இராகவேந்திரா சார், தாங்கள் உடல் நலத்துடன் திரிகளில் பங்கேற்பது கண்டு மகிழ்ச்சி!!! நடிகர்திலகம் திரிகளில் முன்பு போல் முழு உத்வேகத்துடன் கலந்து கொண்டு பங்கேற்று எங்களை வழிநடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Printable View
இராகவேந்திரா சார், தாங்கள் உடல் நலத்துடன் திரிகளில் பங்கேற்பது கண்டு மகிழ்ச்சி!!! நடிகர்திலகம் திரிகளில் முன்பு போல் முழு உத்வேகத்துடன் கலந்து கொண்டு பங்கேற்று எங்களை வழிநடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அனைத்து நடிகர் திலக ரசிக நண்பர்களுக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..
ம்ம் ரவி சொன்னது போல எழுதிப் பார்க்க வேண்டும் என்று ஆவலாகத் தான் இருக்கிறது..விரலை உதறி உதறி,மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்..ம்ம் விரைவில் எழுதுவேன் உஷார் என இந்த உரையை முடிக்கும்முன்...
ராகுல் ராம்.. மாடி வீட்டு ஏழை நான்பார்த்திராத ஒன்று.. எண்ணிக்கையில் ஒன்று கூட என நீங்கள் சொன்னதால் படத்தைப் பற்றி ஊகிக்க முடிகிறது..பார்க்காத சில படங்களைப் பற்றி எழுதப் போவதாகச் சொல்லியிருக்கிறீர்கள்.. நாம் பிறந்த மண், இல்லற ஜோதி, முதல் தேதி..
உங்கள் லிஸ்டில் நான் பார்த்து வெகு புகையாய் நினைவில் இருக்கும் படம் மணமகள் தேவை.. (அகெய்ன் சிவாஜி பானுமதி)
ம்ம் எழுதுங்கள்.
தங்கச் சுரங்கம் தியேட்டரில் வெகு சின்ன வயதில் பார்த்தது பின் பல ஆண்டுகள் முன்பு டிவிடியில்..சந்தனக் குடத்துக்குள்ளே பாட்டிற்காக.(கண்ணா.எப்போ வயசுக்குத் தக்கபடி பேசப் போற - நான் வளரலையே மம்மி!).. ம்ம்
அப்புறமா வரட்டா..
மிக்க நன்றி யூகேஷ் பாபு. தங்களின் நல்லெண்ணத்தாலும் நல்லாசியாலும் இறையருளாலும் விரைவில் குணமடைந்து வருகிறேன். தங்களனைவருக்கும் என் உள்ளம் கனிந்த நன்றி.Quote:
இனிய நண்பர் ராகவேந்திரா சார் அவர்களே மீண்டும் நீங்கள் உடல் நலம் தேறி உங்கள் அபிமான நடிகரின் திரைப்பட அலசல் சேவையினை தொடர்ந்திடவேண்டும் என்று எங்கள் குலதெய்வத்தை வேண்டி கொள்கிறேன் . மற்றும் எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் .
நடிகர் திலகம் இணைய தள ஆண்டு விழாவிற்கு வாழ்த்து சொன்ன கோபால், சிவாஜி செந்தில் முரளி மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இதயம் கனிந்த நன்றி.
Dear Mr. Raghavendra,
Happy to learn that you are doing well. We hope that you will come back to this great thread with full force and make us happy.
Happy Tamil new year to all.
Regards.
Raghavendra Sir
Many More Happy returns for getting into the 8th year of Nadigarthilagam.com
Your contributions in all forms are far beyond comparison...!
RKS
KARNAN this Week...That year 2012 - 5th Week ! - TRUE VICTORY ALWAYS !
http://i501.photobucket.com/albums/e...ps77af278a.jpg
http://i501.photobucket.com/albums/e...ps9cfeacf9.jpg
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கோவை மற்றும் திருச்சி மாநகரில் நமது பட்டகத்தி பைரவர் அவர்கள் தொடங்கிய வெற்றிநடை சென்னையிலும் தொடர்கிறது !
கடந்த ஞாயிறு அன்று சென்னை மகாலட்சுமி திரை அரங்கில் நமது தங்கராஜா விற்கு மகத்தான வரவேற்ப்பு அளித்த அனைவர்க்கும் நன்றிகள் கோடி !
சென்னை மகாலக்ஷ்மியில் 13-04-2014 மாலை காட்சி அரங்கு நிறைவு கண்டது !
ஞாயிறு இரவு காட்சி வரை மகாலக்ஷ்மியில் நமது நடிகர் திலகத்தை தரிசித்த மக்கள் எண்ணிக்கை சுமார் 2470.
எங்கள் தங்க ராஜா - பிரமாண்டம் இவருக்கு சாதாரணம் ! ! !
http://i501.photobucket.com/albums/e...psb65ea1b9.jpg
நடிகர் திலகத்தின் பழைய படங்கள்தான் திரையீடில் மக்கள் ஆதரவை பெறுபவை என்பதல்ல ! அவரின் 1980இல் வெளிவந்த திரைப்படங்களும் நல்லதொரு வரவேற்ப்பை பெற்றுள்ளன !
சமீபத்திய உதாரணம் : சந்திப்பு
இதனை தொடர்ந்து ...இரு வேடங்களில் ஜோடியில்லாமல் நடிக்க யோசித்த மசாலா நடிகர்கள் மத்தியில்
நடிகர் திலகம் ஜோடியில்லாமல் இருவேடங்களில் நடித்து தமிழகமெங்கும் பெருவெற்றிபெற்ற "வெள்ளை ரோஜா" வெகு விரைவில் வெளிவரவுள்ளது !
