http://i1039.photobucket.com/albums/...pscx3o2yud.jpg
Printable View
Dear Senthilvel Sir,remarkable hardwork.
முக நூலிலிருந்து..
வீரபாண்டிய கட்டபொம்மன், படத்தை முதன்முதலாக எனது 7வயதில் பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் துணையோடு ஊரிலிருந்து 5 km தொலைவில் இருந்த டூரிங் கொட்டகையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது வருடம் 1983
நானும் என்னுடைய நண்பர்களும்
மெய் சிலிர்த்துபோனோம்
மெய்ச்லிர்ப்பு என்பதன் தன்மை என்னவென்று தெரிந்தது, படத்தில் நடிகர்திலகம் தோன்றும் போது கைதட்டல் அடங்காது, இதனால் எங்களால் வசனங்களை. உள் வாஙக முடியாமல் போனது , ஆனால் படம் பார்ப்பவர்கள் ஒவ்வொரு காட்சி க்கும் கூரிய விளக்கம், இதுவே ராஜா, அவர் இப்படித் தான் நடப்பார், கண்ணால் மட்டுமே எதிரியை மிரட்டுவார்,போர்வாள் எடுக்கும் விதம் அதை மீண்டும் சொருகும் விதம், கடவுளை வணங்கும் முறை, குழந்தை யோடு கொஞ்சுவதாகட்டும்,இப்படியே எல்லா காட்ஷிகலுக்கும் எத்தனையோ விளக்கம், ஒரு மாதம் வரை எங்களால் அதன் தாக்கத்திலிருந்து விடுபடாமல் கதைவசன புத்தகம் வாங்கி நடிகர்திலகத்தின் அத்தனை வசனங்களை யும் மனப்பாடம் செய்து வகுப்பிலே ஒரு மேடை நாடகம் நடத்திவிடுவோம், ஆசிரியர்கள் அதனை பாராட்டினார்கள், படித்த காலத்தில் பள்ளியின் மூலமாக திரைப்படம் காண்பித்தது என்றால் நடிகர்திலகத்தின் படங்கள் மட்டுமே
கப்பலோட்டிய தமிழன், கர்னன்,ராஜ ராஜ சோழன், ஹரிச்சந்திரா, மகாகவி காளிதாஸ், திருவிளையாடல், திருவருட்செல்வர், என பட்டியல் நீண்டுகொண்டே போகும்
பின்னாளில் படத்தினை கணக்கில் இல்லாத அளவிற்கு பார்த்தும் நடிகர்த்திலகத்தின் நடிப்பு ஏனோ தெவிட்டாத தேநமுதாகவே இருக்கிறது
THANKS
FOR
ALL...
http://i1039.photobucket.com/albums/...psz7tmbhkh.jpg