸ்ரீ அல்லது ஆலம் எதிர்பார்க்கிறேன்.ராகவேந்தர் சார் குறிப்பிட்டது போல கதாநாயகிகளுக்கு சமமான முக்கிய துவம் ,கதை போக்கில் பொறுத்த பட்டு இந்த கவர்ச்சி துணை நடிகைகள் நன்கு கவனிப்பு பெற்றார்கள்.
Ragavendhar sir,
Thank you for informations . Do you have any apapparai Snaps in the theatres of NT Films during centenary celebrations? Can you Pl.help us?
இன்று பிறந்தநாள் காணும் அன்பு சகோதரர் பம்மலார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Just Now watched Thulivisham , overjoyed by his marvellous acting waiting for Vasu sir's analysis.
Surely a underrated gem
பிறந்தநாள் காணும் நம் அன்பு நண்பர் திரு. பம்மல் சுவாமிநாதன் நீண்ட
ஆயுளுடன் எல்லா சிறப்புகளும் பெற்று நடிகர் திலகத்தின் புகழ் பரப்ப
எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகொள்கிறேன்.
டியர் ராகவேந்தர் சார்,
டியர் ஜி.கிருஷ்ணா சார்,
தங்களின் மனம் நிறைந்த பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி....
நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் ஐட்டம் நடிகையர் ( 3 )
லேடி ஜேம்ஸ்பான்ட் 'சாக்லேட்' விஜயலலிதா
என்னடா சாக்லேட் அது இதுன்னு ஜொள்ளு விடுகிறானே என்று நினைக்க வேண்டாம். பட்டணத்தில் பூதம் படத்தில் பாலாஜியால் 'மை டியர் சாக்லேட்' என்று அழைக்கப்பட்டதால் சிறிது காலம் 'சாக்லேட் விஜயலலிதா' என்று அழைக்கப்பட்டார். ('என்னத்தே' கன்னையா, 'அலேக்' நிர்மலா என்பதைப்போல). நிறைய படங்களில் ஐட்டம் நடிகையாக நடித்திருந்த போதிலும், சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் (குறிப்பாக தெலுங்கு அதிரடிப் படங்களில்). எந்த வித நாகரீக கவர்ச்சி உடையும் ‘சிக்’கென்று பொருந்தக்கூடிய வாளிப்பான உடலமைப்பு, மயக்கும் பெரிய விழிகள், சற்றே அகன்ற வாய், எடுப்பான உதடுகள், 70 எம்.எம்.சிரிப்பு, அளவு மீறாத அங்க அமைப்புகள் என்று ஒரு ஐட்டம் நடிகைக்கான அனைத்து சாமுத்திரிகா லடசணங்களும் அமைந்த கவர்ச்சிப்புயல். (கர்சீப் ப்ளீஸ்). அன்றைய இளைஞர்கள் பலரின் தூக்கத்தைக் கெடுத்த அதிரடி நாயகியான இவர், நடிகர்திலகத்தின் படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார்.
“எதிரொலி”
பனாமா கால்வாய் ஆன இப்படத்தில் விஜயலலிதா ஏற்றிருந்தது ஐட்டம் நம்பர் அல்ல.ரொம்பவே நல்ல பிள்ளை. (அது சரி, அதென்ன பனாமா கால்வாய் என்கிறீர்களா?. 'நடிகர்திலகம்' என்ற பசிபிக் பெருங்கடலையும், 'இயக்குனர் சிகரம்' என்ற அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைத்த ஒரே படம்). ஒரு கேஸில் தனக்காக வாதாடி விடுதலை வாங்கித்தந்த வழக்கறிஞர் சங்கரை (நடிகர்திலகத்தை) தன் சாமியாகவே நினைத்து மரியாதை செய்பவர் விஜயலலிதா (கேரக்டர் பெயர் நினைவில்லை). வக்கீலுக்கு மன உளைச்சல் ஏற்படும் சமயங்களில் மலைமீதுள்ள தன் குடிசையில் அவர் வந்து இளைப்பாறுவதை பாக்கியமாக நினைப்பவள். அப்படி அவர் ஒருமுறை வந்திருந்தபோது பாட்டும் ஆட்டமுமாக மகிழ்வித்தவள். ('உங்க நல்ல மனசுக்கொரு குறையுமில்லே' என்ற பல்லவியை ஒவ்வொரு முறையும் 'நள்ள மனசு' என்றே உச்சரிப்பார் ஈஸ்வரி. மாமாவும் புழேந்தியும் கண்டுகொள்ளாதது ஏனோ). வக்கீல் சாமியின் குறைகளைகளைத் தீர்த்து வைப்பதை எதிர்பர்த்திருப்பவள். ஆனால், வக்கீலின் மன உளைச்சலுக்குக் காரணம் தன் காதலனான டாக்சி டிரைவரே (மேஜர்) என்று தெரியும்போது, கடவுளுக்குப் பின்னர்தான் காதலன் என்ற முடிவெடுத்து, காதலனை சுட்டுத்தள்ளி கடவுளுக்கு நிரந்தர நிம்மதியைத் தந்தவள். மிக அருமையான கதாபாத்திரம். உணர்ந்து நடித்திருந்தார் விஜயலலிதா. (அந்த சமயத்தில் இரண்டு அருமையான கதாபாத்திரங்களை விஜயலலிதாவுக்கு கொடுத்து பெயரெடுக்க வைத்தார் கே.பி. ஒன்று எதிரொலி இன்னொன்று 100 / 100) .