வெள்ளை ரோஜா வெற்றி ஆவணம் மற்றும் ரசிகர் மன்ற நோட்டீஸ் - உபயம் ஆவணத்திலகம் பம்மலர் அவர்கள் !
http://i501.photobucket.com/albums/e...ps7f100857.jpg
http://i501.photobucket.com/albums/e...psfb4cfa0a.jpg
Dear Ravikiran. thanks for uploading our nostalgic advertisement on digital Karnan. The stupendous victory of Karnan was a 'Solli Adiththa Gilli' due to the way it was planned meticulously and executed uncanningly by our respected Chokkalingam Sir.
The digital version of Karnan created anxiety and expectations among the mass including the younger generation. The way it was presented in the improvised format was quite imppressive and his first choice to do the digital work for Karnan deserved appreciation. Karnan remains till date true to its caption . 'Brammaandaththin Adayalam' and remains the role model to other actors' movies too to transform them in modern formats. NT even after his death, continues to be the guide for other actors too to step into his shoes to taste the rerun victory. Unfortunately the movies that followed up Karnan could not fare better due to reasons obvious, including NT movies. Even a perfect planner like Chokkalingam has to meet out with disappointment this time for reasons that are obvious as well as murky. Probably if VPKB or Pudhiya Paravai had followed Karnan, the success line would have been at least maintained.
இலங்கை விபரங்களின் தொடர்.........
நீலவானம்...........................கொழும்பு.....கி ங்ஸ்லி...............36...நாட்கள்
நீலவானம்...........................யாழ்நகர்......வ ெலிங்டன்...........31..நாட்கள்
காதல்வாகனம்.................கொழும்பு....செல்லமகால் .........38...நாட்கள்
காதல்வாகனம்.................யாழ்நகர்.....வின்சர்.. ...................19...நாட்கள்
.................................................. ........
தங்கைக்காக......................கொழும்பு....கெப்பி ட்டல்............56..நாட்கள்
தங்கைக்காக......................கொழும்பு....பிளாசா ...................44...நாட்கள்
தங்கைக்காக......................யாழ்நகர்.....வெலிங ்டன்............56...நாட்கள்
ரிக்ஷாகாரன்......................கொழும்பு....கெப்ப ிட்டல்............52..நாட்கள்
ரிக்ஷாகாரன்......................கொழும்பு....பிளாச ா...................34...நாட்கள்
ரிக்ஷாகாரன்......................யாழ்நகர்.......வெ லிங்டன்............52...நாட்கள்
திரு சிவா - உங்களுடன் பேசினதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் - உங்கள் பதிவுகள் மிகவும் முக்கியமானவைகள் - பாதுக்காக்கவேண்டியவைகள் - காலபோக்கில் இவைகளும் மறைந்து விடலாம் . நீங்கள் சேர்த்துவைத்த பல ஆவணங்கள் ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட சண்டையில் சேதம் அடைந்துவிட்டன என்று கேள்விப்படும்போது மனம் மிகவும் வேதனையை அடைகின்றது - தொடுருங்கள் , அசத்துங்கள் ( அடுத்து அசத்தபோவது கன்னடா சிவா - ஓஜாரி ஓஜா -----------)
அன்புடன் ரவி
அன்புள்ள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.எனது பெயர் கோபாலகிருஷ்ணன்.நான் ஓய்வு பெற்ற ஓர் அரசு ஊழியர்.நான் திருநெல்வேலியில் வசித்து வருகிறேன்.இந்த திரிகளில் உள்ள பதிவுகளை இரண்டாண்டுகளாகத் தொடர்ந்து படித்து வருகிறேன்.என்னுடைய பத்து வயது முதலே நான் தீவிர சிவாஜி கணேசன் ரசிகர்.இனி என்னுடைய பதிவுகள் இத்திரியில் தொடரும்.
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
தம்பி ராகுல் ராம் ஜெட் வேகத்தில் பயணிக்கிறார். சிவா அவர்கள் எப்போதும் statistics-ல் புலி. குறிப்பாக இலங்கையின் statistics அவருக்கு தலைகீழ் பாடம். பல ஆச்சரியங்கள் அவர் பதிவுகள் மூலமாக கிடைக்கிறது.
சென்ற மாதம் நமது அமைப்பின் சார்பில் படம் காலையில் திரையிட்ட போது அன்று மாலையில் தியாகம் திரைப்படம் மகாலட்சுமியில் பார்த்தோம். காலையில் கிளாஸ், மாலையில் மாஸ் என்று குறிப்பிட்டேன். இந்த மாதமும் அதே நிலைமைதான்.
