http://i67.tinypic.com/8zlpxh.jpg
Printable View
மக்கள் திலகத்தின் நெருங்கிய நண்பரும் ,மக்கள் திலகத்தின் பல வெற்றி படங்களை இயக்கியவருமான இயக்குனர் திரு கே. சங்கரின் நினைவு நாள் இன்று .
பணத்தோட்டம் , கலங்கரை விளக்கம் , சந்திரோதயம் , குடியிருந்த கோயில் , அடிமைப்பெண் ,பல்லாண்டு வாழ்க, உழைக்கும் கரங்கள், இன்று போல் என்றும் வாழ்க - மறக்க முடியாத இயக்குனர் சங்கரின் வெற்றி காவியங்கள் .
1957- TAMIL NADU ASSEMBLY ELECTION - A REVIEW.
1957 – தேர்தல் பிரச்சாரத்தில் தாய்க்குப் பின் தாரம்!
http://i64.tinypic.com/243kkn5.jpg
1957 – ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக சட்டசபைத் தொகுதிகள் 123-லும், நாடாளுமன்றத் தேர்தலில் 13 தொகுதிகளிலும் முதன்முறையாகத் தனது வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டது.
இந்த வேட்பாளர்களோடு, கழக ஆதரவு பெற்ற வேட்பாளர்களாகச் சிலரும் போட்டியிட்டனர்.
இத்தேர்தலில் தி.மு.க தலைவர்கள் அனைவரும் போட்டியிட்டனர். கழகத்தின் முதுகெலும்பாய்த் திகழ்ந்த அறிஞர் அண்ணா, தமது காஞ்சியுரம் தொகுதி தேர்தல் பணியோடு, பிரச்சாரப் பணிகளிலும் பல தொகுதிகளில் முழுமூச்சோடு ஈடுபட்டார்.
இத்தருணத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து பத்தொன்பது நாள்கள் தமிழகமெங்கும் சூறாவளிச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, தொடர்ச்சியாகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.
அத்தோடு நில்லாமல், தனது நாடகக்கூழுவைக் கொண்டு, தானே நடித்த ‘இன்பக் கனவு’. ‘சுமைதாங்கி’ நாடகங்களையும், மதுரை, திண்டுக்கல், நாகர்கோயில் போன்ற முக்கிய நகரங்களில் நடத்திப் பெரும் சாதனையைப் படைத்தார்.
இம்மட்டோ! கழகத்தின் முக்கியத் தலைவர்களாம் அறிஞர் அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் 1957 மார்ச்சு மாதம் முதல்தேதி முழுவதும், கலைஞர் கருணாநிதியின் குளித்தலைத் தொகுதியில் மார்ச்சு மாதம் எட்டாம் தேதி முழுவதும், மதுரை முத்துவின் மதுரை மத்தியத் தொகுதியில் ஒன்பதாம் தேதி முழுவதும், என்.வி. நடராசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, பேராசிரியர் அன்பழகன், சத்தியவாணிமுத்உத உள்ளிட்டோர் போட்டியிட்ட சென்னை மாநகரத் தொகுதிகளில், அறிஞர் அண்ணாவோடு இணைந்து மார்ச்சு ஐந்து, ஆறு தேதிகளிலும் புரட்சிநடிகர் புயல்வேகப் பிரச்சாரம் செய்தார்.
இன்னும், நாஞ்சில் மனோகரன் பாராளுமன்றத்திற்கும், நாகூர் அனீபா சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட நாகப்பட்டினம் தொகுதியில் பிப்ரவரி 19 – ஆம் தேதியும், இரா. செழியன் பாராளுமன்றத்திற்கும், எம். குழந்தைவேலு சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட கரூர் தொகுதியில் பிப்ரவரி 20 – ஆம் தேதியும், கவியரசர் கண்ணதாசன் போட்டியிட்ட திருக்கோஷ்டியூர் தொகுதியில் பிப்ரவரி 25 – ஆம் தேதியும், இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் போட்டியிட்ட தேனித்தொகுதியில் பிப்ரவரி 26, 27 தேதிகளிலும் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்தார்.
எந்தவொரு நடிகரும். தலைவரும் செய்திட இயலாத அளவிற்குத் தன்னுடைய படப்பிடிப்புப் பணிகளையெல்லாம் பார்க்காமல், பணச்செலவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் வியத்தகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்து அனைவர்க்கும் வியப்பூட்டி நின்றவரே மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் எனலாம்.