கவர்ச்சிப்புயல் “ரீட்டா” (திருடன்)
அப்போதெல்லாம் கொள்ளைக் கூட்டம், கடத்தல் கூட்டம் சம்மந்தப்பட்ட படமாயிருந்தால் அந்தக்கூட்டத்தில் ஒரு பிரதான பெண் கதாபாத்திரம் இருப்பாள். அவள் பெயரும் கூட காமாட்சி, மீனாட்சி என்றெல்லாம் இருக்காது. பெரும்பாலும். ரேகா, ரீட்டா, ஸ்டெல்லா இப்படித்தான் இருக்கும். பாலாஜியின் தயாரிப்பான திருடன் படத்திலும், பாலாஜியின் கூட்டத்தில் ஒருத்தியாக 'ரீட்டா' என்ற பெயருடன் நடித்திருந்தார் விஜயலலிதா. கேரக்டருக்கு ஏற்றார்போல கவர்ச்சியான உடைகள், அவரே பலமுறை நடித்து பழகிப்போன கேரக்டர். ‘ஸ்டைல் கிங்' நடிகர்திலகத்துடன் சேர்ந்து அதகளம் பண்ணியிருப்பார். 'நினைத்தபடி நடந்ததடி வராதவன் வந்து விட்டான்' பாடலில் அவருடைய ஆட்டம் அருமையோ அருமை. கவர்ச்சியான டைட் உடைகளில் ரசிகர்களைக் கொல்லுவார். (அப்போதெல்லாம் கதாநாயகிகள் கவர்ச்சியாக நடிக்க மாட்டார்கள், இழுத்துப் போர்த்துக்கொண்டு நடிப்பார்கள் என்பதால் ஜொள்ளுப் பார்ட்டிகளின் புகலிடம் இதுபோன்ற ஐட்டம் நடிகைகள்தான். இப்போது 'ஈரோயினிகளே' ஐட்டம் பிகர்களை விட கவர்ச்சியாக நடிக்க துவங்கி விட்டதால் ஐட்டம் நடிகைகள் என்ற குருப்பே காணமல் போய்விட்டது).
இளவரசியின் வைர நெக்லசைக் கொள்ளையடிக்க, யுவராஜா மற்றும் யுவராணியாக நடிகர்திலகமும், விஜயலலிதாவும் செல்லும் காட்சியில் இருவருமே செம க்யூட். உடைகளும் அப்படி. படத்தின் ஹைலைட் பாடலான 'கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப்பூனை' பாடலில் செம ஸ்டைல் மற்றும் சுறுசுறுப்பு. நடிகர்திலகத்தின் ஸ்டைலுக்கு நல்ல ஈடு கொடுத்திருப்பார் விஜயலலிதா. (கலரில் எடுத்திருந்தால் இந்தப்பாடல் எங்கோ போயிருக்கும்).
"பொன்மகள்" (சொர்க்கம்)
படத்தின் பெயரைச் சொன்னதும் அனைவருக்கும், மற்றெல்லாவற்றையும் விட சட்டென நினைவுக்க வருவது இந்தப்பாடலும் அதற்கான அசத்தும் காட்சியும் தான். அந்த அளவுக்கு அதுவரை தமிழ்ப்படங்களில் இல்லாத வகையில் தங்கக் காசுகளாக காய்த்துத்தொங்கும் மரம், வைரங்களாய் காய்த்துக்குலுங்கும் மரம், கரன்சி நோட்டுக்களாக காய்த்துக்குலுங்கும் மரம் என கற்பனை செய்து அதனை செட்டுக்களாக அமைத்து அதிர வைத்திருந்தார் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ராமண்ணா.