அந்த நாள் திரைபடத்தின் 60-வது ஆண்டு விழா சிறப்பாக நடந்தேறியது. படத்தை அணு அணுவாக ரசிக்க கூடிய class audience ஏராளமானோர் வந்திருந்தனர். குறிப்பாக இளைய தலைமுறையை சேர்ந்த நபர்கள் [20க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள்] வந்திருந்து படத்தை பார்த்து பிரமித்து ரசித்து அதை எங்களிடம் வெளிப்படுத்தி இப்படி ஒரு படத்தை திரையிட்டதற்கும் அவர்களை அழைத்து படம் பார்க்க வைத்ததற்கும் மனங்கனிந்த நன்றி சொல்லி போனதை மறக்கவே முடியாது. இந்தப் படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்த இன்றைய தினம் 85 வயது நிரம்பிய திரு முக்தா ஸ்ரீநிவாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்து தன நினைவலைகளை பகிர்ந்து கொண்டது மறக்க முடியாத ஒன்றாகும். அது போன்றே வீணை மேதையும் இந்த படத்தின் இயக்குனருமான திரு வீணை S. பாலசந்தரின் மனைவியார் வந்திருந்து விழாவை சிறப்பித்தது மனதுக்கு நிறைவான ஒன்று. சாதாரணமாக இது போன்ற சிறப்பு அழைப்பாளர்கள் பேசி முடித்தவுடன் கிளம்பி சென்று விடுவார்கள். ஆனால் மேற் குறிப்பிட்ட இருவரும் முழு படத்தையும் பார்த்து விட்டுதான் கிளம்பினார்கள். மறக்க முடியா நாள். மறக்க முடியாத படம்.
நமது NT FAnS அமைப்பின் சார்பாக திரையிடப்படும் படங்களை பற்றி சிலவற்றை எழுத வேண்டும் என நினைக்கிறேன். காலம் நேரம் கூடி வர வேண்டும்.
அன்புடன்
நெல்லை சீமையின் மைந்தனாக நடிகர் திலகத்தின் புகழ் பாட வந்திருக்கும் மூன்றாம் கிருஷ்ணன் அவர்களே [தென்காசியை சேர்ந்த இளைஞன் கோபால கிருட்டிணன் முதல்வன், நெல்லையை சேர்ந்த கணபதி கிருஷ்ணன் என்ற நமது கிருஷ்ணாஜி இரண்டாவது, Gopu1954 என்ற நீங்கள் மூன்றாவது]. உங்கள் வரவு நல்வரவாகட்டும்!
நல்ல இடம் நீங்கள் வந்த இடம்
என வாழ்த்துக் கூறி உங்களை வரவேற்ப்பதில் பேரு மகிழ்வு கொள்கிறேன்.
அன்புடன்
Never seen tamil tv serials or show . Only old movies and songs . But never miss this Wow show in ETV whenever in town. As I said my previous writings, Saikumar never forget to mention NT whenever NT topic comes in this show. (He call only Sivaji).
Though he always mentioned about NT, in this Episode dt. 15/4/2014, you can see he is holding NT photo (of Pasamalar) and explained why he is great fan and respect to NT. In Part III, he recollected and narrated the incidents happened during NT Last rites.
Watch Part II - 2.50 to 4.35 and Part III 7.10 to 12.50
Try to translate some of his speech/comments.
சாய்குமார் சொல்வது போல் எழுதி இருக்கிறேன்.
"சிவாஜி என்றால் எனக்கு உயிர். எனக்கு எல்லாமே சிவாஜி தான். அவருடன் சேர்ந்து நடித்ததில்லை. என் தந்தை அவருடன் நடித்து இருக்கிறார். என் தாய் அவருடன் நடித்து இருக்கிறார். நான் மட்டும் நடிக்கவில்லை. என்னுடைய நடிப்புக்கு சிவாஜி தான் inspiration. அவருடைய கையால் போலீஸ் ஸ்டோரி படத்திற்கு award வாங்கினேன். அவருடன் நடிக்கவில்லையே என்ற குறை மட்டும் இருக்கிறது".
நான் பிறந்தது 1961 . பிறந்தது முதல் சிவாஜி தான் எல்லாமே .
'நானும் பிரபுவும் சேர்த்து ஒரு படத்தில் நடித்தோம். makeup செய்து கொள்வதற்காக நான் caravan வேனில் உள்ளே செல்ல பிரபுவும் கூட வந்தார். அந்த வேனில் சிவாஜி படம் ஒன்று வைத்திருதேன். பிரபு சிவாஜியின் படத்தை பார்த்துவிட்டு என்னை பார்த்து என்னங்க அப்பா படம் இங்கே என்று கேட்டார். நான் எப்பொழுதும் மேக்கப் போடுவது சிவாஜி படத்தின் முன்பு தான் என்று கூறினேன். பிரபு ஆச்சிரியமாக என்னை பார்த்து அப்படியே என்னை கட்டி தழுவி கொண்டார்".
அந்த சிவாஜி படம் - பாசமலர் படத்தில் கன்னத்தில் கையை வைத்து கொண்டிருக்கும் படம் ==== என்று கூறி சிவாஜி படத்தை காண்பிக்கிறார்.
"சிவாஜி இறந்த செய்தி கேட்டது முதல் கடைசி வரை சிவாஜி குடும்பத்தார் உடன் இருந்த நிகச்சிகளை - Part III from 7.10 to 12.50 கிட்ட தட்ட 6 நிமிடங்கள் சாய்குமார் பேசுகிறார்".
உணர்ச்சி பூர்வமான அவரின் பேச்சை இங்கு அப்படியே இங்கு எழுத முடியவில்லை. கடைசியில் சிவாஜியை கடவுள் என்றே கூறுகிறார்.
இந்த வீடியோவை பார்த்தால் புரியும்.