இவரது 1957 – ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தோடு, மக்களை பிரமிக்க வைத்த பிரச்சாரச் சுவரொட்டிகளாய் மலர்ந்தனவே ‘தாய்க்குப் பின் தாரம்’ திரைப்படக் காட்சி, சுவரொட்டிகள் எனில் மிகையாகா.
தேர்தல் களத்தில் தி.மு.கழகத்தோடு மோதும் முதன்மையான கட்சி காங்கிரஸ் கட்சியாகும். அக்கட்சியின் தேர்தல் சின்னமோ ‘நுகத்தடி பூட்டிய காளைமாடுகள்’ சின்னமாகும்.
தாய்க்குப்பின் தாரம் திரைப்படத்திலோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், யாரும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளைமாட்டோடு போராடி, அதனை வீழ்த்தி வெற்றி பெறுவதாக ஓர் அருமையான காட்சி இடம் பெற்றுள்ளது.
அதனையே தேர்தல் பிரச்சாரச் சுவரொட்டிகளாக தி.மு.கழகத்தவர் நாடெங்கும் சுவர்களில் ஒட்டியும், வரைந்தும் இருந்தார்கள். தட்டிகளிலும் ஏராளமாக ஒட்டி வைத்தார்கள்.
காங்கிரஸ் என்ற காளையை, உதயசூரியன் என்ற தடுப்புப் பலகையோடு இளைஞர் எம்.ஜி.ஆர், அடக்குவதுபோன்ற கருத்துப் படத்தை, 25.1.1957 ஆம் தேதியிட்ட ‘முரசொலி’ இதழும் வெளியிட்டது.
அன்றைய தி.மு.கழகத்தின் அதிகாரப்பூர்வமான வார ஏடாக வெளிவந்த நாவலரின் ‘நம்நாடு’ இதழ், இதுபற்றி எழுதியாதையும் நாம் இப்போது வாசித்துப் பார்ப்போமே!
“தாய்க்குப்பின் தாரம்” படத்தில், காளை மாட்டோடு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், சண்டையிடும் காட்சியைக் கையிட்டு வரைந்தும், சில இடங்களில் தட்டிகள், பானர்கள் வைக்கப்பட்டும் இருந்தன. தி.மு.கழகத்தின் தேர்தல் ஈடுபாட்டை, இந்தத் தேர்தல் உத்திகளை மக்கள் வரவேற்றனர்; இரசித்தனர். மக்கள் வாக்களிப்பார்களா? – என்பதைவிடக் கூட்டம் கூட்டமாக வரவேற்பு இருந்ததைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது”
பார்த்தீர்களா? 1957 – ஆம் ஆண்டு தேர்தலிலேயே, ‘தாய்க்குப்பின் தாரம்’ படக்காட்சிகன் மூலமும், தனது பிரச்சாரத்தின் மூலமும், தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், மறுமலர்ச்சியையும் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் அரிய பணிகளை….! இதனாலன்றோ பின்னாளில் புரட்சித்தலைவராக அவரால் பீடுநடை போட முடிந்தது.
முயற்சிகளால் முன்னேறிய எம்.ஜி.ஆரை முட்டுக்கட்டைகள் எவற்றாலும் தடுக்க முடிந்தனவா? தடுக்க முயன்றவர்கள்தானே தடம் புரண்டு வீழ்ந்தார்கள்.
இத்தகு வித்தகர் நடித்த பல படங்களுக்கு, நம் கவித்திருமகனார் வீர வசனங்களை எழுதியுள்ளார்.
எம்ஜிஆர் 100 | 15 - நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்!
M.G.R. பற்றி பொதுவாக ஒரு விமர்சனம் உண்டு. அவர் நல்லவர். மனிதாபிமானம் மிக்கவர். என்றாலும் அரசு நிர்வாகத்தில் அவர் அத்தனை சிறப்பாக செயல்படவில்லை என்று கூறப்படுவது உண்டு. ஆனால், முதல்வராக இருந்தபோது நிர்வாகத்தில் எவ்வளவோ சிக்கலான விவகாரங்களுக்கும் உணர்வுபூர்வமான பிரச்சினைகளுக்கும் தனக்கே உரிய மதிநுட்பத்தோடு காதும் காதும் வைத்தது போல கச்சிதமாக தீர்வு கண்டவர் எம்.ஜி.ஆர்.
http://i63.tinypic.com/2hfo388.jpg
காவிரிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி டெல்லியில் விவசாயிகள் இரண்டு நாட்கள் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடத்தியுள்ளனர். கர்நாடகாவுக்கும் தமிழகத்துக் கும் காவிரிப் பிரச்சினை இன்று நேற்றல்ல; காலம் காலமாக இருந்து வரும் ஒன்று.