சரி, இந்தக் காட்சிக்கு அழகுக்கு அழகு சேர்க்க ஒரு அருமையான நடன மங்கை வேண்டாமா?. அதற்குப்பொருத்தமாக தேர்வு செய்திருந்தார் விஜயலலிதாவை. கற்பனையில் வேட்டிசட்டையுடன் உருண்டு விழும் கதாநாயகன் நடிகர்திலகத்தை பொற்கைகளால் ஆசீர்வதிக்க தகதக உடையுடன் எழும் நாயகன் பொன்மகளையும், தங்கமரமும் தங்கக் காசுகளுமாய் இருக்கும் சூழ்நிலையையும் கண்டு அதிசயிக்க, மெல்லிசை மன்னரின் அதிவேகமான இசைவெள்ளத்தில் பாடல் துவங்குகிறது.
பொன்மகளுக்கு பாடல் இல்லை, என்றாலும் அதிவேக நடன அசைவுகள் மற்றும் மூன்று வித உடை மாற்றங்கள். முதலில் தங்கத்தடுகளால் இழைக்கப்பட்ட ஆடை, அடுத்து வைர மணிகள் மின்னும் ஆடை, அடுத்து கரன்சி நோட்டுக்களால் (???) தொடுக்கப்பட்ட ஆடை என அசத்துவார். உடைகளுக்கு மேட்சாக அழகான பொன்னிற ஹேர்ஸ்டைல். ஒருபக்கம் நடிகர்திலகத்தின் ஸ்டைலான அசைவுகளைக்கான கண்கோடி வேண்டுமென்றால், பொன்மகளின் அழகையும், நடனத்தையும், நளினத்தையும் காண தனியே சிலநூறு கண்கள் வேண்டும்.
விஜயலலிதாவின் அன்றைய கவர்ச்சித் தாக்குதல்களை இன்றைக்குப் பார்த்தாலும் உதடுகள் உச்சரிப்பது "சாக்லேட் சாக்லேட்தான்"....
வணக்கம் கார்த்திக்
உங்கள் எழுத்தை படித்த பிறகு செய்த முதல் வேலை பொன் மகள் வந்தாள் பாடலை கானொளியில்
பார்த்தது தான். ஆஹா, ஆஹா. மிக்க நன்றி
பல்லாயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத பாடல் காட்சி ... சிக்கென்ற உடையில் நடிகர் திலகம் ... அட்டகாசமான நடனத்தை வழங்க விஜயலலிதா .... மெல்லிசை மன்னரின் இசையில் அருமையான பாடல் ...
நாமும் தான் பார்ப்போமே...
Of course the same describition applies to this song also ...
http://youtu.be/LPK9D4lYHaU
இந்தப் பாடலில் மெல்லிசை மன்னரின் ஜால வித்தை சூப்பர்... ஆரம்ப அக்கார்டின் இசை பின்னர் வந்த சொர்க்கம் பக்கத்தில் பாடலை நினைவூட்டும். பேங்கோஸ் ... மிகவும் அருமையாக மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரிதம் ...
பொன் மகள் வந்தாள் பாடலை பார்த்த பிறகு மனதில் தோன்றிய முதல் எண்ணம், எத்தை பேர் எத்தனை நாள் இந்த செட் அமைக்க வேலை செய்து இருப்பர்ககள். விஜயலலிதாவின் நடனம் எவ்வளவு கஷ்டம் என்பது நடனம் ஆட தெரிந்தவர்களுக்கு தெரியும். அதுவம் அந்த வைர காஸ்டியுமில் அவர் ஆடுவது. நம்மவரின் நடனம் சொல்லவே வேண்டாம். மீண்டும் மிக்க நன்றி கார்த்திக் :smile:
பல்லாயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத பாடல் காட்சி ... சிக்கென்ற உடையில் நடிகர் திலகம் ... அட்டகாசமான நடனத்தை வழங்க விஜயலலிதா .... மெல்லிசை மன்னரின் இசையில் அருமையான பாடல் ...
நாமும் தான் பார்ப்போமே...