Watch Part II - 2.50 to 4.35 and Part III 7.10 to 12.50
http://videos.cinevedika.com/Saikuma...l#.U04ErVWSwq4
http://videos.cinevedika.com/Saikuma...l#.U04OQlWSwq4
வாங்க கோபு சார் வாங்க!!! நடிகர்திலகம் திரிக்கு வந்திருக்கும் தாங்கள் தங்கள் அருமையான பதிவுகள் மூலம் எல்லோரது பாராட்டுக்களையும் பெற்று புகழ் அடைய வாழ்த்துகிறேன்
டியர் பாலா சார்,
நம் தலைவரின் இறுதி சடங்கு நிகழ்ச்சி பற்றி விவரித்த சாய்குமாரின் உணர்ச்சி பூர்வமான அவரின் வீடியோவை பார்க்கும் போது கண்கள் பனித்தன, இவர் கன்னட திரை உலகில் இருந்தாலும் தனக்கு பிடித்த ஹீரோ என்று நம் தலைவரையே எப்போதும் குறிப்பிடுவார்.
நெல்லையிலிருந்து வந்திருக்கும் கோபு எனகிற திரு. கோபாலகிருஷ்ணன் அவர்களே வருக - வாழ்த்துக்கள்
கேட்டவைகளில் பிடித்தது ( ராகுலுக்கு போட்டியாக -----!!!)
இது ஒரு புதிய பதிவு , புதிய கோணம் , புதிய முயற்சியும் கூட.... Nt யின் படங்களில் வரும் சந்தோஷத்தையும் , மன அமைதியையும் , அவைகள் தரும் தன் நம்பிக்கைகளையும் , அறிவுரைகளையும் பற்றிய ஒரு சிறு அலசல் - பாடல்கள் பல விதம் - ஆனால் அவைகள் பெரும்பாலும் போதித்தவைகள் - இந்த காலத்து தலைமுறைக்கும் ஏன் எந்த காலத்திற்கும் பொருத்தமாக அமையும் - தேர்ந்து எடுத்த பாடல்கள் நீங்கள் கேட்ட பாடல்கள் , இன்றும் விரும்பி கேட்க்கும் பாடல்கள் , நாளையும் நிலைத்து நிற்கும் பாடல்கள்
தொடரும்
இந்த திரியில் எனக்கு வரவேற்பு நல்கிய திருவாளர்கள்
முரளி ஸ்ரீனிவாஸ்,கல்நாயக்,கே.சந்திரசேகர் மற்றும்
ஜிகிருஷ்ணா ஆகியோருக்கு எனது நன்றிகள்
அன்புடன்
Our Hearty Welcome Gopu Sir !
நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு
வாழ்ந்தே தீருவோம்
எங்கே கால் போகும் போகவிடு , முடிவை பார்த்துவிடு
எங்கே கால் போகும் போகவிடு , முடிவை பார்த்துவிடு
காலம் ஒருநாள் கைகொடுக்கும் அதுவரை பொருத்துவிடு
( நெஞ்சிருக்கும் )
இருந்தால் தானே செலவு செய்ய
எடுத்தால் தானே மறைத்து வைக்க
கொடுத்தால் தானே வாங்கிசெல்ல
தடுத்தால் தானே விழித்துக்கொள்ள
எங்கே கால் போகும் போகவிடு , முடிவை பார்த்துவிடு
காலம் ஒருநாள் கைகொடுக்கும் அதுவரை பொருத்துவிடு
( நெஞ்சிருக்கும் )
துணிந்தால்தானே எதுவும் முடிய
தொடர் தால் தானே பதை தெரிய
சிரித்தால் தானே கவலை மறைய
சில நாள் தானே சுமைகள் குறைய
எங்கே கால் போகும் போகவிடு , முடிவை பார்த்துவிடு
காலம் ஒருநாள் கைகொடுக்கும் அதுவரை பொருத்துவிடு
( நெஞ்சிருக்கும் )
எவ்வளவு தன் நம்பிக்கையை ஊட்டும் பாடல் இது - சிரித்தால் தானே கவலை மறைய - உண்மையான வார்த்தைகள் - நமக்கு இருக்கும் பிரச்சனைகளில் சிரிப்பை தொலைத்து விடுகிறோம் - வாழ்கையில் எப்பொழுதும் கடுகடுப்பாக நடந்துகொண்டு கொஞ்சம் சிரிக்க முயலும்போது வாழ்க்கை முடிந்து விடுகின்றது
துணிந்தால் தானே எதுவும் முடிய - முயன்றால் தான் வெற்றி என்பதை எவ்வளவு அழகாக இந்த வரிகள் சொல்கின்றன
சில நாள் தானே சுமைகள் குறைய - நம்பிக்கையுடன் , துணிவுடன் செயல் படுங்கள் - வெற்றி நிச்சயம் - உங்கள் சுமைகள் குறைய வெகு நாட்கள் ஆகாது
காலம் ஒருநாள் கைகொடுக்கும் அதுவரை பொருத்துவிடு - நம்பிக்கை தான் வாழ்க்கை - பொறுமை தேவை , கோபமோ , ஈகோ வோ உன்னை அண்டாமல் பார்த்துகொள் - வெற்றி உன்னை தேடிவரும் ---
http://youtu.be/S4hGfS9fLQs
தொடரும்
Nice start Ravi sir, waiting for your next
Hearty Welcome to Gopu Sir
கேட்டவைகளில் பிடித்தது -2
வாழ்ந்து பார்க்க வேண்டும் - படம் சாந்தி
வாழ்ந்து பார்க்க வேண்டும்
அறிவில் மனிதனாக வேண்டும் - பாசம் தேடும் உலகம்
உன்னை வாழ்த்து பாட வேண்டும்
நாடு காக்க வேண்டும் முடிந்தால் நன்மை செய்யவேண்டும்
கேடு செய்யும் மனதை கண்டால் கிள்ளி வீச வேண்டும்
தமிழும் வாழவேண்டும் தமிழன் தரமும் வாழவேண்டும்
அமைதி என்றும் வேண்டும் - ஆசை அளவு காண வேண்டும்
(வாழ்ந்து ----)
காற்று வீச வேண்டும் , பெண்கள் காதல் பேச வேண்டும் - காதல்