http://i65.tinypic.com/110ehb9.jpg
தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சையில் குறுவை பயிரிடும்போதுதான் வழக்கமாக காவிரி தண்ணீர் பிரச்சினை தலைதூக்கும். ‘குறுவை’ பெயருக்கேற்றபடி குறுகிய காலப் பயிர். எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்கும்போதும் தண்ணீர் இல்லாமல் குறுவை கருகும் அபாயம் ஏற்பட்டது. அப்போது, கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். அவருடன் எம்.ஜி.ஆர். உடனடியாக பேச முடியாத நிலை.
http://i63.tinypic.com/dpx0yd.jpg
அந்த நேரத்தில் கர்நாடகாவில் கல்வி அமைச் சராக இருந்தவர் ரகுபதி. எம்.ஜி.ஆருக்கு நெருங் கிய நண்பர். ரகுபதியின் தாயார் எம்.ஜி.ஆர். மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஒரு நாள் காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூ ருக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். புறப்பட்டார். அவரு டன் இரண்டு அதிகாரிகள் மட்டுமே சென்றனர். பெங்களூர் சென்ற எம்.ஜி.ஆர்., கர்நாடகா அமைச்சர் ரகுபதியை தொடர்பு கொண்டு விமான நிலையத்துக்கு வரச் சொன்னார்.
எம்.ஜி.ஆரின் திடீர் வருகையும் தன்னை வரச் சொல்வதன் காரணமும் புரியாமல் பரபரப்புடன் பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்த ரகுபதி, எம்.ஜி.ஆரை வரவேற்றார். தன்னுடன் வந்த தமிழக அதிகாரிகளை அரசு காரில் செல்லச் சொல்லிவிட்டு, எம்.ஜி.ஆர். மட்டும் ரகுபதியின் காரில் ஏறிக் கொண்டார். நேராக ரகுபதியின் வீட்டுக்கே காரை விடச் சொன்னார்.
ரகுபதியுடன் சாதாரணமாக பேசிக் கொண்டு வந்தாரே தவிர, விவரம் எதுவும் சொல்லவில்லை. அது காலை நேரம். தங்கள் வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆரைக் கண்ட ரகுபதியின் தாய் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்து சிற்றுண்டி பரிமாறினார். எம்.ஜி.ஆர். சாப்பிட்டு முடித்தார். சாப்பாட்டின்போதும் சரி, சாப்பிட்டு முடித்த பிறகும் சரி, அருகே வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எம்.ஜி.ஆர். குடிக்கவே இல்லை. ‘ஏன் தண்ணீரை குடிக்கவே இல்லை? வேண்டாமா?’ என்று ரகுபதியின் தாய் கேட்டார்.
அதை எம்.ஜி.ஆர். பிடித்துக் கொண்டார். ரகுபதியை பார்த்து சிரித்துக் கொண்டே, ‘‘தண்ணீர் வேண்டும்தான். ஆனால், உங்கள் மகன் கொடுக்க மாட்டேன் என்கிறாரே? அப்புறம் நான் எப்படி தண்ணீர் குடிப்பது?’’ என்று கேட்டார். ரகுபதிக்கு பொறி தட்டியது. எம்.ஜி.ஆர். தனியாக வந்த நோக்கத்தை புரிந்து கொண்டார். தன் கையாலேயே எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுத்து உபசரித்ததுடன் காரியத்தில் இறங்கினார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாதான் அப்போது, கர்நாடகாவின் பொதுப்பணித்துறை அமைச்சர். அவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்த ரகுபதி உடனடியாக வரச் சொன்னார். அங்கிருந்து மூவரும் மருத்துவமனையில் இருந்த ராம கிருஷ்ண ஹெக்டேவை பார்க்கச் சென்றனர்.
அங்கே, பிரச்சினையை எப்படி சமாளிப்பது, கர்நாடகாவில் தண்ணீர் இருப்பு, இருக்கும் நீரை இரு மாநிலங்களும் பாதிக்காத வகையில் பகிர்ந்து கொள்வது ஆகியவை குறித்து சிறிது நேரத்தில் விவாதிக்கப்பட்டு தமிழகத்துக்கு விளம்பரம் இல்லாமல் தண்ணீர் விட முடிவு செய்யப்பட்டது.
உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் ராம கிருஷ்ண ஹெக்டேவை எம்.ஜி.ஆர். பார்த்து நலம் விசாரித்தார் என்று செய்திகள் வெளியானது. ஆனால், இந்த சந்திப்பின் நோக்கமே வேறு. சத்தமே இல்லாமல், தமிழகத்தின் கடைமடைப் பகுதிக்கு காவிரி தண்ணீரை எம்.ஜி.ஆர். கொண்டு வந்து விட்டார்.
படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், வியாபாரி, ஊழியர், அதிகாரிகள், விஐபிக்கள் என்று பல தளங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் உண்டு. இந்த பிரிவினரில் சதவீதம் மாறலாமே தவிர, எல்லாத் தரப்பிலும் ரசிகர்களை எம்.ஜி.ஆர். பெற்றிருந்தார். அந்த விஐபிக்களில் ஒருவர் கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவ். தன்னை எம்.ஜி.ஆர். ரசிகர் என்று பகிரங்கமாக அறிவித்தவர் அவர். எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’ படத்தில் இடம் பெற்ற
‘ஒன்றும் அறியாத பெண்ணோ...’
பாடல் காட்சி கர்நாடக மாநிலம் ‘கூர்க்’கில் உள்ள குண்டுராவுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில்தான் படமாக்கப்பட்டது. குண்டுராவிடமும் ஒருமுறை எம்.ஜி.ஆரே பேசி விளம்பரமே இல்லாமல் காவிரியில் தண்ணீர் விடச் செய்தார் .
எம்.ஜி.ஆர். நடித்த ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் பல காட்சிகள் கர்நாடகா மாநிலம் பெங்களூர், மைசூர் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டன. படத்தில்
‘இதுதான் முதல் ராத்திரி... அன்புக் காதலி என்னை ஆதரி...’
என்ற இனிமையான டூயட் இடம்பெறும். எம்.ஜி.ஆரை பார்த்து நாயகி பாடுவார்...
‘அடிமை இந்த சுந்தரி.... என்னை வென்றவன் ராஜதந்திரி...’
படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், விஐபி என்று பல தளங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் உண்டு.
1975-ம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’. சென்னையில் நடந்த இதன் வெற்றி விழாவில் என்.டி.ராமராவ், சவுந்தரா கைலாசம், பாலச்சந்தர், முக்தா சீனிவாசன், சவுகார் ஜானகி ஆகியோர் கலந்து கொண்டனர். ‘மற்ற நடிகர்களின் பல படங்கள் பெறும் வசூலை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் பெற்று விடுகிறது. எம்.ஜி.ஆர். படங்கள் மூலம் அரசுக்கு அதிக வரி கிடைக்கிறது. இதன் மூலம் அரசாங்கத்தின் நண்பராக எம்.ஜி.ஆர் விளங்குகிறார்’’ என்று விழாவில் முக்தா சீனிவாசன் பாராட்டிப் பேசினார்.
- தொடரும்...
இன்று (05/03/2016) காலை 11 மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த , தேவரின்
"நல்ல நேரம் " சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/2niwft0.jpg
தற்போது (இரவு 10 மணி முதல் ) ஜெயா மூவிஸில் , மக்கள் தலைவர் எம்.ஜி. ஆர்.
அவர்களின் "தர்மம் தலை காக்கும் " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i67.tinypic.com/2mqlrmd.jpg
நாளை (06/03/2016) பிற்பகல் 2 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "ரிக்ஷாக்காரன் " ஒளிபரப்பாக உள்ளது .
http://i63.tinypic.com/10xc0sx.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு.சுந்தர்.
RARE PICS- 1967
http://i66.tinypic.com/fc2m2h.jpg
http://s11.postimg.org/3pwi0rmxf/FB_...ed_Picture.jpg
Courtesy - S.Vijayan - facebook
Makkal Thilagam MGR in ''Raman Thediya Seethai'' - Now Telecasting.... @ Sunlife
SUN TV - 2 PM -RIKSHAKARAN.
7S MUSIC- 6.30 PM - DHARMAM THALAIKAKKUM .
எம்ஜிஆரை எனக்கு மிகவும் பிடிக்க காரணம் .
http://i67.tinypic.com/20dnk.jpg
1971.
தமிழக தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்று 184 சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் 25 பாராளுமன்ற உறுப்பினர்களை தன்வசம் வைத்து கலைஞர் தமிழக முதல்வராகவும் , திமுக தலைவராகவும் , கட்சியில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் ஆதரவுடனும் ,பலம் வாய்ந்த பத்திரிகைகளின் செல்வாக்கையும் பெற்று இரும்பு மனிதராக திகழ முக்கிய காரணம் எம்ஜிஆரின் முழு ஆதரவு என்பது உண்மை . 1971 தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக உழைத்தவர் எம்ஜிஆர் .
1972.