Of course the same describition applies to this song also ...
http://youtu.be/sjntryg_b9s
Dear vasu sir,
Thangaikaga fight sequence was too good thanks for uploading it Vasu sir
டியர் ராகுல் ராம்,
கவரி மான் திரைப்படத்தைப் பற்றிய தங்கள் ஆய்வு படிக்கும் முன் ஒரு வேண்டுகோளை வைக்க எண்ணுகிறேன்.
ஒவ்வொரு தலைப்பாக நாம் அலசிக் கொண்டே வருவோம். தற்போது கார்த்திக் சாரின் ஐட்டம் பெண் கதாபாத்திரங்களைப் பற்றிய அலசல் இடம் பெற்றுள்ளது. தொடர்ந்த துளிவிஷம் திரைப்படத்தைப் பற்றி வாசு சார் எழுத உள்ளார். இடையே நீதி மற்றும் பட்டிக்காடா பட்டணமா திரைப்டங்களைப் பற்றிய கோபால் சாரின் ஆய்வும் 1972ம் ஆண்டினை நிறைவு செய்யும் பதிவாக இடம் பெற வேண்டும். அதற்குப் பிறகு நாம் கவரிமான் திரைப்படத்தைப் பற்றி கருத்துப் பரிமாற்றம் செய்யலாம் என எண்ணுகிறேன்.
ஒவ்வொருவருடைய தலைப்பும் விரிவாக அலசப் பட வேண்டும் என்பதே என் அவா. அதே போல் ஒவ்வொருவரும் அனைத்துப் படங்களைப் பற்றியும் விவாதிக்க வேண்டும் என்பதும் முக்கியம். எனவே இனி வரும் காலங்களில் ஒரு விவாதம் முற்றுப் பெறும் சமயத்தில் தங்களுடைய அடுத்த தலைப்பைப் பற்றி ஒரு சிறு முன்னறிவிப்பினைத் தந்து விட்டு தொடங்கினால் அனைத்துப் பதிவுகளும் சமமான அளவில் விவாதிக்கப் படுவதற்கு ஏதுவாக இருக்கும்.
மிக்க நன்றி.
Update 7.47 pm
Thank you Ragul for understanding. Please post Kavariman without fail. It's really interesting and we need elaborate discussion on this film.
நம் திரி கொடுத்து வைத்தது. சாரதா,கார்த்திக்,முரளி, வாசு,சாரதி,கண்பட் என்று எத்தனை எழுத்து வேந்தர்கள் !!! அற்புதமான கேப்டன் ராகவேந்தர் சார், ஊக்குவிக்க கே.சி.எஸ்??
கார்த்திக் சார்,
எடுத்த சப்ஜெக்ட் விடாது ,அங்கங்கே நகைச்சுவை தெளித்து, திராட்சை ,முந்திரி ,குங்குமபூ போல லேசான கவர்ச்சி தெளித்து ,அப்பப்பா ! என்னவொரு எழுத்து?
அவ்வளவாக பிடிக்காத விஜயலலிதாவை,சிறிதே பிடிக்க வைத்து விட்டீர்கள்.பளிங்கினால் ஒரு மாளிகை யில் ,ஓரளவு பொன்மகளில் மட்டுமே கவர்ந்தவர். ஜோதியின் பின்னழகு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் மாற்று முகாம் ஆள். எண்ணம் போல கண்ணன் வந்தான் பாட்டை இன்று பார்த்தாலும் .....ஹூம்....
இனி உங்கள் எழுத்து திறனால் விஜியையும்(chocolate) கவனிக்க வைத்து விட்டீர்கள்.
அது சரி,இந்த குடும்பம்,பிள்ளை...குட்டி (மிக முக்கியம் அமைச்சரே)... இதெல்லாம் பற்றி.... சரி,சரி அவசரமில்லை. நிதானமாக....
I agree Ragavendhar Sir. Just Give me Tinkle when I should take up needhi and Pattikkada pattanama? I will follow your instruction and post it accordingly. Your initiative is appreciated and all postings will get deserving attention this way. Thanks to you.
திரும்பி புலம்பல்தான். திருடன் படத்தை வண்ணத்தில் எடுத்து பாரதி(கே.ஆர்.வீ), வெண்ணிற ஆடை நிர்மலா(விஜயலலிதா) போட்டு , ஜனவரி 26 ,1970 ரிலீஸ் பண்ணியிருந்தால்....
நினைத்த படி பாட்டு சொர்க்கம் பக்கத்தில் முன்னோடி..