பேசும் பெண்கள் வாழ்வில் கவிதையாக வேண்டும்
மானம் காக்க வேண்டும் - பெண்ணை மதித்து வாழ வேண்டும்
உண்மை நண்பர் வேண்டும் - இருவர் ஒருவராக வேண்டும்
(வாழ்ந்து ----)
அறிவில் மனிதனாக வேண்டும் - உண்மையான வரிகள் - சில சமயம் நாட்டில் நடக்கும் போக்கை பார்த்தால் இறைவன் படைப்பில் குரங்கு தான் மீதி இங்கே என்ற எண்ணம் வருகின்றது
கேடு செய்யும் மனதை கண்டால் கிள்ளி வீச வேண்டும்
கேடு செய்யும் மனங்களை நாம் மன்னித்து மறக்கின்றோம் - கிள்ளி வீசுவதில்லை
அமைதி என்றும் வேண்டும் - ஆசை அளவு காண வேண்டும் - என்ன அழகான வரிகள் - அந்த அருமையான அமைதியை வாழ்க்கையில் தொலைத்துவிட்டு "எங்கே நிம்மதி" என்று கூறிக்கொண்டு மற்றவர்களின் அமைதியையும் அவர்கள் தொலைக்க உதவி செய்து கொண்டு இருக்கிறோம்
ஆசை அளவு கண்டு விட்டால் ஏது பொறாமை ? எங்கே சண்டை ?
இல்லாதவர்கள் இல்லாமல் போய்விடுவார்களே !!
பெண்ணை மதித்து வாழ வேண்டும்
உண்மை நண்பர் வேண்டும் - இருவர் ஒருவராக வேண்டும்
பெண்ணை மதித்து வாழ வேண்டும் - ஒரு பக்கம் துர்காவாக வணங்கி பெருமை படுகிறோம் - மறு பக்கத்தில் டெல்லியில் நடந்த மன கசப்பான சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளதே
உண்மை நண்பர் வேண்டும் - இருவர் ஒருவராக வேண்டும் -
உண்மையான நட்பு வேண்டும் - அதில் ஈகோ விற்கு சிறிதும் இடம் கொடுக்க கூடாது - நல்ல நட்பை தவிர உயர்ந்தது இந்த உலகில் வெறும் எதுவுமே இல்லை - அப்படி இருந்தால் இருவர் ஒருவராகலாம்
http://youtu.be/YU-b1hNh0g0
தொடரும்
Dear RAVI KIRAN SURYA SIR,
Karnan records rocks congrats sir
Dear Sivaa sir,
You are record Sivaa sir, continue sir, records speak of NT stamina, your postings speak your hard work
Dear Chinnakannan sir, Murali sir
Thank you for your kind words
கேட்டவைகளில் பிடித்தது -3
ஒன்னா இருக்க கத்துக்கணும் - படம் அன்பு கரங்கள்
ஒன்னா இருக்க கத்துக்கணும் - இந்த உண்மையை சொன்னால் ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்தை பாருங்க - அதற்க்கு கத்து கொடுத்தது
யாருங்க ??
(ஒன்னா இருக்க கத்துக்கணும் ------)
வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம் - அந்த நாலும் தெரிந்து நடந்து கொண்டால் நல்லா இருக்கலாம்
வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம் - அந்த நாலும் தெரிந்து நடந்து கொண்டால் நல்ல இருக்கலாம் .
உன்னை கேட்டு , என்னை கேட்டு எதுவும் நடக்குமா? அந்த ஒருவன்
நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா ??
(ஒன்னா இருக்க கத்துக்கணும் ------)
தன்னை போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே
அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
தன்னை போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே
அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
பொன்னை போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
இதை புரிந்துகொண்ட ஒருவனைப்போல் போல் மனிதன் வேறு இல்லை
பொன்னை போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
இதை புரிந்துகொண்ட ஒருவனைப்போல் போல் மனிதன் வேறு இல்லை
(ஒன்னா இருக்க கத்துக்கணும் ------)
கொஞ்ச நேரம் காத்தடித்து ஒய்ந்து போகலாம் - வானில்
கூடி வரும் மேகங்களும் களைந்து போகலாம்
கொஞ்ச நேரம் காத்தடித்து ஒய்ந்து போகலாம் - வானில்
கூடி வரும் மேகங்களும் களைந்து போகலாம்
நேற்று வரை நடந்தது எல்லாம் இன்று மாறலாம் - நாம்
நேர் வழியில் நடந்து சென்றால் நன்மை அடையலாம்
(ஒன்னா இருக்க கத்துக்கணும் ------)
வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம் - அந்த நாலும் தெரிந்து நடந்து கொண்டால் நல்ல இருக்கலாம் .
உன்னை கேட்டு , என்னை கேட்டு எதுவும் நடக்குமா? அந்த ஒருவன்
நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா ??