ஜூலை இறுதியில் துவங்கிய எம்ஜிஆர் - கருணாநிதி பனிப்போர் மெல்ல மெல்ல கசிய தொடங்கியது .முதலில் மு.க .முத்து மன்றம் , பின்னர் தினத்தந்தியில் இருட்டடிப்பு ,எம்ஜிஆரை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு மறை முக மிரட்டல்கள் , எம்ஜிஆரின் படங்களை திரையிட்டு வந்த திரை அரங்குகளுக்கு மிரட்டல் , எம்ஜிஆர் மன்றங்களை கலைக்க உத்தரவு என்றெல்லாம் ஒவ்வொரு நாளும் எம்ஜிஆருக்கு நெருக்கடி உருவாகியது .
ஆளும்கட்சி
ஆதிகார மையம்
போலீஸ் கெடுபிடி
எம்ஜிஆரின் தயாரிப்பாளர்களும் , திரை அரங்குகள் உரிமையாளர்கள் , தன்னையே சார்ந்திருக்கும் எம்ஜிஆர் மன்றங்கள் அனைவரும் மேற்கண்ட மூன்று நிலைகளின் தாக்கத்தை கண்டு தன்னுடைய எதிர்காலம் , ரசிகர்களின் பாதுகாப்பு , மக்கள் சேவை -இந்த மூன்றையும்
http://i63.tinypic.com/2vlr8l5.jpg
மனதில் கொண்டு எம்ஜிஆர் ஒரு மாவீரனாக , எதற்கும் அஞ்சாத சிங்கமாக , ரசிகர்கள் மற்றும் மக்கள் சக்திய்டன் எல்லா எதிர்ப்புகளையும் துணிவுடன் சந்தித்து அதிமுக என்ற இயக்கத்தை உருவாக்கி தன்னை நிலை நிறுத்தி கொண்ட எம்ஜிஆரின் சாமர்த்தியம் , துணிவு , உழைப்பு
என்னை பிரமிக்க வைத்தது . இதே சூழ் நிலையில் வேறு எவராவது இருந்தால் தன்னை மட்டும் காப்பாற்றி கொள்ள சரண் அடைந்து காணாமல் போய் இருப்பார்கள் .
தொடரும் ..
நன்றி - கதிரேசன் - மதுரை .
http://i67.tinypic.com/2en71bk.jpg
மக்கள் திலகம் அவர்களுடன் , கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் தாயார் இசக்கியம்மாள் பாட்டி.....1964.
கலைவாணர் புதல்வர் திரு. என். எஸ். கே. நல்ல தம்பி அவர்களின் முக நூலிலிருந்து ............ நன்றி !
http://s27.postimg.org/b4e3ytvdv/FB_...ed_Picture.jpg
Courtesy - s.Vijayan - facebook
http://s18.postimg.org/dnegk2gw9/WP_20160307_001.jpg
Courtesy - Kalki weekly.
http://i66.tinypic.com/5k2bsn.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் தன்னுடைய அரசியல் சகாக்களுடன் சிரித்து கொண்டு உரையாடும் நிழற் படம் மிகவும் அருமை . மக்கள் திலகத்துடன் கே,ஏ .கே . எஸ் டி .எஸ் , தாமரைக்கனி.புலவர் புலமைப்பித்தன் போன்றவர்கள்இருக்கும் அபூர்வமான நிழற் படம் .
நன்றி - திரு ரவிச்சந்திரன் சார் .
http://i68.tinypic.com/auzfyb.jpgஇந்து பத்திரிகை தினசரி 12 லட்சம் பிரதிகள்விற்பனை ஆகிறது என்றும் தற்போது மக்களை திலகத்தின் எம்ஜிஆர்-100 கட்டுரை வெளிவருவது முன்னிட்டு விற்பனை மேலும் கூடியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் என்றால் அமுத சுரபிதானே .உலகமெங்கும் வாழும் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு அன்றும் இன்றும் என்றும் பெருமைகளை சேர்த்து தருபவர் அவர்தானே .
THANKS PAMMALAR SIR.
SUPERB CALENDAR - 2016.
MAKKAL THILAGAM MGR'S SUPER STILL.GULEBHAGAVALI -1955
http://i68.tinypic.com/dpwps7.jpg
THANKS PAMMALAR SIR.
URIMAIKURAL - 1974
http://i65.tinypic.com/1zqqxds.jpg
50 ஆண்டுகளுக்கு முன் 1966ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் திரைப்பட செய்திகள் , விளம்பரங்கள் , அறிவிப்போடு நின்று போன எம்ஜிஆரின் படங்களின் தகவல்கள் மற்றும் இதர பதிவுகள் .
http://i66.tinypic.com/2irt8rc.jpg