Just I thought of soliciting views for bringing out some order in our postings so that every thing will go in a methodical way. Until we all discuss and find out a way, we can have some temporary arrangement. Let this order not be on a name basis. But a tinkle as you say, can be useful. I would like the friend who initiates a discussion to give a tinkle to the next topic. This will honor him, I believe as well as he would honor others' participation here.
கோபால் சார் சொன்னது போல் நம்முடைய ஒவ்வொரு நண்பரின் தலைப்பும் முக்கியமானது, ஒவ்வொன்றும் ஒரே அளவிலான தரத்தில் வரவேற்பைப் பெற வேண்டியது. ஒரு தலைப்பு விவாதிக்கப் படும் போது அது முடிந்த பின்னர் அடுத்த தலைப்பினை நாம் துவக்கினோமானால் ஓரளவிற்கு அத்தலைப்பு முழுமை பெறக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு தலைப்பிற்கும் கால வரையறை என்பதும் பொதுவாகவே நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றிய விவாதத்திற்கும் வரையறை என்பதும் சாத்தியமல்ல, காரணம் நடிகர் திலகம் என்ற கடலில் நாம் மூழ்கி எடுக்கக் கூடிய முத்துக்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கும் என்பது தான், என்றாலும், அடுத்தவர் முத்தெடுக்க வாய்ப்புத் தந்து அவருடைய முத்தின் சிறப்பை அறிவோம் என்கிற அணுகுமுறை இருந்தால் சிறப்பாக இருக்கும் அல்லவா.. அதனால் ஒரு தலைப்பினைத் தொடங்கியவரே ஒரு குறிப்பிட்ட பதிவுகள் அல்லது காலத்திற்குப் பின் சற்றே அதற்கு ஓய்வளித்து அவராகவே அடுத்த விவாதத்தைத் தொடங்குவதற்கான ஓர் அறிவிப்பினைத் தந்தாரானால் நம்மிடையே பரஸ்பரம் ஒரு நட்புணர்வும் புரிந்துணர்வும் வலுப்படும். பதிவுகளும் ஒரு தெளிந்த நீரோடை போல பயணிக்கும்.
நண்பர்கள் ஏற்றுக் கொண்டால் இதை நடைமுறைப் படுத்தலாம்.
Dear Mr.Nambi / Mr.Ravi / Mr.Ravi chandran
Please Recall My wordings which was given by me and very sorry for that. This is my first and last emotion statement. As told by Mr.POn Ravichandrand Our NT is God father of Not only Kamal and entire indian cinema. So i request you all to present your views in right manner and dont spoil others mood.
Always live for others happiness
C.Ramachandran
அன்புள்ள அனைவருக்கும் வணக்கம்..
நடிகர்திலகத்தின் எண்ணற்ற ரசிகர்களில் நானும் ஒருவன்.
இங்கு இடப்படும் பதிவுகளை மெளனமாய் விரும்பிப் படித்துவரும் ரசிகர்களில் நானும் ஒருவன்..சமீபத்திய வாசு சாரின் ஞான ஒளி அலசல், கோபால் சாரின் ராஜா அலசல், மிஸ்டர் கார்த்திக்கின் ஐட்டம் கேர்ள்ஸ் அலசல் எல்லாம் மிக அட்டகாசமாக இருக்கிறது.. நான் பார்க்காத நடிகர் திலகத்தின் துளி விஷம் பற்றிப் படிக்க ஆவலாக உள்ளது..ராகவேந்திரா சாரின் எழுத்துக்களும் அருமை..என்னால் இந்தளவுக்கு நடிகர் திலகத்தின் படங்களைச் சொல்ல இயலாது..
இடையில் முறைப்படி அறிமுகப் படுத்திக் கொள்ளாமல் இரு இடுகை பதிந்திருக்கிறேன்..மன்னிக்க
இன்னும் நிறையப் பதிவுகளைப் படிக்க ஆசையுடன் இருக்கும்
சின்னக் கண்ணன்..
Dear Ragavendran Sir
Thanks for this song. Thalaivar style nadai super o super. TMS VOICE really superb.
I want to tell you one good thing about this song. I am very close to Mr.Vijay's PA Mr.Raviraja and at the time of ALAGIYA TAMIL MAGAN SHOOTING in presents of me
Mr.Vijay has seen this song almost 20 to 30 times for each and every step and then he commented eventhough i had seen the video more than 30 times but i am unable to imitate his(NT'S) style and walk. There is no end for my happiness at that time. Great memorable event.
Again thanks for your video
C.Ramachandran