எப்படிப்பட்ட வரிகள் - எவ்வளவு எதார்த்தமான வார்த்தைகள் - யாரை கேட்டு எது நடக்கின்றது - மேலே ஒருவன் நடத்தும் நாடகத்தில் நாம் எல்லோருமே நடிகர்கள் தானே !!!
தன்னை போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே
அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
சற்றே ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு நினைத்து பாருங்கள் - நாம் எல்லோரையும் நம்மை போன்று நினைக்க ஆரம்பித்தால் , இந்த உலகம் எப்படி மாறி விடும் !!! நினைத்தாலே இனிக்குமே !
பொன்னை போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
இதை புரிந்துகொண்ட ஒருவனைப்போல் போல் மனிதன் வேறு இல்லை
மனதை செல்வந்தனாக ஆக்குங்கள் - உங்களை போல மனிதர் யாருமே இருக்க முடியாது ---
நேற்று வரை நடந்தது எல்லாம் இன்று மாறலாம் - நாம்
நேர் வழியில் நடந்து சென்றால் நன்மை அடையலாம்
நன்மை அடைவதற்கு இதை விட வேறு ஏதாவது சுலபமாக வழியை சொல்ல முடியுமா ???
http://youtu.be/4fL5GLsmtSk
தொடரும்
பார்த்ததில் பிடித்தது -25
நாம் பிறந்த மண்
நடிகர் திலகம் , கமல்ஹாசன் , kr விஜயா , நாகேஷ் , ஜெமினி கணேசன் என்று மாபெரும் நட்சதிர பட்டாளம் நிறைந்த படம்
1977 ல் வந்த நடிகர் திலகத்தின் 190 வது படம் , இந்த படத்தை அலசுவோமா
கதை :
படத்தின் ஆரம்பம் சுகந்திரம் காலத்துக்கு முன்னாடி நடப்பதை போல் ஆரம்பிகிறது , மக்கள் கொடுமை படுத்த படும் பொது ஒரு உருவம் வந்து அவர்களை காபாற்றுகிறது , அந்த உருவம் யார் என்பது யாருக்கும் தெரியவில்லை , மக்கள் மத்தியில் அந்த உருவம் கருப்புசாமி , அந்த உருவத்துக்கு சந்தனத்தேவன் என்று பெயர் வைத்து விடுகிறார்கள் , சந்தனத்தேவன் போலீஸ்க்கு சிம்மசொபனம்
அந்த ஊரில் ஒரு பண்ணையார் தேவன் (சிவாஜி சார் ) அவர் மனைவி kr விஜயா, தங்கை உடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார் , அந்த வீட்டின் வேலைக்காரன் தவசு (நாகேஷ்) பட்டாளத்தில் இருந்து வந்து , தேவன் வீட்டில் வசிக்கிறார் , விசுவாசி, பண்ணயர்க்கு அரசாங்கத்தை எதிர்க்க படிக்காது , அரசாங்கத்தை எதிர்க்கும் நபர்களை கண்டால் ஒதுங்கி விடுவார் , சந்தனதேவனை பிடிக்க அரசாங்கம் பண்ணையாரின் உதவியை நாடுகிறது , அவரும் அதற்கு சம்மதிக்கிறார் . ஒரு இரவு நேரத்தில் ஆங்கிலேயர் உடன் சண்டை போடும் பொது சந்தனதேவனை சந்திக்கிறார் ஜோசப் (ஜெமினி ) ina வில் இருந்து தன் சொந்த ஊருக்கு வருகிறார் , அவரின் துணிச்சலை பார்த்து சந்தனத்தேவன் தன் கூட வைத்து கொளுகிறார்
பண்ணையாருக்கு ஒரு மகன் பிறக்கிறார் .தவசுவின் சிபார்சில் பண்ணையாரிடம் வேலைக்கு சேருகிறார் , இரவில் சந்தனதேவனிடம் பனி , அஷ் துரை கொலை செய்ய திட்டம் தீட்டி அதை நிறைவேற்றி விடுகிறார் அதனால் சந்ததேவைனின் உயிர்க்கு அரசாங்கம் பெரும் வெகுமதியை அறிவிக்கிறது , அவரை பிடிக்க முயற்சி நடக்கிறது அதில் சந்தனத்தேவன் காலில் பெரும் காயம் படுகிறது , அதில் இருந்து அவரை ஜோசப் காப்பாற்றுகிறார் , அப்போது தான் தெரிகிறது , சந்தனத்தேவன் தான் பண்ணையார் என்று , ஜோசப் போலீஸ் ல் பிடிபடுகிறார் , மறு நாள் அனைவரின் கால்களையும் போலீஸ் சோதனை செய்ய , அனைவரும் காலில் கட்டு போட்டு போலிசை எம்மாற்றி விடுகிறார்கள்
ஒரு நாள் இரவு சந்தனத்தேவன் சண்டை பொது , ஒரு போலீஸ் அதிக்கரியை காப்பாற்ற , அவரின் கண்களை நன்றாக பார்த்து விடுகிறார் அந்த அதிகாரி அதை வரைய , அது பண்ணையாரின் உருவத்துடன் ஒத்து போக , பண்ணையார் கைது செய்ய படுகிறார் , அந்த சமயத்தில் பண்ணையாரின் தங்கை மானபங்கம் படுத்த பட அவர் இறந்து விடுகிறார் , பண்ணையார் சிறை தண்டனை அனுபவிக்கிறார் , சில வருடங்கள் கழித்து நாடு சுகந்திரம் அடைந்த பிறகு தேவன் விடுதலை செய்ய படுகிறார் , அவரின் குடும்பம் வறுமையில் வாடுகிறது , மகன் (கமல் ) , அப்பாவின் தியாகத்துக்கு மதிப்பு இல்லை என்று கோபம் அடைகிறார் , அடிகடி அப்பாவுடன் கருத்து மோதல் , பசி கொடுமை , ஒரு நாள் கை நிறைய பணத்துடன் வருகிறார் , சில காலத்துக்கு பிறகு தன் தந்தையின் வீட்டை மீட்டு தன் தாய் , தந்தை , தவசுடன் குடி வருகிறார் , அப்போ தான் தெரிய வருகிறது கமல் சமுக விரோத செயல் செய்து பணம் சம்பாதித்தது , தேவன் தன் மகனை கொலை செய்ய சுடும் பொது , குண்டு kr விஜயா மீது பட்டு அவர் இறந்து போக , தேவன் தன் மகனுக்கு அறிவுரை வழங்கி தானும் இறந்து விடுகிறார்
படத்தை பற்றி :
படத்தின் ஆணிவேர் சிவாஜி அவர்கள் தான் சந்தனத்தேவன் என்ற புரட்சிக்காரன் வேடத்திலும் சரி , பண்ணையார் வேடத்திலும் கலக்கி இருப்பார் , சிவாஜியின் குடும்பம் நாட்டின் விடுதலைக்கு போராடிய குடும்பத்தில் ஒன்று , சிவாஜியின் தந்தை விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றவர் என்று பல பேர்க்கு தெரிந்து இருக்கும் , இந்த மாதிரி குடும்ப பின்னணியில் இருந்து வந்த காரணத்திலோ என்னமோ இந்த சுகந்திர போரட்ட கதைகளில் அவர்க்கு அதிக ஈடு பாடு
சந்தனத்தேவன் பாத்திரத்தில் கலக்கி இருப்பார் , முதலில் அவரை காட்டும் பொது வெறும் கண்களை மட்டுமே காட்டுவார்கள் , அதில் அக்னி கொழம்பு , அந்த அசாத்திய கண்களை கொண்டு , அவர் பார்ப்பதும் , கர்ஜனை செய்வதும் , அபாரம் , நம்மளுக்கும் அந்த சுகந்திர உணர்வு வருகிறது .
MASS என்றால் என்ன ? பஞ்ச் வசனம் பேசுவதா ? சண்டை போடுவதா ? ITS HOW YOU CARRY யௌர்ஸெல்ப். இந்த படத்தில் தன்னை கைது செய்ய வரும் அதிகாரி உடன் வரும் பொது , இருவரும் ஒரு குழியில் விழுந்து விட , நம்மவர் முதலில் ஏறி விட்டு , அந்த அதிககாரிக்கு கை கொடுத்து வெளியே கொண்டு வருவதாக சொல்ல அதற்கு அவர் மறுக்க , நம்மவர் ஒரு சிரிப்பை உதுத்து , நிற்கும் கமீரம் , SIMPLY OUT OF THE WORLD , சொன்ன மாதிரியே தான் கைது ஆவோம் என்று தெரிந்து நிற்கும் இடமும் மேலும் மெருகு கூடுகிறது
தன் கூடத்தில் இருக்கும் ஒரு நபர் , கல்யாணம் ஆகி 3 நாட்கள் மட்டுமே ஆகி இருந்த 22 வயது நபர் போரட்டத்துக்கு செல்லும் பொது , அவரை பார்த்து பெருமை படுவது ஆகட்டும் , அவர் இறந்த செய்தி கேட்டு உருகுவது ஆகட்டும் , சிவாஜி சார் scores
.
இது சந்தனத்தேவன் பாத்திரம் என்றால்
அந்த பண்ணையார் பாத்திரம் , வேறு ஒரு பரிமாணம்
அதிகார வர்கத்திடம் பணிந்து போகும் பாத்திரம் , ராத்திரி வேட்டைக்கு போவதாக சொல்லி விட்டு , சந்தனதேவனாக மாறுகிறார் ( கோடி பறக்குது சாயல் ) மனைவியை சீண்டுவது , தங்கைக்காக நேரம் ஒதுக்குவது , ஊருக்கு உதவி செய்வது , தன் கூட்டாளி ஜோசப் மாட்டி கொண்ட உடன் அவர் வீட்டுக்கு சென்று அவர் தாயை பார்த்து , அவர் தன் மேல் வைத்து இருக்கும் மரியாதை பார்த்து சொல்ல வந்த விபரத்தை சொல்ல முடியாமல் தவிப்பது , அந்த தாய் இறந்த செய்தி கேட்டு துடிப்பது என்று இது வேறு ஒரு dimension
அடுத்த கட்ட பரிமாணம்
சுகந்திரம் அடைந்த உடன் அந்த நாட்டின் சுகந்திரம் எப்படி misuse செய்ய படுகிறது என்பதை பார்த்து கோபம் படும் பாத்திரம் , வாழ்ந்து கேட்ட குடும்பம் , பல தியாகிகள் இப்படி இருப்பர்களோ என்று நினைக்க தோன்றுகிறது , ஜெமினி யை சிவாஜி பார்த்து , நாம் சுகந்திரம் வாங்கி கொடுத்தோம் , அதை தான் politics என்று சொல்லுகிறார்கள் , அது போலி tricks - கதை வசனம் - VIETNAM VEEDU SUNDARAM , மகன் உடன் கருத்து மோதல் , அவரின் நிலைமையில் இருந்து கிழே இறங்கி வர முடியாமல் , தற்போதைய வாழ்கை உடன் ஒத்து போக முடியமால் , தவிப்பது , மகன் தவறு செய்யும் பொது , அவரை கொலை பண்ண அலைந்து , கடைசியில் உயிரை விடுவது என்று முழு circle அடைகிறது அவர் பாத்திரம் (கடைசி கிளைமாக்ஸ் மட்டும் forced ஆக தெரிந்தது .
kr விஜயா :
நடிகர் திலகத்தின் ராசியான ஜோடிகளில் ஒருவர் , பணக்கார சீமானாக வாழ்ந்த கணவர் உடன் எப்படி வாழ்ந்தாரோ , அபப்டியே தான் கஷ்டம் படும் பொது இருக்கிறார் , முதலில் தன் கணவரின் பிறந்தநாள் பொது ஊருக்கு சாப்பாடு போடும் போதும் அதே சந்தோசம் , பிறகு , எறும்பு புற்றுக்கு சாப்பாடு பொது அதே சந்தோசம் , மகன் , புருஷன் இருவரிடம் மாட்டி கொண்டு விழிப்பதும் , இரண்டு பேரையும் விட்டு கொடுக்காமல் பேசுவதும் , மகன் தவறு செய்த விஷயம் தெரிந்து , கணவர் மகனை கொலை செய்ய புறபடும் பொது , தடுப்பதும் , உயிர் விடுவதும் நல்ல கதாபாத்திரம் , நன்றாக செய்து இருக்கிறார்
கமல் :
ITS A DREAM COME TRUE FOR A BUDDING ACTOR TO SHARE SCREEN SPACE WITH STALWARTS LIKE நடிகர் திலகம் , WHOM HE FONDLY REFERRED AS FATHER, KR VIJAYA , WHOM HE REFERRED AS MOTHER, NAGESH- HIS ALL TIME FAVOURITE COMEDIAN, GEMINI GANESAN WHO STOOD AS A PILLAR IN HIS INITIAL YEARS
தன் அப்பா நல்லவர் தான் , அதை அவர் உபயோக படுத்த மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதை பார்க்க சகிக்காமல் சண்டை போடுவதும் , கடைசியில் திருந்துவதும் , cliched
ஜெமினி :
இயற்கை நடிப்பில் என்னை கவர்ந்த நடிகர்களில் ஒருவர் , ( நான் அவன் இல்லை படத்தை பார்த்து பிரமித்து உள்ள ரசிகர்களில் நானும் ஒருவன் - கோபால் சார் நானும் உங்க ஆளு தான் இந்த விஷியத்தில் ) முதலில் வீரத்துடன் சேர்வதும் , தன் முதலாளி தான் சந்தனதேவனாக இருப்பாரோ என்று முதலில் சந்தேகம் அடைவதும் , அவர் தன் இவர் என்று தெரிந்து தன் தலைவனை காப்பாற்ற போலீஸ் ல் மாட்டி கொள்வதும் , பிறகு கண் தெரியாமல் கஷ்ட படுவதும் , தன் தலைவனை மீண்டும் சந்திதுடன் சந்தோசம் படுவதும் , அவர் உடன் நினைவுகளை அசை போடுவதும் , பிறகு உண்மை தெரிந்த உடன் வருத்த படுவதும் , நடிகர் திலகத்துடன் அவர் நடித்த கடைசி படத்தில் நல்ல memorable பாதிரம் .
நாகேஷ் :
வழக்கம் போல் காலில் கட்டு போட தன் துண்டை எடுத்து ,chair ல் கட்டு போடுவதும் , பிறகு தன் முதலாளி கஷ்ட படும் பொது பழைய விஷயங்களை நினைப்பதும் , இன்னும் கொஞ்சம் scope கொடுத்து இருக்கலாம்
MY VIEW:
இசையை விட BGM என்னை மிகவும் கவர்ந்தது
படத்தின் முதல் பாதி மிகவும் நன்றாக இருக்க , கடைசி 20 நிமிடங்கள் மட்டும் கொஞ்சம் தொய்வு , இயக்கம் வின்சென்ட்
பொதுவாக தன் அபிமான நாயகர்களின் கண்களை அனைவரும் கண்டு பிடித்து விடுவார்கள் , சிவாஜி சாரின் கண்களை கண்டிபிடிப்பது மிகவும் எளிது , அந்த suspense element யை கொஞ்சம் build up செய்து இருக்கலாம்
இந்த படம் எத்தனை நபர்களை கவர்ந்ததோ தெரியாது , சங்கர் என்ற இளைஞன் கவர பட படத்தின் சிறு குறைகளை களைந்து , வர்ம கலை , மக்களை கவர ஊழல் ஒழிப்பு , AR ரகுமான் இசை , இரண்டு கமல் , மனிஷா , ஊர்மிளா , என்று அசத்தல் combination உடன் சேர்ந்து இந்தியன் என்ற படத்தை கொடுத்தார்
SAME TEAM OF GOURAVAM , S RANGARAJAN VIETNAM VEEDU SUNDARAM , SIVAJI , NAGESH ,MSV THOUGH IT IS NOT LIKE THE FORMER , THIS IS WORTH WATCHING